Wednesday, October 4, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்!

      1. முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்! – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை!!
      2. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: கருநாகத்தின் படையெடுப்பு!
      3. பால் விலை – பேருந்துக் கட்டண உயர்வு: பாசிச ஜெயாவின் வழிப்பறிக் கொள்ளை!
      4. “இப்படிப் போராடு!” – தமிழக அரசின் தீவட்டிக் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்!
      5. “வல்லரசு கனவுக்கு நாட்டு மக்களைப் பணயம் வைக்காதே!” – கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ம.உ.பா.மை ஆர்ப்பாட்டம்!
      6. தியாகத் தோழர் செந்திலின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! ரவுடியிசத்துக்கு எதிராகப் போராடுவோம்!!
      7. அணுஉலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்! “கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம்
      8. தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்!
      9. மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம்: அனுபவமும் படிப்பினையும்!
      10. தி.நகர் ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு….?
      11. எஃப்-1 கார் பந்தயம்: புதுப் பணக்காரக் கும்பலின் களிவெறியாட்டம்!
      12. லிபிய ஆக்கிரமிப்பு: மறுகாலனியாதிக்கத்தின் புதிய சோதனைச்சாலை!
      13. “அரசு பயங்கரவாத அட்டூழியங்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!” – ம.உ.பா.மையத்தின் அறைகூவல்!!
      14. பார்ப்பன ஊடகங்கள்: ரத்தத்தின் ரத்தங்களை விஞ்சிய விசுவாசிகள்!
      15. அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: நுனி முதல் அடி வரை மோசடி!
      16. மூளைக் காய்ச்சலுக்கு பலியாகும் குழந்தைகள்: பட்டினி போட்டது அரசு! கொன்று போட்டது தொற்றுநோய்!!
      17. தோழர் ஏ.எஸ். முத்துவுக்கு சிவப்பஞ்சலி!

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

  1. பழிவாங்கும் நாளைக் குறி :

    எருதுகளை ஓட்டிவந்து
    ஏர்க்கலப்பை பூட்டிவந்து
    கழனிக்காடு உழுதாலும்
    கதிர்நெல்லு அறுத்தாலும்

    உழக்கு நெல்லு உருப்படியாய்
    வரவில்லை வீடு – அட
    உடல் வளைந்தும்தான் நமக்கு
    உடுக்கத் துணி ஏது?

    விதைத்ததுதான் விளைந்தாலும்
    விளைந்ததெல்லாம் அறுத்தாலும்
    கழுதைபோல பிழைப்பாகிப்போச்சு
    கால்வயிறே பசியாறலாச்சு

    கையும்காலும் உழைத்தாலும்
    கிடைக்கவில்லை சோறு – பல
    காணி நிலம் விளைந்தாலும்
    திருடுவது யாரு?

    எஃகையும் இரும்படித்தோம்
    இயந்திரமும் பல பிடித்தோம்
    அந்தரத்தில் ஆடித் தொங்கி
    ஆயிரம் பொருட்கள் செய்தும்

    தருத்திரப்பேய் தினம் பிடித்து
    தாக்குதடா நம்மை – புகை
    தணல்தணிந்த அடுப்பினிலே
    தூங்குதடா பூனை.

    தெய்வத்தைத் தொழுதேற்றி
    திருப்புகழைப் படித்தாலும்
    கருவரைக்குள் நுழைந்து நின்றால்
    கன்னித்தமிழ் தீட்டென்று

    சாமிவந்து நம் வாழ்வில்
    சபித்துவிட்ட சாபம் – அதை
    கும்பிட்டுப் பார்த்தும் நமக்கு
    கொடுத்ததென்ன லாபம்?

    சொட்டும் வியர்வை கரிக்க
    சூரியனும் சுட்டெரிக்க
    பகலெல்லாம் உழைத்த பணம்
    பசியாறப் போதவில்லை

    கூலி வாங்கியும் குடும்பம்
    கும்பி காயும் சோகம் – ஒரு
    போக்கிடமும் தெரியாமல்
    பொங்கிவரும் கோபம்

    குருதியெல்லாம் கொப்புளிக்க
    கோபத்தில் கொந்தளிக்க
    காய்ந்துபோன வயிறெல்லாம்
    காரணங்கள் கேட்டுவிட

    தினவெடுக்கும் தோட்களெல்லாம்
    தேடுதடா ஆளை – அவன்
    குலையறுக்க தலையறுக்க
    குறிக்குதடா நாளை!

  2. புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழை பேருந்துகளில் விற்ற அனுபவம்:

    முதல் பேருந்தில் பேசும் போது விலைவாசி உயர்வு, பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு பற்றி முக்கியமாக ஆரம்பித்தேன்.

    அடுத்தடுத்த பேருந்துகளில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு – அதாவது நம்ம ஊர் மளிகைக் கடை, காய்கறிக் கடை, பழக்கடை, பெட்டிக் கடை வைத்து கோடிக்கணக்கான பேர் பிழைக்கும் லட்சக்கணக்கான கடைகள் உள்ளன. இப்போது இந்தத் துறையில் வெளிநாட்டிலிருந்து பெரிய கம்பெனிகளை உள்ளே விடுவது என்று மத்திய அரசாங்கம் திட்டமிடுகிறது. எதற்கு என்று கேட்டால் அவங்க வந்தா பெரிய பெரிய கடைகளைத் திறப்பாங்க, வசதிகள் அதிகமாகும் என்கிறார்கள்.

    உண்மையில் இது போன்ற பெரிய கம்பெனிகள் எந்த நாட்டுக்கெல்லாம் போனார்களோ அங்கெல்லாம், அவர்கள் சிறிய கடைகளை அழிப்பது நடந்திருக்கிறது. உதாரணமாக தாம்பரத்தில் அவர்களை அனுமதித்தால் ஒரு பெரிய கடை அமைப்பார்கள், சுற்று வட்டாரத்தில் எந்த சிறு கடையும் செயல்பட முடியாதபடி, விலைகளை தற்காலிகமாக குறைத்து அவர்களை அழித்தொழிக்க முயற்சிப்பதுதான் அவர்களது தொழில் முறையே. தனிக்காட்டு ராஜாவாக ஆன பிறகு அவர்கள் விற்பதுதான் விலை, விவசாயிகளுக்கு அவர்கள் கொடுப்பதுதான் விலை என்று சட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள்.

    இதை நாங்கள் சொல்லவில்லை, இந்த பெரிய கம்பெனிகள் போன பல நாடுகளில் இது போன்று நடந்திருக்கிறது என்ற அனுபவம் உள்ளது. இவங்களை ஏன் மத்திய அரசாங்கம் அனுமதிக்கிறாங்க என்றால், அவர்கள் உண்மையில் கவலைப்படுவது இது போன்ற பெரிய கம்பெனிகளின் லாபத்தையும், ஊழல் செய்வதற்கான வாய்ப்பையும் பற்றித்தான், மக்களைப் பற்றி கவலைப் படுவது எல்லாமே பாசங்குதான்.

    இப்படி சில்லறை வணிகம் பற்றிப் பேசும் போது பலர் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பலருக்கு கவலை தரக் கூடிய விஷயமாக இது இருக்கிறது என்று புரிந்தது.

    ஜனநாயகம் என்று சொல்றாங்க, 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நம்ம கிட்ட ஓட்டு வாங்குவது மட்டும்தான் நமக்கு இருக்கும் உரிமை. உண்மையான ஜனநாயத்தில் முடிவெடுக்கும் உரிமை மக்களிடம் இருக்க வேண்டும். இப்போ போன மாதம் திடீரென்று ராத்திரியோடு ராத்திரியா பேருந்து கட்டணங்களையும் பால் விலையையும் ஏற்றி விட்டார்கள். காலையில் சரியான சில்லறையோது பேருந்தில் ஏறினவர்கள், கூடுதல் காசு கொடுக்க முடியாவிட்டால் நடுவழியில் இறக்கி விட்டது கூட நடந்தது. ஏன் விலை ஏத்துனீங்க என்று கேட்டால் பஸ் எல்லாம் நஷ்டத்தில ஓடுது என்றார்கள். ஏங்க நஷ்டம் வருது, நஷ்டத்தை சரி செய்யணும்னா என்ன செய்யணும்? அரசாங்க போக்குவரத்து கழகங்களில் ஊழல் நடக்கிறது என்று நமக்கெல்லாம் தெரியும். டயர் வாங்கினா, ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கினா ஊழல் என்பதால்தான் நஷ்டம் வருது. அதைத் தடுத்து நிறுத்தினால் லாபம் ஆகி விடும். அதை விட்டுட்டு மக்களாகிய நம்ம மடியில் கை வைக்கிறாங்க.

    இது போன்ற பல பிரச்சனைகளை நேர்மையாக, மக்களுக்கு நீண்ட கால தீர்வை நோக்கி செலுத்தும்படி அலசும் பத்திரிகை புதிய ஜனநாயகம், மற்ற பத்திரிகைகள் போல இல்லை. லாப நோக்கின்றி நடத்தப்படுவது. விளம்பரங்களே கிடையாது. மக்களிடம் நேரடியாக விற்பனை செய்து கிடைக்கும் காசை வைத்துதான் நடத்தப்படுகிறது. வாங்கிப் படித்து அரசியல் பார்வையை பெற்று பிரச்சனைகள் குறித்த சரியான நிலைப்பாட்டை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

    பேருந்தின் முன்வாசல் வழியாக ஏறி நான் பேச பின்வாசல் வழியாக தோழர் ஏறி புத்தகங்களை வினியோகிக்க ஆரம்பித்தார். சிலரிடம் படித்துப் பார்த்து விட்டு காசு கொடுங்க என்று கூட கொடுத்தேன் என்று பின்னர் சொன்னார். பேசி முடித்த பிறகு நான் சுற்றுக்குப் போனால் ஓரிருவர் வாங்கினார்கள். பேசியவரிடம்தான் வாங்க வேண்டும் என்று சிலர் இருப்பார்கள்.

    கொஞ்சம் டிப்டாப்பாக, படித்த முகமாய் வெள்ளைத் தோலாய் இருப்பவர்கள் வெளிப்படையாகவே முகத்தில் எதிர்ப்பும் சலிப்பும் காட்டினார்கள். சாதாரண மக்கள் ஆர்வத்துடன் பார்த்தாலும், வாங்காமல் இருந்தவர்கள் பலர். சிலருக்குத் தமிழ் தெரியாது, வட மாநிலங்களிலிருந்து வந்திருந்தவர்கள். சிலருக்கு 10 ரூபாய் ஒதுக்குவது சிரமமாக இருந்திருக்கலாம். மிகச் சிலருக்கு படிக்கவே தெரியாது என்று சொன்னார்கள். ஒவ்வொரு பேருந்திலும் ஓரிருவர் வாங்கினார்கள்.

    அடுத்த 2 மணி நேரமும் பேருந்து பேருந்தாக ஏறி இறங்கி 40 பத்திரிகைகளையும் விற்றுத் தீர்த்தோம். ஒரு தேநீர் கடையில் பைகளை வைத்து விட்டுப் போயிருந்தோம். அங்கு போய் தேநீர் குடிக்கும் போது அருகில் இருந்த இளைஞர் பத்திரிகை வாங்கிக் கொண்டார். தேநீர் கடைக்காரர் கடைசியில் ஒரு இதழ் வாங்கிக் கொண்டார்.

    ஆங்கிலேய ஆட்சியில் காலனியாக்கம், இப்போது வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே விட்டு மறுகாலனியாதிக்கம் என்று அமைப்பின் மையக் கோட்பாட்டை முன் வைத்ததும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. கூடவே கிஷன்ஜி கொல்லப்பட்டதை, மாருதி தொழிலாளர்கள் போராட்டம், பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான புமாஇமு போராட்டம் பற்றியும் பேசினோம்.

    மொத்தத்தில் நாம் விவாதிக்கும் விஷயங்களை மாதத்துக்கு ஒரு முறை மக்கள் முன்பு நேரடியாக பேசி அவர்களது எதிர் வினைகளை பெறுவது மிகவும் பலனுள்ளதாக இருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க