Monday, October 14, 2024
முகப்புகட்சிகள்காங்கிரஸ்குஜராத்: மோடியின் கொலைக்களம்!

குஜராத்: மோடியின் கொலைக்களம்!

-

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ  தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர்.  அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது.  அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலிமோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!இம்‘மோதல்’ கொலை சம்பவம் நடந்தவுடனேயே, அதன் உண்மைத் தன்மை குறித்து மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.  “தனது மகள் தீவிரவாதி கிடையாது; ஏழ்மையில் வாடியபோதிலும் படித்து ஆசிரியராக வேண்டும் எனக் கனவு கண்ட பெண்; குடும்பத்தின் வறுமை காரணமாகக் கல்லூரியில் படித்துக்கொண்டே வேலைக்கும் போய்க்கொண்டிருந்த அப்பாவிப் பெண்” என அன்றே கதறினார்  இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமா.

செப். 2009இல் இவ்வழக்கை விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம், இறந்துபோன அந்நால்வரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, “இதுவொரு போலிமோதல் கொலை; அந்நால்வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முதல்நாளே மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று தீர்ப்பளித்தது. மோடி அரசோ அந்நீதிமன்றம் தனது வரம்பை மீறி நடந்துகொண்டுள்ளதாகக் கூறி, அந்நீதிமன்ற முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

இதனிடையே இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமாவும், இஷ்ரத் ஜஹானோடு சேர்த்துக் கொல்லப்பட்ட ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாத் பிள்ளையும் இப்படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று இது உண்மையான மோதல் கொலைதானா என்று ஆராய்வதற்காக, தனது கண்காணிப்பின் கீழ் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது, குஜராத் உயர் நீதிமன்றம்.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!இச்சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படுவதை ரத்து செய்யக் கோரி மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது; அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் நியமித்த புலனாய்வுக் குழு இம்‘மோதல்’ கொலை தொடர்பாக 240 சாட்சிகளை விசாரித்தது. அந்நால்வரும் ‘மோதலில்’ கொல்லப்பட்ட விதம் குறித்து குஜராத் போலீசு கூறியிருந்தவற்றை மூன்று முறை அப்படியே நிகழ்த்திப் பார்த்து, இது போலி மோதல் கொலைதான் என ஒருமனதாக முடிவுக்கு வந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய 21 போலீசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும், இப்படுகொலையின் மற்ற பின்னணிகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது, குஜராத் உயர் நீதிமன்றம்.

இஷ்ரத் ஜஹான் படுகொலை பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இந்த அறிக்கை, மோடி அரசை  மட்டுமல்ல, மத்திய அரசையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், “அந்நால்வரும் லஷ்கர்  இ  தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வருகிறார்கள்” என மோடி அரசுக்கு உளவுத் தகவல் கொடுத்தது ஐ.பி என்ற மைய அரசின் உளவுத்துறைதான். தற்போது இது போலி மோதல் கொலை என்று நிறுவப்பட்டுவிட்ட போதிலும், “நடந்ததது போலி மோதல் கொலையாக இருக்கலாம். ஆனால், கொல்லப்பட்டவர்கள் நால்வரும்  தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற மத்திய உளவுத்துறையின் தகவலை உயர் நீதிமன்றம் மறுத்துவிடவில்லை” என்று கூறி மோடி அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார், மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை.  அது மட்டுமின்றி, “இஷ்ரத் ஜஹான் பல விடுதிகளில் வெவ்வேறு ஆண்களோடு சேர்ந்து தங்கியிருந்ததாக”க் கூறி அப்பெண், ‘நடத்தை கெட்டவள்’ என்று சித்தரிப்பதன் மூலம் உளவுத்துறையை நியாயப்படுத்த நரித்தனமாக முயன்றுள்ளார்.

இஷ்ரத் ஜஹானின் குடும்பம் இப்பொழுது தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ரா பகுதியில் குடியிருந்து வருகிறது.  இஷ்ரத்தின் சகோதரன் அன்வரைத் தவிர, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாமல் இடையில் நின்றுவிட்டார்கள்.  அதற்கு அக்குடும்பத்தின் வறுமை மட்டும் காரணமில்லை.  குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு முன்பாகவே, இஷ்ரத் முசுலீம் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டுவிட்டதால், அக்குடும்பம் சமூகத்துக்கு அஞ்சி ஒதுங்கி வாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. இஷ்ரத் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவரது குடும்பம் கடந்த ஏழாண்டுகளில் ஐந்து முறை வீடு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறது.  “இத்தீர்ப்பு வரும் வரை நாங்கள் நரக வேதனையை அனுபவித்தோம்” என்கிறார், இஷ்ரத்தின் தாயார் ஷமிமா. வறுமையோடு அக்குடும்பம் போராடுவதைப் பார்த்தாலே, இஷ்ரத்தின் மீது அவதூறு செய்வதற்கு யாருக்கும் நா எழாது.

குஜராத்தில் நடக்கும் மோடியின் ஆட்சியை அலசிப் பாரத்தால்தான் இஷ்ரத் ஜஹான் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பின்னணியையும், அதன் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியும்.  குஜராத் இனப்படுகொலை நடந்துமுடிந்த அடுத்த ஆண்டு, மார்ச் 26, 2003 அன்று மோடிக்கு நெருக்கமானவராக இருந்தவரும், அவரது அரசில் வருவாய்த்துறை இணை அமைச்சராக இருந்தவருமான ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் நடுவீதியில் காருக்குள்ளே இறந்துகிடந்தார்.  ஹரேன் பாண்டியா முசுலீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பீதி கிளப்பிய மோடி அரசு, இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து நடுநிலை நாடகம் ஆடியது.  இப்படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 12 முசுலீம்களையும் கீழமை நீதிமன்றம் பொடா சட்டப்படி தண்டித்தது.  எனினும், குஜராத் உயர் நீதிமன்றம், அந்த 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனக் கூறித் தண்டனையை ரத்து செய்துவிட்டது.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!ஹரேன் பாண்டியாவைக் கொன்றது யார் என்ற மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றாலும், மோடி கும்பலுக்கு நெருக்கமானவனும் இராசஸ்தானிலுள்ள கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவனுமான சோராபுதீனுக்கும் பாண்டியாவின் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.  2005 ஆம் ஆண்டில் இந்த சோராபுதீன் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மாநில போலீசாரால் போலி மோதலில் கொல்லப்பட்டான்.  சோராபுதீனோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார்.  ஹரேன் பாண்டியா கொலையில் தொடர்புடையவனும்; சோராபுதீன், அவரது மனைவி கவுசர் பீ கொலைகளின் சாட்சியாகக் கருதப்படுபவனும் சோராபுதீனின் கூட்டாளியுமான துளசிராம் பிரஜாபதி 2006  ஆம் ஆண்டு குஜராத் மாநில எல்லையருகே போலி மோதலில் கொல்லப்பட்டான்.  சோராபுதீன் மற்றும் பிரஜாபதி கொலைகளைப் பற்றி அறிந்திருந்த மற்றொரு சாட்சி அஜம் கானைச் சுட்டுக் கொல்ல நடந்த முயற்சியில் அவன் நல்வாய்ப்பாகத் தப்பிவிட்டான்.  அதன் பின் அஜம் கான் உயிர் பயம் காரணமாக சோராபுதீன் கொலைவழக்கில் பிறழ்சாட்சியாக மாறினான்.  இந்தப் பின்னணியில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் படுகொலையையும், அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்படுவதையும் வைத்துப் பார்க்க வேண்டும்.

இஷ்ரத் ஜஹான் படுகொலையைப் போலவே, சோராபுதீன் கொலையும் போலி மோதல்தான் என்பது நிரூபணமாகி, அதில் தொடர்புடைய டி.ஐ.ஜி. டி.ஜி. வன்சாரா, உதவி ஆணையர் நரேந்திர அமின் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த போலீசு அதிகாரிகள் கும்பல்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரையும் போலி மோதலில் கொன்றொழித்தது.  சோராபுதீன் கொலையில் தொடர்புடைய, மோடி அரசில் அமைச்சராக இருந்த அமித் ஷா பிணையில் வெளியே வந்துவிட்டாலும், அவர் குஜராத்திற்குள் நுழையக் கூடாது என உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஹரேன் பாண்டியாவின் கொலையில் அரசியல் பின்னணி உள்ளது என்று அவரது தந்தையே குற்றம் சாட்டி வந்தார்.  ஹரேன் பாண்டியா, குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில், அப்படுகொலையில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து சாட்சியம் அளித்ததுதான் பாண்டியாவின் கொலைக்கான அரசியல் பின்னணி.  இது போலவே, குஜராத் இனப்படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கின் முக்கிய சாட்சியான நதீம் அகமது சையதும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பங்கு குறித்து அம்பலப்படுத்த முன்வந்துள்ள போலீசு அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா உள்ளிட்ட பலரை, சாமானியர்களைப் போலப் போட்டுத் தள்ள முடியாததால், அந்த அதிகாரிகளைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்வது, பொய் வழக்குப் போடுவது என மிரட்டி வருகிறது, மோடி கும்பல்.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!குஜராத்தை ஆண்டு வரும் மோடியின் தலைமையிலான கிரிமினல் கும்பல் எத்தனை கொடூரமானது என்பதை இந்த விவரங்களிலிருந்து யாரும் புரிந்து கொள்ளலாம்; அக்கிரிமினல் கும்பலின் தலைவனான நரேந்திர மோடியை அப்பழுக்கில்லாத உத்தமனாகவும், பிரதமர் பதவிக்குத் தகுதியுள்ளவனாகவும் முன்னிறுத்து கின்ற பத்திரிகைகள், தரகு முதலாளித்துவக் கும்பலின் யோக்கியதையையும் புரிந்து கொள்ளலாம்.

இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுவிட்டாள். அவள் தீவிரவாதியா, இல்லையா என்று விசாரணை நடக்கிறது.  மோடி என்ற இந்து மதவெறிக் கொலைகாரனைத் தண்டிப்பதற்குத் தேவைக்கும் அதிகமான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தண்டனைதான் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

  1. it is public knowledge in Mumbra near Mumbai,that all these 4 were genuine mujahideen operatives,as usual the pseudo secular mafia does random investigation and comes up with desired results.

    • It is the court after carefully examining more than 240 witnesses came up to the conclusion that Ishrat’s was a fake encounter and not the secularists. A person who has the love for the mankind and believes in justice will not have the gumption to call the democrats as pseudo secular mafia. I think you too might have involved in perpetrating the act of such violence against the weaker sections of the society or waiting for an opportunity to do it somewhere.

    • //it is public knowledge in Mumbra near Mumbai//

      From when did this mujahideens start plotting operations publicly. Do you have any proof to support your point. Or is it just the same brahminical hindu fundamentalistic ‘diarrhea’?

  2. அணுமின நிலையம் அமைத்து சுற்று புறங்களை அழிக்காமல் சூரிய ஒளி மின் சக்தியை ஊக்கிவிகும் மோடி கொலை காரர்தான்!என்ன இருந்தாலும் மத சார்பற்ற மாயாவதி அளவுக்கு ஆட்சியை யாரும் தந்துட முடியுமா என்ன?

  3. அப்பாவி மக்கள் மீது தீவிரவாத முத்திரைகுத்தி கொன்றொழிக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் யாவரும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பவேமுடியாது,இது நிச்சயம்

  4. u assume too much mr,sukhdev,dont go into a facade.I know how the Congress makes a living out of manipulating public institutions.If u r too naive to see through it,i am not worried.

  5. இந்த சூனியகாரன் அயோக்கியன் நாட்டின் பிரதம் மந்திரயா வந்தால் அவ்வளவுதான் ஒற்றுமையாக இருக்கும் மக்களை பிரிதாழும் சூழ்ச்சி செய்து நாட்டை சுடுகாடா ஆக்கி விடுவான். மக்களே எவனை நீங்கள் ஆட்சியிலே அமர்த்தினாலும் இந்த மோடி படுவாவை மட்டும் கொண்டு வந்து விடாதீர்கள் அண்ணன் தம்பிகளாக பழகும் மக்களை பிரித்து அப்படி என்னத்த சாதிக்க போறான்னு தெறியல.

  6. Modi ll be a great Prime Minister.Country’s bureaucracy will be more efficient,Common people regardless of differences can experience a better governance and infrastructure projects ll happen at a much greater pace and overall the country ll forge ahead.

      • Fact: Hitler மிக சிறந்த ஆட்சியாளர் தான். ஆட்சி பொறுப்பேற்று (சர்வாதிகாரி ஆன பின்) இரண்டே வருடத்தில் பஞ்சத்தின் பிடியில் இருந்த Germany ஐ மீட்டு நான்கு வருடத்தில் வல்லரசாக மாற்றினார்.
        யூத எதிர்ப்பு இல்லாமல் அவரால் மக்களிடையே செல்வாக்கு பெற முடியாமல் போயிருக்கும், இந்திய நாடு அரசியல் வாதிகள் போல மேலேரியவுடன் கொடுத்த வாக்குறிதிகள் மறக்க அவரால் முடிந்து யூத அழிப்பை விட்டிருந்தால் இன்று சரித்திரத்தில் உச்சியில் இருந்திருப்பார்.
        யூத எதிர்ப்பு எப்படி அவரை மேலேற்றியதோ அதுவே அவரின் அழிவுக்கும் காரணமானது.
        PS: இது Hitler பற்றிய fact மட்டுமே. கட்டுரைக்கு சம்பந்தமில்லை.

        • //இது Hitler பற்றிய fact மட்டுமே. கட்டுரைக்கு சம்பந்தமில்லை.//

          கட்டுரைக்கும் இதுக்கும் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றன. அதைத் தான் நான் மேலே குறிப்பிட்டேன்.

    • மோடி வித்தை பற்றி வினவிலேயே பல கட்டுரைகள் வந்த்துவிட்டது சும்ப்ரமணியன்வாள்…. ஜலத்தை குடிங்கோ…ஜலத்தை குடிங்கோ…!!!

    • It seems you are the PA of Modi. With what proof you are saying he is best prime minister. Every year Gujarat GDP growth is lesser than Tamilnadu itself. Have you seen Gujarat? There are many states more developed than gujarat. One reason enough for him that he is not fit for PM is the 2002 riot.

  7. திருவாள்ர் சு..மணியன் அவர்களே, மோடியால் குஜராத் கொலைக்களமாகி இருக்கிறது என்று சொன்னால், அந்த குற்றவாளியை பிரதமராக்கி இந்தியாவையே கொலைக்களமாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களே.நீங்களும் மோடியைப் போல நரமாமிசம் சாப்பிடுபவரா? கட்டுரைக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். தேவையில்லாததை பேசி கட்டுரையின் முக்கிய கருத்திலிருந்து தடம் மாற்றாதீர்கள்

    • //திருவாள்ர் சு..மணியன் அவர்களே//
      என்ன இப்படி சுருக்கிட்டீங்க?
      அந்த ‘சு’ வுக்குள் தான் மனிதகுலத்துக்கு எதிரான ஒரு தத்துவமே அடங்கி இருக்கு.

      • அந்த ‘சு’வுக்குள் தான் மனிதகுலத்தை உருவாக்கும் பொருளும் அட்ங்கி இருக்கிறது.

  8. If you watch carefully, most of accused Muslims are convicted at the earliest; and the Hindu dominated judiciary deliberately delays to convict the Hindu accused.

  9. Incidentally today one of my co-workers, a staunch Brahmin, was explaining how Gujarat is progressing under Modi s leadership. So everywhere the Hindus are same, whatever may be the issues.

    • ஒரு கொலை குற்றவாளி வேறு உயரிய குணத்துடன் இருந்தால் அந்த உயரிய குணத்தை அனைவரும் எடுத்துகொண்டு அதே சமயம் அவன் செய்த கொலைக்காக தண்டனையும் அனுபவிக்கட்டும் என்ற நிலைபாடு எனக்கு சரியாக படுகிறது.
      மோடியின் தலைமையில் ஒரு மாநிலம் முன்னேறுகிறது என்பதை நாம் ஏன் மறுக்க வேண்டும். அவர் தீய செயல்கள் புரிந்திருக்கலாம்; அதற்காக அவருடைய சாதனைகளை ஏன் மறைக்க வேண்டும்?
      அ,ஆ முதல் Mehbooba Mufti வரை தனிமையில் மோடியை புகழ்ந்து விட்டு செய்தி public domain ல் வெளிவந்த பிறகு அதை மறுப்பதும் ஏன் ரெட்டை வேடம் போட வேண்டும்? அதற்கு பதில், மோடியின் ஆட்சியை ரசிக்கிறேன் அதே சமயம் அவரின் குற்றங்களை எதிர்கிறேன் என்பதே சரி.
      மோடியின் மேல் விசாரணை தொடரும் அதே வேலையில் அவருடைய Good practices இந்தியா முழுமைக்கும் பரப்ப வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.

      • //மோடியின் தலைமையில் ஒரு மாநிலம் முன்னேறுகிறது என்பதை நாம் ஏன் மறுக்க வேண்டும்.//

        ஏனெனில் அதில் உண்மை இல்லை.

        http://communalism.blogspot.com/2011/05/modis-gujarat-marketing-myth.html

        “The beneficiaries seem to be a small and exclusive club. Employment generation has not kept up with that in other States. Teesta Setalvad, in an article entitled “Vibrant Gujarat summit – 2011 – Ridiculous show-off of Power”, has compared the investment and employment opportunities of Gujarat, Maharashtra and Tamil Nadu. She concludes that from 2006 to 2010, Maharashtra had Rs.4,20,546 crore in investment and employment opportunities worth Rs.8,63,395; and Tamil Nadu had investments worth Rs.1,63,280 crore and employment opportunities worth Rs.13,09,613, whereas Gujarat had investments worth Rs.5,35,873 crore and employment opportunities worth Rs.6,47,631.

        Teesta Setalvad’s analysis says: “At the end of the year 2009-10 in Gujarat there were 8,32,000 educated unemployed people. Number of educated unemployed people was 9,64,000 in 2004, 9,00,000 in 2005, 8,30,000 in 2006, 7,78,000 in 2007, 8,25,000 in 2008 and in 2009 also it was 8,25,000. Now if in the year 2003, 2005, 2007 there has been capital investment as per [what the] Chief Minister says, then why there has not been any significant decrease in the number of these unemployed people?”

        • முதலாளிகளுக்கு தனது மாநில நிலத்தை அள்ளிக்கொடுப்பதற்கும் மக்களின் வரிப்பணத்தை தூக்கிக் கொடுப்பதற்கும் 2000 முஸ்லீகளின் உயிர்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் மக்களை பயபீதியில் ஆழ்த்தி தனது அயோக்கியத்தனங்களுக்கு எதிர்ப்பு வராமல் பார்த்துக்கொண்டான். குஜராத் மின்னுகிறது என்பதெல்லாம் மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றியதல்ல முதலாளிகளின் இலாப் உத்தரவாதம் பற்றியதுதான். இதனை டாடா, அம்பானி, மாருதி ஆலை முதலாளிகளின் குஜராத் பற்றிய அறிக்கைகளிலிருந்தே புரிந்துகொள்ளமுடியும்.

  10. Any place in India can become a Bloodfield.It has nothing to do with Modi/Anyone.Infact he has the most to lose by allowing/perpetrating such a riot thing.The reality is most of North India still has strong partition hangover and the hindus and muslims are highly divided.The only exception is Uttar Pradesh where many muslims were highly educated and they stayed back in India and they have good relationship with the hindus.

    It is not so easy for Modi to have orchestrated this without real street action.He did turn a blind eye but he is not such an idiot to make the compartment also catch fire and also cause the riots.The compartment was indeed set on fire to fry the karsevaks.The reaction was multiple times but once u act first u cannot determine the reaction.

    If the same thing happens in south india where there is no religious conflict,then u can be surprised and cry foul,but in north india it is a thin line of hatred and it can blow anytime.Thats the reality.

    the topic is about Modi,so i did speak on topic.

  11. இருபது கோடி முஸ்லிம்கள் வசிக்கும் இந்தியாவில், மோடியை கொலை செய்ய முயற்சித்தாக குற்றம் சுமத்தி, ஒரு 19 வயது பெண்ணை கொலை செய்ய வேண்டிய அவசியம் குஜராத் போலீசுக்கு என்பதை இந்த கட்டுரை தெளிவாக்கவில்லை. குற்றப் பின்னணி உள்ள நடுத்தர வயது (சோரபுத்தின் போல) முஸ்லிம் ஆண் ஒருவர் கூடவா குஜராத் போலீசுக்கு கிடைக்கவில்லை?

    சி.பி.ஐ விசாரணையில் எதற்காக இந்த போலி என்கவுண்டர் நிகழ்த்தப்பட்டது என்ற உண்மை வெளிவரும் என்று நம்புவோம்.

  12. //இருபது கோடி முஸ்லிம்கள் வசிக்கும் இந்தியாவில், மோடியை கொலை செய்ய முயற்சித்தாக குற்றம் சுமத்தி, ஒரு 19 வயது பெண்ணை கொலை செய்ய வேண்டிய அவசியம் குஜராத் போலீசுக்கு என்பதை இந்த கட்டுரை தெளிவாக்கவில்லை.// இத புரிஞ்சிக்க கொஞ்சம் பொதுஅறிவு இருந்தா போதும். ஒருத்தரை கொன்னு பலிகடா ஆக்குவது என்று முடிவெடுத்துவிட்டால் ஒருத்தரைத்தான் கொல்ல முடியும். 20 கோடி பேரையும் அல்ல.

    ராமுக்கு என்ன கவலையென்றால் 20 கோடி பேரையும் என்கவுண்டர் செஞ்சிட்டு விசாரணை வைக்காம இப்போவே வைச்சிட்டாங்களே என்பதுதான். ஆம் ஐ கரெக்டு ராமு?

    • 100% கரெக்ட் அகமது.
      “ஒருத்தரை கொன்னு பலிகடா ஆக்குவது என்று முடிவெடுத்துவிட்டால்”……. அதுதான் ஏன் என்பது பொது அறிவில்லாத என் மர மண்டைக்கு புரிய மாட்டேன் என்கிறது. மும்ப்ராவில் அப்பாவியாக காலேஜ் போய்கொண்டிருந்த ஒரு 19 வயது பெண்ணை, அகமதாபாத்திற்கு கடத்திப்போய் Point Blank கா சுட்டுக் கொன்று, இரண்டு பாகிஸ்தான் Fidayeen தீவிரவாதிகளுடன் சேர்த்து போட வேண்டிய காரணம் என்ன?
      ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்பற்காக மதம் மாறிய பிராணேஷ் பிள்ளை க்கும் இந்த இஷ்ராத் – பாகிஸ்தான் தீவிரவாதிளுக்கும் என்ன சம்மந்தம்?

      இதயெல்லாம் பொது அறிவில்லாத மர மண்டையன் ராம் காமேஸ்வரன் கேட்கவில்லைங்க. இந்தியாவின் முதல் இஸ்லாமிய செய்திதாள் மில்லிகாஸெட் Milligazette தான் CBI இதயெல்லாம் விசாரிக்கணம்னு கேட்பது.

      http://www.milligazette.com/news/3004-is-time-ripe-for-presidents-rule-in-gujarat

      How did Pakistani fidayeen Amjad Ali Rana and Jishan Johar, who were killed in the encounter, come to join Ishrat Jahan and Javed Sheikh?

      How did the fidayeen reach Gujarat? And when did they meet Javed and Ishrat? These are questions that beg answers.

      If Javed and Ishrat were picked up near Vasad tollnaka by N K Amin and Tarun Barot, as per the report, then where were Amjad Ali and Jishan Johar at that time. And how and when did they join them?

      சி.பி.ஐ விசாரணையில் எதற்காக இந்த போலி என்கவுண்டர் நிகழ்த்தப்பட்டது என்ற உண்மை வெளிவரும் என்று நம்புவோம்.

      • காஷ்மீரில் ஒரு எழுபது வயதான மூத்த தீவிரவாதியைக் கொன்று விட்டதாக ராணுவம் பிணத்தை போட்டோ பிடித்துக் காட்டியது. பின்னர் தான் தெரிந்தது அவர் ஒரு பிச்சைக்காரர் என்பது.

      • உங்கள் சந்தேகம் சரியானது. இதற்கு வினவிடம் பதில் இருக்கா?

  13. மோடியின் அதே மொழியை திரு. சு..மணியும் கக்கியிருக்கிறார். வினையை செய்துவிட்டு, அதை எதிராளியின் மீது சுமத்தி, அவர்களுக்கு எதிராகவே எதிர்வினையையும் நிக்ழ்த்தும் நரமோடியின் சாமார்த்தியம் புத்திசாலித்தனம் என்று போற்றுகிறார். ரயில் பெட்டியை எரித்ததிலும் அவரின் நரித்தனத்தைப் பாருங்கள். எல்லோரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள். அவரின் இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லை.
    படித்த முசுலீம்கள் உத்திரப்பிரதேசத்திலிருந்து போகாமல் அங்கேயே தங்கிவிட்டார்கள் என்று சொல்கிறார். அவர்கள் யாரும் வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வரவில்லை உங்களைப் போல்.

  14. @Raja

    Most people living in North India/Pakistan regardless of caste are in the land only for the last 1000 years and less.Infact they are the most recent immigrants to India and Modi is OBC boss,by the way.

    Ennakodumai sir ithu?

    • இமிக்ரன்ட்ஷ் என்றால் பிற நாட்டில் இருந்து குடியேறியவர்களைத் தானே சொல்வது.நீங்கள் குறிப்பிடும் முசுலீம்கள் பிறந்த இந்த நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால் நம் மூதாதையர்கள் செய்த கொடுமையால் மதம் மாறியவர்கள் என்று சொல்லலாம். இந்த 21 ஆம் நூற்றாண்டிலேயே தாழ்த்தப்பட்டவர்களை இந்த பாடுபடுத்தும் நீங்கள் அப்போது என்ன கொடுமை செய்திருப்பீர்கள்.
      மன்னிக்கவும். ரயில் பெட்டியில் உங்களைப் போன்றவர்கள் என்று சொல்வதற்குப் பதில் அவரைப் போன்றவர்கள் என்று சொல்லிவிட்டேன்.

  15. and i know for a fact that my family has been in tirunelveli for atleast 800 years.whos calling me an immigrant?Go call periyar,vaiko and those telugu naidus and naickers,they r the immigrants.

    • என்ன சு..மணி அவர்களே! ஆத்திரத்தில் நீங்களும் பால் தாக்கரே போல் ஆகிவிட்டீர்களே! இந்தியாவிற்குள் மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலூம் விரட்டி அடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே? அந்த பெரியார் போன்றவர்கள் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் நாங்கள் உங்கள் திருநெல்வேலி அக்ரகாரத் தெருவில் சுதந்திரமாக எங்களை நடமாடத்தான் விடுவீர்களா?

  16. போலி மதசார்பின்மைவாதிகளின் வாதம் இது. குஜராத் இந்திவிலேயெ முதன்மை மாநிலமாக திகல்கிறது. உலகம் முழுவதும் இஸ்லாமிய பயஙகரவாதிகளால் என்னநடக்கிறது என்று இப் பத்திரிக்கைக்குத் தெரியவில்லை போலும். எங்கு பார்த்தாளும் பயங்கரவாதம். அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். குஜராத்தில் ரயிலில் உயிரோடு 100 க்கும் மேற்ப்பட்ட அப்பாவிகள் முஸ்லீம் பயங்கரவாதிகளால் எரித்துக்கொல்லப்பட்டபோது இவர்கள் என்ன செய்து கொன்டு இருந்தார்கள். முஸ்லீம்களால் பணம் கொடுத்துநடத்தப்படும் இதுபொன்ற பத்திக்கைகள் மக்களால்நிராகரிக்கப்பட வேண்டியவை. உண்மையை சொல்லி பத்திக்கைநடத்துங்கள்.

    • //குஜராத்தில் ரயிலில் உயிரோடு 100 க்கும் மேற்ப்பட்ட அப்பாவிகள்// கொன்னது முஸ்லீம்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை. மேலும் செத்தவர்கள் அப்பாவிகள் அல்ல. கரசேவைக்கு கடப்பாறையுடன் சென்ற காவி பயங்கரவாதிகள் அவர்கள்.

      • \\கொன்னது முஸ்லீம்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை\\

        நிரூபிக்க முடியாது என்றுதானே இவ்வுளவு ஆட்டம்… இரட்டை கோபுர தாக்குதல் கூட உங்கள் மொழியில் நிரூபிக்கப்படவில்லை என்று தானே கூறுகிறீர்கள்… நிரூபிப்பது என்றால் என்ன ஜமாத்தார் முன்னாள் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டால்தான் அதை நம்புவோம் என்கிறீர்கள்… எப்படி நியாயம்? அது வரை தங்களை தாங்களே எரித்து கொண்டார்கள் என்று கூறலாமா ?

        \\மேலும் செத்தவர்கள் அப்பாவிகள் அல்ல. கரசேவைக்கு கடப்பாறையுடன் சென்ற காவி பயங்கரவாதிகள் \\

        மறுமொழி இலக்கம் 16 ல் அன்பர் ராஜா கூறியிருப்பது,
        \\ரயில் பெட்டியை எரித்ததிலும் அவரின் நரித்தனத்தைப் பாருங்கள். எல்லோரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள். அவரின் இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லை.\\

        தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் உங்களுக்கு பயங்கரவாதிகளா ? காபிர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா ?
        காஃபிர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள், கொல்லுங்கள், கொள்ளையடியுங்கள் என்ற கட்டளை உங்கள் இரத்தத்தில் ஊறி உள்ளது விளங்குகிறது…

        • ரயிலில் கரசேவகர்கள் எரிக்கப்பட்டது முஸ்லீம்களால் அல்ல என்று நிறுபிக்கப்ப்ட்டது மனிதனுக்கு தெரியாதா.நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்தும் யாரால் என்று யோசித்து பாருங்க நண்பரே

    • நாட்ராயன் அவர்களே. பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கிய பத்திரிக்கை கூற்றினையே நீங்களும் கடைபிடிக்கிறீர்களே? உலகில் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு காரணம் அமெரிக்காவின் அண்டர்கிரவுண்ட் வேலை தான் என்பது மிகவும் படித்த நீங்களே மறைக்கலாமா? குஜராத் ரயில் எரிப்பும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முசுலீம் இன அழிப்பும் நரமோடி வகையராக்களின் திட்டமிட்ட சதி என்பது இப்போது புலப்பட்டுக்கொண்டிருப்பதும் உங்கள் அறிவிற்கு புலப்படவில்லையா?
      எத்தனை முசுலீம் எதிர்ப்பு கட்டுரைகள் வினவில் வெளிவ்ந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? பணம் கொடுத்து தங்களைத் தாங்களே யாராவது திட்டிக் கொள்வார்களா?

      • அப்படியானால் ரயிலில் வந்த இந்துக்கள் மட்டும் தஙகளைத் தானே தீ யிட்டுக் கொண்டார்களா? என்ன கொடுமை இது!!!!!!!

        • //அப்படியானால் ரயிலில் வந்த இந்துக்கள் மட்டும் தஙகளைத் தானே தீ யிட்டுக் கொண்டார்களா? என்ன கொடுமை இது!!!!!!!//

          மோடி தனது நோக்கத்திற்காக இந்துக்களை காவு கொடுத்தான் என்பதுதான் உண்மை.

  17. முஸ்லீம்களுக்கு வக்கலத்து வாங்கும் நீங்கள் இந்தியாவில்நடந்த பல பயங்கர வாதஙளை நினைவு கூறுங்கள். உங்கள் பத்திரக்கையின் பெயரை “இஸ்லாம் புது ஜனநாயகம்” என்று மாற்றிக்கொள்ளூங்கள்.

  18. //நீங்கள் இந்தியாவில்நடந்த பல பயங்கர வாதஙளை நினைவு கூறுங்கள். உங்கள் பத்திரக்கையின் பெயரை “இஸ்லாம் புது ஜனநாயகம்” என்று மாற்றிக்கொள்ளூங்கள்.// இதுல பாதி குண்டுவெடிப்புகளை செய்துள்ளது ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள். இஸ்லாம் பயங்கரவாதிகளை, அடிப்படைவாதிகளை வினவு கண்டித்து எழுதியுள்ளது. நீங்கள் ஆர் எஸ் எஸை கண்டிப்பீர்களா? அவர்களை எதிரி என்று அறிவிப்பீர்களா? இல்லையெனில் உங்க பேரே ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி நாட்ராயன் என்று மாற்றிக் கொள்வீர்களா?

    • ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான்,இஸ்ரேல், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பலநாடுகளில் குண்டு வெடித்து
      அப்பாவி மக்கள் ஏராளமானபேர் கொல்லப்பட்டார்கலே. இதுவும் ஆர்.எஸ்.ஏஸ். வேலையா? ஒரளவாவது உண்மையை தெரிந்து கொண்டு எழுதுங்கள்.

  19. Today our nations Industires are being swollowed one by one by major overseas corporations. Big capital from private players are giants and they are coming for an UNEQUAL COMPETITION.
    No affordable health care,no quality free education,no infrastructure facilities for the 80 % of the population.

    RSS and other religious persons when faced with this sort of questions , in my experience wit my father (who supports BJP,RSS % Tuklak Cho & Co)will never answer the questions in a honest manner.
    I am surprised by the fact that the RSS,BJP and other religios fundementalis (Muslim & christians also) all are escaping the question of country becoming a puppet of the US and Europe Imperialism. No patience,no honest,No Perseverance is the common thing i face when i argue with the religios fundementalist. they are not open for a dialouge . if they are really open minded ,i am sure they will be one day understand how our country has been sold out and how the entire so called swadeshi parties are arrogantly silent abt it.
    regards
    GV

  20. @Paramesu

    Public knowledge needs no proof.anyway i know thats the truth,u r free to not believe in it.makes no difference to anyone.

    I know i am a kitten,u r a tiger cub.atleast i wont starve to death like a tiger would or hunted down by some alien species.

  21. //Public knowledge needs no proof.anyway i know thats the truth,u r free to not believe in it.makes no difference to anyone.//

    மிஸ்டர் பூனைக்குட்டி.
    தெஹெல்காவில் ஆர். எஸ்.எஸ், பஜ்ரங்தள், வி.எச். பி. நாய்கள் தாங்கள் செய்த கொலை கற்பழிப்புகளை பெருமையோடு சொன்ன போது, நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்துக் கொண்டிருந்தீரா?

    • ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொல்லி உண்மையாக்க முயர்சிக்காதீர்கள்!!! கோயாபல்ஸ் தத்துவத்தை உண்மையாக்க முயற்சித்தால் அவனுக்குநேர்ந்த கதி தான் உங்களுக்கும் ஏற்ப்படும்!!!!

      • டேஹெல்கா எதுவும் சொல்லல பாஸ். படுகொலைகளை செஞ்சவணுங்க அவனுங்க வாயாலேயே கொடுக்குற வாக்குமூலங்கள் தான் தொகுக்கப் பட்டிருக்கின்றன .

  22. The institution is not responsible for the recklessness of the individuals.You can apply the same logic to similar groups of other religions also.I know the institution very well and it is enormous.if i start feeling bad for every single negative act committed by India/Tamils,there ll be no end to it.

    I am not supporting VHP/Bajrang Dal or any other thing but only RSS and one more thing you are too idealistic,thats alright when you dont have power one tends to be.Let us see how things work out when you have it,if at all.

    • //The institution is not responsible for the recklessness of the individuals//
      Can you list what action was taken by the institutions (RSS, BajrangDal, VHP) against those ‘reckless’ individuals?

  23. @Raja

    I am not angry at all.And i am not saying anyone should be chased away from anywhere.And in my village(both mom n dad)those people who cant walk through the front door dont exist at all and most of my farm contracters belong to what Krishna belongs to and they can not only walk the streets,they can also come into the house.

    I dont know why most of you assume so much just by living in Thanjavur belt and think the whole world exists like that.This is my biggest problem with most of you as u r highly ignorant of the culture of the southern districts.

    • //if u read the whole tehelka article fully, u ll realise why they did what they did.//

      If you are trying to justify the genoide, can you quote which part of the Tehelka story you are refering to?

      • dont use big words like genocide and all,the real reason is the feud between the two communities and one guy clearly mentions the history of it.The only problem i have with the whole thing is killing of women and children.you can never do that howmuchever u hate anyone.

  24. 3000 சீக்கியர்களை கொன்றது,பல பத்தாயிரம் மக்கள் சாக காரனமான் டவ் கெமிக்கல்ஸ் வாரன் ஆண்டர்சன்னை தப்பிக்க விட்ட ராஜீவ்,7000 மக்களுக்கு மேல்பட்ட தமிழர்களை கொன்றது,பல தமிழச்சிகளை சிங் மக்களை விட்டு வன்புணர்ச்சி செய்ய வைத்தது ,இறுதியாக ஒரு லட்சம் தமிழனை கொன்றது!இதெல்லாம் செய்த காங்கிரஸ் மத சார்பற்றது!
    ஆனால் ஆயிரம் முசுலீம் செத்ததே நமக்கு பெரிசு!எனவே காங்கிரசுக்கே ஒட்டு போடுவோம்!ஒட்டு மொத்த தமிழினத்தை அழிப்போம்!முசுலீம்கள் வாழ்ந்தால் போதும்!

    • //இதெல்லாம் செய்த காங்கிரஸ் மத சார்பற்றது//- அப்படின்னு யாரு சாரு சொன்னாங்க?

  25. நரன் அவர்களே! யார் எத்தனை பேரைக் கொன்றார்கள் என்ற கணக்கைப் பற்றி பேசாமல் கட்டுரையில் சொல்லியிருக்கும் கருத்தை கவனியுங்கள். உயிருக்கு மதம் இல்லை. உங்களுக்கு வினவு போல் எத்தனை பேர் வந்து சங்கு வைத்து காதில் கத்தினாலும் தூக்க நடிப்பிலிருந்து விழித்து எழமாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்களே!?

  26. I don’t understand how Mr. Modi is in power for so many years if he is not ruling properly. At least like TN, two parties should come alternatively !! Is it not? May be because all Muslims in Gujrat is not casting their votes against him !! – pl don’t say all the gujarati people are foools like TN people who defeated the only legend of this century – Karma Veera Kamaraj

        • Was that a sarcasm? You guys (Srinivas, Subramanian, rangarajan, etc..) are bad at making sarcasm, i think. 🙂

          Ok. sarcasms aside, I have one thing to ask you….
          //I don’t understand how Mr. Modi is in power for so many years if he is not ruling properly//

          Rajapakse was reelected and so was Hitler during their periods. Aren’t you that smart to understand why?

          • i think u have no clue what sarcasm is,or was that comment also sarcastic,because this is not.

            if u have pagutharivu and some basic normal arivu,u can clearly distinguish the different scenarios under which all these people won.

            • //if u have pagutharivu and some basic normal arivu,u can clearly distinguish the different scenarios under which all these people won.//

              Can you pls eloborate? 🙂

              • Modi didn’t come to power by scaring people that vote for me else the enemy ll kill u.

                Rajapakse won because Ranil was supposed to be a moderate,Hitler won because of inflation,Modi won because of development.

  27. அதானே மோடி அப்படி என்ன சிறப்பாக செய்து விட்டார் ?

    இருபத்தி நான்கு மணி நேரம் மின்சாரம் என்கிறார்கள் . ஆனால் காசு கொடுத்தாதான் மின்சாரமாம்!
    பிரேசில் போல விரைவு பேருந்து அமைதாராமே ? காபி அடிதுதானே செய்திருக்கிறார் ?
    மக்கள் வரி பண நன்கொடை அரிசி கிடையாதாம்
    மக்கள் வரி பண நன்கொடை டிவி கிடையாதாம்
    மக்கள் வரி பண நன்கொடை ஆடு மாடு கிடையாதாம்
    மக்கள் வரி பண நன்கொடை கணினி கிடையாதாம்
    மக்கள் வரி பண நன்கொடை மருத்துவம் கிடையாதாம்
    அட காங்கிரஸ் மக்கள் வரி பண நன்கொடை தருகிறேன் என்ற போது கூட அசைந்து கொடுக்கவில்லையாமே?
    குறிப்பாக டாஸ்மாக் கிடையாதாம். மனுஷன் இருப்பனா அந்த ஊர்ல?

    பின்குறிப்பு: மோடி கொலைகளை ஆதரித்து இருந்தால் அதை கண்டிக்கிறேன். ஆனால் எப்பாடு பட்டாவது இலவசம் கொடுத்தாவது ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்னும் ஆட்சியாளர்கள் மத்தியில் அவர் தனித்துவம் பெறுகிறார்.

    • கருணாநிதியும் ஜெயாவும் கொடுத்தது இலவச டி-வி, இலவச மிக்சி…

      மோடி கொடுத்தது இலவச முஸ்லிம் பிணம்…

      • Here is my argument,
        if he is a killer and a criminal, he should have been desperate to get the Govt back.

        So as per criminal mentality
        1.He should have opened up Liquor industry
        2.Promised freebies out of tax payers money
        3.Could have devised schemes like free current for formers, house like stuff for long term vote bank creation.

        He dint do any of these gimmicks to get the Govt back
        That makes me think, is he the real culprit?

        Even in this fake encounter case, I think
        1. Central Govt gave this false information so that state govt act on it and get defamed.
        2.State govt believed the information must be correct.
        3.And state officials could have gone overboard in killing these poor citizens just to get promotion.

        Real culprit is our police is reporting to politicians. Till it is changed, police will take biased actions just to satisfy their masters. Even in TN dalit shooting, the same thing happened

        We are not calling it, “JJ killed dalits” but instead we call it “police shot dalits.”

      • ரயிலில் சென்ற இந்துக்களை தீயில் கருகி கொன்றது யார்? இஸ்லாமியர்கள் தானே! இந்துக்கள் பிணம் மட்டும் என்ன அவ்வாளவு மலிவா!!

    • Table 1: Net State Domestic Product Per Capita Growth Rates in States (%)

      ———————————————————–
      State | 1993-2001 | 2001-09 | 1993-2009 |
      ———————————————————–
      Gujarat | 3.36 | 8.19 | 5.77 |
      ———————————————————–
      Tamil Nadu | 3.99 | 6.75 | 5.37 |
      ———————————————————–
      Kerala | 4.05 | 7.54 | 5.80 |
      ———————————————————–
      West Bengal | 5.04 | 5.00 | 5.02 |
      ———————————————————–
      ஆதாரம்: EPW VOL 47 No. 03 January 21 – January 27, 2012
      Growth in India’s States in the First Decade of the 21st Century: Four Facts
      Utsav Kumar , Arvind Subramanian

  28. இறூதியாக, சுப்ரமனி என்கிற கமெடியனை அறிமுகம் செய்த வினவுக்கு நன்றி.

  29. ராம் காமேஸ்வரன்,
    ஒரு எடுத்துகாட்டுக்கு,

    ஒரு ஊரில் 1000 நபர்கள் இருக்கிறார்கள் , அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம் நூறு ஆயிரம் உருவாய் என்று கொள்வோம்.
    அதில் , 10 நபர்களுடைய சராசரி வருமானம் ஒரு கொடியாக உருவாயாக உள்ளது எனில் மீதி உள்ளவர்களின் வருமானம் எவ்வளவு?

    அதேபோல
    இன்னொரு ஊரில் 1000 பேர் உள்ளனர் .அவர்களில் பெரும்பன்மையனவர்கள் சராசரியாக நூறு ஆயிரம் உருவாய் வருமானம் உள்ளவர்கள் (80 %), ஆக உங்கள் கணக்குப்படி , இரண்டு ஊர்மக்களின் சராசரி வருமானமும் ஒன்றுதான் .

    இந்த இரண்டும் சரி எனில் உங்கள் கணக்கும் ,அதை யாரிடம் இருந்து பெற்றீர்களோ அவர்களின் கணக்கும் சரிதான்.

    • aama,income disparities irukku.adha theerka enna vazhi.inaikku oorla mothan 1000 rs irukku,10 peru irukkanga aalukku 100 rs kuduthutta uzhaikkiravan uzhaippa nirthudiuvaney.

      If there is no intention to work,then nobody ll work.The idea should be that even the poorest person in the country should have access to good food,clean water and a decent standard of living with good health.That should be the focus,right now we have hungry people looking at people in fast cars and hence get very angry.if they atleast had a normal decent lifestyle,at least they would think peacefully and decide how to get there.

  30. அய்யா ,
    நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா …
    இங்க யாரும் யாருக்கும் பிரிச்சு குடுக்க சொல்லல . உழைக்கும் மக்கள் அதை விரும்பவும் மாட்டார்கள்.
    அவர்களுக்கு தேவை அவர்களின் உழைப்புக்கேற்ற உண்மையான கூலி.
    நாம் கட்டுரையின் மைய கருத்தில் இருந்து விலகி போகிறோம் என்று நினைக்கிறேன்.
    மோடி மட்டுமல்ல , யார் கொடுந்தவறு செய்தாலும் வினையருத்தேயாக வேண்டும்.

    ஒருவர் சொல்கிறார் தனிநபர் வருமானம் உயர்ந்ததாம் ,
    இன்னொருவர் சொல்கிறார் மாநிலத்தின் பொருளாதாரம் உயர்ந்ததாம் ,
    மற்றுமொருவர் கூறுகிறார் சூரிய ஒளி மின் சக்தியை ஊக்குவிக்கின்றாராம்.

    ஒரு அயோக்கியன் செய்த மாபெரும் கொலைக் குற்றத்தை நியாயப் படுத்த எத்தனை நீதிமான்கள் கிளம்பியிருக்கிறார்கள் .

    என்ன கொடும சார் இது?

  31. அய்யா ,
    தாங்கள் புரிந்து தான் பின்னூட்டம் இடுகிறீர்களா ?
    உழைக்கும் மக்களுக்கு தற்போதைய தேவை சரியான உழைப்புக்கேற்ற ஊதியமே தவிர , எதையும் பிரித்துக் கொடுக்க சொல்லவில்லை.
    நாம் எப்போது கட்டுரையின் மையக் கறுதில் இருந்து விலகி செல்கிறோம் என்று நினைக்கிறேன்.

    ஒருவர் கூறுகின்றார் புள்ளிவிவரத்துடன் ,
    தனிநபர் வருமானம் உயர்ந்ததாம்
    இன்னொருவர் சொல்கிறார் பொருளாதாரம் முன்னேறியதாம்
    மற்றுமொருவர் அறிக்கை வெளியிடுகிறார் , சூரிய மின் சக்திக்தியை ஊக்குவிக்கிறார் என்று.
    என்ன கொடுமை சார்?
    ஒரு கொலைக்கரனுக்காக எத்துனை பேர் வரிந்துக் கட்டுக்கதைகளைப் புனைகிறார்கள்.
    ஆக, இங்கே காவிக் கோவணத்துடன் பல பார்பனர்கள் நீதி மான்கள் போல் வேடமிட்டு திரிகின்றனர்.

  32. Here is my argument,
    if he is a killer and a criminal, he should have been desperate to get the Govt back.

    So as per criminal mentality
    1.He should have opened up Liquor industry
    2.Promised freebies out of tax payers money
    3.Could have devised schemes like free current for formers, house like stuff for long term vote bank creation.

    He dint do any of these gimmicks to get the Govt back
    That makes me think, is he the real culprit?

    Even in this fake encounter case, I think
    1. Central Govt gave this false information so that state govt act on it and get defamed.
    2.State govt believed the information must be correct.
    3.And state officials could have gone overboard in killing these poor citizens just to get promotion.

    Real culprit is our police is reporting to politicians. Till it is changed, police will take biased actions just to satisfy their masters. Even in TN dalit shooting, the same thing happened

    We are not calling it, “JJ killed dalits” but instead we call it “police shot dalits.”

  33. அய்யா , நீங்க நெனைக்கிற மாதிரி அவ்வளவு எளிதாக எல்லாம் தப்பிக்க முடியாது. காங்கிரஸ் போன்ற கட்சிகள் மோடி ஒரு சிறு தவறு செய்தாலும் பிடித்து கொள்வார்கள். பல பார்பனர்கள் இன்னைக்கு லிபெரலதான் இருக்காங்க.

  34. குஜராத்தின் வளர்ச்சி குறித்து சிலாகிக்கிறவர்கள் அடிப்படைகளை மறந்தே போய்விடு கின்றனர்.

    1 குழந்தைகள் சாவு விகிதம்

    2 சத்துகுறைபாடுள்ள குழந்தைகளின் விகிதம்

    3 வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் விகிதம்

    4 விவசாயிகள் தொழிலாளர்கள் தற்கொலை விகிதம்

    இவைகள் குறித்த ஒரு comparison ரிப்போர்ட் கொடுக்க அம்பிகள் தயாரா?

    சு-ப்ராமன்யன் – ஒய் டோண்டு யூ கிவ் எ ட்ரை?

  35. I can try.I dont know about the official reports because mostly they are fake.From what i know of Gujarat and have seen personally,it is a very good state.People are doing very well,good law and order and prosperity.

    These days even Muslim heavy constituencies vote for BJP,why do u think they would do that if he is not doign well?

  36. குஜராத்தின் வளர்ச்சி குறித்து சிலாகிக்கிறவர்கள் அடிப்படைகளை மறந்தே போய்விடு கின்றனர்.

    1 குழந்தைகள் சாவு விகிதம்

    Infant Mortality Rate (IMR)per 1000 births
    குஜராத் – 48
    கேரளம் – 12
    மே.வங்கம் – 33
    தமிழ்நாடு – 28

    சிரஞ்சீவி திட்டத்தின் மூலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 30 ஆக குறைக்க உத்தேசித்துள்ளது குஜராத் அரசு.

    http://www.gujhealth.gov.in/health-financing.htm

  37. எந்த கட்டுரைக்கு சென்றாலும் பார்பன அம்பிகள் தலைப்பை விட்டு மடை மாற்ற வந்து விடுகின்றனர்.

  38. எல்லா கட்டுரைகளிலும் சுப்பிரமணியன் வெளுத்து வாங்குறாரு, தனியாளா அத்தனை பேரின் தாக்குதல்களையும் சமாளிக்க போராடுறாரு.. ஆணால் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும்… சுப்பிரமணி உங்கள் கருத்துகள் ஏற்க தக்கவையோ இல்லையோ, உங்கள் வேகம் பிடித்திருக்கிறது…

    • மோடி, நீ கேடியோ இல்லையோ, ஆனால் உன் தாடி எனக்குப் புடிச்சிருக்கு.

      • பரமேசு சார், என் தொண்டை வலிக்கும் அளவுக்கு சிரித்து விட்டேன் போங்கள்…
        மனிதன் என்பவருக்கு இதுபோன்ற ஒரு பதிலை இனி யாரும் கொடுக்கப்போவதில்லை… ஹா ஹா ஹா !!!!

        • \\மனிதன் என்பவருக்கு இதுபோன்ற ஒரு பதிலை இனி யாரும் கொடுக்கப்போவதில்லை\\
          புதிதாக வரும் வாசகர்களை வரவேற்பதில் உங்களுக்கு எதுவும் பிரச்னையா? ஒருவர் ஒரு மாற்று கருத்து எழுதிய உடனே அனைவரும் கூட்டம் சேர்ந்து அவரை போட்டி போட்டு அடித்து துவைத்து அர்ச்சித்து வெளியில் துரத்த நினைக்காதீர்கள்…
          விமர்சனங்கள் கருத்துக்களை செறிவு படுத்தும்… நூறு மாற்று கருத்துக்களில் ஒரு இரண்டாவது பயனுள்ளாதாக இருக்கும்..

          • மோடி விசுவாசிகளின் ‘மனிதா’பிமானம் பற்றிய கருத்துகளால் யாருக்கு என்ன பயன்?

          • மனிதன் அவர்களே,
            மாற்றுக் கருத்துக்கும் மாசுக் கருத்துக்குமான நீங்கள் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். கொலைகார மோடியை நியாயப்படுத்துவது மட்டுமல்ல அந்தக் கொலைகாரர்களின் செயல்களையும் கொலைகளையும் நியாயப் படுத்துவதை நீங்கள் எப்படி ரசிக்கிறீர்கள் என்று புரியவில்லை.

            கற்பழிப்பை உங்களால் கலையாக ரசிக்க முடியுமா?

            • \\மாற்றுக் கருத்துக்கும் மாசுக் கருத்துக்குமான நீங்கள் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.\\
              சமுதாயத்தை மாசு படுத்தக் கூடிய கருத்துக்களை மறுதலிக்கும் கருத்துக்கள் உங்களுக்கு மாசாக தெரிவதில் மாச்சரியமில்லை…

              \\கொலைகார மோடியை நியாயப்படுத்துவது மட்டுமல்ல அந்தக் கொலைகாரர்களின் செயல்களையும் கொலைகளையும் நியாயப் படுத்துவதை நீங்கள் எப்படி ரசிக்கிறீர்கள் என்று புரியவில்லை\\

              மோடியை நீங்கள் தனி மனிதனாக பார்க்கிறீர்கள், நான் ஆட்சியாளனாக பார்க்கிறேன்… மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த சக்திகளை சுட்டு தள்ளி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் இட்டு சென்ற துணிவு பாராட்டத்தக்கது…

              பாதிக்கப்படவர்களாக நீங்கள் பரப்புரை செய்யும் சமுதாயமே தங்கள் முதலமைச்சரின் செயல்களின் நியாயத்தை புரிந்து அவருக்கு தங்கள் ஆதரவை தேர்தலில் மட்டுமல்லாது அனைத்து நிகழ்வுகளிலும் தெரிவிக்கின்றனர்… வளமான மாநிலமாக மாற்றிய வலுவான தலைவனை பெற்றதில் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்..

              குஜராத்தின் அனைத்து சமுதாயத்தினரும் மோடிக்கு ஆதரவளிக்கின்றனர்… பாதிக்கப்பட்டதாக நீங்கள் கள்ள பரப்புரை செய்யும் சமுதாயம் உட்பட, இந்த சம்பவங்கள் அந்த மண்ணின் மைந்தர்கள் மனதை விட்டு நீங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன…

              அம்மண்ணின் மைந்தர்களே அமைதியாகிவிட்டனர், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து நீங்கள் அரற்றுவதன் அந்த இரகசியம் தான் என்ன ?

              • //பாதிக்கப்படவர்களாக நீங்கள் பரப்புரை செய்யும் சமுதாயமே தங்கள் முதலமைச்சரின் செயல்களின் நியாயத்தை புரிந்து அவருக்கு //

                அடிச்சிவுடுங்க சார். ஆனால் ஒன்னு சார், தங்களை கொலை செய்ததை நியாயமான செயல்னு அந்த சமுதாய மக்களே புரிஞ்சிக்கிட்டதா சொல்லியிருக்கீங்க பாருங்க அதை இந்திய வரலாற்றில் பொன்னெழுத்தால பதிய வைக்கோனும். வெல்டன், வெல்டன்

                தூத்……நீயெல்லாம் ஏய்யா மனுசன்னு பேரு வச்சிருக்கீங்க.

                • \\நீயெல்லாம் ஏய்யா மனுசன்னு பேரு வச்சிருக்கீங்க\\
                  சார்-னு ஆரம்பித்து தூ-னு துப்பியும், பொறுமையோடு மிருகம் கொன்று மிருகம் கொன்று மனிதம் வளர்க்க விழைவதால்…
                  எழுத்தில் எச்சில் தெறிப்பது நாகரீகமில்லை என கருதுகிறேன்…

                  மோடியின் உண்ணாவிரதத்தில் அவரோடு போட்டி போட்டு கொண்டு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட இஸ்லாமியர்களை பற்றியும், அவருக்கு பச்சை வர்ண சால்வை அணிவித்த மத தலைவர்கள் பற்றியும், மத அடையாளமான புனித குல்லாவை அணிவிக்க எத்தனித்த மத தலைவர் பற்றியும் என்ன கருத்து வைத்து இருக்கிறீர்கள்? அல்லது அவர்கள்தான் மோடி பற்றி என்ன கருத்து வைத்திருப்பார்கள்?

                  • மனிதன், நீங்க சொல்றதுதான் கரெக்ட். வினவு மக்கள் எப்பவுமே செய்யறதுதான் – புதுசா வரவங்கள கட்டம் கட்டறது -:)
                    இவங்க மட்டும்தான் புத்திசாலி மாதிரி எழுதுவாங்க. ரெண்டு குரூப் இருக்கு – ஒரு குரூப் எப்பவுமே பெர்பெக்டா பதில் சொல்ல்வங்க . இன்னொரு குரூப் கட்டம் கட்றதுக்கு. எங்க பதில் சொல்ல முடியலையோ அங்க ரெண்டாவது குரூப் வந்து திட்டுவாங்க.
                    மோடி மிரட்டித்தான் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றார் என்ற நகைச்சுவை எல்லாம் சொல்லுவாங்க. கேட்கத்தான் வேணும் -:)

                    • Srinivas////மோடி மிரட்டித்தான் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றார் என்ற நகைச்சுவை எல்லாம் சொல்லுவாங்க. கேட்கத்தான் வேணும் -:)////

                      மோடி முதலில் வெற்றிபெற்று முதல்வராக இருந்து மறு பொது தேர்தலுக்கு முன்பு

                      நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.ஆனால் அதன் பின்னரே ரயில்

                      எரிப்பு கலவரம். குஜராத் கலவரத்திற்கு பின் நடந்த சட்டசபை தேர்தலில் முந்தைய தேர்தலில்

                      அதிக சீட்கள் கிடைத்த அதாவது கலவரம் நடக்காத சவ்ராஷ்டிரா பகுதிகளில் குறைவான

                      சீட்களும் ,

                      முந்தைய தேர்தலில் குறைவான சீட்கள் கிடைத்த அஹ்மதாபாத் ,பரோடா .மேசானா போன்ற

                      கலவரம் நடந்த மாவட்டங்களில் அதிக சீட்களும் பிஜேபிக்கு கிடைத்தது.
                      மோடி மிரட்டி பெற்றார இல்லையா என்பது குஜராத்தில் உள்ள பல முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம்களின் ஓட்டுக்களை அங்கு உள்ள பிஜெபியினரே பதிவுசெய்தார்கள் என்பதை அங்கு சென்று தெஹல்கா போல விசாரணை நடத்தினால் அல்லவா தெரியும்.துக்ளக்கை படித்து,உலகம் முன்னேற வேண்டும் என்றால் மோடியை விட்டால் வேறு வழியில்லை என்ற மிதப்பிலே இருக்க முடியும்.

                    • அப்பாடா எனக்கு ஆதரவாக ஒரு குரல் ஒலிக்கிறதே… ரொம்ப நன்றி!!

                  • manithan///மோடியின் உண்ணாவிரதத்தில் அவரோடு போட்டி போட்டு கொண்டு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட இஸ்லாமியர்களை பற்றியும், அவருக்கு பச்சை வர்ண சால்வை அணிவித்த மத தலைவர்கள் பற்றியும், மத அடையாளமான புனித குல்லாவை அணிவிக்க எத்தனித்த மத தலைவர் பற்றியும் என்ன கருத்து வைத்து இருக்கிறீர்கள்? அல்லது அவர்கள்தான் மோடி பற்றி என்ன கருத்து வைத்திருப்பார்கள்? ////
                    ஆஹா ,இந்த செட்டப்பில் மனிதன் மயங்கிவிட்டார் போலும், இராக் இரான் மற்றும் உலக முஸ்லிம்களை பாதுகாக்க மோடியால் மட்டுமே முடியும் என்று கூட அறிக்கைவிட தயாராக இருக்கிறார்கள் .,பல லெட்டர் பேட் முஸ்லிம் தலைவர்கள் உள்ளனர்.காசுகள் அள்ளிக் கொடுத்தால் போதும் .மனிதா இன்னும் நம்புங்கள்,முஸ்லிம்களின் பெயரில் குண்டுகளை வைத்து ,முஸ்லிம்களை சிறைக்குள் தள்ளி முஸ்லிம்களை ஒடுக்க முனைந்த சங்க குடும்பங்களின் சுய ரூபத்தை உலகுக்கு ஆதாரத்துடன் அடையாளம் காட்டிய மாமனிதர்,மனித புனிதர் ,சத்திய மைந்தன் கர்கரேயை முஸ்லிம் தீவிரவாதிகள் தான் கொன்றார்கள்என்று மோடி சொல்லுகிறார்.அது போன்று ஒரு அறிக்கையை பெறவே திருமதி கவிதாவிடம் கோடியுடன் சென்று வாங்கி கட்டிக் கொண்டார்.லட்டர் பெற முஸ்லிம் தலைவர்கள் திருமதி கவிதாவின் கால் தூசுக்கு பெறமாட்டார்கள்.

                    • மேலே உள்ள கருத்தின் கடைசி வரியை திருத்திக் கொள்க.” லட்டேர்பேடு முஸ்லிம் தலைவர்கள் திருமதி கவிதாவின் கால் தூசுக்கு சமமாகமாட்டார்கள் “.

                    • \\மோடி மிரட்டி பெற்றார இல்லையா என்பது குஜராத்தில் உள்ள பல முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம்களின் ஓட்டுக்களை அங்கு உள்ள பிஜெபியினரே பதிவுசெய்தார்கள் என்பதை அங்கு சென்று தெஹல்கா போல விசாரணை நடத்தினால் அல்லவா தெரியும்\\

                      உங்கள் தோழர்கள் இந்நேரம் இந்த கிராமங்களுக்கு சென்று விசாரித்து ஒரு வலைப்பதிவு ரெடி பண்ணி சுட்டி தயாரித்திருப்பார்களே…
                      நிரூபிங்க பார்க்கலாம்னு சொன்ன உடனே அந்த சுட்டியை கொடுத்து இதோ பாரு ஆதாரம், இதற்கு இல்லை சேதாரம் அப்படின்னு ஒருத்தர் ரிப்ளை பண்ணுவாரு, இன்னொருத்தர் கொஞ்சம் நேரம் பொறுத்து அதுக்கு ஒரு வாழ்த்து போடுவாரு, ரெண்டு நாலு கழிச்சு ஒருத்தர் சிரிப்பு பொம்மை போட்டு அவங்களாவே பாராட்டிக்கிட்டு போய்டுவாங்க…

                  • //அவருக்கு பச்சை வர்ண சால்வை அணிவித்த மத தலைவர்கள் பற்றியும், மத அடையாளமான புனித குல்லாவை அணிவிக்க எத்தனித்த மத தலைவர் பற்றியும் என்ன கருத்து வைத்து இருக்கிறீர்கள்?///

                    தம்மை ஒடுக்குபவனையும் அண்டி பிழைத்துக்கொள்ளலாம் என்ற வகையான பண்பாடு கொண்டவர்கள் இவர்கள்.

                  • கட்டபொம்மன் வாழ்ந்த இந்த மண்ணில்தான் எட்டப்பனும் வாழ்ந்தான்

  39. சுப்பிரமணி ,,மோடி பூட்டன் காலத்திலே குஜராத் தொழில் துறையில் முன்னேறியே இருந்தது. பண பயிர்களும் அங்கு அதிகம் விளைகின்றன.

    கர்கறேயின் மனைவி கவிதா கோடியுடன் ஓடிய மோடியை படி ஏறாதே என்று ஏன் சொன்னார்?
    பாண்டியாவின் தந்தை பாண்டியாவின் சவ ஊர்வலத்தில் மோடி கலந்து கொண்டதை எதிர்த்தது ஏன்? மணிநகர் தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டது ஏன்?

  40. மோடியின் ”திறமை”யான ஆட்சி குறித்து கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவோர் முதன்மையாக சொல்வது குசராத்தில் மின்சார உற்பத்தி ஏராளம்,தாராளம் என்பதுதான்.உண்மையில் அங்கு மின்பற்றாக்குறை 23 .4 விழுக்காடு.

    ஆதாரம்.http://www.livemint.com/2009/05/05005836/India-has-12-power-shortage.html

    மற்றபடி குசராத் மோடி முதல்வராகும் முன்பே முன்னேறிய மாநிலமாக இருந்தது. அங்கு இந்திய மாநிலங்களிலேயே கூடுதலான வானூர்தி நிலையங்கள் [14] உள்ளன.தொழிற்துறை எந்த அளவுக்கு வளர்ந்திருந்தால் இவ்வளவு வானூர்தி நிலையங்கள் கட்டப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.காக்கை உட்கார பனம்பழம் விழுந்து விட்டது.அவ்வளவுதான். அந்த வானூர்தி நிலையங்களை கொண்டுவந்ததும் மோடிதான் என புதுக்கரடியை மனிதன் போன்றோர் அவிழ்த்து விடாமல் இருந்தால் நல்லது.

  41. உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் துன்பப்பட்டுக்கொன்டு இருக்கிரார்கள். கடந்தவாரம் நைஜீரியா என்ற நாட்டில் கிருத்துவர்கலுக்கும் முஸ்லீம்களுக்கும்நடந்த கடும் சண்டையில் 200 க்கும் மேற்ப்பட்ட கிருத்துவர்களை முஸ்லீம்கள் கொன்று குவித்துள்ளனர். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், ஈராஃக், ஈரான் மற்றும் பலநாடுகளில் இதே போன்ற பயங்கரவாதம்தான் நடந்து வருகிறது. தினசரி பத்திரிக்கை படிப்பவர்கலுக்கு நன்றாகத்தெரியும். இஸ்லாம் என்றாலும் பயங்கரவாதம் என்றாலும் ஒன்றுதான்! முஸ்லீம்களை திருப்தி படுத்தி அவர்கலிடம் இருந்து தாராளமாக “நன் கொடை” (பெட்றோ டாலர்) பெற்று தங்களது வாழ்க்கையை வழமாக்கிக்கொள்ள இஸ்லாமியத்தை தாஷா செய்கிரார்கள். இதுநல்லதற்கிள்ளை!!!! அனைத்து மக்களையும் சமமாக மதித்து “போலி” களை தூக்கியெரிந்து உண்மையான மதசார்பின்மையை நிலைனாட்டுவோம்.

    • ஆமாம் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றது கூட இஸ்மாயில் என்ற ஒரு முஸ்லீம் தானே M.Natrayan,TamilNadu

    • அமெரிக்கா எந்த நாட்டில் மூக்கை நுளைக்கின்றததோ அங்கே அமெரிக்காவே குண்டு வெடிப்புகளை நடத்தும். உதாரணம். சதாம் ஆட்சியில ஈராக் , கடாபி ஆட்சியில் லிபியா , தலிபான் ஆட்சியில் அப்கானிஸ்தான் . இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்க படையெடுப்புக்கு முன் மிகவும் அமைதியான தேசமாக இருந்த நாடுகள். பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவ தளம் அமைப்பதற்கு முன்பு அந்த நாடு அமைதியாக தான் இருந்தது.அமெரிக்கா என்றைக்கு இந்த நாடுகளில் காலை எடுத்து வைத்ததோ பள்ளிவாசல்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் முஸ்லிம்களை கூட்டம் கூட்டமாக கொன்றுவருகிறது.
      முஸ்லிம்களை கொன்றுவிட்டு முஸ்லிம்கள் மீதே பழிபோடுவது மீடியாக்களை வைத்திருக்கும் அமெரிக்காவால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
      இதை சாதாரண அறிவு உள்ளவர்கள் கூட புரிந்து கொள்ளமுடியும்.
      நீங்களும் உண்மையை புரிந்து கொள்ளலாமே!

      • abdul kadar,

        all arab countries history is filled with a lot of violence.they were far from peaceful.

        If not for UK/USA,all these countries wont even know that they have Oil Wealth.Saddam Hussien became the dictator of Iraq after a lot of violence,Afghanistan has been violent since forever,pakistan willingly joined america and china to fight against India and so on.

        America is just exploiting the already existing political scenario in these countries to get Oil,right or wrong thats the truth.

  42. குஜராத்தில் மோடியின் கோட்டையில் இடைதேர்தலில் நீண்ட காலத்திற்கு பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.இதற்கிடையே இன்னும் எட்டு மாதங்களில் பொது தேர்தல் நடைபெற உள்ளது .மீண்டும் வெற்றிபெற மோடி 2003 பொது தேர்தலுக்கு முன்பு ரயில் எரிப்பு போன்று முஸ்லிம்கள் மீது பழிபோட ஏதேனும் திட்டமிடுவார் .உளவுத்துறை எச்சரிக்கையாக இருக்குமா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க