பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.சார்பாக 22.11.2011 அன்று காலை 10 மணியளவில் ரயில்வே ஜங்சன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
முதலில் ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை கண்டித்து விண்ணதிர முழக்கமிடப்பட்டது. பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் தலைமை வகித்தார். அடுத்த நிகழ்வாக ஒரு சிறு நாடகம். ஜெயலலிதா வேடமணிந்து வந்த பெண் தோழர் ” நான் தான் ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வர், விலைவாசி ஏற்றம் கடுமையாகத்தான் இருக்கும், மருந்து கசப்பாகத்தான் இருக்கும், பழகிக்கொள்ளுங்கள்” என்று கூறியவுடன் பொதுமக்கள் அவரை நோக்கி வந்து “உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதுக்கு இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ! உனக்கெல்லாம் நாலு சாத்து வச்சாதான் சரிபடும்” என்று கூறிக்கொண்டே தாக்க ஆரம்பித்தனர்.
இந்த காட்சியை கவனித்துக்கொண்டிருந்த காவல்துறையினர் கூட்டத்தினுள் புகுந்து “ஆர்ப்பாட்டத்தை உடனே நிறுத்துங்கள் உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம்” என்று மிரட்ட தோழர்கள் “அனுமதி பெற்றுத்தானே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம், ஏன் கைது செய்கிறீர்கள்?” என கேட்க ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை போல் வேடமணிந்து அவரை தாக்கி அவமானப் படுத்தியதுதான் தவறு என்று அழாத குறையாக விளக்கம் சொன்னது போலீசு.
தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் முற்றி இறுதியில் மூன்று வேன்களும் 50க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு 7 குழந்தைகள், பெண்கள் உட்பட 70பேரை கைது செய்தனர்.
அன்று மாலையே அதில் பத்து பேரைத் தவிர மற்றவர் அனைவரும் 60 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்.
பாசிச ஜெயாவின் விலையேற்ற அறிவிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதைக்கூட போலீசு விரும்பவில்லை. அதிலும் ஜெயாவின் வேடமணிந்து நடித்ததை ஏதோ மாபெரும் தீவிரவாத நடவடிக்கை போல சித்தரித்து கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீசு.
பேயாட்சி நடந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது பாசிச ஜெயாவின் ஆட்சிக்கு பொருத்தமாகவே இருக்கிறது. எனினும் புரட்சிகர அமைப்புகள் பேயாட்சியை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள். சிறை, மிரட்டலெல்லாம் அவர்களை அச்சுறுத்தாது. தற்போது திருச்சி சிறையில் சிறைவாசிகள் மத்தியில் பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தி தோழர்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
இதற்கு காவல் துறை என்ன செய்யும்? ஒருவேளை வழியிருந்தால் செவ்வாய் கிரகத்துக்கு நாடு கடத்துவார்களோ?
_____________________________________________________________
– மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி
______________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்:
- விலையேற்றம்: பாசிச ஜெயாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
- பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!
- மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!
- ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”
- இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !
- ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!
- ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”
- ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!
- சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!
செம காமெடி!!!!!. உன்மையாகவே அடித்திருந்தாலும் ஆச்சரியமில்லை. மக்கள் கடுப்புல தான் இருக்காங்க. போட்டோவ பார்த்தா சிரிக்காம இருக்க முடியல , ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஓவர்தான்.
முதலில் ஜெ“ வைத்தான் நாம் ஒன்றாகக்கூடி செவ்வாய் கிரகத்துக்கு நாடு கடத்த வேண்டும்
நாம் நேரிலேயே அவரை அடிக்க வேண்டியுள்ளது…..
ஜெயலலிதா பஸ் கட்டனம் பால் விலை ஏற்றியது ஒரு வகையில் நல்லதே.
அப்போழுதுதான் ஜெயலலிதாவின் பாசிச ஆச்சியையும் போலீஸ் அடக்குமுறையையும் மக்கள் வேகமாக உனர்ந்து கொள்வார்கள். 66 கோடி சொத்து குவிப்பு ( நுதன திருட்டு)
சமச்சீர் கல்வியை முடக்க விரித்த வளை, பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு. போலிஸ்க்கு பாராட்டு .போன்ற செயல்களை தளமை ஏற்று நடத்திய பாசிச ஜெயலலிதாவுக்கு ஏக போக பாதுகாப்பு.
அடிப்படை கல்விக்கான போராட்டம், மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கக்கூடிய அத்தியவாசிய பொருள்களின் விளை ஏற்றத்தை கன்டித்து சட்டப்படி உரிமைக்காக போராடினால். அடித்து.உதைத்து. கைது. சிறை இப்பவாவது புரிந்துகொள்ளட்டும் இந்த மக்கள் !
U correctly said…
[…] நன்றி : வினவு […]
அடி வாங்கின ஜெயலலிதாவையும் கைது செய்திருப்பார்களா போலீசு? தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தோழர்களே ! போராட்டம் வெல்லட்டும் . இன்னும் நான்கரை ஆண்டுகள் எப்படி கழியப்போகிறதோ என்கிற பீதிதான் மக்களுக்கு.
congratulations for comrades!
எல்லா இடங்களிலும் சம்மன் இல்லாமல் ஆஜார் ஆகும் நண்பர் அதியமான்… இந்த இடத்திற்கு எத்தனை முறை சம்மன் அனுப்பினாலும்… அவருக்கு இஷ்ட தலைவர் ஜெவை போலவே… வராமல் இருந்து விடுவார்…
எத்தனை முறை தெளிவுபடுத்தினாலும், உறைக்காத ‘நண்பர்’ தமிழ்குரலின் ‘பகுத்தறிவை’ கண்டால் பெரியார் என்ன கருதியிருப்பார் ? எல்லா பதிவுகளிலும் கருத்து கந்தசாமியாக செயல்பட முடியாது. அல்லது உடன் படும் விசியங்களில் பின்னூட்டம் இட தேவையில்லை. ஜெயலலிதா சகிப்பத்ன்மை இல்லாத ஃபாசிஸ்ட் போல் பல விசியங்களில் செயல்படுகிறார் என்பதில் மாற்றுகருத்து இல்லையே ! கருத்து சுதந்திரம் பற்றி லிபர்ட்டேரியன்களிடம் சொல்லத் தேவையில்லை.
//அவருக்கு இஷ்ட தலைவர் ஜெவை போலவே… வராமல் இருந்து விடுவார்…///
எனக்கு இஸ்ட தெய்வம் எல்லாம் இல்லை என்று எத்தன தடவ சொன்னாலும் உம் மரமண்டையில் ஏறாது தான். அறிவு கெட்டதனமாகவே தொடர்ந்து பேசும் உம்மை பகுத்தறிவுவாதி என்று வேறு சொல்லிக்கொள்கீரீர்.
நான் என்னை பகுத்தறிவுவாதி என அறிவித்து கொண்டது இல்லையே… நீங்கள் என்னை எப்படி மர மண்டை என சொன்னாலும் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை…
இதன் மூலம் ஒரு உண்மை தெரிவது… உங்களுக்கு உடன்பாடு இருக்கும் போது உங்கள் பாணியில் எதுவும் சொல்ல மாட்டீர்கள் என்பதே… மகிழ்ச்சியான ஒன்று…
மற்றபடி எனது தவறான புரிந்தலுக்கு மன்னிக்கவும்… உங்களது சகவாசம் அப்படி இருப்பதால் தவறாக பார்க்க வேண்டியதாகி விட்டது… பனை மரத்திற்கு கீழ் நின்று என்ன குடித்தாலும் கள் ஆகாவே மக்களுக்கு தோன்றும்… அதே போல் பார்ப்பனீயத்தையும், வர்ணாசிரமத்தையும், மனுவையும் சரி என சொல்லி வடகலை ஐயங்கார் என்பதில் பெருமிதமும் பேரானாந்தமும் கொள்ளும் டோண்டு அவர்களுடன் உடன்பாடாக இருப்பதால்… அவருக்கு வேண்டிய ஜெ… மோடி… பாஜக… சோ… யூதர்கள், அமெரிக்கா போன்றவை உங்களுக்கும் உடன்பாடாக இருக்குமோ எனும் சந்தேகம்தான்… மேலே குறிபிட்ட அத்துனை பாசிச ஜந்துக்களில் உங்களுக்கு எது பிடிக்கும்… பிடிக்காது என்பதை நேரில் தெரிந்து கொள்கிறேன்…
நானும் டோண்டுவோடு பேசி இருக்கிறேன்… பார்ப்பனீயம்… அமெரிக்கா… மோடி… ஜெ… இவற்றை எதிர்த்தே பேசி இருக்கிறேன்…
ஏன் இப்படி டென்சன் ஆகிறீர்கள்… உடல் நலத்திற்கு நல்லதில்லையே…
//எல்லா இடங்களிலும் சம்மன் இல்லாமல் ஆஜார் ஆகும் நண்பர் அதியமான்… இந்த இடத்திற்கு எத்தனை முறை சம்மன் அனுப்பினாலும்…///
தமிழ்குரல்,
இது என்ன உமது சொந்த தர்பார் அல்லது கோர்டா ? வினவு தளத்தில் யார் வேண்டுமானாலும், எந்த பதிவிலும் பின்னூட்டம் இடலாம் அல்லது இடாமலும் இருக்கலாம். ஆனால் மேற்படி உமது சொற்கள் உமது ஆணவத்தை, அதிகார போதையை தான் காட்டுகிறது. சம்மன் போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமலே பேசுவது மடைமை.
கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் நண்பர்களாகவே இருக்க முடியாதா என்ன ? 5 வருடங்களுகு முன்பு உம்மை போலவே ‘பெரியாரிஸ்ட்’ என்று தன்னை கருதிக்கொண்ட மலேசியா மூர்த்தி என்ற அயோக்கியன், போலி வலைமனைகளை உருவாக்கி, டோண்டு போன்றவர்களுக்கு செய்த கொடுமை பற்றி ஏதாவ்து தெரியுமா ? அன்று டோண்டுவின் ‘நண்பர்கள்’ எல்லோருக்கும் பெரிய சிக்கல். பிறகு நண்பர் செந்தழல் ரவி செய்த சாதூர்யமான முயற்சியால், 2008இல் அவன், சென்னை சைபர் க்ரைம் பிரிவில் சிக்கி, முடக்கிவைக்கப்படான்.
இந்துத்வர்கள், இஸ்லாமியாவாதிகள், மார்க்சியர்கள், பெரியாரிஸ்டுகள், தமிழ் தேசியவாதிகள், முதலாளித்துவவாதிகள் என்று பல தரப்பிலும் எமக்கு நல்ல நண்பர்கள் உண்டு. பல விசியங்களில் பலருடன் கருத்து வேறுபாடுகள் உண்டு. அது வேறு விசியம். இனிமேல் விசியத்தை மட்டும் பேசவும். தனி மனித விமர்சனங்கள், தாக்குதல்களை தவிர்க்கவும்.
கட்டண உயர்வு பற்றி… முதலாளிதுவ ஆதரவாளரான உங்களது நிலைபாடு பற்றி அறிவே இங்கு அழைத்தேன்… பல பதிவுகளில் அதியமான் வர மாட்டாரா என கேட்டதுண்டு… அங்கெல்லாம் நீங்கள் வந்து போவதில்லை…
உங்களால் கருத்தால் பதில் சொல்ல முடியவில்லை என்றால் அவதூறாக பேசுவது வழக்கமா என தெரியவில்லை…
கடந்த 2007இல் இருந்து தமிழ் இணைய தள நண்பர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறேன்… போலி பிரச்சனை எனக்கும் நன்றாக தெரியும்… என்னை யாரும் அது போன்ற பிரச்சனைகளில் இழுத்தது இல்லை… இப்போது உங்கள் வன்மத்தை தீர்த்து கொள்ள போலி போல் என்னை உருவகபடுத்துவது ஏனோ?
இங்கே தனி மனித விமர்சனங்களையும்… தாக்குதலை செய்வது யார் என பதிவுகளை பார்க்கும் போதே தெரியும்…
நானும் உங்களை போன்ற முதலாளிதுவ ஆதரவாளர்கள், போலி கம்னிஸ்டுகள், திராவிட இயக்கத்தினர், பார்ப்பனீய ஆதரவாளர்கள், பார்ப்பனர்கள் என எல்லோரிடமும் பழகி வருகிறேன்… டோண்டுவிடம் கூட நேரில் பார்த்தால் விவாதம் செய்து வருகிறேன்… ஒரு நாளும் அவர் என்னை மரியாதை இல்லாமலோ… நான் அவரை மரியாதை இல்லாமலோ பேசியது இல்லை… என்னுடைய நேர்மையில் இஸ்ரேல், அமெரிக்கா, மோடி போன்றவற்றை எதிர்த்து விவாதம் செய்து வருவேன்… டோண்டுவை பற்றி எந்த அவதூறையும் யாரிடமும் சொன்னது இல்லை…
உங்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை… எதிர் கருத்து வைத்தால்… தாக்குதலில் இறங்கி விடுகிறீர்கள்… 6-7 மாதங்களுக்கு முன் முகநூலில் உங்கள் ஊரில் இருக்கும் முன்னாள் கம்னிஸ்டு… தற்போதைய ராம பக்தர் பற்றிய பதிவில்.. லைக் போட்டு விட்டு… பின்னர் லைக்கை எடுத்து விட்டார் என சொல்லி ஒரு மருத்துவரை மெண்டல் டாக்டராக இருப்பார் போல இருக்கிறதே இழிவாக எழுதிய பின்… உங்கள் அந்த நிலை தகவலில்… மெண்டல் பற்றிய விளக்கத்தை நான் போட்ட போது… பட்டியலில் இருந்து தூக்கி விட்டீர்களே?
உங்களுடைய முதலாளிதுவ கற்பனை அடாவடிகளை எல்லோரும் பொறுத்து கொள்ள வேண்டும்… யாராவது எதிர்த்து பேசினால்… பின்புலம் இருந்தால் பேசாமல் இருந்து விடுவீர்கள்… சாதாரணமானவன் என்றால் தனி மனித தாக்குதல், அவதூறு என இறங்கி விடுகிறீர்களே?
இந்த பதிவில் கூட நான் கேட்து ஜெவின் கட்டண உயர்வு பற்றி… ஆனால் அதனை பற்றி கருத்தை பெரிதால் சொல்ல முடியாமல்… என்னை பற்றி அடாவடி… அவதூறு… என இறங்கி பிரச்சனை என் பக்கம் திருப்பி… பதிவின் போக்கை மாற்றுவது ஏனோ?
// எதிர் கருத்து வைத்தால்… தாக்குதலில் இறங்கி விடுகிறீர்கள்///
இல்லை அப்பனே. என்னை ‘கைக்கூலி’, ’அடிவருடி’, ’பார்பானியவாதி’ என்றெலாம் நீர் ஏசுவதால் தான் ‘எதிர்வினை’. கடுமையான கருத்து மாறுபாடுகள், விவாதங்கள் எத்தனை பேர்களுடன் செய்கிறேன். உம்மை போல் ஒரு சிலர் தான் இது போன்ற ’அடைமொழிகளை’ பயன்படுத்துவதால், சில நேரங்களில் பொறுமை இழக்க நேரிடுகிறது. முகப்புத்தகதில் நீர் பயன் படுத்திய சொற்கள் அப்படி. எனவே பிளாக் செய்ய வேண்டியதாயிற்று.
அடுத்த முதல்வர் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கும் கேப்டன் இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் இரண்டு முனிசிபல் ஊர்களை சிங்கபூர்கள் ஆக மாற்றி தமிழகத்திலேயே சரித்திரம் படைக்க உள்ளார். அம்மா அவர்களை
எதிர்க்க துணிவிருக்கும் ஹீரோ வேறு யார் இருக்கிறார்கள்???. — ஹி …. ஹி…ஹி. முதலில் அந்த இரண்டு ஊர்களின் RTO அலுவகங்களில் உள்ள ஊழலை ஒழித்து காட்டட்டும்.
///அடுத்த முதல்வர் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கும் கேப்டன் இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் இரண்டு முனிசிபல் ஊர்களை சிங்கபூர்கள் ஆக மாற்றி தமிழகத்திலேயே சரித்திரம் படைக்க உள்ளார்.
சிங்க பூர்கள் என்றால் அங்கு மனிதர்கள் இருக்க மாட்டார்களா?
///இரண்டு ஊர்களின் RTO அலுவகங்களில் உள்ள ஊழலை ஒழித்து காட்டட்டும்///.
அப்படி ஒன்றும் சாதாரண ஆள் இல்லை .அவர் சினிமா எடுத்து அந்த இரண்டு ஆர்.டி .ஒ களை ஒழித்துவிடப் போகிறார்