privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமுல்லைப் பெரியாறு:போராட்டக் காட்சிகள்!

முல்லைப் பெரியாறு:போராட்டக் காட்சிகள்!

-

கடந்த சனிக்கிழமை 10.12.2011 முதல் இன்று வரை பல்லாயிரம் தமிழ் மக்கள் கம்பம் கூடலூர் – குமுளி தமிழக கேரள எல்லையில் தினமும் அணிதிரண்டு போரடுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த திணறும் போலீசு படிப்படியாக வன்முறையை அரங்கேற்றி வருகிறது. இன்றும் அங்கே தடியடி நடந்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இங்கே அந்த போராட்டக்காட்சிகளின் படங்களை வெளியிடுகிறோம். தமிழ் மக்களின் நியாயமான உரிமை கோரி நடக்கும் இந்த போராட்டம் வெற்றியடைய தோள் கொடுப்போம்!

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

படிக்க

 1. பேயாட்சியின் ஆணவ ஆட்டம் மக்களின் போராட்டத்தை மாற்றி அமைக்கும். நம்மக்களின் நியாயமான போராட்டத்திற்கு குரல் கொடுப்போம், ஆதரவளிப்போம். புதிய தீர்ப்பை எழுதுவோம்.

 2. முல்லைப் பெரியாறு விவகாரத்தில், நீதி கிடைக்க -தமிழர் நலம் நாடுவோர் அஹிம்சை முறையில் மனதளவில் கடைபிடிக்க வேண்டிய ஆறு (6) உறுதிமொழிகள்:

  1) தமிழர் கடைகளிலேயே வணிகம் செய்வோம்.

  2) உற்பத்தியாகும் பொருட்களை, நமது நலன் விரும்பாதவர்கள்- பயன்படுத்தும் எல்லா செயல்களின்/ ஒத்துழுயாமைக்கு, ஒத்துழைப்போம்.

  3)பெரியதிரை/சின்ன திரை- அண்டை மாநில கவர்ச்சிக்கு கொடுக்கும் பேராதவருக்கு முடிவு கட்டுவோம்.

  4) எங்கெங்கு காணினும் சக்தியடா என்பதை உணர்வோம்.

  5) சாதி,மத,அரசியல் பேதமின்றி- தமிழர்கள் எல்லோரும் அரசுடன் நல்ல செயல்களுக்கு ஒத்துழைப்போம்.

  6)நமக்கு நண்பன் யார்? பகைவன் யார்?—-நல்லவன் யார்? கெட்டவன் யார் ?- என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொண்டு – பகுத்தறிவுடன் செயல்படுவோம்.

  வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
  வாய்ப்புக்கு நன்றி.

 3. முல்லைப் பெரியாறு விவகாரத்தில்,உரிமையை விட்டுத்தர மாட்டோம்: பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

  எல்லோரும் ஜோராக ஒரு தடவை கரவொலி எழுப்பி நம் தங்கங்களை உற்சாகப்படுத்துங்கள்.

  சரி….. இப்படியே சமத்தா, ஒற்றுமையா இருந்தா நம்மை யாரும் லாலிபாப்புக்கு ஏமாத்த முடியாது.இல்லேன்னா நாமே வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கி
  அதை decorate பண்ணும் நிலைக்கு ஆளாகுவோம்- “.- நல்லவை நாடும் தமிழக மக்கள்!

  வாழ்க அரசியல் நாகரீகம்!வாழ்க பத்திரிகைதர்மம்!

 4. “முல்லைப் பெரியாறு:போராட்டக் காட்சிகள்!”

  கேரளத்துக்கு எதிரான கருத்து: திரும்பப் பெற்றார் ப.சிதம்பரம்

  வேட்டியை மடித்து கட்டி விளையாடும் ஜல்லிக்கட்டை, ஏன் ஒழிக்க நினைக்கிறார்கள் என்பதற்கு நீங்கள் தான் காரணமா?…

  இப்பதான் புரியுது! -கவரிமான் சாதி தமிழன்

 5. ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் அதிகமாயுள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை.
  தமிழகத்தில்,அதேநிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல.
  வாய்ப்புக்கு நன்றி.

 6. தமிழுனர்வை மேலும் நீர்த்து போகாமல் செய்த விஜய T. ராஜேந்தர் வாழ்க!

  நயனதாராவிடமிருந்து தங்கள் புதல்வனும்/தமிழ்நாடும் தப்பித்துள்ளது; இது ஒரு பெரிய தமிழக அரசியல் போட்டியை தவிர்த்து உள்ளது.- இதன் மூலமாக தமிழுனர்வை மேலும் நீர்த்து போகாமல் செய்த தங்களுக்கு மொட்டை அடித்து வேண்டுதல் செய்வதாக தமிழ் கடவுள் பழனி முருகனிடம் வேண்டியுள்ளோம் . ஆகையால் அந்நாளில் செந்தமிழ் திரைப்பட உலகத்தினர் அனைவரும்,அண்டைமாநில நடிகைகளுடன் பழனியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்- பகுத்தறிவு தமிழர் பேரவை.

 7. கேரளத்துக்கு எதிரான கருத்து: திரும்பப் பெற்றார் ப.சிதம்பரம்

  வேட்டியை மடித்து கட்டி விளையாடும் ஜல்லிக்கட்டை, ஏன் ஒழிக்க நினைக்கிறார்கள்

  என்பதற்கு நீங்கள் தான் காரணமா?…

  இப்பதான் புரியுது! -கவரிமான் சாதி தமிழன்

 8. கேரள மாநிலத்தவர் திருப்பூரில் கடையடைப்பு

  “ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்.”

  இது கூட பரவாயில்லை, வக்காலத்துக்கு வரும் இங்குள்ள சில உடன் பிறந்தே/ இருந்தே

  கொள்ளும் வியாதிகளை நினைத்தால்…. சீ…..இது ஒரு பொழப்பா????

 9. வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”

  “1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?”

  இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம்./. நம்பிக்கைத் துரோகம். …. தூ….????
  தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!

 10. ” சூடுபட்டும் சொரணை வரவில்லையா தமிழனுக்கு?”-
  “தமிழர்களுக்கு என்று தனி அமைப்புகள், தமிழ்த் திரைப்பட துறையில் மட்டும் இல்லை”- டிசம்பர் 30-ல் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்.-பாரதிராஜா
  பகுத்தறிவு தமிழர்களே!
  தெலுங்கருக்கு – நைனா, அம்மா;
  மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
  கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி;
  தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;
  தமிழர் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருவது சோனியா அரசு மட்டும் தானா???? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே/ வாழும் நாட்டிலே??? சூடுபட்டும் சொரணை வரவில்லையா தமிழனுக்கு?

 11. முல்லைப் பெரியாறு விவகாரம்: பிரதமரைச் சந்திக்கிறார் கருணாநிதி
  பகுத்தறிவு தமிழர்களின் தலைவரே!
  தெலுங்கருக்கு – நைனா, அம்மா;
  மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
  கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி;
  தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;
  என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாத்தியதை சொல்லுகிறோம்.
  கேரள எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இருக்கட்டும். கச்ச தீவை இழந்தது போதும். தமிழகத்தில் கையாலாகதவனாக தமிழர்களை ஆக்கியதற்கு மக்கள் தான் தண்டனை கொடுத்துவிட்டார்களே என்று சும்மா இருந்து விடாதீர்கள் ; பாவ மன்னிப்பு பெற உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்-அல்லது கடையை மூடுங்கள் ; தானே நல்ல வழி பிறக்கும் . தர்மம் வெல்லும். —பாமரத் தமிழன்

 12. கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மை— உம்மன் சாண்டிக்கு கருணாநிதி பதில் கடிதம்.

  ” கேரளநாட்டின் இருபது விழக்காடு மக்களுக்கு தமிழகத்தில் சோறு தேவைப்படுகிறது. அறுபது விழுக்காடு மக்களின் உணவுத் தேவையை தமிழகத்திலிருந்து பெறுகிறார்கள். அவர்களிடம் இன்னுமா பேச்சு வார்த்தை.”—-பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா வசனத்தை இந்த தருணத்தில் உங்களிடம் எதிர் பார்க்க முடியாது. எரிகிறதை பிடுங்குங்கள் கொதிப்பது அடங்கி விடும். தானாகவே தமிழர்களுக்கு நீதியும் கிடைக்கும்.
  செந்தமிழும் பொய் காலின்றி வீர நடை நடக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க