Wednesday, June 7, 2023

ஆதார் : விலை போகும் உங்கள் தகவல்கள்!

-

இந்த செய்தித்தாள் நடத்திய விசாரணை ஒன்றில் உங்கள் ஆதார் எண்ணைப் பெறுவதற்காக நீங்கள் தனியார் சேர்க்கை ஏஜன்சிகளிடம் கொடுக்கும் முக்கியமான உடற்கூறு மற்றும் மற்றும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆதார் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் தகவல்களின் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் அச்சங்களை உறுதி செய்வதாக இது இருக்கிறது.

இந்தியக் குடிமக்களிடமிருந்து மதிப்பு வாய்ந்த தகவல்களை திரட்டும் பொறுப்பை பெற்றுள்ள சேர்க்கை ஏஜன்சிகள், இந்திய தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையம் (UIDAI) அமைத்துள்ள விதிமுறைகளை மீறி, சேர்க்கை பணிகளை உள்ளூர் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக வழங்கியிருக்கிறார்கள். இந்த துணை முகவர்கள் யார் யார் என்பது பற்றி UIDAIக்கு எந்த தகவலும் இல்லை. இத்தகைய சட்ட விரோதமான நிறுவனங்கள் மூலம் தகவல் திரட்டப்படுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை. இந்த நாளிதழ் தொடர்பு கொண்ட பல சேர்க்கை நிறுவனங்கள் பணியை ஆள்சேர்ப்பு நிறுவனங்களுக்கு வெளிப்பணியாக கொடுத்திருப்பதாகவோ அல்லது அத்தகைய முகவர்களைத் தேடுவதாகவோ தெரிவித்தன.

இந்த நிருபர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு மென்பொருள் விற்பனை நிறுவனம் என்ற போர்வையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சேர்க்கை ஏஜன்சியை தொடர்பு கொண்ட போது, மும்பையில் ஆதார் எண்களை திரட்டுவதற்கான முகமை தருவதாச் சொன்னார்கள். அவருக்கு மராத்தி மொழி அறிவு சுத்தமாக இல்லை என்றும், தகவல் திரட்டும் பணியில் முன் அனுபவம் இல்லை என்றும் தெரிவித்த பிறகு கூட, சுமார் 50 லட்ச ரூபாய்க்கு 30 எந்திரங்களை வழங்குவதாகவும், வசதிப்பட்ட சமயத்தில் மும்பையில் பணிகளை ஆரம்பிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும் பல ஏஜன்சிகள் பணியை வெளியில் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் பலர் UIDAI வகுத்துள்ள முறைக்குள் செயல்படுவது எப்படி என்று தெரியவில்லை என்று ஜாக்கிரதையாக பதில் சொன்னார்கள்.

ஆதார் அடையாள அட்டை - விலைபோகும் தகவல்கள்
நந்தன் நீலகேணி

“அலங்கித் பின்செக், ஆதார் சேர்க்கை பணியை பிற தனியார் அமைப்புகளுக்கு வெளிப் பணியாக கொடுத்தது தொடர்பாக பெங்களூரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நிறுவனம், சண்டிகரில் சேர்க்கைப் பணிகளை ஒரு தனிநபருக்கு துணை ஒப்பந்த பணியாக வழங்கியிருக்கிறது. அந்த நபர் இன்னும் பலருக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். மைசூரில் பொய்யான அடையாளங்களை உருவாக்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஹூப்ளியில் ஆதார் தகவல் சேகரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூன்று மடிக்கணினிகள் திருடு போயின,” என்று மேத்தியூ பிலிப் என்ற சமூக ஆர்வலர் சொல்கிறார். அவர் பெங்களூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆதார் திட்டம் சட்ட விரோதமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் வழக்கு ஒன்று பதிவு செய்திருக்கிறார். அலங்கித்தின் கம்பெனி செயலர் வினய் சாவ்லா, தகவல் திரட்டும் பணி வெளியில் கொடுக்கப்பட்டதை ஒத்துக் கொண்டார். ஆனால், UIDAIயிடமிருந்து வழிமுறைகள் வந்த பிறகு அத்தகைய வழக்கத்தை நிறுத்தி விட்டதாகச் சொன்னார்.

“UIDA இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் ஒப்பந்த பணி கொடுத்த வழிமுறையே பெரும் சந்தேகத்துக்குரியது. டெண்டர் முறை எதுவும் பின்பற்றப்படவில்லை. சேர்க்கக் கோரி விண்ணப்பித்தவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டார்கள். பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு உடற்கூறு தகவல் சேகரிப்பு அல்லது பெரும் அளவில் தகவல் சேகரிப்பில் முன் அனுபவம் கிடையாது. ஆதார் எண்ணை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களையோ தரவுகளையோ சரிபார்க்கும் நிபுணத்துவம் அவர்கள் வேலைக்கு அமர்த்தும் பணியாளர்களுக்கு கிடையாது.” என்று சொல்கிறார் வழக்கறிஞரும் UIDக்கு எதிரான ஆர்வலருமான பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேஷ் பப்பர்ஜங்.

UIDAI அங்கீகரித்துள்ள நிறுவனங்களின் பட்டியல் வெங்கடேஷின் கவலைகளை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. 2010ல் அசாமில் ஆதார் தகவல்களை திரட்டும் ஒப்பந்தப் புள்ளி பாருநகர் டீ எஸ்டேட்ஸ் என்ற தேயிலைத் தோட்டத்துக்கு வழங்கப்பட்டது. பீகார், டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தகவல்கள் திரட்டுவதற்கான அங்கீகாரம் சென்னையைச் சேர்ந்த ஹெர்ம்ஸ் I டிக்கெட்ஸ் என்ற பயணம் மற்றும் பயணச்சீட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஒரு கணினி விற்பனை மற்றும் பராமரிப்புக் கடை, அச்சகங்கள், கல்வி மற்றும் தரும நிறுவனங்கள், தெருவணிகர்களின் தேசிய கூட்டமைப்பு, சர்க்கரை ஆலை, காப்பீட்டு நிறுவனங்கள், BPOக்கள், நிதி நிறுவனங்கள், நிலக்கரி மற்றும் உருக்கு நிறுவனங்கள், கட்டிட நிறுவனங்கள் போன்றவை இப்போது சேர்க்கை ஏஜன்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அடங்கும்.

பெரும் எண்ணிக்கையிலான சேர்க்கை ஏஜன்சிகளுக்கு அவர்களுக்குத் தெரியாத மொழி பேசப்படும் மாநிலங்களில் உடற்கூறியல், வாழ்வியல் மற்றும் தனிநபர் தகவல்களை திரட்ட ஒப்பந்த புள்ளிகள் வழங்கபட்டிருந்தன. அந்த மாநிலங்களின் உள்ளூர் நிலைமைகள் பற்றிய அறிவும் அவர்களுக்கு இல்லை. உதாரணமாக, ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதமி கல்வி சங்கம் என்ற கல்வி அறக்கட்டளை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தகவல் திரட்டும் பணியை பெற்றுள்ளது. ஆந்திர பிரேதசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜினா டெக்னாலஜிஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சேர்க்கை நடத்த அங்கீகரிக்கப்பட்டிருந்க்கிறது, ஆனால் ஆந்திராவில் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த தவறான முறை பதிவு ஏஜன்சிகள் உள்ளூர் ஏஜன்டுகளை பணிக்கு அமர்த்தியதற்கு காரணமாக இருக்கிறது. “ஒரு நிறுவனம் அவ்வளவு பெரிய அளவிலான தரவுகளை கையாளுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. பணியை வெளியில் கொடுக்காமல் நாங்கள் சமாளித்தாலும், குறிப்பிட்ட பகுதியில் பணியாளர்களை வழங்குவதற்கு உள்ளூர் மனிதவள ஏஜன்சிகளைத்தான் நாங்கள் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது” என்று சேர்க்கை பதிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவர், பெயர் தெரியக் கூடாது என்ற நிபந்தனையுடன் சொன்னார்.

UIDAI தலைவர் நந்தன் நீலகேனி மற்றும் பதிவுகளுக்கான உதவி இயக்குனர் அலின் காச்சி ஆகியோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு அச்சுக்குப் போகும் வரை பதில் கிடைக்கவில்லை. UIDAI செய்தித் தொடர்பாளர் அவதேஷ் குமார் கருத்து சொல்வதற்கு கிடைக்கவில்லை.

ஆங்கில மூலம் : உங்கள் ஆதார் தகவல்களை திரட்டுவது யார்?

நன்றி: சன்டே கார்டியன்
தமிழாக்கம்: செழியன்

  1. ஆதர் அமைப்பே சட்ட விரோதமானதுதான். மேலும் சட்டவிரோத முறையில் நாட்டு குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை பல்வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து அனுமதியின்றி பெற்றுள்ளது. அத்துடன் அல்லாமல், அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகளூக்கு விரோதமாக குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும், சேமிக்கும் வேலையைச் செய்துள்ளது (சென்செக்ஸ் அல்லது பிற அரசு தகவல் சேகரிப்புகள் மொத்த விவரங்களுக்கானவை, தனிப்பட்ட மனிதர்களின் விவரங்கள் சேகரிக்கப்படாது). இப்படி முற்றிலும் சட்டவிரோதமான ஒரு அமைப்பு, இந்திய அரசு தனக்கு இருப்பதாக சொல்லிக் கொள்ளும் மான்புக்கு விரோதமான ஒரு அமைப்பு, இந்திய அரசின் தன்னிடம் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும் தேச விரோத வேலைகளை செய்யும் அமைப்புதான் ஆதர்.

  2. ஆதார் ஆரம்பத்திலிருந்தே உருப்படாத பயனற்ற திட்டம். ஏற்கனவே வோட்டர் ஐடி, பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, அலுவலக ஐடி போன்ற நூத்தி எட்டுக் கார்டுகளை வைத்திருக்கும் நமக்கு இது தேவை இல்லை. யாரும் வாங்க வேண்டாம்.

    • இத்தனை ஆவணங்களையும் பேரிடர் நிகழ்வுகள், நெருப்பு, வெள்ளம் மற்றும் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பது பெரிய விசயமாக இருக்கிறது. இவற்றை திரும்ப பெறுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. வாக்காளர் அடையாள அட்டையை தேசிய அடையாள அட்டையாக அறிவிக்கலாம். பான் அட்டைக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வரி கட்ட செய்யலாம். ஓட்டுனர் உரிமம் தகவல்களை வா. அ. அட்டையில் பதிந்து தந்தால், அரசுக்கு செலவும் மிச்சம். இதை அனைத்தும் கம்ப்யூட்டர் மூலம் ஒருமுகபடுத்தலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கம்ப்யூட்டர் அறிவில் இந்தியர்களை அடிச்சுக்க முடியாது என்று மார் தட்டும் தேசத்தில், கம்ப்யூட்டர் பயண்பாடு என்பதே இல்லை என்பது வேதனையான விஷயம்.

  3. நல்ல கட்டுரை. நான் ஏற்கெனவெ என் குடும்பத்தாரிடம் தெரிவித்த அதே போன்ற விஷயங்களையே கட்டுரையும் கூறியுள்ளது. அவங்க தான் கார்டு வாங்கணும்.. வாங்கணும்னு துடிச்சிக்கிட்டிருந்தாங்க. இங்கு க்யூவில் நின்று கூட தங்கள் விவரங்களைப் பதிந்து கொண்டு வருகின்றனர்!!

  4. தனிப்பட்ட விவரங்களில் தலையிடுவதோடு மட்டுமல்லாமல் சாதாரண மக்களை பயமுறுத்தி இதை வாங்கச் செய்கிறார்கள், இந்த மனித உரிமை மீறலை எதிர்ப்போம். நல்ல கட்டுரை, வாழ்த்துக்கள்…

  5. ஆதார் – பல நாடுகளில் ஏற்கனவே இருக்கும் SSN அல்லது National identity card என்பதன் இந்திய வடிவம்… சீனாவில் கூட Resident Identiy card என இருக்கிறது.. இலங்கையில் நிக் (National Identiy card ) இருக்கிறது…

    பயன்கள் – கிராமங்களில் இருந்து வேலை சூழ்நிலைக்காக சென்னைக்கு குடி வந்த நண்பர்கள், காஸ் கனக்சன், ராசன் கார்டு வாங்க என்று எங்கு சென்றாலும் அட்ரஸ் ப்ரூப் கேட்டு அல்லல் பட்டவர்களுக்கு தெரியும்..

    விளைவுகள் – ஐ.டி முழு பயன்பாட்டுக்கு வந்த பின், காவல் துறை டிமாண்ட் செய்யும்போது இந்த அட்டையை நீங்கள் காட்டவில்லை என்றால், நீங்கள் யாரென்று நிரூபிக்க உங்களிடம் மற்ற ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றால், உங்கள் விரல் ரேகைகளும், கருவிழிப்படலமும் காவலர் வைத்திருக்கும் கையடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களுடைய ஜாதகம் திரையில் தோன்றும்… பச்சை விளக்கு எறிந்தால் நீங்கள் வீட்டுக்கு போகலாம்.. சிவப்பு என்றால் சிறைக்கு போக வேண்டி இருக்கும்…

    வோட்டர் ஐ.டி-யை பயன்படுத்தினால் என்ன ? – 18 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்… வோட்டர் id ஒரு ஸ்மார்ட் கார்டு அல்ல.. தகவல்களை அப்டேட் செய்ய முடியாது.. அது இந்திய தேர்தல் ஆணையத்தின் சொத்து, எமெர்ஜென்சி போன்ற நேரங்களில் ஆணையம் கலைக்கப்பட்டால் அந்த id செல்லாக் காசு..

    தகவல்கள் விலை போகிறதா – சிம் கார்டு வாங்க சாலையோர கடைகளில் பாஸ்போர்ட் நகல் கொடுக்கிறீர்களே அது விலை போகாது என்பது என்ன நிச்சயம்.. பேங்க் லோனுக்காக தரகு முகவர்களிடம் அணைத்து அடையாள அட்டைகளையும், ஆதரங்களையும் கொடுக்கிறீர்களே அது விலை போகாதா? இதே சாத்தியம் தான் ஆதார் தகவல்களுக்கும்.. ஆனால் விரல் ரேகைகளும், கருவிழிகளும் போலியாக தயாரிக்க முடியாது… identity theft சாத்தியமாயினும், identity duplication சாத்தியமல்ல…

    அஞ்சல் துறை போன்ற அரசு துறைகள் ஊடாகவோ, டாட்டா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் செயல்படவுள்ள ஆதார் அரசு முகமைகளில் சேமிக்கப்படும் தகவல்கள் விலை போக வாய்ப்பு கிடையாது…

    அவசியமா – ஒரு identity என்பது சாதாரண குடிமக்கள் அனைவருக்கும் அவசியம், குற்றவாளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், நக்சல் பாரிகளுக்கும் அனாவசியம்…

    இறுதியாக, இந்த identity கார்டு சிஸ்டம் பயன்பாட்டுக்கு வந்தபின், தடை செய்யப்பட்ட இயக்கத்தினை சேர்ந்தவர்கள், அரசுக்கு எதிரான அந்நிய சக்தியின் கூலி என சந்தேகிக்கபடும் இயக்கம் சார்ந்தவர்கள் , மாவோ,நக்சல் போன்ற புரட்சி குழுக்கள், தீவிரவாத இயக்கங்கள் சேர்ந்தவர்கள் பொதுவெளியில் நடமாட முடியாது… எந்த கணமும் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்படலாம்…

  6. //ஆதார் – பல நாடுகளில் ஏற்கனவே இருக்கும் SSN அல்லது National identity card என்பதன் இந்திய வடிவம்… சீனாவில் கூட Resident Identiy card என இருக்கிறது.. இலங்கையில் நிக் (National Identiy card ) இருக்கிறது…// அய்யா ஆதர் அட்டையை எதிர்ப்பவர்கள் மேற்படி எளிய உதாரணங்கள் தெரியாத அறிவுக் குருடர்கள் அல்ல. தயவுசெய்து ஆதர் அட்டை அமெரிக்கா, ஐரோப்பா வகை அட்டை அல்ல என்பதை பற்றி இப்பதிவின் கீழே உள்ள சுட்டியில் இருந்து படித்த தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

  7. “மாவோ,நக்சல் போன்ற புரட்சி குழுக்கள், தீவிரவாத இயக்கங்கள் சேர்ந்தவர்கள் பொதுவெளியில் நடமாட முடியாது… எந்த கணமும் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்படலாம்…”

    அதுக்குத்தான் வினவுக்கு இவ்வளாவு கவலையா? அதுசரி.

    • மாவோ, நக்சல்பாரிகளை எதிர்க் கொள்ள துப்பில்லாமல் அவர்களை தீவிரவாதிகளாக திரிக்கும் இந்த அரசாங்கம், ஆதார் மற்றும் இல்லை இது போன்ற ஒராயிரம் கருமங்களை கொண்டு வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள் மக்கள் போராளிகள்.

  8. மனிதன்,samba-ஆகியோர் கூடுதலான, முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளவும்,தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளவும் கோருகிறேன்.ம.உ.பா.மையம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு,சம்மந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது.இதனையும் கட்டுரையில் கூடுதலாக சேர்த்து எழுதியிருக்கலாம்.மொழிப்பெயர்ப்பாளருக்கு நன்றி.

    • உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொருத்து எங்கள் கருத்துக்களை மாற்றி கொள்ளுகிறோம்… நீங்கள் தீர்ப்பு எதுவாயினும் ஏற்று கொள்வீர்களா ?

  9. “நீங்களோ அல்லது நானோ நீதிமன்றத் தீர்ப்பு என்கிற அந்த வரம்பிற்குள் சுருங்கிப்போய்விட வேண்டாமே!”

    ணீங்க என்ன சொல்ல வரீங்க, நீதிமன்றத் தீர்ப்பு என்கிற அந்த வரம்பிற்குள் சுருங்கிப்போய்விட வேண்டாம்னாநீதிமன்றத்துக்கு எதுக்கு போரீங்க?

      • ஒரு வழக்கு கூட இது வரை வெற்றி பெற்றிருக்காத போலி வழக்கறிஞ்சர்களின் (PIL) இலட்சணம்தான் அம்பலமாகும்… 🙂

        • //ஒரு வழக்கு கூட இது வரை வெற்றி பெற்றிருக்காத போலி வழக்கறிஞ்சர்களின் (PIL)……..//

          இந்திய நீதி மன்றங்கள் போலி வழக்கறிஞ்சர்களின் சொல்லாடல் மன்றங்கள் என்பதை ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே. நீங்களே அமோதிதபின் அதைப்பற்றி விவாதம் செய்வது நாகரீகம் அன்று. நீதி மன்றங்கள் ஜனநாயகத்தின் இரு துண்கலமே. இந்திய ஜனநாயகத்தை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலாய் உள்ளது நண்பரே.

          • //இந்திய நீதி மன்றங்கள் போலி வழக்கறிஞ்சர்களின் சொல்லாடல் மன்றங்கள் என்பதை ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே.//

            மறைமுகப் பொருளில் உங்கள் வழக்குரைன்ஜர் ஒரு போலி என்று ஒத்துக்கொள்கிரீர்களே…!!!!
            போலிகளுக்கு மட்டுமல்ல, பொய்யர்களுக்கு, புரட்டர்களுக்கு, தீவிரவாதிகளுக்கு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கடுங்குற்றம் செய்தவர்களுக்கு கூட எம் நாட்டு நீதிமன்றங்களில் தங்கள் தரப்பு வாதத்தை கூறி சொல்லாட எமது சட்ட புத்தகத்தில் இடம் இருக்கிறது நண்பரே…

            \\இந்திய நீதிமன்றங்கலின் லட்சனத்தை அரிவதர்குதான்\\
            இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் வழக்கின் முகாந்திரமாக மேற்கண்ட வரியை உங்கள் வழக்குரைன்ஜர் கூறுவாரா ?

            பொது நல வழக்கு என்ற அரசியல் சட்ட உரிமையை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்று தெரிந்திருந்தும் ஒரு பப்ளிசிடிக்காக வழக்கு போட்டு நேரத்தை வீணடிக்கும் வக்கீல்களுக்கு சுயநலமான பொது நல வழக்கு போட்டதற்காக நீதிமன்ற அவமதிப்புக்கான அதிக பட்சம் ப்ராக்டிசை நிறுத்தி வைக்க கூடிய அளவுக்கு தண்டனை பெற்று தரக் கூடிய சட்டம் அடுத்த ஆண்டு நிறைவேற இருக்கிறது… அதுக்கு அப்புறம் தெரியும் நீங்கள் கூறிய இலட்சணம்…

            • // மறைமுகப் பொருளில் உங்கள் வழக்குரைன்ஜர் ஒரு போலி என்று ஒத்துக்கொள்கிரீர்களே…!!!! //
              உங்கள் புறிதலில் தவறு என்று எண்ணுகிறேன். நான் எந்த அமைப்பையும் சார்ந்தவன் இல்லை. இங்கே கருத்து எழுதும் நான் ஈழத்தில் இருந்து எழுதிகிறேன் என்பதை நண்பர் அறிய வேண்டுகிறேன்.

              //போலிகளுக்கு மட்டுமல்ல, பொய்யர்களுக்கு, புரட்டர்களுக்கு, தீவிரவாதிகளுக்கு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கடுங்குற்றம் செய்தவர்களுக்கு கூட எம் நாட்டு நீதிமன்றங்களில் தங்கள் தரப்பு வாதத்தை கூறி சொல்லாட எமது சட்ட புத்தகத்தில் இடம்//

              பொய்யர்களுக்கு, புரட்டர்களுக்கு, தீவிரவாதிகளுக்கு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கடுங்குற்றம் செய்தவர்களும் வாதட முடியும் என்பது உங்கள் தேசத்தில் மட்டும் அல்ல உலகின் பெரும்பாலான சட்ட புத்தகங்கள் அப்படித்தானே சொல்லுகின்றன. ஆனால் தமக்கு தாமே சொல்லடா வரையறு உண்டு நண்பரே. தங்கள் அதை அறிவீர் என நன்புகிறேன்.

              // அதிக பட்சம் ப்ராக்டிசை நிறுத்தி வைக்க கூடிய அளவுக்கு தண்டனை பெற்று தரக் கூடிய சட்டம் அடுத்த ஆண்டு நிறைவேற இருக்கிறது… அதுக்கு அப்புறம் தெரியும் நீங்கள் கூறிய இலட்சணம்…//

              சிரிப்புதான் பதிலாக தரமுடியும். நீங்கள் கூறிய அந்த சட்டம் adutha வருட இறுதிக்குள் நிறைவேற்றபடவிடின் நீங்க என்ன செய்வீர் என்பதை கொஞ்சம் எனக்கு அறியதருங்களேன்.

              • \\இந்திய நீதிமன்றங்கலின் லட்சனத்தை அரிவதர்குதான்\\
                \\இங்கே கருத்து எழுதும் நான் ஈழத்தில் இருந்து எழுதிகிறேன் என்பதை நண்பர் அறிய வேண்டுகிறேன்\\
                ஈழத்திலிருக்கும் உங்களுக்கு இந்திய நீதிமன்றங்களின் இலட்சணத்தை அறிய இருக்கும் ஆவலை கண்டு வியக்கிறேன்… உலகின் மிகப்பெரும் இனப்படு கொலை செய்த கொலை குற்றவாளி தேசத்தின் நீதி மன்றங்கள் என்ன தூங்கி கொண்டா இருக்கின்றன? இந்திய நீதி மன்றங்கள் பால் காட்டும் ஆவலை நீர் உமது கருப்பு நீதி(யற்ற) மன்றங்களின் அவலட்சணத்தை ஆராய காண்பீராக!

                \\நீங்கள் கூறிய அந்த சட்டம் அடுத்த வருட இறுதிக்குள் நிறைவேற்றபடவிடின் நீங்க என்ன செய்வீர்\\
                பில் வரும், பாஸ் ஆகுதா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்…

                • //ஈழத்திலிருக்கும் உங்களுக்கு இந்திய நீதிமன்றங்களின் இலட்சணத்தை அறிய இருக்கும் ஆவலை கண்டு வியக்கிறேன்… உலகின் மிகப்பெரும் இனப்படு கொலை செய்த கொலை குற்றவாளி தேசத்தின் நீதி மன்றங்கள் என்ன தூங்கி கொண்டா இருக்கின்றன? இந்திய நீதி மன்றங்கள் பால் காட்டும் ஆவலை நீர் உமது கருப்பு நீதி(யற்ற) மன்றங்களின் அவலட்சணத்தை ஆராய காண்பீராக//

                  உலகத்தின் மிகப்பெரும் இனப்படு கொலை செய்த இலங்கை சிங்கள அரசு நீதிமன்றம் நீதியின் கல்லரை என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் இனப்படு கொலைக்கு உற்ற துனையாக இருந்த இந்திய அரசின் நீதிமன்றத்தின் இலட்சணம் எப்படி இருக்கு என்பதை தெரிந்து கொள்வதற்காக தான்?

            • //மறைமுகப் பொருளில் உங்கள் வழக்குரைன்ஜர் ஒரு போலி என்று ஒத்துக்கொள்கிரீர்களே…!!!!
              போலிகளுக்கு மட்டுமல்ல, பொய்யர்களுக்கு, புரட்டர்களுக்கு, தீவிரவாதிகளுக்கு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கடுங்குற்றம் செய்தவர்களுக்கு கூட எம் நாட்டு நீதிமன்றங்களில் தங்கள் தரப்பு வாதத்தை கூறி சொல்லாட எமது சட்ட புத்தகத்தில் இடம் இருக்கிறது நண்பரே…//

              இருதரப்பு வாதங்களையும் கேட்டால் தான் அது நீதிமன்றம், என்னமோ இந்திய நீதிமன்றங்களை தவற உலகத்தில் வேறு எங்குமே இல்லாதது போல் எதற்கு ஒரு வாதம்.

              //பொது நல வழக்கு என்ற அரசியல் சட்ட உரிமையை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்று தெரிந்திருந்தும் ஒரு பப்ளிசிடிக்காக வழக்கு போட்டு நேரத்தை வீணடிக்கும் வக்கீல்களுக்கு சுயநலமான பொது நல வழக்கு போட்டதற்காக நீதிமன்ற அவமதிப்புக்கான அதிக பட்சம் ப்ராக்டிசை நிறுத்தி வைக்க கூடிய அளவுக்கு தண்டனை பெற்று தரக் கூடிய சட்டம் அடுத்த ஆண்டு நிறைவேற இருக்கிறது… அதுக்கு அப்புறம் தெரியும் நீங்கள் கூறிய இலட்சணம்…//

              அப்ப என்ன சொல்லவறீங்க இனிமேல் யாராச்சும் பொது நல வழக்கு தொடுக்க வேண்டும் என்றால் அது நீச்சயம் வெற்றி பெறும் வழக்கா இருக்க வேண்டும் அப்படிதானே? ஒரு வழக்கு வெற்றி அடையும் என்று எத வைத்து கனிப்பது? வழக்கறிஞ்சர் பப்லிஸிட்டி எல்லாம் சும்மா ஒரு ஏற்க தக்க வாதமே இல்லை. நீங்கள் சொல்லும் சட்டம் இயற்ற பெற்றால் அது நீங்கள் சொல்லும் ஜனநாயக்த்தின் நகைப்பு தான்.

        • அப்ப இது வரைக்கும் உங்க நீதிமன்றங்களில் எதுவுமே அம்பலமாகள அப்படிதானே?

          ஓ வழக்கோட வெற்றிதான் வழக்கறிஞ்சர்களை போலியாளர்களாகவும் நேர்மையானவர்களாகவும் தீர்மானம் செய்யுதா? சரி அப்ப சமச்சீர் கல்வி பொது நல வழக்கில் வெற்றி பெற்ற வழக்கறிஞ்சர் நேர்மையாலர் தோல்வியுற்ற அரசு வழக்கறிஞ்சர் போலி அப்படி தானே?

  10. //ஈழத்திலிருக்கும் உங்களுக்கு இந்திய நீதிமன்றங்களின் இலட்சணத்தை அறிய இருக்கும் ஆவலை கண்டு வியக்கிறேன்… உலகின் மிகப்பெரும் இனப்படு கொலை செய்த கொலை குற்றவாளி தேசத்தின் நீதி மன்றங்கள் என்ன தூங்கி கொண்டா இருக்கின்றன? இந்திய நீதி மன்றங்கள் பால் காட்டும் ஆவலை நீர் உமது கருப்பு நீதி(யற்ற) மன்றங்களின் அவலட்சணத்தை ஆராய காண்பீராக!//

    இலங்கை நீதிமன்றங்களின் அநீதியான போக்கும் அரசியலமைப்பின் அநீதியும் தெரிந்துதான் தமிழர்கள் மட்டும் அல்ல சிங்களவர்களும் முதலில் சாத்வீகமாவும் பின் ஆயுதம் ஏந்தியும் போராடினார்கள் இப்போதும் போரடிக்கொண்டிருகிரர்கள். படுகொலைகளை செய்த எந்த தலைவரையும் அவர் ஆட்சியில் இருக்கும்வரை எந்த உள்நாட்டு நீதிமன்றங்களும் விசாரித்ததில்லை. உதரணத்துக்கு ஈழத்தில் இந்திய படைகளை ஏவி பத்தாயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜிவை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்க முடிவதில்லை.

    அதுபோகட்டும் மாவோயிஸ்ட் என்று காரணம் காட்டி அலுமினிய தாதுக்காக பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக செயல்பட்டு 5000 மலைவாழ் மக்களை படுகொலை செய்த இப்போதைய ஆட்சியாளர்கள் மீது உங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா?

    //அளவுக்கு தண்டனை பெற்று தரக் கூடிய சட்டம் அடுத்த ஆண்டு நிறைவேற இருக்கிறது… //
    //பில் வரும், பாஸ் ஆகுதா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்…//

    சிரிப்பை மட்டுமே இதற்க்கு பதிலாக தரமுடியும்.

    • //சிங்களவர்களும் முதலில் சாத்வீகமாவும் பின் ஆயுதம் ஏந்தியும் போராடினார்கள் இப்போதும் போரடிக்கொண்டிருகிரர்கள்//
      சிங்களவர்களோடு சேர்ந்து போராடிக்கொண்டே இருங்கள்… நியாயம் கிடைக்கும்… 🙂

      \\5000 மலைவாழ் மக்களை படுகொலை செய்த இப்போதைய ஆட்சியாளர்கள் மீது உங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா?\\
      எமது உள்நாட்டு பிரச்னை.. அந்நிய நாட்டு பிரஜைகைளோடு அதை விவாதித்து அவர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை…

      தற்போதைய சூழ்நிலையில் உலகிலயே மிகவும் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் ஈழ மக்கள், இத்தருணத்தில் நீங்கள் உங்கள் வரலாற்று அறிவையும், ஆராயும் தெரிவையும் உம் மக்களை காப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவதே சால சிறந்தது…

      உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பிரச்னைகள் இருக்கின்றன.. இந்தியாவை பற்றி நீங்கள் சிந்தித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்…

      இங்குள்ளவர்கள் தான் அகதிகள் முகாமில் துன்புற்று வாடி வதங்கும் தொப்புள் கொடி உறவுகளை விடுத்து, ஈழத்து மக்களுக்காக ஓட்டு போராட்டங்கள் நடத்தி ஊரை ஏமாற்றுகின்றனர் என்றால், அங்குள்ளவர்கலாவது தமது முன்னேற்றத்துக்கு போராடலாமே…

      \\சிரிப்பை மட்டுமே இதற்க்கு பதிலாக தரமுடியும்.\\
      ஈழம் எரிகிறது, அழுகிறது என்றெல்லாம் பிதற்றும் தமிழ் கூட்டமைப்புகள் உங்கள் சிரிப்பில் இறைவனை காண்பார்களாக…

      • //சிங்களவர்களோடு சேர்ந்து போராடிக்கொண்டே இருங்கள்… நியாயம் கிடைக்கும்… //

        சிங்களவர்களோடு சேர்ந்து போராடினார்கள் என்று நான் சொல்லாததை சொன்னதாக ஏன் சொல்கிறீர்கள் ??

        //எமது உள்நாட்டு பிரச்னை.. அந்நிய நாட்டு பிரஜைகைளோடு அதை விவாதித்து அவர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை… //

        இதை நான் ஈழத்தில் இருந்து எழுதுவதாக சொன்ன பொழுதே சொல்லி இருந்தால் நாகரீகமாக இருந்திருக்கும்.

        //இத்தருணத்தில் நீங்கள் உங்கள் வரலாற்று அறிவையும், ஆராயும் தெரிவையும் உம் மக்களை காப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவதே சால சிறந்தது… //

        ஈழத்தில் எங்கள் மக்களை காப்பதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் என்னை விட சிறந்த அறிவாற்றலும் ஆளுமையும் நிறைந்த தலைவர்கள் ஈழத்திலும் புலத்திலும் ஏராளம் உள்ளனர். அத்தலைவர்களின் கீழ் ஒன்றிணைந்து போராடுவது தான் சால சிறந்தது என்பது நாங்களும் அறிவோம்.

        //ஈழம் எரிகிறது, அழுகிறது என்றெல்லாம் பிதற்றும் தமிழ் கூட்டமைப்புகள் உங்கள் சிரிப்பில் இறைவனை காண்பார்களாக…//

        ஈழம் எரிகிறது, அழுகிறது என்றெல்லாம் பிதற்றும் தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் எங்கள் சிரிப்பில் இறைவனை காணும்பொழுது இந்திய தேசத்தின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு சித்தம் கலங்கி இதயமும் நின்றுவிடும்.

        • //சிங்களவர்களும் முதலில் சாத்வீகமாவும் பின் ஆயுதம் ஏந்தியும் போராடினார்கள் இப்போதும் போரடிக்கொண்டிருகிரர்கள்//
          \\சிங்களவர்களோடு சேர்ந்து போராடினார்கள் என்று நான் சொல்லாததை சொன்னதாக ஏன் சொல்கிறீர்கள் ??\\

          சிங்களவன் சிங்களவனின் இனப்படுகொலை செயலை எதிர்த்து போராடுகிறான் என்று சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை… அதனால் அவனோடு சேர்ந்து போராடுங்கள் என்று நகை செய்தேன்…

          \\இதை நான் ஈழத்தில் இருந்து எழுதுவதாக சொன்ன பொழுதே சொல்லி இருந்தால் நாகரீகமாக இருந்திருக்கும்\\

          அநாகரீகமேயானாலும்… இந்த பதிலை நீர் எமக்கு திருப்பி சொல்ல வேண்டும், உமது விடயத்தில் மூக்கை நுழைத்து ஆதாயம் தேடும் சுய நல வாதிகளுக்கும் சொல்ல வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையில் கூறியுள்ளேன்..

          \\ஈழம் எரிகிறது, அழுகிறது என்றெல்லாம் பிதற்றும் தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் எங்கள் சிரிப்பில் இறைவனை காணும்பொழுது இந்திய தேசத்தின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு சித்தம் கலங்கி இதயமும் நின்றுவிடும்.\\
          ஆவலோடு அந்த நாளை எதிர்பார்க்கிறேன்…

          • இருகோடுகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும் வரை காத்திருப்போம். மிக்க நன்றி நண்பரே.

  11. //சிங்களவர்களோடு சேர்ந்து போராடிக்கொண்டே இருங்கள்… நியாயம் கிடைக்கும்//

    முதல்ல நீங்க எங்கள் உறவுகளின் விசயத்தில் முக்க நுலைப்பதை நிப்பாட்டுங்க. இதுக்கு முன்னாடி உள்ள பின்னூட்டத்தில் எல்லாம் ஈழத்த பத்தி ஏன் பேசுனீங்க?

    //எமது உள்நாட்டு பிரச்னை.. அந்நிய நாட்டு பிரஜைகைளோடு அதை விவாதித்து அவர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை… //

    இதே கேள்வியை அவரு திரிப்பு கேட்டா என்ன பன்னுவீங்க? காஸ்மீர்ல மட்டும் மத்த நாடு தலையிட கூடாது என்று சொல்லீட்டு இந்திய ஓநாய்கள் நீங்கள் எதற்கு இலங்கை உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டீர்கள்?

    //தற்போதைய சூழ்நிலையில் உலகிலயே மிகவும் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் ஈழ மக்கள், இத்தருணத்தில் நீங்கள் உங்கள் வரலாற்று அறிவையும், ஆராயும் தெரிவையும் உம் மக்களை காப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவதே சால சிறந்தது…//

    நாங்க உங்க கிட்ட கேட்டோமா உலகத்துல மிகவும் பாதிக்கபட்ட மக்கள் யாருனு? ஈழ மக்களை இன படுகொலை செய்ய அனைத்து காரியங்களையும் செய்துவிட்டு இப்ப வரலாற்று அறிவு, ஆராய்ச்சி என்று நக்கல் பேசுறீங்க. உங்க நரித்தனமான அறிவுரை எங்கள் உறவுகள் கோரவில்லை.

    //இங்குள்ளவர்கள் தான் அகதிகள் முகாமில் துன்புற்று வாடி வதங்கும் தொப்புள் கொடி உறவுகளை விடுத்து, ஈழத்து மக்களுக்காக ஓட்டு போராட்டங்கள் நடத்தி ஊரை ஏமாற்றுகின்றனர் என்றால், அங்குள்ளவர்கலாவது தமது முன்னேற்றத்துக்கு போராடலாமே…//

    ஈழ மக்கள் மட்டுமா அகதி முகாமில் துன்புற்று வாடிக்கொண்டு இருக்கிறார்கள்? ஒட்டு மொத்த தமிழர்களும் இந்தியாவில் அகதி போல தான் துன்புற்று வாடிக்கொண்டு இருக்கிறோம்.

    • \\இதே கேள்வியை அவரு திரிப்பு கேட்டா என்ன பன்னுவீங்க? காஸ்மீர்ல மட்டும் மத்த நாடு தலையிட கூடாது என்று சொல்லீட்டு இந்திய ஓநாய்கள் நீங்கள் எதற்கு இலங்கை உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டீர்கள்?\\
      நான் கேட்ட கேள்வியை நீ திருப்பி கேட்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.. நீ என்றைக்கு அப்படி கேட்கிறாயோ அன்றைக்கு எங்கள் தமிழகத்துக்கு விடிவு பிறக்கும்… உன்னை வைத்து ஒரு பெருங்கூட்டம் ஓட்டை பொறுக்குதையா.. நெஞ்சு பொறுக்குதில்லை அய்யா…

      ஈழர் விடயத்தில் தலையிடும் இங்குள்ளவர்களுக்கு (தமிழ் கூட்டமைப்போ, அரசாங்கமோ, எந்த அமைப்பாயினும் சரி) மூன்று வேலை சோறு கிடைக்கிறது, இருக்க இடம் இருக்கிறது, வாழ்க்கை வளமாக இருக்கிறது, அடுத்தவன் பிரச்னையை பஞ்சாயத்து பண்ண கிளம்பிவிட்டார்கள்… உனக்குத்தான் சோத்துக்கே வழி இல்லையே பிறகேன் இந்தியாவில பசு கண்ணு போட்டதா, ஆடு புழுக்கை போட்டதா என்ற கவலை எல்லாம் ?

      இங்கு உள்ளவன் தான் அரசியல் பண்ணுறான்… நீங்கள் என் அதை பார்த்து விளக்குக்கு மயங்கும் விட்டில்களாக இருக்கிறீர்கள்… இதுவரை உனக்காக ஏதாவது செய்திருக்கானா இன்றைக்கு இருக்கும் இந்த தமிழகத்து தமிழன், போராட்டம் என்ற பெயரில் பக்சே மீது ரிமோட் கண்ட்ரோல் வைத்து புழுதி வாரி தூற்றுவதை தவிர… இவனை நம்பாதே.. இவன் ஓட்டு வியாபாரி… தமிழ் பற்றை ஓட்டுக்காக கூவி கூவி மேடைகளில் விற்று கொண்டிருக்கும் காகித புலிகளை நம்பாதே என கனத்த இதயத்தோடு கூறுகிறேன்…

      \\ஈழ மக்கள் மட்டுமா அகதி முகாமில் துன்புற்று வாடிக்கொண்டு இருக்கிறார்கள்? ஒட்டு மொத்த தமிழர்களும் இந்தியாவில் அகதி போல தான் துன்புற்று வாடிக்கொண்டு இருக்கிறோம்\\
      அகதிகளின் துன்பங்களை அப்படி சுருக்கி விட முடியாது… இரண்டும் ஒன்றல்ல…

  12. //சிங்களவர்களோடு சேர்ந்து போராடிக்கொண்டே இருங்கள்… நியாயம் கிடைக்கும்… //

    சிங்களவர்களோடு சேர்ந்து போராடினார்கள் என்று நான் சொல்லாததை சொன்னதாக ஏன் சொல்கிறீர்கள் ??

    //எமது உள்நாட்டு பிரச்னை.. அந்நிய நாட்டு பிரஜைகைளோடு அதை விவாதித்து அவர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை… //

    இதை நான் ஈழத்தில் இருந்து எழுதுவதாக சொன்ன பொழுதே சொல்லி இருந்தால் நாகரீகமாக இருந்திருக்கும்.

    //இத்தருணத்தில் நீங்கள் உங்கள் வரலாற்று அறிவையும், ஆராயும் தெரிவையும் உம் மக்களை காப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவதே சால சிறந்தது… //

    ஈழத்தில் எங்கள் மக்களை காப்பதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் என்னை விட சிறந்த அறிவாற்றலும் ஆளுமையும் நிறைந்த தலைவர்கள் ஈழத்திலும் புலத்திலும் ஏராளம் உள்ளனர். அத்தலைவர்களின் கீழ் ஒன்றிணைந்து போராடுவது தான் சால சிறந்தது என்பது நாங்களும் அறிவோம்.

    //ஈழம் எரிகிறது, அழுகிறது என்றெல்லாம் பிதற்றும் தமிழ் கூட்டமைப்புகள் உங்கள் சிரிப்பில் இறைவனை காண்பார்களாக…//

    ஈழம் எரிகிறது, அழுகிறது என்றெல்லாம் பிதற்றும் தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் எங்கள் சிரிப்பில் இறைவனை காணும்பொழுது இந்திய தேசத்தின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு சித்தம் கலங்கி இதயமும் நின்றுவிடும்.

  13. அட லூசுப் பசங்களா, மலேசிய , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 1950 களிலிருங்து இந்த ஆதார் அட்டை இருக்கிறது. யாரும் உங்களைப்போல் புலம்பவில்லை. வினவுக்கு புதியதாக எதைப் பார்த்தாலும் அடி வயிற்றில் பீதி கிளம்புகிறது. அரசாங்கம் எதை செய்தாலும் குறை சொல்ல வேண்டும் என்பதுதான் “கட்சிக் கொள்கை”.

    • “nanthan” சுப்ரிம் கோர்ட்டை [தீர்பை] திட்டுகின்றார் போல !

      Nathan said://அட லூசுப் பசங்களா, மலேசிய , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 1950 களிலிருங்து இந்த ஆதார் அட்டை இருக்கிறது///

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க