Sunday, October 6, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபேருந்துக்கு நோ டிக்கெட்! சென்னையைக் கலக்கும் பு.மா.இ.மு!

பேருந்துக்கு நோ டிக்கெட்! சென்னையைக் கலக்கும் பு.மா.இ.மு!

-

இயலாமையுடன் பேருந்து கட்டண உயர்வை ஏற்க வேண்டுமா அல்லது போராட வேண்டுமா? போராடுவதென்றால் எப்படி போராடுவது, அரசுக்கு எப்படி எதிர்ப்பை தெரியப்படுத்துவது; அரசை எப்படி பணியவைப்பது?

தமிழக உழைக்கும் மக்களிடம் எழுந்திருக்கும் இந்தத் தலையாய கேள்விக்கு சென்னை ’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’யின் போராட்ட வழிமுறை விடையளித்திருக்கிறது. நவம்பர் 24ம் தேதி சென்னை ஆவடியில் சிறு பொறியாக கிளம்பிய அந்தப் போராட்டம், இன்று சென்னை மாநகர பேருந்தில் அன்றாடம் பயணம் செய்யும் மக்களின் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகளை விட விரைவாக இந்தப் போராட்ட வழிமுறை பரவி வர என்ன காரணம்? அப்படி எந்த முறையில் போராடச் சொல்லி சென்னை ’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’(புமாஇமு – RSYF) மக்களுக்கு வழிகாட்டியிருக்கிறது? அப்படி போராடினால் காவல்துறை மூர்க்கத்துடன் பாயாதா? அனைத்தையும் விட, அப்படியென்ன சிறப்பான போராட்டத்தை புமாஇமு கண்டுபிடித்துவிட்டது?

அடுக்கடுக்காக எழும் இந்த அனைத்து வினாக்களுக்கும் பதிலை தெரிந்து கொள்ள சற்றே காலத்தை பின்நோக்கி நகர்த்துவோம்.

(படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

வம்பர் 24 அன்று ஆவடி பேருந்து நிலையத்தில் பயணிகள் குழுமியிருந்தார்கள். அனைவரது நாடி, நரம்புகளிலும் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மடங்காகிவிட்ட பேருந்து கட்டணம். சல்லிசாக பணத்தை எடுத்து வைத்தால்தான் அலுவலகம் அல்லது கல்லூரி அல்லது வியாபாரத்துக்கு செல்ல முடியும். மாத இறுதி. ஒருவேளை உணவை தியாகம் செய்து பேருந்துக்காக எடுத்து வைத்தப் பணம், இன்னும் இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும். ஆனால், மாதம் முடிய இன்னும் 6 நாட்கள் இருக்கின்றன. என்ன செய்வது… யாரிடம் கடன் கேட்பது… எதை அடகு வைப்பது…

என மக்கள் யோசித்தபடியே தாங்கள் செல்ல வேண்டிய பேருந்துக்காக மக்கள் காத்திருந்தபோது –

15 மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தார்கள். சட்டென அனைவரது கவனமும் அவர்கள் மீது திரும்பியது. காரணம், 13 பேர் சிவப்பு உடையில் இருந்தார்கள். இருவர் மட்டும் ’வேறொரு’ உடையையும் கூடவே தங்கள் முகத்தை மறைக்க ’இன்னொருவரின்’ முகம் வரைந்த முகமூடியையும் அணிந்திருந்தார்கள். அந்த உடையையும், முகத்தை மறைக்கும் முகமூடியையும் பார்த்ததுமே கோபம், வெறுப்பு, சிரிப்பு, ஆச்சர்யம்… என அனைத்தும் கலந்த உணர்வு மக்களிடம் பூத்தது. தற்காலிகமாக தங்கள் கவலையை மறந்துவிட்டு, அவர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

ஒருவர், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா போல் ஆடை அணிந்து, ஜெவின் முகம் வரைந்த முகமூடியை, தன் முகத்தில் ஒட்ட வைத்திருந்தார். அடுத்தவரின் தோற்றம், அச்சு அசலாக, உடன்பிறவா சகோதரியான சசிகலாவை பிரதிபலித்தது.

அந்த 15 பேரும், நின்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு பேருந்திலும் ஏறினார்கள். இருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் கவனம், தங்கள் மீது திரும்பியதும், ஜெ போல் தோற்றம் அளித்தவர் தொண்டையை கனைத்துக் கொண்டு, தன் கையில் இருந்த அறிக்கையை படிக்க ஆரம்பித்தார். அதாவது, ’தவிர்க்க இயலாத காரணத்தால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக’ அறிவித்தார். பிறகு தனக்கு பக்கபலமாக அருகில் நின்றுக் கொண்டிருந்த சசிகலா போல் இருந்தவரை பார்த்து சிரித்தார்.

அவ்வளவுதான். சிவப்பு உடை அணிந்திருந்த மற்ற 13 பேரும், அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டு அடித்தார்கள்! ’’மக்களோட வாழ்க்கைத் தரத்தை பத்தி எதுவுமே தெரியாம, கட்டணத்தை எப்படி நீ இஷ்டத்துக்கு உயர்த்தலாம்? நியாயமா பார்த்தா, பேருந்து கட்டணத்த முந்தையதை விட நீ குறைக்கணும்…’’ என நையப்புடைந்தார்கள்.

ஜெயலலிதாவை நேருக்கு நேர் சந்தித்து கண்டபடி திட்ட வேண்டும் என நினைத்திருந்த மக்களும் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரையும், ஜெ – சசி ஆகவே நினைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தார்கள்.

அப்போதுதான் ’’அன்பார்ந்த உழைக்கும் மக்களே…’’என கணீரென்று ஒரு குரல் ஒலித்தது. சட்டென்று மக்கள் அமைதியானார்கள். குரலுக்கு உரியவர், அந்த 13 பேரில் ஒருவர்தான். அந்தக் குரலில் இருந்த அழுத்தம், அவர் என்னதான் சொல்கிறார் என காது கொடுத்து கேட்க வைத்தது.

பிசிறில்லாமல், அந்தக் குரலுக்குரியவர் பேச ஆரம்பித்தார். ’’’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் நாங்கள். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்க சூழலில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பன்னாட்டு முதலாளிகளுக்கும், அதிகார வர்க்க மற்றும் தரகு முதலாளிகளுக்கும் சேவகம் செய்யும் ஊழியர்களாகவே மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு பெரும்பான்மையினராக இருக்கும் ஏழை, எளிய மக்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகளின் நலன்கள்தான் முக்கியம்.

உலகின் முதல் 5 விஸ்கி வியாபாரிகளில் ஒருவனான விஜய் மல்லையா, இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறான். ஆனால், அதை திருப்பி செலுத்தவில்லை. பதிலாக தனது ’கிங் ஃபிஷர்’ஏர்லைன்ஸ் நிறுவனம், நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லி, தனக்கு மேலும் பண உதவி செய்யும்படி அரசாங்கத்திடம் மடிப்பிச்சை கேட்கிறான்.

நம்மிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்திலிருந்து அவனை காப்பாற்ற அரசு முயல்கிறது.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களை பேணுவதில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகின்றன. ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் அனைத்தும் விதிவிலக்கின்றி ’நலத்திட்டங்கள்’ என்னும் பெயரில் அறிவிப்பதற்கு பின்னால், முதலாளிகளின் நலன்கள்தான் இருக்கின்றன.

சாராயக் கடைகளை அரசே நடத்துகிறது. அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு  மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. ஆனால், மக்களின் அன்றாடத் தேவையான – உயிர் வாழ்க்கைக்கு அவசியமான – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்துகின்றன.

இந்த பாசிச நடவடிக்கையை மக்களாகிய நாம் எதிர்க்க வேண்டும். ஏனெனில், இதனால் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களாகிய நாம்தான். அடுத்தடுத்து நம்மீது திணிக்கப்படும் இந்த விலைவாசி உயர்வுக்கு நாம் முடிவு கட்ட வேண்டும்.

அது நம்மால் முடியும்.

பேருந்து கட்டணத்தை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தியிருக்கிறார்கள். இதை மவுனமாக நாம் ஏற்றுக் கொண்டால், இந்த வருவாய் விஜய் மல்லையா போன்ற தரகு முதலாளிக்கும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்னும் பெயரில் நம்மை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவவே பயன்படும்.

எனவே டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம். ஒட்டுமொத்த மக்களும் டிக்கெட் வாங்க மாட்டோம் என்று சொன்னால், இந்த அரசால் என்ன செய்ய முடியும்? நிமிர்ந்து நிற்போம். நமது உரிமைகளை நிலை நாட்டுவோம். மக்களுக்கான அரசை நிறுவுவோம்.

அதற்கு முதல் படியாக, இன்று முதல் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்…’’

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மக்களை நோக்கி அவர் பேசி முடித்த பிறகும், மவுனமே நிலவியது. ஆனால், அது சில விநாடிகள்தான்.

அதன் பிறகு, அந்தப் பேருந்தே குலுங்கும் அளவுக்கு அதிலிருந்த மக்கள் அனைவரும் ஒரே குரலில் கர்ஜித்தார்கள். ’’ஆம்.டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்…’’

மக்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகளை சொல்லிவிட்டு, அந்த 15 பேரும், அந்தப் பேருந்தை விட்டு இறங்கினார்கள். அடுத்த பேருந்தில் ஏறினார்கள். முந்தைய பேருந்தில் என்ன நடந்ததோ, அதுவே இங்கும் நடந்தது. அடுத்தடுத்த பேருந்துகளிலும் நிகழ்ந்தது.

என்ன செய்வது, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான கண்டனங்களை எப்படி தெரிவிப்பது, எந்த வகையில் போராடுவது என தெரியாமல் தடுமாறிய மக்களுக்கு இப்போது புதிய விடியலை கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் போராட்ட வழிமுறை நிச்சயம் பயனளிக்கும் என அவர்களுக்கு புரிந்தது. உடனே அந்த 15 பேரையும், நேசத்துடன் ’தோழர்’, ’தோழர்’ என அழைக்க ஆரம்பித்தார்கள். அப்படித்தானே ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்கிறார்கள்?

காலையில் ஆரம்பித்த பிரச்சாரம், மாலை வரை தொடர்ந்தது. மக்களும் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள். அதுமட்டுமல்ல, ஒரு கட்டத்துக்கு பிறகு, மக்களும் உடன் இறங்கி சக பயணிகளிடம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்…

டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்…

அன்றைய பொழுது முடிந்ததும் புமாஇமு தோழர்கள், ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதை மறுநாள் செயல்படுத்தவும் முடிவு செய்தார்கள். அந்த முடிவு, போராட்டத்தை மறுகட்டத்துக்கு நகர்த்துவது தொடர்பானது.

அதன்படி, மறுநாள், நவம்பர் 25 அன்று அதே 15 புமாஇமு தோழர்கள், காலையில் சென்னை அண்ணாநகர் ஆர்ச் அருகில் ஒன்று சேர்ந்தார்கள். முந்தைய தினம் போலவே இன்றும் இரு தோழர்கள் ஜெ – சசி போல உடை, முகமூடியை அணிந்துக் கொண்டார்கள். சென்ட்ரல் இரயில்நிலையம் நோக்கி செல்லவிருந்த பேருந்தில் ஏறினார்கள்.

முந்தைய தின நிகழ்வுகளே இன்றும் அரங்கேறின, ஒரேயொரு திருத்தத்துடன். ’’நாங்கள் டிக்கெட் இல்லாமல்தான் பயணம் செய்யப் போகிறோம். எங்களுடன் இந்தப் போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும். வாருங்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்…’’ என முழங்கினார்கள்.

நல்ல பலன் கிடைத்தது. அந்தப் பேருந்தில் இருந்த கணிசமான மக்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். பலரும் டிக்கெட் வாங்கவில்லை. டிக்கெட் வாங்கச் சொல்லி வற்புறுத்திய நடத்துனர், ஒரு கட்டத்துக்கு பிறகு, தோழர்களின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டார்.

சென்ட்ரல் இரயில்நிலையத்தில் பேருந்து நின்றதும், தோழர்கள் இறங்கினார்கள். சாலையை கடந்து எதிர்பக்கம் வந்தவர்கள், தேனாம்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறினார்கள்.

அண்ணாநகரிலிருந்து தோழர்களை கவனித்து வந்த சிலர், இம்முறையும் தேனாம்பேட்டை செல்லும் பேருந்தில், தோழர்களுடன் சேர்ந்து ஏறினார்கள். அதில் ஒரு மூதாட்டியும் இருந்தார்.

அதே தீவிரத்துடன் பிரச்சாரம் தொடர்ந்தது. இங்கும் கணிசமான மக்கள் டிக்கெட் வாங்க மறுத்துவிட்டு தோழர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ’’ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, டிவி எல்லாம் யார் கேட்டாங்க? பால், பேருந்து கட்டணத்தை எல்லாம் எப்படி ஏத்தலாம்?’’என குரல் எழுப்பினார்கள். பாசிச ஜெயாவின் இந்த நடவடிக்கையை ஆதரித்து எழுதும் பத்திரிகைகளை திட்டித் தீர்த்தார்கள். இங்கும் நடத்துனரும், ஓட்டுநரும் தோழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனாம்பேட்டையில் இறங்கிய தோழர்கள், சேத்துப்பட்டு செல்லும் பேருந்தில் ஏறினார்கள். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

தோழர்கள் ஏறிய பேருந்தின் நடத்துனர், தோழர்களின் போராட்டத்தை ஆதரித்தாலும் சற்றே பயந்துவிட்டார். எனவே காமராஜர் அரங்கத்துக்கு பக்கத்தில் இருந்த காவல்நிலைய வாசலில் பேருந்தை ஓட்டுநரின் ஒத்துழைப்புடன் நிறுத்திவிட்டார்.

தோழர்களின் போராட்ட வழிமுறைகளை ஆதரித்து வந்த மக்களுக்கு இந்தச் செய்கை பிடிக்கவில்லை. ’’நியாயமான போராட்டத்தை ஏன் இப்படி ஒடுக்க வேண்டும்? நாங்கள் தோழர்கள் பக்கம் நிற்கிறோம்…’’ என அறிவித்தார்கள்.

அவர்களை அமைத்திப்படுத்திய சென்னை புமாஇமு-வின் இணைச் செயலாளரும், 15பேரில் ஒருவருமான தோழர் நெடுஞ்செழியன், நடத்துனருடன் இறங்கி காவல்நிலையத்துக்குள் சென்றார். அங்கிருந்த உயரதிகாரியிடம் ஒளிவுமறைவின்றி நடந்ததை, நடந்தவாறே சொன்னதுடன், ’’எங்களை சிறையில் அடைத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்…’’ என்றார்.

தோழர் பேசியதை காது கொடுத்து கேட்ட அந்த காவல்துறை அதிகாரி, சட்டென நடத்துனரிடம் பாய்ந்தார். ஆம், தோழரை அவர் கண்டிக்கவில்லை!

’’இங்க எதுக்குயா பஸ்ஸை நிறுத்தின..?’’

’’சார்…’’ அதிர்ந்த நடத்துனர், ’’நீங்களே இப்படி சொன்னா எப்படி சார்? இவர் சொன்னதை கேட்டீங்கல? போராடறாங்க சார்…’’

’’அதுக்கென்ன இப்ப? பஸ்ஸுக்குள்ளதான போராடறாங்க, ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த? உங்க டிப்போவுக்கு போய் பஞ்சாயத்துனா பேசிக்க, இல்ல சமரசம்னா பண்ணிக்க… போ… போ…’’

அதற்கு மேல் அங்கிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த நடத்துனர், தோழருடன் பேருந்தின் அருகில் வந்தார். அதற்குள் மற்ற தோழர்களும், பயணிகளில் சிலரும் இறங்கியிருந்தனர்.

கண்ணாடி வழியே வாடிய முகத்துடன் வந்த நடத்துனரை கண்டதும், ஓட்டுநருக்கு விஷயம் புரிந்துவிட்டது. உடனடியாக வண்டியை கிளப்பி, பயணிகள் ஏறினார்களா இல்லையா என்றுக் கூட பார்க்காமல் வேகமாக சென்றுவிட்டார்! ஓடிப் போயந்தப் பேருந்தில் ஏறினார் நடத்துனர்.

வாசல் வரை வந்த காவல்துறை அதிகாரி, தோழர் நெடுஞ்செழியனை அழைத்து, ’’பர்மிஷன் வாங்கி போராடினா இதுமாதிரி சிக்கல் வராதே…’’ என்றார்.

’’யார்கிட்ட பர்மிஷன் வாங்கணும்னு சொல்றீங்க?’’ விலைவாசி உயர்வுக்கு எங்களிடம் பர்மிஷன் வாங்கித்தான் வெளியிட்டார்களா? அது சரின்னா இதுவும் சரிதான் என கறாராக கேட்டார் தோழர் நெடுஞ்செழியன்.

’’உங்க அமைப்புகிட்டயே இதுதாங்க ப்ரச்னை. பதில் பேச முடியாதபடி மடக்கிடறீங்க…’’ என்று அலுத்துக் கொண்டவர், ’’தயவு செஞ்சு அண்ணா மேம்பாலத்துக்கு அந்தப் பக்கம் போய், ஏதாவது செஞ்சுக்குங்க… இங்க வேண்டாம்?’’

’’ஏன்?’’

’’அந்தப் பக்கம்னா என் லிமிட்ல வராதுங்க… புரிஞ்சுக்குங்க…’’ என்றார் பரிதாபமாக.

ஆனால், தோழர்கள், உறுதியுடன் டி.எம்.எஸ். நிறுத்தத்துக்கு சென்று சேத்துப்பட்டு பேருந்தில் ஏறினார்கள். பிறகு சேத்துப்பட்டிலிருந்து மதுரவாயில் வரை பேருந்தில் பிரச்ச்சாரம் செய்தபடியே சென்றார்கள்.

எங்குமே தோழர்கள் மட்டுமல்ல, கணிசமான மக்களும் டிக்கெட் வாங்கவில்லை. வாங்க மறுத்துவிட்டார்கள். பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை விமர்சித்தார்கள். நடத்துனர்களும், ஓட்டுநர்களும் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது.

மதுரவாயிலில் தோழர்கள் இறங்கியபோது, யாரோ அழைக்கும் குரல் கேட்டது. திரும்பினால், மூதாட்டி.

’’நீங்க பேசினது, போராடினது எல்லாம் சரி… இனிமே எங்க போனாலும் டிக்கெட் எடுக்கறதில்லைனு உறுதியா இருக்கேன்…’’

’’நன்றி பாட்டி… நாங்க உங்களுக்கு துணையா இருப்போம்…’’

’’அதைதான் போலீஸ் ஸ்டேஷன்லயே பார்த்தனே…’’ என புன்னகைத்தார் அந்த மூதாட்டி.

’’என்ன பாட்டி சொல்றீங்க..?’’

’’அட, ஆமா பசங்களா… இல்ல இல்ல தோழர்களா… அண்ணாநகர்லேந்து நீங்க என்னதான் செய்யறீங்கனு பார்க்க உங்க கூடதான் நான் வந்துகிட்டு இருக்கேன்… உங்கள மாதிரி எந்தக் கட்சிக்காரனும் எங்க கஷ்டம் புரிஞ்சு போராடினதில்ல… வூட்டுக்கு போய் அக்கம்பக்கமெல்லாம் ’எங்க போனாலும் டிக்கெட் வாங்காதீங்க’னு சொல்லப் போறேன்…’’

’’செய்ங்க பாட்டி… நாங்க வர்றோம்… ஏதாவதுனா எங்களுக்கு தகவல் கொடுங்க…’’ என்றபடி தங்கள் தொடர்பு எண்ணை அளித்துவிட்டு தோழர்கள், ’’வர்றோம் பாட்டி’’ என கிளம்பினார்கள்.

’’கொஞ்சம் நில்லுங்க… வந்து… நான் வயசுல பெரியவ. உங்களவிட எனக்கு அனுபவம் ஜாஸ்தி. அதனால நான் ஒண்ணு சொல்றேன்… அதை தட்டாம நீங்க செய்யணும்…’’

தோழர்கள் அமைதியாக பாட்டியை பார்த்தார்கள்.

’’இது மட்டும் வேண்டாம். எங்க நானே கோபம் தாங்காம இந்த பாப்பாவ, அந்த ….னு நினைச்சு கொன்னுடுவனோனு அப்பத்துலேந்து பயந்துட்டு இருக்கேன். எல்லாரும் என்னை மாதிரியே கோபத்தை அடக்குவாங்கனு சொல்ல முடியாது. ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட போகுது… அதனால அந்த ராட்சசிய காட்டாம பேசுங்க… சரியா? பத்திரமா போயிட்டு வாங்க…’’

என்றபடி அந்தப் பாட்டி சென்றார்.

அந்தப் பாட்டி சுட்டிக் காட்டி, ’இதை அணியாதீர்கள்… அந்த அரக்கியை நினைவுப்படுத்தாதீர்கள்’ என்று சொன்னது ஜெயலலிதாவின் முகம் பொறித்த முகமூடியை!!!

 ___________________________________________________

– வினவு செய்தியாளர்.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. இது நல்ல முயர்ச்சி, ஆனா பலன் தராது. பு.ம.இ. அல்லது ச.ம.ஒ என பல கூத்து நடைந்தாலும், பப்பு வெந்திடாது.

  2. புரட்சிகரமான போராட்டங்கள் முன் எடுப்பதில் பு.மா.இ.மு நிகர் பு.மா.இ.மு தான் எனபது இன்னும் ஒரு முறை நிருபித்து விட்டார்கள் . மக்களை யோசிக்க வாய்த்த அந்த முகமுடி யோசனை சிறப்பானது . பு.மா.இ.மு விற்க்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

  3. வணக்கம்… எந்த வகையில் பேருந்து கட்டண உயர்வு உட்பட விலைவாசி உயர்வுகள் மக்களைப் பாதிக்கும் என்கிறீர்கள்,,, மக்கள் நலம் பிரதானம் எனவே கட்டண உயர்வு , விலைவாசி உயர்வுகளை ஏற்க இயலாது எனக் கருதுகிறீர்கள் என வைத்துக் கொண்டால்
    எம் கேள்விகள் சிலவற்றிற்கு உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்… விலைவாசி உயர்வினை வினவு முழுமையாக எதிர்க்க காரணம் அளித்த பின் எம் கேள்விகள் ..
    அல்லது வினவு மக்கள் மத்தியில் தன்னை முன்னிலைப் படுத்த தன் கருத்தினை மக்களுக்கு ஆதரவாக பேசுகிறதா?

    நான் சக்திவேல்

    • சக்திவேல் ,
      விலைவாசி உயர்வு நேரடியாக உழைக்கும் ஏழை மக்களை பாதிக்கிறது.இன்னும் சொல்லபோனால் அவர்களை அழிக்க முனைகிறது. இதை விட வேறு என்ன காரணம் வேண்டும் அதை எதிர்க்க?

  4. இதுக்கு பேரு without இல்லையா ?
    பால் விலை உயர்வுக்கு என்ன பண்ணுவிங்க ?
    விலை உயர்வு அதிகம் தான் .. அனால் போராட்ட முறை சரியா ? ரயில் கட்டணம் ஏறினால் ?

    • டிக்கெட் கட்டணத்தை ஏற்றுக்கொண்டு, ஆனால் டிக்கெட் எடுக்காமல் பயணித்தால்தான் அது without. ஆனால் இது ஜெயாவைப் பார்த்துச் சொல்லும் Getout. 🙂

    • அவர்கள் சில பொது சொத்து உடைத்து இருந்தால் நீங்கள் அவர்களை எதிர்க்க இயலும்.நாம் அரசாங்கத்திற்கு சில வழியில் நம் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.நான் இது சரியான வழி என்றே நினைக்கிறேன்.

      உங்கள் சேவை தொடர்வதற்கு என் இதயங்கணிந்த நல்வாழ்த்துக்கள்.

  5. வணக்கம் தோழர்களே;
    உங்க அமைப்புக்கு நாங்கள் கடமைபட்டு இருக்கிறோம்.

  6. அப்புறம் ஜெயா போலீசு அடிச்சிடுச்சுன்னு ஒரு பதிவு போடுவீங்க.

  7. வணக்கம்;
    நான் மற்றும் அல்ல! என் உயிர்! தோழர்கழும்! உண்மையில்! டிக்கெட் எடுக்க மட்டோம்! இவன்; உண்கள் நன்பன்!

  8. படிச்சுப் படிச்சு சொன்னேங்க.பாத்து முத்திரை குத்தனுமின்னு.போட்ட வெதெ முளச்சிடுச்சி. பின்ன என்ன பன்னுவீங்க.வாய் கிழிய பேசுறீங்க. ஆனா வாய்ப்ப நழுவ விட்டீங்க.ரென்டு பேரும் திருடா திருடி தானுங்க.இது கூட தெரியாம இன்னும ஏங்க வாழுரீங்க? ஒன்னு முருங்க மரத்து பேயினா இன்னொன்னு புளிய மரத்து பிசாசுங்க.ஓட ஓட வெரட்டாம ஒண்ட விட்டுப் புட்டீங்க. கொள்ளயடிக்கிர ரென்டுமே உண்டு கொழுத்து போச்சுங்க.அழுது இனிமெ பொலம்பாம பொழப்ப மட்டுமெ பாருங்க.

  9. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.போராட்டத்திற்கு ஆதரவு தருவோம்.சுரணை உள்ளவர்கள் என நிரூபிப்போம்.

  10. நல்ல ஒரு முயற்சி.இது போன்ற அரப்போராட்டங்கலால் தான் தீய அரசுகளின் ஆணவத்தை அடக்கமுடியும்.இந்த புரட்சி தீ நாடு முழுவதும் பரவவேண்டும்.அடுத்த முறை விலை எற்றும் போது மக்கள் மூடர்கள் என் எண்ணாமல் யோசிக்கவேண்டும்.அரசு அடிபணியும் வரை இப்போராட்டத்தை வீரியமாக்கவேண்டும்.தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் சம்பளத்தில் கணிசமான தொகை பஸ்ஸுக்கே சென்று விடுகிறது.பஸ் கட்டணம் மேலும் உயர்த்தும் போது பஸ்சுக்கு கொடுத்துவிட்டு பட்டினியாய் இருக்கவேண்டியதுதான்.இதன் மூலம் தனியார் பஸ் முதலாளிகள் கொழுக்கிறார்கள்.அவர்களுக்கான ஆட்சிதானே இது.குடும்ப ஆட்சிபோய் கும்பல் ஆட்சி வந்துவிட்டது.நம்முடைய தலை எழுத்து என்று முடங்கி கிடக்காமல் பொங்கி எழவேண்டும்.

  11. இந்த போராட்ட முறை தெலங்கானா பகுதி மக்களாலும் நடத்தப்பட்டது. அரசினாலும் காவல் துறையாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பாசிச ஜெயாவுக்கும் இதே வழிமுறையில் பாடம் கற்பித்தல் நல்லது தான்.

  12. கோட்டு சூட்டு போட்டஅண்ணே
    கோபிக்காம எனக்கு நீங்க,
    நாளொன்னுக்கு நூறு நூறா
    நாலு நாளாக் குறையுறத,
    கூட்டிக் கழிச்சிக் கணக்குப்போட்டு
    கண்டுபிட்டிச்சு சொல்லுங்கண்ணே.
    புண்ணியமாப் போகும், உனக்கு
    புள்ளைங்க நாலு பொறக்கும்.

    மேலே படிக்க http://puthiyapaaamaran.blogspot.com/2011/11/blog-post_29.html

  13. ஊரில் ஓடும் எல்லா பஸ் பயனிகளும் உஙகள் முட்டாள் கூட்டத்தில் சேர மாட்டார்கள். வாழ்க்கையில் உங்கள் அமைப்பின் பங்கு ஒரு ஜோக்கரின் பயன் தான். சீனா, ரஷ்யா, ஆகிய நாடுகளில் முதலாளித்துவம் தான் உள்ளது. இருந்தாலும் ஜோக்கர் இல்லாமல் சீட்டு விளையாட முடியாது.

    • “சீனா, ரஷ்யா, ஆகிய நாடுகளில் முதலாளித்துவம் தான் உள்ளது.”அப்படீங்களா..சே..இந்த விசயம் கூட எங்களுக்கு தெரியாம போச்சுங்க..அப்புறம் வேற என்ன ‘உண்மைகள்’ எல்லாம் உங்களுக்கு தெரியுமுங்க? நாய்க்கு வாலுண்டு..தவளைக்கு காலுண்டு போல பல உண்மைகளைத் தெரிஞ்சு வச்சிருப்பீக போல..பாத்துண்ணே..ரொம்ப புத்திசாலியா இருக்கது தெரிஞ்சா யாரும் பிடிச்சுட்டு போயிருவாங்க..அதுவும் கலாம் மாதிரி அறிவாளியா இருக்கீக..

      • உஙகளின் கூட்டம் நடக்கும் பக்கமே வர மாட்டேன். கோடிக்கால் பூதமடா – என்று ஒரு பாட்டு, இல்லைனால் அந்த விஜயகாந்த் சிவப்பு மல்லி பாட்டு. வாந்தி வந்து விடும் உங்களின் கருத்துகள் கேட்டால்.

        • நினைச்சேன்..நீங்க இன்னமும் சிபிஎம் கட்சி நினைப்பிலதான் இருக்கீங்கன்னு தெளிவா தெரியுதே..அண்ணே..அவுங்களுக்கும் கம்யூனிசத்துக்கும் சம்பந்தம் இல்லே..இன்னொன்னு..சிவப்புமல்லி..ஒரு மசாலா படம்..அதைப்போய் கேக்கிறீங்களா இன்னமும்? அது 30 வருசத்துக்கு முன்னாடியே ஊசிப்போன மசால் வடை..அத மோந்து பாத்துட்டு அதுதான் இதுன்னு இன்னமும் நம்புறீங்களே..கொஞ்சம் 2011க்கு வாங்கண்ணே

  14. This is utter non-sense and sheer ignorance. When inflation raises, how a corporation of transport can surivie without raising the ticket fare for a decade?

    The administrative capabalities of J Jayalalithaa is really wonderful. She does not care about vote bank politics.

    The labour class of TN is envious of the MNCs and the IT corridors that has really really flourished the state.

    The previous malefide govt. has done a grat harm by freebies and utter failure of law and order.

    These type of ridiculous dharnas must be banned.

    Liteeraly delicacy and general awareness of the world times is ZERO among the larger illiterate secion of TN.

    Only anti -brahminism and atheism — adhaan mazha onnaa jaaasthi peyardhu illa peyaave maatengaradhu.

    Ungalukku elaam enna theriyardhu — vetti padaigal.

    • //The labour class of TN is envious of the MNCs and the IT corridors that has really really flourished the state. //

      Flourished in what way?? Getting salary with respect to dollar value? Please explain.

      //Only anti -brahminism and atheism — adhaan mazha onnaa jaaasthi peyardhu illa peyaave maatengaradhu.//

      It is due to the environmental factors. WE should live inclined with the nature, not with otherwise. Role of Atheism is nothing here.

    • பஸ் போக்குவரத்து..லாபத்துக்காக அரசு நடத்துவதல்ல..அது சேவை..அஞ்சல் துறை போல இதுவும் ஒரு சேவை..பல கிராமங்களில் 3 பேர் 4 பேர் ஏறினாலும் அவர்களுக்கு இச்சேவை கிடைக்கப்பெற வேண்டும்..7 அல்லது 8 கிமீ தாண்டிப் போய் 3 பேரை ஏத்தி வரும் பஸ்ஸில் கிடைக்கும் 3 பெருக்கல் 7 ரூ கணக்கு டீசலுக்கு கூட பத்தாதுதான்..ஆனால் இந்த சேவையை நிறுத்தினால் கிராமம் துண்டிக்கப்படும்..தனியார்மயம் கிராமத்துக்கு சேவை செய்யாது..சரியா? நோக்கியா என்ற ஏழை முதலாளிக்கு ரூ 600 கோடி வரி விலக்கு தருவதும் விஜய் மல்லய்யாவுக்கு பெயில் அவுட் தரத் ட்துடிப்பதும்..அரசுதானே..சென்னை ஐபிஎல் டீமை விலைக்கு வாங்கி பல கோடி பிசினஸ் நடத்தும் சீனிவாசன் இந்தியா சிமென்ட்ஸ் எனும் ஏழைக் கம்பெனிய வச்சிட்டு அல்லாடுறார்..இவாள் பண்ணின காரியம் தெரியுமோ..அரசு வங்கியிலே 28 கோடி கடன்ன் வச்சிட்டு 10 வருசமா கட்டாம இருக்காரு..அன்னாரோட வீட ஜப்தி பண்ணல..அரசு..இத வாராக்கடன் என சொல்லி மன்னிக்குது..இப்ப சொல்லுங்க அரசு யாரிடம் புடுங்குது? அரசு யாருக்குப் புடுங்குது?

      • //அன்னாரோட வீட ஜப்தி பண்ணல..அரசு..இத வாராக்கடன் என சொல்லி மன்னிக்குது..இப்ப சொல்லுங்க அரசு யாரிடம் புடுங்குது? அரசு யாருக்குப் புடுங்குது?//

        கரண்ட் பில்லு கட்ட ஒருநாள் டிலே ஆச்சுன்னாலும், நம்ம வீட்டுல ஃபீஸப் புடுங்குது 🙂

        கார்ப்பரேட்காரனும், அதிகார வர்க்கமும் எவ்வளவு பாக்கி வச்சிருந்தாலும், அரசு சொரணையே இல்லாம இருக்குது. ஆனாலும் நல்லொழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒழுங்கா பில்லு கட்டுறோமே, நாமெல்லாம் செர்வியாக்கவ் போன்ற அற்பவாதிதான் போலிருக்கு 🙂

    • ” IT corridors that has really really flourished the state”
      அய்யா..வணக்கமுங்க?
      ஐ.டி. அப்படி என்ன சாதிச்சிதுன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்?
      ஜி.டி.பி.யில் ஐ.டியின் பங்களிப்பு எவ்வளவு?
      அதற்காக ஐ.டி துறை பெற்றிருக்கும் வரிச்சலுகை எவ்வளவு?
      ஐ.டி துறை செரித்துக் கழிக்கும் மின்னாற்றல் எவ்வளவு?

      ஐ.டி. தெரும் சேவை / தொழில் வரி பெரிதா? நெசவு/ஆயத்த ஆடைத் தொழில் தரும் வரி வருவாய் பெரிதா?

      ஜிடிபியில் ஆயத்த ஆடைத் துறை அதிக பங்களிப்பா? ஐடி துறை அதிக பங்களிப்பா?

      படித்த அறிவாளி மாதிரி பேசிக்கிட்டு ‘நாத்திகம் பேசுற நாட்டில் மழை பொழியாது/அதிக மழை பொழியும்’னு அறிவியல்பூர்வமா பேசுறது இந்தியாவில்தான் சாத்தியம்..இருந்தாலும் நீங்க அறிவாளிதான்..நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி உங்க தரப்பை ஆணித்தரமா நிரூபிங்க..

      • ஐ.டி துறையில் சேவை வரியை கூட ஆயத்த ஆடை துறை வழஙகுவது இல்லை. மேலும் ஐ.டி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வழ்ங்கும் வருமான வரி ஆயத்த ஆடை துறையின் பணியாளர்க்ளால் வழங்க முடியுமா?? ஐ.டி துறை படித்த பட்டதாரிகளுக்கு ஒரு வரபிரசாதம். ஆயத்த ஆடை துறை தொழிலாளர்கள் உங்களை போன்ற செஞசட்டை கூட்டதிற்க்கு புல் கட்டு. ஐ.டி துறை இஙகுள்ள குப்பனையும் சுப்பனையும் வெள்ளை தோல் தடித்த கூட்டத்தை விட மேதாவிகள் என்று மெய்பித்த துறை. ஆயத்த ஆடை துறை தொழிலாளர்கள் வெள்ளை தோல் தடித்த அட்டை கூட்டதிற்க்கு கிடைத்த ரத்தம் செழுத்த பிண்டம். இந்த நாட்டின் படித்த பட்டதாரிகளை செஞ்சட்டை கூட்டதிடம் இருந்து காப்பாற்ற வந்த தேவ தூதர். முதலாளியை அசிங்கமாக கூட்டதில் பேசி கைதட்டு போட வைக்கும் கூட்டத்தை குறைத்த ஒரு துறை ஐ.டி துறை. மல்லாந்து படுத்து எச்சில் துப்பாதே!!. கிணறு தவளைக்கு வளர்ச்சி பொறுக்காது!!!. இத்தனைக்கும் மேல் நான் ஐ.டி துறை சார்ந்தவன் கிடையாது.

    • According to me the things you say are utter non sense.If it is due to real it could be compensated in many other ways.

      We Indians should always live united.
      I don’t thnk there is a point in talking about athesium or such stuffs over here.

      And your last line “Vetti padaigal”, Some one somewhere should take a lead to have a good democratic nation right.

      Above all if you mean to say she does everything for public interest she can do them in anyway not like this.

      Increasing bus fare lead to unwanted pay for private buses.What’s the need for it?

  15. வருகின்ற சனி முதல் தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது. கனி ஆண்டி வரும் சனி முதல் மெழுவர்த்தி உற்பத்தி தொடங்க போகிறார். 6 மாத டிப்ளமோ கோர்ஸ் திகாரில் கற்றதன் பலனை தமிழக மக்களுக்கு அளிக்கப்போகின்றார்.

  16. சட்ட மன்ற தேர்தலுக்கு முன் நடந்த கட்சிகளின் இலவச (மிக்சி / கிரைண்டர் , மிக்சி + கிரைண்டர் + மின் விசிறி, முதியோர் இலவச பேருந்து பயணம் ) அறிவிப்புகளைக் கண்டு வெறுப்பு அடைந்த எனது நண்பர், இதற்க்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா என்று கேட்டார்.

    இதை நீதி மன்றத்தால் தடுக்க முடியாது என்று பதிலுரைத்தேன். மேலும் இதைத் தடுக்க ஒரு வழி உண்டு.. சுமார் ஒரு வார காலம் மக்கள் பயணச் சீட்டு வாங்காமல் சென்றால் எந்த அரசாக / கட்சியாக இருந்தாலும் பயம் கொள்ளும். உடனே இந்த இலவச அறிவிப்புகளை மறுத்து விடுவார்கள் என்று சொன்னேன்.

    அது நடக்கிற காரியம் இல்லை என்று அந்த நண்பர் சொன்னார்.

    சென்ற வாரம் நான் இந்த செஞ்சட்டை தோழர்களை ப்ரோட்வே பேருந்து நிலையத்தில் பார்த்தேன். அவர்கள் மக்களிடம் உண்மையை விளக்கி பரப்புரை செய்தார்கள்.

    வாழ்த்துக்கள்.

  17. ’’இங்க எதுக்குயா பஸ்ஸை நிறுத்தின..?’’

    ’’சார்…’’ அதிர்ந்த நடத்துனர், ’’நீங்களே இப்படி சொன்னா எப்படி சார்? இவர் சொன்னதை கேட்டீங்கல? போராடறாங்க சார்…’’

    ’’அதுக்கென்ன இப்ப? பஸ்ஸுக்குள்ளதான போராடறாங்க, ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த? உங்க டிப்போவுக்கு போய் பஞ்சாயத்துனா பேசிக்க, இல்ல சமரசம்னா பண்ணிக்க… போ… போ…’’

    கவுண்டமணி – செந்தில் காமடி போல் உள்ளது. சிரித்து வயிறு நொந்து போய்விட்டது.வாழ்த்துக்கள் தோழர்களே.

  18. […] ‘தோழர், தயவு செய்து உங்க சிவப்புச் சட்டையை எனக்குக் கொடுத்துட்டுப் போங்க!’  பேருந்துக்கு நோ டிக்கெட்! சென்னையைக்… […]

  19. Will this group do similar activities against corruption before government offices and politician houses? Ticketless travel does not create any moral awareness among public.

    • The revolutionary groups with which Vinavu relates, consider that corruption is an inevitable result of the present structure of governance and politics. To create the awareness of this among the people, they have to mingle with people and explain it. There is no hard necessity to sit before government offices and politician houses! The people in the abovesaid offices and house are not aliens came from outside the world. They arise from this society only. So, injection of thought process should be directed to society only.

      If you think, this is not correct way and it would not create a moral awareness, then please prescribe a ‘genuine way’ for the protest. Thank you.

  20. when J took charge she told after 6month power will not go because power will buy from Gujarat, but she not did this and she increased MLA salary and gave LAPTOP to all MLA.MLA are poor peoples?? Funny…THINK!!!
    In this 6month can u say any good news she(JAYALALITHA) did??
    I agree DMK did wrong but they not play with poor peoples.
    So better any other new good person will lead us!!!(???)

  21. தோழர்களுக்கு வாழ்த்துக்கள் …இந்த போராட்டம் அணைத்து மாவட்டங்களிலும் தொடர வேண்டும் தோழர்களுடன் சேர்ந்து மக்களும் களம் இறங்க வேண்டும்..போராட்டம் வெற்றி அடைய வேண்டும்..

    தோழர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  22. முட்டாள்தனமான போராட்டம்! இதனால் அ.போ.நிறுவனங்கள் மேலும் நஷ்ட்டப்படும். பிறகு அரசு சத்தமில்லாமல் பஸ் எண்ணிக்கையைக் குறைத்துவிடும். 10 சர்வீஸ் இருந்த இடத்தில் 1 சர்வீஸ் என்று ஆகும். அதிக க் கட்டணம் கொடுத்தாலும் அட் லீஸ்ட் பஸ் சர்வீஸ் இருக்கிறதே இப்போது? அதுவும் இல்லையென்றால் என்ன ஆகும்?

    இதையே காந்திய வழியில் செய்யலாம்.அதாவது, காந்தியாக இருந்திருந்தால் டிக்கெட் எடுத்திருக்க மாட்டார்–ஆனால் பேருந்திலும் ஏறியிருக்க மாட்டார்! நடந்தே செல்வது என்று முடிவெடுத்திருப்பார்.

    அரசு பேருந்து கட்டணத்தைக் குறைக்கும் வரை 20 கி.மீ. என்றாலும் நடந்தே செல்வது என்ற போராட்டத்தை நடத்திப் பாருங்கள்! ஒரே நாளில் இந்தியா முழுவதும் ஆங்கில, பிற மொழி ஊடகங்களில் நல்ல கவரேஜ் கிடைத்திருக்கும்! கழுத்தில் சாஃப்ட்வேர் மாலை ஆட, இளைஞர்களும், யுவதிகளும் ஓ.எம்.ஆர். ரோடில் வேர்வை சிந்த நடந்துபோனால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும்! அப்படியே காமிராவைப் பான் பண்ணி அரசு வால்வோ பேருந்து காலியாகச் செல்வதைக் காட்டணும். முக்கியமாக அந்த இளைஞர்கள், 10 ரூ அதிகம் கொடுப்பது தங்களுக்குப் பிரச்சினை இல்லை, ஏழைகள் என்ன செய்வார்கள் பாவம், அவர்களுக்காகவே இப்படிப் போராடுகிறோம் என்று பேட்டி கொடுக்க வேண்டும்.

    அர்னாப் கோஸ்வாமிகளின் கிடுக்கிப் பிடிக்கேள்விகளுக்குப் பயந்து வேறு வழியின்றி அரசு 2 வது நாளே கட்டணத்தைக் குறைக்கிறதா இல்லையா பாருங்கள்! (அதில் ஒரு மாற்றுத்திறனாளி கஷ்டப்பட்டு நடந்து செல்வதை டி.வி.யிலும் யூ.டியூபிலும் பேட்டியாகப் பலமுறை வரும்படி செய்ய வேண்டும்! அவருக்குத் தனிப்பட்ட முறையில் சம்பளம், பேட்டா கவனித்துக் கொள்ளலாம். அவர் நிஜத்தில் நடக்கப்போவது 5 நிமிடம் மட்டுமே!)

    மொத்தத்தில், ‘தியாகம் இல்லாத போராட்டம் வெற்றி பெறாது’ – அன்றைய காந்தி. ‘மீடியா கவரேஜ் இல்லாத போராட்டம் வெற்றி பெறாது’ – இன்றைய காந்தி. ஃபேஸ் புக் காலத்துக்குத் தகுந்த மாதிரி போராட்ட வடிவத்தை மாத்தனும்ந சும்மா போலீஸில் அடி வாங்கிக் கொண்டு தியாகம் என்று அர்த்தமில்லாமல் பேசக் கூடாது.

    தெரியாமல்தான் கேட்கிறேன், வித்தவுட்டில் போவது நம் மக்கள் (சிலர்) காலம் காலமாகச் செய்வதுதான்…இதில் என்ன போர்க்குணம் இருக்கிறது? இவ்வளவு பேசும் நீங்கள் பென்சில் சீவுகிற கத்தியையாவது தொட்டிருப்பீர்களா என்பதே சந்தேகம்!

    உழைக்கும் மக்கள் போராடினால் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப் படுவதற்கு மேல் ஒன்றும் நடக்காது; மிடில் கிளாஸ் போராடினால்தான் இன்றைய உலகில் வெற்றி. இதுவே நிதர்சனம். போலீஸ் அடி, உதையெல்லாம் இல்லாத கிளீன், சானிட்டைஸ்டு போராட்டம் என்றால்தான் அவர்கள் வருவார்கள்.

    பை தி வே, உங்க உழைக்கும் வர்க்கமே இப்ப என்.ஆர்.இ.ஜி.ஏ.வில் ரெகுலர் ஜாப், ஏடிஎம் கார்டு, செல்ஃபோன், பிள்ளைகளுக்கு ஆங்கில மீடியக் கல்வி, ஷாப்பிங் மால்களில் சனி- ஞாயிறு என்று மிடில் கிளாஸ் மனோபாவத்துக்கு வந்து ரொம்பக் காலம் ஆச்சு பாஸ்! இது புரியாத உங்களது சோ கால்டு ‘போர்குணம்’ அல்லது (இல்லாத) ‘கொலைவெறி’ போராட்டங்கள் எந்த சுவடும் இல்லாமல் மறைந்துவிடுவதைத் தவிர உருப்படியாக ஒன்றும் சாதிக்காது.

    காந்திய வழியில் அறப்போர் (நடந்து செல்லும் போராட்டம், உண்ணாவிரதம்) என்று சொல்லுங்கள் – ஃபேஸ் புக்கில் லிங்க் தருகிறேன்.

    காந்தி அன்றும், இன்றும், என்றும் உலகிற்கு உண்மையான வழிகாட்டி. ‘யாருக்கும் இழப்பில்லாத போராட்டம், அட் தி சேம் டைம் யூ மேட் யுவர் பாயிண்ட்’ என்று இருப்பதே அவரது வெற்றி. அன்று காந்தி, இன்று அண்ணா (துரை அல்ல!) வழியில் அயராது உழைப்போம்!

    வால் ஸ்ட்ரீட் போராட்டம் என்னவாம்? அச்சு அசல் காந்திய- அண்ணா ஹசாரே வழி அறப்போர்தானே! (‘அறம் பாடுவது’ என்ற தொன்றுதொட்ட தமிழ் மரபையும் இங்கு சேர்த்துப் பார்க்கலாம்)

    • புரட்சிகர போராட்டம் குறித்த பதிவில் ஏன் சம்மந்தம் இல்லாமல் “நாட்டைக் கூட்டிக் கொடுப்பது எப்படி ?” என்று விளக்கியிருக்கிறீர்கள் அனோனி. இதனை ஜெ, கருணா , மன்மோகன்,ப.சிதம்பரம், அத்வானி , வாஜ்பாய், நரேந்திர மோடி கும்பலிடம் போய்க் கூறவும். சன்மானம் கிடைக்கலாம் …

      • ***** புரட்சிகர போராட்டம் குறித்த பதிவில் ***

        பொல்லாத புரட்சி! அடப் போய்யா..உங்களைத் திருத்தவே முடியாது. ஆனா ஒன்னு.. நிஜமான ஏழைகள் உங்கள் புரட்சி பம்மாத்தைப் புரிந்துதான் இருக்கிறார்கள்! கீரி- பாம்பு சண்டை என்கிற மோடி மஸ்தான் வேலைதான் இது! இரண்டுமே ஒருநாளும் நடக்காது!

  23. அட போங்கப்பா! Anony rightly nailed it. ஒரு தப்பை (அப்டி னு நீங்க நெனக்கிறத நான் தடுக்க முடியாது. எனக்கு உரிமையும் கிடையாது) புரிய வைக்க இன்னொரு தப்பு செய்வது என்ன விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. உதாரணம் : ஜெ வைப் போல் மாறு வேடம் கொண்டு அவரை அடிப்பது போல் நாடகம் நடத்துவது எல்லாம் நாகரீகம் அல்ல. Mindless violence. காழ்ப்புணர்ச்சி. இதனால தான் இந்த மாதிரியான புரட்சி என்ற பெயரை அவலப் படுத்தும் இது மாதிரியான போராட்டங்களுக்கு நடுத் தர மக்கள் ஆதரவு தர மறுக்கிறார்கள்.

    • ???நடுத் தர மக்கள் ஆதரவு தர மறுக்கிறார்கள்.???

      சிறிராம் சாருக்கு பயம்மா இருக்குங்கறத கூட எவ்வளவு பாலிசா சொல்ல தெரிஞ்சிருக்கு பாருங்க, நீங்களும் இருக்கீங்களே.. நியாயப்படி கோபாவேசத்தோடு தி ஹிண்டுவுக்கு, This is basically, fundamentally, politically, hypothetically, ethically, cavincally wrong thing to hike the price like this அப்புடின்னு ஒரு கடிதாசி எழுதியிருக்க வேண்டாமோ!!!!! சரியான விவரங்கெட்ட ஆளுங்களா இருக்கீங்களே….

  24. சென்ற வாரம் சென்னை சென்றிருந்தேன்.மின் தொடர் வண்டியில் 80 கிலோ மீட்டர் தூரப் பயணத்திற்கு கட்டணம் ரூ19. சென்னையில் 6 கீ.மீ. தூர நகரப் பேருந்து பயணத்திற்கு கட்டணம் ரூ13. என்ன கொடுமை இது?

    நேற்றும் சென்னை சென்றிருந்தேன். நகரப் பேருந்தில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கினாலே சாதாரணக் கட்டணம் ரூ5. மிதவைக் கட்டணம் ரூ7. இனி சென்னை நடைபாதைகளில் நெரிசல்தான்.

    கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் ஒரு பகற்கொள்ளை. பால் விலை உயர்வு, மின்கட்டண உயாவு, பேருந்து கட்டண உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு…இப்படி கட்டணங்களை உயர்த்துவதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய். ஆனால் இவை மக்கள் நலத்திட்டங்களுக்குச் செல்லாது. திட்டங்கள் அமலாக்கப்பட்டதாக கணக்கெழுதி தேர்தலுக்காக போட்ட முதலை எடுத்துக் கொள்வார்கள் ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதிகள். நமது தொண்டைகள் காய்ந்தால் என்ன! அம்மா தன் பிள்ளைகளுக்கு பால் வார்க்க வேண்டாமா? நாம் இவர்களுக்கு பால் ஊத்தும் வரை இதற்கு முடிவேது!

  25. பிரிட்டிஷ்காரன் விட்டுட்டு போன புழுத்துப்போன விதிமுறைகளை மாற்றாமல் வைத்துக்கொண்டு அரசு நடத்தும் வரை இப்படித்தான் இருக்கும் ஒரு பியுனை வேலைக்கு எடுக்கவேண்டுமேன்றால் கூட அவன் பத்தாவது பாஸ் பண்ணியிருக்கிரானா எவ்வளவு மார்க் என்றெல்லாம் பார்த்து எடுக்கப்படுகிறான் ஆனால் மொள்ளமாரி முடிச்சவுக்கி எவன் வேணாலும் தேர்தல்ல நின்னு மந்திரியாயிடலாம் அவனுங்க என்ன வேணா ரூல் போட்டு நாட்டை குட்டிச்சுவர் பண்ணலாம் என்னடா நாடு இது.. எங்க போயிட்டிருக்கு.. இதுகளைஎல்லாம் தொடப்பகட்டையை வச்சு கூட்டி பெருக்கி கொளத்துல போட்டுட்டு புதுசா ஆட்டத்தை(விதிமுறைகளை) ஆரம்பிங்கப்பா..இந்த கட்சிகளை நம்பி வீனாப்போனமப்பா.. சின்ன சின்ன சிங்கப்பூர் மலேசியா எல்லாம் எப்படி முன்னேறியிருக்கு பாருங்கப்பா.. புது சமுதாயம் வேணுமப்பா.. இவனுங்ககிட்ட இருந்து நம்பள காப்பாத்த மறுபடியும் ஒரு காந்தி வரணுமப்பா…..

  26. This isn’t fair..

    You travel without Tickets and Protest and make other passengers to do the same.. Why you didn’t protest to this much level when the Government gives Free TV, Grinder, Mixi etc.. Getting all those and Protesting if the Bus rates increases..

    I don’t say this is Ideal government.. But we Public also not Good..

    Whatever You call this a Protest or an Initiation for Good India, Upto me This is Completely BULLSHIT..

    • பத்திரிக்கைகளில் நேற்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. விருதுநகர் கோட்டத்தில் ஓடும் பஸ்களின் எண்ணிக்கையை வகை வாரியாக ஒரு அன்பர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருக்கிறார். அதற்கு நிர்வாகம் பதிலளித்துள்ளது.

      டவுன்பஸ் :
      சாதாரண பஸ் – 218
      எல்.எஸ்.எஸ். – Nil
      சிட்டி எக்ஸ்பிரஸ் – 3
      மொத்தம் – 221

      ஆனால் உண்மை நிலவரம் :
      சாதாரண பஸ் – 23
      எல்.எஸ்.எஸ். – 190
      சிட்டி எக்ஸ்பிரஸ் – 8
      மொத்தம் – 221

      எல்.எஸ்.எஸ். என்றால் சில நிறுத்தப் பேருந்து என்பது வெள்ளிடைமலை. ஆனால் ஓடும் அத்தனை பஸ்களும் அத்தனை நிறுத்தங்களிலும் நின்று செல்கின்றன. அடிப்படையில் எல்லாமே சாதாரண பஸ்கள்தான். ஆனால் எல்.எஸ்.எஸ் எனும் ஸ்டிக்கர் ஒட்டி கூடுதல் வசூல் செய்வது அராஜகம்தானே? மோசடிதானே? பச்சைப் பகற்கொள்ளைதானே? நம்பிக்கை மோசடிதானே? எவன் கேள்வி கேட்பான் என்ற ஆணவப்போக்குதானே?

      இதைக் கேள்வியெழுப்பியபின், இன்றைக்கு ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. விருதுநகர் கலெக்டரின் தலையீட்டின் பேரில் 80 எல்.எஸ்.எஸ். பஸ்கள் மட்டும் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன என்று. (அதாவது ஸ்டிக்கர் உரிக்கப்பட்டிருக்கிறது; கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது)

      இப்படி ஒரு பிற்போக்குத்தனமான அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்க நீங்கள் என்ன மாதிரியான போராட்ட முறைகளை முன்வைக்கிறீர்கள்?

      நீங்கள் முன்வைக்க மாட்டீர்கள். காரணம், இப்படி உண்மையாக அறச்சீற்றம் கொண்டு போராடுவோரை ‘உணர்ச்சி வசப்படுபவர்கள்’ என்ற முத்திரையைக் குத்தும் ‘உணர்ச்சி வசப்படா வர்க்கத்தை’ – இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் – ‘உணர்ச்சியே இல்லாத ஜட வர்க்கத்தை’ – சேர்ந்தவர் நீங்கள்.

    • If something is done wrongly it doesn’t mean everything should be wrong.
      We got mixi,grinder doesn’t mean we have to accept all the BULLSHIT the government do to us.

      It is actually a very good initiative.Hope t continues in the same way till the end.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க