கடும் குளிரையும் பனிப்பொழிவையும் மீறித் தொடர்ந்து கொண்டிருக்கிறது வால் ஸ்டிரீட் போராட்டம். வால் ஸ்டிரீட் போராட்டத்துக்கு ஆதரவாக உலகெங்கும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இலட்சக்கணக்கான மக்கள் திரளின் கோபத்தில் ரோம் தீப்பிடித்தது. சம்பளவெட்டு, ஆட்குறைப்பு, ஓய்வூதிய வெட்டு, மக்கள் நலத்திட்டங்கள் ரத்து, பொதுத்துறை விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் நடத்திய போராட்டத்தில் கிரீஸ் பற்றி எரிந்தது. எகிப்தின் மக்கள் முபாரக்கின் இராணுவ டாங்குகள், போர் விமானங்களுக்கு அஞ்சவில்லை. முபாரக்கின் கூலிப்படைகள் முதல் குதிரைப்படைகள் வரை அனைத்தையும் எதிர்த்து நின்றார்கள். அன்றைய சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தின் தலைநகரம், இளைஞர்களின் கலகத்தால் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தது.
கண்டங்கள், நாடுகள், நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், குறுக்கு நெடுக்காக உலகம் முழுவதும் மக்களின் கோபத் தீக்கு எண்ணெய் வார்த்திருக்கிறது முதலாளித்துவம். முபாரக்கின் சர்வாதிகாரம், கிரீஸ் அரசின் சிக்கன நடவடிக்கைகள், ஒபாமாவின் வரிகள், வேலையின்மை, கல்வி மருத்துவ மானிய வெட்டு, சுற்றுச்சூழல் அழிவு என்று ஆயிரம் பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டாலும், அவை அனைத்தின் மூல காரணம் உலக முதலாளித்துவம்தான்.
போராடும் மக்களுக்கு இது தெரியாமல் இல்லை. “”முதலாளித்துவம் ஒழிக!, வங்கி முதலாளிகளைக் கைது செய்!” என்று அமெரிக்காவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்குகிறார்கள். உணவு, உடை, இருப்பிடம், வேலை, பொழுதுபோக்கு, நுகர்பொருட்கள், கல்வி, சுகாதாரம், போலீசு, இராணுவம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். தனி மனித முயற்சியின் மூலம் யாரும் வெற்றி பெற முடியும்மென்ற “அமெரிக்க கனவும்’ அமெரிக்க ஜனநாயகமும் பொய் என்பதை அவர்கள் தம் சொந்த அனுபவத்தில் பட்டு உணர்ந்திருக்கிறார்கள்.
எனினும், முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்று ஒப்புக் கொள்வதில் அவர்களுக்குத் தயக்கமிருக்கிறது. தன்னுடைய அரசமைப்பின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதில் முதலாளித்துவம் வெற்றி பெற முடியவில்லை. எனினும், பல பத்தாண்டுகளாக விடாப்பிடியாக நடத்திய அவதூறுப் பிரச்சாரத்தின் விளைவாக, மக்கள் மனதில் கம்யூனிசத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அந்த அவநம்பிக்கையின் நிழலில் அது உயிர் வாழ்கிறது. கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம், தனிநபர் ஊக்கம் மற்றும் உரிமை மறுப்பு, அதிகாரவர்க்க ஆட்சி என்ற பொய்களை மக்கள் மனதில் நிலைநாட்டி பீதியூட்டியிருக்கிறது. ரசிய, சீன சோசலிசங்களின் சீரழிவு இந்தப் பொய்களுக்கு புனுகு தடவிவிட்டது. அவற்றின் தோல்வியோ ஊனமுற்ற முதலாளித்துவத்துக்கு ஊன்றுகோலாகப் பயன்படுகிறது.
முதலாளித்துவத்தின் பேராசை, கொள்ளை, பித்தலாட்டம், போர்வெறி ஆகியவற்றை அமெரிக்காவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். எனினும், திட்டவட்டமான மாற்று ஒன்றை முன்வைத்துப் போராடாதவரை, இவையெல்லாம் ஆற்றாமை தோற்றுவிக்கும் புலம்பல்களாகவே முடிகின்றன. சியாட்டிலில் தொடங்கி கடந்த பத்து ஆண்டுகளாக அடுத்தடுத்து பல முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் மேற்குலகில் நடந்த போதும், அவை முன்னேற முடியாமல் தேங்குவதற்கு இதுதான் காரணம். இந்தத் தேக்கம் தொடருமாயின், அது சோர்வையும் அவநம்பிக்கையையுமே மக்களிடம் பரப்பும். அவ்வகையில் அராஜகவாதிகள், பின் நவீனத்துவவாதிகள், டிராட்ஸ்கியவாதிகள், தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட பலரும் முதலாளித்துவத்தின் கையாட்களாக இருந்து மக்களைச் சிதறடிக்கிறார்கள். விரக்திக்குத் தள்ளுகிறார்கள். முதலாளித்துவத்திடம் சரணடையச் செய்கிறார்கள்.
வால் ஸ்டிரீட் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்ப்பதற்குக் காரணம் முதலாளித்துவத்தின் மீதான மக்களின் வெறுப்பு. அதனை சோசலிசத்தின் மீதான விருப்பமாக மாற்றுவதன் மூலம்தான் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும். ஏகாதிபத்தியமாகவும், மேல்நிலை வல்லரசுகளாகவும், ஒற்றைத்துருவ மேலாதிக்கமாகவும், உலக வர்த்தகக் கழகமாகவும் அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் மென்மேலும் மையப்படுத்தப்பட்ட ஒரு கொடிய வன்முறை எந்திரமாக மாறிவரும் உலக முதலாளித்துவத்தை உதிரியான கட்சிகளும், கலவையான முழக்கங்களும், தொளதொளப்பான அமைப்பும் வீழ்த்த முடியாது.
முதலாளித்துவத்துக்கு எதிரான மார்க்சிய லெனினிய சித்தாந்தம், ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கட்சி, அதன் தலைமையில் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட மக்கள்திரள் இவையில்லாமல் எந்தவொரு நாட்டிலும் முதலாளித்துவத்தின் சர்வாதிகாரத்தை வீழ்த்த இயலாது. மக்களின் கோபம் ஒரு சுனாமியைப் போன்ற ஆற்றலுடன் மேலெழுந்தாலும், ஆளும் வர்க்கம் அந்த சுனாமிக்கும் ஒரு வடிகாலைத் தயாரித்துவிடும். வீரம் செறிந்த எகிப்து மக்களின் போராட்டம் எப்படி மடைமாற்றப்பட்டதென்பது நம் கண்முன் தெரியும் சமகாலச் சான்று.
முதலாளித்துவத்துக்கு எதிரான கம்யூனிசத்தின் சித்தாந்தப் போர், போல்ஷ்விக் உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட கட்சி இவ்விரண்டு அவசரத் தேவைகளையும் நிறைவு செய்யக் கோருகின்றன உலகெங்கும் எழுந்து வரும் முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள்.
_________________________________________________
– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011
_________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
- முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!
- அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது !
- அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!
- டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?
- ஏகாதிபத்தியங்களின் நெருக்கடியை தீர்க்க அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு போர்கள்!
- துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!
- துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்
- அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!
- துபாய் : உல்லாசபுரி சுடுகாடானது!
- மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!
- ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!
- வெள்ளை மாளிகை கருப்பு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது ஏன்?
- ஒபாமா : ஆனந்தக் கண்ணீரின் அரசியல்!
- வாழ்த்துக்கள் கிடக்கட்டும் ஒபாமா ! இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல் !!
- ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!
Communism came. Then failed…….
Capitalism came. Then failed……..
There in one and only ideology standing in this world with ou t fail…..
That is ISLAM.
Throw your hate policy from your heart and start learn/join ISLAM.
You will be free from all slavaries and will come under control of your creator/lord.
raza,
இஸ்லாமை ஏற்றுக்கொண்ட மக்கள் மற்றும் நாடுகளைக் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன். உங்களின் முரண் நகை முதலில் உங்களுக்குப் புரிந்தால் சரி.
விலைவாசி உயர்வை கண்டித்து போராடி கைதாகியுள்ள திருச்சி பெண் தோழர்களுக்கு என –து வாழ்த்துக்கள்.
//எனினும், பல பத்தாண்டுகளாக விடாப்பிடியாக நடத்திய அவதூறுப் பிரச்சாரத்தின் விளைவாக, மக்கள் மனதில் கம்யூனிசத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அந்த அவநம்பிக்கையின் நிழலில் அது உயிர் வாழ்கிறது. ///
அவை எல்லாம் அவதூறு என்று நீங்க சொன்னால், அது அவதூறு ஆகிவிடுமா என்ன ?
நல்ல் கதை. இதை விடப்பிடியாக உங்க குழு மட்டும் இன்னும் நம்புவதால் தான் உங்க பாச்சா எதுவும் பலிக்கவில்லை. அ.மார்க்ஸ் எழுதிய ‘மார்க்சியத்தின் பெயரால்’ என்ற பழைய நூலை படிக்கவும். உங்களை போன்ற கனவுலகவாதிகளுக்காக எழுதப்பட்டது. உடனே அ.மார்க்ஸை தூற்ற துவங்க வேண்டாம். பதில் சொல்ல முடியவில்லை என்றால் ஏசுவது தான் உங்க பாணியாச்சே.
///முதலாளித்துவத்துக்கு எதிரான மார்க்சிய லெனினிய சித்தாந்தம், ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கட்சி, அதன் தலைமையில் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட///
Good luck for your valiant efforts !!
அ.மார்க்ஸை நாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் …
எவ்விதத்தில் அவதூறு இல்லை என்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா ?..
ரஸ்யாவின் குறுகிய கால வளர்ச்சியை (1925 – 1955) எந்த முதலாளித்துவ நாடு பெற்று இருக்கிறது?
முதலாளித்துவ மீட்சிக்குப் பின் அதே ரஸ்யா கலாச்சார ரீதியாகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் எவ்வளவு கேவலமான நிலைக்குச் சென்றது என்றும் கணக்கிலெடுத்து பேசவும்.
//ரஸ்யாவின் குறுகிய கால வளர்ச்சியை (1925 – 1955) எந்த முதலாளித்துவ நாடு பெற்று இருக்கிறது?///
வளர்ந்தது சரிதான். ஆனால் பல லச்சம் அப்பவிகளை போட்டு தள்ளியும், சிறையில் அடைப்பதும் நடந்தது. அதை விட பெரும் கொடுமை, உக்ரேனிய பெரும் பஞ்சம். நம்ம வங்காள பெரும் பஞ்சத்தை விட மிக கொடிய பஞ்சம். அது ‘இயற்க்கையாக’ நிகழ்ந்தது என்று உங்க ‘தோழர்கள்’ (அதாவது வினவு குழுவினர் மட்டும் தான். இதர மார்க்சியர்கள் அல்ல) சொல்வாக. உக்ரேனிய மக்களிடம் பேசி பார்க்கட்டும் இந்த கதையை, அப்பறம் தெரியும்.
Holodomor என்று இன்று அழைக்கப்படும் உக்க்ரேனிய பெரும் பஞ்சம் பற்றி படித்தப் பார்க்கவும். அதாவது உண்மைகளை அறியும் ஆவல் இருப்பவர்களுக்கு சொல்கிறேன். சொந்த புத்தி இல்லாமல், இங்கு வினவு சொல்வது எல்லாம் வேத வாக்கு என்று குருட்டுத்தனமாக நம்புவர்களுக்கு சொல்லவில்லை.
மேலும் கிழக்கு ஆசிய புலிகள் எனப்படும் ஜப்பான், தென் கொரிய மற்றும் தைவான் போன்ற தேசங்கள், இத்தகைய கொடும் விலையை அளிக்காமலே இதை விட அதிக வேகத்தில் வளர்ந்து, வறுமையை விட்டு மீண்ட வரலாறு நம் கண் முன்னே இருக்கிறது.
//முதலாளித்துவ மீட்சிக்குப் பின் அதே ரஸ்யா கலாச்சார ரீதியாகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் எவ்வளவு கேவலமான நிலைக்குச் சென்றது என்றும் கணக்கிலெடுத்து பேசவும்.
//
ஆம். அதை விட கொடுமை, அங்கு உள்ள ஊழல் மற்றும் மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம். இதெல்லாம் திடிரென 1991க்கு பின் உருவாகிவிடவில்லை. மிக தவறான பாதையில், பல பத்தாண்டுகள் சென்றால், விளைவு இப்படி தான் இருக்கும். அரசு எந்திரம், சோசியலிசம் என்ற பெயரில் பெரும் அதிகாரங்களை பெற்று, சந்தை பொருளாதாரத்திற்க்கு மாற்றான கொள்கைகளை அமலாக்கிய நாடுகள் அனைத்தும் இதே போல் தான் படிப்படியாக சீரழிந்தன. மாற்றாக, லிபரல் ஜனனாயகம் மற்றும் சந்தை பொருளாதார பாணியை முடிந்த வரை பின்பற்றிய மே.அய்ரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகளின் கடந்த 50 வருட வரலாற்றை ஒப்பிட்டால் தெரியும்..
//ஆனால் பல லச்சம் அப்பவிகளை போட்டு தள்ளியும், சிறையில் அடைப்பதும் நடந்தது. அதை விட பெரும் கொடுமை
காபிடளிசதால் உலகம் முழுக்க பல கோடி மக்கள் அல்லவா பாதிக்கபட்டுஉள்ளனர்.
//ஆனால் பல லச்சம் அப்பவிகளை போட்டு தள்ளியும்,//
திருத்திக் கொள்ளவும். அவர்கள் அப்பாவிகள் அல்ல. மக்களை பஞ்சத்தில் உழல வைத்த கொடுங்கோலர்கள். உணவுப் பொருள்களை பதுக்கியும், வயல்களை நாசம் செய்தும் பஞ்சத்தை செயற்கையாக ஏற்படுத்தி அதனால் இறந்த மக்களின் கணக்கை ஸ்டாலின் தலையில் கட்டப் பார்க்கிறார் அதியமான்.
ஒரு சம்பவம், ரஷ்யாவில் கடுங்குளிர் காலம் வருவதற்கு முன்பாக கன அடுப்பிற்குத் தேவைப்படும் விறகுகளை காடுகளில் வெட்டி அந்தந்த பகுதிக்கு அனுப்ப வேண்டும். விறகுகளை ரெயில்வே இருப்புப்பாதை இருக்குமிடம் நோக்கி வெட்டிக்கொண்டே வரவேண்டும். ஆனால், நமது முதலாளிகளின் கைக்கூலிகள் இருப்புப்பாதையிலிருந்து வெட்டிக்கொண்டே சென்று ரெயில்வே பதைக்கும் விறகு இருக்கும் இடத்திற்கும் பல மைல் தூரம் இருக்கும்படி செய்தனர். அங்கிருந்து விறகுகளை இருப்புப்பாதை பகுதிக்கு வரவேண்டுமானால் பல நாட்கள் ஆகும். குளிர்காலம் வந்தது. ஆனால் விறகு வரவில்லை. இதனைத் தாமதமாக அறிந்துகொண்ட பா.வ.அரசு இருப்புப்பாதையை விறகு இருக்கும் இடம் நோக்கி அமைத்து விறகுகளை அனுப்பி வைத்தது. மற்றுமொரு சம்பவம் அங்கு குளிரைத் தாங்க கொழுப்பு சாப்பிட வேண்டுமாம். மக்களுக்கு அனுப்பப்பட்ட கொழுப்புகளை கைக்கூலிகளே உட்கார்ந்து தின்றுவிட்டு மக்களை சாகடித்துள்ளனர்.
இதனை நான் ஏன் கூறுகிறேன் என்றால், நமது நாட்டில் ஒரு கட்சி தோற்று மற்றொரு கட்சி ஆட்சியைப் பிடிப்பது போல் ரஷ்யாவில் நடக்கவில்லை. அங்கு உற்பத்தி அமைப்பையே மாற்றி அமைக்கும்படியான, சமூக அமைப்பையே மாற்றியமைக்கும்படியான அரசு அமைந்தது. இன்று, தங்களுக்கு இசைவாக நடக்காத காரணத்தினாலேயே ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து போட்டுத்தள்ளும் முதலாளிகள், தங்களிடமிருந்து உற்பத்தியையே பிடுங்கி பொதுவில் வைக்கப்பட்டதற்கு என்னவெல்லாம் சதிசெய்திருப்பார்கள் என்பதனை சிந்தித்துப்பார்க்கவேண்டும். வினவு சொல்வதனை குருட்டுத்தனமாக நாம் நம்புவதாக அதியமான் கூறுகிறார். ஆனால் அவர்தான் கம்யூனிசத்தின் எதிரிகள் கூறுவதை மட்டுமே குருட்டுத்தனமாக நம்புகிறார். ஆனால், நாம் அப்படி நம்பவில்லை, இந்தியாவில் இருந்தும், அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ரஷ்யா சென்று வந்த பல ஊடகவியலார்கள், சமூக சனநாயகவாதிகள், கூறியதிலிருந்தும், வினவு கூறியதிலிருந்தும், அதியமான் கூறியதிலிருந்துமே, மார்க்ஸ் என்ன கூறவருகிறார் என்பதிலிருந்துமே கம்யூனிசத்தை நம்புகிறோம். ஸ்டாலினை நம்புகிறோம்.
//மக்களை பஞ்சத்தில் உழல வைத்த கொடுங்கோலர்கள். உணவுப் பொருள்களை பதுக்கியும், வயல்களை நாசம் செய்தும் பஞ்சத்தை செயற்கையாக ஏற்படுத்தி அதனால் இறந்த மக்களின் கணக்கை ஸ்டாலின் தலையில் கட்டப் பார்க்கிறார் அதியமான்.
//
that is your version. but the people who suffered and died there differ.
try this for starters :
http://www.holodomorct.org/index.html
HOLODOMOR 1933
இன்னும் எத்தனை முறை தான் அமெரிக்க ஓநாய்த் தளங்களின் அழுகுனி நடிப்பைக் காட்டி ஏமாற்றுகிறீர்கள் என்று பார்ப்போம்.
இந்தப் புளுகுகளை கட்டவிழ்த்து விடும் இந்த புளுகாண்டிகளுக்கு காரணங்களைக் கூட முழுமையாக கொடுக்க முடிவதில்லை..
ஒரு நாளைக்கு 25000 நபர்கள் ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறீர்கள். அப்பொழுதைய உங்களுடைய உலக முதலாளிகளின் கொள்கை என்ன? ஏன் இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினுடன் கூட்டு சேரவேண்டும்?
sujith khan,
அதென்ன ‘எம்முடைய உலக முதலாளிகள்’ ; நீங்க என்னவோ மாவோயிஸ்ட் போல் பில்டப். அனேகமாக ‘நல்ல சம்பளத்தில்’ பெரும் நிறுவனத்தில் சுகமாக வேலை பார்த்துக்கொண்டு, இங்கு ‘முழங்கும்’ முதலாளித்துவ எதிர்ப்பாளர்களில் நீங்களும் ஒருவர் என்று ஒரு அனுமானம் !! :)))
உக்ரேனியா என்னும் நாட்டில் போய் இவை பொய்கள் என்று சொல்லிப்பார்க்கவும். அந்நாட்டில் இந்நிகழ்வை பொய் என்று மறுப்பது இன்று சட்டப்படி குற்றம். யூதர்களுக்கு எதிர்கான holocaust அய் மறுப்பது சில நாடுகளில் குற்றம் என்பது போல் இதுவும். மேலும் விக்கிபீடியா சுட்டி ஒன்று உள்ளது : (விரிவான இதர சுட்டிகளுக்கு இதில் லிங்குகள் உள்ளன என்பதால் இங்கு தருகிறேன். விக்கிபீடீயாவை இளக்காரமாக பேரும் அன்பர்கள், வினவு பல கட்டுரைகளில் அதே விக்கிபிடியாவை ஆதாரமாக காட்டியதை நினைவு கொள்க. முக்கியமாக விக்கிலிங்கஸ் கட்டுரையில்)
http://en.wikipedia.org/wiki/Holodomor
——
இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினுடன் நேச நாடுகள் கூட்டு சேர்ந்தது, நாசிகளை, இட்டலரை தோற்கடிக்க தான். அன்று உலகை அச்சுருத்திய பெரும் தீய சக்தி, நாசிக்கள் தான்.
இன்று நடைபெறும் போராட்டங்களெல்லாம் யாருக்கு எதிராக யாரால் நடத்தப்படுகிறது? முதலாளிக்கு எதிரி தொழிலாளிதானே. பிறகு சம்பளம் வாங்குகிறேன் என்பதற்காக விசுவாசமாக இருக்கவேண்டும் என்றால் நாமெல்லாம் அடிமை காலத்திலேதான் இருந்திருக்க வேண்டும். உக்ரெய்னில் கூட லெனின் படத்துடந்தான் போராட்டம் நடத்துகிறார்கள்.
//அன்று உலகை அச்சுருத்திய பெரும் தீய சக்தி, நாசிக்கள் தான்.//
என்னங்க நீங்க சொல்றதுல ஏதாவது லாஜிக் இருக்கா? பெரும் தீய சக்தி நாசியாக இருந்தது சரி. அதுக்கு ஏன் ஸ்டாலினோடு கூட்டு சேரவேண்டும்? அதவது உங்கள் மொழியில் ஸ்டாலின் என்ற கொலைகாரனுடன்.
திரு.அதியமான் ஸ்டாலின் மீது சுமத்தும் குற்றச்சாட்டு விசித்திரமாக உள்ளது. கூட்டு பண்ணை விவசாயத்திற்காக அரசதிகாரத்தைப் பயன் படுத்த வேண்டும் என்று சில தோழர்கள் வற்புறுத்திய பொழுது, விவசாயிகளை அவர்களுடைய போக்கில் விட்டால் நாளடைவில் கூட்டு பண்ணை விவசாயத்தின் நன்மைகளை உணர்வார்கள் என்று அப்போக்கை மிதப்படுத்தியவர் தான் ஸ்டாலின். கூட்டு பண்ணை விவசாயத்தை ஏற்காத காரணத்தால் உக்ரேனிய விவசாயிகளைப் பட்டினியில் வாட வைத்தார் என்று கூறுவது தர்க்க வாதத்திற்குச் சற்றும் பொருந்தவில்லை.
மேலும் திரு.அதியமான் குறிப்பிடும் 1930களில் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பசியிலும் பஞ்சத்திலும் வாடிக் கொண்டிருக்க, சோவியத் யூனியனில் மட்டும் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். இது தான் சோவியத் யூனியனையும் ஸ்டாலினையும் பேய் பூதம் என்று முதலாளித்துவ அறிஞர்கள் செய்து வைத்திருந்த பிரச்சாரத்தையும் மீறி, அறிவு ஜீவிகளை சோவியத் யூனியன் பால் பார்க்க வைத்தது. அப்படிப் பார்த்தவர்களில் ஒருவர் தான் கான்டெர்பெர்ரி ஆர்ச் பிஷப் ஹெவலட் ஜான்ஸன். அவர் சோவியத் யூனியனைச் சுற்றிப் பார்த்து விட்டு உண்மையான ஜனநாயகம் சோவியத் யூனியனில் தான் உள்ளது என்றும், முதலாளித்துவ நாடுகளில் நீட்டி முழக்கிக் கூவப்படும் ஜனநாயகம் உண்மையான ஜனநாயகம் அல்ல என்றும் தன்னுடைய ஆறில் ஒரு பங்கு உலகில் சோஷலிசம் என்ற நூலில் விரிவாகக் கூறி உள்ளார்.
அது மட்டுமா யெல்த்சின் குடிகாரனாக இருந்ததற்கும் ஸ்டாலின்தான் காரணம் என்றும் சொலவார்கள்
இதைப் போல ஆயிரக்கணக்கில் சுட்டிகளை கொடுக்கலாம் அதியமான், ஆனால் உண்மை என்ன ? முதலாளிகள் முதலாளித்துவ சமூகத்திலேயே உண்மைகளை பேசாத யோக்கியர்களாக இருக்கும் போது அவர்களை தூக்கி எறிய சோவியத் யூனியன் என்கிற அபாயம் இருந்த அந்த நாட்களில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதியிருப்பார்கள். நீங்கள் இது போன்ற அவதூறு கட்டுரைகள், நூல்களை மட்டும் தான் படித்திருக்கிறீர்களா ? நிறைய படங்களும் வந்திருக்கின்றன அவற்றையும் பாருங்கள் சுட்டி கொடுக்க பயன்படும்.
வினவின் மூலம் கம்யூனிச கொள்கையின் பால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் அதியமான் அனைத்து பதிவுகளிலும் மூச்சைக் கொடுத்து விவாதித்துக்கொண்டிருக்கிறார். எனவே தான் சோசலிச நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று பயமுறுத்திக்கொண்டிருக்கிறார். அதியமான் இதை ஆண்டுக்கணக்கில் லட்சம் முறை சொன்னால் அவை உண்மை அல்ல. இவர் கூறுகின்ற அனைத்தும் கம்யூனிசத்திற்கெதிராக முதலாளிகளால் பிரத்யேகமாக அமர்த்தப்பட்ட கூலி எழுத்தாளர்களால் புனையப்பட பிரம்மாண்டமான பொய்களாகும்.
அத்தகைய முதலாளிகள் பலர் இருப்பினும் இவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்ஸ்ட்டும், கான்குவெஸ்ட்டும் தான் முக்கியமானவர்கள். கம்யூனிச அவதூறுகளில் முக்கால்வாசியை புனைந்தவர்கள் இவர்கள் தான். இதில் ரடால்ப் ஹெர்ஸ்ட் ஹிட்லரின் நண்பன் என்பது குரூரமான உண்மை!
இத்தகைய முதலாளிகள் யோசித்து யோசித்து எழுதியதை தான் அதியமான் ஆண்டுக்கணக்கில் ஒப்பித்து வருகிறார்.
அ.மார்க்ஸ் பெரும்பாலும் இவர்களைப் போன்ற மட்டமான உதாரணங்களை எல்லாம் காட்டமாட்டார். அவரைப் போன்றே கம்யூனிசத்திற்கெதிராக சிந்திக்கக்கூடிய பேராசிரியர்கள், அறிவுஜீவிகள், முன்னாள் கம்யூனிஸ்டுகளின் பொய்களை தான் நம்பத்தகுந்தவர்களின் எழுத்துக்கள் என்று கம்யூனிசத்திற்கெதிராக அறிமுகம் செய்வார். இரண்டுமே பொய்கள் தான், அதியமான் கூறுவது மட்டமா பொய் அவ்வளவு தான்.
கம்யூனிசத்திற்கெதிராக நீங்கள் முன் வைக்கும் இந்த அவதூறுகளுக்கு பல ஆண்டுகளாக பல்வேறு தோழர்கள் விளக்கமளித்துவிட்டார்கள், இருந்தும் ஏன் உங்களால் அந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் முதலாளித்துவ உலகத்தை விரும்புகிறீர்கள்.
பெரும்பாண்மை மக்களோ ஒடுக்குமுறையற்ற, முதலாளிகளின் சுரண்டலற்ற சமூகத்தை விரும்புகிறார்கள். அவர்களிடம் இந்த ’உண்மை’களை நீங்கள் 24 மணி நேரமும் கூறிக்கொண்டிருந்தால் கூட அவர்கள் அதை ஒதுக்கித்தள்ளிவிடுவார்கள், மா.சி ஒதுக்கித்தள்ளியதை போல. ஏனென்றால் அவர்கள் பெரும்பாண்மை மக்களின் நலனிலிருந்து சோவியத்தின் சாதனைகளை தான் பார்க்கிறார்கள். அவர்கள் முதலாளித்துவ உலகிலிருந்தாலும் ஒரு சோசலிச சமூகத்தில் வாழ விரும்புகிறார்கள். எனவே உங்களைப் போல முழு நேரமாக ஆயிரம் பேர் பிரச்சாரம் செய்தால் கூட, புரட்சியை அல்ல வினவு வாசகர்களின் எண்ணிக்கையை கூட குறைக்க முடியாது.
//அ.மார்க்ஸை நாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் …///
எப்பறம் பாத்துகறதாம் ? சந்தடி சாக்கில் அவர் எழுதிய ஆதரபூர்வமான நூல் பற்றி விவாதிக்காம டபாய்க்கிறீகளே ? !!
அவரும் மார்க்சியர்தான். முதலாளித்துவத்தை எதிர்ப்பவர் தான். ஆனால் உண்மைகளை மறைப்பவர் அல்ல. ஆராய்சி மனோபாவம் மற்றும் பகுத்தறிந்து செய்ல்படுப்வர். உடனே அவர் ஒரு ‘கைக்கூலி’ அல்லது ‘திரிபுவாதி’ என்று அவதூறு செய்த்து, விசியத்தை பற்றி பேசாமல், நபரை பற்றி பேசி டபாயக்க வேண்டாம்.
அவரை போன்றவர்கள் எல்லாம் மடையர்கள், வினவு குழு சொல்வது மட்டும் தான் உண்மை என்று நம்புகிறவர்களை ‘திருத்த்துவது’ கடினம். இங்கு, இப்போது சூடாக விவாதிக்கும் இஸ்லாமிய அன்பர்களை விட பகுதற்வு குறைவானர்களே உங்களை போன்றவர்கள். மதவாதம் போன்றது இந்த குருட்டு நம்பிக்கை.
///அவரும் மார்க்சியர்தான். முதலாளித்துவத்தை எதிர்ப்பவர் தான்.///
ஆமாம். இதற்கு அவர் எழுதிய ’மார்க்சியத்தின் பெயரால்’ மற்றும் பல கம்யூனிச எதிர்ப்பு கட்டுரைகளே சாட்சி !
Kishenji is dead!!
இது தான் அதியமான்கள் போற்றும் ஜனநாயக முதலாளித்துவ தர்மம்.
மாவோயிஸ்டுகள் சகட்டு மேனிக்கு பலரையும் போட்டு தள்ளுவதை நியாயப்படுத்துபர்கள், ஜனனாயகம் பற்றி பேசுவது முரண்நகை ! எஸ்ஸார் நிறுவனத்தை மிரட்டி கப்பம் வசூலித்தார்கள் மாவோயிஸ்டுகள் என்ற குற்றச்சாட்டை இரு தரப்பும் மறுக்கிறது. ஆனால் உண்மை என்ன ? மாஃபியா போல் பல இடங்களில் இவர்கள் செயல்படுகிறார்கள். அவர்களில் செயல்களை பற்றி விரிவாக, வெளிப்படையாக இது வரை ஒரு கட்டுரை கூட வினவு தளத்தில் இல்லை. ஏன் ?
//மாவோயிஸ்டுகள் சகட்டு மேனிக்கு பலரையும் போட்டு தள்ளுவதை நியாயப்படுத்துபர்கள், ஜனனாயகம் பற்றி பேசுவது முரண்நகை ! // அதியமான் மாத்தி மாத்தி பேசக் கூடாது. நல்லவனுக்கு அழகு எப்போதும் ஒரே மாதிரி பேசுவதுதான்.
இந்து பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தினால் பாகிஸ்தான் யோக்கியமா என்றூ அவர்கள் கேட்பது போல அதியமான் கேட்பது அவர் நியாயப்படுத்தும் ஒரு சமூக அமைப்பில் நேர்மையானது, ஒழுங்கானது என்று சொல்ல எதுவுமில்லை என்பதை சுயவாக்குமூலமாக ஒத்துக் கொள்வதையே குறிக்கிறது.
ஜனநாயகம் இங்குதான் உள்ளது போல பேசி ஏய்க்கும் அதியமான் தோழர் கிஷ்ன் ஜி, தோழர் ஆசாத் போன்றோரை கைது செய்து சித்திரவதை செய்து கொன்ற போலீசு குறித்தோ, அல்லது பினாயக் சென், ஹிமன்சுகுமார் போன்ற அஹிம்சாவாதிகளை சித்திரவதை செய்த அரசு குறீத்தோ, அல்லது யூனிபார்ம் போட்டதாலேயே எளிய மக்களின் அனைத்து உரிமைகளிலும் தலையிட துணியும் அதிகார வர்க்கத்தின் காரணாமாக அம்மக்க்ளுக்கு மறூக்கப்படும் ஜனநாயகம் பற்றியோ பேசத் துணிவதில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு பழங்குடியினரின் உயிர்கள் பறிக்கப்படுவது பற்றி பேசினால் தனக்கும், அதுக்கும் சம்பந்திமில்லை என்பது போல பேசி நழுவும் வாக்கு நேர்மையற்றவர் அதியமான் என்பதுதான் இதுவரர அவர் வெளிப்படுத்தியுள்ள் ஒரே உண்மம.
//அவர் நியாயப்படுத்தும் ஒரு சமூக அமைப்பில் நேர்மையானது, ஒழுங்கானது என்று சொல்ல எதுவுமில்லை என்பதை சுயவாக்குமூலமாக ஒத்துக் கொள்வதையே குறிக்கிறது.///
அப்படி எல்லாம் இல்லை அப்பனே. லிபர்ட்டேரியன் என்று தம்மை அழைத்துக்கொள்பவன், மனித உரிமைகளை மீறும் எந்த அமைப்பையும் ஏற்க்க மாட்டான். சும்மா ஓட்ட வேண்டாம். உமது நேர்மை பற்றி தான் சந்தேகம்.
///ஜனநாயகம் இங்குதான் உள்ளது போல பேசி ஏய்க்கும் அதியமான் ///
///
அப்படி எல்லாம் சொல்லவில்லையே. 100 சதம் ஜனனாயகம் இங்கு இல்லை. ஆனால் அதே சமயம் 1 சதம் கூட இல்லை என்று சொல்ல முடியுமா ? உங்க கும்பல் தான் அப்படி ‘பிரச்சாரம்’ செய்கிறது. இதற்க்கு மாற்றாக. தீர்வாக நீங்க வைக்கும் அமைப்பின் ‘ஜனனாயகததன்மை’ பற்றி தான் தெரியுமே. சர்வாதிகாரத்தை முன்மொழிபவர், இன்று ஜனனாயகம் ப்ற்றி பேசும் இரட்டை வேடம் பற்றி தான் சொன்னேன்.
இந்தியாவை மட்டும் வைத்து கொண்டு ஜனனாயகம் பற்றி பேசுவது தான் உங்க தந்திரம்.நெதர்லாந்த போன்ற நாடுகளும் ‘ஜனனாயகம்’ என்றே அழைக்கப்படுகிறது. பழங்குடி மக்களின் நிலங்களை அபகரிக்க முக்கிய காராணம் இந்தியாவில் (அய்ரோப்பா போல்) சொத்துரிமை சட்டம் உறுதியாக இல்லை என்பதை பல முறை பேசியாச்சு.
மற்றபடி, மனித உரிமைகளை தேவைபட்டா போட்டு மிதிக்க தயங்காத சித்தாந்தம் தான் உங்கள் கம்யூனிசம். நடைமுறையில் அது தான் சாத்தியம்.
சரி, இருக்கட்டும். ரொம்ப நாளாக சொல்ல நினைத்தது : உமக்கு இருப்பது வெத்து ஈகோ தான். வேறு ஒரு எழவும் இல்லை. சில மாதங்கள் முன்பு ஒரு வாசகர் உம்மை டேய் என்று விளித்து, செமத்தையாக கொடுத்தார் அல்லவா. you deserve only such kind of ’treatment’.
////அப்படி எல்லாம் இல்லை அப்பனே. லிபர்ட்டேரியன் என்று தம்மை அழைத்துக்கொள்பவன், மனித உரிமைகளை மீறும் எந்த அமைப்பையும் ஏற்க்க மாட்டான். சும்மா ஓட்ட வேண்டாம். உமது நேர்மை பற்றி தான் சந்தேகம்.////
இது உண்மை எனில் நெல்லிக்கனியிலிருந்து லிபர்ட்டேரியனிச நேர்மையை அறிய சுட்டிகள் தாருங்கள்.
///இந்தியாவை மட்டும் வைத்து கொண்டு ஜனனாயகம் பற்றி பேசுவது தான் உங்க தந்திரம்.நெதர்லாந்த போன்ற நாடுகளும் ‘ஜனனாயகம்’ என்றே அழைக்கப்படுகிறது.///
நெதர்லாந்திலும் முதலாளிகள் என்கிற சிறிய கூட்டம் தான் பெரும்பாண்மை மக்களை ஒடுக்குகிறது அதியமான். எனவே பெரும்பாண்மை மக்களை சிறுபாண்மை முதலாளிகள் நெதர்லாந்த் பாணியில் ஒடுக்குவது சரியா, இந்திய பாணியில் ஒடுக்குவது சரியா என்று பேசிக்கொண்டிருப்பது சரியா அல்லது முதலாளிகளின் கொடூரமான மற்றும் மென்மையான அனைத்து வகை சர்வாதிகாரங்களையும் தூக்கி எறிந்து விட்டு பெரும்பாண்மை உழைக்கும் மக்களின் சர்வாதிகார ஆட்சியை, அதாவது மக்களின் ஜனநாயக ஆட்சியை நிறுவுவது சரியா ? நீங்கள் கடைசியில் கியூபாவிலுள்ள ஜனநாயகம் நல்ல ஜனநாயகம் என்று இறங்கி வந்தால் கூட பெரும்பாண்மை மக்கள் இதை தான் சரி என்பார்கள்.
அவர்கள் எங்கேயாவது சாதாரண மக்களை கொன்றிருக்கிறார்களா அதியமான் ? இல்லை காட்டிக்கொடுத்த கருங்காலிகளை தான் கொன்றிருக்கிறார்கள். இவ்வாறு கைக்கூலிகளையும், மக்கள் விரோதிகளையும் போட்டுத் தள்ளுவது தவறே இல்லை.
மற்றபடி எஸ்ஸாரிடம் கப்பம் வசூலித்தார்களா இல்லையா என்பதை பற்றி நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும், ஏனென்றால் இது மாவோயிஸ்ட் இணையம் அல்ல. அவர்கள் செய்யும் அனைத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதையும் ம.க.இ.க வை அறிந்தவர்களுக்கு தெரியும்.
சோசலிசம் பற்றிய விரிவான விவாதம் தேவை. எளிய மக்களுக்கும் புரியும்படியான மாதிரி முன்வடிவு தேவை.சோசலிசம் சீரழிவு அடையாமல் இருக்க என்ன மாதிரியான சமரசங்களை அது ஏற்கக் கூடாது என்பதில் தெளிவும் உறுதியும் தேவை. அப்புறம்.. தற்போதிருக்கும் அரசியலமைப்பை மாற்றி அமைக்க வேண்டியதன் விருப்பம் பற்றி அரசியல் அற்ற மக்களிடையே கருத்துக் கேட்பு, விரிவான சர்வே போன்றவை தேவை.
இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் விஷயம் உண்மையா? அப்படி இருப்பின் இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்!! பொதுப்பணத்தில் கை வைத்தது போதாதென்று தனிநபர்களின் அடிமடியில் நேரடியாக கை வைத்தவர்களின் கரங்களைத் துண்டிக்க வேண்டும்தானே?
http://vimarisanam.wordpress.com/2011/11/23/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/
Only capitalism will bring out the best from the people. In capitalism there will be competitors, if you dont bring out your best,then perish.
(Aero plane/Internet/Computer/PC/iphone/Windows/Linux…) all are the output of capitalism)
Socialism kills competition and our people will sleep. Eg BSNL/SBI…
We all have experienced,Indira Gandhi’s Socialism.
Now Greece, Italy countries failed because of socialism. They have too much of retirement benefits. When Govt takes care of people, they become lazy.
Simply put It is not Govt job to run business. Govt should govern and maintain law and order,reglate private players…
It is an illusion that competition will bring best from the people. Competition can induce the people how to win by hook or crook. In due course, real talent become subversive to the thugs.
The assumption of Mr.Ragu that socialism kills competition is correct but it need not make the people sleep. Mr.Ragu’s comparision of socialism with the policies Indra Gandhi, Greeceand Italy is totally untenable. They never adopted revolutionay socialist principles. They used the phrase “socialism” as catchy words to mesmerise people.
Instead, in socialism real talent is respected and this respect becomes an inducement to work. Also, such people who refuse to work, out of laziness or wicked idea in the background are punished. The exploiters make a hue and cry against this, saying that there is no freedom.
If Mr.Ragu is correct Soviet Union would not have a become super power.
திரு.அதியமான் பொதுவுடைமைக் கொள்கையின் மீது ஏன் இப்படிப்பட்ட தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் பொதுவுடைமை உற்பத்தி முறைக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ளட்டும்.
முதலாளித்துவ உற்பத்தி முறையில் என்னென்ன பொருட்களை உற்பத்தி செய்தால் இலாபம் கிடைக்குமோ அப்பொருட்களைத் தான் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் பொதுவுடைமை முறையில் என்னென்ன பொருட்கள் மக்களுக்குத் தேவையோ அவை உற்பத்தி செய்யப்படும். இன்று ஆயுதங்கள், வாகனங்கள், குளிர் சாதனங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்தால் இலாபம் கிடைக்கிறது. ஆகவே அவை உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகில் கோடிக் கணக்கான மக்கள் பசியிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டு இருக்கறார்கள். ஆகவே விவசாயமும், மரம், செடி கொடி வளர்த்தலும் மிகவும் தேவைப்படுகின்றன. ஆனால் அவற்றில் இலாபம் குறைவு ஆதலால், அத்தொழில்களில் மூலதனமும் இயற்கை மூலாதரங்களும் ஈடுபடுத்தப் படுவதில்லை. இப்பொழுது பொதுவுடைமை ஆட்சி நடந்து கொண்டிருந்தால் இயற்கை மூலாதரங்கள் ஆயுதம் மற்றும் பிற ஆடம்பரப் பொருட்களின் உற்பத்திக்கு ஈடுபடுத்தப் படாமல் விவசாயத்திலும் மரம், செடி, கொடி வளர்ப்பதிலும் ஈடுபடுத்தப் பட்டு இருக்கும்.
அதாவது உலகில் பசி, பட்டினியை ஒழித்து இருக்கலாம். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையே அமலில் இருப்பதால் இலாபம் தராத, ஆனால் மக்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான தொழிலான விவசாயத்தில் இயற்கை மூலதாரங்களை ஈடுபடுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம்.
மக்கள் பட்டினியால் மடிவதைப் பற்றிக் கவலை இல்லை என்றும் வலுத்தவன் வாழட்டும் என்றும் டார்வின் கொள்கையைத் தவறாகப் பிரயோகித்து நினைத்துக் கொண்டால் அது மிகப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பதைச் சற்று யோசித்துப் பார்ப்பது நல்லது.
இன்று முதலாளித்துவம் ஊக்குவிக்கும் தொழில்கள் அனைத்தும் புவி வெப்பத்தை உயர்த்துவதாக உள்ளன. தொடர்ந்து அவ்வழியிலேயே சென்று கொண்டிருந்தால் புவி வெப்பம் மேலும் மேலும் உயர்ந்து புவியின் அழிவிற்கு இட்டுச் செல்லும். புவியின் அழிவுப் பயணத்தை நிறுத்த வேண்டும் என்றால் இலாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதாவது முதலாளித்துவ முறையை உடனடியாகக் காவு கொடுக்க வேண்டும். இதுவரைக்கும் சென்றுள்ள அழிவுப் பாதையில் இருந்து திரும்ப வேண்டும் என்றால் புவியைக் குளிர்விக்கும் விவசாயம், மரம், செடி, கொடி வளர்த்தலில் இயற்கை மூலாதாரங்கள் ஈடு படுத்தப் படவேண்டும். இது பொதுவுடைமை முறையில் தான் முடியும். திரு.அதியமான் போன்றவர்கள் உண்மையை உணர்ந்து மனம் மாறுவது மட்டுமன்றி பிறருக்கும் எடுத்து உரைக்க வேண்டும்.
அப்படியின்றி உலகம் அழிவதைப் பற்றிக் கவலை இல்லை என்றும் முதலாளித்துவம் மடிவதை விட உலகம் அழிந்து போவதே மேல் என்றும் நினைத்தால், உலகம் அழியக் கூடாது என்று எண்ணுபவர்கள் தகுந்த முடிவை எடுக்க வேண்டும்.
நமது முதலாளித்துவ தோழர் அதியமானின் அகராதியில் அப்பாவிகள் என்றால் யார் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
இராமியா என்பவர் சோசலிசத்தில் பாலாறு தேனாறு ஓடும் என்பது போலவும், சோசலிசம் தான் உலகைக் காக்க வந்த விஷ்ணு அவதாரம் போலவும் அவர் பாட்டுக்கு பூனை போல சொல்லி விட்டுச் சென்று விட்டார். அப்படியானால் சோசலிசத்திற்கு எதிராக பெரிய பெரிய அறிவாளிகள் சொன்னது எல்லாம் பொய்யா?
ஐயா, “யாரோ“ அவர்களே, சோஷலிசத்தில் பாலாறு தேனாறு ஓடும் என்று நான் கூறவில்லை. 1930 களில் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத அம்சமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலகெங்கிலும் பசியும் பஞ்சமும் தலை விரித்து ஆடிக் கொண்டு இருந்தன. அந்நிலையில் சோஷலிசம் அமலில் இருந்த சோவியத் யூனியனில் மட்டும் மக்கள் சுபிட்சமாக வாழந்து கொண்டு இருந்தார்கள் என்று தான் கூறி இருக்கிறேன். பாலாறு தேனாறு என்பதெல்லாம் கற்பனாவாதிகளின் சொல்லாட்சிகள்.
அறிவாளிகள் என்பதனாலேயே அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. புத்தரும் ஆதி சங்கரரும் மிகப் பெரிய மேதைகள். புத்தர் அடிமைத்தனத்தை, சாதிக் கொடுமைகளை எதிர்த்தார். ஆதி சங்கரரோ தனது கூர்மைாயான அறிவுத் திறன் கொண்டு வீழ்ந்து கிடந்த வர்ணாசிரம முறையை நிமிர்த்தி வைத்து அடிமைத்தனத்திற்கும் சாதிக் கொடுமைகளுக்கும் மீண்டும் உயிர் கொடுத்தார். ஆகவே அறிவாளிகள் என்பதற்காக அவர்கள் சொன்னதெல்லாம் சரி என்று ஆகிவிடாது.
இது வரைக்கும் உழைக்கும் மக்களின் சுதந்திரத்திற்காக மட்டும் சோஷலிச அமைப்பு வேண்டும் என்று போராட வேண்டி இருந்தது. ஆனால் உலகைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் புவி வெப்ப உயர்வுப் பிரச்சினையில் இருந்து தப்ப வேண்டுமானால் அது சோஷலிச உற்பத்தி முறையினால் தான் முடியும். இது அவசரமான காரியமாகும். மாற்றுக் கருத்து என்று கூறிக் கொண்டு காலத்ததைக் கடத்திக் கொண்டு இருப்பதற்கு அவகாசம் இல்லை. உலகை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகாவாவது உடனடியாக முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுப்பதும் சோஷலிச உற்பத்தி முறையைக் கைக்கொள்வதும் மிக மிக ……. மிக அவசரமான தேவையாக இருக்கிறது. நாமோ சொற்சிலம்பம் ஆடிக் கொண்டு இருக்கிறோம்.
முதலில் வாதங்களில் பங்கு கொண்டு சர்வதேச தொழிலாளவர்கத்தின் சார்பாக கருத்துச் சொல்ல வருவதையிட்டு பெருமைப்படுகிறேன்.
தொழிலாளவர்கத்திற்கு தாய்நாடோ தந்தைநாடோ இல்லை என்கிற கால்மாக்ஸின் போதனையை ஒருவர் ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருவர் கடந்தகால வரலாற்றையும் வரப்போகும் காலங்களையும் உணரமுடியும்.
“தனியொருநாட்டில் சோசஸிசம்” மாக்ஸிய போதனையல்ல. இதை தற்காலிக தீர்வுஎன தொடங்கியவர்கள் நிரந்தர தீர்வாக்கி போல்ஷிவேக்கிகளின் வெற்றியை கூட ஓடும் ஆற்றில் கரைய விட்டு முதாலித்துவ சமுத்திரத்தில் இரண்டறக் கலக்க விட்டு விட்டார்கள்.
தொழிலாளவர்கத்திற்கு ஒருபரந்தபட்ட கட்சி தேவை என்ற கட்டுரையாளரரின் கருத்து 100 வீதமும் சரியானதே! இல்லையேல் அதிகாரத்தில் எந்த துரும்பையும் எம்மால் அசைக்க முடியாது.