Sunday, October 13, 2024
முகப்புகட்சிகள்காங்கிரஸ்கருமாதியைத் தவிர அனைத்திற்க்கும் சேவை வரி! மக்களே உஷார்!!

கருமாதியைத் தவிர அனைத்திற்க்கும் சேவை வரி! மக்களே உஷார்!!

-

சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் வேலை விஷயமாக அடிக்கடி தென்மாநிலங்களுக்குப் போய் வருவார். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவுக்கு அவர் ரசிகர். அவர் மூலமாக அவரது சென்னை நண்பர்கள் பலரும் அதற்கு ரசிகர்கள். ஒவ்வொரு முறை திருநெல்வேலி வழியாக போகும் போது கால் கிலோ பொதிகளாக ஏழெட்டு வாங்கி பையில் போட்டுக் கொள்வார். சென்னைக்கு வந்து நண்பர்களுக்கு ஒவ்வொரு பொதி கொடுத்து வாங்கின விலை 50 ரூபாய் பெற்றுக் கொள்வார் – ‘எப்போதாவது ஒரு முறை என்றால் காசு வாங்காமல் கொடுக்கலாம், மாதா மாதம் அல்லது மாதத்துக்கு இரண்டு தடவை கட்டுப்படி ஆகுமா’ – நண்பர்களுக்கும் மகிழ்ச்சி, அவருக்கும் ஒரு திருப்தி.

விரைவிலேயே இந்த நண்பருக்கு ஒரு கூடுதல் பொறுப்பு சேர்ந்து விடும். அவர் கொண்டு வந்து கொடுக்கும் அல்வா விலையுடன் 10% சேவை வரி சேர்த்து 55 ரூபாய் நண்பர்களிடன் வசூலித்து, மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அரசாங்கத்துக்குச் செலுத்தி விடும் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டு விடும். மத்திய அரசாங்கம் சேவை வரி விதிப்பில் கொண்டு வர உத்தேசித்திருக்கும் மாற்றங்கள் இதைப் போன்ற எண்ணிலடங்கா சேவைகளை வரி வட்டத்துக்குள் கொண்டு வந்து விடும்.

சேவைகள் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 63% ஆக இருக்கின்றன. சேவை வரியை மேலும் மேலும் சேவைகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் வரி வருமானம் 20% அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தற்போது பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள இன்னின்ன சேவைகளுக்கு 10% வரி என்று இருக்கும் சட்டத்தை மாற்றி, புதிதாக வெளியிடப்படும் ‘எதிர்மறை’ பட்டியலில் இல்லாத அனைத்து சேவைகளுக்கும் 10% (அல்லது எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்படும் வீதத்தில்) வரி என்பது விரைவில் அமலுக்கு வரப் போகிறது.

எதிர்மறை பட்டியல் அடிப்படையிலான சேவை வரிக்கான அறிவிப்பு நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. “சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் எவரும் வரிக்குட்பட்ட நபர் என்று வரையறுக்கப்படுகிறார். அவரது நடவடிக்கை லாப நோக்கத்தில் செய்யப்பட்டாலும் சரி, இலாப நோக்கம் இன்றி செய்யப்பட்டாலும் சரி, வரி வசூலித்துக் கட்ட வேண்டியது அவர் பொறுப்பு. கூடவே எந்த ஒரு நடவடிக்கையையும் சேவை என்று அறிவிக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது”

சேவை வரி, விற்பனை வரி போன்ற மறைமுக வரிகள் நுகர்வோரிடமிருந்து நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு செலுத்தப்பட்டு விடுகின்றன. அந்த வகையில் இந்த சேவை வரிச்சுமையை அன்றும் இனியும் சுமப்போர் மக்கள்தான்.

நிறுவனங்களில் லாபத்தின் மீது அல்லது தனி நபரின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வருமான வரி போன்ற நேர்முக வரிகளைப் பொறுத்த வரை வரி செலுத்த வேண்டிய பொறுப்பு வரி கட்ட வேண்டியவரிடமே இருக்கிறது. நிறுவனங்களின் லாபத்தின் மீதான கார்பொரேட் வருமான வரி முதலாளிகளின் வருமானத்தில் கை வைப்பது. அதை எத்தனை வழிகளில் ஏய்க்க முடியுமோ அத்தனை வழிகளிலும் அவர்கள் கில்லாடிகளாக இருப்பதால், அரசாங்கம் கெஞ்சிப் பார்த்தும் முடியாமல், வரி வீதத்தை வெகுவாகக் குறைத்து, தயவு செய்து வரி செலுத்தும்படி முதலாளிகளை அடிபணிந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு மேல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வரிச்சலுகை அவர்களுக்கு தரப்படுகிறது.

உதாரணமாக ஒருவரது மாதாந்திர தொலைபேசி கட்டணம் 900 ரூபாய் என்றால் அதில் செலவுகள் போக நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபம் 10% ஆக இருக்கலாம் (90 ரூபாய்). அதாவது, நிறுவனத்தின் எல்லா செலவுகளும் போக அனில் அம்பானிக்கு வழங்கப்படும் பல லட்ச ரூபாய் இயக்குனர் சம்பளம், முதலீடாக வாங்கி வைத்த கருவிகளின்/இயந்திரங்களின் தேய்மானம், வங்கியில் வாங்கிய கடனுக்கு கட்டும் வட்டி உள்ளிட்ட எல்லா செலவுகளும் கழித்த பிறகு 90 ரூபாய் லாபம். அந்தவகையில் இலாபத்திற்கு முன்பாகவே மறைமுக இலாபம் முதலாளிகளுக்கு போய்ச்சேருகிறது.

அந்த 90 ரூபாயில் 33% கார்பொரேட் வருமான வரி விதித்தால் அரசுக்குக் கிடைப்பது சுமார் 30 ரூபாய். இதன் மூலம் அரசாங்க வரி வருமானத்தை உயர்த்த வேண்டுமானால் வரி வீதத்தை 50% (45 ரூபாய்) அல்லது 80% (72 ரூபாய்) ஆக்க வேண்டியிருக்கும். நம் அதியமான் சொல்வது போல அது முதலாளிகள் மீது தாங்க முடியாத பாரத்தைச் சுமத்தி அவர்களை வரி ஏய்க்கத் தூண்டி விடும். அத்தகைய கஷ்டத்தை முதலாளிகளுக்குக் கொடுக்க விரும்பாமல் அரசு உச்சபட்ச கார்பொரேட் வருமான வரியை சுமார் 33%ஆக வைத்திருக்கிறது. இதுதான் 80களுக்கு முன்பு 90% ஆக இருந்த அதிகபட்ச வருமான வரி வீதம் இப்போது 33% ஆக குறைந்த கதை.

அதிகரித்துக் கொண்டே வரும் அரசு செலவுகளுக்கு வேறு என்னதான் வழி? இங்குதான் வருகின்றன சேவை வரி போன்ற வரிகள். அவை நுகர்வோரின் மடியிலிருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கி அரசுக்குக் கொண்டு சேர்ந்து விடும்.

மேலே சொன்ன தொலைபேசி பில்லில் கட்டணத்துக்குக் கீழே சேவை வரி என்று தனியாக கணக்கிட்டு இதை வசூலித்திருப்பார்கள். 900 ரூபாய் மாதாந்திர கட்டணத்தில் சேவை வரியாக 10%யும் கூடுதல் கட்டணம் 0.3% சேர்த்து 993 ரூபாய் ஆக பில் வந்திருக்கும். நிறுவனத்தின் லாபத்திற்கு பங்கம் இல்லாமல் நேரடியாக பயனாளரிடமிருந்து வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறது. ‘வரி ஏய்க்கப்பட்டு விடுமே’ என்று பயப்படத் தேவையில்லை!

சுமக்கப் போவது நேர்மையான பொதுமக்கள்!

வசூலிக்கப் போவது லாபத்தில் பாதிப்பு ஏற்படாத நேர்மையாக இருக்க முடியாத கார்பொரேட்!

வருமானம் வருவது அரசாங்கத்துக்கு!

கார்பொரேட் லாபத்துக்கு 90% வரி விதித்து முதலாளிகளை கொடுமைப்படுத்துவதை விட, மொத்தக் கட்டணத்தில் 10% சேவை வரி விதித்து பொதுமக்களிடமிருந்து நோகாமல் நொங்கு நோண்டி கொள்கிறார்கள் இந்த ‘மக்கள் நல’ அரசுகள்.

“சேவைகளை வரி விதிப்பிலிருந்து விட்டு வைப்பதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை. பொருட்களின் விற்பனைக்கு வரி விதிக்கப்படும் போது, பல நாடுகளில் பொருட்கள் விற்பனையும் சேவை விற்பனையும் வரி விதிப்பைப் பொறுத்த வரை ஒரே மாதிரி கருதப்படும் போது நமது நாட்டிலும் சேவைகளின் மீது வரி விதிக்க என்ற திசை நோக்கிய பயணத்தின் எளிய துவக்கமாக, தொலைபேசி, ஆயுள் காப்பீடு தவிர்த்த காப்பீடு, மற்றும் பங்கு தரகர்களின் சேவைகளின் மீது இந்த நிதியாண்டு முதல் 5% வரி விதிக்கப்படுகிறது”

1994-95க்கான நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்தி, அப்போதைய நிதி அமைச்சர், கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்து இந்தியாவை வல்லரசாக்கிய மாமேதை மன்மோகன் சிங், இப்படி சேவை வரியை இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்தார். 3 சேவைகளின் மீது 5% வரி என்று ஆரம்பித்த சேவை வரி இப்போது 119 சேவைகளின் மீது 10% ஆக உயர்ந்திருக்கிறது.

நிதியாண்டு

வருமானம் (கோடி ரூபாய்)

முந்தைய ஆண்டை விட அதிகரிப்பு

சேவைகளின் எண்ணிக்கை

வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை

முந்தைய ஆண்டை விட அதிகரிப்பு.

1994-95

410

    Base Year

3

3,943

      Base Year

1995-96

846

106.00

6

4,866

23.41

1996-97

1,022

21.00

6

13,982

187.34

1997-98

1,515

48.00

18

45,991

228.93

1998-99

1,787

18.00

26

107,479

133.70

1999-00

2,072

16.00

26

115,495

7.45

2000-01

2,612

23.00

26

122,326

5.91

2001-02

3,305

26.00

41

187,577

53.34

2002-03

4,125

25.00

52

232,048

23.71

2003-04

7,890

91.00

62

403,856

74.04

2004-05

14,196

80.00

75

774,988

91.89

2005-06

23,053

62.00

84

846,155

9.18

2006-07

37,482

63.00

99

940,641

11.17

2007-08

51,133

36.00

100

1,073,075

14.08

2008-09

60,702

19.00

106

1,204,570

8.78

2009-10

58,319

-3.93

117

1,307,286

8.53

கதை இன்னும் முடியவில்லை, இனிமேல்தான் சுவராஸ்யம் ஆரம்பிக்க இருக்கிறது.

எதிர்மறை பட்டியல் அடிப்படையிலான சேவை வரிக்கான அறிவிப்பு நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. “சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் எவரும் வரிக்குட்பட்ட நபர் என்று வரையறுக்கப்படுகிறார். அவரது நடவடிக்கை லாப நோக்கத்தில் செய்யப்பட்டாலும் சரி, இலாப நோக்கம் இன்று செய்யப்பட்டாலும் சரி, வரி வசூலித்துக் கட்ட வேண்டியது அவர் பொறுப்பு. கூடவே எந்த ஒரு நடவடிக்கையையும் சேவை என்று அறிவிக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது”

முதலாளிகளுக்கு வரி ஏய்ப்பு செய்யும் தொந்தரவு ஏற்பட்டு விடக் கூடாதே என்ற நல்ல நோக்கத்தில் இந்த சுமையை ஏற்றுக் கொள்வதுதான் தேசப் பற்றுள்ள குடிமகனுக்கு அழகு!

தற்போதைக்கு விலக்கு அளிக்கப்படப் போவதாக சொல்லப்பட்டுள்ள சேவைகள், இந்த பட்டியலில் சில நீக்கப்படலாம். ஒவ்வொன்றையும் கவனமாக படித்துப் பார்த்து விடுங்கள். இதில் இல்லாத எந்த ஒரு சேவைக்கும் பணம் வாங்கினால் சேவை வரி கட்ட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு வந்து விடும்.

1. அரசு, நீதித் துறை, ரிசர்வ் வங்கி மற்றும் அரசு ஆணையங்கள் அளிக்கும் சேவைகள்.

2. அரசு கழகங்களில் நியமிக்கப்படும் தனிநபர்களின் சேவை

3. ஐநா, பன்னாட்டு அமைப்புகள், தூதரகங்கள் அளிக்கும் சேவைகள்.

4. சமூக சேவையில் ஈடுபடும் அரசு சாரா அமைப்புகளின் சேவைகள்.

5. இறுதி ஊர்வலம், புதைத்தல், எரித்தல், சவ அறை சேவைகள்

6. விவசாய விளைபொருட்கள், தோட்டப் பயிர்கள், கால்நடை வளர்ப்பு, காடு வளர்ப்பு, பால் துறை, கோழி வளர்ப்பு போன்றவற்றுக்கு நேரடியாக அளிக்கப்படும் சேவைகள்.

7. கடன் பத்திரங்கள் விற்பதும் வாங்குவதும் (நேரடி விற்பனை மட்டும்)

8. வட்டி

9. முதலீடுகளுக்கான ஈவுத் தொகை

10. வங்கிகளுக்கிடையே அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகள்

11. பொது போக்குவரத்து மூலமாக மக்களை அழைத்துச் செல்லும் சேவை

12. வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் சேவை

13. பொருட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டுள்ளுவருக்கு வண்டி ஓட்டும் சேவை

14. சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே, போக்குவரத்து முனையங்கள் போன்றவை, அரசு கட்டிடங்கள் கட்டுதல், ஒற்றை வீடு கட்டிக் கொடுத்தல், அனாதை விடுதிகள் கட்டுதல் போன்ற சேவைகள்.

15. குடியிருப்புக்காக வீடு வாடகைக்கு விடுதல் (குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் மட்டும்)

16. பள்ளி கல்வி (நன்கொடைகள் சேர்த்தியில்லை)

17. 4 கோடிக்குக் குறைவாக முந்தைய ஆண்டு வருமானம் கொண்ட கிளினிக், மருத்துவமனை, உடல்நலம் பேணும் சேவைகள்.

18. காப்புரிமை சேவைகள்.

19. தன்னிச்சையாக செயல்படும் பத்திரிகையாளர்கள் வழங்கும் சேவைகள்.

20. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் அளிக்கும் சேவைகள்.

21. மத ரீதியான சேவைகள்

22. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அளிக்கும் சேவைகள்

23. தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கும் சேவைகள்

24. வக்கீல்கள் தனி நபர்களுக்கு வழங்கும் சேவை

25. தேசிய அல்லது பன்னாட்டு விருதுகள் வழங்குதல்

26. கட்டணங்கள்

27. பெட் கட்டுதல் சூதாடுதல் தொடர்பான சேவைகள்.

சேவை விலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலைப் பார்க்கும்போது  இதிலும், வங்கிகள், அரசு, நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முதலாளிகள் முதலானோருக்குத்தான் ஆதாயம் அதிகம். மக்களைப் பொறுத்த வரை பேருந்தில் ஏறி, கருமாதிக்கு போனால் மட்டுமே சேவை வரி இல்லை என்பதாக இருக்கிறது இந்த பட்டியல்.

_____________________________________________

– அப்துல்

_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. // 27. பெட் கட்டுதல் சூதாடுதல் தொடர்பான சேவைகள். //

    வரிவிலக்கு வேற இருக்கா?

    // 22. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அளிக்கும் சேவைகள் //

    ’சேவை’ செஞ்சு கிடைக்கும் வருமானத்தையே காட்டமுடியாதே!!

  2. //8. வட்டி//

    it already comes under service tax.

    Even “fines” from bank comes under serive tax. Cheque return is charged 250Rs and then serivce tax (don’t think what nonsense this is).

  3. மக்களைப் பொறுத்த வரை பேருந்தில் ஏறி, கருமாதிக்கு போனால் மட்டுமே சேவை வரி இல்லை –

    சரியாக சொன்னீர்கள்.அடுத்த நிதி ஆண்டில் கருமாதி பண்ணுவதற்கும் சேவை வரி வரலாம்.

    • கிரகப் பிரவேசம், கல்யாணம்,காது குத்து, கருமாதி போன்ற சடங்கு சம்பிரதாயங்களுக்கு நம்ம ஆட்கள் ஐயர்களுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்துகிறார்களே அதற்கெல்லாம் ஒரு 10% சேவை வரி போட்டால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்குமே! ஆனால் இதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. அந்த சேவை வரியையும் அவாள்கள் நம்மிடம்தான் வாங்குவார்கள். சடங்குகளை கடைபிடிப்போரே எதற்கும் எச்சரிக்கையாய் இருங்கள்!

  4. இங்கே மின மயானச் செலவு ரூபாய் 1500……ஆம்புலன்ஸ் சேவை உட்பட.

    ப்ளாட் ரேட். நோ டிஸ்கவுண்ட் நோ டாக்ஸ்.

    தலைப்பு ரொம்ப நல்லாயிருக்கு.

    • வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும் – LIC (Life Insurance corporation)
      சாகும்போதும் செத்ததுக்கு பிறகும் – AIC (All India Congress)

  5. இதுவரை இந்தியா கண்டதிலேயே மிக கேவலமான,முதுகெலும்பில்லாத,
    சூடு,சுரணை,வெட்கம்,மானம்இல்லாத,சப்பாத்தியில் உப்பு போட்டு தின்னாத
    இழிபிறவி ஒன்றுக்கும் உதவாத ஜந்து இந்த மண்ணாங்கட்டி மோகன் சிங்.
    இவனும்,இவன் படித்த நாசமாய் போன படிப்பும்!
    வீரத்திற்கும்,தன்னம்பிக்கைக்கும்,பெயர் பெற்ற சீக்கிய இன மக்களுக்கு
    இந்த சப்பாத்தியால் அடித்த பிண்டம் தீராத அவமானம்.

  6. //அரசு உச்சபட்ச கார்பொரேட் வருமான வரியை சுமார் 33%ஆக வைத்திருக்கிறது. இதுதான் 80களுக்கு முன்பு 90% ஆக இருந்த அதிகபட்ச வருமான வரி வீதம் இப்போது 33% ஆக குறைந்த கதை.///

    Good. முதல் முறையாக 90 சதவீத உச்சபட்ச வரி விகிதங்கள் பற்றி வினவு பேசுவது வரவேற்க்க தக்கது. மிக அதிக வரி விகிதங்கள்’ வரி ஏய்ப்புகளை உருவாக்கும் என்பது மட்டுமல்ல, அதைவிட மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். அதாவது தொழில்முனைவோர்களை தொழிலை விட்டே, நாட்டை விட்டே துரத்தும். ஏன் பாடுபட்டு, நிறுவனத்தை ஆரம்பித்து, பெருசு படுத்த வேண்டும் என்று ஆர்வத்தை நசுக்கும். நசுக்கியது. incentive to earn and re-invest மிக மிக குறைந்துவிடும். மாற்றாக, ‘நியாயமான’ வரி விகுதங்கள், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும். தொழில் வளரும். வரி வசூலும் மிக மிக அதிகமாகும். அன்று 90 சதம் இருந்ததை விட இன்றைய 33 சதவீதத்தில் தான் வரி வசூல் மழை போல் பல லச்சம் கோடிகளுக்கு கொட்டுகிறது. (even after adjusting for the inflation rate over the decades). அதனால் தான் யாரும் இப்ப பழைய உச்ச பட்ச வரி விகுதங்களுக்கு திரும்பி செல்ல கோருவதில்லை.
    70களில் இந்த சாத்தியங்களை யாரும் ஏற்க்கவில்லை. நம்பவில்லை.

    மற்றபடி புதிய வரிகளை வினவு‘எதிர்ப்பதும்’ மகிழ்ச்சி. வரி என்பதே ஒரு வகை தண்டனை தான். அது யார் மீது போடப்பட்டாலும் சரி. ஆனால் அரசு நிர்வாகம் செய்ய, நலதிட்டங்களுக்கு வரி தவிர்க்கவே முடியாது. ஆனால் வெட்டி செலவுகளை மிக மிக அதிகம் செய்யும் அரசுகள், முக்கியமாக ராணுவத்திற்க்கு செய்வது மிக தவறு.

    ஆனால் இக்கட்டுரை சொல்வது போல் எல்லா ‘சேவைகளுக்கும்’ 10 சத வரி இல்லை.
    உற்பத்தி துறை மீது உற்பத்தி வரி (எக்ஸைஸ் வரி) உண்டு. அதே லாஜிக் தான் சேவை துறைக்கும். ஆனால் எல்லா உற்பத்திக்கு எக்ஸ்ஸை வரி இல்லை. சிறு தொழில்களுக்கு இல்லை.

    அரசு வலைமனையில் உள்ள தகவல் இது :

    http://www.servicetax.gov.in/st-profiles-home.htm
    Service Tax Profiles

    மேற்படி கட்டுரை எந்த செய்திகுறிப்பை வைத்து என்று தெரியவில்லை.

    http://www.servicetax.gov.in/st-notfns-home.htm

    இதில் இன்னும் மேற்படி அறிக்கை இல்லை. கட்டுரையாளர் எதில் இருந்து எடுத்து சொல்கிறார் ?

    பி.கு : லார்ட் பெருமாள் பல ‘சேவை’ சாதிக்கிறார். அவருக்கு சேவை வரி போடுவார்களா ?

    • //தொழில்முனைவோர்களை தொழிலை விட்டே, நாட்டை விட்டே துரத்தும்//

      வாய்யா கொள்ளிக்கனி,

      சோட வீக்கிறவன் வெத்தல பாக்கு விக்கிறவன்லாம் அவன் அவன் தொழிலை விட்டுட்டு பிச்சையெடுக்கப் போனா “அந்த மாற்றம் நடந்தே தீரும்”னு சொல்ற நீ இன்னைக்கு டாடா, அம்பானி, நாராயணமூர்த்தி மாதிரி தொழில் முனைவோருக்காகக் கவலைப்படுறது ரொம்ப வேடிக்கையா இருக்கு.

  7. // பி.கு : லார்ட் பெருமாள் பல ‘சேவை’ சாதிக்கிறார். அவருக்கு சேவை வரி போடுவார்களா ? //

    21. மத ரீதியான சேவைகள்

    உங்க மனக்குறையைப் போக்க அடுத்த லிஸ்ட்டில் இதை நீக்கச் சொல்லி பெருமாள்கிட்டே வேண்டிக்குங்கோ. அவர் ஏசு நாதர்ட்ட ரெகமண்ட் பண்ணி, அவர் சோனியாகிட்ட சொல்லி , சோனியா மமோ சிங் & பிரணாபுக்கு ஆர்டர் போட்டுடுவார்.

  8. //Good. முதல் முறையாக 90 சதவீத உச்சபட்ச வரி விகிதங்கள் பற்றி வினவு பேசுவது வரவேற்க்க தக்கது. மிக அதிக வரி விகிதங்கள்’ வரி ஏய்ப்புகளை உருவாக்கும் என்பது மட்டுமல்ல, அதைவிட மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். அதாவது தொழில்முனைவோர்களை தொழிலை விட்டே, நாட்டை விட்டே துரத்தும். ஏன் பாடுபட்டு, நிறுவனத்தை ஆரம்பித்து, பெருசு படுத்த வேண்டும் என்று ஆர்வத்தை நசுக்கும். நசுக்கியது.//

    1. அதாவது, சட்டங்கள் கடுமையாக இருந்தால் அதை மீறுவார்கள். அவர்களை பிடித்து ஜெயிலில் போடாமல், ஊக்குவிக்க சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.

    2. 90% உச்ச பட்ச கார்பொரேட் வரி என்பது லாபத்தின் மீது விதிக்கப்படுவது. தனிநபர் வருமான வரி போல மொத்த வருமானத்தின் மீதான வரிவிதிப்பு அல்ல.

    நிறுவனத்தின் மொத்த வருமானத்திலிருந்து எல்லா செலவுகளையும் (ஊதியச் செலவு, வாடகை, மின்கட்டணம், கடன் திருப்பிச் செலுத்துவது, வட்டித் தொகை, எந்திரங்களின் தேய்மானம், அசையச் சொத்துகளின் தேய்மானம்) கழித்த பிறகு வரும் தொகையில்தான் இந்த வரி விதிப்பு.

    மூலதனத்தை மறு சுழற்சி செய்யவும் மேலே சொன்ன தேய்மானம் மூலம் பணம் கிடைத்து விடுகிறது. பொதுப் பணத்தில் போடப்பட்ட சாலைகள், துறைமுகங்கள், அரசு மருத்துவமனைகள், இலவசக் கல்வி, உயர்கல்வி போன்றவற்றின் மூலம்தான் தான் போட்ட பணத்துக்கும் மீறிய லாபத்தை ஒரு நிறுவனம் ஈட்ட முடிகிறது.

    3. அப்படி கணக்கிடப்படும் லாபத்தில் பெரும்பகுதியை அந்த லாபம் ஈட்ட உதவிய சமூகத்துக்குக் கொடுப்பதற்கு முரண்டு பிடிக்கும் ‘தொழில் முனைவோர்களை’ சமூக விரோதிகள் என்று நாடு கடத்தாமல் அவர்களுக்கு வரி குறைத்து கொடுப்பதை எந்த ஊர் நியாயத்தில் சேர்ப்பது!

    அத்தகைய லாபத்தின் மூலம்தான் தனக்கே தனக்கென்று பல நூறு கோடி ரூபாயில் வீடு கட்டிக் கொள்ளும் அம்பானிகள் ஆட்டம் போட முடிகிறது.

    //அன்று 90 சதம் இருந்ததை விட இன்றைய 33 சதவீதத்தில் தான் வரி வசூல் மழை போல் பல லச்சம் கோடிகளுக்கு கொட்டுகிறது. (even after adjusting for the inflation rate over the decades). incentive to earn and re-invest மிக மிக குறைந்துவிடும். மாற்றாக, ‘நியாயமான’ வரி விகுதங்கள், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும். தொழில் வளரும். வரி வசூலும் மிக மிக அதிகமாகும். அதனால் தான் யாரும் இப்ப பழைய உச்ச பட்ச வரி விகுதங்களுக்கு திரும்பி செல்ல கோருவதில்லை.//

    வரி மழை பல லச்சம் கோடி கட்டினால் ஏன் சேவை வரி போன்று புதிய மறைமுக வரிகளை விதிக்க வேண்டியிருக்கிறது? 90% இருந்தால் வரி ஏய்ப்பு செய்பவர்களை தண்டிக்காமல் வரியைக் குறைத்து, மொத்த செலவில் 10% வசூலித்து பொது மக்களை வாட்ட வேண்டும். எந்த ஊர் நியாமுங்கோ இது?

    • லாபத்தில் 90%-ஐ வரியாகக் கட்டவேண்டும் என்றால் எதற்கு யாரும் ரிஸ்க் எடுத்து பிஸினஸ் ஆரம்பித்துக் கஷ்டப்பட்டு யடத்தவேண்டும்? குறைவாக வரி விதிக்கும் நாடுகள் மட்டுமே வேகமாக வளர்ந்து வறுமையை ஒழித்துள்ளன. இது வரலாறு. கண்ணை மூடிக்கொண்டு 40 வருடத்துக்கு முந்தைய வசனங்களைப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை.

    • //2. 90% உச்ச பட்ச கார்பொரேட் வரி என்பது லாபத்தின் மீது விதிக்கப்படுவது. தனிநபர் வருமான வரி போல மொத்த வருமானத்தின் மீதான வரிவிதிப்பு அல்ல.//

      ஆம். அது சரி என்கிறீர்களா ? அதாவது இன்றைய மதிப்பில், ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் நிகர வருமானம் ஈட்டுபவர்கள் மீது 90 சதவீத வரி விதித்தால் என்ன ஆகும் ?

      மாசி : அன்று மொத்த வரி வசூல் எவ்வளவு ? நேரடி மற்றும் மறைமுக வரி வசூல். ஒன்று மொத்த தொகை எவ்வளவு ? after adjusting for the fall in the value of rupee ? இது எப்படி சாத்தியமானது ? அன்று கார்ப்பரேட் வரி 60 சதவீதத்திற்க்கு மேல். 1986இல் 50 சதமாக குறைக்கப்பட்டது. சுங்க வரி, உற்பத்தி வரிகளும் மிக அதிகமாக இருந்தன. நிகர விளைவு, தொழில் முடக்கம் மற்றும் வரி ஏய்ப்பு.

      வரி ஏய்ப்பவர்களை தண்டிப்பது பற்றி மாற்று கருத்தில்லை. ஆனால் prevention is better than punitive action. world over, esp in Ireland, govts have discovered that by lowering effective taxation and tarrif rates, the net tax revenue has increased dramatically and economy exapands. esp Irish experience is very relavant.

      ///அப்படி கணக்கிடப்படும் லாபத்தில் பெரும்பகுதியை அந்த லாபம் ஈட்ட உதவிய சமூகத்துக்குக் கொடுப்பதற்கு முரண்டு பிடிக்கும் ‘தொழில் முனைவோர்களை’ சமூக விரோதிகள் என்று நாடு கடத்தாமல் அவர்களுக்கு வரி குறைத்து கொடுப்பதை எந்த ஊர் நியாயத்தில் சேர்ப்பது!//

      ஒரு வேளை உங்க நிறுவனம் பல கோடிகள் லாபம் ஈட்டும் நிறுவனமாக உருமாறினால், நீங்களும் உங்க சக கூட்டளிகளும் கொடுங்களேன் பார்க்கலாம். முக்கியமாக உங்க கூட்டாளிகளிடம் இதை பற்றி விவாதித்துவிட்டு பிறகு பதில் சொல்லுங்க. 90 சத தனிநபர் வருமான வரி பற்றி. எனென்றால் நீங்க ஒரு கூட்டு நிறுவனத்தை தான் நடத்தறீங்க. கூட்டாளிகளின் ந்லன்களுக்கும், நோக்கங்களுக்கும் முழு சம்மதம் மற்றும் பொறுப்பை ஏற்றதால் தான் உங்க நிறுவனத்தில் அவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். if you were a sole-proprietor firm then it is different story and you are free do as you like.

  9. @அதியமான்,

    //ஆனால் இக்கட்டுரை சொல்வது போல் எல்லா ‘சேவைகளுக்கும்’ 10 சத வரி இல்லை.
    உற்பத்தி துறை மீது உற்பத்தி வரி (எக்ஸைஸ் வரி) உண்டு. அதே லாஜிக் தான் சேவை துறைக்கும். ஆனால் எல்லா உற்பத்திக்கு எக்ஸ்ஸை வரி இல்லை. சிறு தொழில்களுக்கு இல்லை.//

    நீங்கள் கொடுத்த சுட்டி தற்போதைய நிலவரம். இந்தக் கட்டுரையில் உத்தேசிக்கப்பட்ட மாற்றங்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

    விபரங்களை இந்த சுட்டியில் பாருங்கள்:
    http://www.financialexpress.com/news/revised-negative-list-for-service-tax-released/877705/

  10. வருமானம் 5 இலட்சத்திற்குள் இருப்பவர்கள் சேவை வரி செலுத்த வேண்டும் என தெரிவித்தனர் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது. தற்போது ரூ.10 லட்சம் தாண்டினால் சேவை வரி கட்ட வேண்டும்.

    ஓவ்வொரு ஆண்டும் சில சேவைகளை வரியின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள். தற்போது வரிவிதிப்பில் உள்ள சேவைகளின் விவரம்
    ADVERTISING AGENCY
    ADVERTISING SPACE OR TIME
    AIR TRANSPORT OF PASSENGER
    AIR TRAVEL AGENCY
    AIRPORT SERVICES
    ARCHITECTS SERVICES
    ASSET MANAGEMENT
    ATM OPERATIONS
    AUCTIONEERS SERVICES
    BANKING AND FINANCIAL
    BEAUTY PARLOURS
    BROADCASTING SERVICE
    BUSINESS AND EXHIBITION SERVICES
    BUSINESS AUXILIARY SERVICES
    BUSINESS SUPPORT SERVICES
    CAB OPERATORS
    CABLE OPERATORS
    CARGO HANDLING SERVICES
    CHARTERED ACCOUNTANTS
    CLEANING SERVICES
    CLEARING AND FORWARDING AGENCY
    COMMERCIAL TRAINING & COACHING
    COMPANY SECRETARIES
    CONSTRUCTION OF RES. COMPLEX
    CONSTRUCTION SERVICES IN RESPECT OF COMMERCIAL OR INDUSTRIAL BUILDINGS AND CIVIL STRUCTURES
    CONSULTING ENGINEER
    CONVENTION SERVICE
    COSMETICS AND PLASTIC SURGERY SERVICE
    COST ACCOUNTANTS
    COURIER AGENCY
    CREDIT CARD RELATED SERVICES
    CREDIT RATING AGENCIES
    CUSTOM HOUSE AGENT
    DESIGN SERVICES
    DEVELOPMENT AND SUPPLY OF CONTENT SERVICES
    DREDGING SERVICES
    DRY CLEANING SERVICES
    ERECTION,COMMISSIONING AND INSTALLATION
    EVENT MANAGEMENT SERVICE
    FACSIMILE SERVICES FAX)
    FASHION DESIGNER SERVICES
    FORWARD CONTRACT SERVICES
    FRANCHISE SERVICES
    GENERAL INSURANCE BUSINESS
    GOODS TRANSPORT OPERATORS
    HEALTH CLUB AND FITNESS CENTER
    HEALTH SERVICES
    INFORMATION TECHNOLOGY SOFTWARE SERVICE
    INSURANCE AUXILIARY
    INTELLECTUAL PROPERTY SERVICES OTHER THAN COPYRIGHT
    INTERIOR DECORATORS/ DESIGNER’S SERVICE
    INTERNET CAFE
    INTERNET TELECOMMUNICATION/ (TELEPHONY) SERVICE
    LEASED CIRCUITS
    LEGAL CONSULTANCY SERVICE
    LIFE INSURANCE SERVICES
    MAILING LIST COMPILATION
    MAINTENANCE OF MEDICAL RECORDS OF EMPLOYEES OF A BUSINESS ENTITY
    MAINTENANCE OR REPAIR SERVICE
    MANAGEMENT CONSULTANTS
    MANAGEMENT OF INVESTMENT UNDER UNIT LINKED INSURANCE PLAN (ULIP) SERVICE
    MANDAP KEEPER
    MANPOWER RECRUITMENT AGENCY
    MARKET RESEARCH AGENCY
    MEMBERSHIP OF CLUBS
    MINING SERVICES
    ONLINE INFORMATION AND DATA
    OPINION POLL SERVICES
    OUTDOOR CATERING
    PACKAGING SERVICES
    PAGER SERVICES (RADIO PAGING)
    PANDAL OR SHAMIANA SERVICES
    PHOTOGRAPHY SERVICE
    PORT SERVICES
    PREFERENTIAL LOCATION OR EXTERNAL / INTERNAL DEVELOPMENT OF COMPLEXES
    PROCESSING AND CLEARINGHOUSE SERVICE
    PUBLIC RELATIONS SERVICE
    RAIL TRAVEL AGENT
    REAL ESTATE AGENTS
    RECOGNISED ASSOCIATION OR REGISTERED ASSOCIATION COMMONLY KNOWN AS COMMODITY EXCHANGE SERVICE
    RECOVERY AGENT
    REGISTRAR TO AN ISSUE
    RENTING OF IMMOVABLE PROPERTY SERVICES
    SCIENTIFIC AND TECHNICAL CONSULTANCY
    SECURITY / DETECTIVE AGENCIES
    SERVICES OF AIR-CONDITIONED RESTAURANTS HAVING LICENSE TO SERVE ALCOHOLIC BEVERAGES IN RELATION TO SERVICE OF FOOD OR BEVERAGES
    SERVICES OF PERMITTING COMMERCIAL USE OR EXPLOITATION OF ANY EVENT ORGANIZED BY A PERSON OR ORG.
    SERVICES OF PROMOTING A .BRAND. OF GOODS, SERVICES, EVENTS, BUSINESS ENTITY ETC.
    SERVICES OF PROMOTING, MARKETING OR ORGANIZING OF GAMES OF CHANCE
    SERVICES OF PROVIDING OF ACCOMMODATION IN HOTELS/INNS/CLUBS/ GUEST HOUSES/CAMPSITE FOR A CONTINUOUS PERIOD OF LESS THAN THREE MONTHS
    SERVICES PROVIDED BY ELECTRICITY EXCHANGE.
    SERVICES RELATED TO 2 TYPES OF COPYRIGHTS (A) CINEMATOGRAPHIC FILMS AND (B) SOUND RECORDING.
    SERVICING OF MOTOR VEHICLES
    SHARE TRANSFER AGENT
    SHIP MANAGEMENT SERVICE
    SITE PREPARATION AND CLEARANCE
    SOUND RECORDING SERVICE
    SPONSORSHIP SERVICE
    STEAMER AGENT
    STOCK BROKER
    STOCK EXCHANGE SERVICE
    STORAGE AND WAREHOUSE SERVICE
    SUPPLY OF TANGIBLE GOODS FOR USE SERVICE
    SURVEY AND EXPLORATION OF MINERAL
    SURVEY AND MAP MAKING
    TECHNICAL TESTING,INSPECTION, CERTIFICATION
    TELECOMMUNICATION SERVICES
    TELEGRAPH SERVICE
    TELEPHONE SERVICES
    TELEX SERVICES
    TOUR OPERATOR
    TRANSPORT BY CRUISE SHIPS
    TRANSPORT OF COASTAL GOODS AND GOODS THROUGH NATIONAL WATERWAYS AND INLAND WATER
    TRANSPORT OF GOODS BY AIR
    TRANSPORT OF GOODS BY PIPELINE OR OTHER CONDUIT
    TRANSPORT OF GOODS BY RAIL
    TRANSPORT OF GOODS BY ROAD
    TRAVEL AGENTS (OTHER THAN AIR/RAIL TRAVEL AGENTS)
    TV OR RADIO PROGRAMME PRODUCTION
    UNDER WRITERS
    VIDEO TAPE PRODUCTION
    WORKS CONTRACT SERVICES

    PRIMARY EDUCATION CESS
    SECONDARY AND HIGHER EDUCATION CESS

  11. திருநெல்வேலி இருட்டுகடை அல்வாவை வாங்கி வந்து சென்னை நண்பர்களுக்கு தரும் “சேவை” கீழ்கண்ட 119 பிரிவுகளில் எந்த பிரிவில் வருகிறது என்பதை ஆசிரியர் அப்துல் விளக்கினால் நல்லது.

    மற்றபடி பியூட்டி பார்லரில் (சேவை எண். 11) 500 ரூபாய் கொடுத்து () பண்ணிக் கொள்ளும் சீமாட்டிகள் 550 ரூபாய் கொடுத்தால் தேய்ந்து போய்விட மாட்டார்கள்.

    அதியமான் அவர்கள் கேட்டது போல இந்த கட்டுரைக்கான ஆதாரத்தை வெளியிட வேண்டுகிறேன்.

    கீழ்காணும் பட்டியல் செப்டம்பர் 16, 2011 அன்று அரசு வெளியிட்டது.
    http://www.servicetax.gov.in/

    1 Advertising

    2 Air Travel Agent

    3 Airport Services

    4 Architect

    5 Asset management (by other than Banking company)

    6 ATM Operations,Management or Maintenance

    7 Auctioneers service, other than auction of property under directions or orders of a court of or auction by Central Govt.

    8 Authorised Service Station

    9 Auxiliary to Gen. Insurance / Life Insurance

    10 Banking & Other Financial Services also includes foreign exchange broking and purchase or sale of foreign currency

    11 Beauty Parlour

    12 Broadcasting

    13 Business Auxiliary Service including promotion or marketing or all games of chance whether or not conducted online i.e. lottery, lotto, bingo etc

    14 Business Exhibition Service

    15 Business Support Service

    16 Cable Operator

    17 Cargo Handling also covers packing with transportation

    18 Chartered Accountant

    19 Cleaning Service

    20 Clearing & Forwarding Agent

    21 Clubs and Associations

    22 Commercial or Industrial Construction

    23 Commercial Training or Coaching

    24 Company Secretary

    25 Construction of Residential Complex

    26 Consulting Engineer

    27 Convention Centre

    28 Cost Accountant

    29 Courier

    30 Credit Card, Debit Card, Charge Card or other payment and related services

    31 Credit Rating Agency

    32 Custom House Agent

    33 Commodity exchange service

    34 Cosmetic & Plastic Surgery

    35 Design Service

    36 Development & Supply of Content

    37 Dredging

    38 Dry Cleaning

    39 Erection,Commissioning or Installation

    40 Event Management

    41 Fashion Designer

    42 Forward Contract Services

    43 Franchise Service

    44 General Insurance

    45 Health Club & Fitness Centre

    46 Information Technology Software

    47 Intellectual Property Service

    48 Interior Decorator

    49 Internet Café

    50 Internet Telecommunication

    51 Life Insurance

    52 Legal Consultancy Service

    53 Mailing List Compilation and Mailing

    54 Management Consultant

    55 Management of Investment ULIP

    56 Management,Maintenance or Repair Service

    57 Mandap Keeper

    58 Manpower Recruitment or Supply Agency

    59 Market Research Agency

    60 Mining of Mineral,Oil or Gas

    61 On-line Information & Database Access or Retrieval Service

    62 Opinion Poll Service

    63 Outdoor Catering Service

    64 Packaging Service

    65 Pandal & Shamiana Service

    66 Photography

    67 Port Service

    68 Port Service (other)

    69 Processing & Clearing Houses in relation to securities, goods and forward contracts

    70 Public Relations Service

    71 Rail Travel Agent

    72 Real Estate Agent / Consultant

    73 Recognized Association goods/ Forward contracts

    74 Recognized Stock Exchanges

    75 Recovery Agent

    76 Registrar to an Issue

    77 Rent – a – Cab Operator

    78 Renting of Immovable Property inclusive of permission to use such property irrespective of transfer of possession or control of property.

    79 Sale of space or time for advertisement,other than print media

    80 Scientific & Technical Consultancy

    81 Security Agency

    82 Share Transfer Agent

    83 Ship Management Service

    84 Site Preparation

    85 Sound Recording

    86 Sponsorship service provided to anybody corporate or firm, other than sponsorship of
    sports event

    87 Steamer Agent

    88 Stock Broker

    89 Storage & Warehousing

    90 Supply of tangible goods

    91 Survey & Exploration of Minerals

    92 Survey and Map Making

    93 T.V. & radio Programme Production Services

    94 Technical Testing & Analysis

    95 Technical Inspection & Certification

    96 Telecommunication Service

    97 Tour Operator except for the use of educational bodies.

    98 Transport of goods by Air

    99 Transport of goods by Road

    100 Transport of goods in containers by rail by any person other than Government railway

    101 Transport of goods other than water, through Pipeline or other conduit

    102 Transport of Passengers embarking on international journey by air, other than economy class passengers

    103 Transport of persons by cruise ship

    104 Travel Agent other than Air & Rail Travel

    105 Transport of goods through waterways

    106 Transport of goods by rail

    107 Underwriter

    108 Video Tape production

    109 Works Contract

    110 Services of promoting , marketing or organizing of games of change, including lottery.

    111 Health services undertaken by hospitals or medical establishments for the employees of business organization and health services provided under health insurance scheme offered by Insurance companies.

    112 Services provided for maintenance of medical records of employees of a business entity.

    113 Promoting a “brand” of goods, services, events, business entity etc.

    114 Services of permitting commercial use or exploitation of any event organized by a person or an organization.

    115 Services provided by Electricity Exchanges.

    116 Services related to two types of copyrights hitherto not covered under existing taxable services „Intellectual Property Right(IPR), namely, that on (a)
    cinematographic films and (b) sound recording.

    117 Special services provided by builder etc. to the prospective buyers such as providing preferential location or external or internal development of complexes on extra charges.

    118 Services of Air-conditioned restaurants having license to serve alcoholic beverages in relation to service of food or beverages.

    119 Services of providing of accommodation in hotels / inns/ cubs/ guest houses/ campsite for a continuous period of less than three months

    • \\கானடாவில் கருமாதிக்குக் கூட GST எனப்படும் சேவை வரி உண்டு.\\

      Do you meant “we have to follow Canada?”. Ok, I will inform to my ministry to do that for you.

      By,
      மண்டைல மண்ணு மோகன்

  12. சேவை வரி என்ற ஒரு வரி வகையினமே தவறு என்று சொல்லுகிறார கட்டுரையாளர்? அல்லது தற்போதுள்ள நேரடி அட்டவணை(positive list) முறையை மாற்றி எதிர்மறை அட்டவணையை(negative list) கொண்டுவர அரசு முயற்சிப்பதை தவறு என்கிறாரா?

    அரசாங்க பணத்தில் படித்து பட்டம் பெற்று ஒருவர் “கன்சல்டிங் இஞ்சினியர்” ஆகவோ “சார்டர்ட் அக்கௌண்ட்டண்ட்” ஆகவோ தனது “சேவை”க்கு கட்டணம் வசூலிக்கும் போது அதில் ஒரு பகுதியை அரசுக்கு வரியாக தருவதில் என்ன தவறு? தொழிலில் போட்டி இருக்கும் போது இத்தகைய service providers தங்கள் லாபத்தை குறைத்துக் கொண்டு அரசுக்கு வரி கட்டுவதும் உண்டு.

    மேலும் அரசு உத்தேசித்துள்ள அட்டவணையில் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் நுகரும் சேவைகளுக்குதான் வரி விதிப்பு.

    கார்பொரேட் வரியையும் கூட்டுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. மொத்தத்தில் துண்டு விழாத பட்ஜெட்டை நோக்கி இந்தியா முன்னேற வேண்டும். வரவுக்கு மேலே செலவுகள் போனால் கடைசியில் துந்தனா…

  13. நோகாமல் நொங்கு நோண்டி கொள்ளும் அரசுதான் ‘மக்கள் நல’ அரசா…..
    எது நடக்கக்கூடாதோ? அது நன்றாக நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ?அது நடக்கவே மாடடேன்கிறது..

  14. மொத்தமாக சேவை வரி என சொன்னால், எதிர்ப்பு கிளம்பிவிடும் என்பதை புரிந்துகொண்டு, நைச்சியமாக, கொஞ்சம் கொஞ்சமாக அரசு வரிவிதித்திருக்கிறது.

    இப்படித்தான் ஒரு ஆண்டு, லாரி வாடகைக்கு சேவை வரி என அறிவித்த பொழுது, அகில லாரி உரிமையாளர்கள் இந்திய அளவில் ஸ்டிரைக் அடித்தார்கள். அரண்டு போன அரசு, அவர்களுக்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. எப்படி? நீங்கள் நிறுவனம் நடத்துகிறீர்கள். வாடகைக்கு லாரி வேண்டும். வாடகைக்கு எடுக்கிறீர்கள். ரூ. 5000 வாடகையாக செலுத்துகிறீர்கள். அதற்காக நீங்கள் அரசுக்கு ரூ. 500 செலுத்த வேண்டும். இது தான் விதி. 🙂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க