ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்த போது கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பொன்னையன் ஆகியோர், ஜெயலலிதா பார்ப்பனர் என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை ஆட்சேபித்தார்களாம். “மாட்டுக்கறி சாப்பிடுகிற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க?”என்று எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பதிலளித்தாராம். இப்படி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து தனக்கு நெருங்கியவர்களிடம் சமீபத்தில் ஜெ. பேசிக்கொண்டிருந்ததாக ஒரு செய்தியை நக்கீரன் வெளியிட்டது.
உடனே அம்மாவின் விசுவாசிகள் கும்பல் கும்பலாக வந்து, போலீசின் பாதுகாப்போடு நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கிவிட்டுச் சென்றார்கள். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் நக்கீரன் அலுவலத்துக்கு அருகே அமைந்துள்ள ஜாம்பஜார் போலீசு நிலையத்தையே கண்ட்ரோல் ரூமாக மாற்றிக் கொண்டு, அங்கிருந்தபடி மேற்படி போரை வழிநடத்தியதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இந்தப் போரில் உயிர்ச்சேதம் இல்லையே தவிர, மற்றபடி தினகரன் அலுவலகத் தாக்குதலுக்கும் இதற்கும் ‘கொள்கைரீதியாக’ வேறுபாடு ஏதும் இல்லை.
அம்மாவின் படம் தாங்கிய அட்டையுடன் பத்திரிகையைக் கொளுத்துவது அம்மாவை அவமதிப்பதாக ஆகிவிடும் என்பதால், அம்மாவைப் பிய்த்துக் குப்பையில் வீசி விட்டு, உள்பக்கங்களை மட்டும் கொளுத்தினார்கள் உடன்பிறப்புகள். இதழை விற்கக்கூடாதென பெட்டிக்கடைக்காரர்கள் மிரட்டப்பட்டனர். ஏவல்துறை நக்கீரன் அலுவலகத்திற்குள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியது. நக்கீரன் அலுவலகத்துக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்துவது ஜனநாயக உரிமையைப் பறிப்பதாக இருக்கும் என்பதால், அந்த வட்டாரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் துணை ஆசிரியர் காமராஜுக்கு எதிராகத் தமிழகத்தின் பல பகுதிகளில் அம்மாவின் விசுவாசிகளால் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் புகார்கள் பதியப்பட்டன.
கிசுகிசு செய்திகளை நக்கீரன் மட்டுமின்றி, ஜு.வி., ரிப்போர்ட்டர், தினமணி, தினமலர், தினகரன் முதல் உலக உத்தமர் சோ வரை அனைவரும்தான் பிரசுரிக்கின்றனர். கிசுகிசுக்கள் மட்டுமின்றி, போயஸ் தோட்டம், கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி முதல் வெள்ளை மாளிகை வரையில் எங்கே என்ன பேசிக்கொண்டாலும், அவை அடுத்த வார தமிழ் பத்திரிகையில் எழுதப்பட்டு விடுகின்றன. ஜெ சசி மோதல் போயசுத் தோட்டத்துக்குள்ளே எப்படி நடந்தது, யார் என்ன வசனம் பேசினார்கள் என்பது குறித்து, பல “ஸ்கிரிப்டுகள்” நக்கீரன், ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல பத்திரிகைகளிலும் வெளிவந்தன. “நான் பேசியது உனக்கெப்படி தெரியும்?” என்று அப்போதெல்லாம் அம்மா கோர்ட்டுக்குப் போகவில்லை.
‘‘நக்கீரன் இதழ் ஜெயாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எந்தச் செய்தி வெளியிட்டாலும், அவரின் கருத்தையும் கேட்ட பிறகுதான் வெளியிட வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும்பொழுது, அதனை மீறி நக்கீரன் இதழ் இந்த மாட்டுக்கறி செய்தியை வெளியிட்டிருப்பது நீதிமன்றத்தையே அவமதிப்பதாக இருந்ததால், தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேற்படி கட்டுரையின் மூலம் அவமதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றம்தான் என்பதைப் புரட்சித்தலைவி தெளிவுபடுத்திய பின்னரும், “ஆத்தாளுக்கு விளக்கு போட்டு, வருத்தத்தை அம்மாவிடம் தெரிவிக்குமாறு” நக்கீரனுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். நக்கீரன் வருத்தமும் தெரிவித்து விட்டது.
இருப்பினும் அவமதிப்பை எற்படுத்திய இதழ் கடைகளிலிருந்து அநேகமாகப் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால், எதற்காக இந்தத் தண்டனை என்பதை வாசகர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது பற்றிச் செய்தி வெளியிட்ட இந்து நாளேடு, ஏன் தாக்கப்பட்டது என்பதை விளக்குமுகமாக, நக்கீரனின் மாட்டுக்கறி கதையை வெளியிட்டிருந்தது. மாட்டுக்கறி மேட்டரை ஆங்கிலத்தில் கிளப்புவது, பாரதிய ஜனதா ஆதரவுடன் தான் பிரதமராகும் வாய்ப்பைக் கெடுப்பதற்குத்தான் என்பது புரட்சித்தலைவிக்குத் தெரியாதா என்ன? அதனால்தான் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக நக்கீரன் மீது வழக்கு போட்ட ஜெ., தன்னை அவமதித்து விட்டதாக இந்து ஆசிரியர் என்.ராம் மீது நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் கொடுத்துள்ளார். என்.ராம் மீது நில அபகரிப்பு புகார், கோபால் மீது கொலை மிரட்டல் புகார் என்று சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் அளவு வழக்குகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் விசயத்துக்கு வருவோம்.
நக்கீரன் குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் தொடர்புடைய எம்.ஜி.ஆர்., எஸ்.டி. சோமசுந்தரம், கே.ஏ. கிருஷ்ணசாமி ஆகிய மூவர் மட்டுமின்றி, சம்மந்தப்பட்ட (அல்லது படாத) மாடும் உயிரோடு இல்லை என்பதால், அவர்கள் கருத்தை அறிய முடியவில்லை. உயிரோடு இருக்கும் பொன்னையன், தொடர்ந்து உயிரோடு இருக்க விரும்புவதால், புரட்சித்தலைவர் அப்படி சொல்லவே இல்லை என்றும் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், புரட்சித்தலைவிக்கு சமைக்கவே தெரியாது என்பதால், புரட்சித்தலைவர் அப்படிச் சொல்லியிருக்கவே முடியாது என்றும் அம்மாவுக்கு சமைக்கத் தெரியும் என்று கூறியிருப்பதே அபாண்டமானதொரு அவதூறு என்ற கோணத்திலும் இதனைத் தெளிவுபடுத் தியிருக்கிறார். நடுநிலையாளர்களான சோ ராமஸ்வாமி, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் போன்றோர், “ஜெயாவின் புகழுக்கும், நற்பெயருக்கும், செல்வாக்கிற்கும் களங்கம் விளைவிக்கும்” நோக்கில்தான் நக்கீரன் இச்செய்தியினை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுக் கண்டித்துள்ளனர்.
அவ்வளவு பயங்கரமான அவதூறு அந்த செய்தியில் என்ன இருக்கிறது? ‘மாமி’ என்ற சொல்லை யாரும் அவதூறாகக் கருத வாய்ப்பில்லை.‘நான் ஒரு பாப்பாத்திதான்’ என்று சட்டமன்றத்தில் கம்பீரமாக அறிவித்துக்கொண்டவர் அம்மா. எஞ்சியிருப்பது மாட்டுக்கறி மட்டும்தான். ஜெயா மாட்டுக் கறி உண்ணும் பழக்கமுடையவர் என்பது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கு மாட்டுக் கறி சமைத்தும் போட்டதாக நக்கீரன் கூறியுள்ளது. அவாள் இவாள் எல்லாம் கூச்சலிடுவதும், குமுறுவதும் இதற்காகத்தான்.
மாட்டுக் கறியை மிகக் கேவலமான உணவாகவும் அதனை உண்போரை குறிப்பாக, தாழ்த்தப்பட்டோரையும், முசுலீம்களையும் தீண்டத்தகாதவர்களாகவும் கருதும் பார்ப்பன ஆதிக்க சாதி மனோபாவத்திலிருந்துதான் நக்கீரன் வெளியிட்டுள்ள செய்தியைக் கண்டு பார்ப்பனக் கும்பல் குதிக்கிறது. இப்பிரச்சினையில் பார்ப்பனக் கும்பல் வெளிப்படுத்தும் சாதி வெறியும், தீண்டாமை வெறியும்தான் அநாகரிகமானது, கண்டிக்கத்தக்கது. நியாயமாக, மாட்டுக் கறி குறித்த தீண்டாமை மனோபாவத்தை வெளிப்படுத்தியிருக்கும் இப்பார்ப்பனக் கும்பலின் மீதுதான் வன்கொடுமை சட்டம் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால், மாட்டுக் கறி உண்பது கேவலமானது என்ற பார்ப்பன ஆதிக்க சாதி மனோபாவம் நீதிமன்றம் வரை புரையோடியிருக்கிறதே! நீதிமன்றத்தின் மீது யார் வன்கொடுமை வழக்கு தொடுப்பது?
எனவே, பிரச்சினையை வேறு கோணத்திலிருந்துதான் அணுக வேண்டும் போலும்! வேதத்துக்கு இணையான தொன்மை வாய்ந்ததும், வேதங்களால் விதந்து போற்றப்பட்டதும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இனியதும், யாக்ஞவல்கியர் முதலான உபநிடத கால முனிவர்களால் விரும்பிச் சுவைக்கப்பட்ட புனித உணவுமான மாட்டிறைச்சியை இழிவுபடுத்தியதன் மூலம், வேதஇதிகாசங்களை இழிவுபடுத்தி, தங்கள் மனதைப் புண்படுத்தியதற்காகவும் துக்ளக், தினமணி போன்ற பத்திரிகைகள் மீது ‘ஹிந்துக்கள்’ வழக்கு தொடுக்கலாம். மாட்டுக் கறியின் புனிதத் தன்மையை நிறுவுவதற்கான அசைக்க முடியாத வேத சாத்திர ஆதாரங்களைப் பேராசிரியர் ஜா எழுதிய பசுவின் புனிதம் நூலிலிருந்து அவர்கள் திரட்டிக் கொள்ளலாம்.
மாட்டுக் கறி சமைத்தார், சுவைத்தார் என்பன போன்ற புனிதமற்ற அவதூறுகள் மூலம் ஜெயலலிதாவின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் கற்பித்து விட்டதாகக் குமுறும் ஹிந்து தர்மத்தின் காவலர்கள், எம்.ஜி.ஆர். இறந்தவுடன் தானும் உடன்கட்டை ஏறப்போவதாகச் சொல்லி, தனக்குத்தானே களங்கம் கற்பித்துக் கொண்டாரே செல்வி ஜெயலலிதா, அந்தக் ‘களங்கத்தை’ எந்த நீதிமன்றத்தில் கழுவுவார்கள்? “திருவளர்ச்செல்வியோ நான் தேடிய தலைவியோ என்ற பாட்டின் மூலம் என்னை அடையாளம் காட்டினார் புரட்சித் தலைவர்” என்று சில மாதங்களுக்கு முன் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பாட்டுப் பாட, அதனை மேசையைத் தட்டி வரவேற்றார்களே ரத்தத்தின் ரத்தங்கள், அந்த மானக்கேட்டுக்கு எந்தக் கோவாலு மீது கேஸ் போடுவது?
திருவளர்ச்செல்வியின் தனிப்பட்ட வாழ்க்கை புரட்சித்தலைவியின் பொதுவாழ்க்கையைப் பிரசவிக்கிறது. மறுகணமே புரட்சித்தலைவியின் பொதுவாழ்க்கை, “அன்புத்தோழி, வளர்ப்புமகன், கொடநாடு எஸ்டேட்..” என்று தனிப்பட்ட வாழ்க்கையைக் கருத்தரிக்கிறது. பிறகு தோழிகளுக்கிடையில் வெடித்த தனிப்பட்ட முரண்பாடுகள், தமிழகத்தில் ஒரு ‘அரசியல் புயலை’ உருவாக்குகின்றன. பொதுவாழ்க்கையிலிருந்து ஊழலை ஓட ஓட விரட்டுகிறார் புரட்சித்தலைவி. தனிவாழ்வும் பொதுவாழ்வும் தண்டவாளம் போலப் பிரிந்தும் பிணைந்தும் தோற்றம் காட்டும் இவ்வுலகில் இவற்றைப் பிரித்தறிவது எப்படி?
கொ.ப.செ. என்பது பொதுவாழ்க்கை, மாட்டுக்கறி தனிப்பட்ட வாழ்க்கையா? ஜெயேந்திரனின் துறவறம் பொதுவாழ்க்கை, அன்னாரின் ராசலீலைகள் தனிப்பட்ட வாழ்க்கை என்பது போலவா? எது நற்பெயர்,எது களங்கம்? எது சட்டமன்ற மேசை, எது நக்கீரன்? எது ஜீவாத்மா, எது பரமாத்மா? எது மாயை, எது உண்மை? சோ ராமஸ்வாமி அய்யர்தான் விளக்கமளிக்க வேண்டும்.
கணவன் இறந்தவுடன் மனைவியை உடன் சேர்த்து எரிப்பது காட்டுமிராண்டி தனமானது என்று வெள்ளைக்காரன் தடை செய்த சடங்கை, தான் செய்திருக்கலாம் என்று ஒரு பெண் வேதனையுடன் கூறியது அன்று அவருக்கு நேர்ந்த சில அவமானங்களின் எதிர்வினை.இறுதி காலத்தில் உடனிருந்து கவனித்தவரை சவ ஊர்தியில் அவர் உடலுக்கு பக்கத்தில் நிற்க கூட எதிர்ப்பு தெரிவித்த கல்நெஞ்சர்களே அந்த வார்த்தையை கேட்டு கலங்கினார்கள்.நீங்கள் அதை காமெடி செய்கிறீர்கள்.
காமடி செய்யவில்லை அப்பு. ஜெ. எதையும் தாங்கும் இதயம் தான் என்பது நமக்கு தெரியும். அவுக இது வரை கடந்துவந்த பாதையை கவணித்தாலே தெரியும். எவ்வளவு இன்னல்லகளை சந்தித்து மக்களுக்கு தொண்டுசெய்தார் என்று. அது சரி கணவன் இறந்தவுடன் மனைவி உடன் கட்டையேரும் பழக்கம் உண்டு. இந்தம்மா எதுக்கு உடன் கட்டையேருறதா சொன்னாங்க?
//கணவன் இறந்தவுடன் மனைவியை உடன் சேர்த்து எரிப்பது காட்டுமிராண்டி தனமானது என்று வெள்ளைக்காரன் தடை செய்த சடங்கை, தான் செய்திருக்கலாம் என்று ஒரு பெண் வேதனையுடன் கூறியது//
இந்த அமையார் செல்வி அல்லவா? இவர் ஏன் அவருடன் செல்ல வேண்டும்.
//இறுதி காலத்தில் உடனிருந்து கவனித்தவரை //
இது உண்மையா!!!
வெள்ளைக்காரன் தடை செய்தது உங்களுக்கு காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றுகிறது போலும். உங்கள் பதிவில் அந்த ஏக்கம் தெரிகிறதே. திருமணம் ஆகாமல் ஒரு பெண் உடன் கட்டை ஏறுவது என்பது (உங்களின் வழக்கப்படி) உங்களுக்கே அவமானமாகத் தோன்றவில்லையா? சிறிது அக்கம் பக்கம் பாருங்கள் – கணவன் இருக்கும் போதும், கணவன் இறந்த பிறகும் குடும்பப் பெண்கள் படும் துயரங்களையும், அவமானங்களையும்.
i agree this is wrong and what J did back then was a political emotional stunt to keep the ADMk Thondars on her side whereas Janaki was to meek and quiet to do anything about it.Anyway it is a tradition of the medieval ages and widows dont need to worry too much and move on in life.
வெள்ளைக்காரர்கள், உடன் கட்டை ஏறும் உங்கள் தர்மத்தை தடை செய்தது காட்டுமிராண்டித்தனம் என்பது போல் இருக்கிறது உங்களது சொல். உங்கள் தர்மப்படியே, தாலி கட்டிய மனைவி தான் உடன் கட்டை ஏற முடியும். ஜெயலலிதா உடன் கட்டை ஏறலாம் என்று சொன்னது முதலில் உங்களுக்கு அவமானமாகத் தெரியவில்லையா? (ஜெயலலிதா அவமானத்தைப் பற்றி யோசித்திருப்பாரா என்பது ?) சற்றே அக்கம் பக்கம் பாருங்கள் – தாலி கட்டிய மனைவியாக இருப்பவர்கள் தங்கள் கணவர்கள் உயிரோடு இருக்கும் போதும், இறந்த பிறகும், அவரவர்களின் கணவர்களாலும், உறவினர்களாலும் படும் துயரங்களையும், அவமானத்தையும் எப்படி சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை.
\\தடை செய்த சடங்கை, தான் செய்திருக்கலாம் என்று ஒரு பெண் வேதனையுடன் கூறியது அன்று அவருக்கு நேர்ந்த சில அவமானங்களின் எதிர்வினை.இறுதி காலத்தில் உடனிருந்து கவனித்தவரை சவ ஊர்தியில் அவர் உடலுக்கு பக்கத்தில் நிற்க கூட எதிர்ப்பு தெரிவித்த கல்நெஞ்சர்களே அந்த வார்த்தையை கேட்டு கலங்கினார்கள்//
பார்ப்பனர்கள் எப்படிலாம் வரலாற்றை திரிப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஜெ.அவமானத்தால் குன்றிப்போய் உடன்கட்டை ஏற நினைச்சதா சொல்லல.பாசிச கோமாளி எம்.ஜி.ஆர் செத்து போன பின் அவரது மனைவி என்ற ஒரே ஒரு ”தகுதி” ய காட்டி ஜானகி அம்மயார வச்சு கட்சிய கைப்பத்த ஆர்.எம்.வீரப்பன் கும்பல் முயன்றது.அதே போன்ற தகுதி தனக்கும் இருக்குன்னு காட்டிக்கவே ஜெ.அப்டி சொன்னார்.
இறுதி காலத்துல உடனிருந்து கவனிச்சாராம்.என்ன எழவெடுத்த கவனிப்பு தெரியுமா.ராஜீவ் காந்திக்கு உட்ட வேண்டுகோள். எம்.ஜி.ஆர் ஐ முதல்வர் பதவிலேர்ந்து தூக்கிட்டு என்னைய முதவராக்குங்க.இத விட யார் கவனிக்க முடியும்.
யாருக்கு கல்நெஞ்சம்.நாப்பது வருஷம் அந்த கோமாளியோடு குடும்பம் நடத்தி வாழ்ந்த ஜானகி அவர மோர்ல விஷம் வச்சு கொன்னுட்டாங்கன்னு ஆண்டிபட்டி தொகுதி பிரச்சாரத்துல சொல்லி ஜானகி தோற்க காரணமாயிருந்த ஜெயலலிதாவுக்குத்தான் கல் நெஞ்சம்.
\\கல்நெஞ்சர்களே அந்த வார்த்தையை கேட்டு கலங்கினார்கள்//
எப்படி கலங்கினாங்கன்னு பாருங்க.சிலரை பார்த்தால் கும்பிட தோன்றும்.சிலரை பார்த்தால் கூப்பிடத்தோன்றும். இதுதான் செஷாத்த்ரிக்கு கலக்கமாக தோன்றியது போல.
அந்த கால கட்டத்து தமிழக அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து கிடந்தது.எம்.ஜி.ஆர்.என்ற வக்கிரம் புடிச்ச கிறுக்கன் ஜெ.வை கோ.ப.செ. ஆக்குறதும்,பதவிய புடுங்கிறது,அப்புறம் ராஜ்ய சபா எம்.பி. ஆக்குறது,ஜெ.வின் செல்வாக்கிலிருந்து அந்த கோமாளிய மீட்க எதிர் கோஷ்டி வெண்ணிற ஆடை நிர்மலாவை பயன்படுத்துனது,அவர கோமாளி எம்.ஜி.ஆர்.எம்.எல்.சி ஆக்கினது,அவர் மஞ்ச கடுதாசி கொடுத்தத ஜெ.கோஷ்டி கிளப்பி எம்.எல்.சி பதவிய காலி பண்ணுனது, ஆத்திரம் தலைக்கேறி கோமாளி மேல்சபை இல்லாமல் ஆக்கியது,இதுவெல்லாம் அரசியல்னு மக்களை நம்ப வச்சு கிசு கிசு பத்திரீக்கைகள் ஜூனியர் விகடன் நக்கீரன் வளர்ந்தது இப்படியாக ஓடிய சாக்கடையில் தோன்றிய நோய்தான் இன்றைய அ.தி.மு.க.வாக தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது.
மாட்டுக்கறி களங்கத்திற்காக குமுறுபவர்கள், எம்.ஜி.ஆர். இறந்தவுடன் உடன்கட்டை ஏறப்போவதாகச் சொல்லி தனக்குத்தானே களங்கம் கற்பித்துக் கொண்டார் செல்வி ஜெயலலிதா, அந்தக் ‘களங்கத்தை’ எந்த நீதிமன்றத்தில் கழுவுவார்கள்?
சூப்பர் கேள்வி.
அம்மா மாட்டு கரி சாப்பிட்டா என்ன, சாப்பிடா விட்டால் என்ன!நமக்கு தேவை ஆட்சி மாட்ர்ரம்!…இனி தமிழ் நாட்டில் பாலும் தேனும் ஓடும். என்ன கொடும் சார் இது !
// மாட்டுக்கறி களங்கத்திற்காக குமுறுபவர்கள், எம்.ஜி.ஆர். இறந்தவுடன் உடன்கட்டை ஏறப்போவதாகச் சொல்லி தனக்குத்தானே களங்கம் கற்பித்துக் கொண்டார் செல்வி ஜெயலலிதா, அந்தக் ‘களங்கத்தை’ எந்த நீதிமன்றத்தில் கழுவுவார்கள்? //
தனக்கெதிராக தானே வழக்கு தொடர சட்டத்தில் இடம் இருக்கிறதா?!
You guys continue to blabber only to get noticed. Anti Brahmanism is a stance taken by just few thousands, particularly supposedly rational people like you. Rest of the guys know that this is just a useless publicity stunt, by a group of people suffering from identity crisis.
Grow up guys, write something useful and sensible. Don’t hold on to stupid and silly issues which actually hold no value at all.
சம்பவத்தில் தொடர்புடைய எம்.ஜி.ஆர்., எஸ்.டி. சோமசுந்தரம், கே.ஏ. கிருஷ்ணசாமி ஆகிய மூவர் மட்டுமின்றி, சம்மந்தப்பட்ட மாடும் உயிரோடு இல்லை என்பதால், அவர்கள் கருத்தை அறிய முடியவில்லை. உயிரோடு இருக்கும் பொன்னையன், தொடர்ந்து உயிரோடு இருக்க விரும்புவதால்…இதை எப்படித்தான் டீல் செய்வது மை லார்ட்
ஜே போன ஆண்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டார் என்று புளுகுச் செய்தியைப் போட்டு எதிர்ப்பு கிளம்பினால், பார்ப்பனக் கும்பலின் சீர்திருத்தத் திருமண விரோத வெறி என்றும் பதிவு போடுவீர் போல..
“Don’t hold on to stupid and silly issues which actually hold no value at all.” Well said Prabhu…
All must understand and value his points…
We discuss about Brahiminism and he gave statements as above… Good…
ரொம்ப கரெக்ட்….மாட்டுக்கறீ ஜயர் சாப்பிடுரான் சொன்னா இந்துக்களுக்கு கோவம் வரதான் செய்யும்…ஏன்… முசுலிம் ஒருத்தன் பன்னி கறீ சாப்பிடுரானு எழுதினா..உங்களூக்கு ஒண்ணும் வராது??? சும்மா சீண் போடாதே மாமு…
Cow is a sacred animal for Hindus. So, they can’t eat beef. Would you guys also make fun of muslims by saying that they eat pork during political meetings?
புனிதத்தையெல்லாம் கிடப்பில் போடுங்கள். மாட்டுக்கறி எவ்வளவு சுவையானது என்பது அதை சாப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும். சாப்பிட்டுப்பாருங்கள். அதன் சுவை நாவிலேயே ஒட்டிக்கொள்ளும். மாட்டுக்கறியைப் போல் கன்றுக்கறி, அதுவும் பால்குடி மறவா கன்றுக்கறி இன்னும் சுவையாக இருக்கும். அதுவும் தயிரில் சமைத்தது. கேட்கவே நாக்கில் எச்சில் ஊறுகிறதே. மாட்டின் நெஞ்சுக்கறிதான் மிகவும் சுவையானது. மேலும் அதிக மாட்டுக்கறி சமைக்கும் விவரங்களுக்கு
http://www.finecooking.com/articles/how-to/roast-beef-filet.aspx
http://busycooks.about.com/od/howtocook/a/howtocookbeef.htm
http://en.wikipedia.org/wiki/Beef
மாட்டு கறியும் பன்றி கறியும்
ஏழை தலித் மக்கள் மாட்டு கறி மட்டும் அல்ல பன்றி கறியும் சாப்பிடுபவர்கள். தமிழ்நாட்டு-ல “பகுத்தறிவாளர்” . ‘முற்போக்காளர்’ என்று அவங்களே சொல்லிட்டு சுத்திரவங்க, நைசா பன்றிக்கறி விஷயத்த மட்டும் அமைதியா அமுக்கிடுவாங்க. ஏனா அப்படி சொன்னா அது “பகுத்தறிவு” உள்ள இஸ்லாம் மதத்துக்கு எதிரா ஆயிடுமே அதனாலே. ஹி ஹி 🙂
//தமிழ்நாட்டு-ல “பகுத்தறிவாளர்” . ‘முற்போக்காளர்’ என்று அவங்களே சொல்லிட்டு சுத்திரவங்க, நைசா பன்றிக்கறி விஷயத்த மட்டும் அமைதியா அமுக்கிடுவாங்க. ஏனா அப்படி சொன்னா அது “பகுத்தறிவு” உள்ள இஸ்லாம் மதத்துக்கு எதிரா ஆயிடுமே அதனாலே//
பன்றியையும் பன்றிகறியையும் இஸ்லாமிய மக்கள் என்றும் ஏற்றுக் கொண்டது கிடையாது ஆதி தொட்டு அவர்கள் அதை கடைப்பிடித்து வந்தவர்களாகவே இருந்தார்கள் இருக்கிறார்கள்.
ஆனால் ருக் வேதத்தில் பசுவின் மாமிசத்தை எப்படி பங்கு பொட்டுக் கொள்ள வேண்டும் என்று விரிவாக சொல்லி விட்டு பின்பு சாதியின் அடிப்படையில் பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு பசுவை கோமாதாவாகி ஆவின் கோமியத்தை தீர்த்தமாக்கி மக்களை முட்டாலாக்கி பின்பு மாட்டு இரச்சியை சாப்பிடும் மக்களை ஒடுக்கப்பட்ட சாதினராக்கி செய்யும் கீழ்தனத்துக்காக தான் “பகுத்தறிவாளர்களும் முற்போக்காளர்களும்” மாட்டுக் கறி சாப்பிடுவதில் தவறு இல்லை என்று முழக்கம் இடுகிறார்கள்.
these things are no reason for it.hindus are independent,there is nothing that forces anyone to follow the rigveda to the last line,it is a flexible religion and people gave up beef later.there is nothing wrong in changing your beliefs and brahmins didn’t stop eating beef to showcase their superiority,it happened due to a compromise with janinism and buddhism which asked their followers to give up eating animals and live in coherence with nature.
அட்ரா அவன்,நக்கீரன் மாட்டிறைச்சி சாப்பிட சொன்னதற்கும் முஸ்லிம்களுக்கும் என்ன தொடர்போ?
பசுவை வணங்கும் ஹிந்துக்கள் அதனை ஏமாற்றி அது தனது கன்றுக்கு வழங்க உள்ள பாலை கறப்பது சரியாகுமா? பால் கொடுக்காத பசுவுக்கு உணவு வழங்குவீர்களா? பசு உடலிலிருந்து வரும் பால் வேறு இறைச்சி வேறா?
மேலும் ஹிந்துக்களில் தலித்கள் மட்டுமல்ல ,மற்ற சாதியினரும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்.ஆனால் ,முஸ்லிம்கள் யாரும் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை.இல்லாத ஒன்றை ஏன் சொல்லவேண்டும் என்று விரும்புகிறீர்கள்/?மேலும் பன்றி மூளை காய்ச்சலுக்கு காரணமாக உள்ளது அதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலே வெறுக்கப்பட்டுள்ளதுஅதே சமயத்தில் ஒரு மனிதன் உணவின்றி சாகும் தருவாயில் பன்றி உணவு மட்டுமே கிடைக்கிறது என்றால் அதை உண்டு உயிர் பிழைக்க முடியும் என்றல் அந்நேரத்தில் பன்றி இறைச்சியை சாப்பிடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது..
பரவால்லையே. திருக்குர்ரானிலே, பன்றியால் மட்டுமே மூளைக்காய்ச்சல் பரவும் என்பதையும் அது பன்றிக்கறி உண்பதால்தான் வருகிறது என்பதையும், 1400 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்துள்ளார்கள் என்பதை எண்ணி மிகவும் வியப்படைகிறேன். இது குர்ரான் மனித படைப்பல்ல கடவுள் அருளிய அருட்கொடை என்பதற்கு மற்றும் ஒரு சான்று. (ஒரு சந்தேகம் சகோ. இப்பொழுது சிலகாலம் முன்பு உலகை மிரட்டிய swine fluவைப் பற்றியும் பன்றிக்கறி மூலம் அது எவ்வாறு பரவுகிறது என்பதையும் பற்றி குர்ரான் விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்றும் விளக்கவும்)
கிரப் ஜூஸ் குடித்ததால் ஒருவர்க்கு நோய் வந்துவிட்டால்; அன்று அவர் குடித்த ஜூஸில் தயாரிக்கப் படுகையில் ஏதோ ஒரு சுகாதரக் குறைவுள்ளது கவனமின்மை ஏற்பட்டிருக்கலாம் என்பது பொருள் .அதனால் யோனி இனி யாரும் கிரேப் ஜூஸ் சாப்பிடாதீர்கள் என்று யாரும் கூறுவதற்கில்லை,.
ஒன்றும் புரியவில்லை சகோதரரே. சற்று புரியும்படி பேசுங்களேன்.
//Cow is a sacred animal for Hindus //
அப்படியா…தமிழகம் எங்கும் மாட்டுக்கறி நடத்துபவர்கள் அனைவரும் முஸ்லிம்களா? இந்துக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லையா ….இதான் பெரிய காமெடி.
பிராமின் மாட்டுக்கறி சாப்பிடமாட்டார் உண்மை ,அப்படியெனில் ஆட்டுக்கறி கோழிக்கறி சாப்பிடுவார்களா? முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தனது வளர்ப்பு மகன் திருமணத்தில் அசைவ விருந்து வழங்கினாரே ! அவர் எந்த காலத்திலும் அசைவம் உண்ண மாட்டேன் என்று கூறியுள்ளாரா?
Inga prachanai avaru beef saapduvaara illayangrathu illa,avura maaminnu sonnathu thaan.yen jayalalitha maatukarinnu thalaippu vekka vendiyathu thaane.
நமது ஹிந்து உயர்சாதியினர் சகோதரர்கள் பசுவை வணங்குவதால் அதை உண்ண மாட்டோம் எனலாம். ஆனால் ஏற்கனவே கிலோ 450 ரூபாய்க்கு விற்கும் ஆட்டுக்கறி விலை இன்னும் எகிருமே ! காய்கறி விலை கூடுமே !ஆட்டுக்கறியும் மாட்டுக்கறி விலைக்கு கிடைத்தால் எந்த பசுவையும் யாரும் அறுக்க மாட்டார்கள்.மாட்டுக்கறி உண்ணுவதற்கு பொருளாதாரமே காரணமே ஒழிய சுவை அல்ல .கோழிக்கறியை விட மாட்டுகறியே சுவை கூடுதல்
பால் கொடுக்கமுடியாத வயோதிகம் அடைந்த பசுவை அடிமாடாக விற்பவர்களும்,
எலும்பு துறுத்தி, நுரை தள்ளும், காயடித்த எருதை தார்க் குச்சியால் வேலை வாங்கிவிட்டு விழுந்துவிடும் முன் அடிமாடாக விற்பவர்களும்,
கொன்று, தின்று அதன் துயரத்தை தீர்த்து வைப்பவர்களை விட எவ்வகையில் உயர்ந்தவர்கள்..??!!
தங்களுக்காவே வாழ்ந்து சாகப்போகும் அப்பாவி ஜீவன்களான பசு, எருதுகளிடம் தோன்றாத இரக்கம், சக மனிதர்களிடம் மட்டும் புதிதாகத் தோன்றிவிடுமா..??
மனிதர்களே சிந்தியுங்கள்…..
அது என்ன மாட்டு மேல அவ்ளோ பாசம். ஏன் கோழி ஆடு மீன் இதெல்லாம் உயிர் இல்லையா. அது சரி “கோமாதா”ன்னு சொல்லும் போதே நெனச்சேன் உமக்கு மாடு அளவுதான் மூளை இருக்கும் (விவேகனந்தர் சொன்னது நான் இல்லீங்கோ).
நாட்டுல பசி பாட்டினில செத்து போற ஏழை மக்களை பத்தி எல்லாம் கவலை இல்ல ஆனா நாங்க மாட்ட மட்டும் காபதுவோம்.
avunga pasikkum,maatukkum sambandam illa.
//அது என்ன மாட்டு மேல அவ்ளோ பாசம். //
அம்பி வாண்டுவாக இருந்த காலத்தில் துவங்கியதுதான் இந்த பாசம். சில விசேட காலங்களில் மெழுகுவதற்குப் புதுச் சாணி சேகரிக்கச் சொல்லி சிறிய பிளாஸ்டிக் வாளியை கையில் கொடுத்து வாழ்த்தி அனுப்புவார்கள். பசுக்கள், பக்கெட்டுடன் வரும் அம்பியைக் கண்டதும் வாஞ்சையுடன், வருகிறதோ இல்லையோ, வாலைத் தூக்கி, அரைக் கிலோ சாணியையாவது போட்டுவிட்டு, எடுத்துக் கோடா அன்பு அம்பியே என்று தலையை ஆட்டிவிட்டுப் போகும். அப்போதிருந்தே எனக்குத் தோன்றிய சந்தேகம் பசுக்களுக்கு பல மனிதர்களைவிட இரக்கமும், புரிதலும் அதிகமோ என்பது…
அடிமாடுகளை கொல்லும் போது அதற்கு வேதனைனு சொன்னா பால்,தயிர்,வெண்ணெய்,சீஸ்க்காக உயிரோடு இருக்கும் போது அந்த மாட்டை அதிக பால் உற்பத்திக்காக ஊசி மூலமாக தொடர்ந்து கருதரிக்க வைப்பது,கொடுமையான பக்கவிளைவக்கொடுக்கிற hormone injection போடுவது,தொடர்ந்து பால் கறப்பதால் மடிவீக்கநோய்களுக்கு ஆளாக்குவது(தாங்க முடியாத வேதனை)இதெல்லாம் சரியா?
உண்மையான அக்கறை இருந்தால் வெஜிடேரியனில் இருந்து வீகனாக(vegan-விலங்கினம் சார்ந்த எல்லா பொருட்களையும் புறக்கணித்தல்) மாறிவிட்டு பேசுங்கள்!அசைவப்பிரியர்களுக்காக மாடு சிலநிமிடம் அவதிப்படுதுன்னா உங்களுக்காக வாழ்நாளெல்லாம் அவதிபடுது!
i m non-vegetarian dude,i dont eat beef thats all. And i agree with poor dairy farming but nothing justifies the eating beef thing.but why are we having this debate,i dont think eating beef is a big deal but i wont,thats all.
அடிமாடுகள் ஆவதுதான் வேதனையின் தொடக்கம், நிலவே..
அடிமாடுகளில் பெரும்பகுதி பாலுக்காக வளர்க்கப்பட்டவைதான்..
பழி ஓரிடம்.. பாவம் ஓரிடம்.. மனசாட்சி வெற்றிடம்…
// பால்,தயிர்,வெண்ணெய்,சீஸ்க்காக உயிரோடு இருக்கும் போது அந்த மாட்டை அதிக பால் உற்பத்திக்காக ஊசி மூலமாக தொடர்ந்து கருதரிக்க வைப்பது,கொடுமையான பக்கவிளைவக்கொடுக்கிற hormone injection போடுவது,தொடர்ந்து பால் கறப்பதால் மடிவீக்கநோய்களுக்கு ஆளாக்குவது(தாங்க முடியாத வேதனை)இதெல்லாம் சரியா? //
சரியில்லை என்பதைவிட கொடுமை என்று சொல்லலாம்.
கொடுமையால் வரும் பொருட்களை சாப்பிட்டுக்கொண்டே கொடுமைனு சொல்றது முறையா?
இதைதான் சாப்பிடனும்,சாப்பிடக்கூடாதுனு சொல்வதற்கு இந்த உலகத்தில் நான் உட்பட யாருக்கும் உரிமை கிடையாது!உணவு முறை என்பது விருப்பம்,சூழல்,பொருளாதாரம் இவற்றை சார்ந்தே இருக்கும்/இருக்க முடியும்.
இந்தியாவை பொருத்த வரை நல்ல கடல் வளம் இருப்பதால் கடல்சார் உணவும்(மீன்,நண்டு,இறால்…),நல்ல தட்பவெப்பநிலை காரணமாக விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பின் பயனால் வரும் (ஆடு,கோழி..இன்ன பிற)பொருட்கள் இவற்றை உண்ணும் அசைவ உணவுப்பழக்கம் பெரும்பான்மையாக இருப்பது இயல்பானதே.
விருப்பத்தின் பெயராலோ,உயிர்களை கொல்வதில் உடன்பாடு இல்லைனு நினைத்தாலோ சைவ உணவுப்பழக்கத்தை மேற்கொள்வதில் தடையேதும் இல்லை!ஆனால் அது ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக மேற்கொள்ளப்பட்டால் நல்லது (உலகம் முழுவதும் இதைப்போன்று மக்கள் கோடிக்கணக்கில் வாழ்கிறார்கள்).மாறாக இங்கோ தங்களைத்தாங்களே புனிதர்களாக கருதிக்கொண்டு சைவ முகமூடியுடன் தீண்டாமை எண்ணம் கொண்டு இருப்பது வெட்கக் கேடான செயல்.
// கொடுமையால் வரும் பொருட்களை சாப்பிட்டுக்கொண்டே கொடுமைனு சொல்றது முறையா? //
எல்லா விவசாயிகளும், யாதவர்களும், மாடுவளர்ப்போரும் இந்தக் கொடுமையைச் செய்வதில்லை என்ற ஆறுதலும் உண்டு..
பால் மாடு வளர்ப்பு இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் லாபகரமான தொழில் இல்லையெனும் போது மாடுவளர்ப்போர் விரும்பியோ,விரும்பாமலோ தெரிந்தோ,தெரியாமலோ வெண்மைப்புரட்சிக்கு பிறகு மேற்கண்ட கொடுமைகளில் எதோ ஒன்றையாவது செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.இயற்கை ஆர்வலர்களிலும் மிகச்சிலர் தவிர்த்து குக்கிராமங்களில் கூட சினை ஊசி போட்டு செய்யும் செயற்கை கருவூட்டலே நடக்கிறது.
மாட்டுக்கறியை தீண்டாமையக பாவிப்பதை அறிவு, தெளிவோடு பார்த்தால் அடி முட்டாள்தனமானது, மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என்ற வார்த்தைக்காக வாளேந்தும் அண்ணா திமுக ஆண்டைகளும், அம்பிகளும் மாட்டுக்கறி உண்ணும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் முசுலிம்களுடைய ஓட்டுக்கள் வேண்டாம் என அறிவிப்பார்களா? அல்லது அண்ணா திமுகவை சேர்ந்த தலித்துகளும் முசுலிம்களும் கடுகளவேனும் சிந்திப்பாரகளா? ஆட்டுக்கும் , மாட்டுக்கும் அளவில்தான் வேறுபாடு தானே தவிர சுவையிலும் சத்துக்களிலும் அல்ல,
உங்கள் வீட்டுல இன்னிக்கு மாட்டுக்கறியா? என இதர பிற்படுத்தப்பட்ட மக்களிடமும்
உங்கள் வீட்டுல இன்னிக்கு பன்னிக் கறியா? என முசுலிம் மக்களிடமும் கேட்டால் கடுமையான வாய்சண்டையில் தொடங்கி கலவரத்தில் முடியக்கூடிய மானங்கெட்ட நிலையில் இருக்கும் போது எங்க போய் விஞ்ஞானத்தில் முன்னேறுவது?
There are many SC/STs who dont eat beef,i even know many who are vegetarian by choice.Dont try to segregate people based on eating habits.From what i know only the brahmins have pressure to be pure vegetarian,everyone else can eat anything except beef.even the beef thing is not a rule but something adopted by society.
பிராமணர்களை விட திருநெல்வேலி சைவ வேளாளர்கள் அசைவ உணவை அதிகமாக புறக்கணிப்பார்கள்
thats true.
//அப்படியா…தமிழகம் எங்கும் மாட்டுக்கறி நடத்துபவர்கள் அனைவரும் முஸ்லிம்களா? இந்துக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லையா ….இதான் பெரிய காமெடி.//
உண்மைதான் மாட்டுக்கறி உணவகங்கள் நடத்துபவர்கள் இந்துக்கள்தான,
சென்னையில் தென்மாவட்த்தை சேரந்த ஆதிக்க சாதிகளின் கடைகளில் சுவையான மானா கிடைக்கிறது,
//முஸ்லிம்கள் யாரும் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை.இல்லாத ஒன்றை ஏன் சொல்லவேண்டும் என்று விரும்புகிறீர்கள்/?மேலும் பன்றி மூளை காய்ச்சலுக்கு காரணமாக உள்ளது அதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலே வெறுக்கப்பட்டுள்ளதுஅதே சமயத்தில் ஒரு மனிதன் உணவின்றி சாகும் தருவாயில் பன்றி உணவு மட்டுமே கிடைக்கிறது என்றால் அதை உண்டு உயிர் பிழைக்க முடியும் என்றல் அந்நேரத்தில் பன்றி இறைச்சியை சாப்பிடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது..//
பன்னிக் கறியால் மூளைக் காய்ச்சல் ஏற்படும் அதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று குரானில் சொல்லியிருக்கிறதா?
பன்னி நரகல மேயவதால் அருவருப்பா கருதி சாப்பிட வேண்டாம் என சொல்லியிருப்பார்கள் அவ்வளவுதான்.
//ஒரு மனிதன் உணவின்றி சாகும் தருவாயில் பன்றி உணவு மட்டுமே கிடைக்கிறது என்றால் அதை உண்டு உயிர் பிழைக்க முடியும் என்றல் அந்நேரத்தில் பன்றி இறைச்சியை சாப்பிடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது..//
செம கமெடியான முரண்பாடிது,உணவு இல்லாமல் உடனே சாக கூடாது மூளைக் காய்ச்சல் வந்து லேட்டா சாவணும்னு எம்பெருமான் நினைக்கிறாரா,
பன்னிக் கறி சாதி வித்தியாசம் இல்லாமல் சாப்பிட படுகிறது, அதை சாப்பிடும்
அனைவருக்கும் மூளை காய்ச்சல் வருவதில்லை, சாப்பிடாத முசுலீம்க்கு கூட மூளை காய்ச்சல் வந்திருக்கிறது.
முதலில் இத சாப்பிடு சாப்பிடதான்னு சொல்றதுல இருந்து மதத்த விலக்கி வைக்கனும், ஒருத்தனுக்கு மாட்டுக்கறி ஒத்துக்கலைனா எல்லாரும் மாட்டுக்கறி திங்காதன்னு சொல்றான் இன்னொருத்தனுக்கு பன்னிக்கறி வாய்ல இறங்காதுன்னா யாரும் பன்னிக்கறியே திங்ககூடாதுனு சாபம் விடறான்,எங்கயோ உட்கார்ந்து கொண்டு தொழில்நுட்ப, விஞ்ஞான அறிவு இல்லாத அன்றைய காலத்தில் சொன்னதையெல்லாம் (பெரும்பாலும் முட்டாள்தனமானவை) வைத்துக்கொண்டு அநத புரட்டு குப்பைகளை (இறைவனின்)புனித நூலாக வைத்து வழிபடும் மதங்களை விலக்கிவைக்க வேண்டும், மதங்களுக்கு எதிரா பத்வா விடுக்க கோருகின்றேன்.
மூளை காய்ச்சலுக்கு பன்றி இறைச்சி ஒரு காரணம் .மற்றும் பன்றி இறைச்சினால் இன்னும் பல கேடுகள்இருக்கலாம். அவை இன்னும் அறியப்படாமல் இருக்கவேண்டும்.பன்றி இறைச்சியால் மூளை காய்ச்சல் ஏற்படும் என்று குர்ஆனில் சொல்லப்படவில்லை .குரான் அதை தடுத்திருக்கிறது என்றால் அது நியாயமானதாகவே இருக்கும்.மூளைக்காயச்ச்சளுக்கு பன்றி இறைச்சி ஒரு காரணம் என்று அறியப்பட்டுள்ள விஷயம் குரான் கூற்றை வலுப்படுத்துவதாக உள்ளது.
மேலும் சாகும் தருவாயில் பன்றி இறைச்சியை சாப்பிட்டால் உயிர்பிழைக்க முடியும் என்றால் அப்போது சாப்பிட அனுமதி உண்டு என்று நபி வழி செய்திகள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் இஸ்லாம் மனித நலனுக்காக இஸ்லாம் வளைந்து கொடுக்க கூடியது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
relax man,its normal that pork is banned because pigs tend to be dirty and eat their own faeces which dogs also do but cattle dont.It is simple enough why people are asked not to eat pork.
நண்பரே. பன்றிக்காய்ச்சல் அல்லது ஜபனீஸ் என்கெபலைடிஸ் நோய் கொசு கடிப்பதால் வருவது. அதன் reservoirதான் பன்றி மற்றும் பறவைகள். பன்றிக் கறி தாராளமாக உண்ணலாம். பன்றிக்காய்ச்சல் கறியினால் பரவாது. பயப்படாதீர்கள். மேலும் அதன் பிறப்பிடம் பர்மா, லாவோஸ் போன்ற நாடுகள்.கண்டிப்பாக அரேபியா இல்லை. முகம்மதுக்கு அப்படி ஒரு நோயைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் கடவுளுக்கு அப்படி உலகில் ஒரு பகுதியைப் பற்றியே தெரிந்திருக்காது. அதனால் வேறு ஏதாவது காரணம் பன்றிக்கறி உண்ணாமலிருக்கக் கொண்டு வாருங்கள். (என் சொந்த விருப்பம் பன்றிக்கறியை விட மாட்டுக்கறிதான். மதுரையில் கோரிப்பாளையம் அருகே மிக சுவையான மாட்டுக்கறி கிடைக்கும். திகட்டத் திகட்டத் தின்றிருக்கிறேன்.)
விடுதலை
///முதலில் இத சாப்பிடு சாப்பிடதான்னு சொல்றதுல இருந்து மதத்த விலக்கி வைக்கனும், ///
அவ்வாறெனின் இதை குடிக்காதீர்கள் என்று சொல்லுகிற மதங்களை ,அரசியல் சட்டங்களை விலக்கி வைக்கணுமா?
///செம கமெடியான முரண்பாடிது,உணவு இல்லாமல் உடனே சாக கூடாது மூளைக் காய்ச்சல் வந்து லேட்டா சாவணும்னு எம்பெருமான் நினைக்கிறாரா,///
கடுமையான தாகம் தண்ணீரே கிடைக்கவில்லை மயக்கமே வரும் நிலை என்றால் அங்கு பிராந்தி கிடைத்தால் உடன் தாகம் தீர்த்து கொள்ள மாட்டோமா?
it is not stupidity,Beef is rich in cholestrol and people need to work very hard to digest it.I dont think it is a big deal for someone to eat beef but i believe milk is a much better substitute for beef.The big problem is not this,meat creates dependency.A guy can be working very hard but he cant stop eating beef/any other meat even after giving up work after old age.Milk/Dairy products dont create that much dependency as real meat.Thats why white meat is preferred and even in red meat Mutton is preferred.
Most people eat meat for taste/dependency and not for protein or anything.That fish is the best meat and is widely eaten.I know many people in the west giving up red meat and eating only chicken/fish.so what our ancestors decided was ahead of what the west is realising today.
தாழ்த்தப்பட்டவனுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்றோம்.
தாழ்த்தப்பட்டவன் தானே நீ.. உனக்கென ஒரு தனி இடம்
அது கழிப்பிடம் தான் என்றான் பார்ப்பனன்..
பாவங்கள் பல செய்தாலும்
அவன் மீது பழியுமில்லை பிழையுமில்லை..
பழிக்கப்பட்டது
பாழாய் போன நம் மக்களே…
hahaha,u go to gulf and see who cleans the toilets there and how they r treated? and anyway nobody ever opposed reservation for SC/ST.They deserve reservation and they have it,which is fine.
//Most people eat meat for taste/dependency and not for protein or anything.That fish is the best meat and is widely eaten.I know many people in the west giving up red meat and eating only chicken/fish.so what our ancestors decided was ahead of what the west is realising today.//
Our ancestors “realised” ?? Why u r making a fool out of your self the reason HINDUS(In ur languae our ancestors) didnt eat beef is that they believed that COW is holy not becos they realised that its not gud for health, The reason is STUPIDITY not RATIONAL thinking.. Do not try to paint scientific paint for stupidity of our ancestors
no it is not,the historical research of hindus eating beef comes from those guys sitting in the himalayas and even now kashmiri pandits or anyone living in such high mountainous,cold areas can eat red meat,earlier it used to be beef,later it changed to mutton,because cow became holy.
i think it is perfectly scientific,nobody is stopping anyone from eating beef.but the fact remains that u dont need it,so desperately.
முதலில் அவர்கள் மாட்டுக்கறி தான் சாப்பிட்டார்கள். பின்னர் தான் அவர்கள் ஆட்டுக்கறிக்கு மாறினார்கள். ஏனெனில் மாடு புனிதமானதாக ஆகிவிட்டதால்.
வாய் பேசாத மாடு புனிதமாக மாறுவதற்கு என்ன செய்தது என்று இங்கு விளக்கமாக சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்களும் அதை செய்து புனிதமாக மாறுவார்களே? மாட்டுக்கறி உண்பதிலிருந்தும் விலகி விடுவார்களே.
Cow gives milk,ghee,butter which are healthier than the red meat.Cow gives cowdung which is used as manure in agriculture,cow urine and dung (Gomiam) is supposed to be a healthy medicine,Cow gives birth to bull which is