கூடங்குளம், பால் பேருந்து கட்டண உயர்வு, முல்லைப் பெரியாறு முதலான மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் வளரும் காலத்தில் சசிகலா நீக்கம் குறித்த செய்தி ஊடகங்களின் மாபெரும் சென்சேஷனாக முன்வைக்கப்படுகிறது.
அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள் தகுதியிலிருந்தும் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறவினர்கள் அடங்கிய மன்னார்குடி கும்பல் நீக்கப்பட்டது குறித்து பார்ப்பன ஊடகங்கள் மகிழ்வதோடு துள்ளிக் குதிக்கின்றன. தினமலர், தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் முதலான பார்ப்பன பத்திரிகைகளும், சோ, சு.சாமி, பா.ஜ.க முதலான பார்ப்பனக் கும்பல்களும் இதை ஆரவாரத்துடன் ஆதரிப்பதோடு அதற்கு பொருத்தமான கிசுகிசு செய்திகளையும் விரிவாக முன்வைக்கின்றன. இறுதியில் ஜெயாவின் அனைத்து பாவங்களுக்கும் இந்த மன்னார்குடி கும்பல்தான் காரணமென்றும் இனி அவர் எந்த நெருக்கடியுமின்றி ‘நல்லாட்சி’யை தொடருவார் என்றும் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.
எம்.ஜி.ஆரால் திட்டமிட்டு தமிழக அரசியலுக்குள் பாசிச ஜெயா திணிக்கப்பட்ட போதும் பின்னர் அவர் வாரிசு சண்டையில் வெற்றி பெற்ற போதும் பார்ப்பன ஊடகங்கள் அவரை மற்ற திராவிட அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு இருப்பவர் என்று போற்றிக் கொண்டாடின. நாகரீகமானவர், கான்வென்டு கல்வி கற்றவர், ஊழலற்றவர், குடும்ப பந்தங்கள் இல்லாதவர், படித்தவர், பண்பாளர், தமிழினித்தின் தனித்தன்மையை மறுத்து பாரத ஒற்றுமையை போற்றுபவர், இன வெறி இல்லாதவர், இந்துமத ஆன்மீக விசயங்களை சமரசமின்றி பின்பற்றுபவர் என்பதாக இவை நீண்டன.
திராவிட இயக்கங்களையும், தமிழ்நாட்டையும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கும் இந்திய ஊடகங்கள் அதற்கு மாற்றாக அ.தி.மு.கவையும், ஜெயாவையும் முன்னிருத்தின. பிராமணர் சங்கம், ஜெயேந்திரன், ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி போன்ற அவாள் கட்சிகளெல்லாம் ஜெயாவை முன்னுதாரமாண இந்து அரசியல்வாதியாக போற்றி வந்தன.
90களில் ஜெயா ஆட்சியைப் பிடித்ததும் பின்னர் சசிகலா நட்பு உறுதியடைந்ததும், தொடர்ச்சியாக ஜெயா சசிகலா கும்பல் முழு தமிழ்நாட்டையும் தடுப்பார் யாருமின்றி மொட்டையடித்து கொள்ளையடித்ததுமான காலத்தில் இந்த பார்ப்பன ஊடகங்கள் அணுகுமுறை எப்படி இருந்தன?
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சசிகலாவை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பார்ப்பன ஊடகங்கள் பாசிச ஜெயாவை மட்டும் அதிலிருந்து நீக்கி சுத்தமானவர் என்று அறிவித்தன. அதாவது சசிகலாவின் மன்னார்குடி கும்பல்தான் 91-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு காரணம், ஜெயலலிதா அதை தடுக்க முடியாதபடி கட்டுண்டு கிடந்தார் என்றுதான் அவர்கள் சித்தரித்தார்கள்.
பின்னர் தேர்தலில் படுதோல்வியுற்று புறக்கணிப்ப்பட்ட காலத்தில் இந்த பார்ப்பன கிச்சன் காபினெட் சசிகலாவை மட்டும் குறிவைத்து தனிமைப்படுத்தின. அதற்கு தோதாக அப்போது இதே போல சசிகலாவை நீக்கியதாக ஜெயா அறிவித்தார். பின்னர் சேர்ந்து கொண்டார். 2001இல் ஆட்சிக்கு வந்த போதும் பார்ப்பன ஊடகங்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்தன. அப்போதும் இதே போன்று நாடகம் நடந்தது. இடையில் பிரிந்து போன ஜெயா பின்னர் சசிகலாவுடன் சேர்ந்து கொண்டார்.
இப்போது 2011இல் ஜெயா ஆட்சியைப் பிடித்த பிறகும் பார்ப்பன ஊடகங்கள் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்கு “மன்னார்குடி மாஃபியாவை” நீக்குமாறு விரும்பின. ஒரு வேளை அப்படி முற்றிலும் விலக்காவிட்டாலும் ஆட்சி அதிகார அமைப்புகளிலிருந்து அவர்களை தள்ளி வைக்கமாறு கோரின. துக்ளக் சோ இது குறித்து பலமுறை புலம்பியிருக்கிறார். தற்போது சசிகலா நீக்கத்திற்காக ஜெயாவுக்கு பாராட்டுமழை பொழிந்திருக்கும் சு.சாமி மாமாவும் அப்படித்தான் அடிக்கடி பேசி வந்தார். மன்னார்குடி மாஃபியா என்ற வார்த்தையே சு.சாமி அறிமுகப்படுத்திய ஒன்று.
இப்போது ஆட்சியில் அசுரபல பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.க அரசை மன்னார்குடி கும்பல்தான் கட்டுப்படுத்துகிறது, தலைமை செயலகத்தில் சசிகலாவின் பினாமியான பன்னீர்செல்வம் என்ற அதிகாரிதான் உண்மையான தலைமை செயலாளராக ஆட்சியை, அதிகாரிகளை தீர்மானிக்கிறார், இதனால் பல நல்ல அதிகாரிகள் அதிருப்தி அடைந்து மத்திய அரசு வேலைகளுக்கு மாற்றுமாறு கோரினர், அமைச்சர்கள் – அதிகாரிகள் அனைவரும் சசிகலா கும்பலின் விருப்பத்தின்படியே நடந்து கொண்டனர், இறுதியில் பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து ஜெயா ஆட்சியை இழந்தால் யாரை கொண்டுவருவது, அதற்கு சசிகலா செய்து வந்த முயற்சிகள் உளவுத்துறை மூலம் ஜெயாவுக்கு வந்து அவர் கோபம் அடைந்தார் முதலான பல செய்திகள் கிசுகிசு பாணியில் பார்ப்பன ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
இவற்றில் உண்மை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் சசிகலாவின் நட்புதான் ஜெயாவின் எல்லா தவறுகளுக்கும் அடிப்படை காரணமென்று பார்ப்பன ஊடகங்கள் சித்தரிக்கும் சதிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அரசியலாகும்.
இந்த ஆட்சியிலேயே ஜெயா கொண்டு வந்துள்ள தலைமைச் செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், சமச்சீர்கல்வியை தடை செய்ய உச்சநீதிமன்றம் வரை சென்றும், பழையை பாடபுத்தகங்களை அச்சிட்டும் செய்த வக்கிர செலவு, மக்கள் நலப் பணியாளர்களை நீக்கியது, ஈழத்தாயாக வேடம் போட்டு பின்னர் மூவர் தூக்கை உறுதி செய்தது, கூடங்குளத்தில் போராடும் மக்களை ஆதரிப்பது போல பின்னர் எதிர்த்தது, பால் விலை, பேருந்து கட்டண உயர்வை அதிரடியாக உயர்த்தியது என்று ஏகப்பட்ட பாசிச தர்பாரை நாம் அன்றாடம் தரிசித்து வருகிறோம்.
இந்த பாசிச தர்பாருக்கும் சசிகலா நட்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. இவையெல்லாம் பாசிச ஜெயா அவரளவிலேயே தனிப்பட்ட முறையிலேயே செய்த காட்டு தர்பார் நடவடிக்கைகள். இப்போது விடுங்கள், முந்தைய ஆட்சியில் கரசேவைக்கு ஆளனுப்பியது, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை அச்சுறுத்தியது, ஆடு கோழி பலி தடைச்சட்டம் கொண்டு வந்து சூத்திர-பஞ்சம மக்களை பார்ப்பனியமயமாக்க முயன்றது, ஈழம் என்று பேசுபவரை தடா,பொடாவில் உள்ளே தள்ளி கொடுமைப்படுத்தியது, ஆர்.எஸ்.எஸ் போற்றும் நடவடிக்கைகளை மனங்குளிரச் செய்தது, சாலைப்பணியாளர் நீக்கம், ஒரிரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது முதலான நடவடிக்கைகள் காட்டுவது என்ன?
இவையெல்லாம் ஜெயலலிதாவை ஒரு பார்ப்பன பாசிஸ்ட் என்பதுடன் இவையனைத்தம் அவரது முழு விருப்பத்திலிருந்து மட்டுமே பிறந்திருக்கிறது என்பதையம் நாம் புரிந்து கொள்ளலாம். எனில் சசிகலாவின் நட்புக்கு எந்த பங்குமில்லையா என்றால் அப்படி இல்லை.
இதில் ஜெயாவையும் சசிகலாவையும் பிரித்து பார்த்து புரிந்து கொள்வது சரியல்ல. ஏனெனில் அ.தி.மு.க என்றொரு ஓட்டுப் பொறுக்கி கட்சி, அழகிரி ஃபார்முலாவுக்கு முன்னரேயே கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அதே ஃபார்முலாவை கண்டுபிடித்து அறிமுகம் செய்த கட்சி, மாவட்ட அளவிலும் உள்ளூர் அளவிலும் சாராய ரவுடிகள், மணல் மாஃபியாக்கள், மதுக்கடை உரிமையாளர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், ரியல் எஸ்டேட்டில் கோடிகளைக் குவிப்பவர்கள் கொண்ட கட்சியை தொடர்ந்து நடத்தவும், காசை வீசி தமது அரசியல் நடவடிக்கைகளை செய்து கொள்ளவும் ஊழல் என்பது அ.தி.மு.கவிற்கு அத்தியாவசியமான ஒன்று.
ஊழல் என்றொரு வஸ்து இல்லாமல் அ.தி.மு.கவோ இல்லை கான்வென்டு சீமாட்டி ஜெயாவோ இல்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் மட்டும் கொள்ளையடிக்கவில்லை, அவர்களது உள்ளூர் தளபதிகள் அனைவரும் மும்முரமாக கொள்ளையடித்தார்கள். அந்தக் கொள்ளையும் அந்தக் கொள்ளையின் விளைவாக உருவான ஒரு ஒட்டுண்ணிக் கும்பலும்தான் அ.தி.மு.கவின் அஸ்திவாரம்.
90களில் இந்தக் கொள்ளை பாரம்பரிய முறைகளில் நேரடிப் பணம், நேரடி சொத்து குவிப்பு, என்று நடந்த போது ஏற்பட்ட பிரச்சினைகள் இப்போது இல்லை. ஊழல் என்பது ஒரு சூட்கேசில் வைத்து கொடுக்க்கப்படும் பணமாக நடப்பில் இல்லை. அது ஸ்விஸ் வங்கி போன்று தேசங்கடந்தும் ரியல் எஸ்டேட், சுயநிதிக் கல்லூரிகள், சாராய ஆலைகள் என்று சட்டபூர்வமாகவும் மாறிவிட்ட பிறகு பழைய பாணியில் சொத்து சேர்த்து பிடிபடும் நிலைமையில் ஜெயலலிதா இன்று இல்லை.
எனவே ஜெயா சசிகலாவின் நட்பு என்பது உறவுப்பூர்வமாக இருக்கிறது என்பதை விட தொழில் பூர்வமாக, அதிகார பங்கு பூர்வமாக பிணைக்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை. இதில் அவர்களது தனிப்பட்ட உறவு என்பது இத்தகைய மாபெரும் அதிகார சாம்ராஜ்ஜியத்தின் மேல்தான் நடமாடுகிறது என்பது முக்கியம். எனவே இங்கு சசிகலா போய்விட்டார் என்றால் அந்த ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஏதோ பங்கு பிரிக்கும் சண்டை நடக்கிறது என்றுதான் பொருளே தவிர மாறாக அங்கு ஊழலே பிரிந்து போய்விட்டது என்பது பாமரத்தனம்.
மேலும் அரசு, சாராய ஆலைகள், தொலைக்காட்சி தொழில் என்று ஏகப்பட்ட முறையில் பிணைக்கப்பட்டிருக்கும் ஜெயா சசிகலா நட்பு என்பது அப்படி ஒரு குழயாடிச் சண்டையால் பிரிந்து போகும் ஒன்றல்ல. அதனால்தான் இதற்கு முன்னர் அவர்கள் அப்படி பிரிந்திருந்தாலும் கூடிய சீக்கிரத்தில் ஒன்று சேர்ந்தார்கள். இந்த ஒன்றுகூடலை சாதித்தது மேற்படி பிரிக்க முடியாதபடி இருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் நலனை அப்படி கைவிட்டு விட முடியாதபடி இருக்கும் நிர்ப்பந்தம்தான்.
இப்போது சசிகலா நீக்கப்பட்டாலும் விரைவில் அவர் சேர்க்கப்படலாம். ஒருவேளை அப்படி சேராமல் இருக்கும் பட்சத்தில் சொத்து வாரிசுரிமைச் சண்டை நடக்கும். அப்படி ஒரு சண்டை நடக்கும் பட்சத்தில் இருவருக்கும் அது பாதகம் என்பதால் தோழிகள் மீண்டும் இணையவே வாய்ப்பிருக்கிறது. மேலும் பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டாலும் அவரது பினாமி மூலம் ஆட்சி தொடரும் என்பதோடு தொடர்ந்து அதிகார மையமாக அவரே இருப்பார். அதில் ஏதாவது செய்து ஜெயாவை நீக்கிவிட்டு அ.தி.மு.கவை கைப்பற்றலாம் என்றால் அதற்கு தேவைப்படும் நட்சத்திர முகம் கொண்ட தலைமைக்கு பொருத்தமாக சசிகலா கும்பலிடம் யாருமில்லை. இப்படியாக ஜெயா சசிகலா நட்பு என்பது யாரும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருக்கிறது.
அடுத்து ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக சசிகலா மட்டும்தான் ஆட்சியை நடத்தினார், ஊழல் செய்தார் என்பது பச்சையான பொய். இருவரும் அதை மனமொப்பி சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்வார்கள். அதிலும் குறிப்பாக இதில் முடிவு செய்யும் உரிமை பாசிச ஜெயாவிடமே இருக்கிறது. அதற்கு ஆதாரமாகத்தான் இந்த ஆட்சியிலும், இதற்கு முன்னரும் அவர் மேற்கண்ட பாசிச நடவடிக்கைகளை பட்டியல் இட்டோம். இவையெல்லாம் ஜெயா என்றொரு தனிநபர் குறிப்பிட்ட வர்க்க, சாதி, மத பிரிவினரின் நலனுக்காக எடுத்த பாசிச நடவடிக்கைகள். இதில் சசிகலா கும்பல் முடிவெடுத்திருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது.
ஒட்டு மொத்தமாக பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை நியாயப்படுத்துவதற்காகவே பார்ப்பன ஊடங்கள் சசிகலா கும்பலை மட்டும் குறிவைத்து தாக்குகின்றது. மேலும் பார்ப்பன புரோக்கர்கள், பா.ஜ.க முதலான பார்ப்பனியக் கட்சிகளும் சசிகலா கும்பலை வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் வெறுக்கின்றன. இது புதுப் பணக்காரன் பரம்பரைப் பணக்காரன் மேல் கொண்டிருக்கும் பகையைப் போன்றதுதான். அ.தி.மு.க ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதோடு தரகு முதலாளிகளின் கட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்து சாதித்திருப்பவர் ஜெயலிலிதா எனில் அதற்கு பொருத்தமான தொண்டர் குண்டர் ரவுடி படைகளை உருவாக்கி தீனி போட்டு உள்ளூர் தளபதிகளை வைத்து அ.தி.மு.கவின் மக்கள் முகத்திற்கு உருவம்கொடுத்தது சசிகலா கும்பல்தான்.
இப்படித்தான் இரண்டின் நலனும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைத்திருக்கின்றன. இதில் சசிகலாவை தவிர்த்து மற்ற ஊழல் தளபதிகளை நீக்குமாறு பார்ப்பன ஊடகங்கள் கோரவில்லை. ஏனெனில் அந்த் தளபதிகளெல்லாம் அம்மா காட்டும் திசையில் ஐந்தடி பள்ளத்தில் விழுந்து வணங்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இடையில் சசிகலா கும்பல் புரட்சித்தலைவியன் கிச்சன் காபினெட்டாக இருப்பதுதான் அவர்களுடைய கவலை. அதனால்தான் மன்னார்குடி கும்பலை தூக்கி எறிந்து விட்டு பார்ப்பனர்களின் கிச்சன் காபினெட்டை திணிக்க அவர்கள் துடிக்கிறார்கள்.
அதன் பொருட்டே சசிகலா நீக்கத்தை அவர்கள் விண்ணதிர கொண்டாடி மகிழ்கிறார்கள். இதன் மூலம் பாசிச ஜெயாவின் குற்றங்களுக்கு அவர் காரணமில்லை என்று சொல்வதன்மூலம் அவரது காட்டு தர்பார் நடவடிக்களை தொடருவதற்கு மக்களிடையே ஒரு நல்லெண்ணப் பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறார்கள். பார்ப்பன ஊடகங்களின் இந்த சதியை நாம் புரிந்துகொள்வதோடு முறியடிப்பதும் அவசியம்.ஃ
நம்மைப்பொறுத்த வரை ஜெயா சசிகலா கும்பல் என்பது ஜெயாவின் தலைமையில் இயங்கக்கூடிய ஒரு பாசிச கும்பல்தான். ஒட்டு மொத்தமாக இந்த கும்பலை தூக்கி ஏறிவதுதான் நமது கடமையாக இருக்க வேண்டுமே அன்றி நல்ல பாம்புகளுக்கிடையே கெட்ட பாம்பு, ‘நல்ல பாம்பு’ என்று தேடுவது அறிவீனம். அப்படி தேடச்சொல்லி தமது நலனை நியாயப்படுத்தும் பார்ப்பன ஊடகங்களை பலரும் புரிந்து கொள்ளவில்லை.
அரசியல் என்றால் அதை ஒரு கிசுகிசு நடவடிக்கைகள் போல கற்றுத்தரும் இந்த ஊடகங்களின் செல்வாக்கிலிருந்து நாம் விடுபடுவதும், மக்கள் நலனிலிருந்து அரசியல் என்றால் என்னவென்று புரிந்து கொள்வதும்தான் இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள உதவும். பதிவுலகில் பலரும் இதை ஒரு கிசுகிசு நடவடிக்கையாக பேசி விவாதிப்பது பலன்தராது. மாறாக பார்ப்பன ஊடகங்களின் பிரச்சாரத்தை மறைமுகமாக ஏற்றுக் கொள்வதாகவே அவை மாறும்.
________________________________
தொடர்புடைய பதிவுகள்:
- ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!
- ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!
- இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !
- ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”
- பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!
- 7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!
- ஜெயா ஆட்சியை நாடகமாக நடித்த ‘குற்றத்திற்காக’ குழந்தைகள் உட்பட 60 பேர் சிறை!
- ஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி!
- மாதம் இரண்டு லாக்அப் கொலை: “பச்சை”யான போலீசு ஆட்சி!
- சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!
- ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”
- மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!
[…] நன்றி : வினவு […]
காலமறிந்து இடப்பட்ட பதிவு. கூடவே சசிக்கும்பலின் அடாவடியையும், சசிக்கும்பலின் இடத்தை அடைய துடிக்கும் பார்ப்பன நரிகளின் சாணக்கியத்தனத்தையும் இன்னும் விலாவரியாக எடுத்துரைத்திருக்கலாம்.
பெங்கலூரு நீதி மன்றத்தில் கேட்கப்பட்டநூற்ரறு கணக்கான கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் சொல்லியுள்ள ஜெ தன்னை வழக்கில் இருந்து விடுவிது கொள்ளும் முயர்ச்சியே இது. பார்ப்பன ஊடகங்கள் ஏமாறத் தான் போகின்றன.
உண்மை, இருவரும் வேறுவேறு அல்ல. அம்மாவிற்று இது ஒன்றும் புதியதில்லை. ஏற்கனவே ஒருமுறை அவரை வெளியே அனுப்பி பிறகு சேர்த்துக் கொண்டார். நடராஜனை பலமுறை வெளியே அனுப்பியுள்ளார். எப்போது திருப்பி சேர்த்தார் என்பதை இந்த ஊடகங்கள் ஒருபோதும் வெளியிட்டதில்லை.
அப்படி அவர்கள் திரும்பவும் ஒன்றினைவார்கள். அப்போதும் இந்த ஊடகங்கள் எதிர்க்கபோவதில்லை.
/இப்போது சசிகலா நீக்கப்பட்டாலும் விரைவில் அவர் சேர்க்கப்படலாம்.ஜெயா சசிகலா நட்பு என்பது யாரும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருக்கிறது./
உண்மை
ஆமா தினகரன் முரசொலி எல்லாம் பார்ப்பன ஊடகங்கள் ஆகி எத்தனை மாசமாச்சு?எனக்கு தெரியாம போச்சே!
கண்மூடித்தனமா திட்டும்போது என்ன சொல்றோம் எது சொல்றோம்னு தெரியாது. அதுதான் வினவின் பிரச்னையே. விட்டுத்தள்ளுங்க!
அவர் என்ன செய்தாலும் பாசிச ஜெயா பார்ப்பன ஊடகங்கல்நுதான் குறை சொல்வீங்க!அவுங்க என்ன செஞ்சா என்ன?
இதற்குள் இருகும் பர்பன அரசியலை பருங்கள் தமிழகதிள் பர்பனர்கள் தனிதுவம் பெற்ற பஜக அல்லது சுசாமியின் ஜக போன்ற கட்சி எப்போழுதும் தமிழ் மக்கள் ஏற்றது கிடையாது. ஏம் ஜி அர் குழைந்தை சண்டைகாக உருவான கட்சி அதிமுக. எம் ஜி அரின் திரை சாகசங்க்லுகாக மக்கள் குடுத்த மிகபேரிய பரிசு அதிமுகவின் அங்கிகாரம். இபொழுது பர்பனர்கள் அந்த அங்கிகாரம் பெற்ற அதிமுகவை முழுமையாக கையில் எடுபற்கல் இப்பொழுதும் அதிமுக ஒரு பர்பன கட்சிதான் ஆனால் வெற்று சாதினர் ஏதொ உள்ளார்கள் ஆனால் ஜெ விற்கு பிரகு வரிசு பர்பனர் யார்? ஏப்படி அதிமுகவின் அடையாலம் முலமாக முழுமையான பர்பன சடங்குகள் போற்றும் கிட்சியாக உருவாகுவது. அதர்கான எற்பாடே இந்த சசிகலாவின் வெளியேற்றம். இதற்கு பிறகு அதிமுகாவில் நடக்கும் மாட்ரங்களை பருங்கள். ஒரு முழுவடிவ முழு பர்பன மரபு கட்சியாக மறும்
இந்த நீக்க பட்டியலில் சசிகலாவின் பெயரை வி.சசிகலா என போட்டிருந்தது, ஆனால் சசிகலாவும் நடராசனும் சட்டபடி மண முறிவு பெறவில்லை, இதுவும் ஜெயலலிதாவின் வக்கிர புத்தி…
இரண்டாவது இடத்தில் மா.நடராசன் பெயர் இருந்தது… ஆனால் 1992இல் ஜெயலலிதா நடராசனை கட்சியை விட்டு நீக்கி… கட்சியினர் யாரும் தொடர்பு கொள்ள கூடாது என அறிக்கை விட்டுருந்தார்… இது வரை நடராசன் ஜெ… கட்சியில் சேர்ந்ததாக எந்த அறிவிப்பு சொல்லாமல்… மறுபடியும் நீக்கபட்டியலில் பெயர் இருக்கிறது… கள்ளதனமாக ஜெவுக்கு ரகசியமாக ஜெ… கட்சியில் இருந்த மா.நடராசனை… பழ.நெடுமாறன் போன்றவர்கள் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்த்து கும்மி அடித்தது மெகா தொடர் கமெடிகள்… சொந்த கட்சி அடிமைகளை ஜெ… ஏமாற்றியது போல… பழ.நெடுமாறன் போன்றவர்கள் தமிழ் உணர்வாளர்களை ஏமாற்றி இருக்கின்றனர்…
1000 கோடி செலவில் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை நடத்தியவர்கள் விவேகனந்தன் – வனிதாமணி மற்றும் நாராயணசாமி – சாந்தி குடும்பத்தினர்… இதற்கும் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இல்லை… சொத்துக்கள் எல்லாம் சசிகலாவுக்கு சொந்தமானது… ஜெயலலிதாவின் கையெழுத்து எல்லாம் சசிகலாவே போட்டு கொண்டது… சொத்து சேர்த்த வழக்கை செல்லாமல் செய்ய வேண்டும்… சசிகலா கும்பல் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்… இப்படிதான் தினமலம், விகடன், ரிப்போட்டர், தினமணி போன்ற பார்ப்பன ஊடகங்கள் எழுதும்… பெரியவா, சின்னவா மீது அபாண்டமாக கேஸ் போட்டது இந்த மன்னார்குடி கும்பல்தான்… இப்படியும் எழுதலாம்…
ஆனால் ஜெ-சசிகலா குடும்பம் கூட்டில் நடத்தும் சாராய கம்பெனி சரக்குகளுக்கு பாதகம் இருக்காது… கொடநாடு எஸ்டேட் உரிமையாளர் என சொல்லபடும் சசிகலா தம்பி மனைவி இளவரசி நீக்க பட்டியலில் இல்லை ஏன்?
இதில் திராவிட தம்பிகள் எல்லாம் பொங்கி ஆரிய சதி… சசிகலா பாவம் என அழ தொடங்கி விட்டனர்…
இதில் ஜெ… யோக்கியம்… சசி சதி… ஜெ…சதி… சசி… பாவம் என விகடன், நக்கீரன் போன்றவை பொய்யை நிரப்பி… மக்களை ஏமாற்றுகின்றன…
இது சதிதான்… ஜெயலலிதாவின் சதிதான்… அந்த சதி நாடகத்திற்கு காட்டி கொடுக்கும் தொண்டமான் வழியில் வந்த சசிகலா சேர்ந்து ஆடி கொண்டிருப்பதே உண்மை…
பார்ப்பன பத்திரிகை என்று சொல்வதற்கு அதை பாப்பான் தான்
நடத்தனும்னு அவசியமில்லை வெண்ணைகளா.
பார்ப்பன நச்சுக்கருத்துகளை வெளியிட்டாலே போதும்.
செந்தமிழ்னு பேர வச்சிக்கிட்டு தமிழ இப்படி
குத்துயிராக்காதீங்க பாஸ்.பொறுமையா டைப்
அடிங்க.நீங்க நல்லாருப்பீங்க.
தவரை திருத்தி கொள்கிறேன்
உன்மை தான்..
I am more worried about the people of tamilnadu, because they elect either DMK front or AIADMK front.and both are corrupt and anti-people. i wonder whether electoral politics in this country willreally help in the empowerment of tamil people. -srinivasan sundaram
Dear Vianvu
Today In my home my father and co was debating the same issues happyily that Sasi has gone and Jaya has become pure. what a joke. Vinavu has clarified the stand perfectly. keep it up. u r putting the right article at the right time.
regards
GV
The secret link between Muka kumbal and Sasikala mafia is not getting mentioned in the article. Why?
The link is the last straw on the camel’s back. Angered Je to no limit.
Je did the right thing. If not, Muka kumbal with Sasikala mafia will capture power.
Well done, Je.
இது மாறி மூளை சலவைக்கு,நாங்கள் மயங்க மாட்டோம். பார்ப்பனரை பேசுவோரே, தலீத்தை பற்றி பேசுவீரா?. இந்துவை பேசுவோரே, கிறீத்துவரையும், இசுலாமியரையும் பேசுவீரா? உங்கள் மட்டமான புத்திக்கு மக்களை பலி ஆக்காதீர்..தமிழனாக இருந்தால் முதலில் உங்கள் வலை பதிவு தமிழ் பேசட்டும். உங்கள் வலை தளம் வந்ததிற்க்கும், என் கருத்தை பதிவு செய்தற்க்கும் வருந்துகிறேன்.
If we had a communism like Korea, it would be easy to select successor.
I kind of started liking Communism! Great!
[…] பதிவு: வினவு இவைகளில் […]
நோகாமல் நோன்பு கும்பிடுவது என்பது ஜெயாவுக்கு கைவந்த கலை. திடீர்னு இப்படி தோழியை விட்டு விலகுவது உன்மை என்றாலும், அது தொழில் சன்டை காரனமாகத்தான் இருக்குமே தவிர,நேர்மை, அதிரடி போன்ற ஒரு வெஙாயமும் இல்லை. இன்றைய தினமலம் தலைப்பு செய்தியை பார்த்தால் வினவு சொல்லும் உன்மை புரியும். என்னுடைய ஒரே சந்தோஷம், மிடாஸ் என்ற டுபாக்கூர் கம்பெனி சரக்கை விற்க மெனெக்கெட மாட்டார்கள். எலைட் பார் நிலை பற்றி அம்மா அவர்கள் கவலைப்படாமல் இப்படி குடும்ப சன்டையை பார்த்துக் கொன்டிருப்பது கன்டிக்கத்தக்கது. சீக்கிரம் எலைட் பாரை ஓப்பன் பன்னவில்லை என்றால் புரட்சி வெடிக்கும்.
நண்பரே, அது எலைட் அல்ல; எலீட் என்று உச்சரிக்க வேண்டும். தழில்நாட்டில் தப்பாக உச்சரிக்கப்படும் பிற வார்த்தைகள் சில-
டெங்கு = டெங்கி என்பதே சரி
டைவர்ஸ் = டிவோர்ஸ்
ரெஸ்யூம் = ரெஸ்யூமே
லிட்டர் = லீட்டர்
எலைட் = எலீட்
அடோப் = அடபி
சீ அனிமோன் = சீ அனிமனி
சிசேம் = செசமி
எபிடோம் = எபிடமி
போன்ற பல வார்த்தைகள்
றிப்பீட்டு= றீபிற்
கால் = கோல்
பாயிண்டு =பொயிண்ட்
காமன் = கொமன்
பால் = போல்
டாய்லட்டு= ரொய்லற்
கம்பனி = கொம்பனி
கார்ப்பிரேஷன்= கோப்றேஷன்
காப்பி= கொப்பி
காப்பி= கோவ்ஃபி
சார் =ஸேர்
ஆப் =ஒவ்
ஒயின்= வைன்
ஒயர்= வ்வயர்
கிரிக்கட்=கிறிக்கற்
ஒன்= வ்வன்
ஆண்டனி= அன்ரனி
“மேஷ ராசிக்கார்களே! அக்கிரகார வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்களின் ராசியை தீர்மானிக்கும் அதிகாரத்தை வைத்துள்ள உங்களுக்கு இனி அமோகமான எதிர்காலம்தான். இதுவரை உங்களை அண்டவிடாத மன்னார்குடி ஏழரை நாட்டுச் சனி இன்றோடு வீட்டை விட்டு விரட்டப்பட்டதால் உங்களின் அதிகாரம் எட்டுத்திக்கும் இனி கொடி கட்டிப் பறக்கும். ஆனால் அதிகாரத்தை சற்றே நிதானத்துடன் கையாள வேண்டும். அதிகாரப் போட்டியில் உங்களுக்குள் சில நேரங்களில் பிணக்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு பரிகாரமாக நீங்கள் துக்ளக்கால் புகுழ் பெற்ற ‘சோ’ சாமியை பூஜித்து வர உங்கள் பிணக்குகள் நீங்கும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு வாழ்க்கை பேஷாக இருக்கும்”.
சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்!
http://hooraan.blogspot.com/2011/12/blog-post_20.html
சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்! ……..நேற்றைய தொடர்ச்சி!
http://hooraan.blogspot.com/2011/12/blog-post_21.html
சரியான நேரத்தில் சரியான கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பதிவு
very good vinavu! you reflected my opinion. All these are nothing but political stunts by J. Since this is very crucial time for J. Merely because a FIR was registered Paranjothi was thrown out from the Minister Chair by J. Did J not know about the complaint when he was given the ministership? why all these cinimical activity by J? If Paranjothi was thrown out from the Ministership for registration of FIR what about J? Is there any justice in retaining the CM Post or declaring herself as CM? Is there any exclusive justice for J?
The whole issue is initiated for the welfare of bhramins but not for tamils. Sasi and Co. recruited their caste officials, which could not be tolerated by bhramin officers in the secretariat. They moved the coin through Ramanujam IPS, Cho aiyar, Narendra Modi, etc. If bhramins were not harmed by Sasi, she would also be saved by them and she would have continued to work for the welfare of the people!
Cho Aiyer and Modi are not brahmins. Please chekc before you write. Please name how many brahmins are closer to JJ. If you say Thuklag Cho, he was criticizing JJ for long time and he supported Karuna and Moopanar one time. Please dont keep saying brahmins!!!
I am not a brahmin, but was educated by a brahmin. Please dont indulge in caste politics. this is not good for any community or state or country
இன்றைய தினமணியில் மதியின் கார்ட்டூன் பார்த்த பொழுது,
‘பெருச்சாளி
பங்காளி எலிகளை விரட்டுகிறதே!’
என்று தான் எண்ணம் ஓடியது!
பார்ப்பன ஊடகங்கள் பாசிச ஜெயாவிற்கு ஒளிவட்டம் போட தான் கவனமாய் இருக்கிறார்கள். சரியான சமயத்தில் வந்த கட்டுரை. தொடரட்டும் உங்கள் பணி.
/// அதன் பொருட்டே சசிகலா நீக்கத்தை அவர்கள் விண்ணதிர கொண்டாடி மகிழ்கிறார்கள். இதன் மூலம் பாசிச ஜெயாவின் குற்றங்களுக்கு அவர் காரணமில்லை என்று சொல்வதன்மூலம் அவரது காட்டு தர்பார் நடவடிக்களை தொடருவதற்கு மக்களிடையே ஒரு நல்லெண்ணப் பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறார்கள். பார்ப்பன ஊடகங்களின் இந்த சதியை நாம் புரிந்துகொள்வதோடு முறியடிப்பதும் அவசியம். ///
நான் சாதாரணமாக பொருளாதாரம், தாராள-தனியார்-உலகமயம் போன்ற விஷயங்களில் வினவுவோடு முரண்படுபவன். ஆனால், இந்த விஷயத்தில் முழுக்க உடன்படுகிறேன். மேலே சுட்டியுள்ள வரிகள் ஆறுதலாக உள்ளது. ‘பாசிச ஜெயாவின் காட்டு தர்பார்’ என்று வெட்டு ஒன்று, துண்டு ரெண்டாக எந்த ஊடகமும் எழுதுவதில்லை.
முல்லைப் பெரியாறு அணை காக்க , நமது உரிமையை தக்கவைத்துக் கொள்ளவும் , மத்திய அரசைக் கண்டித்தும், கேரளா அரசைக் கண்டித்தும் சென்னை மெரீனா கடற்கரையில் பெரும் கூட்டம் கூடவிருக்கிறது.
நாள் – ஞாயிறு , டிசம்பர் 25 , 2011, நேரம் மாலை 3 மணி
அழைப்பு – அனைத்து தமிழர் இயக்கங்கள்.
தோழர்களே, அனைவரும் கலந்து கொள்வோம். நமது உரிமையைக் காப்போம்
எனக்கு ஒரு அடிப்படையான சந்தேகம். யார் வேண்டுமானாலும் பதில் தரலாம். அதாவது, முல்லைப் பெரியாறு விஷயத்தில் எஞ்சினியர்கள் ‘அணை பாதுகாப்பானதுதான்’ என்று சொல்வதை எடுத்துக் காட்டுகிறோம். ஆனால், கூடங்குளத்தில், ‘உலை பாதுகாப்பானதுதான்’ என்று எஞ்சினியர்கள் சொல்வதை ஏற்க மறுக்கிறோம். (எனக்கும் இதே நிலைபாடுதான்). இது சந்தர்ப்பவாதம் என்கிறார்கள் உடன் பணியாற்றும் பிற மாநிலத்தினர்.
{மேலும் அவர்கள் தமிழக அரசியல்வாதிகள் யாரையும் மதிப்பதில்லை. ஏதாவது பேச முயன்றால் ஸ்பெக்ட்ரம் என்று கூறி வாயை அடைத்துவிடுகிறார்கள். ஜெயல்லிதாவை மட்டும் திறைமைசாலி என்கிறார்கள்; ஆனாலும் பெங்களூர் வழக்கு காரணமாக அவரையும் ஊழல்வாதி என்றே தெரிந்துவைத்திருக்கிறார்கள். ‘திராவிடம்’ என்பதையெல்லாம் நம் திராவிடக் கட்சிகள் செல்லாக்காசாக்கிவிட்டார்கள். ஈழம் பற்றிக்கூடப் பிற மாநிலத்தவரிடம் எந்தப் புரிதலோ, அனுதாபமோ இல்லை. ‘அப்பாடா, ஒரு தீவிரவாதக் கும்பல் (அதிலும் ராஜீவைக் கொன்றவர்கள்!)ஒழிந்தது’ என்றுதான் நினைக்கிறார்கள். சரியான முறையில் தமிழக மக்களின் உணர்வுகளை தேசிய அளவில் ஊடகங்களில் எடுத்துவைக்க ஆட்கள் இல்லை. நன்கு ஆங்கிலம் பேசக்கூடிய சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், சுப்பிரமணியன் சாமி, சோ போன்றவர்கள் தமிழின விரோதிகளாகவே இருப்பதும் காரணம்.}
எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விட்டேன். என் உடனடிக் கேள்வி, விஞ்ஞானிகள், எஞ்சினியர்கள் கருத்தை ஒரு விஷயத்தில் ஏற்பது, மற்ற ஒன்றில் மறுப்பது என்பது போலித்தனமா? இதற்கு என்ன பதில் சொல்வது?
குழப்பம் ஏதுமில்லை நண்பரே,
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
கூடங்குளம் அணு உலை ஆபத்தானது என்று கற்றறிந்த பெருமக்கள் பலரும் சொல்கிறார்கள்தானே.
ஆகவே அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டும் எதையும் ஏற்கவோ மறுக்கவோ அவசியமில்லை.இரு தரப்பு வாதங்களையும் ஆய்ந்தறிந்தே மக்கள் போராடுகிறார்கள்.
சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லின் பின்னேயும் அதனை சொல்பவரின் வர்க்க நலன் உள்ளது என்ற மார்க்சின் கூற்றின் அடிப்படையில் இந்த பிரச்னைகளை பரிசீலித்தால் உண்மை விளங்கும்.
ஸெர்னோபில் ரஷ்யர்கள் கட்டிரய அணு உலை. அது வெடித்த போது யாரும் தடுக்க முடியவில்லை. அவர்கள் தான் இங்கு வாக்குறுதி அளிக்கிறார்கள்.நம்பமுடியாததற்கு இதுதான் காரணம். எச்சொல் யார் யார் வாய் ………………..
பார்ப்பனீயத்தின் மொத்த உருவமான பாசிச ஜெ திராவிட இனத்தின் பிரதி நிதி போல் காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை சுகித்துக்கொண்டிருக்கிறார்.அதற்கு ஒரு முகமூடியாக சசி- நடராஜன் கும்பலை பயன்படுத்திக்கொள்கிறார்.இந்த கூட்டுக் கொள்ளை கும்பல் சுருட்டிய கணக்கு தீராமல் உறவு முறியாது.கணக்கும் தீராது,உறவும் முறியாது.தமிழகத்தில் இழந்துவிட்ட அதிகாரத்தை ஜெ மூலமாகப் பெறத் துடிக்கிறது இந்து மதவெறி பார்ப்பன பசிச கும்பல்.திராவிட கட்சிகளின் தலைவர்கள் தந்தை பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு நவீன பார்ப்பனர்களாய் வலம் வருகிறார்கள்.இதில் சமரசம் இல்லாமல் போராடுபவர்களே வெற்றி பெறுவர்.
Vinavu, clear me a doubt. Here there is a talk about the expulsion of Sasikala & Co. Some people says that Natar group wants to take over the domination of Sasikala & Co. They are getting ready with Deepak son of Miss.J’s brother for CM chair. is there any truth? You might know this line. You do the investigation in this route. Having come to know about Sasi & group only J really expelled them from the party. The other group who will take over will be Nattar group. This is the latest talk.
E.V.Ramasamy naicker was not “Anti-Brahmin”. Anti-Brahminism was actulally started in Maharashtra(Mumbai), based(against) on the famous “ARYAN INVASION THEORY(AIT)”– http://www.youtube.com/watch?v=Qvr_jlXO8YQ&feature=related. EVR was more opposed to C.N.Annadurai once and supported Rajagopalachariar in an election campaign. Ravana was also a Brahmin.
You are correct in one sence “DRAVIDIAN RACISM” was formed using the cover of AIT because it was profitable, but not by EVR. The same was happened among Srilankan Tamil leaderships, captured “Tamil racism” using political conflict between UNP and SLFP- because it was profitable.
It is true there are some Brahmins in Indian administration to get western help to fill their pocket using this false “AIT” and branding Tamils as terrorists or less developed humans.
Most western schlors do not agree with this Indian ruling elite view which protect the status quo and income of indian ruling elites as Oligarchy- but day by day like Wahhabism, this Indian ruling elite’s strength has been overwhelm the western countries.
The snakes, the western countries gave milk and nurtured now engulfing them !.
We are not concerned about Sasikala & Co’s explusion but they were threatned not behave like this…
http://www.pathivu.com/uploads/images/MKM_G6.JPG
http://www.pathivu.com/uploads/images/MKM_G7.JPG
http://www.pathivu.com/uploads/images/MKM_G17.JPG
Gujarati people were Rich in foreign countries(not Gujarati native people), many anti-LTTE expatriate srilankan Tamils were learning Gujarati and hindi through Vishwa Hindu Parishad(VHP)- which has been adjusted to New Capitalism of “OIL MONEY” because USA and Europe is declining. In Malaysia they tried to join Chinese Band through “Srilankan Nationalism(KP?)”.
In India the original Hindu is insisted as Zorastrian Arya Samaj- like the “Civilized european liberal gentleman” sticking to Vedic texts(hindu fundamentalists?).
It could not be digested by eastern flank of India because of its Bengal-Bihar Buddhist culture belt. Look “Arya Samaj(Dayananda)” and “Srilankan fascist Buddhist nationalism(Angarika Dharmapala)” were of same origin from Colnel Henry Olcott- not of INDIAN ORIGINALITY.
Tis was the reason WHY KISHENJI WAS KILLED !- by zorastrians like Ratan Naval TATA?.
They say Malaysia, Indonesia, Cambodia were captured by Gujaratis and built Great Vishnu temples and spread SANSKRIT.
They dont know?.. before Sanskrit texts were formed to write Vedas allover India the oral languages had many common words, only accent varies due to geographical origin LIKE “PUR” = PURAM(Roya”puram”)- in Tamil “outer area”. Many words found in eastern countries were of Indian rather than Sanskrit.
மிக சிறந்த கட்டுரை.காரணம் ஜெயா ஏதோ உலகை ரட்சிக்க வந்தவர் மாதிரியும்,அவரை சசிகலா சிறைப்படுத்தியிருந்த மாதிரியும்,இப்போது ஜெ.அந்த சிறையிலிருந்து மீண்ட மாதிரியும் இந்த ஊடகங்கள் சித்தரிகின்றன.அவை தெரிந்து செய்கிறதா இல்லை தெரியாமல் செய்கிறதா என்று தெரியவில்லை.ஆனால் இது கண்டிக்கத்தக்கது.
Ahmedabad, 21 December 2011
Tamil newspaper Dinamalar has made sensational disclosure that it was Gujarat Chief Minister Narendra Modi who helped J Jayalalitha to expel Sasikala family.
If you know Tamil, read it on this link, or simply watch Modi’s photo and come back to DeshGujarat.
Meanwhile both Gujarat and Tamil Nadu aka Narendra Modi and Jayalalitha have opposed centre’s Food security bill.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=371155
\
டேக் 1
சீன்: 1
டேக்: ஓ.கெ
\\அ.தி.மு.க ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதோடு தரகு முதலாளிகளின் கட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்து சாதித்திருப்பவர் ஜெயலிலிதா\\
அதனால்தானோ என்னவோ பேரறுதி பெரும்பான்மையோடு வெற்றி கிட்டியது….. மக்கள் சாரை சாரையாக வரிசையில் நின்று அ.தி .மு.க. வுக்கு வாக்களிக்கும் இரகசியம் இதுதானோ… பாவம் கலைஞ்சருக்கு சொல்லிக்கொடுங்கள்…
\\பிராமணர் சங்கம், ஜெயேந்திரன், ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி போன்ற அவாள் கட்சிகளெல்லாம் ஜெயாவை முன்னுதாரமாண இந்து அரசியல்வாதியாக போற்றி வந்தன.\\
அதனால்தானோ என்னவோ ஜெயந்திரனை கைது செய்து பிராமணர் சங்க,ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி எதிர்ப்புகளை பெற துணிந்தார்…
\\நாகரீகமானவர், கான்வென்டு கல்வி கற்றவர், ஊழலற்றவர், குடும்ப பந்தங்கள் இல்லாதவர், படித்தவர், பண்பாளர், தமிழினித்தின் தனித்தன்மையை மறுத்து பாரத ஒற்றுமையை போற்றுபவர், இன வெறி இல்லாதவர்\\
universal truth – மறுக்க முடியாத உண்மை
\\சசிகலா நீக்கத்தை அவர்கள் விண்ணதிர கொண்டாடி மகிழ்கிறார்கள்\\
விண்ணதிர என்ன, வினவதிர கொண்டாடும் சாமானிய அ.தி.மு.க. தொண்டனின் மகிழ்ச்சிக்கும் உள்ளர்த்தம் உள்ளதா என்ன?
\\மக்கள் நலனிலிருந்து அரசியல் என்றால் என்னவென்று புரிந்து கொள்வதும்தான் இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள உதவும்.\\
ஒரு உட்கட்சி நடவடிக்கை இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுதான் உங்களுடைய அரசியலோ?
பார்ப்பன ஜெயாவின் இந்த நடவடிக்கை அ.தி.மு.க. வளர்ச்சிக்கு மிக அதிகப்படியாக உதவும், அதில் வினவு போன்ற விமர்சன குழாம்களுக்கு ஆயிரமாயிரம் வருத்தமோ, வயிற்று நோவோ வந்தாலும் கூட என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமே இல்லை…
Regarding this Paarpana Fascism,The day TN divorced itself from the Brahmins,degradation of everything from civic infrastructure to civil society to professional values and quote anything with class and quality started.
Regarding brahmin civil service candidate,they are more than happy to go work elsewhere.They are highly sought after in all states,no TN Brahmin would to serve in a administratively screwed up state like TN.
The half-baked Dravidian movement has succesfully taken the soul and zest out of TN and made it a highly unwelcome,unfriendly place for most of us.
MGR saved it to some extent,otherwise Mu.Ka and his cronies would have swallowed the state.
ஜெ ஆட்சியை வெருமனே பார்பன ஆட்சி அல்ல . அவர் ஒரு திரமையான ஆட்சியலரும் கூட…
சுப்பிரமணி..ஐயா இவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல எந்த பிராமணனும் நேரம் செலவழிப்பதில்லை! வாக்களிக்க வரவே தயங்கும் முக்கால்வாசி பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக எழுதுவது பித்துக்குளித்தனம்!மோசமான பொய் பித்தலாட்டம்! பெரும்பாலான பிராமணர்கள் இட ஒதுக்கீட்டினால் அரசு வேலை வாய்ப்புகள் பறிபோனபோது சற்று கோபம் அடைந்தது உண்மைதான்!அந்த பின்னடைவையே,,தடைகல்லையே வெற்றிப்படியகக் கொண்டு, சாப்வேர், ஆடிட்டிங் போன்ற தனியார் துறைகளுக்கு மாறி தன்னையும் ,தன் சுற்றத்தையும் வளப் படுத்திக் கொள்கிறார்கள்!இவற்றில் இட ஒதக்கீடு சனியனுமில்லை! திறமைக்கேற்ற வருமானம் உத்திரவாதம் !இப்போது தமிழக பிராமணர் சங்கமே இட ஒதுக்கீட்டை பற்றி வருந்துவதில்லையாம் ! சமையல், ஈமக்கிரியை சடங்குகளில் ஈடுபடும் ஏழை பிராமணர்களுக்கு மட்டும் சிறிது ஒதுக்கீடு, படிப்புதவித்தொகை கேட்பதோடு சரி! இன்னும் சொல்லப்போனால் இட ஒதுக்கீடுமூலம் அரசு வேலைவாய்ப்புக்களை மறுத்தவர்களுக்கு நன்றி சொல்கின்றனர்!இல்லாவிடில் சொண்டி மூன்றரை அணா கிளார்க் உத்தியோகத்தில் முடங்கியிருப்பரேயல்லாமல் இப்போதுள்ள வாழ்க்கை வசதி கிடைத்திருக்காதே! எனவே திராவிட இயக்கங்கள் நன்மையுயே செய்துள்ளன!!இந்த விவாதம் அர்த்தமற்றுப்போவிட்டது !ஜெயாவுக்கு வாக்களித்தவர்களில் 97%அவரது சாதியினரல்ல !அறிவார்ந்த தமிழ் மக்களே !
இன்று தமிழக ஊடகங்களில் 80 % முன்னிலை வகுப்பவை பிராமண ஊடகங்கள் அல்ல! தேவதாசி இனத்தரின் பரம்பரையை சேர்ந்த KD பிரதர்ஸ் பத்திரிக்கைகள், டிவி சானல்கள், நாடார்களின் தினத்தந்தி, செட்டியாரின் குமுதம் ஆகியவையே! நீங்கள் பழிசுமத்துவது உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு வேறு யார் மேலேயோ பழி போடுவதுபோலத்தான்!இருட்டறைக்குள் கறுப்புப்பூனையைத் தேடுபவன்போலத்தான்!
appadip podu arvaala!
Boss,
neenga solradhu ellam sari dhaan,illennu sollala.Aana,idhellam irunthalum naan mathavunga maadhiri hindi/north india paasathula iruntha paiyyano,englishla tamizh pesura aalo kedayathu.Innum enakku tirunelveliyil irukkun enga oor manasula irukku,ippo evalavu vasadhi irunthalum engalukku soru potta andha mannu thaan enaikkume nirantharamnu nenaikiravan naanu.Anyway,regardless of reservation we are still firmly rooted in the home state if not directly,influentially.
\\இன்று தமிழக ஊடகங்களில் 80 % முன்னிலை வகுப்பவை பிராமண ஊடகங்கள் அல்ல! தேவதாசி இனத்தரின் பரம்பரையை சேர்ந்த KD பிரதர்ஸ் பத்திரிக்கைகள், டிவி சானல்கள், நாடார்களின் தினத்தந்தி, செட்டியாரின் குமுதம் ஆகியவையே! நீங்கள் பழிசுமத்துவது உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு வேறு யார் மேலேயோ பழி போடுவதுபோலத்தான்!இருட்டறைக்குள் கறுப்புப்பூனையைத் தேடுபவன்போலத்தான்!\\
இங்கு பார்ப்பனர்கள் மேல் பழி போடும் அதிகம் பேர் பெரும்பாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த சமுதாயங்களை சேர்ந்தவர்கள்தான்… தங்கள் சமுதாயத்தை நோக்கி கேள்வி எழுப்ப வக்கும், திராணியும் இல்லாத இந்த பார்ப்பனருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடைப்பட்ட பிற்படுத்த சமுதாயம் என்று தம்மை தாமே இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்புக்காக கூறிகொள்ளும் சமுதாயத்தினர் தான் இன்றைய தமிழ் நாட்டின் சாதி, மத பிரச்சனைகளுக்கு முழு காரணம்..
இவர்கள் வாதத்திற்காக பிராமணாள் தான் இதற்கு மூல காரணம் என்று சுலபமாக பழி போட்டு தப்பி விடுகின்றனர்.. இந்த சமுதாயங்களை பெயர் சொல்லி விளித்து விமர்சனம் செய்யவோ, தட்டி கேட்கவோ எந்த காகித இதழுக்கும் துணிவு இல்லை…
இராச கோபாலசாரிக்கு பிறகு அவாள் ஆதிக்கம் தமிழகத்தை பொறுத்தவரை அரச மட்டத்தில் குறைந்து விட்டது… சோவின் ஆதிக்கம் என்று கூறி மீண்டும் மீண்டும் சேத பாம்பை அடிக்க முற்படும் வேளையில் இறங்கியுள்ளனரே தவிர, இன்றைய இழி நிலைக்கு காரணம், கருனாநிதிக்களின் ஆட்சியில் சில குறப்பிட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களும், ஜெயலலிதா ஆட்சியில் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட ஒற்றை இனத்தவரும், பிற மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயமும் தான் காரணங்கள்…
பரமக்குடி, காரைக்குடி, மதுரை, தாமிரபரணி என இந்த பிற்படுதப்பட்டதாக கூறிக்கொள்ளும் சமுதயாங்களின் கொட்டம் அடங்குவதாக இல்லை.. இவர்கள் சாதி தீயினையும் தூண்டி கொண்டு, பார்ப்பனனையும் திட்டிக்கொண்டு (அப்பத்தான் சமத்துவ வாதி) இரட்டை வேடம் போடுகின்றனர்…
மற்றொரு ஆயுதம் கடவுள் மறுப்பு… இன்றைய நிலையில் வீரமணி, சுப.வீ போன்ற பழம் பெரும் தி.க வினர் தவிர, மற்ற அனைவரும் கடவுள் மறுப்பு என்பதை தாங்கள் சாதி மத சார்பற்றவர் என்று காட்டவே வைத்திருக்கிறார்கள்… கருணாநிதி கும்பலே சிறந்த உதாரணம்.
இன்றைய சூழ்நிலையில், ஆதினங்களும் அடிகலார்களும் கூட தீண்டாமை ஒழிப்புக்கு பாடுபடுகின்றனர்… ராகுல் காந்தி கூட சாதி மதம் பார்க்காமல் குடிசைகளில் உணவு உண்கிறார் (நோக்கம் எதுவாயினும்), எங்கே சேதுராமனோ , வேறு ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி தலைவரோ ஒரு பறையர்,பள்ளர் வீட்டில் உணவருந்தட்டும் பார்க்கலாம்… இங்கு சமத்துவம் சமத்துவம் என்று பார்ப்பனனை மட்டும் குறை கூறி தப்பிக்கும், சராசரி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு வினவு வாசகன், ஒரு தலித் நண்பனை தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளிக்க துணிவானா? அல்லது நீ தான் தலித் வீட்டில் உன் பெற்றோர் சகிதம் சென்று உணவு உட்கொள்வாயா? திருமண நிகழ்வுகளில் கூட குளிர்பானம் மட்டும் குடித்து விட்டு திரும்பி வரும் கனவான்கள் எதனை பேர்?
இவ்வுளவு ஏன் வெகுவான தலித்தல்லாத கலப்பினங்களின் காதல் திருமணங்கள் கிராமங்களிலும் அங்கீகரிக்கப்படும் இந்நாட்களில் கூட , தலித் ஆணோ பெண்ணோ சம்பந்தப்படும் காதல் திருமணங்களுக்கு உயிர் பலி தானே பரிசாக கிடைக்கின்றன? கௌரவ கொலைகள் கணேச குருக்கள்கள் வீட்டில் அதிகமா அல்லது சேது ராமர்களிடம் அதிகமா?
முதலில் நீங்கள் உங்கள் சாதி அடையாளங்களை ஒழித்து, உங்கள் பூர்விக கிராமங்களில் உள்ள தலித் சமுதாயத்தினரை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.. பார்ப்பனியம் எல்லாம் பறந்து போய்விடும்…
டிசம்பர் இருபதில் தோழிகள் இணையவே வாய்ப்பு இருக்கிறது என்று அனுமானித்தது மெய்யாகிவிட்டது