ஆகஸ்டு புரட்சி – அண்ணா ஹசாரே கடந்த ஆகஸ்டு மாதம் தில்லி ராம் லீலா மைதானத்தில் நடத்திக் காட்டிய உண்ணாவிரதக் கூத்தினை ஆங்கில ஊடகங்கள் இப்படித்தான் வருணிக்கின்றன. காந்தியத்தை நெம்பித் தூக்கி வந்து இந்திய அரசியல் அரங்கின் மையத்தில் வைத்தார் அண்ணா ஹசாரே என்று அனைத்திந்திய ஊடகங்கள் தொடங்கி இலக்கிய பிரிண்டிங் மிசின் ஜெயமோகன் வரை மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.
பழைய பேப்பர்கடையில் சேர்ந்திருக்கும் சில கோடி டன் அச்சிடப்பட்ட செய்திக்காகிதங்கள், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு கிடைத்த பல கோடி ரூபாய் விளம்பர வருவாய், நாடு தழுவிய அளவில் அதிகரித்த மெழுகுவர்த்தி மற்றும் தேசியக்கொடி உற்பத்தி போன்ற உடனடி விளைவுகளைத் தவிர, மேற்படி புரட்சி சாதித்தது என்னவென்பதை நாம் அறியோம்.
ஊழல் மட்டுமல்ல, விவசாயிகள் தற்கொலை, விவசாய நிலம் பறிப்பு, தனியார்மய – தாராளமயக் கொள்ளைகள், சாதிவெறி வன்கொடுமைப் படுகொலைகள், இந்து மதவெறி பாசிசம் போன்ற பல்வேறு பிரச்சினைகளும் இணைந்ததுதான் நமது நாட்டு மக்களின் அரசியல் சமூக வாழ்க்கை. ஹசாரே எனும் மீட்பர் இந்த நாட்டின் மற்றப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் என்ன கருதுகிறார்? குஜராத்தில் மோடி அமல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களும், அவரது ஊழலற்ற ஆட்சியும் தனக்குப் பிடித்திருப்பதாக ஹசாரே சொன்னபோதுதான், ஆர்.எஸ்.எஸ். மண்டைகள் கருப்புத் தொப்பிகள் மட்டுமின்றி காந்தித் தொப்பிகளும் அணியக்கூடும் என்ற உண்மை பலருக்குத் தெரிய வந்தது.
ஹசாரேயின் பேச்சுகளைக் கேட்டு அவரைப் புரிந்து கொள்வதை விட, அவருடைய ஊரைப் பார்த்து, அதிலிருந்து அவரைப் புரிந்து கொள்வது எளிதல்லவா? காந்திய வழிமுறைகளைக் கையாண்டு அந்தக் கிராமத்தையே ஒரு மாதிரி கிராமமாகவும் சொர்க்கபுரியாகவும் மாற்றியிருக்கிறார் அண்ணா ஹசாரே என்றும், ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் அறம் சார்ந்த தகுதியை அதுதான் அவருக்கு வழங்கியிருப்பதாகவும் அவருடைய பிரச்சாரகர்கள் முழங்கி வருவதால், அந்த மெக்காவைத்தான் பார்த்துவிடுவோமே என்று யாத்திரை கிளம்பினோம்.
அண்ணா ஹசாரே டெல்லியிலிருந்து ராலேகான் திரும்பிய ஐந்தாவது நாள், நாங்கள் அங்கே சென்று சேர்ந்தோம். ராலேகான் சித்தி மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டதைச் சேர்ந்த கிராமம். சரியான பேருந்து வசதி இல்லை. இருபத்தோராம் நூற்றாண்டின் காந்திய சொர்க்கம் பற்றி சொன்னவர்கள் எவரும் மேற்படி சொர்க்கத்துக்கு ஒழுங்கான பேருந்து வசதியில்லை என்பதைச் சொல்லவில்லை. கிராமத்தில் கால் வைத்ததும் நாங்கள் கண்டது நேரடி ஒளிபரப்பு வசதிகள் கொண்ட அதிநவீனமான நான்கு மீடியா வேன்களைத்தான். அண்ணா ஹசாரேவின் அங்க அசைவுகள் அனைத்தையும் இந்திய நடுத்தர வர்க்கம் தரிசிக்க உதவும் ஜனநாயகக் கடமையை ஆற்றும் பொருட்டு அவை நின்று கொண்டிருந்தன. உள்ளே வடநாட்டு ஓட்டுநர்களும் செய்தியாளர்களும் சாவகாசமாக பாலிவுட் குத்துப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஊரின் முகப்பில் ஐந்தாறு கடைகளே இருந்தன. தேநீர்க்கடைக்குச் சென்றோம். உடன் வந்த தோழர் மராத்தியில் தேநீருக்குச் சொல்லிக் கொண்டிருந்தபோது காணக்கூடாத காட்சி ஒன்றைக் கண்டோம். கடையின் முன்னே போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒரு முதியவர் ரசித்து ரசித்து பீடி இழுத்துக் கொண்டிருந்தார். என்னது..? சொர்க்கத்திலேயே திருட்டு தம்மா… என்கிற ஆச்சர்யம் தாக்க, எமது புகைப்படக் கலைஞர் கேமராவைப் பிரிக்க ஆரம்பித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் சட்டெனச் சுதாரித்து பீடியைத் தூர எரிந்தார். தான் புகைப்பிடித்ததை அண்ணா ஹசாரேவிடம் சொல்லி விடுவீர்களா என்று எங்களை அச்சத்தோடு வினவினார். இல்லையென்று சமாதானப்படுத்தினோம். “இந்த கிராமத்தில் புகைப்பழக்கமோ குடிப்பழக்கமோ இல்லை; அவற்றை விற்பதும் இல்லையென்று சொன்னார்களே..?” என்று நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமலேயே இடத்தைக் காலி செய்தார். ‘நிம்மதியா ஒரு பீடி இழுக்க முடியாமல்’ கெடுத்துவிட்ட எங்களை அவர் சபித்திருக்கக்கூடும்.
நாங்கள் கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் ஆவதாக’ சொன்னார். அதுவும் அண்ணா தொலைகாட்சியில் பிரபலமான பின் நிறைய பேர் கிராமத்துக்கு வருவதாகவும், அதனால்தான் இந்தளவுக்கு வியாபாரம் சூடுபிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அங்கே மக்களின் நலவாழ்வை முன்னிட்டு அண்ணா தடை செய்திருப்பதாக சொல்லப்படும் புகையிலை, சிகரெகட் போன்றவற்றை வெளியாருக்கு தெரியும்படி விற்பதில்லை. உள்ளூர்காரர்களுக்கு மட்டும் மறைவாக விற்பதை புரிந்து கொண்டோம். ‘பீடி குடிப்பது பிரச்சினையில்லை; ஆனால், அது வெளியாருக்குத் தெரிந்து குடிப்பதுதான் பிரச்சினை’ என்கிற வினோதமான ஒழுக்கநெறியை வியந்து கொண்டே கிராமத் தகவல் மையம் செல்வதற்கான வழியை கடைக்காரரிடம் விசாரித்துக் கொண்டோம்.
ஏற்கனவே தகவல் மையம் நோக்கி கோட்சூட் அணிந்த மாணவர் பட்டாளம் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிகத் துடிப்புடன் காணப்பட்ட ஆஷிஷ் என்கிற மாணவரிடம் பேச்சுக் கொடுத்தோம். தாங்கள் பூனாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்றும், எம்.சி.ஏ. படித்துக் கொண்டிருப்பதாகவும், தொழிற்சாலை சுற்றுலாவாக இங்கே வந்திருப்பதாகவும் சொன்னார். தொழிற்சாலைகளே இல்லாத ராலேகான் சித்திக்கு தொழிற்சாலை சுற்றுலாவா? ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்ற வந்துள்ளீர்கள் என்று விசாரித்தோம்.
ஒரு குறும்பான புன்னகையுடன் எம்மை நோக்கியவர், “இதெல்லாம் சும்மா தமாஷ் தலிவா… ஒரு ஜாலி ட்ரிப் அவ்வளவுதான்” என்றார்.
“அண்ணா ஹசாரேவைப் பார்த்தீர்களா?” என்றோம்.
“ஆங்… பார்த்தோமே… எங்களுக்கு நிறைய நல்லொழுக்க போதனைகள் எல்லாம் கொடுத்தாரே…” என்றார்.
“ஓ… அப்படின்னா நீங்க இன்றிலிருந்து ஒரு காந்தியவாதி ஆகப் போகிறீர்களா?” என்று சிரிக்காமல் கேட்டோம்.
எங்களை முறைத்தவர், “ஆர் யூ க்ரேஸி? இதெல்லாம் சும்மா ஒரு ஜாலி; வந்தமா என்ஜாய் பண்ணமா; போனமான்னு இருக்கணும். ரொம்ப சீரியஸா எடுத்துக்கக் கூடாது” என்று ஒரு வியாக்கியானமும் கொடுத்தார்.
ஆங்கில சானல்களில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை ஆதரித்து மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியவர்கள், காமெராவின் முன் ‘பாரத்மாதா கீ ஜே’ என்று கோஷமிட்டவர்கள், இதோ எங்களுடன் பேசும் ஆஷிஷ்.
“சரி… அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் ஊழலை ஒழித்து விடும் என்று நம்புகிறீர்களா?” என்று கேட்டோம்.
“இல்லை..” என்று சிரித்தார். ஏனென்று கேட்டோம்.
“பாஸ்… திஸ் ஈஸ் இண்டியா. நம்ம காலத்துலேன்னு இல்லைங்க; நம்ம பேரன் பேத்தி காலத்திலும் ஊழல் இருக்கும். அப்பவும் ஒரு ஹசாரே வருவார். டி.வி.ல பரபரப்பா வரும். எல்லாம் இப்படியே நடக்கும். ஆனா, ஊழல் மட்டும் ஒழியாது” என்று முடித்தார்.
“அப்படின்னா அண்ணா ஹசாரேவின் போராட்டத்தால் என்னதான் பயன்?” என்றோம்.
“இப்பப் பாருங்க, இவர் ஒரு பெரியாள் ஆகியிருக்கார். அரசியல்வாதிங்க அப்டியே இவரைப் பார்த்து மிரள்றாங்க. இப்படி ஒரு விஷயம் இருக்கணும் பாஸ். அப்பத்தான் சரியா இருக்கும். அரசியல்வாதி இருக்கான், ஊழல் இருக்கு, லஞ்சம் இருக்கு… அப்படியே அண்ணாவும் இருந்துட்டுப் போகட்டுமே..?”
இந்த தத்துவத்தை மென்று செரிப்பதற்குள் தகவல் மையம் எதிர்ப்பட்டது. அது மூன்று பெரிய ஹால்களைக் கொண்ட ஒரு கான்க்ரீட் கட்டிடம். உள்ளே அண்ணா ஹசாரே பல்வேறு தலைவர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், ராலேகான் சித்தியில் நடந்துள்ள பணிகளின் புகைப்படங்களும் அழகாக வைக்கப்பட்டிருந்ததன. ஏர் சுமக்கும் விவசாயி, மண்வெட்டி வேலை செய்யும் விவசாயி, கிராம பஞ்சாயத்தின் மாதிரி வடிவம் போன்றவற்றை அழகான பொம்மைகளாக வடித்து வைத்திருந்தனர். ஏசி குளிரூட்டப்பட்ட அறைக்குள் விவசாயம் சிலுசிலுவென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
வந்திருந்த மாணவர்கள் இந்தப் பொம்மைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். விவசாயம் பற்றியும் அதில் மக்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள், கடன்கள், தற்கொலைகள், அழிந்துப் போன குடும்பங்கள் என்று எதைப் பற்றியும் கேள்விப்பட்டிராத அவர்கள், ராலேகான் விஜயம் குறித்து பீற்றிக் கொள்ளும் பொருட்டு, தங்கள் வருகையை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டியது அருவருப்பாக இருந்தது.
நாங்கள் தகவல் மையத்தின் பொறுப்பில் இருந்தவரிடம் உரையாடினோம். கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் இருப்பதாகவும், விவசாயமும் விவசாயம் சார்ந்த கூலி வேலைகளுமே பிரதானம் என்றும் குறிப்பிட்டார். கிராமத்தில் தொன்னூறு சதவீதமானவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார். அருகிலேயே அண்ணா ஹசாரே நிர்மானித்த உறைவிடப் பள்ளி ஒன்று இருப்பதாகவும், ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் சொன்னார். காந்திய சொர்க்கத்திலும் காசுக்குத்தான் கல்வி எனும் யதார்த்தம் முகத்திலறைந்தது.
மேற்படிப்பு பற்றி விசாரித்தோம். கிராமத்தில் இருந்து சுமார் பதினைந்து பேர் வரை டாக்டர்களாகி இருக்கிறார்கள் என்றும், இவர்கள் அனைவருமே இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் என்றும் சொன்னார். குறைந்த மதிப்பெண் பெறும் வசதியான வீட்டுப் பிள்ளைகள் ரூபாய் மூன்று – நான்கு லட்சங்கள் கொடுத்து பொறியியல் படிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். அகில இந்திய மட்டத்தில் லஞ்ச ஊழலை எதிர்த்து வீரச்சமர் புரிந்து கொண்டிருக்கும் அண்ணாவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த “தகுதி”யற்ற மாணவர்கள் பணம் கொடுத்து சீட் வாங்குகிறார்களாம். அண்ணாவின் அகராதிப்படி இது லஞ்ச ஊழலில் சேருமா, கட்டணத்தில் சேருமா அல்லது நன்கொடையா என்று தெரியவில்லை.
அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போரில் அவரோடு கைகோர்த்து நிற்கும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் பலர் இட ஒதுக்கீடு எதிர்ப்பில் முன்நின்றவர்கள். அவர்கள் எத்தனை பேருக்கு ராலேகான் சித்தியில் இருந்து மருத்துவர்களாகியிருப்பவர் எல்லாம் இடஒதுக்கீட்டின் மூலம் வந்தவர்கள் என்பது தெரிந்திருக்கும்? தொடர்ந்து விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றியும் கேட்டோம். குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறார்கள் என்றும், அவர்களே விவசாயக் கூலிகளாகவும் இருப்பதாகச் சொன்னவர், ஆண்களின் கூலி ரூ.200 என்றும் பெண்களின் கூலி ரூ.150 என்றும் தெரிவித்தார் தகவல் மையத்தின் பொறுப்பாளர்.
அதே போல், ராலேகான் சித்தியில், உயர்சாதி மராத்தாக்கள் சிலரிடம் மட்டுமே நிலம் குவிந்திருப்பதும், தலித்துகளான மகர்கள் பெரும்பாலும் நிலமற்றவர்களாக இருப்பதும் தெரியவந்தது. மராத்தாக்களிலேயே சில குடும்பங்களிடம் குறைவாகத்தான் நிலம் இருந்தது. இதுதான் அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் நிலைநாட்டியிருப்பதாகச் சொல்லப்படும் சமத்துவத்தின் உண்மையான யோக்கியதை. ‘அண்ணா வருவதற்கு முன் ராலேகான், வந்த பின் ராலேகான்’ என்று வருபவர்களுக்கெல்லாம் தகவல் மையத்தில் பிலிம் காட்டுகிறார்கள். ஆனால், ஒரு குழி நிலம் கூட மறுவிநியோகம் செய்யப்படவில்லை என்பதே உண்மை. அண்ணா வருமுன் எப்படி இருந்ததோ அப்படியேதான் உள்ளது நில உடைமை. பல இலட்சங்கள் செலவில் கட்டப்பட்டிருக்கும் தகவல் மையத்தின் பளபளப்பில் உண்மையைக் காண முடியாது என்பதால், ஊருக்குள் இறங்கி நடந்தோம்.
ஞான் தேவ் பாலேகர் என்கிற உள்ளூர் இளைஞர் (மாராத்தா சாதி) எம்மோடு இணைந்து கொண்டார். ராலேகான் சித்தியில் நடக்கும் திருமணங்கள் பற்றி அவரிடம் விசாரித்துக் கொண்டே நடந்தோம். ராலேகானில் திருமணங்கள் எளிமையாக நடக்கும் என்றும், வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ கிடையாது என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டே வந்தார். இதற்கிடையே சாலையின் இடது புறம் மற்ற வீடுகளின் மத்தியில் ஒரு சிதிலமான குடிசை தென்பட்டது.
இது யாருடையது, ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்று விசாரித்தோம். “இது மூன்று பெண் குழந்தைகளைப் பெற்ற ஒருவருடைய குடிசை” என்றார்.
“ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது?” என்று கேட்டதற்கு, “ஓ… அதுவா, அவர் மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்ததில் இப்படி ஏழையாகி விட்டார்” என்றார்.
“ராலேகான் சித்தியில் வரதட்சணை கிடையாது, திருமணம் எளிமையாக நடக்கும் என்றெல்லாம் சொன்னீர்களே?” என்று திரும்பவும் கேள்வி எழுப்பினோம்.
“ஆங்… அது வந்து… வரதட்சணை இல்லைதான்… ஆனால், விருப்பப்பட்டு செய்வார்களில்லையா?” என்றவர் எங்கள் பார்வையைத் தவிர்த்துக் கொண்டார்.
‘கம்பெல் பண்ணி வாங்குறதில்லை சார். விருப்பப்பட்டு அவங்களா கொடுக்கிறத வாங்கிக்குவோம்’ என்று சொல்கிறார்களே, அவர்களெல்லாம் அண்ணாவின் ஜன்லோக்பால் சட்டத்தின்படி ஊழல் பேர்வழிகளா இல்லையா என்ற கேள்வி மனதில் எழுந்தது. நாங்கள் அந்தக் குடிசையில் இருந்த முதியவரிடம் பேச முயற்சித்தோம். “இப்போது நேரமில்லை. வேலைக்குச் செல்ல வேண்டும்” என்று தந்தி வாக்கியங்களில் கத்தரித்தார்.
நாங்கள் அந்த சமயத்திலும் அதன் பின்னும் கவனித்த முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், ராலேகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊரைப்பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் குறித்து நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, அந்தப் பிம்பத்தைக் குலைக்கும் விதமான பதில்களை அவர்கள் வெளியாரிடம் சொல்வதில்லை. பொதுவாக ‘இங்கே எல்லாம் நன்றாகத்தான் உள்ளது’ என்பது எந்தக் கேள்விக்கும் தயாரான பதிலாக வருகிறது. குறிப்பான விஷயத்தை நுணுகிக் கேட்டால் ஒன்று தவிர்க்கிறார்கள் அல்லது மழுப்புகிறார்கள்.
இதற்கு சற்று முன்பு மதிய உணவு சமயத்திலும் இதே அனுபவம் ஏற்பட்டிருந்தது. ஜெயமோகன் தனது கட்டுரையொன்றில், இடதுசாரிகள் ராலேகான் சித்தியில் இறைச்சி தடை செய்யப்பட்டிருப்பதாக அவதூறு சொல்வதாகவும், தானே ராலேகானில் குளத்து மீன் சாப்பிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் மீன் உணவு பற்றி அங்கிருந்த இரண்டு உணவகங்களில் கேட்ட போதும் ‘இல்லை’ என்கிற மறுப்பு விறைப்பாக வந்தது. ஆனால், காலையில் தேனீர் குடித்த கடையில் மறைவாக மட்டன் மசாலா தொங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கவனிக்காமல் இல்லை. மட்டன் மசாலா ஊழலா, அதை மறைப்பது ஊழலா என்பது குறித்து ‘அண்ணா’யிசத்தில்தான் விடை தேட வேண்டும்.
ராலேகானில் அண்ணா ஹசாரே ஏற்படுத்தியிருக்கும் நீர்ப்பாசன வசதி பற்றி ஞான்தேவ் வெகு உயர்வாகப் பேசினார். அண்ணா உருவாக்கிய தடுப்பணைகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பயன்கள் அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கே கிடைத்திருப்பதை நேரில் காண முடிந்தது.
சில பணக்கார மராத்தாக்களிடமே பெரும்பாலான நிலம் குவிந்துள்ளது. முற்றிலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கிராமம் என்பதால், நிலமற்றவர்களான தலித் மக்கள், மராத்தா நிலச்சுவான்தார்களைச் சார்ந்தே இருக்கின்றனர். அண்ணாவின் பக்தர்கள் சொல்லும் ‘தலித்’ மேம்பாடு என்பதன் மெய்யான பொருள் இதுதான்.
இதற்கிடையே கிராமக் கமிட்டியின் உதவித் தலைவர் வீட்டை அடைந்தோம். உள்ளே ஒரு புதிய மாடல் இண்டிகா விஸ்டா கார் நின்று கொண்டிருந்தது. பெரிய முற்றம். அதன் இருபுறமும் தகர ஷெட்டுகள் அமைக்கப்பட்டு சுமார் இருபது ஜெர்சி பசுமாடுகள் நின்று கொண்டிருந்ததன. உதவித் தலைவரின் தாயாரை சந்தித்தோம். வேலைக்கு உள்ளூர்காரர்களை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டோம். “உள்ளூர்காரர்கள் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் நகரங்களுக்குக் கூலி வேலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். இங்கே அக்கம்பக்கத்து கிராமத்தவர்கள்தான் கூலி வேலைக்குக் கிடைக்கிறார்கள்” என்றார். கூலி பற்றி கேட்டதற்கு, வருடத்திற்கு முன்னூறு கிலோ தானியமும் ஐயாயிரம் ரூபாயும் கொடுப்பதாகச் சொன்னார்.
ஞான் தேவிடம் உள்ளூர்காரர்கள் நகரங்களுக்குக் கூலிகளாகச் செல்வது பற்றி விசாரித்தோம். நிலமற்ற ஏழைகளுக்கு உள்ளூர் கூலி கட்டாததால் பெரு நகரங்களில் டிரைவர்களாகவோ, சித்தாள்களாகவோ அல்லது அது போன்ற வேலைகளுக்கோ சென்று விடுவதாகச் சொன்னார். அவர் சொன்ன விவரங்களில் இருந்து தமிழகத்தின் வறண்ட மாவட்டமான தர்மபுரியிலிருக்கும் ஒரு கிராமத்தை விட, ராலேகான் சித்தி எந்த வகையிலும் உயர்ந்ததாகத் தெரியவில்லை
ஞான்தேவிடம் பசுவதை பற்றிக் கேட்டோம். தாங்கள் பசுக்களைக் கொல்வதில்லை என்றும் அதற்கும் அண்ணாவின் வழிகாட்டுதல்கள்தான் காரணமென்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “அப்படியானால் வயதான பசுக்களை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர், “அவற்றையெல்லாம் மகர்களிடம் கொடுத்து விடுவோம். அவர்கள் அதை பாரனேரியில் இருக்கும் சந்தையில் அடிமாடாக விற்றுவிடுவார்கள். நமக்கு ஏன் அந்தப் பாவமெல்லாம்?” என்று முடித்தார். ஆதிக்க சாதியினர் அமல்படுத்தும் இந்த ‘கொல்லைப்புறக் கொலை வழியை’, அதாவது பெஞ்சு கிளார்க் மூலம் லஞ்சம் வாங்கும் புனிதர்களான நீதிபதிகளின் வழியை, அண்ணா ஹசாரேதான் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாராம்.
மெல்ல ஞான்தேவைத் தவிர்த்து விட்டு நாங்கள் மகர் குடியிருப்பை நோக்கிச் சென்றோம். ஊரும் சேரியும் தனித்தனியேதான் இருந்தன. அது நமது கிராமங்களில் இருக்கும் சேரிகளுக்கு எந்தவிதத்திலும் மேம்பட்டதாகத் தெரியவில்லை. அண்ணா, ராலேகானின் தலித்துகளுக்கு மேம்பட்ட ஒரு வாழ்க்கைத் தரத்தை உண்டாக்கித் தந்திருப்பதாகச் சொல்லப்படும் கட்டுக்கதைகளின் உண்மையான யோக்கியதையை அங்கே நேரிடையாகப் பார்த்தோம்.
முதலில் எதிர்பட்ட வீட்டின் வாசலில் முதிய பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். மெலிந்து சுருங்கிய உடலில் கிழிசலான சாயம் போன புடவை ஒன்றைச் சுற்றியிருந்தார். பூஞ்சையான கண்களில் இலக்கில்லாத பார்வை ஏதோ கேள்வியுடன் எங்களை வெறித்தது. நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டு அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தோம். பொக்கை வாயெங்கும் சிரிப்புடன் எங்களை உள்ளே அழைத்து அமரச் சொன்னார். அவரெதிரே மண்தரையில் நாங்கள் அமர்ந்து கொண்டோம். அவரது பெயர் சவித்ரா சீமா ஜாதவ். கணவர் இறந்து விட்டார். ஒரே மகன். அவரும் வெளியூரில் கூலி வேலைக்குச் செல்வதாக தெரிவித்தார்.
அது பத்துக்குப் பத்து அளவில் ஒரே அறை கொண்ட வீடு. தரை சாணி போட்டு மொழுகப்பட்டிருந்தது. சிதிலமான சுவர்களில் சிமெண்டுப் பூச்சு இல்லை. வீட்டினுள் வறுமை தலைவிரித்தாடியது. ஒரே கட்டில். துருப்பிடித்து இற்றுப் போன நிலையில் ஒரு இரும்பு பீரோ, கீழே விழும் நாளை எதிர்நோக்கி நின்றது. அந்த பீரோவின் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே வெகு சொற்பமான சாயம் போன துணிமணிகள் நேர்த்தியாக மடித்து அடுக்கப்பட்டிருந்தன. சமையல் பாத்திரங்கள் என்று பார்த்தால் இரண்டு கைவிரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்கி விடும் அளவுக்கே இருந்தன. அந்த வீட்டுக்கு மின்சார இணைப்பு இல்லை. பக்கத்து வீட்டிலிருந்து ஒயர் இழுத்து ஒரு புகைபடிந்த குண்டு பல்பு போடப்பட்டிருந்தது.
நாங்கள் ஊடகங்களில் ராலேகான் சித்தி பற்றி சொல்லப்படுவதற்கும் இவரது நிலைமைக்கும் உள்ள முரண்பாட்டை விசாரித்தோம். தங்களுக்கு விதிக்கப்பட்டது இவ்வளவு தானென்று சொன்னவர் தங்கள் குடும்பத்திற்கென்று விவசாய நிலம் ஏதுமில்லையென்றும், தனது மகன் கூலி வேலைக்குச் செல்வதாகவும், அதில் ஒரு நாளைக்கு 150 ரூபாய் கிடைக்குமென்றும் குறிப்பிட்டார். தகவல் மையத்தில் 200 ரூபாய் கூலி என்று சொன்னது பச்சைப் பொய்.
தொடர்ந்து பேசியதில் அசைவ உணவுகளை வீட்டில் சமைப்பதில்லையென்றும், வெளியூருக்குச் செல்லும்போது பிள்ளைகள் அசைவம் சாப்பிடுவார்கள் என்றும் சொன்னார். குடியும் கூட அப்படித்தானென்று குறிப்பிட்டார். தனது ஏழ்மை காட்சிப் பொருளாக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. குடும்பத்தின் ஏழ்மையான நிலை பற்றியோ கிராமத்தின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்புப் பற்றியோ கேள்விகள் வைத்தபோது நேரிடையாக பதிலளிப்பதையோ எங்கள் முகத்தைப் பார்ப்பதையோ தவிர்த்தார்.
அதே நேரத்தில் அந்த மக்களின் வாழ் நிலைமைகள் பற்றி வெளி உலகத்தில் சொல்லப்படும் கதைகளைக் கேட்ட அவர் முகத்தில் ஆச்சர்யம் தெரிந்தது. அண்ணாவின் சீடர்கள் இணையவெளியெங்கும் இரைத்து வைத்துள்ள ராலேகான் பற்றிய சித்தரிப்புகளில் சிலவற்றை நாங்கள் அவரிடம் சொன்னபோது ஒரு எள்ளல் சிரிப்போடும் பதிலேதும் சொல்லாமலும் கேட்டுக் கொண்டார். நாங்கள் அவரிடம் விடை பெற்ற போதும் அதே சிரிப்போடு எங்களை அவர் வழியனுப்பினார். அந்த எள்ளல் எங்களை நோக்கியதல்ல என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டபோதும், அந்த சிரிப்பை மட்டும் நினைவை விட்டு அகற்ற முடியவில்லை.
அடுத்து மகர் வகுப்பைச் சேர்ந்த யதூ பீமாஜி கெய்க்வாட் என்பவரைச் சந்தித்தோம். இவரது குடும்பத்திடம் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. மகன்கள் இருவருமே மும்பையில் டிரைவர்களாக இருப்பதாகச் சொன்னார். மும்பையில் வாழ்க்கைச் செலவுகள் அதிகமென்பதால் குடும்பங்களை கிராமத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர்.
ராலேகான் சித்தியில் விவசாயம் செய்பவர்கள் எல்லாம் சுபீட்சமாக இருப்பதாக பத்திரிகைகளில் சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும் போது உங்கள் பிள்ளைகள் ஏன் வெளியூருக்கு கூலி வேலை செய்யப் போக வேண்டும் என அவரிடம் கேட்டோம். அதற்கு தங்கள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் கைக்கும் வாய்க்குமே போதவில்லையென்றும், நிலத்தை சும்மா போட்டால் வீணாகி விடுமே என்பதால்தான் ஏதோ விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். மேலும், மூன்று ஏக்கர்கள் என்பதால் கிணற்றுப் பாசனத்துக்கு வசதியில்லை என்றும், நிறைய நிலங்கள் வைத்திருக்கும் மராத்தாக்களுக்கு மட்டும்தான் விவசாயத்தால் ஆதாயம் என்றும் குறிப்பிட்டார்.
பேசிக்கொண்டிருந்த போதே அவரது வீட்டின் முகப்பில் இருந்த விநாயகர் படம் கண்ணில் பட்டது. பௌத்தர்களான அவர்கள் வீட்டில் விநாயகர் படம் இருப்பதைப் பற்றிக் கேட்டபோது, தாங்கள் அசைவம் உட்கொள்வதை நிறுத்திக் கொண்ட பின்னர்தான் அண்ணா ஹசாரேவின் முயற்சிகளால் ஊருக்குள் தடையில்லாமல் நடக்க முடிகிறது என்றும், கோயில்களுக்கும் சரிசமமாக போய் வர முடிகிறது என்றும் சொன்னார்.
தலித் மக்களை அசிங்கமானவர்கள் என்று இழிவுப்படுத்தி, அவர்களை சுத்தப்படுத்தி ‘இந்துக்களாக’ ஏற்றுக் கொள்ளும் இந்துத்துவ கும்பலின் பார்ப்பனமயமாக்கம் அண்ணா ஹசாரேவால் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது. முன்பொரு காலத்தில் அண்ணா ஹசாரே தங்களின் பகுதிக்குள் வந்து, தங்களது உணவுப் பழக்கங்களை மாற்றுவது பற்றியும், ‘சுத்தமாக’ இருப்பது பற்றியும் அறிவுரைகள் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
நாங்கள் அவரிடம், “அதுதான் அண்ணா ஹசாரே சொல்லியபடி நீங்களெல்லாம் சுத்தமானவர்களாகி விட்டீர்களே, இப்போது உங்கள் இளைஞர்களுக்கு மராத்தா பெண்களை மணம் முடித்துக் கொடுக்கிறார்களா?” என்று கேட்டோம். இந்தக் கேள்வியைச் செவிமடுத்த பீமாஜி, ஏதோ காதில் காய்ச்சிய ஈயத்தைக் கொட்டியதைப் போன்றதொரு முகபாவனையைக் காட்டினார். “அப்படியொரு சம்பவமே நடக்காது” என்று அவசரமாகச் சொன்னவர், ”அப்படியெல்லாம் உலகத்தில் நடக்குமா?” என எதிர்கேள்வியும் எழுப்பினார்.
அவரோடு மேலும் இது குறித்துப் பேசியதிலிருந்து சாதி மறுப்பு என்பது அவர்களின் கற்பனையில் கூட இது நாள் வரையில் தோன்றியிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அண்ணா ஹசாரே ராலேகானில் நிலைநாட்டியிருப்பதாகச் சொல்லப்படும் சமத்துவம் என்பது ‘நாமெல்லாம் இந்து’ என்று ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் இந்து முன்னணி கூறும் சமத்துவம்தான். இந்த உரிமையற்ற நிலை அங்கே இயல்பாக நிலவுகிறது என்பது மட்டுமல்ல, அந்த இயல்புநிலையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு சிறிய கல் கூட அந்தத் தேங்கிய குளத்தில் விட்டெறியப்படவில்லை.
ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் சொல்வது போல் அது தன்னிறைவு பெற்ற கிராமம் அல்ல. அது ஒரு பச்சைப் பொய். அந்த கிராமத்தின் சாதாரண மக்கள் தங்களின் அடுத்த வேளை உணவுக்கும் கூட நித்தம் நித்தம் போராடத்தான் வேண்டியிருக்கிறது. பிள்ளைகளின் கல்வி குறித்தோ, எதிர்காலம் குறித்தோ, மருத்துவச் செலவுகள் குறித்தோ அவர்களிடம் திட்டங்கள் ஏதுமில்லை.
பீமாஜியிடம் உங்களது பேரக் குழந்தைகளை என்னவாக ஆக்கப் போகிறீர்கள் என்று கேட்டோம். ஒரு பேச்சுக்காவது ‘நன்றாகப் படிக்க வைப்போம்’ என்றோ, ‘நல்ல வேலைகளுக்கு அனுப்புவோம்’ என்றோ அவர் கூறவில்லை. “அதை அவர்களின் காலம் தீர்மானிக்கும்” என்றார். நம்பிக்கைகள் வறண்ட பதில்! மேட்டுக்குடி இந்து மனத்தின் கருணை வெள்ளம் பாய்வதற்கு ஒரு தாழ்வான வறண்ட நிலம் தேவை. ராலேகானின் மகர் குடியிருப்புகளில் அதனைக் காண முடிந்தது.
பௌத்தரான பீமாஜியோடு இந்த விவகாரங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது இந்தியாவின் இசுலாமியர்கள் நினைவுக்கு வந்தார்கள். ஒருவேளை ராலேகான் சித்தி இந்தியாவெங்கும் விரிந்தால் இசுலாமியர்களின் நிலை என்னவாக இருக்கும்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது.
குடிப்பவர்களையும், புகைப்பவர்களையும் அண்ணா கட்டி வைத்து சவுக்கால் அடிப்பாராம். பதினெட்டு பட்டி வரையில் சவுக்கை வைத்து சமாளிக்கலாம். அதிகாரம் அதைத்தாண்டி விரியும்போது தண்டனை முறைகள் எப்படி இருக்கும்? அண்ணா முத்தி முதல்வரானால் மோடியா?
நேரம் மாலை நான்கைக் கடந்திருந்தது. மீண்டும் ஊருக்குள் திரும்பினோம். மக்களிடையே ஒரு பரபரப்புத் தோன்றியிருந்தது. இரண்டு ஆம்னி பேருந்துகள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. அதிலிருந்து சில மாணவர்களும், வேறு சிலரும் இறங்கினர். விசாரித்தபோது, பூனாவில் இருந்து வருவதாகவும், மாலை நேரத்தில் அண்ணா ஹசாரே நிகழ்த்தப் போகும் பிரசங்கத்தைக் கேட்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.
ராலேகான் சித்தியில் ஒரு சொர்க்கத்தை எதிர்பார்த்து வந்து கடுமையாக ஏமாற்றம் அடைந்திருந்ததால், குறைந்தபட்சம் சொர்க்கத்தின் மூலவரான அண்ணாவையாவது பார்க்கலாமே என்று நினைத்தோம். அதிலும், ஜெயமோகன் உள்ளிட்ட அண்ணா பக்தர்கள் ‘அவர் கோயில் திண்ணையில் படுத்துறங்கும் எளியவர்’ என்றெல்லாம் ஏகத்துக்கும் அவரது எளிமை குறித்து பல்வேறு பில்டப்புகளைக் கொடுத்திருந்ததால், குறைந்த பட்சம் அந்த எளிமையையாவது தரிசிப்போமே என்று அண்ணா தங்கியிருந்த பத்மாவதி கோயிலுக்குச் சென்றோம்.
சுமார் அரை ஏக்கர் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது அந்தக் கோயிலின் சுற்றுச் சுவர். அதன் ஒரு கோடியில் அண்ணா உரையாற்றுவதற்கு ஏதுவாக ஒரு சிறிய மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வலது பக்கம் நவீன வசதிகள் கொண்ட ஒரு ஒற்றைத்தள கட்டிடம் இருந்தது. அதில்தான் அண்ணா ஹசாரே தங்கியிருந்தார். அக்கம் பக்கத்தில் ‘கோயில் திண்ணை’ போன்ற அமைப்பு ஏதும் உள்ளதா எனத் தேடினோம். இல்லை. மண்டபத்தின் முன்னே நிறைய விழுதுகள் கொண்ட மிகவும் வயதான பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. வந்திருந்த மாணவர்களும் பிற இளைஞர்களும் அந்த விழுதுகளைப் பிடித்துத் தொங்கி ஆடிக் கொண்டிருந்தனர்.
அண்ணா தங்கியிருந்த கட்டிடத்தை எளிதில் யாரும் நெருங்கி விட முடியாதபடிக்கு இரும்புக் கிராதி அமைக்கப்பட்டிருந்தது. வெளியே இருக்கும் கூட்ட எண்ணிக்கையையும் நிலவரத்தையும் அண்ணா ஹசாரேவிடம் உடனுக்குடன் தெரிவிக்க நான்கைந்து வேலையாட்கள் தயாராக இருந்தனர். ஐந்து மணிக்கு அண்ணா ஹசாரே தனது இருப்பிடத்திலிருந்து வெளிப்பட்டார். அவர் தங்கியிருந்த கட்டிடத்திற்கும் மண்டபத்திற்கும் ஒரு பத்தடி தூரம் இருக்கும். அவர் நடந்து வந்த இருபுறமும் மக்கள் வரிசைகட்டி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். வெளியே திரண்டிருந்த கூட்டத்திலிருந்து ‘பாரத் மாதாகீ ஜேய்’, ‘வந்தே மாதரம்’ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. கூட்டத்தின் முன்னே அமர்ந்த அண்ணா ஹசாரே, மராத்தியில் தனது உரையை ஆரம்பித்தார்.
நாங்கள் சுற்றும் முற்றும் பார்த்தோம். வந்திருந்த மக்களில் சாதாரண கிராமத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பாலும் பூனா, மும்பை போன்ற நகரங்களில் இருந்து வந்திருந்த உயர் நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் இருந்தனர். நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.
அண்ணா ஹசாரே கொச்சையானதொரு பொருளில் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டும் குறிவைத்து ஊழலைப் பற்றிப் பேசுகிறார். ஊழலின் ஊற்றுக்கண்ணான கார்ப்பரேட் முதலாளிகளைப் பற்றிப் பேசவில்லை; ஊழலைப் பெருகச்செய்த தனியார்மயத்தைப் பற்றிப் பேசவில்லை; தாராளமயம் அழித்த விவசாயத்தைப் பற்றி பேசவில்லை; கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் விளை நிலங்கள் பற்றி பேசவில்லை; சாதி ஆதிக்கம், தீண்டாமைக் கொலைகள், இந்துமதவெறி… போன்ற எதைப்பற்றியும் பேசவில்லை. அவர் பேசாத விசயங்கள் அனைத்திலும் ஆளும் வர்க்கக் கருத்துகளுடன் அநேகமாக அவர் உடன்படுகிறார். அதனால்தான் ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஊழல் பெருச்சாளிகளால் அவர் ஸ்பான்சர் செய்யப்படுகிறார். நேரலைத் தொலைக்காட்சியின் செய்தியாளர்கள், சம்பவங்களே இல்லாத அந்தக் கிராமத்தில் அவ்வப்போது புழுதி கிளப்புகிறார்கள்.
மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப சமூகத்தின் மீது வருண தருமத்தை நிலைநாட்டுகின்ற தனது பாசிச அரசியலுக்கு மிகவும் பொருந்தி வருகிறார் என்பதனால்தான், அண்ணா ஹசாரேயை இலட்சிய மனிதராகவும், அவரது கிராமத்தை இலட்சிய கிராமமாகவும் ஆர்.எஸ்.எஸ். கொண்டாடுகிறது.
இராணுவத்தின் கடை நிலை ஊழியருக்கே உரிய அடிமைப்புத்தியும் முரட்டுத்தனமான ஆதிக்க மனோபாவமும், நிலப்பிரபுத்துவ நாட்டாமைத்தனமும், பார்ப்பன இந்து பண்பாட்டு விழுமியங்களும், கொஞ்சம் அசட்டுத்தனமும் நிறைய தற்பெருமையும் கலந்த அந்த ‘நல்லொழுக்கச் சீலரை’ தரிசிக்க வந்த இளைஞர்கள் ஏ.சி. பேருந்திலிருந்து இறங்கி, அவசர அவசரமாக பத்மாவதி கோயிலுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
______________________________________________________________
– வினவு செய்தியாளர்கள், ராலேகான் சித்தி – மராட்டிய மாநிலத்திலிருந்து
புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011
______________________________________________________________________
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!
- அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0
- அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!
- டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்
- அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!
- ஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ !!
- மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!
- 50 எல் லஞ்சத்தின் பின்னே ஐ.ஏ.எஸ்-ஆடிட்டர்-முதலாளி-ஹவாலா..ஜெய்ஹிந்த்!
- நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஜன்லோக்பால் அம்பிகள் தயாரா?
- ஹசாரேவா, ராம்தேவா – யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!
- ரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி!
மாவோயிஸ்டுகள் அன்னா ஹசாரேக்கு ஆதரவா?
http://news.oneindia.in/2011/12/12/anna-hazare-gains-new-fan-following-in-maoists.html
http://www.asianage.com/india/anna-hazare-gets-maoist-support-761
அப்படி நடந்தால் மீண்டும் ஒரு முறை ராலேகான் சித்தியை பக்கத்து கிராமத்துடன் ஒப்பிட்டு ’புகழ்ந்து’ எழுதவேண்டியிருக்குமே ஓய்!!??
கொஞ்சம் வெய்ட் பண்ணியிருக்கப்படாதோ ?
வினவு நிருபர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ராலேகான சித்திக்கு நீங்கள் செல்லும்போதே அங்கே வழியெங்கும் வழியும் பாலையும் தேனையும் எடுத்துவந்து நக்கிதின்பதற்கு சட்டி பானை எதையும் எடுத்துச்செல்லாமல் வெறுங்கையுடன் திரும்பி வந்ததை கண்டிக்கிறேன்
உங்கள் கட்டுரை பச்சைப்பொய்.இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
ராலேகான் சித்தியை கூகிள் மேப்பில் மட்டுமே பார்த்துள்ள நீங்கள்
நல்ல கற்பனை வளமும்,நகைச்சுவை உணர்வும் கொண்ட ஒருவரை வைத்து
பொய்யான கற்பனை பாத்திரங்களை உலவ விட்டு கட்டுரையை
புனைந்துள்ளீர்கள்.ஆதாரங்கள் வெறும் புகைப்படங்களா?
புண்ணியாத்மா அன்னாஜீயை அவமானப்படுத்தும் விஷயம் இது.பின்னே! நீங்கள் வீடியோ எடுத்து பிரிந்து கிடக்கும் ஊரையும்,சேரியையும்
aeriel shot இல் காண்பித்தாலே நம்ப போவதில்லை.அன்னாஜீயின்
அறிவுஜீவி மெழுகுவர்த்தி வீரர்கள் கூட்டம்.இது வினவு கும்பலின்
கிராபிக்ஸ் உத்தி என்று புறந்தள்ளி விடுவார்கள்.
சவுக்கால் அடிக்கும் ஜமீன்தார்,குறைந்த பட்சம் பதினெட்டு பட்டி நாட்டாமை
வைத்திருப்பது பித்தளை சொம்பா? அல்லது ஸ்பான்சர்கள் வழங்கிய
916 ஹால்மார்க் முத்திரை உள்ள தங்க சொம்பா?
உடுங்க சூடா ஒரு ஆரிய திராவிட யுத்தம் நடத்திடுவோம்!
நம்ம மக்களுக்கு அன்னா ஹசாரே போதை எப்போ தீருமோ தெரியவில்லை.
you guys are all jealous of anna if you think that he is of no use and has hidden agenda why dont you come out with your great plan to root out corruption the fact is you hate everyone and your ego doesnt allow anyone to get name but you .,just like communists you must come out of prejudice and support honest person if you have any truth in your writing please about it thank you
அன்னாவின் ‘ராலேகான் சித்தி’ கிராமத்துக்கு சென்ற வினவு குழுவினர், பக்கத்திலிருக்கும் பிற ‘ராலேகான் பெரியம்மா’ கிராமங்களுக்கும் சென்று திரும்பியிருந்தால் சேனல்காரர்களின் வண்டிகளைதவிர்த்து பிற எந்த வித்தியாசத்தையும் உணர்ந்திருக்க முடியாது. எனக்கு அன்னாவின் மீது கோபம் கிடையாது. ஆனால் சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு யாரேன்றே அறியப்பட்டிராத ஒருவர் இன்றைக்கு தேசப்பிதா ரேஞ்சுக்கு கொண்டாடப்படுவது ஏற்படுத்தப்போகும் பின்விளைவுகளை குறித்து கவலைகொள்கிறேன்.
Good one!
இப்படி உண்மை செய்திகளை வெளி உலகத்துக்கு கொண்டு வருபவர்களை உலகம் வன்மையாக கண்டிக்கும். ஆனால் அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கின்றேன். அவர்களுக்கு எனது நன்றிகளும், பாராட்டுகளும்.
[…] […]
இது எப்படி பா.ஜா.க டேபில் வருதோ(உங்க பாஷையில் போலி கம்யூனிஸ்டுகளும் இதில் கலந்து கொண்டனரே?அப்போ போலி கம்யூன்சிட் டேபில் ஏன் போடவில்லை?)!என்னமோ போடா மாதவா!
அப்புறம் ஊழலை எதிர்க்கும் அண்ணாவுக்கு கருப்பு கொடி கட்டும் பேரன் பேத்தி சாரி!பெ .தி.க ஊழல பெருச்சாளி கனிமொழிக்கு கெண்டை மேள வரவேர்ப்பின்போது எங்கே போனதோ?நமக்கேன் வம்பு!
அண்ணா என்ன அந்த ஊரு கவுன்சிலரா இல்லை எம் எல் ஏவா?தனது தெரு அல்லது இடத்தை மட்டும் சுத்தமாக வைத்துக்கொள்ள?
மேலும் அவர் தனது இடத்தை மட்டும் நன்றாக மாற்றியிருந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?பாருங்கள் அண்ணா தனது ஊரை தனது இடத்தை மட்டும் நன்றாக வைத்துள்ளார்!இவர்தான் நாட்டை காப்பற்ற போராரான்னு கேப்பீங்க!கேக்குறவங்களுக்கு கேள்விகளுக்கு பஞ்சமே இல்லை!
யோவ், எல்லாத்தியும் விட்டு தள்ளூ, ஒரு கிழவர் ஏதோ போராடுராரெ அதுக்கு வினவு சார்பா என்ன கீழீசெ??
னொட்டு சொல்லவே வாயே வச்சிருக்கீயா!!
அண்ணே! ஏண்ணே இவ்வளவு கோவப்படுறீங்க? கொலை, கொள்ளை, ஊழல், இந்த மாதிரியான கஸ்மாலங்கலையெல்லாம் சட்டத்தால ஒன்னும் புடுங்க முடியாதுன்னு நம்ம சனங்க புரிஞ்சிகிட்டு கிளைமாக்சுக்கு வர்றப்ப அந்த கிழவன் உள்ள பூந்து மறுபடியும் மொதல்ல இருந்துல்ல ரீல ஓட்டச் சொல்றாரு. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்புடி அறுந்துபோன ரீல வச்சுகிட்டு பிலிம் காட்டுவீங்க. அத அறுந்து போன ரீலுன்னு சொன்னா உங்களுக்கு ஏண்ணே இவ்வளவு கோவம் வருது!
சமுதாய முன்னேற்றத்தை விரும்பாத தன்மான பாசிஸ்ட்கள்தான் இந்தமாதிரி போலிகளை தூக்கிவைத்துக் கொண்டு ஆடுவர், விமர்சனமில்லாத வரட்டு கருத்துக்களை எடுத்தோதுவார்கள், நல்ல கட்டுரை, வாழ்த்துக்கள்.
சரி அவரு மோசம் இவரு மோசம் இவரு போலி , அப்படினா நீங்க மட்டுந்தான் உண்மையா தோழா
அதிலென்ன சந்தேகம்? சென்னையில் பஸ்-ல விதௌட்-ல போயி புரட்சி செய்த வீர பரம்பரையாச்சே!
பஸ்-ல விதௌட்
எம்மாம் பெரிய புரட்சி ……
அண்ணா அந்த மாதிரி பண்ணுவார ???????
இதுல்லாம் அன்னாவுக்கு சில்லரை. அவரு கார்ப்பொரேட்டுங்ககிட்ட லட்சக்கணக்குல பணத்த வாங்கித்தான் புரட்சி(உண்ணாவிரதம்)பண்ணுவாறு.
நம்ம மதத்துக்கு பிரச்சினை வந்துவிடும் என்பதை தவிர வேற சிந்தனை எதுவும வராதா ?
அண்ணா ஹசாரே : இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது
அம்பிகள்: அது அவங்க தலை எழுத்து
கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. இப்போதிருக்கும் சட்டங்கள் ஊழல் செய்வதை தடுக்க முடியவில்லை,அன்னாவின் லோக்பால் மட்டுமே ஊழலை தடுக்க முடியும் என்பதாக பெருங்கூச்சல் போட்டு வருகிறது அன்னாவின் கும்பல்.
வெள்ளை நாய்களை விரட்ட போராடி அவனது குண்டாந்தடிகளை வெறுந்தலையால் எதிர்கொண்ட,அவனது துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் மாலையாக ஏந்திய விடுதலை போர் வீரர்களை அவமதிக்கும் வகையில் இரண்டு ரூபாய்க்கு வாங்கிய ஒரு மெழுகு திரியை கொளுத்தி வைத்துக் கொண்டு இது இரண்டாவது விடுதலைப் போர் என்று வேறு பிதற்றி திரிகிறது இந்த கும்பல்.
அன்னாவின் ஆதரவாளர்களுக்கு சில கேள்விகள்.
1.கருப்பு பூனை பிடிக்காத எலியை வெள்ளைப் பூனை பிடித்து விடுமா. இன்றைய சட்டங்களை ஏமாற்ற தெரிந்த எத்தர்களுக்கு அன்னாவின் லோக்பாலை ஏமாற்ற முடியாதா.இன்றைய ஊழலை சாத்தியமாக்கும் அதே அதிகார வர்க்கத்தை வைத்துக் கொண்டு வெறும் ஏட்டளவில் ஒரு புதிய சட்டத்தை போட்டு ஊழலை ஒழித்து விட முடியுமா.உடனே லோக்பால் என்றால் என்னவென யாரும் வகுப்பெடுக்க வேண்டாம்.அந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும்.”எப்படியாப்பட்ட”சட்டமானாலும் அதை அமுல் படுத்தும் பொறுப்பு அதிகார வர்க்கத்திடம்தான் தங்கியிருக்கும்.
2.கண்ணுக்கு தெரியாத ஊழலை விட மக்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் பிரச்சனைகளுக்கு அன்னாவின் லோக்பாலில் தீர்வு உள்ளதா.அதுவெல்லாம் லோக்பாலின் வேலையில்லை என்று சொல்வீர்களேயானால் பிறகு என்ன எழவுக்கு இதை இரண்டாம் விடுதலை போர் என்று சொல்கிறீர்கள்.
3.லோக் பால் நிறைவேற்றப்பட்டு விட்டால் விலைவாசி குறைந்து விடுமா.
4.லோக் பால் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுக்குமா.
5.அண்மையில் அ.தி.மு.க.அரசு அறிவித்த கட்டண உயர்வு போன்ற பொருளாதார பயங்கரவாத தாக்குதல்களிருந்து லோக் பால் மக்களை காக்குமா.
6.ஊழல் பற்றி வாய் கிழிய பேசும் அன்னா வரி ஏய்ப்பு பற்றி எதுவும் பேசுவதில்லையே ஏன்.[வரி ஏய்ப்பை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அன்னா பேசட்டும் பார்க்கலாம்.அதற்கு பிறகு நிழலை தவிர பின் தொடர்வதற்கு யாருமில்லாத அநாதை ஆகிவிடுவார்]
ஊழல் பற்றி வாய் கிழிய பேசும் அன்னா வரி ஏய்ப்பு பற்றி எதுவும் பேசுவதில்லையே ஏன்.[வரி ஏய்ப்பை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அன்னா பேசட்டும் பார்க்கலாம்.அதற்கு பிறகு நிழலை தவிர பின் தொடர்வதற்கு யாருமில்லாத அநாதை ஆகிவிடுவார்]
அவருக்கு அது தெரியாதா என்னா? அவரு என்ன சூப்பர் ஹீரோவா?
அய்யயோ! நீங்க இவ்வளவு கஷ்டமான கேள்விகளை கேட்டால் அம்பிகள் எப்படி பதில் சொல்வார்கள். வேண்டுமானால் அண்ணா ஹசாரே விடம் கேட்டுவிட்டு வந்து பதில் சொல்லுவார்கள்.
பொதுவா பரிட்சையில் கடினமான கேள்விகள் வந்தால் ‘சாய்ஸில்’ விட்டுவிடுவார்கள். அன்னா கும்பலும் இந்த கேள்விகளை ‘சாய்ஸில்’ விட்டுவிடுவார்கள். அடுத்த ஏதெனும் எளிதான கேள்விகளை (உம். அன்னாவின் அக்கா மக பேரு என்ன?) தேர்ந்தெடுத்து பாஸும் செய்து விடுவார்கள்.படித்த கூட்டத்துக்கு ‘டபாய்க்கிரது’ எபப்டின்னு சொல்லியா தரணும்?
// லோக்பால் மசோதா ஒரு தீர்வே அல்ல.நாட்டில் இருக்கும் எண்ணிலடங்கா சட்டங்களில் அதுவும் ஒன்று. //
அட பாவி! அண்ணா ஹசாறேவை பற்றி அவ்வளவு விசயங்களை தேடி எழுதினாய் அதற்கு நேரம் இருக்கிறது.
அவர் என்ன திட்டம் முன் வைத்து இருக்கிறார் என்பதை பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை!
மூடனே சுருங்க சொல்கிறேன் கேள் !
லோக்பால் சட்டம் அல்ல! அது ஒரு அமைப்பு! நீதி துறை, பாராளு மன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சம அதிகாரம் பெற்ற அமைப்பு!
எதற்காக அந்த அமைப்பு ?
தற்போது திருடனிடமே சாவி இருப்பது போல பாராளுமன்றம் சிபிஐ அமைப்பை ஆள்கிறது. அதனால் நடவடிக்கை எனபது அரசியவாதிகளின் விருப்பம் இருந்தால் மட்டுமே முடியும் என்ற நிலை. ஆனால் திருடும் அரசியல்வாதிகளே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா ? அதை தடுக்கவே இந்த அமைப்பு.
சிபிஐ லோக்பாலின் கீழ் வரும்
குயிலைப் பார்த்து பழிக்கிறது கோட்டான்.
\\அட பாவி! அண்ணா ஹசாறேவை பற்றி அவ்வளவு விசயங்களை தேடி எழுதினாய் அதற்கு நேரம் இருக்கிறது.
அவர் என்ன திட்டம் முன் வைத்து இருக்கிறார் என்பதை பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை!
மூடனே சுருங்க சொல்கிறேன் கேள் !
லோக்பால் சட்டம் அல்ல! அது ஒரு அமைப்பு! நீதி துறை, பாராளு மன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சம அதிகாரம் பெற்ற அமைப்பு!//
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் லோக்பால் சட்டத்தின் மூலமாகத்தான் லோக்பால் எனும் அமைப்பை உருவாக்க முடியும். ”அறிவாளிகள்” படிக்கும் தினமணியும் கூட அதை சட்டம் என்றுதான் சொல்கிறது.
பார்க்க.
வலுவான லோக் பால் சட்டம் – Dinamani
http://www.dinamani.com/…/Story.aspx?.
முட்டாளே இப்போது புரிகிறதா யார் மூடனென்று.
அது சரி.14 ஆம் பின்னூட்டத்தில் இல்லாத வரிகளை,எங்கோ படித்ததை எடுத்துப் போட்டு இந்த பின்னூட்டத்திற்கான மறுமொழியாக எழுதுவதே உம்மை மூடனென்று காட்டுகின்றதே.
@திப்பு
நண்பரே, அந்த 14ஆம் பின்னூட்டம் அந்த மேதாவி, அதாங்க வாழும் ஐன்ஸ்டீன், சாணக்கியருக்கு ட்யூசன் எடுத்த ஜகஜல கில்லாடி ரகு அவர்கள் என்னுடைய கருத்துக்கு சிலபல மாமாங்களுக்கு முன்னர் எழுதிய பதில் கருத்து அது. அதை அப்படியே காப்பி பேஸ்ட் அடித்திருக்கிறார். அட காப்பி அடிச்சதுதான் அடிச்சான், நல்ல பாய்ண்டையாவது அடிச்சுருக்கானா, அதுவும் இல்ல. சொன்னா பயபுள்ளைக்கு கோவம் மட்டும் வருது
கஷ்ட காலம்டா சாமி! பிரச்சினை என்ன அதை எப்படி அணுகுவது என்ற எந்த அடிப்படை அறிவும் இல்லாத மாக்களை நினைக்கும் பொது சிரிப்புதான் வருகிறது.
லோக்பால் வந்தா எங்க தாத்தாவுக்கு பல்லு மொளைக்குமா என்ற அளவில் சிந்திபவனுக்கு ஏதும் புரிய வைக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை! அய்யோ பாவம்
“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு “
@ரகு
தம்பி, நீ எங்களை பாத்து பாவப்பட்டது போதும். நான் கேட்டிருக்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல். நீ சொல்லும் பதிலில் உண்மை இருப்பின் ஏற்றுக்கொள்கிறேன். லோக்பால் வந்தா எங்க தாத்தாவுக்கு பல்லு முளைக்குமான்னு நாங்க கேட்கலை. லோக்பால் வந்தா [obscured] நீ சொல்றத நினைச்சாத்தான் சிப்பு சிப்பா வருது.
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
வாதத்திற்கு பதில் சொல்ல வக்கற்ற தற்குறிக்கு வெட்டி வீராப்புக்கு குறைச்சலில்லை.இதில் வள்ளுவன் வாக்கை காட்டி அறிவாளி வேடம் வேறு. ‘மூடன்” என்று முதலில் ஏசியது யார்,இப்போது”மாக்கள்” என்றும் அவன் இவன் [சிந்திப்பவன்] என ஏக வசனத்திலும் எழுதுவதே யாருடைய உள்ளம் எத்தகையது என்பதை காட்டுகின்றதே.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.
போமையா ,போய் இன்னும் நல்லா அறிவை வளர்த்துக் கொண்டு விவாதிக்க வாரும்.
// வாதத்திற்கு பதில் சொல்ல வக்கற்ற தற்குறிக்கு //
வாதம் அல்ல விதானடா வாதம். அதற்கு பதில் எல்லாம் சொல்லாம்! அதை புரியும் பக்குவம் வேண்டும்.
செவிடன் காதில் சங்கு ஊதுவதால் பயன் இல்லை. ஊதுபவர் நேரம் தான் விரயம் ஆகும்
\\வாதம் அல்ல விதானடா வாதம். அதற்கு பதில் எல்லாம் சொல்லாம்! அதை புரியும் பக்குவம் வேண்டும்.செவிடன் காதில் சங்கு ஊதுவதால் பயன் இல்லை//
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.
”விதானடா வாதம்” என்று இப்போதுதான் தெரிகிறதாக்கும். 14 .4 பின்னூட்டத்தில் ”பக்குவம்” இல்லாதவர்களுக்கு பதில் சொல்ல முயன்ற போது தெரியாமல் போனது ஏனோ.
ஹசாரேவுடன் சேர்ந்து கும்மியடிக்கும் அம்பிகள், நவீன அம்பிகள் எல்லாம் லஞ்சம் கொடுப்பதற்கு மட்டுமே வலிக்கும் என்பார்கள்… வாங்குவதற்கு மாமி ஜெயலலிதா பாணிதான் சரி என்பார்கள்…
Sir i have one doubt. No one is asking about the any Scam .. If any one asking you guys will ask about his background right??? so you don’t want to reduce the scam/pribe in India.. according to you .. no one should not ask about any scam?? if any one do dharna u will Questioning???
If your are raising any issue/scam in Vinavu website . No one will be listening . So what ever he trying for thats against pribe.. dont blame .. If that is good u have to give support.. Other wise please dont talk about it.
சரி அண்ணாவுக்கு கருப்பு கோடி காட்டிய பு ம இ ம ஏன் ஊழல பெருச்சாளி கனிமொழிக்கு கருப்பு கோடி காட்டவில்லை?
//ராலேகானில் அண்ணா ஹசாரே ஏற்படுத்தியிருக்கும் நீர்ப்பாசன வசதி பற்றி ஞான்தேவ் வெகு உயர்வாகப் பேசினார். அண்ணா உருவாக்கிய தடுப்பணைகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பயன்கள் அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கே கிடைத்திருப்பதை நேரில் காண முடிந்தது.///
குறைகளை ‘மட்டுமே’ பெரிது படுத்தி காட்ட வேண்டும் என்ற முன்முடிவுகளோடு எழுதிய கட்டுரையில் போகிற போக்கில் உள்ள ஒற்றை வரி இது. மிக முக்கிய சாதனை இது. ஆனால் என்னவோ ‘அதிக நிலம் வைத்திருப்பவர்கள்’ என்பவர்கள் 500 ஏக்கர் வைத்திருக்கும் சமீந்தார் என்ற ரேஞ்சில், தவறான பிம்பத்தை கட்டமைக்கும் முயற்ச்சி.
காந்தி டுடே சுட்டி (இந்த கட்டுரையில் மேற்கோள்காட்டப்பட்டதில் இருந்து) :
//அங்கு வெறும் ஐந்து நிலமில்லாத குடும்பங்களும் 13 கைவினைஞர்கள் குடும்பமும் இருக்கின்றன .பனிரெண்டு விவசாய்கிகள் மட்டுமே ஆறு ஹெக்ட்.ஏக்கருக்கு மேல் வைத்துள்ளனர் ,சுமார் 51% 1-3 ஹெக்ட்.ஏக்கர் அளவில் நிலங்களை உரிமை கொண்டுள்ளனர் .சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 2.5 ஹெக்ட்.ஏக்கர் நிலம் உள்ளது///
2.5 ஹெட்டேர் வைத்திருப்து ’அதிக நிலம்’ வைத்திருப்பதா என்ன ?
சாதியத்தை ஒத்தை மனிதரால் அழிக்க முடியாது. வரதட்சனையையும் தான். ஆனால் முயல்கிறார். அந்த கிராமத்து மக்கள் அவரின் தலைமையை ஏற்றுள்ளனர். அவரை அடித்து விரட்டியிம் இருக்க முடியும் தான்.
உருப்படியா யாராவது எங்காவது முயலவே கூடாதே..
நண்பர் பாலபாரதின் பதிவில் இன்று இட்டது : /// பாலா : வேறு ஒரு முறையில் சொல்ல முயல்கிறென் : பாரதி மீது உள்ள ஈர்ப்பால் அவரின் பெயரை உங்க புனைபெயராக கொண்டிருக்கிறீர்கள். நன்று. ஆனால் பாராதியார் சில விசியங்களில் இந்துத்துவ சார்பானவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனாலும் அதையும் மீறி, அவரின் மொத்த ஆளுமையை, சாதனையை, மனிதத்தை உணர்ந்ததால், அவரின் குறைகளை, முரண்களை பொருட்படுத்தாமல், அவர் பெயரை உங்க புனைப்பெயராக ஏற்க்கும் நிலை. நன்று. இதே போல் தான் அன்னாவையும், எல்லோரையும் எடை போட வேண்டும்..///
இன்றைய நிலையையும் 1975இன் நிலையும் ஒப்பிட்டு நடுனிலையோடு எழுதாமால், சும்மா மேம்போக்காக எழுதுவது தானே வினவு வின் பாணி..
இதுவும் அந்த சுட்டியில் இருந்து தான் :
1975 க்கு முன் ,அதாவது அண்ணாவின் வருகைக்கு முன் அந்த கிராமத்தின் நிலைமை மிக மோசமாக இருந்தது .தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடியது ,நிலத்தடி நீர் வற்றி,கோடைகாலங்களில் கிணறுகள் வற்றிவிடும்,குடி தண்ணீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு பயணிக்க வேண்டியது இருக்கும்,மேலும் தீய பழக்கங்களின் கூடாரமாக திகழ்ந்தது .ஏழ்மை சூழ்ந்து கடனால் தத்தளித்து கொண்டிருந்தது .மேலும் சரிவான நிலா பாங்கின் காரணமாக மழை மண்ணின் வளமான மேற்பரப்பை அடித்து சென்றுவிடும் .சுமார் 20 ஹெக்ட் .ஏக்கர் அளவுக்கு மட்டுமே விவசாயம் சாத்தியமானது ,மழையை மட்டுமே நம்பி ஒரு போகமே அங்கு விவசாயம் நடந்தது .அது அவர்களின் தேவையை போக்கவில்லை .ஊரில் 45% நாளைக்கு ஒருவேளையே உண்டனர் ,மேலும் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாளே உண்டனர் .பண பற்றாக்குறைக்கு வட்டிக்கு வாங்க தொடங்கினர் , வாங்கிய கடனை அடைக்க முனைந்து மேலும் கடனாளியாக மாறினார்கள் .இத்தகைய சூழலில் பக்கத்து கிராமத்தில் கிடைக்கும் ஒரு வகை புற்களை கொண்டு கள்ள சாராயம் தயாரிக்கும் வித்தையை ஒருவன் அறிமுகம் செய்தான் ,அவனது வெற்றியை தொடர்ந்து பலரும் முனைப்போடு அந்த தொழிலில் இறங்கினார்கள்.குறுகிய காலத்தில்,அந்த சிறிய கிராமத்தில் மட்டும் சுமார் நாற்பது கள்ள சாராய கிடங்குகள் உருவானது .ஊரே போதையில் மிதந்தது ,பள்ளி சிறார்கள் கூட அதிலிருந்து தப்பவில்லை .குற்றங்களும் அதிகரித்து ,காவல் துறையின் குற்ற பதிவேட்டில் பிராதன இடத்தை எட்டியது .
ஏழை விவசாயிகளும் ,விவசாய கூலிகளும் வேறுவழியின்றி பூனா,மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து அங்கு தொழிற்சாலைகளில் கூலிகளாக பணியாற்ற தொடங்கிவிட்டனர் .சிலர் தினம் 22 கி.மி பயணம் செய்து அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இனைந்து பசியாரினர் .இவை அனைத்தும் இனைந்து ஒட்டுமொத்தமாக அந்த கிராமத்தை சீரழித்தது ,எங்கும் ரௌடிகள் சுற்றி திரிந்ததால் பெண்கள் வீட்டு வாயிலை கடந்து வெளியில் வர முடியாத சூழ்நிலை .குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது 10% குழந்தைகளே பள்ளிக்கு சென்றனர் .ஜாதி சண்டைகள்,சச்சரவுகள்,குற்றங்கள் பெருகி வெள்ளமாக ஓடின .
குடிபழக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஆண்கள் அவர்கள் வீட்டு பெண்களை தொடர்ந்து துன்புறுத்தினர் ,ஒரு நாகரீக சமூகத்தின் அத்தனை விழுமியங்களும் மறைந்து ,மக்கள் கட்டற்று கற்கால மனிதர்கள் போல் வாழ்ந்தனர் .
——————–
அன்னா வருகைக்கு பிறகு :
ஊருக்கு பொதுவான நல திட்டங்களில் மக்கள் அனைவரும் தன்னார்வலர்களாக பங்கெடுத்தனர் .இதனால் ஒட்டு மொத்த செலவும் சிறு பங்குகளாக பிரிக்கப்பட்டு ,அனைவரின் பங்களிப்பும் அதில் இருப்பதை உறுதி செய்தது .மேலும் மக்களுக்கு இவை நம்மை சேர்ந்தது எனும் உணர்வும் நிலைநாட்ட பெறுகிறது.சமூக பொது வளங்களிலிருந்து கிடைக்கும் உபரி நிதியில் சுமார் 25 % கிராமத்தின் சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தபடுகிறது .இந்த நிதியை கொண்டு தலித்துகள் நிலங்களில் வேளாண்மை செய்வது ,அவர்களுக்கு செங்கல் வீடுகள் கட்டுவது ,ஏழை விவசாயிகளுக்கு உதவுவது ,வறட்சி காலங்களில் உதவ தானிய வங்கி நிறுவுவது போன்ற பல முக்கிய சமூக பணிகள் மேற்கொள்ளபடுகின்றன .
அண்ணே ! இதைகொஞ்சம் பாருங்கண்ணே …..
நாம் இப்போது தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பது தான் புரட்சி என்றால், அது சமீப கால வரலாற்றில் அருவருக்கத்தக்கதும், அறியாமையில் உருவான முடிவுமாகவே இருக்கும். ஜன லோக்பால் மசோதா குறித்த உங்கள் கேள்வி எதுவாயினும், அதற்குரிய பதில்களை கீழே தரப்பட்டுள்ளவைற்றில் இருந்தே தேர்தெடுக்க வேண்டும். அவை அ) வந்தே மாதரம் ஆ) பாரத் மாதா கி ஜே இ) இந்தியாவே அன்னா, அன்னாவே இந்தியா ஈ) ஜெய் ஹிந்த்.
http://rsyf.wordpress.com/2011/08/25/id-rather-not-be-anna-arundhathi/
( தி இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
@ரகு
//மூடனே சுருங்க சொல்கிறேன் கேள் ! லோக்பால் சட்டம் அல்ல! அது ஒரு அமைப்பு! நீதி துறை, பாராளு மன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சம அதிகாரம் பெற்ற அமைப்பு!//
அதிமேதாவி ரகு அவர்களே, பாராளுமன்றத்தில் சட்டமாக நிறேவேற்றப்படாமல் எப்படி அது சம அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்க முடியும்? அன்னாவும் கேஜ்ரிவாலும் விடாமல் பஜனை பாடிக்கொண்டு ராம்லீலா மைதானத்தில் அமர்ந்துகொண்டு சம அதிகாரம் பெற்ற அமைப்பை உருவாக்கிவிடுவார்களா? கையை பிடித்து எழுதகற்றுக்கொள்ளும் உன்னைமாதிரி பாலகர்களுக்கு புரியும்படி கருத்து பதியவேண்டுமென்றால் கிழிந்துவிடும். லோக்பாலை சட்டம் என்று நான் சொன்னது அந்த மசோதாவைத்தான். லோக்பால் அமைப்பு நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் விவாதித்து, மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி, கையெழுத்தாகவேண்டும். இவ்வளவு நடைமுறைகள் இருக்கின்றன. நீ என்னவோ, இன்ஸ்டன்ட் காஃபி மாதிர் சம அதிகாரம் பெற்ற அமைப்பை அன்னாவின் கோவணத்திலிருந்து அலேக்காக உருவி சிம்மாசனத்தில் சுலபமாக வைப்பதுபோல பிதற்றுகிறாய்.
//நீதி துறை, பாராளு மன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சம அதிகாரம் பெற்ற அமைப்பு//
நீ சொல்ற இந்த நீதிதுறை, பாராளுமன்றம், தேர்தல் ஆணையம் இதெல்லாம் சம அதிகாரம் பெற்ற அமைப்புத்தான். ஆனா இது ஒண்ணு ஒண்ணுலயும் எவ்ளோ ஊழல் இன்னைக்கும் நடக்குதுன்னு உனக்கு தெரியுமா? பேப்பர் படிக்கிற பழக்கம் இருக்கா உனக்கு? போய் கே.ஜி.பாலகிருஷணன் தினகரன்னு தேடிப்பாரு. கேள்வியே கேட்கப்படமுடியாத, விமர்சனமே பண்ணமுடியாத நீதித்துறை மேலேயே ஆயிரம் களங்கம் இருக்கு. இந்த லட்சணத்துல இன்னொரு தெண்டச்செலவு வேறயா? ஒரு கேசை இல்லாம பண்றதுக்கு நீதிபதிகளுக்கு கொடுக்கப்படற லஞ்சப்பணம் எவ்வளவு தெரியுமா, கோடிகள் தம்பி. வெறும் பணம் மட்டுமல்ல. எந்த நடிகை தேவைப்படுகிறாரோ அந்த நடிகை முதற்கொண்டு. இந்த கூத்து எல்லாம் ஈசிஆர் ரோட்டில் உள்ள ஒரு பங்களாவில். பங்களா அட்ரஸ் வேணுமா?
சாதாரண கேசுக்கே கோடின்னா, பெரிய பெரிய கேசுக்கெலாம் எவ்ளோ ஆகும் தெரியுமா? அவ்வளவு பணத்தையும் பார்த்தா எந்த மனிதனுக்கும் சபலம் வரத்தான் செய்யும். நீதிபதிகள் மட்டும் என்ன, அவர்களும் வக்கீலாக இருந்து பொய் சொல்லி வயிறு வளர்த்தவர்கள்தானே. நீதிபதியா ஆன உடனே நெறிதவறா நேர்மையாளனாகிவிடுவார்களா? லோக்பால் அமைப்புல இருக்குறவங்களுக்கு கொட்ட வேண்டியதை கொட்டுனா அப்புறம் நடக்கவேண்டியது தானாகவே நடக்கும்.
//இந்த லட்சணத்துல இன்னொரு தெண்டச்செலவு வேறயா? //
திருட்டுகள் நடப்பதால் காவல்துறை தேவை இல்லை என்கிறாயா ? தண்ட செலவா ?
// கேள்வியே கேட்கப்படமுடியாத, விமர்சனமே பண்ணமுடியாத நீதித்துறை மேலேயே ஆயிரம் களங்கம் இருக்கு //
பழுது ஏற்படுவதால் வாகனமே யாரும் பயன்படுத்த கூடாதோ ?
//லோக்பால் அமைப்புல இருக்குறவங்களுக்கு கொட்ட வேண்டியதை கொட்டுனா அப்புறம் நடக்கவேண்டியது தானாகவே நடக்கும். //
பணத்தால் எல்லாரையும் விலைக்கு வாங்க முடியாது! தீயவர்கள் கலந்து தான் இருப்பார்கள். எல்லோரும் நல்லவர்களாக இருந்தால் இந்த விவாதமே தேவை இல்லையே ?
தங்கச்சிய கட்டி குடுத்தா மாப்பிள்ளை நல்லா பாதுகுவாருன்னு என்ன நிச்சயம் ? அனாலும் இன்னொரு வீட்டுக்கு அனுபுள ?
நம்பிக்கை இல்லைனா வாழ்கையே கிடையாது. நம்பிக்கை தான் வாழ்க்கை.
எதையும் நம்ப மாட்டேன் என்பவர்கள் நார்த் கொரியா செல்லலாம்
ஜனாதிபதி பதவி எதற்கு என்று தெரியுமோ ? செக் அண்ட் பேலன்ஸ் என்றால் என்ன புரியுமா ?
என்ன குணா! உணர்ச்சி வசப்பட்டு அரைகுறையாக புரிந்து கொண்டு பிதற்ற்வதால் ஒரு பிரயோசனமும் இல்லை
//திருட்டுகள் நடப்பதால் காவல்துறை தேவை இல்லை என்கிறாயா ? தண்ட செலவா ?//
காவல்துறை வேண்டாம்னு சொல்லலை. ஒரு ஊருக்கு ரெண்டு காவக்காரன் தேவையில்லைன்னு சொல்றேன்
//பழுது ஏற்படுவதால் வாகனமே யாரும் பயன்படுத்த கூடாதோ ?//
பழுது ஏற்பட்டால் பழுதை சரிபண்ணனும், அதுதான் புத்திசாலித்தனம். அதெல்லாம் முடியாது ஒவ்வொருமுறை டயர் பஞ்சராகும்பொதும் புது வண்டிதான் வாங்குவேன் என்பது முட்டாள்தனம்.
தீயவர்கள் கலந்துதான் இருப்பார்கள். ஆனால் தீயவர்கள் மட்டுமே இருந்துவிட்டா என்ன செய்வீர்கள்?
//நம்பிக்கை இல்லைனா வாழ்கையே கிடையாது. நம்பிக்கை தான் வாழ்க்கை//
நம்பிக்கை வைக்கணும்.ஆனா கண்மூடித்தனமா நம்பக்கூடாது. நீ அதைத்தான் செய்யுற. ஊழல் ஒழிக்கப்படணும்கிறதுல உன்னை விட எனக்கு அதிக அக்கறை. அதுக்காக யாரு உண்ணாவிரதம் இருந்தாலும் யோசிக்காம அப்படியே போய் கூட்டத்துல கொயிந்தா போடக்கூடாது.
//உணர்ச்சி வசப்பட்டு அரைகுறையாக புரிந்து கொண்டு பிதற்ற்வதால் ஒரு பிரயோசனமும் இல்லை//
சரியாச்சொன்ன கண்ணு. உணர்ச்சிவசப்படாம அன்னா குழுவினர ஒருமுறை நீயே விமர்சிச்சுபாரு. அவுங்களும் சந்தேகத்துகிடமானவங்கதான், அவுங்களுக்கு பின்னாடி வேற ஒரு கும்பல் இருக்குன்றது உனக்கு புரிஞ்சுதுன்னா ஓகே. இல்ல, அவரு அப்படியெல்லாம் கெடையாது, அவரு வானத்துல இருந்து குதிச்சதை நானே பார்த்தேன்னு நீ நெனைச்சா அப்புறம் அதுக்கு மேல என்ன சொல்றது? பூம்பும் மாடு மாதிரி தலையத்தான் ஆட்டுற, ஆனா புரிஞ்சுகிட மாட்டெங்குற.
//காவல்துறை வேண்டாம்னு சொல்லலை. ஒரு ஊருக்கு ரெண்டு காவக்காரன் தேவையில்லைன்னு சொல்றேன்//
You neither understood what is the problem nor what is the solution.
The proposed solution is to change the head of the police station. not to create two stations.
You cannot understand because you don’t have that much capacity. I pity you
//You cannot understand because you don’t have that much capacity. I pity you//
Thanks for your concern Einstein
@ரகு
//எதற்காக அந்த அமைப்பு ?
தற்போது திருடனிடமே சாவி இருப்பது போல பாராளுமன்றம் சிபிஐ அமைப்பை ஆள்கிறது. அதனால் நடவடிக்கை எனபது அரசியவாதிகளின் விருப்பம் இருந்தால் மட்டுமே முடியும் என்ற நிலை. ஆனால் திருடும் அரசியல்வாதிகளே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா ? அதை தடுக்கவே இந்த அமைப்பு.//
நாடாளுமன்றவாதிகள் திருடர்கள், அதனால் அவர்கள்மீதே அவர்கள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று தெரியுதுல்ல, அப்புறம் என்ன ஹேர்ருக்கு லோக்பால் மசோதாவை நிறைவேற்றச்சொல்லி அந்த திருடர்களையே கெஞ்சுறீங்க? அவர்கள் மீதே அவர்கள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்ன் தெரியுதுல்ல, அப்புறம் எப்படி அவுங்க இந்த அமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு மட்டும் நடவடிக்கை எடுப்பார்கள்னு நீங்க நினைக்கிறீங்க? மணிக்கு ஒருமுறை விடாமல் ஆரஞ்சு சூசு ஆப்பிள் சூசு குடித்துக்கொண்டு, ஏய் எல்லாரும் நல்லா பாத்துக்க நானும் உண்ணாவிரதம் இருக்கேன், இன்னைக்கி சக்ஸஸ்புல் 125வது நாள்னு நான்ஸ்டாப் உண்ணாவிரதம் நடத்தி அந்த ‘சம அதிகாரம் பெற்ற அமைப்பை’ உருவாக்கிவிடலாம்னு நினைக்கிறீங்களா?
நக்சல்ஸ் மாதிரி ஆயுதம் ஏந்தி போராடலாமே இல்லேன்னா எந்த தவறுமே செய்யாத யோக்கிய சிகாமணிகளான கேஜ்ரிவாலையும் கிரண்பேடியையும் தேர்த்தல்ல நிக்கவச்சு லோக்பால் என்னும் சம அதிகாரம் பெற்ற அமைப்பை உருவாக்கிகொள்ளலாமே? கிரண்பேடி அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் இந்தியாவில் பாலாறும் தேனாறும் காட்டாற்று வெள்ளம்போல் ஓடியதா? அப்போதெல்லாம் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்தார்? ரிட்டையர் ஆக போகிற வயதில் விஆரெஸ வாங்கிகொண்டு இப்போது எல்லா மேடைகளிலும் விடாமல் கொடியசைத்துக்கொண்டு ட்ராமா ஆடுகிறார். இந்த உண்ணாவிரத பூச்சாண்டி எல்லாம் தேர்தலில் நிற்பதற்கான முன்யோசனையுடன் கூடிய அருமையான ஒரு செயல்திட்டம் என்பதை உன்போன்ற விளக்கெண்ணைய் எப்போது புரிந்துகொள்ளபோகிறீர்கள்? இன்னைக்கு ஸ்கூப் நியுஸ் என்ன தெரியுமா? அன்னா குழு 5 மானில தேர்தல்களில் நிற்கப்போகிறார்களாம். இப்ப வெளியே வந்து விழுந்தது பூனைக்குட்டி அல்ல, பெருத்த பன்னிகுட்டி.
//அதை தடுக்கவே இந்த அமைப்பு.
சிபிஐ லோக்பாலின் கீழ் வரும்//
சரிப்பா, நீ சொல்ற பாய்ண்டுக்கே வருவொம். ஏற்கனவே லோக் ஆயுக்தா கர்னாடாகவுல செயல்பட்டு வருது. ஆனாலும் ஆட்டைய போட்டுகிட்டுதான் இருக்காய்ங்க. கேசு போடறாங்க. வாய்தா கேட்குறாங்க, ஜாமீன்ல வர்றாங்க, ஆட்சிக்கும் போறாங்க. எப்படி இந்த லோக்பால் லோக் ஆயுக்தா அந்த தவறையெல்லாம் நடக்க அனுமதிக்குது? லோக்பால் வந்தவுடனே லஞ்சம் வாங்குற அதிகாரி எல்லாம் அப்படியே உத்தமசீலராவும் கடமை தவறா கண்ணியவான்களாவும் மாறிடுவாங்கன்னு நீ நெனச்சா, போய்யா போயி குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி உப்பு இல்லாத டீயில முக்கி தின்னு.
//கிரண்பேடி அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் இந்தியாவில் பாலாறும் தேனாறும் காட்டாற்று வெள்ளம்போல் ஓடியதா? //
தண்ணி அடுசுட்டு எழுதி இருக்கியா ?
// ன்னைக்கு ஸ்கூப் நியுஸ் என்ன தெரியுமா? அன்னா குழு 5 மானில தேர்தல்களில் நிற்கப்போகிறார்களாம்.//
நல்லது தானே ? விஜய் மாதிரி சூப்பர் ஹிட் படம் குடுக்கலைன்னு வருத்தமா ?
யார் தேர்தலில் நிற்கிறார்கள் எனபது பிரச்சினை அல்ல! யாரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்கின்ற அறிவு இல்லாமை தான் பிரச்சினை!
குணா! உங்களுக்கு மட்டும் அல்ல, நிறைய பேருக்கு பிரச்சினை என்ன என்பதே புரிவதில்லை!
// எப்படி இந்த லோக்பால் லோக் ஆயுக்தா அந்த தவறையெல்லாம் நடக்க அனுமதிக்குது? //
தவறு செய்பவர்கள் யாரும் அனுமதி வாங்கி செய்வதில்லை. அந்த தவறை கண்டு பிடித்து சரி செய்யவே இந்த அமைப்பு
// லோக்பால் வந்தவுடனே லஞ்சம் வாங்குற அதிகாரி எல்லாம் அப்படியே உத்தமசீலராவும் கடமை தவறா கண்ணியவான்களாவும் //
சும்மா இருப்பதே சுகம்! எதுவும் பண்ணாதீங்க ! பின்னூட்டம் போட்டு கத்தி கிட்டே இருந்தா ஊழல் பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைபவர்களுக்கு மத்தியில் முயற்சி செய்து தோற்பதால் தவறில்லை !
“காண முயலெய்த அம்பினில் யானை பிழைத வேல் ஏந்தல் இனிது ” எனபது தான் வள்ளுவன் வாக்கு
//குணா! உங்களுக்கு மட்டும் அல்ல, நிறைய பேருக்கு பிரச்சினை என்ன என்பதே புரிவதில்லை//
தம்பிடு, பிரச்சனையின் ஆழ அகல நீளங்களை நீ மிகச்சரியாக புரிந்துவைத்திருப்பதாக நினைத்துகொண்டிருக்கிறாய். நீ இன்னும் வளரனும் தம்பி. ஊழலுக்கு எதிராக ஒரு போராட்டம் என்றால் நிச்சயம் அதற்கு என் ஆதரவு உண்டு. ஆனால் கனிமொழியோ அல்லது ராசாவோ அந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார்களென்றால் எப்படி போவது? அவர்கள் அளவுக்கு மோசமில்லை அன்னா. அவர் ஒரு மினி தாலிபான் அரசாங்கத்தையே ராலேகானில் நடத்தி வந்திருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்கிறாயா? இந்த மாதிரியான ஒரு நபர் முன்னெடுத்து செல்லும் ஒரு போராட்டத்தின் பிண்ணனி தெரியாமல், இந்த போராட்டத்தின் அடுத்த கட்டம் என்னவாகயிருக்கும், இது எங்கே போய் முடியும் என்ற குறைந்தபட்ச சிந்தனை இல்லாமல் கண்மூடித்தனமாக ஒருவரை ஆதரிப்பது ஆபத்தானது. தனி நபரையொ, இயக்கத்தையோ, அவர்களின் கொள்கைகளையோ விமர்சனதுக்குள்ளாக்காமல் பின்பற்றுவது கேடாய் முடியும்.
ஜனாதிபதி பதவி மத்திய அரசாங்கம் கோப்புகளில் கையெழுத்து போடுவது, குடியரசு நாளில் தெசிய்க்கொடி ஏற்றுவது, வெளி நாட்டு தலைவர்கள் வரும்போது சாப்பாடு போடுவது, முடிஞ்சா போர்க்கப்பல்ல போயி போஸ்குடுப்பது. இதைத்தவிர குடியரசுத்தலைவரால் என்ன செய்ய முடியும்னு நினைக்கிற? நீ ரொம்ப தியரிடிக்கலா இருக்க தம்பி. பிராக்டிகலா யோசி.
ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போலத்தான் உன் கணக்கு.
//ஜனாதிபதி பதவி மத்திய அரசாங்கம் கோப்புகளில் கையெழுத்து போடுவது, குடியரசு நாளில் தெசிய்க்கொடி ஏற்றுவது, வெளி நாட்டு தலைவர்கள் வரும்போது சாப்பாடு போடுவது, முடிஞ்சா போர்க்கப்பல்ல போயி போஸ்குடுப்பது. இதைத்தவிர குடியரசுத்தலைவரால் என்ன செய்ய முடியும்னு நினைக்கிற? //
Why are we keeping the President post? You know it is useless. Can you justify? What is the necessary for it? Can we remove that post itself?
What will happpen if we remove?
By eradicating Presidential post nothing major will happen just like implementing lokpal
இவ்வளவு தானா உனது அறிவு? ஜனாதிபதி பதவிஇன் மகத்துவம் தெரியவில்லை! லோக்பலாய் பற்றி பேசுகிறாய்!
இதற்கு மேல் உன்னோடு பேசி எனது பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
நம் இந்திய ஜனாதிபதி பதவியின் மகத்துவத்தை நீங்கள் கொஞ்சம் விரிவாக விளக்கிக் கூறினால் உங்கள் புரிதலைப் பற்றி அறிந்து கொள்ள எங்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி!
@Rishi
I would suggest you to read “Checks and balances”
http://en.wikipedia.org/wiki/Separation_of_powers
Home work for you
—————–
How Lokpal solution fits under this Separation of Power?
Why Military rule did not happen in India?
How It was possible for Kim Jong dynasty to continue?
Compare our country to Srilanka and pakistan.
Our constitutional writers have done everything for a reason. And I leave it to your search to find out “Why?”
ஜனாதிபதியின் மகத்துவமாக இதில் என்ன கூறப்பட்டிருக்கிறது? அது நடைமுறையில் இருக்கிறதா? என்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு புதுசாக எதுவும் தெரியவில்லையே??
உதாரணத்திற்கு,
ஒரு மசோதா நிறைவேற வேண்டுமானால் அதற்கு ஜனாதிபதியின் கையெழுத்து வேண்டும். லோக்சபா ராஜ்யசபா இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சம்மதம் பெறும்பட்சத்தில் ஜனாதிபதி கையெழுத்துப் போட்டுத்தானே ஆகிறார். மசோதாவில் அவருக்கு ஒப்புதல் இல்லையெனில், அதை சுட்டிக்காட்டி, அதிகபட்சம் அவர் திருத்தங்களுக்காக இரண்டுமுறை திருப்பி அனுப்பலாம். மூன்றாம் முறை கையெழுத்து போட்டே ஆகவேண்டும்! ஆனால் எந்த ஜனாதிபதியும் ஓரிரு தருணங்களைத் தவிர திருப்பி அனுப்பியதே இல்லை. இதை Check and balance கோட்பாட்டின் கீழ் கொண்டுவருவீர்களேயானால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. Check and Agree இந்தக் கோட்பாட்டின் கீழ்தான் இதை வகைப்படுத்துவேன்!
Unfortunately I cannot spoon feed all the information.
I want to remind you one story, One elephant and four blind people.
You can say, elephant is nothing but a big pillar.
Who am I to deny it?
ரகு
உங்கள் கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு திறந்த மனதுடனும் திறந்த கண்களுடனும் யதார்த்த நடைமுறைகளையும் சட்ட நடைமுறைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்குப் புரியும்.
ஒரு சில குறைகளைத் தாண்டி அண்ணா செய்திருப்பது அளப்பரிய சாதனை. அதைக் குறை கூற நமக்கு யோக்கியதை இல்லை.
(அண்ணாவைப் புகழ்ந்து எழுதினாலும், இந்துத்துவா, ஜெயமோ போன்றவற்றை ஆதரிக்கவில்லை, எனவே பெயர் வேண்டாம்)
ஒருவேளை உங்களுக்கு அந்த யோக்கியதை இல்லாமல் இருக்கலாம், வினவுக்கு நிச்சயம் உண்டு, நீங்கள் இந்துத்துவா, ஜெயமோ போன்றவர்களை ஆதரிக்காமல் இருந்தாலும் அன்னா நியாயமான புகழுக்கு உரியவர் இல்லை.
பூனைக்கு மணி கட்ட முயற்சி செய்தவரை புகழாமல் , சும்மா பின்னூட்டம் போட்டு கொண்டிருக்கும் குருவையா புகழ்வது ?
பூனைக்கு மணி கட்டவேண்டும். நிச்சயமாக. ஆனால் பூனைக்கு மணிகட்ட ஒரு புலி வந்தால் வரவேற்பேன். ஆனால் நீங்கள் நம்பியிருப்பது எலி. யாருமே ஊழலுக்கு எதிராக போராடக்கூடாதுன்னு சொல்லலை. மக்கள் தன்னிச்சையாக போராடவேண்டும். எல்லா தரப்பு மக்களும் போராட்டத்தில் இணையவேண்டும். எல்லாரும் இணைவதற்கு போராட்டத்தின்மீது நம்பிக்கை வரவேண்டும்.
அண்ணா எலியாக இருந்தால் ஏன்னா , பூனைக்கு மணி கட்ட ம்யற்சியாவது செய்கிறதே ! ஆனால் பின்னோட்டம் போட்டு திரியும் வீணர்கள் என்ன சொல்வது? குணா என்றா ?
////இவ்வளவு தானா உனது அறிவு? ஜனாதிபதி பதவிஇன் மகத்துவம் தெரியவில்லை! லோக்பலாய் பற்றி பேசுகிறாய்!
இதற்கு மேல் உன்னோடு பேசி எனது பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ////
இப்ப பொன்னான நேரம் இல்லாம, பித்தளையாப் போச்சு போல!
By the way Mr Anon, do you know the answer?
பூனைக்கு மணிகட்ட எலியை நம்புவதிலெயே உன் சிந்தனையின் தரம் தெரிகிறது. இங்கே சொல்ற மாதிரி வேற மானிலத்துக்காரன்கிட்ட இப்படி சொல்லிகிட்டு இருக்காதே. அப்புறம் உன்னைப்பார்த்து வாயால சிரிக்கமாட்டான்
அது எலி என்று குணா கூறியிருப்பதை விட நரி என்று கூறியிருக்க வேண்டும். வஞ்சக நரியின் சூது விரைவில் பல்லிளிக்கும். ரகு அதன் பின் இந்தப் பக்கமே வரமாட்டார்.
குணாவாகவும் இருக்கலாம், குருவாகவும் இருக்கலாம், பூனைக்கு மணிகட்டுவதாக சொல்லிக்கொண்டு, மக்களை எலிகளாக மாற்றி அவர்கள் காதில் துணிவைத்து அடைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை சுட்டிக்காட்டினால் தவறாக தோன்றுகிறதே! சரி மக்கள் நன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை,அன்னாவை ஆதரித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்.ல் சேர்ந்துவிட்டால் உருப்படியானவர்கள் ஆகிவிடுவோமா?என்ன ரகு, ஓ.கேவா?
ஏம்பா தம்பி ரகு, பூனைக்கு மணிகட்ட கிளம்பிய ஹசாரே எலி ஒன்றரை நாளிலேயே எந்திரிச்சிட்டாரே? என்ன விஷயம்னு தெரியுமா? நான் கேள்விபட்டதை சொல்றேன். கேட்டுக்கோ. அதாவது, ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ரெகுலராக பார்சல் சாப்பாடு கொடுக்கும் பல்க் ஆர்டரை எடுத்திருந்த ஹோட்டல் முதலாளி வீட்டில் ஏதோ துக்கமாம். அதான் அந்த ஆளு திடீர்னு கடையை மூடிட்டு போய்ட்டான். நம்ம ஆளுக்கு பசி வயித்தை கிள்ளிடுச்சு. என்ன பண்றது. புது கடையில் ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தா வெளியில் போக முடியல. கர்மம் ஒரு மனுசனுக்கு இப்படியா பசிக்கிறது. இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், இப்போதைக்கு பொட்டிய கட்டிடுவோம், இல்லேன்னா நமக்கு பாடையை கட்டிடுவாய்ங்கன்னு சொல்லி ஜகா வாங்கிட்டாராம். அடுத்த தடவை பாதியிலேயே புட்டுக்காத கான்ட்ராக்டரா பார்த்து ஆர்டர் கொடுக்க சொல்லி கேஜ்ரிவாலுக்கும் சொர்ணாக்கா கிரண்பேடிக்கும் அட்வைஸ் பண்ணிட்டு எந்திரிச்சுட்டாராம்.
இப்ப இதுக்கு என்ன சொல்லப்போற தம்பி?
இது இப்படித்தான் இருக்கமுடியும் என்ற எனது ஊகத்தை உறுதிசெய்திருக்கிறது வினவின் பதிவு.சரியான முயற்சி.வாழ்த்துக்கள்.
அன்னா ஹசாரேவின் மறுபக்கம்
அ.முத்துக்கிருஷ்ணன்
http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=4976
[…] […]
[…] […]
ஹசாரே போராட்டதை குறை கூறாதே
அசாரே போராட்டத்தை குறை கூறாதே, ஆனால் போராட்டத்தில் உள்ள குறைகளையும், போராடுபவரின் குறைகளையும், அந்த போராட்டத்தில் பயன்பெறும் சந்தர்ப்பவாதிகளையும் குறைகூறக் கூடாதா? ஏனெனில் அசாரே மற்றுமோர் மகாத்மாவா? மகாத்மாக்களின் வேலை மக்களை திசை திருப்புவதேதானா? சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள்தானே? சம்போ… சம்போ……;.
உத்தரவு அரசே
@சம்பு
ஹசாரே போராட்டத்தை குறை கூறாதே
உத்தரவு அரசே