Thursday, July 18, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா?

நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா?

-

நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா? “பீகார் மாநிலத்தை லல்லு பிரசாத் யாதவ் ஆண்டதால்தான் சீரழிந்து கிடந்தது. 15 ஆண்டுகளாக அவர் நேரடியாகவும், அவரது மனைவி ராப்ரி தேவி மூலமாகவும் புரிந்த கொடுங்கோலாட்சியின் மூலம் ஒற்றை மனிதராக  பீகார் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியிருங்கச் செய்தார். 2005-ல் முதல்வரான நிதீஷ் குமாரின் தலைமையிலான நிர்வாகத்தில் மாநிலம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. இந்தியாவிலேயே வளர்ச்சி வீதம் அதிகமான மாநிலமாக பீகார் மாறியிருக்கிறது….” என்றெல்லாம் பத்திரிகைகள் கொண்டாடுகின்றன. அந்த அலையில் மிதந்து 2010-ல் நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் இரண்டாவது முறையாக கூடுதல் பெரும்பான்மையுடன் முதலமைச்சரானார்.

அப்படி லல்லுவிடம் இல்லாதது, நிதீஷ் குமாரிடம் என்னதான் இருக்கிறது? அவர் கை வைத்தவுடன் பீகார் எப்படி மாறி விட்டது? அவரிடமிருந்து மற்ற மாநில முதலமைச்சர்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்? இந்த கேள்விகளுக்கு பலர் பல விதமாக விடை காண முயற்சித்தார்கள். நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்தல், ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல, சொத்து குவித்த அரசு அதிகாரிகளிடமிருந்து சொத்துக்களைப் பிடுங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்படியான ஆட்சியை நிறுவினார். ரவுடிகள், குண்டர்களின் அட்டகாசத்தை இரும்புக் கரத்துடன் ஒடுக்கி சட்ட ஒழுங்கை மேம்படுத்தினார். எனில் பீகார் எப்போது சிங்கப்பூர் போல முன்னேறிய மாநிலமாக மாறப் போகிறது என்ற ஒரே கேள்விதான் எஞ்சியிருக்கிறது

இந்த முன்னேறங்களுக்கு உண்மையில் என்ன அடிப்படை என்ற மர்மம் சமீபத்தில் வெளியானது. முதலமைச்சர் நிதீஷ் குமாரே முன் வந்து அந்த ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.

1-1-2001, 2-2-2002, 3-3-2003, 6-6-2006, 7-7-2007, 8-8-2008, 9-9-2009, 10-10-2010 என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேதிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டதுதான் அவரது ‘சாதனை’களின் ரகசியம்.

11.11.11 அன்று 11 மணி 11 நிமிடத்துக்கு தவறுகள் செய்த 11 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையைப் பிறப்பித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், 2001 முதலே தனது அரசியல் வாழ்க்கையின் பல முக்கியமான முடிவுகளை இது போன்று  வரலாற்றுச் சிறப்பு மிக்க தேதிகளில்தான் தான் எடுத்ததாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

1-1-2001, 2-2-2002, 3-3-2003, 6-6-2006, 7-7-2007, 8-8-2008, 9-9-2009, 10-10-2010 தேதிகளில் முக்கிய முடிவுகளை எடுத்து ஆவணங்களில் கையொப்பமிட்டாராம். 2004-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், 2005-ல் கையொப்பமிட பொருத்தமாக எதுவும் கிடைக்காததால் அந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இடைவெளி ஏற்பட்டு விட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் தவற விடப்பட்ட வாய்ப்பையும் பயன்படுத்தியிருந்தால் பீகார் இதற்குள் வல்லரசின் வல் மாநிலம் ஆகியிருந்திருக்கும். பாழாய்ப் போன ஜனநாயக முறைகள் அதை தவிர்த்து விட்டன.

3-3-2003ம் 1-1-2011ம் அவருக்கு மிகவும் லாபகரமான நாட்களாக அமைந்த நாட்களாம்.

நிதீஷ் குமார் 11 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கோப்பில் கையெழுத்து இட்ட அதே நேரத்தில் 11.11 மணிக்கு தீர்ஹூத் வனப்பகுதி ஆணையர் எஸ் என் ராஜூ அந்த ஊர் விளையாட்டு அரங்கத்தில் ஒரு ஆலமரக் கன்றை நட்டார். “அந்த மரக் கன்றிலிருந்து வளரும் மரம் 400 முதல் 500 ஆண்டுகள் உயிர் வாழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் நிதீஷ் குமார் கூறினார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த நாளாக அது அமைந்து விட்டது.

பீகார் மக்கள் மூச்சு விட மறந்து அற்புதங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

பீகாரின் சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி சவுபே இன்னும் ஒரு படி மேலே போய் 11.11.11 அன்று 11.11 மணிக்கு பீகாரில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் 18 வயது வரை இலவச சிகிச்சை பெறுவதற்கான சிறப்பு அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த நேரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும், திருமண நிதி உதவியும் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களாக கருதப்படும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில முதலமைச்சர்களை பின்பற்றி நிதீஷ் குமாரும் பீகாருக்கு திறமையான தலைமையை வழங்கியிருக்கிறார் என்று நம்ப இடமிருக்கிறது.

— பச்சை நிறம்தான் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு அடிப்படை என்று அடையாளம் கண்டு பச்சை நிற உடைகளை உடுத்த ஆரம்பித்து கட்சியினரையும், அரசு துறைகளையும் பச்சை நிறத்துக்கு முதலிடம் கொடுக்க வைத்து

— யானைகளுக்கு கஜபூஜை நடத்தினால் நாடு சுபிட்சம் பெறும் என்று நாடெங்கிலும் உள்ள கோயில் யானைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று யானை முகாம் நடத்தி

— அன்னதானம் அளித்தால் கடவுளரின் மனம் குளிர்ந்து மக்கள் எல்லோரும் உழைக்காமலேயே கற்பக விருட்சத்தின் கீழ் தமக்கு வேண்டியவற்றை எல்லாம் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நாடெங்கிலும் கோயில்களில் இலவசமாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்து

தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்திய புரட்சித்தலைவி அம்மாவின் உதாரணத்தையும்

— ஆட்சியைப் பிடிப்பதற்கு 13 வயது குழந்தையுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சோதிடம் பார்த்து நடந்து கொண்ட மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என் டி ராமாராவின் வழியையும்

— பல விதமான யாகங்கள், வழிபாடுகள், விரதங்கள் மூலம் தேவர்களின் ஆசீர்வாதம் பெற்று தென் மாநிலங்களில் முதன் முறையாக தனது கூட்டணி கட்சி பாஜகவை கர்நாடகாவில் ஆட்சியில் அமர்த்திய எடியூரப்பாவின் எடுத்துக்காட்டையும்

— தேய்பிறையாகப் போனதால் முதலமைச்சராக பதவி ஏற்பதையே 10 நாட்கள் தள்ளிப் போட்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் முன் உதாரணத்தையும்

கவனமாக ஆராய்ச்சி செய்து நிதீஷ் குமார் இந்த வழிமுறையை தேர்ந்தெடுத்திருப்பார் என்று நம்பத் தோன்றுகிறது.

இனிமேல் பீகாரின் முன்னேற்றத்தை ஆயிரம் லாலுக்கள் வந்தாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது, இன்னும் 12-12-2012 என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தேதி வரவிருக்கிறது. அதையும் பயன்படுத்திக் கொண்டு நிதீஷ் குமார் பீகாரை உலகிலேயே முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டி விடுவார் என்று உறுதியாக நம்பலாம்.

ஒரு மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நடத்திக் காட்டுவது என்பது கடைசியில் ஜோசியத்தின் கையில்தான் இருக்கிறது என்றான பிறகு இனி இந்தியாவுக்கு ஏது தோல்வி!

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 1. The latest data released by the Central Statistical Organization (CSO) shows that Bihar has grown at a stunning rate of 11.03% in the last five years. The most startling aspect is that, it is the second fastest growing state in India, just a shade behind Gujarat. Not surprisingly, it was only five years back that Nitish Kumar took over as the chief minister of Bihar after fifteen years of Lalu-Rabri jungle raja.

  So, what was the secret formula of Nitish Kumar that turned the Bihar story dramatically?

  The formula was simple- he worked on the basics. He focussed on two key areas- the law & order situation & infrastructure.

  The first and foremost challenge for Nitish was to restore the law of the land. During the Lalu-Rabri rule Bihar had become synonymous with kidnappings & killings. Eradicating this disease was not an easy task for Kumar. But his tight grip on the police departement ensured that the law of the land was gradually implemented. Speedy trial of criminal cases along with selection of police officers on merit instilled confidence in the public. The government also recruited 10,000 constables to bolster the security situation. And Kumar is confident that the perception of Bihar is finally changing with people recognizing that Bihar is a safe place to visit and do business. Many students and businessmen had left the state during the Lalu & Rabri’s tenure.

  Infrastructure was the other key area which saw a drastic expedition in the last five years. If the year 2004-05, saw the construction of a merly 318 kilometers of road, in 2008-09 nearly 2500 kilometers of road was constructed. The state saw construction on 316 flyovers between 1975 and 2004 but from the time Nitish took over, 400 flyovers have been constructed.

  The biggest testimony of these developments is the fact that the number of foreign tourists visiting the state has shot up from 95,000 in 2006 to 3.56 lakh in 2008.

  The other major achievement of Kumar was embarking on the mission to empower the women of the state. One of the first moves after the government took over was to reserve 50 per cent seats for women in urban local bodies and panchayats across the state. The government also started programs to encourage the girl students to go to school. One such scheme started by the government provides free uniform and cycle to girl students above class 8th. The drop out rate of girl students has come down from 25 lakh to 10 lakh. Kumar is now planning to extend the same scheme for boys.

  • அதி! தமிழ் பதிப்பு வலைதளத்தில் தமிழில் பின்னூட்டமிடுவதே நாகரிகமானது. முதலில் அடிப்படையானவற்றை கற்றுக்கொள்ளுங்கள்! அப்புறம் ஆயிரம் விவாதிக்கலாம். தயவுசெய்து இந்த விசயத்தில் ஈகோ வேண்டாம்.

   • பாலு,
    நண்பர் அதியமானின் நிதிசு குறித்த இந்த ஆங்கில துதி அவரது சொந்த சரக்கல்ல.இந்த சுட்டியிலிருந்து நகல் எடுத்து போட்டிருக்கிறார்.இவ்வளவு பெரிய கட்டுரையை தமிழில் மொழிமாற்றம் செய்வது சிரமம் என்று அப்படியே போட்டுவிட்டார் போலும்.என்ன,துதி பாடும் ஆர்வத்தில் எங்கிருந்து எடுத்தது என்பதை தெரிவிக்கும் நேர்மையை தொலைத்து விட்டார்.

    http://www.behindindia.com/india-news-stories/article/nitish-kumar-12-01-10.html

    • hard data and arguments எடுத்து இங்கு இட்டால், அதற்க்கு பெயர் ’துதிபாடாலா’ ? இது தான் உங்க ‘விவாத’ முறையா ? மார்க்சியர்கள் ஏன் உருப்புடவதில்லை என்று இப்ப புரியுது. சுட்டி அளித்தால் அதை படிக்காமலே கிண்டல் செய்யும் ‘நிபுணர்கள்’ நிறைந்த இடமாச்சே இது !! :))

     சரி, மேலே உள்ள தகவல்கள் சரியா அல்லது பொய்களா ? அல்லது நிதிஸ் குமார் ஆட்சிக்கு முன்பு இருந்த லாலுவின் ஆட்சியே பரவாயில்லையா ? நிதிஸ் குமார் ஆட்சியில் ஒன்றும் பாலும் தேனும் ஓடவில்லை. ஆனால் முன்பை விட நிலைமை பரவாயில்லை என்பதே ஒப்பீடு. அதை தர்க்க ரீதியாக விவாதிக்க முயலாமல், ‘துதி பாடுதல்’ என்றெல்லாம் பேசும் உங்களை போய் ’சீரியசா’ எடுத்துக்கிட்டு பேசுவது தான் என் தவறு.

     • அதியமான்,
      பீகார் முதல்வர் நிதிசுகுமார் ஏனைய இந்திய மாநில முதல்வர்களிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டவர் அல்லர். பா.ச.க கும்பல் தேர்ந்தெடுத்த விபீடணன் நிதிசுகுமார் என்பதால் அவருக்கு மேல்சாதி ஊடகங்கள் ஒளிவட்டம் போட்டு விடுவதே ”திறமையான முதல்வர்” பரப்புரைகள் எல்லாம்.

      \\hard data and arguments எடுத்து இங்கு இட்டால், அதற்க்கு பெயர் ’துதிபாடாலா’ ? இது தான் உங்க ‘விவாத’ முறையா ? //

      புள்ளிவிவரங்கள் குறித்து அந்த துறையினரே சொல்லும் நகைச்சுவை ஒன்று.

      ”பொய்கள் மூன்று வகைப்படும்.அவை பொய்,முழுப்பொய்,புள்ளிவிவரம்”

      வெறுமனே இணையத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல் எதார்த்த உலகிலும் சாதாரண மக்களுடன் பேசி பழகி பாருங்கள்.

      வட இந்திய நகரங்கள் ஏன் இப்போது தென்னிந்திய நகரங்களிலும் சுமை தூக்கும் பணியில் பீகார் மக்களே மிகுந்து காணப்படுகிறார்கள.நிதிசு ஆட்சியிலும் அது மாறிவிடவில்லை. அது ஏன் என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா.

      தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் வட இந்திய கூலித்தொழிலாளர்கள் [அவர்களில் கணிசமானோர் பீகாரிகள்] வந்து குவிகிறார்களே அது ஏன் என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா.

      சென்னை,கோவை,மதுரை என தமிழக நகரங்களுக்கு வேலை தேடிவரும் பீகாரிகளின் எண்ணிக்கை நிதீசின் பொற்காலத்திலும் கூடிக்கொண்டே போகிறதே அது ஏன் என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா.

      ஒரு ரூபாய் அரிசியை [இப்போது இலவசம்] கிலோ ஐந்து ரூபாய்க்கு வாங்கி மூட்டை கட்டிக்கொண்டு அந்த பீகார் தொழிலாளிகள் ஊருக்கு போய் கொடுத்துவிட்டு வருவது உங்களுக்கு தெரியுமா.நமது பார்வையில் ”நாத்தம்”புடிச்ச அந்த அரிசி பீகார் மக்களுக்கு அமிர்தமாய் இனிப்பது ஏன்.அப்படியானால் அங்கு வறுமையின் கொடுமை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

      அங்கு நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையோ,சட்டம் ஒழுங்கோ லாலுவின் ”காட்டாட்சி”காலத்தை விட மேம்பட்டு விடவில்லை என்பதை இங்கு வந்து செருப்பு தைப்பதிலும்,பயணப் பைகள் தைப்பதிலும்.மேம்பாலம் கட்டுவதிலும், பெருநகர தொடர்வண்டிக்கு குழி தோண்டுவதிலும் பழைய மகாபலிபுரம் சாலை நெடுக கட்டுமானப் பணிகளிலும் குருதி சிந்த பாடுபடும் அந்த பீகார் மக்களிடமே பேசினால் தெரிந்து கொள்ளலாம்.

      இல்லை.அதெல்லாம் முடியாது.உட்கார்ந்த இடத்தில் இணையத்தில் காட்டினால்தான் நம்புவேன் என்று சொல்வீர்களேயானால் கீழ்காணும் சுட்டிகளுக்கு போய் தெரிந்து கொள்ளலாம்.

      http://kafila.org/2011/10/31/crime-redefined-in-bihar-ibne-ali/

      http://www.bihartimes.in/viewersvoice/2011/Aug/vv288.html

      http://articles.timesofindia.indiatimes.com/2007-01-20/patna/27879034_1_political-conspiracy-kidnapping-intelligence-wing

     • //தகவல்கள் சரியா அல்லது பொய்களா ? அல்லது நிதிஸ் குமார் ஆட்சிக்கு முன்பு இருந்த லாலுவின் ஆட்சியே பரவாயில்லையா ? நிதிஸ் குமார் ஆட்சியில் ஒன்றும் பாலும் தேனும் ஓடவில்லை. ஆனால் முன்பை விட நிலைமை பரவாயில்லை என்பதே ஒப்பீடு. அதை தர்க்க ரீதியாக விவாதிக்க முயலாமல், ‘துதி பாடுதல்’ என்றெல்லாம் பேசும் உங்களை போய் ’சீரியசா’ எடுத்துக்கிட்டு பேசுவது தான் என் தவறு.//
      சிப்பு வருது.சிப்பு! சம்மந்தமே இல்லாமல் ஒப்பிட சொல்கிறீர்கள்.இதற்கு வேற தர்க்கம் அது இது இன்னு வேற பேசறீங்க பின்ன சிப்பு வராதா சிப்பு? வாழைப்பழத்தை விதையிலாக் கனிக்கு உதாரணமாக சொல்லலாம் என்பத ஒரு செய்தி.இதை நீங்கள் ஏற்க மறுத்து இல்லை இல்லை வாழைப்பழத்தில் விதை இருக்கிறது என்கிறீர்கள்.அதற்கு நான் பதிலாக அய்யா, விதை கண்ணுக்கு தென்பட்டாலும் அதனை வைத்து இனப்பெருக்கம் செய்யமுடியாது அதனால அது விதையிலா கனிக்கு உதாரணமாக சொல்லலாம் என்கிறேன்.ஆனால் நீங்கள் மீண்டும் வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு விதையிருக்கிறதா இல்லையா? என்று கேட்டுக் கொண்டே இந்த தர்க்கத்துக்கு பதில் சொல்லுங்க என செந்தில் கவுண்டமணி பாணியில கேள்வி எழுப்பினா அதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கமுடியுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்? நீங்கள் வெறும் அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு நெல்லிக்கனி சாப்பிட்ட நெனப்புலயிருந்தால்… முதல்ல அதுலயிருந்து வெளியில வாங்க.

  • நிதிஷ்குமாரை தினத்தந்தி முதல் Forbes(கார்ப்பரேட்)பத்திரிக்கை வரை man of the year என்று கொண்டாடுவதன் ரகசியம் அவர் (மோடி போலவே)கார்ப்பரேட் வளர்ச்சிக்கு மடை திறந்து விட்டு, மக்களை நன்றாக கொள்ளையடிக்க விடுவதுதான். கீழே இருக்கும் சுட்டியை படிங்க..
   http://www.cpiml.org/liberation/year_2010/march_10/commentary3.html
   கட்டுரையிலிருந்து சில பகுதிகள்..
   >>
   Coming to the sectoral picture of the Bihar economy, agriculture has reportedly registered an unbelievably high growth rate of 9 per cent per annum average between 2004–05 to 2008–09, with agricultural NSDP increasing from Rs. 18,155 crore in 2004–05 to Rs. 26,399 crore in 2008–09. This 9 per cent growth rate claim certainly does not tally with the stagnant and crisis-ridden agricultural scene on the ground. Once again, it is a case of statistical illusion. Actually, the agricultural NSDP in Bihar in 2005–06 at Rs. 17,812 crore was lower than Rs. 18,735 in 2000–01 and the intervening years witnessed virtual stagnation in Bihar agriculture. In view of this prolonged stagnation, recovery in 2006–07 which saw an agricultural NSDP of Rs. 23,700 crore marked a sharp increase in growth rate in 2006–07 over 2005–06, something like 29% in a single year!!! This jacked up the overall trend growth rate per annum in the last five years.

   The secret of high growth in Bihar during the Nitish period lies in the exceptionally high growth in construction. The construction sector in Bihar grew from Rs. 3766 crore in 2004–05 to Rs. 12,033 crore in 2008–09, almost three-and-a-half-fold increase. This jacked up the overall growth rate to some extent.
   What explains this major stride in construction growth in Bihar? Housing boom? No, not at all. Bihar records a pathetic figure even in Indira Awas Yojana (state-subsidised housing with Central assistance), and with only 10% urbanization we can hardly talk about any major boom in urban housing. What then is the secret behind this construction growth in Bihar? Actually, the substantial growth in Bihar NSDP is accounted for by public investment in which the Central Plan assistance is a very major component. Central assistance to State Plans as well as Central Plan projects in Bihar has nearly tripled during the Nitish period and averages around Rs. 6000 crore per annum (Rs. 30,000 crore in the last five years).

   Along with construction, Bihar has witnessed another boom in recent years – liquor boom despite continuing popular protests, especially by rural women. Governments however continue to justify the liquor boom by pointing to growing revenues from increased excise earning. But in Bihar, the excise minister has raised the issue of a massive excise scam and instead of appointing a commission of inquiry into the alleged scam, Nitish Kumar has thrown the minister out of the cabinet. So much for his rhetoric of transparency and good governance !
   >>
   அத்தோடு அந்தப் புள்ளிவிவரத் தகவல்கள்களின் நம்பகத்தன்மை பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பின்வரும் சுட்டியில் உள்ள கட்டுரை நிதீஷ்குமாரின் மிகைப்படுத்தப்படும் வளர்ச்சியைப் பற்றி விரிவாக ஆய்வு செய்கிறது.
   http://www.indiaenvironmentportal.org.in/files/Bihar_0.pdf
   கட்டுரையிலிருந்து..
   >>
   2 The Controversies around DataThe first response to the media upsurge around the CSO figures was in the form of scepticism about the reliability of the data on Bihar. The CSO disowned responsibility for the data. The Chief Statistician of India, clarified to the media in January 2010 that the data showing 11.03% growth rate between 2004-05 and 2008-09 is based on information provided by the state government
   itself and “it would not be correct to attribute it to the CSO…because CSO does not provide state GDP data”… “This data is not authenticated by the CSO”. The Government of Bihar, on the other hand, attributed the data to the CSO.
   ….

   the debate around the “construction-led-growth-miracle under
   the NDA government” hypothesis in Bihar is misplaced. The obsession of the neoliberal mainstream with “law and order” and the neo-Keynesian’s with “development expenditure” has led to flawed propositions and consequent neglect of the most important driver of Bihar’s economy in the last decade – trade.
   >>

 2. பீகாரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை வினவு தோழர்கள் விளக்க வேண்டும்…

 3. நிதஷ்குமாரே… அதிஷ்ட நாட்களால்தான் பொழப்பு ஓட்டி… ஊரை ஏமாற்றுவதாக சொல்லும் போது… நண்பர் அதியமான் நிதிஷுக்கு புதிய கோனார் உரை எழுதுகிறார்…

  இதே போல் புரட்சி தலைவி ஆட்சியின் சாதனைகளுக்கு இன்னொரு தென்றல் உரை எழுத வேண்டும் என நண்பர் அதியமானை அன்புடன் கேட்டு கொள்கிறேன்…

  அதியமான் இருக்கும் வரை நிதிஷ், ஜெ போன்றவர்களுக்கு வாழ்வுதான்…

 4. அடடா,எனக்குஇத்தனை நாளும் தெரியாம போச்சே! அண்ணன் அதியமான் எழுதும் கோனார் உரையை தமிழில் எழுதினால் நானும் ஓமா,சாரி ஆமா போடுவேன்ல

 5. அண்ணாச்சி அதியமான். எதச்சொன்னாலும் இடும்புக்குன்னே மாத்தி மாத்தி பேசுதீயளே. பொறப்பிலேயே இப்படியா, இல்ல முதலாளியானவுடனே இப்பிடி மாறுனீயளா.

 6. அதியமானோடு பலவகைகளில் முரண்பாடு இருந்தாலும், இங்கு அவரை நக்கலடிப்பது சரியாகப் படவில்லை. நிதிஷின் மூடநம்பிக்கையை விமர்சிப்பது தவறல்ல. அதே சமயம் அதியமான் கொடுத்திருக்கும் டேட்டா அடிப்படையில் விவாதிக்காமல் வெறுமனே நக்கலடிப்பது எவ்வகையிலும் பயனற்ற விஷயம்.

 7. உலகத்துல எவனும் நல்லது பனிட கூடாதே. விடுங்கப்பா மக்களுக்கு நல்லது செய்யணும் நு உங்கள தவிர வேற எவனுமே நெனைக்க கூடாதா??????

 8. ஏற்கனவே சாதகம் ஜோசியத்தில் ழூழ்கிக்கிடக்கின்ற மக்கள் மத்தியிள் நாட்டு முதலமச்சர்களே இப்படி சாதகம் ஜோசியம் பார்த்து ஆட்சி நடத்தினா நாட்டு மக்கள் உறுப்புட்டமாதிரிதான் இப்படி சாதகம் ஜோசியம் பார்த்தும்கூட அந்த நாட்டு வறுமைகள் பிரச்சனைகலைக் தீற்க முடியவில்லையே.
  அப்போ வேலைஇல்லா தின்டாட்டத்தை போக்க அரசு வேலைன்னு கிழி கூன்டும் பஞ்சாஞ்கமும் அரசே இலவசமாக கொடக்குமோ !

 9. அவரு ஜோசியம் பாத்தாரோ காசிய பாத்தாரோ..நெஜமாவே முன்னேற்றம் ஏற்பட்டதா இல்லயா என்பதை விவாதிப்பதை விட்டுவிட்டு அவர் ஜோசியம் பார்த்தார்.. அதனால ஜோசியம் பார்க்காம ஊழல் பண்ணின லாலுவே இதுக்கு மேல்னு சொல்ல வந்தீங்கனா அதவிட சிறுபிள்ளைத்தனம் எதுவும் இல்லை.. இப்போ உங்க பிரச்சனை என்ன? அவர் வைத்துள்ள ஜோசிய நம்பிக்கை அவரது தனிப்பட்ட விஷயம்.. முஸ்லீம் நாடுகளில் நோன்பு மாதத்தில் சூரிய அஸ்தமனம் வரை எந்த மதக்காரர்களும் உணவகங்களை திறக்கக் கூடாது என்பது போன்று தன் நம்பிக்கைகளை பிறர் மீதா திணித்தார் நிதீஷ் குமார்?
  சோனி நிறுவனம் Walkman என்ற கருவியை தயாரித்து விற்றபோது அதன் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிக்க முடியாத ஐரோப்பிய நாடுகள் அதன் பெயர் ஆங்கில இலக்கணப் படி தவறு என்று குறை கூறினவாம். ஏனெனில் ஜப்பானிய பொருளான அதை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற வெறி. உங்கள் பதிவிலும் அதே வெறி தென்படுகிறது.

  • ஒரு நாட்டின் அல்லது ஊரின் முன்னேற்றமும் வளர்ச்சியும் முதலமைச்சரை மாற்றி விடுவதால் மட்டும் மேம்பட்டு விடுவதில்லை என்பதுதான் பதிவின் நோக்கம் என்று கருதுகிறேன்.

   பீகாரில் ஜகன்னாத் மிஸ்ரா காங்கிரசு ஆட்சியில் இருந்த போதும், லாலு ஆட்சியில் இருந்த போதும், இப்போது நிதீஷ் குமார் இருக்கும் போதும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காமல் அடிப்படை மாற்றங்களை கொண்டு வர முடியாது.

   நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது முதன் முதலாக பாஜக மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. துக்ளக் சோ சொன்ன ‘இராம இராஜ்யம் வந்து விட்டது’ என்று எனக்கு பரபரப்பாக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த மாநிலங்களின் சாதனைகள் பற்றிய கட்டுரைகளை தேடித்தேடிப் படித்துப் பார்த்தேன். காங்கிரசு போய் பாஜக வந்து விட்டதால் எதுவும் மாறி விடப் போவதில்லை என்ற உண்மை உறைத்தது அப்போது.

   நிதீஷ் குமார் சீரழிந்து கிடக்கும் அரசு நிர்வாகத்தில் சில மாறுதல்களை கொண்டு வந்திருக்கிறார் என்பது உண்மை என்றே தோன்றுகிறது. ஆனால், அது புற்று நோய்க்கு ஆஸ்பிரின் போட்டுக் கொள்வதை போன்ற மாற்றம்தான். உண்மையான மாற்றத்துக்கு கதிரியக்க சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவை. அது வரை பத்திரிகைகளின் பில்ட் அப்பில் மயங்கி இருக்க வேண்டியதில்லை.

   சென்னையில் பணி புரியும் பீகார் தொழிலாளர்களுடனும் பீகாருக்கே நேரில் போய் பார்த்தும் நிலவரம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 10. முதலாளி வர்கத்தால் பாதுகாக்கப்படும் எந்த அரசுமே மக்கள் நலனுக்காக பாடுபடுவதில்லை. பீஹாரில் இப்போது பிச்சைக்காரர்களோ, விலைமாதர்களோ இல்லையா? அங்கே தொழிலாளர்கள் நலன் எப்படி இருக்கிறது?

  மனிதன் அவர்களே – ஜோசிய நம்பிக்கை நிதீஷ்-ன் தனிப்பட்ட விஷயம் எப்போது ஆகும்? அவர் எந்த பதவியிலும் இல்லாமல் இருக்கும்போது தான். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் போது அந்த மூட நம்பிக்கை மற்ற சில பேருக்கும் தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதனாக இருக்கும்போது சாய்பாபா கால்களின் அருகில் உட்கார்ந்தால் யாருக்க்கென்ன? ஆனாய் ஒரு ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது அம்மாதிரி செயல்கள் கூடாது.

  • ஆமாம், 13 வயது குழந்தை இல்ல. ஆந்திர முதல்வரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய வயதுதான் . உங்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை இருந்தால் தெரியும்.

 11. பொது வாழ்க்கைக்கு வந்துவிடும் எந்நபரின் தனிப்பட்ட விருப்பமும் வீட்டின் நாலு சுவருக்குள் அடங்கிவிடவேண்டும். அவ்வாறு இல்லையேல் பொது வாழ்க்கைக்கு வரக்கூடாது. ஜோசியத்தை தன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியதாக நிதிஷ் அறிவிக்கிறார். இது தவறுதானே?

  பல ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷனில் ஒரு நாடகம் பார்த்தேன். நீதிபதியாக வரும் டெல்லி கணேஷ் எந்தப் பொது நிகழ்ச்சிக்கோ, தனியார் நிகச்சிக்கோ விருந்தினராக செல்ல மாட்டார். யார் வந்து அழைத்தாலும் மறுத்து விடுவார். அதற்கு அவர் கூறும் காரணம் : “நான் நீதிபதி. சமூக+தனிநபர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அதன் நடத்துனருடனோ, பங்கேற்பவர்களுடனோ தொடர்பு ஏற்படும். என்னுடன் நட்பு பாராட்ட முயற்சிப்பார்கள். அவர்களுக்கு நான் இசைந்தால், அதுவே நாளை அவர்கள் ஏதேனும் வழக்கில் சிக்கும்போது அவர்களுக்கு சாதகமாக செயல்படும்படி ஆகிவிடும்.”

  நிதிஷின் ஒவ்வொரு நடவடிக்கையும் பலரிடம் நேரடியாகச் சென்றடையும் வாய்ப்புண்டு. ஏற்கெனவே, கல்வியறிவில் பின் தங்கி அறியாமையில் உழலும் மக்களுக்கு இது தவறான செய்தியை அளிக்கக் கூடும்.

 12. நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா பார்த்தால் அது “மார்க்ஸ்-ஸ்டாலின் – லெனின்” அக்மார்க் ஜோஸியம். நிதிஷ் குமார் பார்ப்பதெல்லாம் ஹிந்துத்வா ஜோஸியம். வினவு எதிப்பதற்கு இது போதாதா?

  • தலிவரே, நீங்க நம்ம முதலாளி அதியமானோட தம்பி சின்ன முதலாளிங்களா? நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா ஜோசியம் பார்த்து கையெழுத்துப் போட்டு நாட்டை முன்னேற்றிவருவதாக எங்கேயாவது இருந்து ஆதாரம் காட்டமுடியுமா? அண்ணன் அதியமானை கேளுங்க உடனே ஒரு சுட்டி தருவார்.ஓடுங்க ஓடுங்க!

 13. ஆயிரம் முறை இங்கே வந்து உளறி கொட்டி விட்டு ஆப்பு வாங்கி போனாலும் விட்டதை பிடிக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் வந்து களம் இறங்கி போராடும் அதியமான் அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

 14. திப்பு அவர்களின் கருத்து மிகவும் சரியானதே! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மட்டும் சுமார் 5000 க்கும் மேற்ப்பட்ட பிகாரிகள் வேலை செய்கிறார்கள். ஒவ்வருவருக்கும் சம்பளம் 4000 ரூபாய். (fixed) தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் வளைகுடா நாடுகளில் 4000 ரியால் என்பது பெரிய விஷயமோ. பிகாரிகளுடைய இந்த சம்பளம் அவர்கள் ஊரில் 4000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அங்குள்ள மக்களின் தரம் இதிலிருந்தே புரிகிறது. ஆனால் இங்கே வேலைக்கு வருபவர்களில் 90 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள்.

 15. கொஞ்ச நாள் மின்னாடி வரைக்கும் எடியூரப்பா கர்நாடகாவை இப்படி தான் பரிபாலனம் செய்து வந்தார் உங்கள மாதிரி ஆட்கள் கண் பட்டதோ இப்போ கொஞ்சம் ப்ராப்ளம் சீக்கிரம் பாருங்கோ பாலும் தேனும் நிஜமாவே ஒடப்போறதா இல்லையான்ட்டு.நல்லது நடந்தா பாராட்டுங்கோ யார் செஞ்சா என்ன அனுபவிக்கறது எல்லாம் உங்களவாதானே.பிராமணாள் மூணு சதம் தானே நாட்ல இருக்கா?…..இப்படி என் தாத்தா சொல்றார் சரியான்னு சொல்லுங்கோ.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க