privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்!

தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்!

-

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)இன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான கிஷன்ஜி என்றழைக்கப்படும் தோழர் மலோஜுலா கோடேஸ்வரராவ், மத்திய ரிசர்வ் போலீசு படையினரால், 24.11.2011 வியாழனன்று படுகொலை செய்யப்பட்டு தியாகியானார். மேற்கு வங்க மாநிலம், மேற்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரிசோல் காட்டுப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக போலீசு தெரிவித்தது. துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படும் இடம்,  ஜம்போனி போலீசு நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், அரசு விவசாயப் பண்ணையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஆள் நடமாட்டமும் போலீசு நடமாட்டமும் அதிகமுள்ள இடமென்பதால், அங்கே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறுவதே சந்தேகத்திற்குரியது என்று கூறியிருக்கின்றன, சில பத்திரிகைகள்.

முந்தைய நாளன்று, ஆயிரம் பேர்கொண்ட படையினர் கிஷன்ஜியைச் சுற்றி வளைத்துவிட்டதாகவும், ஆனால், இறுதி நேரத்தில் அவர் தப்பிவிட்டதாகவும் போலீசு செய்தி வெளியிட்டது. தோழர் கிஷன்ஜி நவம்பர் 23 அன்றே கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, நவம்பர் 24 அன்று போலி மோதலில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தோழர் வரவரராவ் குற்றம் சாட்டினார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஏ.பி.டி.ஆர். என்ற சிவில் உரிமை அமைப்பின் தலைவரும், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மம்தா அரசு நியமித்துள்ள குழுவின் உறுப்பினருமான சுஜாதோ பத்ரோவும், வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவும் இது போலி மோதல் கொலை என்றே கூறியிருக்கின்றனர்.

இது போலி மோதல் கொலை அல்ல என்றும், குறிப்பான உளவுத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ‘சுத்தமான’ நடவடிக்கைதான் என்றும் கூறியிருக்கிறார், மத்திய ரிசர்வ் போலீசு படையின் டைரக்டர் ஜெனரல் விஜயகுமார். போலீசின் வாய் சுத்தம் நாம் அறிந்ததுதான் என்பது ஒருபுறமிருக்க, விஜயகுமார் தமிழகத்தில் இருந்தபோது, அவர் தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை வீரப்பன் பிணத்தைச் ‘சுட்டுக் கொன்ற கதை’யும் நமக்குத் தெரியும்.

தோழர் கிஷன்ஜியின் உடலை அடையாளம் காண்பதற்காக நவம்பர் 26 அன்று மித்னாபூர் மருத்துவமனைக்கு நேரில் சென்ற வரவரராவும், தோழர் கிஷன்ஜியின் அண்ணன் மகள் தீபாவும் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களாக அவரது உடல் முழுதும் காயங்கள் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். அவரது உடலில் 6 இடங்களில் தோட்டாக்கள் பாய்ந்திருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் தீபா மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம் !

கிஷன்ஜி என்றழைக்கப்பட்ட தோழர் மலோஜுலா கோடேஸ்வரராவ் ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்திலுள்ள பெட்டபள்ளியைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலத்திலேயே முற்போக்கு மாணவர் சங்கத்தைத் துவங்குவதில் முன்நின்றதாகவும், 1975 அவசரநிலைக் காலத்தின்போதே தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கிவிட்டதாகவும் ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். மக்கள் யுத்தக் குழுவிலும், பின்னர் ஒன்றுபட்ட மாவோயிஸ்டு கட்சியிலும் தலைமைப் பொறுப்புகளில் இருந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மூத்த தோழராக இருந்தபோதிலும், லால்கர் போராட்டத்தை ஒட்டித்தான் ஊடகங்களின் வாயிலாக அவர் அறிமுகமானார்.

லால்கர் போராட்டத்தின் போது, பொய் வழக்குகளில் போலீசால் கைது செய்யப்பட்ட பழங்குடிப் பெண்களை விடுவிக்கக் கோரி, அக்டோபர் 2009இல் சங்க்ரெயில் போலீசு நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்து, இன்ஸ்பெக்டர் அதீந்திரநாத் தத்தாவைப் பிணையக் கைதியாகப் பிடித்தனர் மாவோயிஸ்டுகள். 14 பழங்குடிப் பெண்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அந்த போலீசு அதிகாரியையும் விடுவித்தனர். மார்க்சிஸ்டு அரசை இந்த நடவடிக்கை கொதிப்புறச் செய்தது. இந்நடவடிக்கையின் போது, ஒரு கட்டம் போட்ட கைத்தறித் துண்டால் தலையைப் போர்த்திக் கொண்டு, தோளில் துப்பாக்கி தொங்க, தொலைக்காட்சி காமெராவுக்கு முதுகைக் காட்டியபடி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார் ஒரு தோழர். ஒடிசலான உடல்வாகும், மென்மையான குரலும் கொண்ட அவர்,  ‘கிஷன்ஜி’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் பிப்ரவரி 2010இல், சில்டாவில் கிழக்குப் பிராந்திய ரைபிள்ஸ் முகாமின் மீது தாக்குதல் நடத்தி, 24 சிப்பாய்களைக் கொன்று, 47 நவீன ஆயுதங்களையும் மாவோயிஸ்டு படையினர் கொண்டு சென்ற போது, கிஷன்ஜிதான் இதற்கு காரணம் என்று போலீசு குற்றம் சாட்டியது. கிஷன்ஜிக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகளை மே.வங்க அரசு முடுக்கி விட்டிருந்த நிலையிலும், அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த வண்ணமிருந்தார். மார்க்சிஸ்டு அரசினால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

ஆனால், “ஜங்கல் மகல் பகுதியிலிருந்து மத்தியமாநிலக் கூட்டுப் படைகளைத் திரும்பப் பெறுவோம், எல்லா அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வோம், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என வாக்குறுதி அளித்த மம்தாவின் அரசுதான் கிஷன்ஜியைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது. இந்தப் படுகொலைக்கு மன்மோகன், சோனியா, சிதம்பரம், மம்தா ஆகியோர்தான் பொறுப்பு என்றும் மம்தாவும் மத்திய அரசும் கூட்டாக நடத்திய சதியின் விளைவாகத்தான் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என்றும் மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக்குழுவின் சார்பில் தோழர் அபய் குறிப்பிட்டிருக்கிறார்.

2004இல் ராஜசேகர் ரெட்டியுடனான பேச்சு வார்த்தையை முறிந்தவுடனே, நல்லமலா காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து தோழர் ராமகிருஷ்ணாவைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக ப.சிதம்பரம் நாடகமாடிக் கொண்டிருந்த போதே, கோப்ரா படையினரால் தோழர் ஆசாத் நயவஞ்சகமாகக் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தற்போது மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சிவில் உரிமை அமைப்பினர் சிலரை மம்தா அரசு நியமித்து, அவர்கள் இரண்டு சுற்றுகள் பேசிவிட்ட நிலையில், கூட்டுப்படைகள் தோழர் கிஷன்ஜியைப் பிடித்துக் கொலை செய்திருக்கின்றன.

அமைதி, சமாதானம், பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டு மாவோயிஸ்டு கட்சியின் தலைமையைக் கொன்றொழிப்பது, கட்சிக்குள் உளவாளிகளை ஊடுருவச் செய்வது என்ற உத்திகளையே மத்தியமாநில அரசுகளும் போலீசும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன.   “கிஷன்ஜி பற்றிய தகவல்களை எங்களுடைய ஆதரவாளர்களே போலீசுக்கு கசிய விட்டிருக்கின்றனர். கடைசியாக நான் கிஷன்ஜியுடன் பேசியபோது, நம்முடைய ஆதரவாளர்களுக்குள்ளேயே எதிரிகள் ஊடுருவிவிட்டனர் என்று அவர் கூறினார்” என மாவோயிஸ்டு கட்சியின் மேற்கு வங்கச் செயலர் ஆகாஷ் தொலைபேசியில் கூறியதாக கொல்கத்தாவிலிருந்து வெளிவரும்டெலிகிராப் நாளேட்டின் (நவம்பர்,26) நிருபர் பிரணாப் மண்டல் குறிப்பிட்டிருக்கிறார்.

சிங்குர், நந்திகிராம் மக்கள் போராட்டங்களின் அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்து கொண்ட மம்தா பானர்ஜி, லால்கர் போராட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. லால்கரிலிருந்து துணை இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் என்று சவடால் அடித்தார். ஆசாத்தின் கொலையைக் கண்டிப்பதாக நாடகமாடினார். ஜெயலலிதாவின் ஈழத்தாய் வேடத்தைப் போன்றதே மம்தாவின் இந்தப் ‘புரட்சி’ வேடம் என்பதை ஆளும் வர்க்கங்கள் புரிந்து வைத்திருந்தன. வங்கத்து அறிவுஜீவிகள் சிலருக்குத்தான் அது புரியவில்லை.

மம்தா பதவிக்கு வந்தவுடன், கூட்டுப்படை நடவடிக்கையை நிறுத்தாதது மட்டுமல்ல, மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்கு சல்வா ஜுடுமைப் போன்ற 10,000 பழங்குடி இளைஞர்களைக்  கொண்ட சிறப்புப் போலீசு படை அமைப்பதாக அறிவித்தார். ஒருபுறம் பேச்சுவார்த்தைக்குத் தூதர்களை நியமித்து மாவோயிஸ்டுகளுடன் பேசச் சொல்லிவிட்டு, மறுபுறம் தலைவர்களைக் குறிவைத்து அழிக்கும் திட்டத்தையும் முடுக்கி விட்டார். அதன் விளைவுதான் தோழர் கிஷன்ஜியின் படுகொலை.

தன்னுடைய வாழ்க்கையை மக்களின் விடுதலைக்கு அர்ப்பணிப்பதென்று முடிவு செய்து புறப்பட்ட தோழர் கோடேசுவர ராவ், இன்னல்மிக்க தலைமறைவு வாழ்க்கையை ஏற்று, புரட்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு கிராமங்கள், நகரங்கள், காடுகள் என 33 ஆண்டு காலம் எங்கெங்கும் சுற்றிப் பணியாற்றி, கடந்த நவம்பர் 27 அன்று தியாகி கிஷன்ஜியாக பெட்டபள்ளிக்குத் திரும்பியிருக்கிறார். 33 ஆண்டுகளுக்குப் பின் தனது மகனைப் பிணமாகப் பார்க்க நேர்ந்த அவரது தாய் மதுரம்மா நெஞ்சம் வெடித்துக் கதற, திரண்டிருந்த தோழர்கள் “தியாகி கிஷன்ஜிக்கு செவ்வணக்கம்” என்று முழங்க, ஆயிரக்கணக்கான மக்களும் பல்வேறு அரசியல் அமைப்புகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்த தோழர் கிஷன்ஜி விடைபெறுகிறார்.

தலையில் போர்த்திய துண்டும், முதுகில் தொங்கும் துப்பாக்கியுமாக அவர் முன்னே செல்கிறார்.  தோழர் கிஷன்ஜியின் தியாகத்தைப் பின்தொடர்வோம்! வீரவணக்கம் தோழர் கிஷன்ஜி!

____________________________________________________

–    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011

_________________________________________________________

  1. இது தானா உங்க டக்கு… பு.ஜ வெளிவந்த உடனே முதலில் இந்த கட்டுரையை தான் மீள் பிரசுரிப்பீர்கள் என நினைத்தேன்…

  2. தீவிரவாத ஆயுத போராட்டத்தால் இனி எதையும் சாதிக்க முடியாது. விடுதலைப் புலிகளை விடவா ஒரு இயக்கம் போராடிவிட முடியும்? பிரபாகரனோ, கிஷன்ஜியோ இம்மாதிரிக் கொடூர முடிவுதான். தேவைப்பட்டால் விமானப் படையையே அனுப்புவார்கள்! வெறும் ‘போர்க்குணத்தால்’ ஆகக் கூடியது எதுவும் இல்லை.

    போலி ஜனநாயகம் என்று முத்திரை குத்தாமல் அதில் பங்கேற்று ஜனநாயக வழியில் சிறிது சிறிதாகவே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, டெமாக்ரஸியும் கேப்பிடலிஸமும்தான் எதிர்காலம்.

    உடனே வால் ஸ்ட்ரீட் போராட்டத்தைச் சுட்டிக்காட்டுவீர்கள். அதே வால் ஸ்ட்ரீட் போராளிகளிடம் உங்களுக்குக் கம்யூனிச ஆட்சி வேண்டுமா என்று கேட்டுப் பாருங்கள் – உதைக்க வருவார்கள்! அவர்கள் கேட்பது, முதலில் வேலை, வீடு போன்றவை. அப்புறம் கேபிடலிஸத்துக்குள்ளாக சிறு சீர்திருத்தங்கள். அம்மாதிரி சீர்திருத்தங்கள் செய்துகொள்வதால்தான் கேபிடலிஸம் நிலைக்கிறது. மார்க்ஸ் என்றோ எழுதிய ஒரே புத்தகத்தில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது என்று கண்மூடித்தனமாக நம்புவது, கீதை, பைபிள் அல்லது குரானில் எல்லாக் கேள்விக்கும் விடை உள்ளது என்பதுபோலத்தான்.

    பஜ்ரங் தள் தீவிரவாதிகள் வன்முறை மூலம் இந்து ராஷ்ட்டிரத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஜிகாதித் தீவிரவாதிகள் வன்முறை மூலம் எல்லோரையும் குரானை ஏற்கச்செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். மாவோ (+வினவு) வன்முறை மூலம் எல்லோரையும் தாஸ் கேபிடலிஸத்தை ஏற்கச்செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    எல்லாமே கண்மூடித்தனமான நம்பிக்கைகள். இவற்றுக்கிடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?

    • மார்க்ஸ் என்றோ எழுதிய ஒரே புத்தகத்தில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது என்று கண்மூடித்தனமாக நம்புவது/////////

      சரவணன் உங்களை பாத்தா ரொம்ப படிச்சவரு மாதிரி இருக்கு, மார்க்ஸ் அப்படி என்ன புத்தகம் எழுதினாரு, அதுல என்ன தீர்வு சொல்லியிருக்காருன்னு விரிவா இல்லாட்டாலும் சுருக்கமாவாவது எழுதுங்களேன். இல்லேன்னா நீங்க தியாகுத்தனமா பேசறதா யாராச்சும் சொல்லிடப்போறாங்க

    • சரவணா!
      முதலாளித்துவம் (அதாங்க அமெரிக்கா) வன்முறை இல்லாமல்தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறதா. அதெப்படிங்க கேப்பிடலிசம்னா எல்லாத்தையுமே மறந்துடுறீங்க. அமெரிக்காவ ஒரு சாம்பிளுக்குதாங்க குறிப்பிட்டு இருக்கிறேன். எல்லா முதலாளிமாருவளுக்கும் அதாங்க வேலையே.

    • சரவணன் எந்த ஒரு இயகமும் எடுத்தவுடன் ஆயுதம் ஏந்தி போரடுவது இல்லை நீங்கள் கூறும் ஜனநாயகம் முரைபடி திர்வு வரவில்லை என்ற பட்சத்தில் தான் ஆயுத போராட்டம் தொடங்குகிறது. ஊரிமைகள் மறுக்கும் பொழுதும் அதை கொறுவோர் அடக்க்படும் பொழுதும் தான் இந்த எழுச்சி.

      “அதே வால் ஸ்ட்ரீட் போராளிகளிடம் உங்களுக்குக் கம்யூனிச ஆட்சி வேண்டுமா என்று கேட்டுப் பாருங்கள் – உதைக்க வருவார்கள்!”

      அந்த போராளிகளிடம் நிரந்தர திர்வு வேண்டுமா இல்லை ஒரு வேலையும் வீடும் கிடைத்தாள் போதுமா என்று கேட்டு பாருங்கள். அவர்கள் நிரந்தர திர்வுதான் வேண்டும் என்று சொல்வார்கள் அந்த திர்வு க்ம்யூனிசம் தான் தரும் என்று அவ்ரகளுகும் தெரியும் பாவம் உங்களுக்கு மட்டும் புரிவதில்லை.

      “அப்புறம் கேபிடலிஸத்துக்குள்ளாக சிறு சீர்திருத்தங்கள். அம்மாதிரி சீர்திருத்தங்கள் செய்துகொள்வதால்தான் கேபிடலிஸம் நிலைக்கிறது. ”

      தான் வாழ பிறரை கொன்றால் தவரு இல்லை என்று ஊரிதியுடன் நம்பும் கேபிடலிச்ட் என்ன சீர்மிகு சீர்திருதம் செய்தார்கள். அரபுநாடுகளின் எண்னை வ்ளத்தை ஆட்டை போட திவரவாத ஒழீப்பு என்ற பொர்வையில் அந்நாட்டை சூரை ஆடுவது சீர்திருதம் என்று எம் போன்றவர்களுக்கு தெரியாது. அம்மாதிரி சீர்திருதம் எங்களுக்கு வேண்டாம்.

      “மார்க்ஸ் என்றோ எழுதிய ஒரே புத்தகத்தில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது என்று கண்மூடித்தனமாக நம்புவது, கீதை, பைபிள் அல்லது குரானில் எல்லாக் கேள்விக்கும் விடை உள்ளது என்பதுபோலத்தான்.”

      தாஷ் கேபிட்டல் புத்தகம் இப்பொழுது கமினிஷ்ட் கையில் இருபதை காட்டிளும் கார்பரேட் முதலாலிகளிடம் தான் இருகிறது. இப்பொழுது உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி 150 வருடங்களுக்கு முன்னே மார்க்ச் எழுதிவிட்டார். அப்புத்தகம் முலியமாக மிக்களுக்கு திர்வு இருகிரதோ இல்லையோ உங்கள் கேபிடலிஷ்டுக்கு இருகிறது.

      “மாவோ (+வினவு) வன்முறை மூலம் எல்லோரையும் தாஸ் கேபிடலிஸத்தை ஏற்கச்செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.”

      இவர்கள் வேண்டாம் சமதர்மம் என்னம் உங்களுக்கு இருந்தல் தாச் கேபிடலை கையில் எடுபிற்கள்.

      நிரைவாக தன்நலம் பாராமல் தன் மக்கள்ளுகாக மடிந்த அந்த போராளிக்காக வீர வணக்கம்.

      • கமெண்டிலேயே பதில் உள்ளதே-

        **** “மார்க்ஸ் என்றோ எழுதிய ஒரே புத்தகத்தில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது என்று கண்மூடித்தனமாக நம்புவது, கீதை, பைபிள் அல்லது குரானில் எல்லாக் கேள்விக்கும் விடை உள்ளது என்பதுபோலத்தான்.” ****

        • ////மார்க்ஸ் என்றோ எழுதிய ஒரே புத்தகத்தில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது என்று கண்மூடித்தனமாக நம்புவது, கீதை, பைபிள் அல்லது குரானில் எல்லாக் கேள்விக்கும் விடை உள்ளது என்பதுபோலத்தான்////

          மார்க்ஸ் எழுதியிருப்பதில் ஏதேனும் பொய்கள் இருக்கிறதா ? இருந்தால் சொல்லுங்கள்.

  3. @ஊசி

    உண்மையான நக்ஸல்பாரி அல்லது மாவோயிஸ்ட் என்றால் சத்தீஸ்கர், மே.வங்காள காடுகளுக்குப் போய்ப் போராடவேண்டும். (அதில் எந்த பயனும் இருக்காது என்பது வேறு விஷயம்) உங்களுக்கு அம்மாதிரி யோசனை இருக்கிறதா? அல்லது உங்கள் பிள்ளையைப் போராட அனுப்புவீர்களா? சும்மா அடுத்தவன் அநியாயமாக அடிபட்டு சாவதற்கு வீர வணக்கம் என்று- சௌகரியமாக நகரத்தில் மிடில் கிளாஸ் வாழ்க்கையை அனுபவித்தபடி- கமெண்ட் போடுவது உங்கள் அகராதிப்படிப் போர்க்குணத்தில் சேரும் என்றால் இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையும், என்னைப் போன்றவர்களின் வாழ்க்கையும் ஒன்றுதான் – உங்களிடம் போலித்தனம் உள்ளது. அதிதான் வித்தியாசம்!

    • சரவணன், என்னாங்க இது மார்க்சுலேருந்து நக்சல்பாரிக்கு ஜம்பாயிட்டீங்க, உங்களுக்கு தெரியாத விசயங்களை பற்றி பட்டியல் போடறீங்களா…?

      • ஊசி, மழுப்ப வேண்டாம். மாவோயிச ஆயுதப் போராட்டத்தை வரவேற்கிறீர்கள் என்றால் அதில் பங்குபெறத் தயாரா? இல்லை, என் போராட்டமெல்லாம் நகரப்பேருந்தில் வித்தவுட்டில் செல்வது மாதிரி உபத்திரவம் இல்லாத (மிஞ்சிப் போனால் 100 ரூபாய் ஃபைனா?)வகையறா மட்டுமே, மற்றபடி அடுத்தவன் ஆயுதம் தூக்கி உயிரைக் கொடுக்கட்டும், நான் ‘வீர வணக்கம்!’ என்று கமெண்ட் போட்டுவிட்டு ஆஃபீசுக்குப் போகிறேன் என்றால் அப்புறம் என்ன நீங்கள் ‘அசல் கம்யூனிஸ்டு, சி.பி.எம். போலி கம்யூனிஸ்டு’?!

        • கிழிஞ்சுது. பட்டியல்ல இன்னும் சில ஐட்டமும் சேந்தாச்சு… இவ்ளோதானா இல்ல மேலும் வளருமா?

          • திரும்பத் திரும்ப மழுப்பல்கள்தான் வருகின்றன! என் கேள்வி எளிமையானது, நேரடியானது. அதை எதிர்கொள்ளும் நேர்மையோ, துணிச்சலோ உங்களுக்கு இல்லை.

            • நான் கேட்ட ஒத்த கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் நீங்க பீதியாகி பட்டியல் போட ஆரம்பிச்சித்தை பத்தி சொல்றீங்களா… குட்! சுய விமர்சனத்தை கண்டின்யூ பண்ணுங்க

              • பதில் சொல்ல வேண்டியது யார்? ஆயுதப்போராட்டத்தை ஆதரிப்பவர் நீங்கள். அப்படியானால் அதில் நேரடியாகப் பங்குபெறுவீர்களா என்று கேட்கிறேன்..பதில் இல்லை.

                1990 ல் மண்டல் எதிர்ப்புப்போராட்டத்தில் சில அப்பாவிப் பையன்கள் மீது தாங்களே தீ வைத்துவிட்டு ‘தீக்குளிப்பு’ என்று அனுதாபம் தேடப்பாத்தார்கள் இந்துத்துவக் கும்பல். அடுத்தவனை சாக விட்டு அரசியல் பண்ணுவது சுலபம் (சுயநலம்) நன்பரே.

                  • பதில் இதோ- http://en.wikipedia.org/wiki/Karl_Marx

                    ஏன் மார்க்ஸ் கோட்பாடுகள் பயனளிக்கவில்லை என்று அதியமான் போன்றவர்கள் தொடர்ந்து விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்தத் திரிகளைப் பின்பற்றுங்கள். திரும்பவும் ஏற்கனவே வேறு திரியில் நடந்துவரும் விவாதங்களை இங்கு நடத்துவதில் பயனில்லை.

                    நான் ஆயுதப் போராட்டத்தை முற்றிலும் நிராகரிப்பவன். நீங்கள் ஆதரிப்பவர். எனவே, அதில் நேரடியாகப் பங்கேற்பீர்களா, அல்லது வீர வணக்கம் என்று கமெண்ட் போடுவதுதான் உங்கள் அதிகபட்சப் போராட்டமா என்று கேட்டேன். திரும்பத் திரும்ப மழுப்புவதிலேயே பதில் வந்துவிட்டது- அதாவது, நீங்கள் அலுவலகத்தில் மேனேஜர் வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்த்தபடிக் கமெண்ட் போடும் போராளி மட்டுமே என்று!

                    • ஏன் பாஸ் ஏன், விக்கிபீடியா லிங்குக்கா அத்தா பெரிய பில்டப்பு? உங்களுக்கு தெரிஞ்ச விசயத்தை பத்தி மட்டும் பேசுவதுன்னு நீங்க ஒரு முடிவெடுத்தீங்கன்னா ஊமையாயிடுவீங்க போலயே…. குறைந்தபட்சம் இந்த எ.தெ.ஏ பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல முயற்சி செய்யவாவது நீங்கள் பேசத்துணிந்த பொருள் குறித்து படித்து-புரிந்து-விளக்க முடிவு செய்யலாமே. எத்தனை நாளுக்குத்தான் நீங்க வாயாலயே வட சுட்றதும் நாங்க அதை கண்ணால சாப்புடறதும்.

                      தனது இருபதுகளில் புரட்சிகர அரசியலுக்கு அறிமுகமாகி பிறகு “பிழைக்கத் தெரிந்த” சாதுர்யத்தால் தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டு செட்டில் ஆன பின்பு நாற்பதுகளில், நாங்கெல்லாம் அந்தக்காலத்துலன்னு பிலாக்கணம் பாடும் நபர் மட்டுமல்ல, வினவை தொடர்ந்து படித்துகொண்டிருக்கும் ஒரு அக்மார்க் ஆர்.எஸ்.எஸ் அம்பிக்கு கூட நீங்க ஜிகினாவாக பயன்படுத்தியிருக்கும் அரசியல் சொற்கள் தெரிந்திருக்கும், ஆனால் ஜிகினா பேப்பரில் சுற்றியிருக்கும் பீ உருண்டையை (நன்றி சுகுணா)விற்க இது இடமில்லை. நீங்க போயிட்டு வாங்க சாரே

                    • 6.1.1.1.1.1.1.1.1.1 -க்கு பதில். அதில் ரிப்ளை பட்டன் எடுக்கப்பட்டிருப்பது எந்த வகை விவாத நாகரிகமோ தெரியவில்லை.

                      விக்கிபீடியா லிங்க் என்பது ஒரு பகடி என்று புரிந்துகொள்ளும் அளவுக்குக்கூட (ஃபேஸ்புக் உபயாகிக்கும் 13 வயது சிறுவனுக்குப் புரிந்திருக்கும்) நகைச்சுவை உணர்ச்சியை உங்கள் இடதுசாரிக்கல்வி அளிக்கவில்லை போலும்!

                    • ஓ விக்கிலிங்குளிலேயே சீவித்திருக்கும் அதியமானை பகடி செய்கிறீர்களா இல்லை வழக்கம் போல சுய பகடியா?

                      தொழில்நுட்பமும் தெரியாதா…. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

                    • ///நான் ஆயுதப் போராட்டத்தை முற்றிலும் நிராகரிப்பவன். நீங்கள் ஆதரிப்பவர்.///

                      நாங்கள் ஆயுதப் போராட்டங்களை ஆதரிக்கிறோம்
                      உண்மை தான் ஆனால் யாருடைய ஆயுதப்போராட்டங்களை ? ரசியாவிலும், சீனாவிலும் உழைக்கும் மக்கள் நடத்தியதை போன்ற ஆயுதப்போராட்டங்களை தான் ஆதரிக்கிறோம்.மாறாக மக்களிடமிருந்து
                      அந்நியப்பட்டிருக்கும் தனிநபர்களின் ஆயுதப்போராட்ட சாகசங்களை எல்லாம் நிராகரிக்கிறோம்.

                      நீங்கள் ஏன் ஆயுதப்போராட்டங்களை நிராகரிக்கிறீர்கள் ?

            • அவர் தனிநபர்களின் ஆயுதப்போராட்டங்களை ஆதரிக்கவில்லை சரவணன், மக்கள் ஆயுதம் ஏந்துவதையே ஆதரிக்கிறார்.

              • //// நீங்கள் ஏன் ஆயுதப்போராட்டங்களை நிராகரிக்கிறீர்கள் ? ////

                வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால். (ஜார் மன்னரின் ரஷ்யாவெல்லாம் இருக்கட்டும், இன்று இந்திய அரசையும் அதன் முப்படைகளையும் மோவோயிஸ்டுகளின் குழுக்களால் ஆயுதபோரில் எதிர்த்து வெல்ல முடியுமா என்பதே கேள்வி.)

                • முடியும். ஆனால் மாவோயிஸ்டுகளின் வழிமுறையில் போய் அதை சாதிக்க முடியாது. ஆனால் உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்தை ஆயுதம் கொண்டு தூக்கியெறிவது வரலார்று விதி.

        • காட்டுல நடந்த தான் அது போரட்டமுனு சொலுவிங்க செரி பேருந்துல இந்த மாதிறி ம க இ க போராட்டத்திள் இடுபட்டாள் அது உங்களுக்கு உபத்திரம்.

          செரி இந்த மாதிரி விலை உயர்வை எதிற்து கூட்டனியில் இருந்தபடி வடிவேலு சொல்வதை போல் எதோ கம்யூனிச்டுன்னு ஃபார்ம் அய்யுடோம் இதுக்கு கூட எதிற்பு தெருவிக்கவில்லை என்றால் மக்கள் நம்ப மாட்டாங்கனு அந்த அம்மா கையில கால்ல விழுந்து எதிற்பு தெருவிக்க அனுமதி வாங்கிவிட்டு போரட்டத்திள் இடுபடும் போலி கமியுனிச்டுடன் இவர்களை ஒப்பிடாதிர்கள். இவர்கள் இதை செய்வத்ற்க்கா துனிச்சளாவது இருந்தது.

          உங்க பிரச்சனை வீர வணக்கம் சொன்னதுக்கா இல்லை போருந்தில் நட்ந்த போராட்ட்மா.நாளைக்கு உங்கள அலுவலகதிள் இருந்து காரனம் எதுவும் இல்லாமல் வெளியே அனுப்பிவிட்டாள் நீங்கள் இதுவும் ஒரு கேப்பிடலிச்டு சீர்திருதமுனு சும்மா இருந்து விடுவீர்களா. அப்பமட்டும் எங்கே கமியூனிசம் லேபர் லா எங்கேனு கேட்பிங்க.

          சார் எதோ நீங்க சட்டசபை சபாநாயகர் போல் நடுநாயகமாக பேசுவதுபோல் பேசிவிட்டு ஆளும் கட்ச்சிக்கு ஆதற்வாக (கேபிடளிச்ட்டு) இருக்காதிர்கள்.

        • யார் கம்யூனிஸ்ட் என்பதை தீர்மானிப்பது எது, ஆயுதமா அரசியலா ?

          • கம்யூனிச்ட் யார் என்பதை தீர்மானிப்பது ஆயுதமும் இல்லை அரசியலும் கொள்கைதான். தன்னை கமியூனிச்ட் என்று கூறி கொண்டு சாதி அடையாலம் கொண்ட சாதி தலைவர்களுக்கு மாலை இட்டு மரியாதை செய்யும் போலி கமியூனிச்ட்டுகளையும், பொருள் முதல் வாதம் என்னும் மார்க்ச் பாடத்தையும் மறந்து வீடு மனை மகிழுந்து பன்நாட்டு பொருள்களுக்கு அடிமைதனம் போன்ற போலி கமியூனிச்ட்டுகளை பார்பதாள் உங்களுக்கு இந்த “வினவு” என்று நம்புகிறேன்.

          • ஆயுதம் இல்லாமல் எனது கொள்கைகளை அமைதியான முறையில் பிரச்சாரம் செய்கிறேன் என்றால் தாராளமாகச் செய்யுங்கள். ஜனநாயகத்தில் எல்லாக் கருத்துகளுக்கும் இடம் உண்டு. தேர்தல் மூலம் பெரும்பாலான மக்களின் ஓட்டுகளைப் பெற்று கம்யூனிஸ ஆட்சி அமைந்தால் நான் எதுவும் சொல்லப்போவதில்லையே. ஆயுதப்போர் மூலம் ஒரு தரப்பின் கொள்கைகளை அமுல் படுத்துவதையே நிராகரிக்கிறேன்.

            • சாரு மஜுமுதார் முதலில் அமைதியாகதான் ஜோதி பாசு அரசிற்கு எதிறாக நீங்கள் கூறும் ஜனநாயகபடி மேற்குவங்க கமியூனிச்ட் அரசை விமர்சித்தார் (மாநிலத்தில் பஞ்சத்தை ஜோதி பாசு அரசு செரியாக அனுகவில்லை என்பதற்காக) ஒரு கமியூனிச்ட்டே எப்படி ஒரு கமியூனிச்ட் அரசை விமர்சனம் செய்யலாம் என்று, அப்பொழுது ஜோதி பாசுவின் அரசு சாரு மற்றும் அவருடன் இனைந்த மற்ற தோழர்களையும் கண்டவுடன் சுட உத்தரவு பிரப்பிதார் அதன் விலைவாக ஆயுதம் எந்தும் நிர்பந்தம் ஏர்பட்டது.நீங்கள் கூறுவதை போல் ஓட்டு பிட்சை கேட்டு “ஜனநாயகபடி” வந்த ஒரு கமியூனிச்ட் அரசெ இப்படி நடந்து கொள்ளும் பொழுது மற்ற ஓட்டு பிச்சை கட்சிகளை பற்றி பேச தேவை இல்லை.

              இந்திய ஜனநாயகம்படி ஒருவர் ஓட்டு போட விருப்பம் இல்லை என்றால் ஒ7 பயன் படுத்தி அவரது விருப்பம் இன்மையை தெருவிக்கலாம் அப்படி பட்ட ஒ7 ஏன் மின்னனு ஓட்டு இயந்திரத்திள் இல்லை. ஜனநாயகம்படி தேர்தல் நடத்துவோர் எதற்கு அந்த பொத்தனை வைக்கவில்லை?. வைத்தாள் உங்கள் ஜனநாயகம் சிரிப்பாய் சிரித்துவிடும் என்ற பயம்மா?

              மவொ சொல்லுவதை போல் “நாங்கள் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று திர்மானிப்பது எங்கள் எதிறிகளே” என்றார் அதன்படி உங்கள் ஜன்”நாய்”கள் ஆயுதம் எடுத்ததாள் வந்த விலைவு இது.

              தயவு செய்து ஜனநாயகம் தேர்தல் என்று மக்களுக்காக உன்மையாக போராடுவோரை இலிவு படுத்தாதிர்கள்.

            • ///ஜனநாயகத்தில் எல்லாக் கருத்துகளுக்கும் இடம் உண்டு///

              என்று கூறுவது மாயை, இந்த சமூகம் அனைவருக்குமானது என்று மக்களை ஏமாற்ற முதலாளிகள் கையில் வைத்திருக்கும் குச்சிமிட்டாய் தான் ஜனநாயகம். முதலாளித்துவ சமூகத்தில் அனைவருக்கும் ஜனநாயகம் கிடையாது.

    • “உண்மையான நக்ஸல்பாரி அல்லது மாவோயிஸ்ட் என்றால் சத்தீஸ்கர், மே.வங்காள காடுகளுக்குப் போய்ப் போராடவேண்டும்.”

      அப்போ சச்சின் டென்டுள்கரும் ஒரு கிரிகெட் ரசிகரும் ஒன்னா.

      “சும்மா அடுத்தவன் அநியாயமாக அடிபட்டு சாவதற்கு வீர வணக்கம் என்று- சௌகரியமாக நகரத்தில் மிடில் கிளாஸ் வாழ்க்கையை அனுபவித்தபடி- கமெண்ட் போடுவது உங்கள் அகராதிப்படிப் போர்க்குணத்தில் சேரும் என்றால் இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையும், என்னைப் போன்றவர்களின் வாழ்க்கையும் ஒன்றுதான் – உங்களிடம் போலித்தனம் உள்ளது.”

      நாங்கள் பரவாயில்லை வீர வணக்கம் ஆவது வைதொம். உங்களை போல் அந்த போராளியை இலிவு படுதவில்லை. ஐயா போரடும் குணம் வேணும் என்றால் காட்டில் தான் இருக்க வேண்டும் என்று யார் சொன்னார். முல்லை பெரியார், கூடங்குளம் அணுவ்லை எதிராக போராடும் மக்களுக்கும் போர்குணம் இருகிறது. தயவு செய்து இம்மாதிறியான பொது புத்தியை ஒடையுங்கள்.

      எப்பொழுது அடக்குமுரைக்காக வன்முரையில் இடுபடும் பஜ்ரங் தள்ளையும் உரிமைக்காக போராடும் மற்ற இயகதினரயும் ஒன்ருபடுத்தி பேசுவது தான் போலித்தனம்.

      • நீங்கள் ‘ரசிகர் மட்டுமே’ என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி! அதைத்தான் ஊசி செய்ய மறுக்கிறார்.

        மற்றபடி நான் எங்கே மாவோயிசப் போராட்டத்தை இழிவு படுத்தியுள்ளேன் என்று சொன்னால் நல்லது. என் நோக்கம், ‘கிஷன்ஜி, நீங்கள் நல்லவரா, கெட்டவரா?’ என்று கேட்பது அல்ல. தற்கால உலகில் ஆயுதப் போராட்டத்தால் (நோக்கம் எவ்வளவு நியாயமாக இருந்தாலும்) பயன் இல்லை என்கிறேன். சிதம்பரம் இல்லையென்றால் ஒரு முகர்ஜி, கோப்ரா இல்லையென்றால் ஒரு அனகோண்டா. ஆயுதப்போரை இரும்புக்கரம் கொண்டு அடக்கவே செய்வார்கள். ஈழப்போராட்டத்தின் முடிவு என்ன ஆனது? உலக நாடுகளின் ஒத்துழைப்பும் ஆயுதங்களும் அரசுக்குத் தாராளமாகக் கிடைக்கும்.

        ஆயுதப்போராட்டங்களை ரொமான்டிஸைஸ் செய்த காலம் முடிந்துவிட்டது.

        கூடங்குளம், முல்லைப்பெரியாறு பற்றிக் குறிப்பிட்டதற்கு நன்றி. அவை ஆயுதம் இன்றி நடத்தப்படுவதால்தான் இலட்சக்கணக்கான மக்களின் ஆரதவு கிடைக்கிறது. கூடங்குளம் போராட்டம் 3 மாதங்களாகத் தாக்குப்பிடிக்கக் காரணமே அது அமைதி வழியில் நடப்பதுதான். ஆயுதப்போர் என்று கிளம்பியிருந்தால் மறுநாளே அழித்து ஒடுக்கிவிட்டிருப்பார்கள்! தேவைப்பட்டால் விமானப் படையையே அனுப்புவார்கள்!

        மாவோ போராளிகள் கூடங்குளம் போராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

        • பாஸ், உங்களுக்கு தெரியாத விசயங்களை மொத்தமா ஒரு பின்னூட்டத்துல போடுங்களேன், ஏன் இப்படி தனித்தனியா பிட்டு போடறீங்க #முட்டீயலடா சாமீ

          • இதோ எனக்குத் தெரியாத விஷயங்களின் பட்டியல்-

            1. ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரதம் – ஒரு நாளும் வராது!
            2. இயேசுபிரானின் இரண்டாவது வருகை – ஒரு நாளும் நிகழாது!
            3. உலகம் முழுவதும் ஒரே இஸ்லாமிய மதம் – ஒரு நாளும் வராது!
            4. வினவு சொல்லும் புரட்சி – ஒரு நாளும் வராது!

            இதெல்லாம் வருமுன்னு எனக்குத் தெரியலை.

            • ஜோஸ்சியேம் கிளி ஜோஸ்ஸ்ஸ்சியேம்:
              ஜோஸ்சியேம் கிளி ஜோஸ்ஸ்ஸ்சியேம்:

            • உழைக்கும் மக்களின் விடுதலைக்கு ஒரு பாட்டாளி வர்க்க
              புரட்சி மட்டுமே தீர்வு. புரட்சி சாத்தியமில்லை என்றால் ஏன்
              என்பதை அறிவியல் பூர்வமாக விளக்குங்கள்.

              • கிழக்கு ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் மக்கள் பாட்டாளிவர்க்க அரசுகளை 1980 களின் இறுதியில் தூக்கி எறிந்த வரலாற்று நிகழ்வே இதற்குப் பதில்.

                • என்பதுகளில் உலகில் எங்குமே சோசலிச நாடுகள் இல்லை.

                  அதற்கு முன்பு 1954, 1976 ஆண்டுகளில் ஏற்பட்ட சோசலிச அரசுகளின் பின்னடைவுக்கு காரணம் மக்கள் அல்ல முதலாளித்துவ சதிவேலைகளே அவை பின்னடைவுக்குள்ளாக காரணம். கம்யூனிச பீதியால் சோசலிச அரசுகளை அழித்தொழிக்க முதலாளிகள் எந்நேரமும் வேலை செய்து கொண்டிருந்தனர். கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களுக்காக பணத்தை அள்ளி இறைத்தனர். சோசலிச நாடுகளை பற்றியும், அதன் தலைவர்களை பற்றியும் கூறப்படும் எதிர்மறை கருத்துக்கள் அனைத்தும் உருவாக்கியவர்கள் முதலாளிகளே.

                  சோசலிச நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பது ஒரு தற்காலிக பின்னடைவு மட்டுமே, உலகம் மீண்டும் அலை அலையாக சோசலிச நாடுகளை காணப்போகிறது.

                  உலகில் முதல் முறையாக ரசியாவில் தான் சோசலிச புரட்சி நடைபெற்றது. உலகில் இனி நடைபெறப்போகும் அனைத்து புரட்சிகளும் அதன் பின்னடைவிலிருந்து அணுபவங்களை பெற்றுக்கொண்டு தான் முன்னேறும். அனைவரும் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு தான் சரியான வழியை கண்டடைகிறோம். குழந்தைகள் எழுந்து நடக்க முயற்சித்து விழுந்து பிறகு மீண்டும் எழுவதில் தொடங்கி ஒரு வளர்ந்த மனிதன் புதிதாக ஈடுபடும் ஒரு வேலையில் முதலில் ஏற்படும் தவறை கண்டுபிடித்து திருத்திக்கொண்டு அடுத்த முறை அந்த தவறு நேராமல் சரியாக செய்வது வரை அனைத்தும் விழுந்து எழுவதாக தான் இருக்க முடியும். இவ்வாறு மட்டுமே சரியானதை அடைய முடியும். அவ்வாறு இல்லாமல் சோசலிசம் வரவே வராது என்று குருட்டுத்தனமாக பேசினால் ஏன் வராது என்பதற்கும் விளக்கமளிக்க வேண்டும். அவ்விளக்கம் அறிவியல்பூர்வமானதாக இருக்க வேண்டும்.

          • இல்லை. கேபிடலிசம்+டெமாக்ரஸி வாழ்க்கையில் உயர அனைவருக்கும் வாய்ப்புகளைத் தருகிறது. சிற்றூரில் பிறந்து, தமிழ்வழிப் பள்ளியில் படித்தவர்கள் வென்ச்சர் கேபிடல் பெற்றுத் தொழில் தொடங்கிப் பலருக்குத் தரமான வேலை வாய்ப்பு வழங்க முடிகிறது. நல்ல ஐடியா+உழைப்பு இருந்தால் யாரும் தொழிலதிபர் ஆக முடியும்- அதுவே இன்றைய முதலியம்.

            • ” கேபிடலிசம்+டெமாக்ரஸி வாழ்க்கையில் உயர அனைவருக்கும் வாய்ப்புகளைத் தருகிறது:

              அப்படினா ஏன் தோழர் அமேரிகவிலும் ஐரோப்பியவிலும் மக்கள் தினம்தோறும் அரசாங்கத்திற்கு எதிறாக போரடுகிறார்கள்.நீங்கள் சொல்லும் கேபிடலிசம்+டெமாக்ரஸி அங்கே இல்லையா.

              “தமிழ்வழிப் பள்ளியில் படித்தவர்கள் வென்ச்சர் கேபிடல் பெற்றுத் தொழில் தொடங்கிப் பலருக்குத் தரமான வேலை வாய்ப்பு வழங்க முடிகிறது. நல்ல ஐடியா+உழைப்பு இருந்தால் யாரும் தொழிலதிபர் ஆக முடியும்- அதுவே இன்றைய முதலியம்.”

              தரமான வேலையினு எத சொல்ரிங்க ஒரு தொழிலாளி சக்கை பிழிவது போல் பிழிந்து அதற்கு சொர்ப கூலி குடுத்து அவன் சிருநீர் கழிகும் நேரத்தையும் கழுகுபோல் பார்த்து பணிக்கு வந்தாள் எந்த ஒரு சுகந்திரமும் தறாமல் இருபது தான் தாங்கள் கூறும் தரமான வேலையா?.

              ஐடியா மட்டும் தான் உழைப்பை செற்காதிர்கள்

            • ///நல்ல ஐடியா+உழைப்பு இருந்தால் யாரும் தொழிலதிபர் ஆக முடியும்///

              நீங்க ஏன் இன்னும் அப்படிப்பட்ட தொழிலதிபரா
              ஆகாம இருக்கீங்க, நல்ல ஐடியா இல்லையா ?

              உங்கள விடுங்க, இப்ப நம்ம ஊருல திருடுற பசங்க
              எல்லாம் நல்லா படிச்ச பசங்களா தான் இருக்காங்களாம்
              அவங்க எல்லாம் அவங்களோட ஐடியாவை எப்படி
              திருடலாம்கிறதுக்கு தான் பயன்படுத்துறாங்களாம், ஏன் ?

              அப்புறம், தூய முதலாளித்துவ நாடான அமெரிக்காவுல
              எத்தனை பேரு இப்படி ஐடியா+உழைப்பை பயன்படுத்தி
              தொழிலதிபர் ஆகிருக்காங்க ?

              • /// நீங்க ஏன் இன்னும் அப்படிப்பட்ட தொழிலதிபரா
                ஆகாம இருக்கீங்க, நல்ல ஐடியா இல்லையா ?///

                வேலையில் நல்ல சம்பளம் கிடைத்துவருவதால் சொந்தத் தொழிலில் எனக்கு ஆர்வம் இல்லை.

                ///உங்கள விடுங்க, இப்ப நம்ம ஊருல திருடுற பசங்க
                எல்லாம் நல்லா படிச்ச பசங்களா தான் இருக்காங்களாம்
                அவங்க எல்லாம் அவங்களோட ஐடியாவை எப்படி
                திருடலாம்கிறதுக்கு தான் பயன்படுத்துறாங்களாம், ஏன் ?///

                எல்லா நாடுகளிலும், கம்யூனிச நாடுகள் உட்பட, தனிப்பட்ட முறையில் சிலர் திருட்டில் (+பிற குற்றங்களில்) ஈடுபடுவது இருக்கவே செய்யும். அதனால்தான் நாடுகள் போலீஸ்துறையை வைத்திருக்கின்றன.

                ///அப்புறம், தூய முதலாளித்துவ நாடான அமெரிக்காவுல
                எத்தனை பேரு இப்படி ஐடியா+உழைப்பை பயன்படுத்தி
                தொழிலதிபர் ஆகிருக்காங்க ?///

                ‘சிலிக்கான் வேலி ஸ்டார்ட் அப்ஸ்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

                • ///வேலையில் நல்ல சம்பளம் கிடைத்துவருவதால் சொந்தத் தொழிலில் எனக்கு ஆர்வம் இல்லை.///

                  முதலாளி ஆவதற்கான நுட்பங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் நீங்களே இப்படி சொன்னா எப்படி, உங்களை போல நிறைய தொழிலதிபர்கள் வந்தால் தானே நாடு வளரும், நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். அதை விட்டுட்டு நான் கூலிக்கே வேலை செய்கிறேன்னு சொல்றது முதலாளித்துவ சமூகத்துக்கு செய்யிற துரோகம் இல்லையா சரவணன் ?

                  ஊதியம் எவ்வளவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தொழிலதிபர் ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் போதை அதை விட்டுட்டு சம்பளத்திற்கு வேலை செய்வது ஏன் சரவனன் ?

                  ///எல்லா நாடுகளிலும், கம்யூனிச நாடுகள் உட்பட, தனிப்பட்ட முறையில் சிலர் திருட்டில் (+பிற குற்றங்களில்) ஈடுபடுவது இருக்கவே செய்யும். அதனால்தான் நாடுகள் போலீஸ்துறையை வைத்திருக்கின்றன.///

                  பொதுவா பேசாதீங்க. நம்ம ஊர்ல நடக்கிற மாதிரி செயின் பறிப்பு, கொலை, கொள்ளைகள் நடந்ததற்கான ஆதாரங்களை கொடுங்க. குறைந்தப்பட்சம் சோசலிச சமூகத்தில் திருட்டு நடந்ததற்கான ஆதாரத்தை கொடுங்க போதும்.

                  ///‘சிலிக்கான் வேலி ஸ்டார்ட் அப்ஸ்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?///

                  இல்லை, சொல்லுங்க.

                  • விவாதத்தை திசை மாற்றி எங்கெங்கோ இழுத்துச் செல்கிறீர்கள். இருந்தாலும் சோஷலிச நாடுகளில் குற்றங்களே இல்லை என நம்புகிறீர்கள் என்றால் சாம்பிளுக்கு இந்த சுட்டியைப் பார்க்கவும். வழிப்பறி, பிக்பாக்கெட், கார் திருட்டு, கள்ள நோட்டு என எல்லாமும் கம்யூனிச சுவர்க்கபுரியான கியூபாவிலும் உண்டு.

                    http://www.tripadvisor.com/Travel-g147270-c140774/Cuba:Caribbean:Crimes.And.Scams.In.Cuba.html

                    சோவியத் யூனியனே காவல்துறையை வைத்திருந்த்தே. கம்யூனிச நாட்டில் குற்றங்களே இருக்காது என்று மார்க்ஸியர்களே சொல்ல மாட்டார்கள். சமூகவியல், உளவியல் போன்ற அறிவியல்துறைகள் அப்படிச் சொல்லாது. மார்க்ஸிய அறிவியலுக்கே அது முரணானது.

                    *****

                    நான் ஏன் தொழில்தொடங்கவில்லை, அமெரிக்காவில் பிரைவேட் கம்பெனி இருக்கிறதா (அங்கு 100% எல்லாமே தனியார் துறைதான் நன்பரே) போன்ற திரியின் சப்ஜக்டுக்கு (ஆயுதபோராட்டம் சரியா என்பது) சம்பந்தமற்ற கேள்விகளுக்கு பதில்கூறி அர்த்தமற்ற வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட விரும்பவில்லை.

                    • ////வழிப்பறி, பிக்பாக்கெட், கார் திருட்டு, கள்ள நோட்டு என எல்லாமும் கம்யூனிச சுவர்க்கபுரியான கியூபாவிலும் உண்டு.////

                      சுட்டிக்கு நன்றி. இன்றைக்கும் பலர் சீனா கம்யூனிச நாடு என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள், விவரம் தெரிந்த நீங்கள் அவ்வாறு பேச மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும், அதே போல கியூபாவை பற்றியும் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். கியூபா சோசலிச நாடு இல்லை சரவணன்.

                      ////சோவியத் யூனியனே காவல்துறையை வைத்திருந்த்தே.////

                      சோவியத் யூனியனில் பணம் இருந்தது, வர்க்கங்களும் இருந்தன, முதலாளித்துவத்தை மீட்பதற்கான அபாயமும் இருந்தது, எனவே அரசும் இருந்தது அதன் உறுப்பான போலீசும் இருந்தது.

                      ///கம்யூனிச நாட்டில் குற்றங்களே இருக்காது என்று மார்க்ஸியர்களே சொல்ல மாட்டார்கள்.///

                      கம்யூனிச நாடு இல்லை சோசலிச நாடு. சோசலிச நாடுகளில் முதலாளித்துவத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளிலும் முதலாளிகள் ஈடுபட்டார்கள். சதி ஆலோசனைகள், ஊடுறுவல், கொலை, உற்பத்தி சீர்குலைப்பு என அனைத்து வகையிலும் சோசலிசத்தை ஒழித்துக்கட்ட முயன்றனர். அந்தவகையில் முதலாளிகள் தான் சோசலிச நாடுகளில் மிகப்பெரிய குற்றவாளிகள் ! அது இருக்கட்டும்.

                      நான் கேட்டது. முதலாளித்துவம் மக்களை திருடர்களாக்கி வைத்திருப்பதை போல திருட்டு, வழிபறி, செயின்பறிப்பு, கொள்ளை, நாலு பவுனுக்காக கழுத்தை அறுப்பது போன்ற செயல்களை சோவியத் யூனியன் மக்களோ, செஞ்சீனத்து மக்களோ செய்திருக்கிறார்களா ? செய்திருந்தால் சுட்டி கொடுங்கள். அல்லது ஏன் அந்த மக்கள் அப்படி செய்யவில்லை, ஏன் இந்த மக்கள் (முதலாளித்துவ சமூகத்தில்) அப்படி செய்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

                    • ///அமெரிக்காவில் பிரைவேட் கம்பெனி இருக்கிறதா (அங்கு 100% எல்லாமே தனியார் துறைதான் நன்பரே) போன்ற திரியின் சப்ஜக்டுக்கு (ஆயுதபோராட்டம் சரியா என்பது) சம்பந்தமற்ற கேள்விகளுக்கு பதில்கூறி அர்த்தமற்ற வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட விரும்பவில்லை.///

                      நான் இப்படி கேட்கவில்லையே சரவணன். எப்படி முதலாளியாவது என்கிற சூட்சுமம் தெரிந்த நீங்க ஏன் இன்னும் முதலாளியாகாம கூலிக்கு வேலை செய்றீங்கன்னு தான் கேட்டேன்.

                      இப்படி இப்படியெல்லாம் செஞ்சா முதலாளியாகிடலாம்னு சொன்னா அப்படி சொன்ன நீங்கள் தான் முதலில் அதை செய்து காட்ட வேண்டும். இந்த தத்துவத்தை உருவாக்குன நீங்க ஒரு முதலாளிக்கிட்ட வேலை செய்வீங்க ஆனா மத்தவங்க எல்லாம் உங்க தத்துவத்தை பின்பற்றனும்னா என்ன நியாயம்னு கேட்கிறேன் ?

                • ///வேலையில் நல்ல சம்பளம் கிடைத்துவருவதால் சொந்தத் தொழிலில் எனக்கு ஆர்வம் இல்லை.///

                  என்னங்க கேபிடலிச்ட் எழுச்சிக்காக அதியமான், அமெரிக்கானு பேசிட்டு இறுதியா வந்து வேலையில் நல்ல சம்பளமுன் சொல்லிட்டிங்க. உங்க ஐடியா+உழைப்பை பயன்படுத்தி ஒரு தொழில் தொடங்க வேண்டியது தானே. மாசம் ஆனா 31 சம்பளம் வாங்கிட்டு 5ஆம் தேதிக்குள் வங்கி கடனுக்கு இ எம் ஐ கெட்டனும் இல்லை என்றால் கார்ப்பிரெட் வங்கிகள் கழுத்தை நெரிப்பார்கள் என்ற பயம்மா. வாழ்கையில் இந்த ரிஸ்கு குட எடுக்க பயப்புடுறிங்க அந்த அளவுக்கு கன்சியுமரிசம் உங்களை அடிமை படுத்தியுள்ளது.நீங்க என்னடான கமியூனிசம் சர்வாதிகாரமுனு பேசிரிங்க ஐய்யா நீங்க இப்போ வாழ்வது தான் கார்ப்பிரெட் சர்வாதிகாரம்

        • மாவோ போராளிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று எதை வைத்து உறுதியாக சொல்கிறேர்கள்? மக்கள் ஆதரவு இல்லை என்றால் 30க்கு வருடங்களுக்கு மேலாக ஆவர்களாள் போராட முடியாது. இந்திய ஊடகங்கள் ஏழுதுவதை வைத்து பேசாதிர்கள்.
          கூடங்குளம், முல்லைப்பெரியாறு பற்றிக் குறிப்பிட்டதற்கு காரணம் நீங்கள் போர்குனம் பற்றி பினாத்தியதர்காக அதை முற்றிலுமாக மாற்றி உங்கள் லாபர்திற்கு எற்ப மாற்றாதிர்கள்.
          போராட்டத்தை எப்போழுது ரொமான்ச் என்று கூறிநீர்களோ அப்போழுதே தெரிகிறது போராளிகளையும் போராட்டத்தையும் எந்த பார்வையில் பார்கிறேர்கள் என்று.

          • ///மாவோ போராளிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று எதை வைத்து உறுதியாக சொல்கிறேர்கள்? ///

            மக்கள் ஆதரவு இல்லை என்று நான் எங்கும் கூறவில்லை. அரசை எதிர்க்கும் ஆயுதப்போராட்டங்கள் இன்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பதையே சுட்டிக்காட்டியுள்ளேன். எந்தப் போராளிக்குழுவும் அரசாங்கத்தின் ஆயுத, இராணுவ பலத்துக்கு ஒருநாளும் ஈடாக முடியாது. தம்மாத்துண்டு நாடானா இலங்கை அரசுக்கே அவ்வளவு இராணுவ பலத்தை (சர்வதேச உதவியுடன்) திரட்டிப் புலிகளை ஒன்றுமில்லாமல் செய்ய முடியும்போது, இந்திய அரசு பற்றிக் கேட்க வேண்டுமா?

            கிஷன்ஜி சுயநலமின்றி, மக்களுக்காகப் போராடியிருக்கலாம், பயன் விளைந்ததா என்கிறேன்.

            ம.க.இ.க, பு.மா.இ.மு. போல ஆயுதமின்றி, சமாதான வழியில் ஆர்ப்பாட்டம், அறப்போராட்டம் நடத்தலாமே!

            • “மக்கள் ஆதரவு இல்லை என்று நான் எங்கும் கூறவில்லை. அரசை எதிர்க்கும் ஆயுதப்போராட்டங்கள் இன்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பதையே சுட்டிக்காட்டியுள்ளேன்.”

              ஜார் மன்னனை எதிற்த ரூச்சியா மக்கள் புரட்ச்சி, குயுபா, சீனா,நேப்பாளம் என்று 100 வருடங்களாக அரசை எதிர்க்கும் ஆயுதப்போராட்டங்கள் வேற்றி பெற்றுதான் வருகிறது. பலம் பார்த்து போராடுவதற்கு பெயர் புரட்ச்சி இல்லை. இந்திய அரசு பற்றிக் கேட்க வேண்டாம் அனைவருக்கும் தெறியும்.

              “கிஷன்ஜி சுயநலமின்றி, மக்களுக்காகப் போராடியிருக்கலாம், பயன் விளைந்ததா என்கிறேன்.”

              தன் வாழ்நாளிலே பயன் விளைய வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் கேபிடலிச்டும் அரசியல்வாதியும். சே,கிசன்சீ போன்று மக்கள் நலனுக்காக போராடும் போராளிகள் அவ்ர்கள் காலத்திலே பயன் விளைய வேண்டும் என்று நினைத்து போராடுவது இல்லை.

              “ம.க.இ.க, பு.மா.இ.மு. போல ஆயுதமின்றி, சமாதான வழியில் ஆர்ப்பாட்டம், அறப்போராட்டம் நடத்தலாமே!”

              வஞ்சபுகழ்ச்சி வேண்டாம் சரவணன்!நான் உங்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ம.க.இ.க, பு.மா.இ.மு. வின் “ரசிகன்” அவ்வலவே.

        • கூட்டத்தின் நடுவில் நின்றுகொண்டு நான் இவர்களுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்பது கூட போராட்டத்தின் ஒரு பங்குதான். உன்னால் முடிந்ததை செய்.போராடத்தை கொச்சை படுத்ததே.

        • ///நீங்கள் ‘ரசிகர் மட்டுமே’ என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி! அதைத்தான் ஊசி செய்ய மறுக்கிறார்.///

          சமூக மாற்றத்திற்காக நிற்கும் ஒரு தோழரை ரசிகர்
          என்றழைத்து மகிழும் நடுத்தர வர்க்கத்தின் அரசியல்
          இரசனை அற்பத்தனம் அனைத்தையும் நாங்களும்
          அறிவோம் நண்பரே !

          ///ஆயுதப்போராட்டங்களை ரொமான்டிஸைஸ் செய்த காலம் முடிந்துவிட்டது.///

          இந்த தத்துவ முடிவின் மூல தத்துவம் எது சரவணன் ?
          முல்லைப்பெரியாரில் போலீசு ஆயுதங்களை வைத்து என்ன
          கொஞ்சிக் கொண்டிருக்கிறதா ? ஏகாதிபத்தியங்கள் ஏன்
          ஆயுதங்களை வாங்கி வாங்கி குவிக்கின்றன ?
          ஆளும் வர்க்கத்தின் போலீசு, இராணுவம் ஆகியவை நடத்துவதும் ஆயுதப்போராட்டம் தான் என்பது உங்களுக்கு தெரியும் தானே ?

          • /// முல்லைப்பெரியாரில் போலீசு ஆயுதங்களை வைத்து என்ன
            கொஞ்சிக் கொண்டிருக்கிறதா ? ஏகாதிபத்தியங்கள் ஏன்
            ஆயுதங்களை வாங்கி வாங்கி குவிக்கின்றன ?
            ஆளும் வர்க்கத்தின் போலீசு, இராணுவம் ஆகியவை நடத்துவதும் ஆயுதப்போராட்டம் தான் என்பது உங்களுக்கு தெரியும் தானே ?///

            கண்டிப்பாகத் தெரியும்! போலீஸ், இராணுவம் ஆகியவை அரசு அமைப்புகள். அரசு சாரா அமைப்புகள்- குழுக்கள் ஆயுதம் தாங்கி அரசை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றி பெறுவது சாத்தியமே அல்ல என்பதே நான் சொல்வது.

            • ஏன் ?

              சாத்தியமில்லைன்னு சும்மா சொன்னா போதுமா ஏன்னு விளக்குங்க சரவணன் ?

              • ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்திய இராணுவத்தின் முப்படைகளையும், சுமார் 30 மாநில அரசுகளின் போலீஸ் படைகளையும் வென்று, கம்யூனிச சர்வாதிகார அரசை நிறுவிவிட முடியும் என்று நீங்கள் நம்பினால் அப்படியே இருக்கட்டும்! இம்மாதிரி ‘மத நம்பிக்கைகளுடன்’ விவாதம் புரிய முடியாது.

                • அரசும்,ஆளும் வர்க்கங்களும் ஆயுதம் தரித்து நிற்பதையும், எந்த ஆயுதங்களுமற்று நிராயுதபாணிகளாக நிற்கும் மக்கள் தமது வாழ்வுரிமைகளுக்காக போராடும் போது அவர்களை ஆயுதங்களை கொண்டு எதிர்கொள்வதையும்,ஒடுக்குவதையும் நீங்கள் நியாயமானது என்று கருதுகிறீர்களா ?

                  அநீதியான முறையில் ஈராக்கை ஒடுக்கும் அமெரிக்க வெறிநாய்களை சகித்துக்கொண்டு வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா ?

                • பொருளாதாரத்தை இராணுவமயமாக்கி வைத்திருக்கும் அமெரிக்காவால் ஏன் ஈராக்கை அடக்கி வைக்க முடியவில்லை, ஈராக் திமிறி எழுந்து திருப்பி அடிப்பது ஏன் ? ஈராக் மக்களின் கைகளால் அமெரிக்க சிப்பாய்கள் கொத்து கொத்தாக பாலைவனங்களில் செத்து விழுவது ஏன் ? இதுவரை 6000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை ஈராக் மக்கள் கொன்றொழித்திருக்கிறார்கள், ஆயுதங்களை குவித்து வைத்திருக்கும் அமெரிக்காவால் இந்த உயிர்களை காக்க முடியாதது ஏன் ?

                  அமெரிக்காவின் முகத்தில் வியட்நாம் மக்கள் கறி பூசியதை உலகமே கொண்டாடியது. அதை ஆயுதத்தை கொண்டு தடுக்க முடியாமல் போனது ஏன் ?

                  வெறும் உலோக ஆயுதங்களை வைத்துக்கொண்டு உயிருள்ள மக்களை வெற்றிகொள்ள முடியாது சரவணன்.

                  உண்மையான ஆயுதங்கள் மக்களிடம் தான் பொதிந்து கிடக்கிறது. அத்தகைய மக்கள் அமைப்பானால் அவர்களை எத்தகைய ஆயுதங்களாலும் வெல்ல முடியாது

    • ஆயுதப் போராட்டம் நடத்தினால் தான் கம்யூனிஸ்டா ?

      ஆயுதங்களை கொண்டு வன்முறை ஆட்சி செய்யும்
      முதலாளித்துவ அரசமைப்பை இறுதியில் அதே
      வன்முறையால் தான் வீழ்த்த முடியும் என்பது உண்மையே
      ஆனால் அதை செய்ய வேண்டியது யார் ? முதலாளித்துவத்தின்
      கீழ் எந்த மக்கள் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்களோ அந்த
      மக்கள் தான், அத்தகைய திரள் திரளான உழைக்கும் மக்கள் தான்
      ஆயுதங்களை ஏந்தி முதலாளியத்தை வீழ்த்த முடியும்.
      மக்கள் திரளுக்கு மாறாக சில தனி நபர்கள் ஹீரோக்களை போல
      ஆயுதங்களை தூக்கிக்கொண்டு மக்களுக்காக புரட்சி செய்கிறேன்
      என்பதெல்லாம் சாகசவாதமே !

      மாவோயிஸ்டுகளின் நடைமுறை விமர்சனத்திற்குரியது.
      அவர்களின் தியாகத்தை உயர்த்திப்பிடிப்பது அவர்களுடைய
      தவறான வழிமுறையை ஏற்பதாகாது.

      மாவோயிஸ்டுகள் மீதான ம.க.இ.க வின்
      விமர்சனங்களுக்கு சில சுட்டிகள்

      மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் கருவிலே சிதைவது ஏன்?
      http://tamilcircle.org/index.php?option=com_content&view=article&id=3634:2008-09-05-19-53-56&catid=183:2008-09-04-19-44-07&Itemid=109

      நக்சல்பாரி புரட்சியாளர்கள் – ஆந்திர அரசாங்கம் சண்டை நிறுத்தம் – பேச்சு வார்த்தை கானல் நீர் தாகம் தீர்க்காது!
      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1684:2008-05-20-19-31-11&catid=34:2005

      • *** மக்கள் திரளுக்கு மாறாக சில தனி நபர்கள் ஹீரோக்களை போல
        ஆயுதங்களை தூக்கிக்கொண்டு மக்களுக்காக புரட்சி செய்கிறேன்
        என்பதெல்லாம் சாகசவாதமே ! ***

        **** மாவோயிஸ்டுகள் மீதான ம.க.இ.க வின்
        விமர்சனங்களுக்கு சில சுட்டிகள்*****

        மாவோயிஸ்டுகள் சாகசவாதிகளே என்று சொல்ல வருகிறீர்கள் என்றால் எனக்கு மறுப்பில்லை.

    • பாவம், யார் பெத்த புள்ளையோ, இந்த கிஷன். யாரும் இவரை ரோல் மாடலா எடுத்துக்கொள்ள முடியாது.

  4. எடுத்ததுக்கெல்லாம் பார்பன்னன்னு திட்டுவீன்களே? கிஷேன்ஜி பார்பனன் என்பதை விஷமமா என் மறைகிறீர்கள் ?

    • கொய்யா… கம்யூனிஸ்டுகளுக்கு சாதி-மதம் கிடையாது, சாதி மதம் பாராட்டறவன் கம்யூனிஸ்டு கிடையாது

      • ஜ !!! அப்ப திட்ட மட்டும் தான் பார்பான் வேணும். நல்ல போங்கு. அப்ப ரஜினி திட்ரப்ப ஏன் பார்ப்பான திட்றீங்க. நடிகன்னு திட்ட வேண்டியது தான ?

        • கொய்யா., நாங்க தானே சாதி மதம் பாராட்டுவதில்லை, நாங்கம் விமர்சிக்கும் நபர்கள் பேஷா பாராட்டறாளே 🙂

  5. நோர்த் கொரியாவை போல ஒரு வளமான எதிர்காலத்தை இந்த கம்யூனிஸ்டுகள் நமக்கு கொடுக்க இருந்த வாய்ப்பை இழந்து நிற்கிறோமே!

  6. Maoists may have started connections with CHINA in the lines of ULFA- but kishenji may be moderate leader not wanted both by new trend of harliners inside Maoists and NewDelhi ruling elites.

    What is the concern of ordinary citizens of India is, why the moderate cultural views of eastern states of India could have not accommodated in Indian political room ?

  7. பின்ன யாரை ரோல் மாடலா எடுத்துக்கொள்வது? ஆயுதபோராட்டத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு, சாதாரண மக்களை ஆயுதம் எடுத்து போராடவிடாமல் போராட்டகுணத்தை மழுங்கடித்தும், ஆங்கிலேய ராணுவத்திற்கு ஆதரவாக ஆயுதம் எடுக்கச் சொன்ன காந்தியை ரோல்மாடலாக கொள்ளலாமா? உழைக்கும் மக்களுக்கான உரிமைகளுக்கும் ஏற்றத்திற்குமான போராளிகளை எப்போதும் நீங்கள் ஏற்றிக்கொள்வது இல்லை. அகிம்சாவாதி ஆண்டர்சனை ரோல்மாடலாக வைத்துக்கொள்ளலாமா? மக்கள் தோழர் கிஷண்ஜிக்கு செவ்வணக்கம்….

  8. One positive effect of Maoist movement in chattisgarh, orissa, Jharkhand and tribal areas of West bengal is that the state govts and the union government are unable to sell the land rich in mineral resources of indian and Multi national corporations. Hundreds of MOUs signed with the corporates are yet to be realised. For that the Maoist movement has given a fitting lesson to crony capitalist indian state. Also It is the Maoists who have organised the indigenous tribal communities (Ignored by all parties including communists of different colours). While only time will tell whether maoists will realise their objective, it is the maoists who are found to be the onl viable opposition to the ruling political class-srinivasan sundaram

Leave a Reply to சரவணன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க