புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வட்டம். வடக்கு அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமாத்தின் பிரச்சார பீரங்கியாக செயல் பட்டு வருபவர் பாஸ் (என்கின்ற) பாசித் மரைக்காயர். ”நான் இசுலாமியமதத்தை இம்மியளவும் பிசகாமல் கடைபிடிப்பவன்” என்று கூறிக்கொண்டு, வெளியூரிலிருந்து TNTJ காரர்களை கூட்டிவந்து தனது வீட்டில் மத சொற்ப்பொழிவு நடத்துவது, அதிலும் குறிப்பாக பெண்களுக்காக அதிகம் நடத்துவது, தனியாக தொழுகை நடத்துவது (சுன்னத் ஜமாத்துடன் சேராமல்), TNTJ பொதுக்கூட்டம் நடத்துவது என்று இவரின் செயல்களை கூறிக்கொண்டே போகலாம்.
” இசுலாத்திற்கு எதிராக கருத்துக்களை கூறிக்கொண்டும் வெள்ளிக்கிழமை கூட தொழுகைக்கு வராமல் நாத்திகம் பேசுபவனை அடித்தால் அல்லது கொன்றால் மறுமையில் அல்லா சுவர்க்கம் கொடுப்பான்” என்றும், அதற்கு ஆதாரமாக இசுலாமிய அரசியல் போர் வரலாற்றை கூறி இளைஞர்களை உசுப்பேற்றுவது அவருடைய பொழுதுபோக்கு. அதோடு மட்டுமல்லாமல் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பணம் பெற்றுக்கொண்டு, தனியாக கார் எடுத்து மைக்கு கட்டி ஒவ்வொரு முசுலீம் ஊரிலும் ”திமுகவிற்கு வாக்களியுங்கள், கருணாநிதியிடம் பெரியவர் PJ இடஒதுக்கீடு மற்றும் இசுலாமிய நலன்களைப் பற்றியெல்லாம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார்” என்று தனது வீட்டு கல்லாவை நிரப்பிக் கொண்டார்.
ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்ற தேர்தலுக்கு நேர் எதிராக அதிமுக-விற்க்கு (பாசிச ஜெயாவிற்கு) ஆதரவாக பாசித்தும் TNTJ வும் செயல் பட்டனர். இதில் வினோதம் என்ன? ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி தலைவருக்கு பண செல்வாக்கு இல்லாத ஒரு முசுலீம் உட்பட பலர் போட்டியிட்டனர். இவர்களில் சக்திவேல் என்ற வேட்பாளரைப் பற்றி சின்ன பிள்ளையைக் கேட்டாலும் தெரியும், இந்துத்துவ வெறியனென்று. இந்த ஊரில் நடந்த பல இந்து முஸ்லீம் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணகர்த்தா மேற்கண்ட சக்திவேல்தான்.
இப்படிப்பட்டவரிடம் பாசித்தும் TNTJ ஊர்க்கிளையும் சந்தித்து சக்திவேலுக்கு ஆதரவளிக்க ரூபாய் 60 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு, அவ்வேட்பாளர் வெற்றி பெற்றால் தவ்ஹீது பள்ளிவாசல் கட்டித்தரவேண்டுமென நிபந்தனையும் விதித்தனர். பின்பு அவருக்காக பிரச்சாரம் வாக்குவேட்டை என தூள் கிளப்பினர். மசூதியை இடித்தவர்களிடமே மசூதியை கட்டி தரச் சொல்வது பெரிய வெற்றியல்லவா?.
இந்த யோக்கிய சிகாமணியான அக்மார்க் முஸ்லீம் பாசித்தின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஊருக்குதான் உபதேசம், எனக்கு இதெல்லாம் பொருந்தாது என்பதும் இஸ்லாமிய மதத்தின் பெண்ணடிமைத்தனமும் பாசித்தின் குடும்ப வாழ்க்கையில் இருந்து வெட்ட வெளிச்சமாக தெரியும்.
அதாவது இவருக்கு திருமணமாகி _____________ என்ற மனைவியும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் சில ஆண்டுகளாக தனது மனைவி ஒல்லியாக இருப்பதாகவும், அழகாக இல்லையென்றும் கூறி மற்ற பெண்களிடம் அவர்கள் அழகை வருணித்து தனது மனைவியின் அழகை இகழ்ந்து கூறியும் தனது காம இச்சையை அவர்களிடம் தீர்த்து வந்துள்ளார். இந்த செயலை நியாயப்படுத்த அந்த பெண்களிடம் இஸ்லாமிய வரலாற்றை கூறி அதாவது ‘வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்’ அல்லாவிற்கு ஏற்ற செயல்தான் என சமூகம் காறி உமிழும் இந்த செயலுக்கு புனிதம் வேறு கற்ப்பித்துள்ளார்.
அவரது அக்காவின் மகளை திருமணம் செய்திருக்கும் கணவனின் தங்கை தனது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணுக்கும் நம்மாள் பாசித் கொக்கி போட்டுள்ளார். ஆனால் ‘மகர்’ கொடுக்காமல் கொக்கி போட்டதால் ரொம்பநாள் தாக்கு பிடிக்கமுடியவில்லை. இவ்வூரை சேர்ந்த ‘நூர்’ என்ற ஒருவன் அப்பெண்ணுக்கு ‘மகர்’ செய்து கவர்ந்துவிட்டான். இதனால் பாசித் அப்பெண்ணால் கழட்டிவிடப்படவே பொறுமையின் உச்சகட்டத்தை இழந்து அப்பெண்ணின் வீட்டில் நூர் இருக்கும்பொழுது ”விபச்சாரமா செய்கிறீர்கள் இது இஸ்லாத்திற்கு விரோதம்” என கூறி அவனிடம் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார்.
பாசித்தின் காம விளையாட்டுகள் இப்படி போய்க்கொண்டு இருக்கையில், கிளைமேக்ஸாக கும்பகோணத்தில் ஏழை முஸ்லீம் குடும்பத்தின் வறுமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அக்குடும்பத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டு TNTJ விடம் முதல்மணம் போன்று திருமணம் நடத்திவைக்க கோரியுள்ளார். TNTJ அப்படி சான்றிதழ் கொடுத்தால் பெண்களால் துடைப்பத்தால் அடித்தே துரத்தப்படுவோம் என்பதை உணர்ந்து சான்றிதழை அளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் திருமணம் செய்ய சூப்பரான ஒரு ஐடியா கொடுத்தனர். நாகூர் போன்ற இடங்களில் முதல்மணம் என போலியாக திருமணம் செய்ய ரகசியமாக ஏற்பாடு செய்தனர் (எங்கு நடத்த்து என்று நமக்கு சரியாக தெரியவில்லை).
இந்நிலையில் பாசித் இரண்டாவது திருமணம் செய்வதை அறிந்த அவரின் முதல் மனைவி வடக்கு அம்மாபட்டினம் ஜாமத்தில் புகார் அளித்ததன் பெயரில், பாசித் 18-11-11 அன்று நேரில் ஆஜரானார்.
ஆஜராவதற்கு முன்பே ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை கவனித்துவிட்டார். அதிலும் ஜமாத்தலைவராக இருக்கும் அஹமது ஜலாலுதீன் TNTJ ஆதரவாளர் என்பதோடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மூத்த மருமகளை (மூத்த மகனின் மனைவி) வரதட்சணை கேட்டு கொடுமை செய்தவர். மேலும் பாலியல் தொந்தரவும் செய்தவர். அக்கொடுமை தாங்காமல் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை போலிசு கேசாக மாற்றினால் தனது பணபலத்தின் மூலம் சமாளிப்பேன் என்று இரு ஜமாத்தார்களை (அப்பெண்ணின் ஜமாத் உட்பட) மிரட்டியவர். அப்பெண்ணின் குடும்பத்திடமும் ஒரு தொகையை குடுத்து தற்கொலையை மூடிமறைத்த பலே கில்லாடிதான் இந்த ஜமாத் தலைவர். இவர்தான் இப்பிரச்சனையை விசாரிக்கிறார்.
சில இளைஞர்கள் மேற்கண்ட பாசித்தின் செயலைக்கண்டு கொதித்தனர். டென்சனான ஜாமாத் தலைவர் ”அவரு ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாரு இனியொன்னும் செய்யமுடியாது அதனால ரெண்டு பெண்ணும் நமது ஜமாத்தின் இரு கண்கள். அதனால நிர்வாகிகள் நாங்கள் உள்ள தனியா போய் ஒரு முடிவெடுத்திட்டு வரும் வரை எல்லோரும் அமைதியா இருங்க” என்று கூறினார். ஆனால் பாசித்திடம் ஏன் இரண்டாம் கல்யாணம் செய்தாய் என விளக்கம் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள் என நடுநிலையான ஜமாத்தார்கள் கூறவே, விளக்கம் கேட்கப்பட்டது.
அதற்க்கு பாசித் ”எனது முத்த பொண்டாட்டி தவுஹீது முறைப்படி நடக்க மாட்டேங்குறா; படிப்பறிவில்ல; அழகில்ல; எனக்கும் உணர்ச்சியெல்லாம் இருக்கு. நான் இசுலாத்தின் முறைப்படிதான் கல்யாணம் செய்திருக்கிறேன். ரசூலுல்லாவுக்கு கூட 7 பொண்டாட்டி. ஒரு இஸ்லாமியன் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கல்யாணம் பண்ணிகிட்டா அது தப்பில்ல” என்று தத்துவம் பேசவே ஜமாத்தில் சிலர் கொந்தளித்தனர். வாக்குவாதம் கடுமையானது. இறுதியில் நமது நாட்டாமை (ஜமாத் தலைவர்) தலைமையில் நிர்வாகிகள் உள்ளே சென்று முடிவெடுத்து வந்தனர்.
முடிவின் விபரம் என்னவென்றால். பாசித் ரெண்டு கல்யாணம் பண்ணுவதற்கு சொன்ன காரணத்தை ஜமாத் ஏற்றுக்கொண்டது. “அவர் நமது ஜமாத்திற்கு திருமண கட்டணம் ரூவாய் ஐயாயிரம் செலுத்த வேண்டும்; முதல் மனைவியின் பெயரில் இரண்டாண்டுகள் கழித்து ரூவாய் இரண்டு லட்சம் deposit செய்யவேண்டும்; இரண்டு மனைவிகளையும் வாழவைக்கவேண்டும்” என்று ஜமாத் தலைவர் தீர்ப்பை வாசித்த மறுநிமிடமே பாசித் தயாராக வைத்திருந்த 5,000 ரூபாயை கொடுத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட ஜாமத் தலைவர் பாசித்தை பார்த்து சத்தமாக ”நீங்க கவுரவமான மரைக்கா வீட்டு பிள்ள; நீங்க நாலு பேருக்கு புத்தி சொல்ல வேண்டியவர் அதனால ரெண்டு பொண்டாட்டியையும் சந்தோசமா வச்சிருங்க” என்று advice செய்தார். கவுரவம் என்பது காமத்தில்தான் இருக்கு என்பதை ஜமாத் தலைவர் உணர்த்தினார்
இஸ்லாத்தில் ஜாதியில்லை பிரிவு இல்லை என்று TNTJ தப்பட்டம் அடிக்கிறது. ஆனால் ஜமாத் தலைவர் மரைக்கா வீட்டு பிள்ளை என்று கூறும்பொழுது அங்கே இருந்த TNTJ வினரும் பாசித்தும் மவுனமாக ஆமோதித்து சிரித்தனர். பின்னே எப்படிங்க எதிர்க்க முடியும்? ஜமாத் தலைவர் அவர்களுக்காக எவ்வளவு செய்திருக்கார் இப்படிப்பட்ட தீர்ப்பு எங்கும் கிடைக்காதில்லையா!
பாசித்தின் இந்த நடவடிக்கையை TNTJ தலைமைக்கு நெருக்கமாக உள்ள அன்வர் என்பவரிடம் இவ்வூர் இளைஞர்கள் தொலைப்பேசியில் கூறியுள்ளனர். அவர் பிரச்சனையை கேட்டுவிட்டு பொறுமையாக ”இதுபோல இருவது புகார் நம்ம (பிற)சகோதரர்கள் மேல இருக்கு. அதனால நீங்களும் புகாரனுப்புங்க பரிசீலிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
பாசித்தின் முதல் மனைவியிடம் இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க சொன்னபொழுது, அவர் ”நாங்க மொத்தம் 5 பொம்பளபுள்ளைங்க 4 பேருக்குதான் கல்யாணம் நடந்திருக்கு நான் கம்ளைண்டு கொடுத்தா என்னை எம்புருசன் விவாகரத்து பண்ணிருவேன்னு சொல்லிட்டாரு. அப்படி நடந்தா என்னால ஒண்ணுமே செய்யமுடியாது. எனக்கு அத்தா (அப்பா) இல்லை அதனால பாவம் அம்மாவும் தம்பியும் என்ன பண்ணுவாங்க. இன்னம் – தங்கச்சிங்களுக்கு கல்யாணம் செய்துவைக்கணும், என் தலையெழுத்து இப்படியே இருந்துட்டு போறேன்” என தனது இயலாமையை பதிலாக கூறினார்.
பெண்கள் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்று இஸ்லாம் கூறுவதை நடைமுறைபடுத்த துடிக்கும் இவர்கள், ஆண்கள் விபச்சாரம் செய்தால் நான்கு மனைவி, வலது கரம் சொந்தமாக்கப்பட்டவர்கள் போன்ற சட்டப் போர்வைக்குள் புகுந்து கொள்கின்றனர். பெண்ணடிமையை போதிக்கும் இஸ்லாத்திடம் நிச்சயம் இதற்கு தீர்வு தேடமுடியாது. இந்திய நீதிமன்றங்கள் நிர்வாக சிக்கல் நிறைந்ததும் ஊழல் மலிந்தும் காணப்படுவதால் இவரைப் போன்ற ஏழைப்பெண்கள் நீதி பெறுவதென்பது கடினமான பாதை. இதற்கு தீர்வுதான் என்ன?
இஸ்லாம் போற்றும் அரபு பாதையிலேயே தீர்வை குடுக்கலாமா? திருடினால் கையை வெட்டலாம். பெண் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்து கொல்லலாம். ஆண் விபச்சாரம் செய்தால்……..ஆண் உறுப்பை அறுத்து நாய்க்கு போடும்படி இஸ்லாமிய சட்டத்தை திருத்தலாமா? சம்மதிக்குமா TNTJ?
தமிழகம் முழுவதும் இவர்கள் போட்டு வந்த புனித வேடங்கள் இப்போது ஒவ்வொன்றாக கலைகிறது. ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்க்கையை இரக்கமின்றி சீரழித்திருக்கும் இந்தக் கயவர்கள்தான் மதத்தின் புனிதத்தை காக்கும் புண்ணியவான்களாக காட்டிக்கொள்கிறார்கள். மட்டுமல்ல தேர்தல் என்று வந்தால் இந்து மதவெறியருக்கும் ஆதரவு கொடுக்கிறார்கள். இத்தகைய பொறுக்கி தளபதிகளைக் கொண்டுதான் தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் சீரும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.
உண்மையில் சமூக அநீதிகளுக்கெதிராகவும், சொந்த சமூகத்தில் பெண்கள் அடிமைகளைப் போல நடத்தப்படும் நிலை கொண்டும் கொதிக்கும் இசுலாமிய இளைஞர்கள் தவ்கீத் போன்ற இத்தகைய மதவாதிகளின் மாயவலையிலிருந்து துண்டித்துக் கொள்ளவேண்டும். இசுலாமிய உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் சேர்வதினூடாகத்தான் தங்களது சொந்த விடுதலையை சாதிக்க முடியும்.
கயவர்களுக்கு பாடம் புகட்ட களம் காணுவோம்!
____________________________________________________________________
– ஜமால்
_____________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
Arai vekadu thanama katurai. Islamaiya sattam theriyamal istatuku yeluturathu. Islamaiyai sattathai padithuvitu vimarsam seiyavum. arai kurai yai padithu vitu muslim peyirail katurai yeluthuvathu Kolai thanam varuthathuku uriyathu.
இஸ்லாம் என்ற மதமே பெண்ணடிமைத்தனத்தின் மீது கட்டப்பட்டது. சில ஆணாதிக்கவெறியர்கள்,எங்கள் புனிதநூலில் அப்படி ஒன்றும் இல்லை,இப்படி ஒன்றும் இல்லை என்றும் நடைமுறைக்கும் கருத்துக்கும் வித்தியாசம் தெரிந்தும் ஆதிக்கத்தை மூடி மறைத்துக்கொள்கிறார்கள்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!தோழர் செங்கொடி ஏற்கெனவே இதை விவாதத்தின் மூலம் நிறுவியுள்ளார்!
மனிதன் என்ற பெயரில் வரும் நீங்கள்,
தோழர் செங்கொடியும், வினவும் இந்து மதம் பற்றி விவாதத்தின் மூலம் நிறுவியுள்ள கருத்துகளை இது போன்று திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.
என்ன சொல்றீங்க மீரா ஒன்னுமே புரியலியே. நீங்க ஒரு பெண் என்று நினைக்குறேன் . இஸ்லாத்தில் பெண் அடிமை தனம், பெண் அடிமை தனம் நு சொல்றீங்களே தவிர அது என்னனு புட்டு புட்ட வைக்க மாட்டேன்குறீங்க.நீங்க என்ன பன்றீங்கனா இதெல்லாம் பெண் அடிமைத்தனமா இஸ்லாத்தில் இருக்கு அதற்க்கு பதிலாக அந்த சட்டம் இப்படிதான் இருக்கணும்னு நச்னு எல்லோருக்கும் உரைக்குற மாதரி சொல்லுங்களேன் ….சொல்லுவிங்களா??
ஆஹா mak
மார்க்க சகோதரர் மக்கு அவர்கள் இங்கே எழுதியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக(c) mumins
பெண்களை கார் ஓட்டக்கூடாது என்று சவுக்கடி கொடுப்பதெல்லாம் பெண்ணடிமைத்தனமா? அல்லது அவர்களது பெண்குறியை வெட்டுவதெல்லாம் பெண்ணடிமைத்தனமா? அல்லது அவர்களை ஆஸ்ட் அட்டாக் மூலமாக அவர்களை பர்க்கா போட வைப்பது பெண்ணடிமைத்தனமா? அல்லது மஹ்ரமான ஆண் துணையில்லாமல் வெளியே போகக்கூடாது என்பது பெண்ணடிமைத்தனமா? அல்லது மசூதிக்கு வரக்கூடாது, வீட்டுக்குள்ளே மிகவும் மூலையான அறையில்தான் வணங்கவேண்டும் என்று சொல்வது பெண்ணடிமைத்தனமா? பெண்கள் கண்களை காட்டி ஆண்களை கவரக்கூடாது என்று கண்களுக்கே பர்தா போடுவது பெண்ணடிமைத்தனமா? பெற்றோர் சொத்தில் ஆணுக்கு கொடுப்பதில் பாதிதான் பெண்ணுக்கு என்பது பெண்ணடிமைத்தனமா? அல்லது ஒரு ஆணின் சாட்சிக்கு இரண்டு பெண்களின் சாட்சிதான் சமம் என்பது பெண்ணடிமைத்தனமா? பெண்களுக்கு மூளை கம்மி என்று நபிஹள் நாயஹம் சொல்லியது பெண்ணடிமைத்தனமா? ஈமானுள்ள நம் சகோதரர்கள் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பெண்களின் பள்ளிக்கூடங்களை குண்டு வைத்து தகர்த்து பெண்களை அலையவிடாமல் காத்து ஈமானை பரப்புவது பெண்ணடிமைத்தனமா? இல்லவே இல்லை. இதெல்லாம் பெண்ணடிமைத்தனம் என்று சொல்பவர்கள் மூளை கழண்டவர்கள். இதையெல்லாம் பெண்களை கண்ணியப்படுத்த அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் கூறிய கட்டளைகள்.
நபிஹள் நாயஹத்தை பின்பற்றி நான்கூட கார் ஓட்டும் பெண்களை கண்ணியப்படுத்த அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் வழியில் புரட்சிகரமான சிந்தனையாக அவர்கள் கால்களை வெட்டிவிடலாம். அதன் மூலம் எளிதாக முஸ்லிமாக்களின் ஈமானை காப்பாற்றிவிடலாம் என்று யோசனை கூறியிருக்கிறேன்.
மூஃமின்கள் இதனை ஆதரித்து முஸ்லிமாக்களின் காலை எடுக்கும் புரட்சிகரமான யோசனையை நடைமுறைப்படுத்தி சுவனத்துக்கான பாதையை எளிதாக்கி, சுவனத்தில் 72 ஹூருல் ஈன்களையும் 28 கில்மான்களை அனுபவிக்க முயலலாம்.
கார் ஓட்டும் பெண்களை கண்ணியப்படுத்த அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் வழியில் புரட்சிகரமான சிந்தனை
ய்ய்யாஅ அல்லாஹ்!
பொட்டை தனமாக இருக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்வது.டிஎன் டிஜே.மட்டும்தான். அந்த ஆள் தப்பு செய்தாலும்.தூக்கி எரிவதற்கும் தயங்காட்து. டிஎன்.டிஜே,பெயரை மாத்தி.ப்யந்து கொண்டு கட்டுரை எழுத வெட் கபடவேன்டும்.
குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்ட்ரு சொலுகிர கூட்டம் இப்படித்தான் கட்டுரை எழுதும்.சிந்தித்து பார்க்கவும்.ஒரு சில இஸ்லாமிநய பெயர்தாங்கிகள் செய்யக்குடிய.தப்பால்.மார்க்கத்தை
வருக நண்பர் இப்னு ஷகிர். எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம். மட்டற்ற மகிழ்ச்சி
rai kurai yai padithu vitu muslim peyirail katurai yeluthuvathu///
.
.
இதுக்காக பேரை மாத்திகிட்டா வர முடியும்?இதென்ன நியாயம்?
ரபிக் : அருமையான பதில்
விலங்கம் பிடிச்ச வின்வுக்கு.இதில் TNTJவை சார்ந்த பாசித்தை தனிப்பட்ட முறையில் வினவு விமர்சித்திருக்கும் விஷயம் உண்மையோ ,பொய்யோ அதை அல்லாஹ் அறிவான். அதை தெளிவுபடுத்த சம்மந்தபட்டவர்கள் கடமைபட்டவர்கள்.
ஆனால் இந்த கட்டுரையை நடுநிலையோடு பார்த்த வகையில் இந்த கட்டுரை TNTJவை தாக்குவது போல் இஸ்லாத்தை தாக்கி எழுத வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதாகவே தெரிகிறது. பல விஷயங்கள் பொய்யாக புனையபட்டுள்ளது நன்றாக தெரிகிறது. TNTJ இதை தக்க முறையில் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.
கள்ள காதலர்களின் புகலிடம் மயிலாடுதுறை விஜயா திரை அரங்கம்
http://kiliyanur.net/index.php?option=com_content&view=article&id=109:kallakatharhalin-theatre&catid=27:kiliyanur-news&Itemid=27
இப்ராஹிம் பாய், திப்பு பாய் மற்றும் ஹைதர் பாய் — மூவரும் இந்த சம்பவத்தை பரிசீலித்து பின்னூட்டம் இடுவார்களா?
most of the culprits are hiding under religious name to show (act) society that they are good. these peoples are real culprits who are dividing in the name of nation, religion, states, language.
ரபீக்,
இந்நிகழ்வு பற்றிய இசுலாமியச் சட்டப்படி என்ன செய்யலாம் என்று கூறுங்களேன்?
அண்ணே நேர்மையாளர்!? நான் பதில் கூறுகிறேன்
அதற்கு முன் நீங்கள் பதில் கூறுறுறுறுங்கள்
Nice article. Vinavu is now-a-days having more guts to expose lies of all religions. All religions are crap!
ஷாகித் இது ஒரு விசயம் தான் உஙலுக்கு தெரிஞிருக்கு போல. சென்னைலநெரயநடக்குது. இவர்கல் யோக்கியர்கல்நு சொல்லும் போதெநாம் தெரிஞுக்கனும் Tண்TJ ல இது போன்ர அயஒகியர்கல் தான் அதிகம்நு. விபஷாரம் பன்னும் அஙலையும் கல்லலா அடிசி கொல்லனும்நு இஷ்லாம் சொல்லுது. ஆன அத இவங ரொம்ப தெரமயா மரகிராங!! தவுகேதுநு சொல்லிடு இவங பன்ர ( சந்தர்ப வாத )நடிப்பு ரொம்ப அருமயா இருக்கு !! இவஙல்ட சாயம் வெலுக்குது!!!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எஸ் எம் பாக்கர் செய்யும் லீலைகளையும் அம்பல படுத்துக!வின் டிவியின் மறைமுக முதலாளியாக இருந்து கொண்டு மத பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர் பாக்கர்!
ஆஜராவதற்கு முன்பே ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை கவனித்துவிட்டார்.///…
.
.
இஸ்லாமியர்களும் நீதியை நீதி மன்றத்தில் பெறுமாறு மாற்றி அமைக்க வேண்டும்.அப்போதுதான் பல பெண்களின் வாழ்வு காப்பாற்றப்படும்!
ஏன் இப்போது உள்ள நிதிமன்றத்தில் எல்லா பெண்களுக்கும் நீதி சரியாக கிடைக்குதா? அப்படி எத்தனை பெண்கள் பெருமுச்சு விட்டு விட்டார்கள். எங்களுக்கு சரியான நீதி கிடைத்து விட்டது என்று கொஞ்சம் தெரிவிக்கவும்.
Dear Vinavu & Meera ,
Please go through the sentence ,which islam says about women.
Please share us.so that we also will understand the reason.
Thanks
Vasu S
http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/
மேல கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று ஆற அமர உட்கார்ந்து படித்துவிட்டு உங்களின் கேள்விகளை தொடுங்கள். சரி வர தெரியாம சும்மா சும்மா எதாவது கேக்கனும்னு சொல்லி கேக்க கூடாது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் உங்க கதை.
தோழரே இதையும் கொஞ்சம் படிங்கோ!
http://senkodi.wordpress.com/2011/10/12/hijab/
http://senkodi.wordpress.com/2011/11/10/islam-woman/
சகோதரர் அவர்களுக்கு, செங்கொடி என்பவர் என்னோமோ மற்ற மக்களுக்கு அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை மக்களுக்கு புரிய வைக்கின்ற மாதிரி லூசுதனமா? முழுசா ஆராயாமல் தனது குறு மூளைக்கு எட்டியதில்லாம் எழுதி வைத்திருக்கிறார். அத எல்லாம் ஒரு ஆதாரமா சொல்லாதிங்க.. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அதற்க்கு இரு வேறு கருத்துக்கள் உண்டு. ஒன்று ‘ஆமாம்’ இன்னொன்ன்று ‘இல்லை’ இரண்டுக்கும் விரிவான விளக்கம் தேவை. இஸ்லாம் சொன்ன விஷயங்களை எல்லாம் மறுத்து எழுதி இருக்கிறாரே தவிர இதில் ஒன்றும் சொல்வதர்கில்லை. இதை எல்லாம் ஆதாரம் என்று கூறுவது காதில் கேட்பதை எல்லாம் சொல்லும் அறிவிலி போல இருக்கு
ஒரே ஆப்ரஹாமிய மதத்தின் மூன்று பிரிவுகள்தான் இஸ்லாம் கிருத்துவம் மற்றும் யூதம்!ஒரே இறைவன் அனுப்பிய தூடரையே ஒரு க்ரூப் நிராகரத்ததால் வேறொரு மதம் உருவானது!ஜீசஸ் உயிர்த்தேழுந்தார்னு ஒரு க்ரூப் சொல்லுது அதை நீங்க மறுக்குரீங்க!இப்படி முன்னுக்கு பின் முரணான தகவல்!குரானின் ஒரிஜினல் பத்திப்பா இப்போது பயன்பாட்டில் உள்ளது?இல்லையே?அது தொலைந்து போனதா இல்லையா?
எல்லா தீர்கதரிசிகளும் (நபிமார்களும் ) ஒரே இறைவனை மட்டுமே வணங்க சொன்னார்கள் ,ஆனால் மக்கள் தங்கள் மனதிற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டார்கள்…மற்றபடி ஒவ்வருவருக்கு பின்னாடியும் ஒரு மதத்தை இறைவன் ஏற்படுத்த சொல்லவில்லை ,
கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்கள் எல்லாம் “பெரியாருடைய” திராவிடர் கழகத்திலா இருக்கின்றீகள்.?
உங்களுக்குள் ஏன் இத்தனை பிரிவு ?தி க , தி மு க , பெரியார் தி க , ம க இ க ,….என்று
இப்படி எத்தனை பிரிவு,பிளவு ஏன் ? மனிதர்கள் எப்போதும் ஒரே சிந்தனையில் ஒரே அணியாக இருப்பது இல்லை ,
அப்படி இருந்தால் ! கால்நடைகளுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது ,
குரானுடைய ஒரிஜினல் பதிப்புதான் இன்று இருப்பது…சந்தேகம் என்றால் துருக்கி இஸ்தான்புல் அருங் காட்சியகம்
சென்று ஒப்பிட்டு பார்க்கவும்.. “மனிதன்” கொஞ்சமாவது வரலாறு படிக்கவும்
dear manidhan.quraan mudhal padhipu innum taskand matrum istanpul nagarathil arungatchiyagathil ullathu.
மறுபடியும் முதலருந்தா?
என்னடா இன்னும் ஒன்னையும் காணோமேன்னு நினச்சேன். பாசித் தவறு செய்திருப்பின் நிச்சயம் தண்டிக்க படக்கூடியவரே. ஆனால் டிஎன் டி ஜெ எப்போடா மாட்டும் நல்லா புழுதிவாரி போடலாம்னு காதுகொண்டிருந்து கட்டுரை எழுதியது மாதரி இருக்கு .போகட்டும். ஒரு தனி மனிதனின் தவறை ஒரு மதத்தின் தவறாக வாதத்தை முன்வைப்பதை ஏற்றுகொள்ள இயலாது. பாசித்தை தூக்கி அந்தாண்ட வையுங்க இஸ்லாத்தை பற்றி வினவு என்ன நினைக்கிறது என்பதை தெரியபடுத்துங்கள். இஸ்லாத்தின் குறைகளை (இருக்குதுனு நினைத்தால்) தெரியபடுத்துங்கள். அது தவறு என்று சுட்டி காட்டுங்கள். இஸ்லாத்தின் சட்டத்திற்கு மாறாக உங்களின் சட்டத்தையும் முன்வையுங்கள் . பரிசிலனை பண்ணுவோம் .அத விட்டுட்டு சும்மா எதாவது சொல்லனும்னு சொல்றது நல்ல இல்லை.
ஒரு தனி மனிதனின் தவறை ஒரு மதத்தின் தவறாக வாதத்தை முன்வைப்பதை ஏற்றுகொள்ள இயலாது///……..ஒரு மதத்தின் தவறுகள் மேலே உள்ள செங்கொடி தல இனைப்புக்கு சென்று படிக்கவும்!சும்மா சொல்லனும்னு சொல்லலை!தவறை சுட்டி காட்டுனாலே பொங்குவது எந்த ஊர் நியாயம்?கோபம கூடாதுன்னு குரானில் சொல்லப்பட்டிருப்பதாக கேள்வி!
எல்லாம் “கேள்வி”படுவதுதான்,”மனிதன்” சொந்தமாக படிப்பதில்லை போல,இஸ்லாத்தை முழுவதுமாக படித்துவிட்டு ,பிறகு கருத்து சொல்லுங்கள் ,
பதிவில் தவ்கீத் கட்சிக்காரரின் காமவிளையாட்டுகளுடன் தவ்கீத் கட்சியின் அரசியல் சந்தர்ப்பவாதமும் தோலுரிக்கபட்டுள்ளது, சகோதரர்கள் அதற்கும் குரானிலிருந்து விளக்கம் கொடுப்பார்களா?
very very impartial comment, reflecting exactly what i want to say.
இஸ்லாம் பற்றி அரைகுறை ஞானம் உள்ளவர்களின் கட்டுரை இது ,நீங்கள் நேரடி விவாதத்துக்கு மக்கள் முன் வாருங்கள் ,மக்கள் புரிந்து கொள்வார்கள் உங்களுடைய அரை குறை அறிவை ,மக்கள் முன் TNTJ உடன் நேரடி விவாதத்துக்கு தயாரா ?
உங்களின் பதில் புதுசில்லையே!!!எப்போ விவாதம் தொடன்குனாலும் எண்கள் ஒபீசுக்கு வந்து விவாதித்தால்தான் நியாயம்னு சொல்வது காமெடியா தெரியலியா?இங்கியே விவாதிப்பதில் என்ன கஷ்டம்?நாளு பேரு பாக்குராங்கன்னு கூச்சமா இருக்கா?
சரி அப்போ எங்கே விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் ? நீங்களே அரங்கத்தை ரெடி பண்ணுங்கள் ,ஒப்பந்தம் முதலில் போட்டுக்கொள்வோம் ,
“நாலு பேர் பார்க்கின்றார்களே” என்று கூச்சம் இல்லை ,! இந்த “வினவை” நாலு பேர் மட்டும்தான் பார்க்கின்றார்கள் என்றுதான் கூச்சம், நேரடி விவாதத்துக்கு வந்தால் நான்கு லட்சம் பேர் பார்ப்பார்கள். பிறகு “வினவின்” அறிவாளி !!யோக்கியதை உலகுக்கு புலப்பட்டு விடும் ,பிறகு “மனிதன்” யார் என்று மக்களுக்கு தெரிந்து விடும்
good comand.keep itup
EVERYONE PLEASE WATCH THIS WEBSITE http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/
இந்த ஒரு விசயத்தை வினவு தகுந்த ஆதாரம் கிடைத்ததும் பெயர்களோடு வெளியிட்டுவிட்டது. ஆனால் இங்கே விவாதிக்கும் இசுலாமியர்களுக்கும் மாற்று சிந்தனயாலர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். மேலும் குறிப்பாக இந்த ஒரு சம்பவத்தை மட்டுமே அளவுகோலாக பார்த்து இசுலாமிய பெண்ணியத்தை விவாதிப்பதாக என்னும் இசுலாமியர்க்கும். இது ஒரு sample தானே தவிர நான் அறிந்து தமிழகம் முழுவதிலும் கேரளாவிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. அதற்க்கெல்லாம் உங்கள் விளக்கம் என்ன. எந்த மதமும் பெண்ணை ஒரு நுகரும் பண்டமாக மட்டுமே பார்க்கிறது. இனி நானும் முஸ்லீம் பெயரில் எழுதுவதாக எண்ணிவிடவேண்டாம் (அதென்னங்க அநியாயம் இசுலாமியர்களில் இருந்து மட்டும் பகுத்தறிவுவாதிகள் வரவே கூடாதா இல்லை உங்களை வைத்து நீங்களே மதிப்பிட்டுக்கொல்கிரீரா) நான் ஒரு மிகவும் அதிகமாக தவுஹீது கொள்கையை கடைபிடிக்கும் ஒரு முஸ்லீமே. எங்கள் பகுதியிலும்(கோவை)இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் உண்டு வேண்டும்பொழுது அதையும் பின்னூட்டமாக பதிவேன்
#அதென்னங்க அநியாயம் இசுலாமியர்களில் இருந்து மட்டும் பகுத்தறிவுவாதிகள் வரவே கூடாதா#
பகுத்தறிவாளர் வரலாம்.ஆனா பேருதான் உதைக்குது. அதனால நீங்க பகுத்தறிவாளர் இல்லன்னு தெரியுது
பேர வச்சே பகுத்து அறியிற உன் மூளைய நெனச்சா புல்லரிக்குதுப்பா
அண்ணே என்ன அண்ணே கோவப்படுறீங்க.உங்களுக்கு சப்போர்ட்டா தானே அண்ணே பேசினேன்.அதுக்கு என்ன கேவலப்படுத்திர மாதிரி புல் அரிக்குது அது அறிக்குதுனு சொறியிறீங்களே அண்ணே.புல் அரிச்சா பரவா இல்லைன்னே வேறு எதாவது அறிக்கும்போது தானே பிரச்சனை அண்ணே.நம்ம புஷ் பாய்-ங்கள ஒழிக்கிரதுக்காக உள்குத்து வேலை செய்தான் அண்ணே.இப்ப என்னடான்னா அங்க பாய்- ங்க கூடிபோயட்டாங்க அண்ணே.என்ன அண்ணே முறைக்கிறீங்க நம்ப புஷ் -ன்னு சொன்னதுக்கா.அப்படியெல்லாம் கோவப்படாதீங்க நான் முட்டாளா இருந்தாலும் அறிவாளியா இருந்தாலும் நீங்க தான் அண்ணே என் குரூ.அத முதல்ல மனசில வச்சுக்கொங்கன்னே.பீ.ஜே.பாய் இருக்காரே அண்ணே எதுக்கு எடுத்தாலும் குரான் ,ஹதீஸ கொண்டு வந்து ஆதாரத்தோட பேசராருன்னே.நம்ப செங்கொடி இருக்காரே அண்ணே அவர் புலி ச்சே புலிதான் செத்துபோச்சே சிங்கம் அண்ணே சிங்கம்.பீ.ஜே.பாய் தெய்ரியமா எல்லாரும் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்றார் அண்ணே.நம்ப சிங்கம் குகைக்குள்ளேயே இருக்காம வெளியே வந்து பீ.ஜே.பாய் உடைய முகத்திரையை கிழிக்கணும் அண்ணே.பாய் விவாதத்திற்கு எத்தனை பேரையாவது கொண்டுவருட்டும் அண்ணே. நம்ப சிங்கம் சிங்கிளா போகட்டும் அண்ணே.கும்பலா போனா சிங்கம் இல்லன்னே அசிங்கம் அண்ணே.பாய் கேட்கிற கேள்விக்கு சிங்கத்து பதில் தெரியலே என்றாலும் ஆதாரம் எல்லாம் நமக்கு எதுக்கு அண்ணே பாய் களுக்கு எதிரா போற வழிலே போட்டு போரவங்களது எடுத்து போட்டா பயந்து போய்விடுவார் அண்ணே.உஜிலா தேவி நமக்கு எதிரா பரவாஇல்லை, ஈச குரான் போய்பாருங்க அண்ணே.அவங்களுக்கு அதாரம் எல்லாம் தேவை இல்லை.ஆனா மறந்தும் online pj,ethirkkural அங்கே போயடாதீங்கன்னே.பிறகு தொடருகிறேன்
அண்ணே வந்துட்டேன் அண்ணே (இனி அண்ணன் வேண்டாம்).உள்குத்து வேலை என்று சொன்னேன் இல்ல.நாம அவங்கள பற்றி இல்லாததெல்லாம் எழுதினோம் இல்ல அவங்க vunarvu பத்திரிகைல நம்மள கிழி கிழின்னு கிழிச்சாங்க அந்த கோவத்தில நாம இருக்கோம்.இத வேணுமின்னு யாரோ ஒருத்தரு பாய் பேருல போட்டுட்டு நமக்குள்ள சண்டைய மூட்ரானுங்கன்னு சொல்ல வந்தேன்.பகுத்தரிவாலராகிய நமக்கு அரபி பேர் தான் பிடிக்காதே.பின்ன எப்படி இவர நம்பரதான்.பெண்ணுரிமை பெண்ணுரிமை-ன்னு வாய் கிழிய கத்துறோம்.அப்படி என்னாபா உங்க பெண்களுக்கு உரிமை கொடுத்தீங்கன்னு பாய் கேட்கும் போது நமக்கு கத்தி தானே பழக்கம்.நீங்க எங்ககிட்ட கேட்ககூடாது.என்று சொல்லி அவரு வாயை அடைச்சிட்டேன் இல்ல.நம்ப பேரை நான் காப்பாத்திட்டேன்லே.அதோட சும்மா விட்டேனா?குரான், ஹதீசிலிருந்து ஆதரத்த கேட்டா புட்டு புட்டு (சாபிடற புட்டு இல்லன்னே)வைக்கிறாரு.நம்ப சகாங்க இருக்காங்களே லேசு பட்டவங்க இல்ல சும்மா விடுவாங்களா.உடான்சுங்க தளத்தில் போயி பாருங்கன்னு.நாங்க பகுத்தறிவாதி.ஆனா நாங்க எதையும் பகுத்தரியமாட்டோம்.நாங்க சொல்லறத நீங்ககேட்கனும்.எங்ககிட்ட ஆதாரம் எல்லாம் கேட்க கூடாது.என்று சொல்லி அவங்க கரியை பூசிட்டாங்கள்ள.நீங்க எனக்கு சப்போர்ட் செய்தீங்கன்னா எடைக்கு எடை தங்கம் வாங்கி அதை வித்து பாய் கூட விவாதம் செய்து ஜெயிச்சு காட்றேன்.செங்கொடியை நம்பாதிங்க அவர் கன்னித்தீவு சிந்துபாத் கதைதான் எழுதுவேன்.அதுக்கு வந்தா வாங்க நேரிடையான விவாதத்திற்கு வரமாட்டேன் என்றாரு.பாய் தான் எழுதினா எத்தனை வருஷம் ஆகும் என்று தெரியல.அதனால நேரிடையா உங்க பகுத்தறிவ நிரூபிங்கன்னு கூபிடராறு.நம்ப பகுத்தறிவ எப்படி நிரூபிப்பது நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதிங்க.சுயமரியாதைய பற்றி பேசறோம்,மதங்களைப்பற்றி பற்றி பேசறோம்.நம்ப எப்படி இருக்கோம்னு கொஞ்சம் கூட சிந்தித்து பார்த்ததே இல்ல.புர்கா பற்றி பேசறோம் ஆனா பிriட்டன்லே புதிதாக இஸ்லாத்தில் மூனில் இரண்டு பெண்கள் முஸ்லிம் ஆகி புர்கா போட்டு வர்றாங்க.சிந்திக்கிறேன்
ஒரே confusingபா கன்னித்தீவு மாதிரி இல்லாம உன் பிரச்சினைய சுருக்கமா சொல்லு, தீர்க்கமுடியுமான்னு பார்ப்போம்
என்னாபா?இதையே குழப்பமா கீதுன்னு சொல்லிக்கினு கீறியே உன்னோ எவ்வளோ கீது அதெல்லாம் எடுத்து உட்டா இன்னா சொல்லுவியோ.சரி இதை உடு.அண்ணே இப்போ புரியுதானே.ஏன் அண்ணே இப்படி நடிக்கிறீங்க.
பத்தாவது தடவை படிச்ச பின்னாடிதான் புரிஞ்சுதுப்பா.
//புதிதாக இஸ்லாத்தில் மூனில் இரண்டு பெண்கள் முஸ்லிம் ஆகி புர்கா போட்டு வர்றாங்க.சிந்திக்கிறேன்//
எங்க நாட்டுல கூடத்தான் 3ல் 2பேர் என்ற கணக்குல அம்மாவுக்கு ஓட்டுப் போட்டு CM ஆக்குனாங்க அதுக்காக அவங்க நல்லவங்கள்னு சொல்லிறலாமா!
#பத்தாவது தடவை படிச்ச பின்னாடிதான் புரிஞ்சுதுப்பா#
#எங்க நாட்டுல கூடத்தான் 3ல் 2பேர் என்ற கணக்குல அம்மாவுக்கு ஓட்டுப் போட்டு CM ஆக்குனாங்க அதுக்காக அவங்க நல்லவங்கள்னு சொல்லிறலாமா!#
அண்ணே அதுக்குதான்னே சொன்னே நாம வறட்டு சித்தாந்தம் பேசி பேசி நம்ம பகுத்தறிவே மங்கி போச்சுன்னே.இதுக்கே பத்து முறை படிக்கோணும்.விண்வெளி,பரிணாமம் .etc….பத்தி படிக்கொனுமின்னா எத்தனை ஒலி வருடம் ஆகும்னே தெரியலேன்னே.
அட அப்படி யாருன்னே சொன்னது.அப்படி நம்ம சொல்லமுடியுமா அண்ணே.அப்படி சொல்லிட்டா நம்ம மானம் மரியாதை என்னாவரதான்?குரங்கிலிருந்து மனிதன் வந்தான்,திருவள்ளுவர் இந்த உருவத்தில்தான் இருந்தாரு என்று நம்பர நாம இதை எப்படின்னே நம்பறது.கண்ணால் கண்டால் தான் நம்போனும்னே.அதுக்காக செலவு செய்து பிரிட்டன் போய் பாத்துட்டா நம்பமுடியும். நாம் இதெல்லாம் நம்பகூடதுன்னே.ஊர்லே இப்படி சொல்லி திரியரானுவோ பயபுல்லவோ.அதைத்தான்னே சொன்னேன்.ப்ளீஸ் கோவிச்சுக்காதீங்க அண்ணே.நாம நல்லவங்களுக்குதானே ஓட்டு போடுவோம்.அண்ணே நம்ம நாட்டுல யாருன்னே நல்லவங்க.நாம யாருக்குண்ணே ஓட்டு போட்டோம் மறந்து போயட்டேன்னே.நீங்க கொஞ்சம் சொல்லுங்க அண்ணே.ஒன்னு சொல்ல மறந்துட்டேண்ணே நாம மட்டும்தான்னே நல்லவங்க.நம்ம கொள்கைக்கு எதிரா இருக்கிற எல்லோரும்……………………….
திராவிடன்!
//மேல கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று ஆற அமர உட்கார்ந்து படித்துவிட்டு உங்களின் கேள்விகளை தொடுங்கள். சரி வர தெரியாம சும்மா சும்மா எதாவது கேக்கனும்னு சொல்லி கேக்க கூடாது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் உங்க கதை.//
நாமளும் எவ்வளவோ கரடியா கத்தினாலும் இந்த பாய்ங்கள நம்ம(கம்யூனிஷ) கூடாரத்துக்கு கொண்டு வர முடியலீயே! இந்துக்களிலும் கிறித்தவர்களிலும் ஓரளவு கூட்டத்தை திரட்டி விட்டோம். இந்த தவ்ஹீத் ஜமாத் வேறு முஸ்லிம்களை சிறந்த சிந்தனைவாதிகளாக மாற்றி வருகின்றார்களே. இவர்கள் இருக்கும் வரை நம்ம கம்யூனிஷ கடையை முஸ்லிம்கள் மத்தியில் விதைக்க முடியாது என்ற விரக்தியில் எழுதப்பட்டதே வினவின் தற்போதய கட்டுரை. வினவின் வயிற்றெறிச்சலை பதிவின் மூலமே தீர்த்துக் கொள்கிறது. பாவம்…. இருக்கும் ஒரே வழியையும் அடைத்து விடக் கூடாதல்லவா…..
இஸ்லாத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு மேற்கண்ட புத்தகத்தை படித்து வினவு தெளிவு பெறட்டும். நாம் நமது வழியான சாந்தியும சமாதானமுமான வழியிலேயே பயணிப்போம்…..
http://www.rajanleaks.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D
ஏனுங்க இதையும் படிங்கோ!
மனிதன் அவர்களுக்கு ஒரு விஷயம், கண்டதெல்லாம் கடவுள் என்று சொல்லுபவனும், கண்டால் தான் கடவுள் என்று சொல்லுபவனும் முட்டாள் என்று உங்கள் விஷயத்தில் தெளிவாகிவிட்டது. எப்படி இதெல்லாம் எவனோ ஒருத்தன் உளறிய எல்லாம் ஒரு செய்தி என்று நீங்கள் இங்கே காட்டுகிறீர்கள்.
நாம் நமது வழியான சாந்தியும சமாதானமுமான வழியிலேயே பயணிப்போம்….////.
.
.
போக வேண்டியதுதானே?எதுக்கு இங்க வந்து கூப்பாடு போடுறீங்க?வாதத்துக்கு பதில் சொல்லுன்னா உடனே எங்க ஒபீசுக்கு வர தயாரான்னு கேக்க வேண்டியது!ஏன் இங்கியே விவாதம் செய்ய கூடாதுன்னு இண்டர்னட் விதிகளில் அல்லா சொல்லியுலாரா?சைக்கிள பஞ்சரானாலும் எந்த திசையில் வைத்து ஓட்டனும்னு குரானை தேடுறீங்க!செம காமெடி!
எனக்கு ஒரு சந்தேகம் கட்டுரையாளர் அவர்(பாஸ்) மூலமா அவர் வீட்டில் பாதிக்கப்பட்டுருகிறார் போல. தனி மனிதன் விமர்சனம் கூடாது என்று கூறிவிட்டு கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருக்கிறார்.
திரவிடன் அவர்களே,
ரபீக் அவர்களிடம் கேட்ட கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன்.
இந்நிகழ்வுக்கு பாசித்தை இசுலாமியச் சட்டப்படி என்ன செய்யலாம் என்று கூறுங்களேன்? இசுலாம் செல்லும் பெண் உரிமைகள் அடிப்படையில்கூட என்ன செய்யலாம் என்று கூறுங்கள். சும்மா இசுலாம் வழங்கும் பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று பழைய பல்லவியையே பாடாமல் பிரச்சனைக்கு பதில் சொல்லுங்கள்.
சாகித் அவர்களுக்கு, இங்கே இஸ்லாமிய சட்டம் இருந்திருந்தால் அவர் இந்நேரம் பூமிக்கு அடியில் இருந்திருப்பார். இங்கே இஸ்லாமிய ஆட்சி இல்லை. அதனால் நீங்கள் இது குறித்து அதாவது இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் இந்திய சட்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதை விடுத்து ஜமாத்தை அல்லது முஸ்லிம்களை குறை சொல்ல வேண்டும் என்று நிங்கள் விரும்பினால் அதற்க்கு எந்த உடன்ப்படும் இல்லை.
அண்ணே நீங்க வரும்போதேல்லாம்
யோக்கியன் வர்றான் சேம்பை உள்ளே எடுத்து வை
என்கிற பழமொழி ஏணே நினைவுக்கு வருது
ஹைதர் அலி, கட்டுரையின் மையப்பொருள் பற்றி பேசாமல் சென்றிருப்பதன் மர்மம் என்ன? ஒரு மத அமைப்பின் தளபதி தனது செல்வாக்கை வைத்து பெண்களை சீரழிக்கும் கயவனை அம்பலப்படுத்தி எழுதினால் உங்களுக்கு ஆத்திரம் வருவது ஏன்? நாங்கள் அந்த அப்பாவிப் பெண் பக்கம், நீங்கள் அந்த கயவன் பக்கமா? கொஞ்சம் மனசாட்சியுடன் – இப்படி ஒன்று இருந்தால் – நடந்து கொள்ளுங்கள், மத அபிமானம் நாட்டில் நல்லது கெட்டதுகளை கூட பார்க்க விடாமல் மறைப்பது நல்லதல்ல.
அண்ணே வினவு
“ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் “இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார்(பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்” என்றார்கள் ( நூல்:அபூதாவூத்).
இனவெறி என்றால் என்ன? என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் கேட்ட போது நபியவர்கள்
“தன் இனத்தான் தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்துவது தான் இனவெறி” என்றார்கள். (நூல்: புகாரி)
அந்த கயவன் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அது கண்டிக்கதக்கது இதில் மாற்று கருத்துஇல்லை
ஆனால் இதை கைலே மாடியிலே போட்டு கண் காது வைத்து மிகைப்படுத்தி எழுதியிருப்பதை அம்பலப்படுத்த வேண்டாமா வினவு?
மதவெறிக்கு சமூகத்தை நேசிப்பது என்கிற முகமூடியை போடாதீர்கள். வாழ்க்கை வசதி உள்ளவனுக்கு தான் இசுலாம் இணிக்கும் (அதாவது உங்களைப்போன்றவர்களுக்கு) காய்ந்து போன வயிற்றை தடவிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஏழை முசுலீம்களுக்கு எப்போதும் கஞ்சியை பற்றிய கவலை தான் முதல் பிரச்சினை.
வாங்க பகத் என்கிற இப்போதைக்கு தோழமை என்கிற நண்பரே
//மதவெறிக்கு சமூகத்தை நேசிப்பது என்கிற முகமூடியை போடாதீர்கள்.//
மூகமுடி போடுபவருக்கு தான் மூகமுடியை பற்றிய டிட்டியல் தெரியும் அதனால் மூகமுடி அனிந்து இருப்பதால் அனைவரும் மூகமுடி என்று அர்த்தமில்லை மிஸ்டர் பகத்
//வாழ்க்கை வசதி உள்ளவனுக்கு தான் இசுலாம் இணிக்கும்//
அப்பூடியா காய்ந்த ரொட்டிகளை தின்று கொண்டு ஆப்கானில் மண்வீட்டில் வசிக்கிறவாய்ங்களா விட்டா ஒலகத்திலேயே பெரிய பணக்காரனு சொல்வீங்கே போல உங்கள் கடும்மதகொட்பாடு உடையவர்கள் என்று சன்றிதழ் கொடுக்கப்பட்ட அவர்கள் ஏழைகள் தான் கண்ணை திறந்து பாருங்கள்
////அப்பூடியா காய்ந்த ரொட்டிகளை தின்று கொண்டு ஆப்கானில் மண்வீட்டில் வசிக்கிறவாய்ங்களா விட்டா ஒலகத்திலேயே பெரிய பணக்காரனு சொல்வீங்கே போல உங்கள் கடும்மதகொட்பாடு உடையவர்கள் என்று சன்றிதழ் கொடுக்கப்பட்ட அவர்கள் ஏழைகள் தான் கண்ணை திறந்து பாருங்கள்/////
எங்க ஊர் ஏழை பாய்ங்களும் அப்படி இல்லை ஆப்கான் பாய்ங்களும் அப்படி இல்லை. ஆப்கன் ஏழை மக்கள் அமெரிக்காவை எதிர்க்க வேறு வழி இல்லாமல் மதவாதிகளுடன் சேருவதை மத அடிப்படைவாதிகளுக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் ஹைதல் அலி, அங்கே கம்யூனிஸ்ட் கட்சி இருந்தால் ஏழை மக்கள் அதில் தான் அணிதிரள்வார்கள் தவிர மதவாதிகள் பின்னால் போக மாட்டார்கள்.
மேலும் சமூகம் என்றால் இசுலாமிய மக்களை மட்டுமே சமூகம் என்று பார்க்கும் மதவெறியர்கள் அல்ல நாங்கள். இசுலாமிய மக்களையும் உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கத்திற்காக போராடுபவர்கள் தான் கம்யூனிஸ்டுகள். எங்கள் சமூகம் என்று நீங்கள் அனைத்து முசுலீம்களையும் என்றைக்குமே அணிதிரட்ட முடியாது. அவர்கள் பல வர்க்கங்களின் கூட்டமாக தான் இருக்கிறார்கள். அதில் பெரும்பாண்மையானவர்கள் ஏழைகள். உங்களைப் போன்ற புதிய பணக்காரர்கள் வேண்டுமானால் சுரண்டுகின்ற பணக்கார முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களை சகோதரா என்று தழுவிக் கொள்ளலாம் ஆனால் கோடிக்கணக்கான ஏழை முசுலீம்களுக்கு அவர்கள் என்றுமே எதிரிகள் தான். ஏழை இசுலாமியர்களுக்கு இசுலாம் என்றைக்கும் விடிவை பெற்றுத்தர முடியாது.
நம்ம அலாவூதீன் பள்ளிவாசலுக்கு எதித்த வீட்டுலே இருந்துகிட்டு காலையில்
வெளிக்கி இருக்க மட்டும் பள்ளிவாசலுக்கு போவது ஷு கால்களுடன் உள்ளே நுழைவது இதை எவனாவது தட்டி கேட்ட அய்யகோ பாருங்கள் கம்யூனிஸ்ட்டை,நத்திகனை அடிக்க வருகிறான் என்று ஒலமிட்டு உங்களிடம் பிராது கொடுப்பது இந்த நேர்மையான்வரிடம் விசாரிப்போமா?
“நம்ம அலாவூதீன் பள்ளிவாசலுக்கு எதித்த வீட்டுலே இருந்துகிட்டு காலையில்
வெளிக்கி இருக்க மட்டும் பள்ளிவாசலுக்கு போவது ஷு கால்களுடன் உள்ளே நுழைவது இதை எவனாவது தட்டி கேட்ட அய்யகோ பாருங்கள் கம்யூனிஸ்ட்டை,நத்திகனை அடிக்க வருகிறான் என்று ஒலமிட்டு உங்களிடம் பிராது கொடுப்பது இந்த நேர்மையான்வரிடம் விசாரிப்போமா?”அலாவுதின் மட்டும் பள்ளிவாசலுக்கு உள்ளே வெளியருக்க போவது கிடையாது ஜமாத்தே பள்ளிவாசள் பள்ளிவாசல் கழிப்பறையில்தான் வெளிக்கு போரார்கள்.டி.என்.டி.ஜெ உட்பட.ஏனன்றல் பெரும்பாளான வீடுகளில் கழிப்பிட வசதிகிடையாது.மேலும் அலாவுதீன் கம்யுனிஸ்டா இருக்கவேண்டும் என்பதுதான் பெரும்பாலான முஸ்லிம்களின் விருப்பம்.அதனால்தான் மக்களுடைய ஆதரவுடன் பள்ளிவாசலுக்கு எதிரே குடி இருந்துக்கிட்டு மக்களுடைய ஆதரவுடன் தனது சுவரில் மதத்தை அம்பலபடுத்தும் வாசகங்களையும், புரச்சிகர வாசகங்களையும் எழுதமுடிகிறது.பாதிக்கபட்ட மக்கள் வினவு போன்ற புரட்சிகர சக்திகளை தொடர்புகொள்ள முடிகிறது.இப்ப பிரச்சனை ” பீ” பேளுவதில் இல்லை பாசித்தின் இரண்டாவத திருமணம்,தவுகித் ஜமாத்தினரசியல் இரட்டை
வேடம்,இஸ்லாமிய பெண்ணடிமைதனம்,போலி இந்துமத எதிர்ப்பு போன்றவற்றைபற்றி பதிவர் பேசினால் ஆரோக்கியமாக இருக்கும்.
வெளிக்கி இருக்க போன இடத்தில் விளாம்பழம் கிடைத்த மாதிரி
நம்ம அலாவூதீனுக்கு இஸ்லாத்தை அசிங்கப்படுத்த எப்படி பாஸ் என்கிற பாசித் கிடைத்தார் என்பது தான் இந்த பதிவின் முன்கதை சுருக்கம்
என்னண்ணா இன்னும் பாசித் லைன் கிடைக்கிலியா? படத்துக்கு டிஷ்கசன் பண்ற மாதிரி என்னென்னமோ உளறுரீங்க.
இப்போ பிரச்சனை பீ பேலுவதில் இல்லை.பாசித் திருமனம்,தவிகித்ஜமத்தின் அரசியல் இரட்டைவேடம், இசுலாமிய பென்னாடிமைதனம்,போலி இந்து மதஎதிர்ப்பு இது தொடர்பாக பதிவர் பேசினால் ஆரோக்கியமாக இருக்கும்.ஊர்க்காரன்
ஆனா பீ பேலுவதை தடுக்க போனதினால் வந்த வீனை என்பதை இங்கு பதிவு செய்கிறேன் யுவர் ஆனார்
ஒரு பக்க நணயமும் ஒருபக்கசார்பு செய்தியும் சேல்லாது என்கிற எளிய உண்மை கூடவா ஒங்களுக்கு தெரியவில்லை
இப்போது தான் பாசித் என்கிற பாஸின் மொபைல் நம்பர் எனக்கு கிடைத்து இருக்கிறது
பேசி விட்டு ஆடியோ கிளிப் தருகிறேன் அதுவரை அண்ணன் சாகித் அவர்களிடம் நிறைய பேச வேண்டி இருக்கிறது
பொறுக்கியிடம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது ? அப்பகூட அந்த ஊரில் உள்ள நேர்மையான ஆட்களிடம் பேசி உண்மை என்ன என்று அறிந்து கொள்ள முயலாமல் அந்த பொறுக்கியிடமே பேசும் அண்ணன் ஹைதர் அலி இப்படியே காலத்தை கழிக்காமல் ஜமாத் தலைவரானால் எதிர்காலத்தில் மணமேல்குடி ஜமாத் கூட்டத்தை போல வளர்ந்துவிடலாம்.
//பொறுக்கியிடம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது ? ///
இது எந்த ஊரு நியாயம் நீங்க பொறுக்கின்னு சொன்ன நாங்க அதை ஒத்துக் கொள்ள வேண்டுமா சர்வதிகாரமாக அல்லவா இருக்கிறது
ஊருல ஊள்ள தவ்ஹீத் ஜமாத்,பஞ்சாயத்து பன்னின ஊள்ளுர் ஜமாத் எல்லாரும் கெட்டவாய்ங்கனு ஓங்க கிசு கிசு பணி கட்டுரை சொல்கிறது
நீங்களே சொல்லுங்கே யாரிடம் விசாரிக்கலாம் நம்ம அனைந்த விளக்கு அலாவூதின் அவர்களிடம் விசாரிக்கலாமா?
பொறுக்கியால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிக்கலாமே அய்யா!
எங்கள் ஊரில் ஒரு பணக்கார கிழவன் இருந்தான். முஸ்லீம்தான். வருடத்திற்கு ஒரு முறை ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து கள்யாணம் ஆகாத பெண்ணை திருமணம் செய்து கொள்வான். ஜாமத்தும் திருமணம் செய்து வைக்கும். எனக்குத் தெரிந்து அவன் இதுபோன்று 7 திருமணங்கள் செய்து இருக்கிறான். பிறகு விவாகரத்து செய்து விடுவான் (குழந்தை பிறந்துவிட்டால் சொத்து கொடுக்க வேண்டி வருமே) இந்த உணர்வை கொடுப்பது எது, இஸ்லாம்தானே. இஸ்லாத்தின் சட்டத்தை பயன்படுத்தித்தானே செய்திருக்கிறான்.
எங்க ஊரில் ஒரு கம்யூனிஸ்ட் இருந்தான்
சிறுகடை வியாபரிகளிடம் போராட்டம் அது இதுன்னு சொல்லி வசூல் பன்னி சாயங்காலம் டஸ்மாக்கில் அந்த காசை வைத்து நல்லா தண்ணியடித்து வப்பாட்டி வீட்டில் போய் படுத்து கிடப்பான்
இந்த ஏமாற்று குணத்தை கம்யூனிஸம் தானே கற்றுக் கொடுக்கிறது
வப்பாட்டி வீட்டில் படுத்தவனை கம்யூனிஸ்ட் என்று உங்கள் ஜமாத் போல எவனாவது சொன்னானா!
வருஷம் ஒரு கல்யாணம் பன்னுகிரவனை உண்மையான முசுலிம்னு எவனாவது சொன்னான?
முசுலீமுன்றனாலதாண்ணே ஜாமத் கல்யாணம் பண்ணிவைக்குது.
//இந்த ஏமாற்று குணத்தை கம்யூனிஸம் தானே கற்றுக் கொடுக்கிறது//
கலியாணம் பண்ணிக்கிறதுக்கு குரான்ல அனுமதியிருப்பது போன்று வப்பாட்டி வச்சிக்கிறதுக்கு கம்யூனிசத்துல ஆதாரம் காட்ட முடியுமாண்ணே.
செவப்பு சட்டை போட்டு செவப்பு கொடி பிடிச்சா
உண்டியலில் மக்கள் காசு போட்டு விடுவார்கள் என்கிற வித்தையை யார் கற்றுக் கொடுத்தது. இவ்வளவுக்கும் தண்ணீ அடித்து விட்டு விடிய விடிய மார்க்ஸ் எங்கல்ஸை பற்றி விலாவைர்யாக பேசுவான்
அண்ணே குன்றங்குடி அடிகளார் கூடத்தான் குரான விலாவரியா பேசுறாரு அவருக்கு பள்ளிவாசல்ல கல்யாணம் பண்ணிவைப்பீங்களான்னே.
மேல் மருத்துவர் ஆதிபராசக்தி குரூப் கூடத்தான் செவப்பு சட்டை அணிகிறார்கள் அவர்களை கம்யூனிஸ்ட்னு சொல்லி விடுவீர்களா?
அதத்தாண்ணே நானும் கேக்குறேன் சிவப்பு சட்ட போட்டு உண்டியல் குலுக்குறவன்லாம் கம்யூனிஷ்டா. குன்றக்குடி அடிகளாருக்கு எப்படி பள்ளவாசல்ல கலியாணம் செய்து வைக்க மாட்டீர்களோ அதுபோலத்தன் மேல்மருவத்தூரின் செவப்பு சட்டையும் உண்டியல் குலுக்கும் செவப்பு சட்டையும் கம்யூனிஸ்டு இல்லை. ஆனால், பள்ளிவாசல்ல கலியாணம் செஞ்ச அந்த கிழட்டு நாய் (வயது 70) முஸ்லீமுதானே?
தோழமை அண்ணே, என்னென்னே நீங்க பொருக்கின்னு சொல்லி என்ன வம்புல மாட்டவுட்டீங்க.பாய்-ங்க உங்கள பொருக்கிகளுக்கெல்லாம் குருன்னு சொல்லறாங்க அண்ணே. நானும் இருங்க அண்ணே கிட்டே கேட்டுட்டு சொல்றன்னு சொன்னேன்னே.அதுக்கு நீங்க கேட்ட மாதிரி கேள்வி கேட்கிராங்கோன்னே நான் என்னன்னே பதில் சொல்றது.கேள்வி கேட்கிற அதிகாரம் எங்களுக்கு மட்டும்தான் இருக்கு சொல்லிவிடலாமா அண்ணே
இதத்தானே நானும் கேக்குறேன்
இங்கு இருக்கிற எல்லா இஸ்லாமிய அடிப்படை கொட்பாடு தெரிந்து
பின்பற்றுகிற ஜமாத் இல்லைண்ணே
நம்ம அலாவூதீன் கூட கம்யூனிஸ்ட்டாக்க இருந்துகிட்டு பள்ளிவாசல் நிர்வாகியாக இருந்தார்னா? பத்துகங்கே?
இங்கு இருக்கிற எல்லா பள்ளிவாசல் ஜமாத் இஸ்லாமிய அடிப்படை கொட்பாடு தெரிந்து
பின்பற்றுகிற ஜமாத் இல்லைண்ணே
பள்ளிவாசல் ஜமாத் என்பதை இணைத்து படிக்கவும்
//பின்பற்றுகிற ஜமாத் இல்லைண்ணே//
அந்த 70 வயசு கிழவன முஸ்லீமு இல்லன்னு சொன்னதுக்கும், இஸ்லாமிய அடிப்படை கொட்பாடு தெரிந்து பின்பற்றுகிற ஜமாத் இல்லைன்னு நீங்க சொன்னதுக்கும் குரான்ல ஆதாரம் காட்டமுடியுமா?
//சொன்னதுக்கும் குரான்ல ஆதாரம் காட்டமுடியுமா?//
கண்டிப்பாக தருகிறேன் பாத்தீங்களா? இதே ரோஷத்தோடு இரண்டு வருடமாய் சாகித் அவர்களிடம் கேட்டு வருகிறேன்
பாருங்க இரண்டு நாட்களாக சாகித் அவர்களுக்காக காத்து கிடக்கிறேன்
நீங்கள் நியாயவான் போல தெரிகிறீர்கள் கொஞ்சம் இரண்டு வருட என் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லுங்கள் ப்ளீஸ்
அதெல்லாம் நம்ம வேல இல்லீங்கண்ணா. எனக்கு நீங்க ஆதாரத்த குடுங்கண்ணா.
//அதெல்லாம் நம்ம வேல இல்லீங்கண்ணா. எனக்கு நீங்க ஆதாரத்த குடுங்கண்ணா.//
அண்ணே அவசரக் குடுக்கை நான் இரண்டு வருடமாக காத்து இருக்காலே
நேத்து வந்துகிட்டு பொறுமை சாகித் இப்ப வந்து விடுவார்
சாகித் அண்ணனை பார்த்தவுடன் யாருக்காக இருந்தாலும் பதில் இதில் விட்டு கொடுக்க மாட்டேன்
கம்யூனிஸ்ட்கள் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள் என்ற அடிப்படை கம்யூனிச கொள்கையை விளங்கி இப்போது வந்து சாகித பதில் சொல்லுவார் ப்ளீஸ் வெயிட்
இஸ்லாமிய கோட்பாட்டை பின்பற்றுவர்கள் என்று கூறும் மதபுண்ணியவான்களைவிட,உழைக்கும் மக்களுக்காக போராடும் கம்னிஸ்ட் அமைப்பை சேர்தவர்கள் ஜமாத்நிர்வாகத்திற்க்கு வருவது இவ்வுர் மக்களால் விரும்பப்பட்டது.வடக்குஅம்மாபட்டினத்தில் ஜமாத்தின் உறுப்பினராக இருக்க முஸ்லிம்மத கோட்பாடுகளை பின்பற்றுகிறேன் என்று போலியாகூட சொல்லவேண்டியது இல்லை.பல பிரச்சனைகளுக்கு இயற்கை -தகமை நெறிகள் அடிப்படையில் தான் தீர்புகள் வழங்கப்பட்டுவந்தது.இதுதான் இந்த ஜமாத்தின் சிறப்பு.ஆனால் “இஸ்லாமிய கோட்பாடுகளை திணித்தேதீறுவேன்”என்ற வெறியுடன் டி.என்.டி.ஜெ இங்கு செயல்பட ஆரமித்ததில் இருந்துதான் புனிதசடங்குகள் என்ற பெயரில் பெண்களை சீரழிக்கும் கொடுமை நடக்கின்றது.
தோழமை அண்ணே என்னன்னே நீங்க, நாம எவ்வளவு நேர்மையானவங்க பகுத்து அறியிறோம் என்ற பேரிலே நம்மலேயே அசிங்கப்படுத்திட்டோம்ன்னே.பாய்-ங்க உங்கள பொருக்கிகளுகல்லாம் குரு என்று சொல்லி உங்கள மட்டும் அவமானபடுத்தினா பரவால்லைன்னே என்னையும் சேர்த்து அவமானப்படுத்திட்டாங்கன்னே.நான் அவங்ககிட்ட நம்ம மதத்தில் (கம்யுநிசம்)பெண்ணுரிமை பற்றி பேசும் போது ரஷ்யா,சீனான்னு வாய்தவறி சொல்லிட்டேன்னே.உடனே அவங்க சீனாவில் பெண்ணுரிமை பற்றி எங்களுக்கும் தெரியும்.சீனாவில விவாகரத்து 7% கூடி போச்சாம் என்னடான்னு பார்த்தா பெண்ணுரிமை எல்லாம் சும்மா பெயருக்குத்தானாம். அப்படின்னு அங்குள்ள பெண்கள் அழுவுரான்கலாம்.கொஞ்சம் பொறுங்க எங்க தோழர் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன்.அந்த பொறுக்கிய தவிர வேற நல்லவங்க உனக்கு தெரியாதான்னு கேட்கிறாங்க அண்ணே.சீன நாட்டு பெண்ணுரிமைய பற்றி கொஞ்சம் அவுத்து உடுங்கோ அண்ணே.
nalladhu kettathugalai nam munnal mudalvar visayathilum parkkalame
மதவாதிங்களுக்கெல்லாம் கட்டுரைக்கு சம்பந்தமா பேசவே தெரியாதா!
ஆப்ரஹாமிய மதங்கள் பற்றி தெரியாத்தனமா படிக்க ஆரம்பித்து இடியாப்ப சிக்கலில் மாட்டி கொண்டேன்,!ஒரே இறைவன்!ஆனால் அவர் அனுப்பிய(!!??) தூதரை மற்றோரு மக்கள் குழு நிராகரித்ததால் வேறொரு மதம் ஸ்டார்ட்!மீண்டும் இவர்கள் பின்பற்றும் தூதரை இன்னொரு குழு நிராகரித்ததால் இன்னொரு மதம்!அடங்கப்பா!தல சுத்துது!
தலைவா! கொஞ்சம் தூங்கி எந்திரிங்க.. உங்க உளறல் தாங்கமுடியல.. குரான்-அ கொஞ்சம் புரட்டி பாருங்க புரியும்.. அல்லாஹ் சொன்னது ஒரு வழிமுறையா? அல்லது மூன்று வழிமுறையா? ஒங்கள மாதிரி மரமண்டை மக்களுக்கு முதலில் மூசா சொன்னதும் அந்த ஒரே இறைவனை தான். ஜீசுஸ் மூசா சொன்னதும் அந்த ஒரே இறைவனை தான். முஹம்மது அவர்கள் மூசா சொன்னதும் அந்த ஒரே இறைவனை தான்… ஆபிரகாம் சொன்னதும் அதை தான்.
ஏன் அல்லா ஒவ்வொருத்தருக்கும் புதுசுபுதுசா கதை சொன்னாரு?
அதான் சொன்னன்ல ஒங்கள மாதிரி மரமண்டை மக்கள் தூதர்கள் சொன்னத கேட்காம மாறி மாறி சிலைகளையும், காளை கன்றையும், மனிதர்களையும் வணங்கினதுனால தலைவா!
அதுக்கு ஏம்பா புதுக்கதைய சொல்லனும். பழைய கதையே சொல்லவேண்டியதுதானே! ஏன் அல்லாவுக்கு பழைய கதை மறந்துபோச்சா?
sawri அண்ணா உங்கள பற்றி ஒரு கட்டுரை எழுத சொல்லுங்கண்ணா அப்ப கட்டுரைபற்றி பேசலாமன்னா
tholaruku
thavru yar saithalum athu thandaikuriyathu than. inga naam kavanika vayndiyathu islamia sattam ipothu indiavil nataimurail ulatha enpathu than? avaru ilatha oru satathai penn adimai endru vimarsipathu arai kurai arivu petravargal panuvathu. communism attchiyil russiail nadantha adimai thanam patri negal vasika vayndum tholara. 7 andu kalam communism atchiyil 7 latcham makkal stalinal kolapatulargal ithu manitha samugathin meethu natantha adimai ilaya? neegal parka vayndiyathu sattathai matum than atil ula manithargalai ala. tntj matum muslimkalin adayalam ala athu perpanmai muslimkalal purakaika patura oru iyakam tntj saiyalkal anaithum veenanathu arivu ula yarum athil inaya matargal. naam islathai oru vivatha porulaga matra vandum apothu tha athu sola varum visayam naam arivuku thareya varum ,
சரி இந்த கட்டுரையை பார்க்கும் போது ஒன்று மட்டும் விளங்குது. வினவோ அல்லது அதை சேர்த்த புதிய கலாசாரம்(?) முஸ்லிம்களை பற்றி குறிப்பாக