“விவசாய தற்கொலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும், நாட்டை ஆள்பவர்களும் இதன் மீது சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இது தொடர்பாக பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் அடிக்கடி எழுதி வருகிறார். சமீபத்திய புள்ளி விபரங்களின்படி விவசாயத்துறைக்கு அமைச்சராக இருந்தவரின் மகாராஷ்டிரா மாநிலம் வெட்கி தலைகுனியும் நிலையில் உள்ளது என்ற வகையில் தொகுப்பான விபரங்களை வெளியிட்டுள்ளார். அதை வினவு வாசகர்களுக்காக மொழிபெயர்த்து தருகிறோம்.”
கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் (கால் மில்லியனுக்கும்) அதிகமாக, இந்தியாவில் பதிவாகியுள்ள விவசாய தற்கொலைகளில் பெரும்பாலானவை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மற்றும் சட்டீஷ்கர் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது.
2010-ம் ஆண்டில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையை மேற்படி 5 மாநிலங்களில் முந்தைய வருட விபரங்களோடு ஒப்பிடுகையில் 2009-ல் 62 சதவீதமாக இருந்தது 2010ல் 66.49 சதவீதமாக உயர்ந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கிறது. 2009-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது இந்த பெரிய மாநிலங்களில் உயர்ந்துள்ள தற்கொலை எண்ணிக்கைகள் விபரம்: மகாராஷ்டிரா(+ 269), கர்நாடகா (+ 303), ஆந்திரப் பிரதேசம் (+ 111). தேசிய அளவில் உள்ள புள்ளி விபரங்கைள பார்க்கையில் கடந்த 8 வருடங்களில் விவசாயிகள் தற்கொலை என்பது சராசரியாக 30 நிமிடத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
2008-ல் 14 மாநிலங்களில் 2010-ல் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 4 மாநிலங்களில் 5 அல்லது சில எண்ணிக்கையில் குறைந்துள்ளது. அதே சமயம் 2010-ல் கீழ்காணும் மாநிலங்களில் அத்தகைய தற்கொலைகள் பெரும் அளவில் குறைந்துள்ளது. சதீஷ்கர் (-676), தமிழ்நாடு (-519), ராஜஸ்தான் (-461), மற்றும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ள மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (-158), புதுச்சேரி (-150), உத்திரப்பிரதேசம் (-108), மேற்கு வங்கம் (-61), மற்றும் குஜராத் (-65). ஆனால் ஒட்டுமொத்த நிலவரம் என்பது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.
1995-ல் முதன் முதலாக தேசிய குற்றங்கள் பதிவு அமைப்பு என்பது விவசாய தற்கொலைகளை பட்டியலிட்டது. இந்த விபரங்களில் மேற்சொன்ன 5 பெரிய மாநிலங்கள் 56.04 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருந்தது. 2010-ல் 66.49 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிராவின் கதை என்பது எச்சரிக்கையூட்டுவதாக உள்ளது. அந்த மாநிலத்தில் 1995 முதல் 2002 வரையிலான காலத்தில் 20,066 விவசாயிகள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அடுத்த 8 ஆண்டுகளில் இதே மாநிலத்தில் இந்த எண்ணிக்கை30,415 என உயர்ந்துள்ளது. பின்னால் உள்ள காலத்தை பார்க்கிற போது வருடத்திற்கு 1155 வீதம் இந்த மாநிலத்தில் மட்டும் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த காலத்தில்தான் பிரதம மந்திரி நிவாரண உதவிகள், முதலமைச்சர் நிவாரண உதவிகள் மற்றும் 2008-ம் ஆண்டு கடன் தள்ளுபடிகள் என்ற நடவடிக்கைகளுக்கு தொகைகள் அதிகம் ஒதுக்கப்பட்டது.
இந்த 14 ஆண்டுகாலத்தில் இடைவெளியே இல்லாது தொடர்ந்து விவசாயிகள் வாழ வழியில்லாமல் போன இதே மகாராஷ்டிரா மாநிலம் தனிநபர் வருவாய் கணக்கீட்டில் முதல் இடத்தை பிடிக்கும் அளவிற்கு உயர்ந்ததாகவும் சொல்லப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ 74,027 என பார்க்கும் போது மிகச் சிறிய மாநிலங்களான ஹரியானா மற்றும் கோவாவிற்கு பின்னர் இடம் வகிக்கிறது இந்த மாநிலம். மத்திய விவசாய அமைச்சர் இந்த மாநிலத்திலிருந்துதான் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, சொல்லப்பட்ட 10 ஆண்டுகளில் 6 முறை இந்த பதவி இந்த மாநிலத்தவருக்கு கிடைத்துள்ளது.
__________________________________________________
நன்றி – திரு பி.சாய்நாத், தி இந்து நாளிதழ்
தமிழில் – சித்ரகுப்தன்
___________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா?
- சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத்
- நோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்!
- பார்முலா 1 பந்தயம்:ஏழைகளின் நாட்டில் பணக்காரத் திமிர்!
- சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
- சில்லறை வணிகத்தில் வால்மார்ட்! ஆதரிக்கும் பதிவர்களுக்கு பதில்!!
- பதிவர்களோடு விவாதம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு !
- 60 கோடி அலைபேசி இணைப்புகள், இந்தியா வளர்ந்துருச்சா ?
- ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!
- இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!
- பில்லியனர்கள் வாழும் நாட்டில் ஏழைகள் இருப்பது ஏன்? – பி.சாய்நாத்
- விலைவாசி உலகத்தரமானது! பட்டினி நிரந்தரமானது!!
- பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியக் குழந்தைகள்: நாட்டிற்கே அவமானம்!
- இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?
மிகவும் வேதனையாக உள்ளது மற்றும் வெட்ககேடாக உள்ளது .
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான ஒரு பதிவு… http://natramizhan.wordpress.com/2011/01/11/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/
this is true this essay shows our post days very tragetick.
இந்திய அரசின் தாறாளமைய கொள்கையும் பன்னாட்டு நிறுவணங்களின் பொய் புரட்டும் தான் இந்த கொடுமைக்களுக்கு ஒரே காரனம். 1990களில் இந்தியாவின் பொருளாதாரத்திள் 32% பங்கிடு விவசாயத்தின் பங்கிடாக இருந்தது. அதுவே 2010யில் 15.7% குறைந்தது. 20வது ஆண்டுகளில் ஒரு நாட்டின் முதுகுஎழும்பாக இருந்த விவசாயத்தை “லிபரலைசேசன்” என்று கூறி அதை 50% குறைவாக அடித்தொழித்த இந்த இந்திய அரசு செய்த அட்டுளியங்கள் பட்டியல் இட்டால் மலைப்பு தான் வருகிற்து.
1. தரம் இல்லாத விதைகளையும், உரங்களையும், பூச்சி கொள்ளி மருந்துகளையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவணங்கள் அப்பாவி விவசாய்களின் தலைகளில் கட்டி அவர்களின் விவசாயம் செய்யும் முரையையும் தரத்தையும் மென்படுத்துகிறோம் என்று பொய் பகட்டு கூறி பாளும் கிணற்றில் தள்ளிவிட்ட பாவிகளை சிவப்பு கம்பள வறவெற்பு தருகிறது இந்த அரசாங்கம்.
2. விவசாய்களுக்கு குறைந்த சலுகைகலை குடுத்துவிட்டு அவர்களை சுரையாடும் நிறுவணங்களுக்கு சலுகைகலை வாரி வழங்கும் இந்த அரசு தேர்தல் நேரம் வந்தால் தான் இந்த அப்பாவி விவசாயிகளின் நினைப்பு வரும்.
3.75% மேற்பட்ட விவசாய தற்க்கொலை கடன் சுமை தான் காரணம் அதில் 16% 2000 முதல் 10,000 கடன் வாங்கிய விவசாய்கள். கீங் “பிச்சர்” வீமான நிறுவனம் நட்டத்தில் செல்கிறது என்று தெறிந்தவுடன் நிதி உதவி செய்ய முன் வந்த மன்மோகன் இந்த விவசாய்கள் விசயத்தில் மன்னு மோகனா இருப்பது ஏன்?
4. ஆந்திராவில் விவசாய உதவி வளையங்களில் 43 அரசு நிறுவனங்களை தனியார்மையமாக மாற்றபட்டுள்ளது. அதில் விதை மேன்பாட்டு நிலயங்களும் ஒன்று. இது யாருடைய நலனுக்காக?
5. விவசாய்களின் முந்தய விதை செகரிப்பு முரையே சிறந்தது அது இந்தியாவின் இயற்கை சுலலுக்கேற்ப இருந்ததை ஜெனிட்டிக்களி மாடிபய்டு சீட்ஸ் தயாரிக்கும் “மான்சன்டொ” போன்ற பன்னாட்டு நிறுவனங்களை அனுமதி கொடுத்து அவர்கள் இயற்கை விதைகளை முற்றிலுமாக ஒழித்து செயர்கை விதைய்களை அவர்களிடமே கொள்முதல் செய்ய செய்து அதற்கு வான்னுயர்ந்த விலையிட்டு அப்பாவி விவசாயிகளின் வாழ்வாதரத்திள் கல்லை போடும் இது போன்ற நிறுவனங்களை உள்ளே விட்ட அரசு விவசாயிகளின் சாவிற்கு என்ன பதில் சொல்ல போகிறது.
6. 2002யில் மான்சன்டொ நிறுவனம் பீடீ பருத்தியை அறிமுகம் செய்தது. அப்பொழுது அன்நிறுவனம் கொடுத்த வாக்குறுதி நம் அரசியல் கட்சிகளே வியந்தார்கள். அதாவது எக்கருக்கு 1500 கிலோ பருத்தி உற்பத்தியும் ரூ10000 லாபம் தறும் என்று பொய் கூறி ஏக்கரூக்கு 200 கிலோ உற்பத்தியும் ரூ6400 நட்டமும் விலைவித்த மான்சன்டொ நிறுவனத்தாள் 2002யில் இருந்து மொத்தம் ரூ100 கோடிக்கு மேல் நட்டம் விலைவித்து அப்பாவி விவசாயிகளை சாவதற்கு காரணமாக இருந்த இந்த நிறுவனத்தை இந்த அரசு என்ன செய்தது?