”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
– 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது எனும் டெல்லி அரசின் முடிவுக்கெதிராக ‘போராடும்’ டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இயக்க முழக்கம்!
அன்றைய தினம் ஏறக்குறைய நூறு பேர் அந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் இருந்தார்கள். அவர்கள் அனைவரது மனநிலையும் இதுதான். அவர்கள் உச்சரித்த எண்ணற்ற வார்த்தைகளின் சாராம்ச பொருளும் இதுவேதான்.
உழைக்கும் மக்களில் ஆரம்பித்து, அதிகார வர்க்க எடுபிடிகள் வரை சகல தரப்பினரும் அங்கு சிதறியிருந்தார்கள். மாணவர்களில் தொடங்கி வயதானவர்கள் முடிய அந்த இடத்தில் குழுமியிருந்தார்கள். இரைச்சல்களுக்கிடையில் தங்கள் முதலாளிகளை திட்டினார்கள். மேலாளரின் கன்னத்தில் அறைந்தார்கள். மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். கல்லூரித் தாளாளரின் கைகளை ஒடித்தார்கள். காதலியுடன் முரண்பட்டார்கள். மனைவியை அடித்தார்கள். மகனுக்காக ஏங்கினார்கள். மகளுக்காக துடித்தார்கள். அப்பாவை அடித்தார்கள். அம்மாவை கொஞ்சினார்கள். அண்ணனை கொன்றார்கள். அக்காவை போற்றினார்கள். தங்கையை முத்தமிட்டார்கள். தம்பியை உதைத்தார்கள். மாநில முதல்வரை அவமானப்படுத்தினார்கள். பிரதமரின் கோவணத்தை அவிழ்த்தார்கள். மத்திய – மாநில அமைச்சர்களின் வீட்டு பெண்களை சந்திக்கு இழுத்தார்கள். கை கோர்த்தார்கள். கை குலுக்கினார்கள். கட்டிப் பிடித்தார்கள். கட்டி உருண்டார்கள். சிரித்தார்கள். அழுதார்கள். கதறினார்கள். கலைந்தார்கள்.
மறுநாள் அல்லது வரும் வார இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மீண்டும் கூடுவார்கள். திரும்பவும் கனவு காண்பார்கள். ஒரே மனநிலையை பலதரப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்கள்.
இது ஏதோ ஒரு டாஸ்மாக் கடையில், என்றேனும் ஒருநாள் நடந்த – நடக்கும் – சம்பவமல்ல. இதுதான் தமிழகத்திலுள்ள 6,690 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளையும் சுற்றி அன்றாடம் நிகழும் நிகழ்வுகள். நகரங்களில் உள்ள 3,562 டாஸ்மாக் கடைகளிலும் கிராமப்புறங்களிலுள்ள 3,128 கடைகளிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்கிறார்கள். டாஸ்மாக்கே நமது ஆண்களின் புனிதக்கோவிலாக மாறிவருகிறது.
இந்த உண்மை அதிகார வர்க்கத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனாலும் சுவரெழுத்து எழுதவும், அரசுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகிக்கவும், அடிப்படை உரிமைக்காக சாலை மறியல் செய்யவும், தடை விதிப்பது போல் அரசாங்கம் இப்படி பகிரங்கமாக பேசுவதற்கு தடையேதும் விதிப்பதில்லை. பதிலாக தங்களைத்தான் திட்டுகிறார்கள் என்று தெரிந்தே அரசாங்கமும், தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் டாஸ்மாக்கையும், ‘பார்’களையும் ‘ஸ்பான்சர்’ செய்து நடத்துகின்றன.
———-
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
உடைமையாளர்களுக்கு சொந்தமான இந்த வாக்கியத்தை, 1500 ஆண்டுகளுக்கும் முன்பே உடைமையற்றவர்களின் மனதிலும் நாவிலும் வலுக்கட்டாயமாக ஒருவன் புரண்டு, தவழ வைத்தான். அதற்கு குடிப் பழக்கத்தையே அடிப்படை காரணமாக மாற்றினான். இதன் மூலம் அரசின் வருவாயை பெருக்கினான். அவன் கவுடில்யன். அவன் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்’ நூலில் இதுகுறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கிறான்.
அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்க ‘சுராதயக் ஷா’ என ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் ‘அதயாக் ஷா’ எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறான். மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினான். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமுகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும். மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்…
இன்றைய டாஸ்மாக்கின் நடைமுறை அப்படியே ‘அர்த்த சாஸ்திரத்தை’ அடியொற்றி இருப்பதைக் காணலாம். இதனையடுத்து வந்த அனைத்து அரசுகளுமே குடியை அரசு கஜானாவை நிரப்பும் கண்ணியாகவே பார்த்தன. பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’, குடிக்குரியதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அப்காரி’ (Abhari Excise System) சட்டம் 1790-ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மதுவகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் என்பதற்கான உரிமைகளை அதிகத் தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கினர். இதனை தொடர்ந்து 1799-ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 – 94-ஆம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (அதாவது ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகை 1902 – 03-ஆம் ஆண்டுகளில் அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ.9,28,000 என உயர்ந்துள்ளது (ஆதாரம்: தஞ்சை மாவட்ட கெசட்).
1857-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களைப் பயன்படுத்திப் பல்வேறு மையப்படுத்தும் நடவடிகைகளையும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் கிளர்ந்து எழாமல் இருப்பதற்காக மது அருந்தும் பழக்கத்தை திணித்தது.
குடிநிர்வாகம் குறித்த ஆங்கிலேயரின் அணுகல் முறைக்கு அவர்கள் அயர்லாந்தில் 1799-ல் மேற்கொண்ட முயற்சிகளே முன்னுதாரணமாக இருந்தது. அதன்படி இந்தியாவில் சமுதாய அளவிலான குடி விவசாயங்களைத் தடை செய்து மையப்படுத்தப்பட்ட சாராய உற்பத்தி சாலைகளை ஏல முறையில் தரகு முதலாளிகளிடம் (‘மரியாதையும் மூலதனமுள்ள பெருவியாபாரிகளிடம்’ என்பது அயர்லாந்தில் ஆங்கிலேய அரசு பயன்படுத்திய வார்த்தை) அளிப்பது. சாராயக் கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது. அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது என்றும், கள் உற்பத்தி மற்றும் கள் குடிக்கும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து ரசாயனங்களை கலந்து மதுவை தயாரிப்பது என்றும் முடிவுக்கு வந்தனர்.
இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டுமென மாகாண அரசுகளுக்கு 1859ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினர். இதனையடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்துப் பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்துவந்த தாதாபாய் துபாஷ் என்பவனிடம் மும்பை மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள். தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. (1951ல் விட்டல் மல்லையா – விஜய் மல்லையாவின் தந்தை – இந்நிறுவனத்தை ‘முயன்று’ வாங்கினார்). இப்படித்தான் நாடு முழுவதுமே சாராய தரகு முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.
1947 ஆகஸ்ட் 15 அன்று நிகழ்ந்த அதிகார மாற்றத்துக்கு பின்னர், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு செல்லும்போது, நில வருவாய்க்கு அடுத்தபடியாகக் குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது. இன்றைய தமிழக அரசின் வருவாய் நிலையும் குடி வழியாக வரும் வருவாயை நம்பியே இருக்கிறது. 2010 – 11-ஆம் ஆண்டுகளில் டாஸ்மாக் வழியாக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.14,965 கோடி என்கிறது புள்ளிவிவரம்.
ஆனால், இந்த விவரங்கள் உணர்த்தும் செய்தியோ வேறு. நேர்முக வரிகள் குறைக்கப்பட்டு, முதலாளிகளுக்கு ஏராளமான – தாராளமான – சலுகைகள் வழங்கப்படுவதால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே அரசாங்கங்கள் குடி விற்பனையை ஊக்குவிக்கின்றன. இங்கிலாந்தில் லாட்டரியும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் சூதாட்டங்களும் எப்படி உழைக்கும் மக்களை பலி வாங்குகிறதோ அப்படி தமிழகத்தில் டாஸ்மாக் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை காவு வாங்குகிறது.
————–
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
என்ற வாக்கியம் பொருளாதார ரீதியாக ஒரு அர்த்தத்தை தருவது போலவே பண்பாட்டுக்கு ரீதியாக வேறொரு பொருளைத் தருகிறது. ஆனால், அனைத்து அர்த்தங்களின் ஆணிவேரும் ஒன்றுதான். அது, பொழுதுபோக்கையும் சேர்த்து சுரண்டுவது. இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் மேல்நிலை வல்லரசுகளின் சுரண்டல்களுக்கு ஏற்ப உலக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக – தக்கை மனிதர்களாக – மாற்றுவதுதான் இந்த வாக்கியத்தின் பின்னால் இருக்கும் உண்மை.
இதனடிப்படையிலேயே உழைப்பு நேரங்களை எப்படி அட்டவணைப் போட்டு ஒவ்வொரு தொழிலாளியையும் நிறுவனங்கள் சுரண்டுகிறதோ அப்படி அத்தொழிலாளியின் ஓய்வு நேரங்களையும் அட்டவணைப் போட்டு சுரண்ட ஆரம்பித்திருக்கின்றன. எதைப் பார்க்க வேண்டும், எதை ரசிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எந்தத் தொழிலாளிக்கும் இல்லை. உழைக்கும் நேரம் போலவே ஓய்வு நேரமும் பறிபோய் விட்டது. அதாவது தொழிலாளர்களின் பொழுதுபோக்கு நேரங்கள், சுரண்டல் அமைப்பின் உழைப்பு நேரங்களாகிவிட்டன. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘வீக் எண்ட்’ கலாச்சாரம், இன்று பிரபஞ்சம் தழுவிய கலாச்சாரமாக மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகிறது.
வாரநாட்களில் 10 அல்லது 12 அல்லது 14 மணிநேரங்கள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் தொழிலாளியின் கண்முன்னால், வார இறுதி என்ற கொண்டாட்டத்தை எலும்புத் துண்டு போல காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் ‘வீக் டேஸில்’ கோழையாக – மேலாளரின் அடக்குமுறைக்கு கட்டுப்பட்டு கீழ்படிந்து – இருப்பது ‘வீக் எண்ட்’டை உத்திரவாதப்படுத்துகிறது. குடிக்கும் நேரத்தை எதிர்பார்த்தே குடிக்காத நேரங்களை கடத்தும் மனநிலைக்கு தள்ளுகிறது. ஒவ்வொரு தொழிலாளியும் குடித்துவிட்டு வேலைக்கு வரக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கும் நிறுவனங்கள், குடிக்காமல் அதே தொழிலாளி உறங்கவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன.
அதனாலேயே உரிமைக்காக குரல் எழுப்புவர்களின் மீது தடியடி நடத்தும் காவல்துறையினர், குடித்துவிட்டு ‘மாண்புமிகு’களை என்ன திட்டினாலும் கண்டுக் கொள்ளாமல் செல்கின்றனர். சாலைகளில் வண்டிகளை நிறுத்தினால் அபராதம் விதிப்பவர்கள், டாஸ்மாக் கடை வாசலில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும்படி எப்படி நிறுத்தினாலும் புன்னகையுடன் நகர்கின்றனர். இப்படியாக பொது ஒழுங்கையும், சட்ட ஒழுங்கையும் பாதுகாக்க டாஸ்மாக் அவசியமாகிறது.
ஆக, குடிப்பது என்பது உள்ளார்ந்த விருப்பமல்ல. அது திணிக்கப்பட்டது. இதுவே பின்னர் விருப்பமாக உருவெடுக்கிறது. உடல் வலியை மறக்க குடிக்க ஆரம்பித்து உடல் வலிமையை இதனாலேயே உழைக்கும் வர்க்கம் இழக்கிறது. அடுத்த நாள் அல்லது அடுத்த வார வேலை(களை) செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட பழக்கம், என்றைக்கும் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளுகிறது.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு வரன் தேடும்போது மாப்பிள்ளை குடிப்பவராக இருந்தால், அந்த மணமகனை நிராகரிப்பார்கள். இன்று குடிக்கும் பழக்கம் இல்லாத நபர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்கத்தான் பெண்கள் தயங்குகிறார்கள். ‘என்றாவது குடிப்பதில் தவறில்லை’ என்ற போக்கு அதிகரித்திருக்கிறது. மிதமாக குடிப்பவர், எப்பொழுதாவது குடிப்பவர், அவ்வப்போது குடிப்பவர், எப்பொழுதும் குடிப்பவர் என்ற தர வரிசை பெருமைக்குரிய அடையாளமாக மாறியிருக்கிறது.
இப்படி மதுவுக்கு அடிமையாகி இருப்பதாலேயே குறைந்தபட்ச எதிர்ப்புணர்வு கூட இல்லாமல் போய்விடுகிறது. ஐந்து ரூபாய்க்கு தேநீர் பருகும்போது, இந்த அளவில், இவ்வளவு டிகாஷனுடன் டீ வேண்டும் என்று கேட்பவர்கள், மேஜையின் மீது ஈ மொய்ப்பதை சுட்டிக் காட்டி துடைக்கச் சொல்கிறவர்கள், டாஸ்மாக் கடையில் அவர்கள் தரும் ‘சரக்கை’ மறுபேச்சில்லாமல் தங்களுக்கு பிடிக்காவிட்டாலும் வாங்கிச் செல்வது எதனால்? சிறுநீர் கழிக்கும் இடம் அருகிலேயே இருக்க, யாரோ எடுத்த வாந்தி காய்ந்திருக்க, அதன் அருகிலேயே அமர்ந்து குடிக்க நேர்வதை அவமானமாக கருதாதது ஏன்? சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் டாஸ்மாக் சுவர் இடிந்து விழுந்து பல தொழிலாளர்கள் மரணமடைந்தது நினைவில் இருக்கலாம். இன்றும் பழுதுப்பட்ட சுவர்கள் பல டாஸ்மாக் கடைகளை தாங்கித்தான் நிற்கின்றன. அதன் அடியில் அமர்ந்துதான் இப்போதும் பலர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை 120 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வணிக விற்பனைகளுக்காக முன்னிலைப்படுத்தப்படும் விழா நாட்கள், குடிப்பதற்கான நாட்களாகவும் இருக்கின்றன. உடைகளின் விற்பனை இந்நாட்களில் அதிகரிப்பது போலவே மது பானங்களின் விற்பனையும் அதிகரிக்கின்றன.
திரைப்படங்களில் வில்லன் மட்டுமே குடித்த காலம் மலையேறி, இப்போது கதாநாயகன் குடிக்க வேண்டும் என்பது ‘சாமுத்ரிகா லட்சணத்தில்’ வந்து நிற்கிறது. இந்த ‘லட்சணத்தை’ பத்திரிகைத்துறையில் இப்போது அதிகம் பார்க்கலாம். கண்முன் இருக்கும் உதாரணம், 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை. இக்காலத்தில் இலங்கை தூதரக அதிகாரியான அம்சா, தமிழக பத்திரிகையாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைத்தார். அதுவரை ‘சிங்கள இராணுவம்’ என்று எழுதி வந்த ஊடகம், இந்தப் ‘பார்ட்டி’க்கு பிறகு ‘இலங்கை இராணுவம்’ என்று எழுத ஆரம்பித்தன. ஈழப்பிரச்னை தமிழகத்தில் பரவாமல் தடுக்க, சில கோப்பைகள் மதுவே இலங்கைத் தூதரகத்துக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.
இதே வழிமுறைகளை பல காவல்துறை அதிகாரிகளும், ஆணையர்களும் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். செய்தியாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைப்பதன் வழியாக அவர்களிடமிருந்து செய்திகளை அறிந்துக் கொள்கிறார்கள்; செய்திகள் வராமல் தடுக்கிறார்கள். பணி உயர்வு, ஊதிய உயர்வு, இட மாற்றம் போன்ற விஷயங்கள் ‘விருந்து’களில் தீர்மானமாகின்றன. இராணுவ ரகசியங்களை அறிய எந்த சித்திரவதைகளையும் அண்டை நாடுகள் செய்வதில்லை. ‘ஒரு ஃபுல்’ முழு ரகசியத்தையும் தாரை வார்த்து விடுகிறது.
குடிக்கு அடிமையான – அடிமையாக்கப்பட்ட மனிதர்களை குறி வைத்துத்தான் தரகு முதலாளிகளும் பன்னாட்டு மது உற்பத்தி நிறுவனங்களும் களத்தில் இறங்குகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் குடிப்பவர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கும் என்கிறது புள்ளி விவரம். 2011 – 12-ல் 2 ஆயிரம் இலட்சம் பீர் பெட்டிகளும், 1,100 இலட்சம் விஸ்கி பெட்டிகளும், 540 இலட்சம் ரம் பெட்டிகளும், 280 இலட்சம் பிராந்தி பெட்டிகளும், 20 இலட்சம் வோட்கா பெட்டிகளும், 60 இலட்சம் ஜின் பெட்டிகளும் இந்தியாவில் விற்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் 48 ‘குவார்ட்டர்’ அல்லது 24 ‘ஆஃப்’ அல்லது 12 ‘ஃபுல்’ இருக்கலாம்.
இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் எதுவொன்றையும் மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாது. ஒன்றுக்குள் மற்றது அடக்கம். மற்றதுக்குள் இன்னொன்று அடக்கம். அந்தவகையில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அரசு சாரா அமைப்புகள் பல பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் போதை மறுவாழ்வு மையங்களை தொடங்குவதும், கவுன்சிலிங் என்ற பெயரில் ஒரு தொகையை பறிப்பதும், புதிதுப் புதிதாக மன நோய்கள் பூப்பதும், மருந்துகள் அறிமுகமாவதையும் சொல்லலாம்.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடட் ப்ரீவரீஸ் லிட் நிறுவனத்தின் அதிகாரியான ரவி நெடுங்காடி, ”மூன்றில் இரண்டு பங்கு வாடிக்கையாளர்கள் குறைந்த வயதுடையவர்கள். சட்டப்படி குடிக்க அனுமதி இல்லாதவர்கள். இவர்களை குறி வைத்துதான் நாங்கள் விற்பனையில் இறங்கியிருக்கிறோம். 3500 இலட்சம் பேர் இப்போது குடிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 5 ஆயிரம் இலட்சமாக உயர்த்துவதுதான் எங்கள் நோக்கம்…” என்று பெருமையுடன் பேசியிருக்கிறார்.
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…” என டிராகுலாவின் பற்களை ஆல்கஹால் கொண்டு மறைத்தபடி தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் புன்னகைக்கிறார்கள். அவர்களுக்கான வார்த்தைகளை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் வாக்கியமாக மாற்றத் துடிக்கிறார்கள்.
குடி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல் மட்டுமல்ல அல்லது மருத்துவ உலகம் பட்டியலிட்டிருப்பது போல் அதுவொரு நோய் மட்டுமே அல்ல. அது உடலையும் மனதையும் ஆளுமையையும் ஒரு சேர எடுக்கும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு.
_________________________________________________________
– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011
__________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்:
குடிச்சுட்டு எழுதனீங்களா?
ச்சீனு குறித்து விமரிசப்பதற்கு சீனூவாய் வாழ வேண்டிய அவசியமில்லையே?
ச்சீனு குறித்து விமரிசப்பதற்கு சீனூவாய் வாழ வேண்டிய அவசியமில்லையே?#பார்த்திபன் ரசிகரா நீங்க
அதனால தான் கேக்குறேன்…
குடியை பற்றி எழுதினால் கூட ச்சீனுக்கு கோபம் வருகிறதே. ச்சீனு குடியனா இல்லை மொடாக்குடியனா ?
குடியை பத்தி எழுதுனதுனால தான் கோபம் வருதுனு நெனக்கிற பாரு, உன் அறிவே அறிவு.
அப்ப எதுனால ஒனக்கு கோவம் வருது ? நீ இன்னா ஜெயா மாமியா. மம்மிக்கு தான் டாஸ்மாக்க பத்தி பேசுனா கோவம் வரும், ஒனக்கு இன்னாத்துக்கு வருதுன்னேன். கேள்விக்கு பதில ஸ்ட்ரெய்ட்டா சொல்லு அத்தவிட்டுபுட்டு புரியாத கவிஜைய மாதிரி அர கொறையா பொலம்பினுருக்காத..
மண்டையில் எதுனா இருக்கா ? உன்னைப்பத்தி எழுத உன்னை மாதிரி வாழ வேண்டியதில்லைன்னு சொன்னா மறுபடியும் ’அதனால தான் கேக்குறேன்னு’ சொன்னா என்ன அர்த்தம்.
அது என்னப்பா இது மாதிரி கேள்விங்க கேட்டா மட்டும் அல்லக்கைஸ் ஆல் ஆஜர் ஆகுறாய்ங்க…
நீ யாருக்குப்பா அல்லக்கை ? இப்ப ஒன்னோட பிரச்சினை தான் இன்னா நைனா ? இந்த பதிவுல ஒனுக்கு இன்னா தான் பிரச்சன அத்தச்சொல்லு மொதல்ல ?
சீனு இந்த கட்டுரை குடியினால் ஏற்படும் சமூக சீரவையும் தனிநபரி ஆளுமை சிதைவையும் பற்றி பேசுகிறது இது தான் கட்டுரையின் உள்ளடக்கம். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை, மாற்றுக்கருத்து ? நல்லா குடிச்சிட்டு கும்மாளம் போடுங்கன்னு கட்டுரை எழுதனுமா என்ன செய்யனும்னு சொல்லுங்க ?
அதனால என்னா கேக்குறீங்க ச்சீனு ?
இறுதியில் பண்பாட்டு கலாச்சாரத்தை தான் சீரழிக்கும்.
என்னடா இந்த வார்த்தையை பயன்படுத்தாமல் முடிப்பீர்களோ என்று நினைத்தேன்.
மிக மிக அற்புதமான புரிந்துண்ர்வை உருவாக்கும் விழிப்புணர்வு கட்டுரை.
ஆனால் மதகு திறந்தவுடன் வரும் கசடு அழுக்குகளைப் போலவே இந்த தலைமுறையின் வீக் எண்ட் அவரவர் மனதை பாடாய் படுத்தி சித்தம் போக்கு சிவன் போக்கு என்று தடுமாறி பயணத்தில் இழுத்துக் கொண்டே செல்கிற்து.
பார்க்கலாம். இன்னும் பத்து வருடங்களில் உடல்ரீதியாக மன ரீதியாக செயல்பட முடியாத இளையர்களைப் பார்த்து அப்போதுள்ள இளையர்களின் மனதில் என்ன மாறுதல் உருவாகப் போகின்றது என்பதைப் பார்க்கலாம்.
உண்மை ! மனம் கனத்து போகிற உண்மை! இங்கு பின்னூட்டம் இடுவதற்கு யாருக்குமே அருகதை இருப்பதாக படவில்லை! (கண்டிப்பாக நான் இதுநாள்வரை நினைத்து கூட பார்த்தது இல்லை, இனிமேலும் அப்படித்தான்)
கட்டுரை எழுதியவரும் குடிப்பவராக இருக்ககூடாது என்பதே என் விருப்பம்.
திமுக அரசியல்வாதிகளின் சாராயக் கம்பெனிகளுக்கு அதிமுக அரசின் மூலம் எந்த பங்கமும் வருவதில்லை. அதேபோல ஜெயாவுக்கும் அவர்தம் பினாமிகளுக்கும் சொந்தமான சாராயக் கம்பெனிகளுக்கு திமுக அரசின் மூலம் எந்த நெருக்கடியும் வருவதில்லை. உள்ளுக்குள் ஒரு கூட்டு.. அண்டர்ஸ்டாண்டிங்!!
பண்டைய சோவியத் ரஸ்ஸியாவில் (முக்கியமாக ஸ்டாலினுக்கு பின் ‘சமூக ஏகாதிபத்தியமாக’ சீரழயிம் முன்பு) ஓட்கா மதுவை யார் தயாரித்து, எப்படி விற்றார்கள் என்பதையும் கொஞ்சம் எடுத்தியம்புங்களேன். காம்ரேடுகள் பலரும் ஓட்கா பிரியர்கள்.
சரி, இங்கும் பல தீவிர மார்க்சியர்கள், ம.க.இ.க அனுதாபிகள், etc பெரும் தண்ணி பார்ட்டிகள். மதுவிலக்கை நீங்க முன்மொழிந்தீங்கனா, செம்புரட்சியே வேண்டாம் என்று ‘எதிர்புரட்சி’ செய்துவிடுவாக. :)))
இப்படிப்பட்ட நண்பர் ஒருவருக்கு பெரிய அறச்சிக்கல். அவர் ரம்மை விரும்பி அடிப்பார். ஆனால் ’பன்னாட்டு ஏகாதிபத்திய’ பானங்களால் கோக், பெப்சியை அறவே வெறுப்பவர். ஆனால் மிக்சிங்க்கு அவை தான் அருமையாக பொருந்தும். எனவே நம் நண்பருக்கு பெரும் moral dilamma. பாவம், ரொம்ப்ப கஸ்டப்படரார். ஒரு வழி சொல்லுங்களேன்.
கோலி சோடா 😉
” kelikkaiyakavey nalinipokkida kelviyum ganamum ondraga thiradduvom ”
onnamadiri porikkiyai alla.
nalinipokkida////…என்னது நளினி போகனுமா?ராமராசன் கோவிச்சுக்க போறார்!தமிழ்ல எழுதுய்யா!
நமக்குத் தெரிந்த நண்பர் … பகுத்தறிவாளர் ஆனால் ஜோசியர், மனித உரிமை ஆர்வலர் ஆனால் அதிகாரவர்க்க ஆதரவாளர் மற்றும் முதலாளித்துவ முகவர். பெரியாருக்கும் பஞ்சாங்கத்துக்கும் நடுவுல , மனித உரிமைக்கும் யூனியன் கார்பைடுக்கும் மிடில்ல அவர் படுத்துற பாடு இருக்கே.
இதுல ஹைலைட் என்னன்னா, அவர் ஒரு நகைச்சுவையாளர் ஆனால் டென்ஷன் பார்ட்டி.
சிரிப்புக்கும் சீற்றத்துக்கும் நடுவே ஒரு மாபெரும் crazy quagmire , temporal torment , sensual struggle …
பாவம் ரொம்ப கஷ்டப் படுத்துறார். ஒரே மாத்திரையில எல்லாம் சரியாவனும்.. இருக்கா??? 🙂
எனக்கு தெரியும் அந்த நண்பர், அதிய மான் என்கிற புதிய மான் தானே !
//சரி, இங்கும் பல தீவிர மார்க்சியர்கள், ம.க.இ.க அனுதாபிகள், etc பெரும் தண்ணி பார்ட்டிகள். மதுவிலக்கை நீங்க முன்மொழிந்தீங்கனா, செம்புரட்சியே வேண்டாம் என்று ‘எதிர்புரட்சி’ செய்துவிடுவாக. ))
இப்படிப்பட்ட நண்பர் ஒருவருக்கு பெரிய அறச்சிக்கல். அவர் ரம்மை விரும்பி அடிப்பார். ஆனால் ’பன்னாட்டு ஏகாதிபத்திய’ பானங்களால் கோக், பெப்சியை அறவே வெறுப்பவர். ஆனால் மிக்சிங்க்கு அவை தான் அருமையாக பொருந்தும். எனவே நம் நண்பருக்கு பெரும் moral dilamma. பாவம், ரொம்ப்ப கஸ்டப்படரார். ஒரு வழி சொல்லுங்களேன்.
// ‘முக்கிய’ நிருபர் சொன்னதா அதியமான்? நீங்க கூடத்தான் ம. க. இ. க. வை பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். அதற்காக பின்னூட்டங்களில் தெறீக்கும் உங்களாது நேர்மையற்ற வாதங்களுக்கு வினவு பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டுமா என்ன? உங்க முதலாளித்துவ, தாரளமய பொருளாதாரத்தின் ஒரு அங்கமாக குடியும், போதையும் உள்ளதே அது பற்றி கருத்து சொல்லாமே? குடி வியாபாரத்தத கட்டுமான மறுசீரமைப்பு செய்ய உலக வங்கி வலியுறுத்த மறூக்கீறதே ஏன்? கல்வி, தண்ணீர், மருத்துவம் என அனைத்து அடிப்படை வசதி வழங்கும் வேலையிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கும் உலக வங்கி இதத மட்டும் செய்வதில்லையே ஏன்? குஜராத்தின் மதுவிலக்கு ஒரு நகைச்சுவை. இவ்விசயத்தில் அண்ணா ஹசாரேவவ ஏதேனும் முக்கிய நிருபர் மூலம் பேட்டி கண்டு அதியமான் வெளியிடலாம்.
அதியமானுக்காக,
கார்ப்பேசவ் காலத்திலிருந்து வோட்கா அடிக்ஷன் ஆரம்பித்து, இன்று ‘சுதந்திர’ ரஷ்யாவில் பாதிப்பேர் எதிர்கால நிச்சயமின்மையை எதிர்கொள்ள மனமின்றிக் குடிக்கும் குடிகாரர்கள்.
//
I think it’s only getting worse,”he says. When the drinkers themselves reflect on their addiction, he says, they often mention the word “toska,” which means an oppressive sickness of the heart, the feeling that might envelop you if you were alone in the middle of the endless steppe, caught in loneliness, darkness and despair.
And they nearly always begin with perestroika, the period in the middle 1980s when Mr. Gorbachev began loosening the controls on society, when people began to feel the first stirrings of freedom but discovered more loss of security than promise for the future.
“Take journalists,” said Andrei Alexandrovich, a Muscovite who drinks every day. “We used to be first-class people, giving important information to the Communist Party, the Central Committee, the government. We went abroad and we were necessary and useful to the KGB and the country.
//
http://articles.baltimoresun.com/1994-04-04/news/1994094086_1_alcohol-drinking-russians
ரஷ்யாவை விடுங்க அதியமான். இன்றைக்கு நம் இளைய சமூகத்தை எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனை குடி இல்லையா. ஸ்கூல் பையன்கள் ஸ்கூல் யூனிபார்முடன் குடிக்க வந்து நிற்பதை ஜூவி முதல் நக்கீரன் வரை போட்டாலும் ‘நான் ஸ்டெடியாத்தான் இருக்கேன்’ பாணியிலேயே பேசுறீங்களே. நல்லா இருங்க…
//நேர்முக வரிகள் குறைக்கப்பட்டு, முதலாளிகளுக்கு ஏராளமான – தாராளமான – சலுகைகள் வழங்கப்படுவதால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே ///
நிருபியுங்களேன். நேர்முக வரிகள் குறைக்கப்பட்ட பின், வரி வசுல் அளவு கடந்த 20 ஆண்டுகளில் மிக மிக உயர்ந்தே உள்ளது. 80களோடு ஒப்பிட்டு பார்க்கவும்.
குஜராத்தில் மதுவிலக்கு 60 ஆண்டுகளாக. (அதில் எத்தனை ஓட்டை இருந்தாலும், அரசுக்கு வரி வசுல் இந்த விசியத்தில் இல்லை). ஆனால் அம்மாநிலத்தில் வரி வசுல் கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் பார்க்கவும். உடனே மோடி ஒரு கொலைகார்ப்பயல் என்று ஆரம்பிக்க வேண்டாம். அது வேறு விசியம்.
//குஜராத்தில் மதுவிலக்கு 60 ஆண்டுகளாக. (அதில் எத்தனை ஓட்டை இருந்தாலும், அரசுக்கு வரி வசுல் இந்த விசியத்தில் இல்லை). ஆனால் அம்மாநிலத்தில் வரி வசுல் கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் பார்க்கவும். உடனே மோடி ஒரு கொலைகார்ப்பயல் என்று ஆரம்பிக்க வேண்டாம். அது வேறு விசியம்.
// சொன்னாலும் சொல்லாட்டியும் அதான் உண்மை. தராளாயம கொள்ளைகளினால் அங்கு நடப்பவற்றை (நிலப்பறிப்புக்கெதிராக உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று குஜராத்தை பலரும் எச்சரித்துள்ளது ) அதியமான் ஒத்துக் கொள்ளப் போகிறாரா என்ன?
அதியமான் அவர்களே,
வரிவசூல் கிசூல் என்று அள்ளி விடும் நீங்கள் ‘Revenue Foregone'(கைவிடப்பட்ட வருமானம்) என்றால் என்ன என்று மக்களுக்கு விளக்குங்களேன். அதில் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகையாக “அரசுக்கு கார்ப்பரேட்டுகள் மூலம் வருமானமாக வரவேண்டிய பணத்தை’ வேண்டாம் என்று அரசு பட்ஜெட் ஸ்டேட்மண்டில் பகிரங்கமாக அறிவிப்பு விடுகிறதே. 2009-10ல் அப்படி மத்திய அரசு கார்ப்பேரட்டுகள் கையில் விட்ட காசு 5 லட்சம் கோடிகள்..
http://indiabudget.nic.in/ub2010-11/statrevfor/annex12.pdf ல் கிடைத்த கீழ்க்கண்ட புள்ளிவிவரம் நம்ம மன்மோகன், ப.சி. அவர்கள் கொடுத்த பட்ஜெட்டில் வந்தது.
//
Revenue Foregone in 2009-10 as a per cent of Aggregate Tax Collection in 2009-10
In crores
Corporate Income-tax 79554
Personal Income-tax 40929
Excise Duty 170765
Customs duty 249021
Total 540269
//
அந்த PDF டாக்குமெண்டில் இருக்கும் புள்ளி விவர தலைசுற்றல்களுக்கு நடுவே இதை யார் பார்த்து என்ன கேட்கப் போகிறார்கள். கேட்டால் பொருளாதாரம் முன்னேற வேண்டாமா… தொழில் வளர வேண்டாமா.. என்று விளக்குவார் மன்னுமோகன்.. நீங்க என்ன சொல்லப் போறீ்க..?
அதியமான் அப்பீட்டு …
பொருளாதாரப் புலி எங்கே ?…
What about the net revenue earned in these years ? you guys can never ever understand that by only reducing the tax rates did the govt get this much revenue. try raising the tax rates to 70s level and see the result. Income tax was around 70 % then. but that crushed the incentive for production and profits and hence low tax revenue then.
but, yes the SEZ concept has several anamolies. but you guys refuse to accept that Indian govt is garnering tens of lacs of crores of tax revenue from a 9 % GDP growth which was made possible by REDUCING the tax rates. try reversing this and see the result for yourselves.
//
கேட்டால் பொருளாதாரம் முன்னேற வேண்டாமா… தொழில் வளர வேண்டாமா.. என்று விளக்குவார் மன்னுமோகன்.. நீங்க என்ன சொல்லப் போறீ்க..?
//
இதே விளக்கத்தைத்தான் கிட்டத்தட்ட ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறார் அதியமான்.
>>What about the net revenue earned in these years ?
So what. Net revenue increase does not justify your forsaken revenue. India is a huge market. You don’t need to ‘attract’ anybody by slashing or by giving tax cuts. Those days are gone. Why do you think a ‘Walmart’ or ‘Mcdonald’ come here? Because they NEED market.
>>but you guys refuse to accept that Indian govt is garnering tens of lacs of crores of tax revenue from a 9 % GDP growth..
Please don’t quote GDP. Quoting GDP does not mean the country has become prosperous and all people are living well, because of the below reasons..
1. GDP per capita is not a measurement of the standard of living in an economy. Similarly, GDP per capita is not a measure of personal income.
2.GDP does not account for variances in incomes of various demographic groups. i.e. it does not account for who got prospered in the population whether only Ambanis or a vidharba farmer.
Plus lot of other things.
—Rest of things I leave it to your analysis. You might be an economist. I am not. But I follow logic.
அருமையான கட்டுரை!
சில பின்னு ஊட்டம் இட்டவர்களுக்கு, குடிப்பவர்களுக்கும் குடித்தவர்களுக்கும் சிந்தனை
இருக்காது. சிந்தனையிருந்தாலும் விரிந்த பார்வையும் இருக்காது. புரிந்து கொல்லுங்கள்
//குடி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல் மட்டுமல்ல அல்லது மருத்துவ உலகம் பட்டியலிட்டிருப்பது போல் அதுவொரு நோய் மட்டுமே அல்ல. அது உடலையும் மனதையும் ஆளுமையையும் ஒரு சேர எடுக்கும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு//உண்மை …முற்றிலும் உண்மை …
எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இந்தியாவில் கெட்டு போன பாப்பான்கள் மற்றும் உயர்சாதி என்று தன்னை தானே சொல்லி கொண்ட கழுதைகள் எல்லாம் நடத்தும் கார்ப்பரேட் நிறுவனக்களை பார்ப்பண நிறுவனங்கள் என்று சொல்லும் அதிபுத்திசாலி கம்யூனிஸ்டுகள், பிரிட்டிஷ்காரனை மட்டும் கிறித்துவ வெறியர் கூட்டம் என்று சொல்லாமல் இருப்பதன் காரணம் என்ன? ஏன் என்றால் எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களும் கிறித்துவர் கையில் தானே இன்றளவும் உலகம் முழுவதும் உள்ளது. மற்ற மததினரும் அதில் கோலோச்சியிருக்கிறார்கள். அதனால் அவர்களை கிறித்துவ கார்பரேட் என்று குற்றம் சொல்ல முடியாது என்றால், கெட்டு போன பார்பண நாராயண மூர்த்தியின் infosys க்கு இணையாக சொல்லபோனால் அவரை விட பல மடங்கு பணம் படைத்த wipro அஸிம்ஜி என்ற இஸ்லாமியரால் தானே நடக்கிறது. பிறகு எப்படி பார்ப்பண கார்ப்பரேட் என்று சொல்ல முடியும்.
அதுவும் தவிர வெளி நாட்டு கார்ப்பரேட்களும் ஒரு குடும்ப அமைப்பின் அதாவது நம்ம ஊரு ஜாதி மாதிரி தான். அதுவும் கிறித்துவ அமைப்பு தான். சரி சீனாவில் உள்ள கார்ப்பரேட்களும் அதாவது கம்யூனிஸ மதம் குடுமப அரசியல் தான் நடக்கிறது. என்னை விட உங்களுக்கு சீனா பற்றி அதிகம் தெரியும் என்பதால் அதை பற்றி நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. அப்புறம் க்யூபாவில் குடும்ப கம்யூனிஸ அரசியல் அதாங்க கேஸ்ட்ரோ குடும்பம தான் ஆட்சி செய்கிறதாமே… என்ன போங்க… எல்லா இடத்திலும் இப்படி தான் இருக்கு…..
எல்லா இடத்திலும் இப்படித் தானா சோழன் ? உங்க உளறல் தாங்க முடியல. நீங்க ரொம்ப போதையில இருக்கீங்கன்னு நினைக்கிறேன் கொஞ்சம் தெளிஞ்ச பிறகு வாங்களேன். போதைன்னா சரக்கு இல்ல, பார்ப்பனீய இந்துமதவெறி போதை !
அவருக்கு எங்கயுமே பதில் சொல்லாம நீங்க நழுவுறீங்களே, முடியலயா?
அவருடைய கேள்விகள் என்ன என்ன என்பதை நீங்க தொகுத்து சொல்லுங்க அம்பி பதிலை நான் சொல்கிறேன்.
//பிரிட்டிஷ்காரனை மட்டும் கிறித்துவ வெறியர் கூட்டம் என்று சொல்லாமல் இருப்பதன் காரணம் என்ன?// எவ்வளவு அபத்தமான கேள்வி இது? பார்ப்பான சாதியில் பிறந்த எல்லாத்தையும் பார்ப்பன வெறியன் என்று சொல்லக் கோருவது போல உள்ளதே? கிருத்துவ வெறியை பேசுபவரை கிரித்துவ வெறியர் என்றும், சாதி மேலான்மை-பார்ப்பன கோட்பாடு பேசுபவரை பார்ப்பன வெறியர் – இந்து வெறியர் என்றும், இஸ்லாம் வெறி பேசுபவர இஸ்லாம் வெறியர் என்றும், காலனியாதிக்கத்தை ஆதரிப்பவரை முதலாளித்து தாசர் என்றும் (உதா: நம்ம அதியமான்) இப்படி கூப்பிடுவதில் தவறொன்றும் இல்லையே?
excellent ariticle by vinavu
மது விலக்கு வேண்டும் என்று போர் கோலம் பூண்டு போராடிய பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்து வந்த இந்த திராவிட கட்சிகளின் கொடை தமிழன் அனைவரையும் குடி காரன் ஆக்கியது. இந்த நாய்கள் பெரியாரின் பெயரை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்பது ஒரு புரியாத புதிர்.
excellent thanks mr. Vinavu
ச்ச்னு, அதியமான். சொலன் இப்போ யென்ன சொல்ல வருகிரிர்கல். மது வேன்டுமா? வேன்டாமா? தெலிவாய் சொல்லுங்கல்.
வேண்டாம்ணு சொல்லுவார்களா!வேண்டாம்ன்னா வரி வசூல் குறைஞ்சுடுமே. எவன் எக்கேடு கெட்டுப் போனா என்ன? அதியமானுக்கு வரி வசூல்தான் முக்கியம்.
சுஜித்,
குஜராத்தில் மது வரிவசூல் இல்லாமலேயே கடந்த காலங்களை விட தற்போது வரிவசூல் கணிசமாக உயர்ந்திருப்பதாக அதியமான் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆக, மதுவிலக்கு இருந்தாலும் சமாளிக்க முடியும் என்று மறைமுகமாகக் கூறியிருக்கிறார்.
எல்லாருக்கும் சுன்னத்து பண்ணி முஸ்லீம் ஆக்கிட்டா குடி ஒழிஞ்சிடும் இல்லை?
தமிழ்நாட்டில் பாரம்பரிய மதுவகையான கள்ளு குடிக்கலாமா?
இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி முடிச்ச பிறகு சரக்கு அடிக்க போயிருப்பீங்களே ….! இதை படித்த உம் நண்பர்கள் உம்மை பாராட்டி ஒரு பார்டி கொடு என்றிப்பார்களே ! இது இரண்டும் நடக்க வில்லை என்றால் …ஓன்று நீர் வயதான மனிதர் …அல்லது இப்போது நீங்கள் தமிழ் நாட்டில் இல்லை….அபப்டிதானே …
இதுவும் ஒரு பார்ப்பன குயுக்தி தான். கட்டுரையின் மைய்யமான விசயத்திலிருந்து அனைவரையும் திசை திருப்பும் குடிகாரா பார்ப்பானின் குயுக்தி !
week end கலாச்சார புத்தி வேறு எப்படி இருக்கும்.
ஒரு கட்டுரையிலே எத்தனை ஓட்டைகள். குடி, டாஸ்மாக், குறித்த கட்டுரைகள் எல்லாமே இப்படித்தான் இருக்கு? Why vinavu? Why this kolaveri…
குடி என்பது கட்டாயமல்ல. நீங்க சொல்றத பாத்தா நம்ம நாட்டுல குடிக்க்கலேன்னா வாழவே முடியாது போலிருக்கே. உண்மை நிலைமை வேறு. மக்கள் விரும்பித்தான் குடிக்கறாங்க. எத்தனையோ பேரு குடிக்காம இருக்காங்க. அதுக்கென்ன சொல்றீங்க?
“உடல் வலியை மறக்க குடிக்க ஆரம்பித்து உடல் வலிமையை இதனாலேயே உழைக்கும் வர்க்கம் இழக்கிறது.”
அளவுக்கதிகமா குடிப்ப்பவனுக்குதான் இந்த பிரச்னை. உலகெங்கும் முன்னேறிய நாடுகளில் குடி கோலோச்சி இருக்கு. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான், போன்ற எல்லா இடங்களிலும் பெரிய குடி கலாச்சாரமே இருக்கு. அவங்க உழைக்கலையா, இல்ல முன்னேறவில்லையா?
“மிதமாக குடிப்பவர், எப்பொழுதாவது குடிப்பவர், அவ்வப்போது குடிப்பவர், எப்பொழுதும் குடிப்பவர் என்ற தர வரிசை பெருமைக்குரிய அடையாளமாக மாறியிருக்கிறது.”
குடிப்பது என்பது வண்டி ஓட்டுவது போல. அதிக வேகத்துல போனா ஆபத்து. அதுக்காக வண்டிகளை தடை செய்வது சரியா? எல்லைக்குள் இருப்பது அவசியம். As Dr Mallya says, Drink responsibly. அப்பப்போ குடிக்கலாம், தவறே இல்லை. ஆனால் நீங்க ஒத்துக்க மாட்டீங்க.
“இப்படி மதுவுக்கு அடிமையாகி இருப்பதாலேயே குறைந்தபட்ச எதிர்ப்புணர்வு கூட இல்லாமல் போய்விடுகிறது.”
மதுவுக்கு அடிமையானால்தான் பிரச்னை. குடித்தால் எதிர்ப்புணர்வு குறைந்துவிடும் என்று சொல்ல முடியாது. குடி இருந்தும் தென் அமெரிக்காவிலும், சீனாவிலும், ரஷ்யாவிலும் புரட்சி வந்ததே? ஞாபகம் இல்லையா? அதனாலதான் “அளவோடு குடி, வளமோடு வாழ்” என்று சான்றோர்கள் கூறி உள்ளனர்.
“திரைப்படங்களில் வில்லன் மட்டுமே குடித்த காலம் மலையேறி, இப்போது கதாநாயகன் குடிக்க வேண்டும் என்பது ‘சாமுத்ரிகா லட்சணத்தில்’ வந்து நிற்கிறது.”
என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு! நம்பியார் காலத்துல குடிப்பவன் கெட்ட்வன் என்கிற மாயை இருந்தது. இப்ப மக்கள் தெளிவாயிட்டாங்க. இப்போ ஹீரோ குடிக்கிறான் என்றால், அது யதார்த்தத்தை காட்டுகிறது. Our cinema and our audiences have matured. இது கூட தெரியலையே, வினவு?
கோமாளி மாமா ..
கொஞ்சம் நின்னு யோசிங்க … உங்க பையனும் பொண்ணும் ஒரு 15 வயசு இருக்கும் போது கொஞ்சம் குடிக்கப் பழகுறாங்கன்னு வச்சுக்குவோமே… அதன் வீச்சு நீங்க சொல்லுற மாதிரி அளவோடு மட்டும் இருக்கும் அப்படிங்கிறது விஞ்ஞானப் பூர்வமான டுபாக்கூர் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அந்த வயதில் எல்லாமே அதிகமாக கட்டுப்பாடு தாண்டி செல்லும் என்பதையும் உணர்வீர்கள் என்று கருதுகிறேன்.
அப்போதும் இதே டயலாக்கை விடுவீரா ?…
விட்டாலும் விடுவீர்… வீக் எண்ட் கலாச்சாரத்துல இருந்து கூட்டிக் கொடுக்குற கலாச்சாரம் வரைக்கும் ஃபேசன் வரையரைக்குள்ள கொண்டுய் வந்திருக்கே முதலாளித்துவ வர்க்கம்..
// “திரைப்படங்களில் வில்லன் மட்டுமே குடித்த காலம் மலையேறி, இப்போது கதாநாயகன் குடிக்க வேண்டும் என்பது ‘சாமுத்ரிகா லட்சணத்தில்’ வந்து நிற்கிறது.”
என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு! நம்பியார் காலத்துல குடிப்பவன் கெட்ட்வன் என்கிற மாயை இருந்தது. இப்ப மக்கள் தெளிவாயிட்டாங்க. இப்போ ஹீரோ குடிக்கிறான் என்றால், அது யதார்த்தத்தை காட்டுகிறது. Our cinema and our audiences have matured. இது கூட தெரியலையே, வினவு? //
மதுபான விளம்பரங்களுக்கு தடை விதித்ததின் பின் திரைப் படங்களில் ஒரு சீன்லயாவது பாட்டிலை ஒப்பன் பண்ணும் காட்சி வந்துடும். இப்ப ஒப்பனிங் சீன்லயே ஓப்பன் பண்ண ஆரம்பிச்சாச்சு. படம் எடுப்பவனையும்,சென்சார் போர்டையும் Dr Mallaya நல்லா கவனிச்சுடறார் போலருக்கு.
//அதனாலதான் “அளவோடு குடி, வளமோடு வாழ்” என்று சான்றோர்கள் கூறி உள்ளனர். //
குடி குடியை கெடுக்கும் சான்றோர்கள் சொன்னது சும்மாக்காச்சிக்குமா? Dr Mallaya சான்றோர்களையும் கவனிச்சிருப்பாரோ?
டாஸ்மாக்-க்கு எதிரான மதுரை மாணவியின் போராட்டத்தை தொடர்ந்து அரசு சாராயக்கடை குறித்த விவாதம் மீண்டும் ஆரம்பம் ஆகி உள்ளது.
அது குறித்த இரண்டு நாள் முன்பு புதிய தலைமுறையில் அதிமுக, திமுக, பாமக, தமுமுக சார்பில் விருந்தினர்கள் கலந்து கொண்ட நேர்பட பேசு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
அப்போது பேசிய அதிமுக, திமுக டாஸ்மாக் கடை நடத்த வேண்டிய தேவையையும், பாமக இரண்டு திராவிட கட்சிகள் தான் இந்நிலைக்கு காரணம் எனவும், தமுமுக… இதில் கட்சிகள் குறித்து பேசவேண்டாம் டாஸ்மாக் கடையினை மூட வேண்டிய தேவை குறித்து பேசுவோம் என விவாதித்தனர்.
அதில் அவர்களிடம் கேட்க வேண்டும் என தோன்றிய கேள்விகள் சில…
திமுக, அதிமுக தரப்பில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் சாவதை தடுப்பதற்காகவும், அதன் வருமானம் குண்டர்கள் கையில் போய் சேர்வதை தடுப்பதற்காகவும் தான் டாஸ்மாக் அரசே ஏற்றது என்றும் மாநிலத்தை சுற்றி சாராயக்கடைகள் இருக்கும் போது இங்க மட்டும் இல்லாமல் இருக்க முடியுமா?
கள்ளச்சாராயம் குடித்து சாகிறான் அதுனால நல்ல சாராயம் கொடுக்கிறோம் என்றால் ஊருக்கு வெளியே, ஒதுக்குபுறமாக இருந்த ஒரு கடைக்கு பதிலாக தெருவுக்கு 2 கடை, 4 கடை என நித்தம் நித்தம் புதிய புதிய கடைகளை என்ன மயிருக்கு திறக்கிறீர்கள்…? பள்ளிகள் அருகிலும், கோயில்கள் அருகிலும், மருத்துவமனைகள் அருகிலும் கடைகள் இருப்பதை யாராவது மறுக்க முடியுமா?
நல்ல சாரயம் குடித்து உடனே சாகாமல் இருக்க கடையினை நடத்துகிறோம் எனும் நீங்கள் அடுத்த வரியிலியே வருமானம் குண்டர்கள் கைகளில் போவதை தடுக்கிறோம் என்கிறீர்கள். இரண்டும் நேர் எதிர் கருத்து என்பதை உணர முடியவில்லையா?
10 ரூ கூட பெறாத ஒரு குவார்ட்டர் பாட்டிலை 80 ரூபாய் என போட்டு மக்கள் பாக்கெட்-ல் பிளேடு போடுவது மூலம் உங்கள் உண்மை முகம் கிழிந்து தொங்குவது தெரியவில்லையா?
ஒரு பகுதியில் இருக்கும் ஒரு ரேசன் கடை, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என ஒன்று மட்டும் இருக்கும் நல்ல விஷயங்கள் கூட எங்கோவொரு ஒதுக்குபுறமாக இருக்கும் போது சாராயக் கடை மட்டும் எப்படி இத்தனை நடத்துகிறீர்கள்..?
அந்த கடையை சுற்றி எந்நேரமும் பல இளைஞர்கள் உள்பட ‘குடிமகன்கள்’ தள்ளாடுவதும், போதையில் சாலையில் மயங்கி கிடப்பதும் என அந்த இடங்களே கேவலமாக இருப்பதை மறுக்க முடியுமா?
கடையினை தான் திறந்து உள்ளோம் யாரையும் குடிக்க வாங்க என கையை புடுச்சு இழுத்தோமா? என கேட்கிறீர்கள்…. கடையை மூடுடா என நித்தம் நித்தம் மக்கள் போராடும் போது அந்த கடைகளை அடைத்து விட வேண்டியது தானே?
ஆதிக்க சாதிவெறி பாலு எந்த கட்சியில குடிக்கல, அதனால கட்சியில இருக்கிறவனை குடிக்காத என நாங்கள் சொல்வதில்லை. ஆனால் கடையை மூட சொல்கிறோம் என்கிறார். குடியை தப்பு என சொல்லும் ஒரு கட்சிக்காரன் குடித்து கொண்டே பிரச்சாரம் செய்ய முடியும் என பேசும் இந்த ஓட்டுக்கட்சி ’சிறப்பு’ தகுதிகள் குறித்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.
வினவில் கூறி உள்ளது போல….
//குடி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல் மட்டுமல்ல அல்லது மருத்துவ உலகம் பட்டியலிட்டிருப்பது போல் அதுவொரு நோய் மட்டுமே அல்ல. அது உடலையும் மனதையும் ஆளுமையையும் ஒரு சேர எடுக்கும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு.//
இது தான் மிகச் சரியான உண்மையாகும்.
//குடி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல் மட்டுமல்ல அல்லது மருத்துவ உலகம் பட்டியலிட்டிருப்பது போல் அதுவொரு நோய் மட்டுமே அல்ல. அது உடலையும் மனதையும் ஆளுமையையும் ஒரு சேர எடுக்கும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு.//
மிகச்சரியான முத்தாய்ப்பு! ஆங்கிலேயர்கள் தங்கள் வருவாய் பெருக்கும் நோக்கத்தில், சாராயத் தயாரிப்பை ஏகபோக முதலாளிகளுக்கு கொடுத்தனர்! இன்றைய அரசுகளும், கள்ளுக்கடைகளை மூடி, சகோதரிகளின் சாரயத்தை ஊக்குவிக்கிறார்கள்! சாமானியர் பயன்படுத்திய கல்லுப்பை தடை செய்து, ஏகபோக முதலாளி டாடாவின் அயோடின் உப்பை கடாயமாக நுகரச்செய்தனர்! அய்ம்பது காசு உப்பு, இருபத்தியைந்து ரூபாயானது மறக்க முடியுமா?
இதற்கு அறிவு ஜீவிகள் விஞஞான விளக்கம்: அயோடின் உடல் நலத்திற்கு தேவையானதாம்; கடற்கரை பிரதெசங்களில் அயோடின் குறைபாடு எப்போது, எங்கு ஏற்பட்டது? இதை விட இருதயநோய், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பட மீன் உணவு கட்டயமாக்கலாமே! செய்யுமா இந்த விஞ்ஞான அரசு?