தமிழக மீனவர்: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!

தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!

சிங்கள இனவெறி பிடித்த இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஸ்டாலின் என்ற வழக்குரைஞர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடுத்த வழக்கில், “தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், அதைத் தாண்டிய சர்வதேசக் கடல் பரப்பிலும் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்குக் கடலோரக் காவல் படையினர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.  அதை இந்தியக் கடற்படை கண்காணிக்க வேண்டும்.  இந்த உத்தரவைப் பத்து நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.” என அந்நீதிமன்றம் அக்டோபர் 14 அன்று இடைக்காலத் தீர்ப்பளித்தது.  இந்தத் தீர்ப்பு வெளிவந்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் மீது 13  தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.  இதனால், நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கடலோரக் காவல்படை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!இதனையடுத்து இந்தியக் கடலோரக் காவல்படை இவ்வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் பிரமாண வாக்குமூலப் பத்திரமொன்றை  மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.  அதில், “சிங்களக் கடற்படையினர் ஒருபோதும் எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்களைத் தாக்கியதில்லை.  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதும், தடை செய்யப்பட்ட வலைகளை மீன் பிடிக்கப் பயன்படுத்துவதும்தான் இப்பிரச்சினைக்குக்” காரணமெனத் தெரிவித்திருப்பதோடு, இப்பிரச்சினைக்குத் தீர்வாக, “தமிழகத்தை ஒட்டியுள்ள இந்திய  இலங்கை சர்வதேச கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடை செய்ய வேண்டும்; இதனை மீறும் மீனவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தது.

கொலைகார சிங்களக் கடற்படையை உத்தமர்களாகவும், தமிழக மீனவர்களை கிரிமனல் குற்றவாளிகளாகவும் காட்டும் அயோக்கியத்தனம் ஒருபுறமிருக்க, பாக். நீரிணையிலும் கச்சத் தீவையொட்டியுள்ள கடற்பகுதியிலும் காலங்காலமாக மீன் பிடித்துவரும் தமிழக மீனவர்களின் பாரம்பரியமிக்க உரிமையை மறுப்பதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட இந்திய அரசு விரும்புகிறது என்பதைத்தான் இவ்வாக்குமூலம் எடுத்துக் காட்டுகிறது.  சிங்களக் கடற்படை இந்தியாவைப் பார்த்து, “நண்பேன்டா” எனக் குத்தாட்டம் போடுவது நமது மனக்கண் முன் விரிகிறது.

தமிழக  மீனவர்கள் இந்த வாக்குமூலத்தைத் திரும்பப் பெறக் கோரித் தமிழகக் கடலோரப் பகுதியெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதையடுத்தும்;  தமிழக அரசு இந்த வாக்குமூலத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததையடுத்தும் கடலோரக் காவல் படை இவ்வழக்கு தொடர்பாக புதிய வாக்குமூலமொன்றை டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்தது.

கடலோரக் காவல்படை உண்மையை உணர்ந்து, தனது தவறைத் திருத்திக் கொண்டு புதிய வாக்குமூலப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை.  தமிழகத்தையொட்டியுள்ள இந்திய  இலங்கை சர்வதேசக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற அதனின் அடாவடித்தனமான ஆலோசனையை மட்டும் நீக்கிவிட்டு, தமிழக மீனவர்களை கிரிமினல் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தீய எண்ணத்தோடுதான் அப்படையின் புதிய வாக்குமூலப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சிங்களக் கடற்படை தங்களைத் தாக்கும்பொழுது, அது பற்றி உடனடியாகத் தங்களிடமுள்ள வீ.எச்.எஃப். என்ற தகவல் தொடர்புக் கருவி மூலம் கடலோரக் காவல்படைக்குத் தமிழக மீனவர்கள் தகவல் கொடுப்பதில்லை.  ஆனால், சிங்களக் கடற்படை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லும் ஒவ்வொரு முறையும் எங்களுக்குத் தகவல் தருகிறார்கள் எனக் கூறும் காவல்படை, கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபருக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 17,102 படகுகள் எல்லைதாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்திருப்பதாக சிங்கள அரசு கூறி  வருவதையே தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்கிறார்கள் என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகக் காட்டியிருக்கிறது.

தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாகவே ஒப்புக் கொள்வோம்.  இக்‘குற்றம்’ பற்றி கடலோரக் காவல்படைக்குத் தகவல் கொடுக்கும் சிங்களக் கடற்படை, அம்மீனவர்களைக் கையும்களவுமாகப் பிடித்து கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்காமல், அடித்துத் துரத்துவதையும் சுட்டுக் கொல்வதையும் எந்தச் சட்டம் நியாயமென்று கூறுகிறது?  இந்திய  இலங்கை கடல் எல்லையில் 24 மணி நேரமும் ரோந்து வந்து கொண்டிருப்பதாகக் கூறும் கடலோரக் காவல் படை, சிங்களக் கடற்படை தகவல் கொடுத்தவுடனேயே விரைந்து சென்று தமிழக மீனவர்களைக் கையும் களவுமாக இதுவரை ஒருமுறைகூடப் பிடித்ததில்லையே?  தமிழக மீனவர்களுக்கு எதிராக கடலோரக் காவல்படை காட்டும் ‘ஆதாரங்கள்’ குறித்து இவை போல பல கேள்விகளை நீதிமன்றத்தில் எழுப்பினால், அப்படை அசடு வழிய நிற்கத்தான் முடியும்.

சிங்களக் கடற்படை எல்லை தாண்டிவந்து தமிழக மீனவர்களைத் தாக்கியிருக்கும் சம்பவங்கள் ஏராளம் உண்டு.  சிங்களக் கடற்படையினரின் அக்கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கும் நோக்கத்தோடுதான் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்வதாக ஊதிப் பெருக்குகிறது, கடலோரக் காவல்படை.  1974  இல் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்குத் தடையேதும் கிடையாது என ஒருபுறம் சொல்லிக்கொண்டு, இன்னொருபுறம் அந்தப் பகுதியில் மீன் பிடிப்பதை எல்லைத் தாண்டிச் செல்லும் கிரிமினல் குற்றமாகக் காட்ட முயலுவது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனமாகும்.

தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!தமிழக மீனவர்கள் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் அது பற்றி தமிழக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.  இந்திய அரசு இப்புகார்கள் பற்றி எந்தவிதமான மேல்நடவடிக்கையும் எடுக்காமல் குப்பையாகப் போட்டு வைத்திருப்பதை மறைத்துவிட்டு,  தமிழக மீனவர்கள் தம் மீதான தாக்குதல் பற்றி புகார் கொடுக்காமல், ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என அபாண்டமாகப் பழி போடுகிறது, கடலோரக் காவல்படை.  தமிழக மீனவர்கள் தாங்கள் தாக்கப்படுவதையும், சகோதர மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும், தமது படகுகளும், வலைகளும், பிடித்து வைத்திருந்த மீன்களும் நாசப்படுத்தப்பட்டதையும் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில்லையென்றால், இந்திய அரசு இது போன்ற சம்பவமே நடக்கவில்லை என்றல்லவா சாதித்திருக்கும்?

500  க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு, அது குறித்த விசாரணைகூட நடக்காத நிலையில், அவ்வாறு கொல்லப்படுவதற்குத் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டுவதுதான் காரணமென்றும், எனவே அதனைத் தடுப்பதன் மூலம்தான், அதாவது தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைப் பறிப்பதன் மூலம்தான் இப்படுகொலைகளைத் தடுக்க முடியும் என்ற இந்திய அரசின் வாதம், அதன் நயவஞ்சகத்தை மட்டுமல்ல, இந்திய ஆளும் கும்பலின் தமிழின வெறுப்பையும் எடுத்துக் காட்டிவிட்டது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

22 மறுமொழிகள்

  1. வயறு எரியுதுங்க! பத்திட்டு எரியுது! இந்த நாதாரிங்க சம்பளம் வாங்க, குடிச்சிட்டு கூத்தடிக்க மட்டும் நாம வரி கட்டனுமாம், வெட்கமில்லாத நாய்களா! இத்தனை நாளா காவல் காத்து என்னத்தடா புடுங்கினீங்க? தம்மாத்தூன்டு நாட்ட கேள்வி கேக்க முடியல,நீங்க தான் வல்லரசு நாட்டின் கடல் படையா? என்னைக்காவது உழைத்து பத்திருக்கிரீங்களாடா? தமிழ் மீனவன் என்ன இரன்டாம் தர குடிமகனா? ஒரு சிங்கையோ, ஷர்மாவையோ, மேனனையோ, ரெட்டியவோ கை வச்சிருந்தா இன்னேரம் அவன விட்டுருப்பீங்களா? இசக்கியும், அந்தோனிசாமியும் , குப்பனும், சுப்பனும் உங்களுக்கு மயிருக்கு சமமா? நீங்க காவல் படையா இல்ல கூட்டி குடுக்குர படையா?

  2. ஆஸ்டெரெலியாவில் குஜூராத்தியர்களும், பஞ்சாப் சிங்குகளும் தாக்கப்பட்டவுடன் கொதித்து எழுந்து அந்நாட்டு அரசுடன் மாங்கு மாங்கு என்று பேசியும் எதிர்பையும் காட்டிய இந்திய அரசாங்கம் தமிழக மக்கள் என்றால் எப்பொழுதும் இலக்காரமே. ரூச்சியாவில் பகவத் கீதையை தடை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு நிதிமன்றத்தில் வலக்கு பதிவு செய்தவுடன் ஆகாயத்துக்கும் பூமிக்கும்மாக குதித்த இந்திய ஊடகங்களும், இந்திய அரசும் சிங்கள அரசாங்கதிடம் மன்டியிட்டு தமிழர்களை காவு கொடுப்பது தான் இந்திய ஒருமைப்பாடா?. கூடங்குளத்தின் அனு மின் நிலையத்தை நடைப்பாட்டில் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று அம்மக்களுக்கு எதிராக அனைத்து பணிகலையும் முடிக்கிவிடும் இந்த அரசு தமிழ் மக்களின் பாதுகாவலர்கலா? அனு விபத்து எற்ப்பட்டால் சாவது தமிழன் தானே. முல்லை பெரியார் அனை விவகாரத்திளும் பொய் பகட்டான கேரள அரசை ஆதரிக்கும் இந்திய அரசு தமிழர்களுக்காக என்ன நன்மை செய்தது. உச்ச நிதிமன்றத்தின் அனையை மயிர் அளவுக்குட மதிக்காத கேரள அரசை எதுவும் செய்ய முற்படாத இந்திய அரசும் தமிழர்களின் வாழ்வாதரத்தை அனைத்து தரப்பிலும் அடித்தொழிதப்பதற்காக செயல்படும் இவர்கள் பேசுவது ஜனநாயகமா?. விழ்வது நாமயினும் வாழ்வது தமிழும் தமிழினமும் ஆகட்டும்.

  3. Hi idiots..
    Fishing is an occupation..just like agriculture,farming, cattle rearing etc.. why should we heed to hundreds of fishermen? Is there really any use of them to our country? do they pay tax? They get diesel subsidy, cash for the days where they cannot fish, free food, free medicine, free education with a laptop and what else they need?? Only fishermen from Rameswaram and nearby areas get shot, because these fishermen go beyond our border.. it is natural for any country to protect our borders..

    does vinavu knows that we have 821 fishermen from other countries logged in Indian prisons and nearly 68 killed last year in sea!! Countries protect their borders and they don’t mind whether the intruder is a fishermen or a gentlemen.. Don’t shout like dogs and do your work… this will cease one day like the Eeelam issue… Complete Washout…Jai Hind

    • //do they pay tax?//

      ஆம்.

      //what else they need??//

      உயிர்.

      //68 killed last year in sea!!/

      யாரு? யாரை?

      //Countries protect their borders//

      சிங்கள எல்லையில் அவன் நிற்கிறான். இந்திய எல்லையில் நீ என்ன செய்கிறாய். சிரைத்துக் கொண்டிருக்கிறாயா?

      • இந்தியன் ன்னு பேர் சொல்லுறவன் பெரும்பாலும் அயோக்கிய பசங்க. எல்லா உண்மையும் மறைச்சு இறையான்மை பேசுவானுங்க.

    • ஐயாஇந்தியரே வருமான வரிபாக்கியில் 90 சதத்தை வெறும் பத்து பேருதான் வைச்சிருக்காங்களாம்.அவனெல்லாம் சுகபோகமா வாழும்போது நமக்கு சத்தான மீனையும் நாட்டுக்கு அந்நிய செலாவணியையும் ஈட்டி தரும் மீனவர்களால் என்னபயனா?மனுசனாய்யா நீ?

  4. மீனவர்களைக் காப்பாற்ற வக்கில்லாதபோது அணு ஆயுதங்கள் இருந்து என்ன பிரயோசனம்? இந்திய அரசு இலங்கை மீது போர்ப்பிரகடனம் செய்து, தனது கப்பல் படையைக்கொண்டு ஒரே மத்தியானத்தில் இலங்கையின் கப்பல்படைகளையும், கப்பல்துறைகளையும் சின்னாபின்னப் படுத்தவேண்டும் என்பதுதான் தமிழர்களின் எதிர்பார்ப்பு. இதை இந்திய அரசு செய்யவில்லை என்றால் தேச ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவதில் அர்த்தமில்லை.

  5. ம.மோ.சி, ப.சி எல்லா சிக்கும் தமிழர்களுக்கு ஆதரவா ஏதாச்சும் சொன்னாலோ செஞ்சாலோ சோனியா அம்மையாருக்கு ஆவேசம் வந்துடும்ன்னு பயம். தமிழ் நாடு இந்தியக் குடியரசில் இருப்பது அம்மையாருக்குப் சுத்தமா பிடிக்கல்லைன்னு தோணுது.

    • ஆனால் தமிழனோட உழைப்பு,அறிவு,திறமை,வரிப்பணம்…இதெல்லாம் மட்டும் வேணுமா?

      • அதல்லாம் ஒரு பொருட்டேயல்ல! கூட்டணிக்கு ஓட்டுப் போட இன்னும் ஆட்கள் இருப்பதால் சகிச்சுக்கிட்டுருக்காங்க.

  6. இந்திய அரசு தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றுநன்றாக தெரிந்தும் அதற்கான ஒரு போராட்டம் வலுவாக உருவாகமலிருப்பது எதை காட்டுகிறது என்பதை என்னால் கொஞ்சம் கூட உணர முடியவில்லை

  7. அப்துல் கலாமின் ‘இந்தியா வல்லரசு’ கனவுதான் தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையின் கொலைவெறித் தாக்குதலுக்கு மிக முக்கியக் காரணம். கனவு பலிக்க வேண்டுமானால் கடலில் மீனவன் உலவக்கூடாது. இந்தியாவின் வல்லரசுக் கனவுக் கோட்டையின் தெற்கு மதிலைப் பாதுகாக்க இந்தியாவால் அமர்த்தப்பட்ட சிங்கள ‘வாட்ச்மேனி’டமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

    எல்லை தாண்டவில்லை என்றாலும் இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும்.

    இந்தியாவின் வல்லரசுக் கனவை கலைக்காத வரை தமிழக மீனவனுக்கு பாதுகாப்பில்லை. வெறுமனே சிங்களவன் மீது இனவெறி கொள்வதனால் மட்டுமே தமிழக மீனவனை பாதுகாத்துவிட முடியாது.

    • //இந்தியாவின் வல்லரசுக் கனவுக் கோட்டையின் தெற்கு மதிலைப் பாதுகாக்க இந்தியாவால் அமர்த்தப்பட்ட சிங்கள ‘வாட்ச்மேனி’டமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?//

      இதையே சிங்களன் உல்டாவாக சொல்லிகொண்டு திரிவது உங்களுக்கு தெரியுமா? எனக்கென்னவோ அவன் தான் உண்மையை சொல்றானோன்னு தெரியுது…!!!

  8. கொலைவெறி தனுஷீக்கு மன்மோகன் விருந்து.தமிழ்தாட்டில் முல்லைபெரியாறு கூடங்குளம் மீனவர் மீதான தாக்குதல் ஆகிய பிரச்னைகளுக்காக மக்கள் கொதித்தெழுந்து போராடிக் கொண்டிருக்கும் போது அதை பற்றி வாயே திறக்காத பிரதமர் கொலைவெறி பாடலை பாராட்டினாராம்.வயிறு எரிகிறது.என்ன பொறப்புய்யா அந்த ஆளு தமிழகத்துக்கு வந்துட்டு பாடம் கத்துக்காம போயிட்டானே ஆனா கத்துகொடுத்தே ஆகணும்.ஏன்னா கத்துக்கொடுக்கும் இனம் தமிழினம்.

  9. புரட்சிக் குணத்தை இழக்கும் சமூகம் உருப்படாது.
    அமைதிப்பூங்கா அழியாதவரை நீதிக்கு வழியில்லை.

  10. Hello selfish Indiyan!
    உங்களுக்கு மனித உணர்வு சுத்தமாக இல்லையா?எல்லை தாண்டி மீன் பிடிப்பது உலகத்தில் உள்ள எல்லா மீனவர்களும் செய்வதுதான்!சர்வ தேச கடல் எல்லை என்று கடலில் எந்த பெயின்டாலும் கோடுபோட்டு வைக்க முடியாது!மீறி சென்றால் எச்சரித்து அனுப்புவது,கைது செய்து பின் அந்தந்த நாட்டு கடற்படையிடம் ஒப்படைப்பதுதான் வழக்கம்.

    கொடூரமாக சித்ரவதை செய்வது,சுட்டுகொல்வது,சொல்லவெமுடியாத அளவு பாலியல்ரீதியான சித்ரவதை செய்வது போன்றவை சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு செய்யப்படுகிறது!

    அப்பாவையும்,மகனையும் புணரவைத்து பார்த்து துன்புறுத்தியது சிங்கள கடற்படை-இது இனவெறியின் உச்சம் இல்லையா? இந்தியா,இலங்கை கிரிக்கட்டில் இந்திய வெற்றியை சகிக்காமல் மீனவர்களை பிடித்து கொண்டு போய் மிக கொடூரமாக சித்திரவதை செய்து கொன்று போட்ட செய்தி பத்திரிக்கைகளில் படித்ததில்லையா?

  11. good article. but you have not gone in to the reason why the srilankans are so audacious in their approach towards indian fishermen. it is simple. the srilankans are armed with the confession of kumaran padmanathan,the LTTE’s arms procurer,who should have named the indian politicians name who were involved in the rajiv murder case.further there is nobody is there to question the central govt why it is not arresting chandrswamy, who the cbi says had funded the LLTE to eliminate rajiv and nobody is asking for the arrest of kumara padmanathan.i filed a PIL in madras high court in jan 2011 asking for investigation by NIA into the killings of indian fishermen.The high court ordered notices.since then there is no firing on indianif fishermen.yes they are harassing and attacking fishermen but no firing.no tamil leader has paid any attention to this. leave alone seemaan threatened advaocate you have referred not to take up fishermen issue.my advocate also failed to pursue the case.

  12. The central govt is insensitive to all the issues which threaten the country and they doubly insensitive to the issues concerning tamils issue because of rajiv case.

  13. […] சூடு நடந்திருக்குமேயொழிய, சிங்கள ராணுவத்தைப் போல வெறிகொண்டு நிகழ்த்தியிருக்க […]

  14. […] சூடு நடந்திருக்குமேயொழிய, சிங்கள ராணுவத்தைப் போல வெறிகொண்டு நிகழ்த்தியிருக்க […]

Leave a Reply to Indian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க