புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

4

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்!

 1. “மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – தமிழகம் தழுவிய புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
 2. 2-ஜி அலைக்கற்றை ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?
 3. காமராஜ் மெட்ரிக் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தூள்தூளாக்கிய பெற்றோர்களின் போராட்டம்!
 4. ஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்!
 5. குளோபல் ஃபார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை – பொறுக்கித்தனம்! ஒத்தூதும் தமிழக அரசு!!
 6. கூடங்குளம்: இந்து முன்னணியின் காலித்தனம்
 7. மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!
 8. இந்துஸ்தான் யுனிலீவரின் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் போர்!
 9. தேய்ந்துபோன செருப்பும் முதலாளித்துவ சமூக நீதியும்
 10. கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன – ‘மேல்’சாதிக் கும்பல்
 11. இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!
 12. டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்
 13. உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011) தீராத தலைவலி!
 14. ஆலயத் தீண்டாமைக்கு எதிராகச் சிவனடியார்களின் போராட்டம்!
  ஒடுங்கியது பார்ப்பன சிவச்சாரியார்களின் கொட்டம்!!
 15. உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களைப் பழிவாங்கும் கமாஸ் வெக்ட்ரா!
 16. தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

4 மறுமொழிகள்

 1. பேருந்து விற்பனை அனுபவம்

  புதிய ஜனநாயகம் அரசியல் பத்திரிகை மற்ற பத்திரிகைகள் போல இல்லை. எந்த வணிக நோக்கமும் இல்லாமல் வெளியாவது. கடந்த 30 ஆண்டுகளாக வெளியாகிறது. மக்களிடம் நேரடியாக பிரச்சாரம் செய்து விற்பதுதான் விற்பனை முறை. பத்திரிகையில் எந்த விளம்பரங்களும் இருக்காது.

  மக்களை பாதிக்கும் அரசியல், பொருளாதார, சமூக பிரச்சனைகளை நேர்மையாக முழு விபரங்களையும், பின்னணிகளையும் விளக்கி, மக்களின் சார்பில் ஆராய்ந்து எப்படிப்பட்ட நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று விளக்கும் கட்டுரைகள் இதில் வெளியாகின்றன. இதன் விலை 10 ரூபாய்.

  இந்த இதழில், முதலில் 2G அலைக்கற்றை பற்றிய தலையங்கம் வெளியாகியிருக்கிறது. 2G அலைக்கற்றை வழங்கும் விவகாரத்தில் ஒரு லட்சத்து எழுத்தாறாயிரம் கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டது என்று தகவல் வெளியானது. நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் முறைகேடாக லைசன்ஸ் பெற்ற 122 நிறுவனங்களின் லைசன்சுகளை ரத்து செய்வதாக உத்தரவிட்டிருக்கிறது. இப்படி ரத்து செய்வதால் இழப்பு ஈடு செய்யப்பட்டு விட்டதா? இன்னும் பல சிக்கல்கள் இருக்கின்றன.

  உதாரணமாக ஒரு தகவலை பார்க்கலாம். முறைகேடாக உரிமங்கள் பெற்ற நிறுவனங்களுக்கு அரசுத் துறை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற வங்கிகள் 26,000 கோடி ரூபாய் லோன் வழங்கியிருக்கின்றன. இந்த லோன்களை எப்படி வசூலிக்கப் போகிறார்கள்? அவை வசூலிக்கப்படா விட்டால் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் அவை ஈடு செய்யப்பட வேண்டியிருக்கும். இதையும் மற்ற விளைவுகளையும் விளக்கும் கட்டுரை இந்த இதழில் வெளியாகியிருக்கிறது.

  அடுத்ததாக பள்ளிக் கூடங்கள். இன்றைக்கு அரசு பள்ளிக் கூடங்கள் பல இடங்களில் சொல்லிக் கொள்ளும்படியாக இயங்குவதில்லை. அதனால் பல பெற்றோர் குழந்தைகளை தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புகின்றனர். அந்த தனியார் பள்ளிகள் தமது விருப்பப்படி கட்டணம் வசூலிப்பது, சிறப்பு கட்டணம் என்று கூடுதல் பணம் பிடுங்குவது, பணம் கொடுக்காத மாணவர்களையும் பெற்றோரையும் சிரமத்துக்குள்ளாக்குவது என்று அடாவடி செய்வது பல இடங்களில் நடக்கிறது. சிதம்பரம் காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இது போன்று ஒரு கட்டணக் கொள்ளையை எதிர்த்து பெற்றோர்கள் போராடி வெற்றி பெற்ற ரிப்போர்ட் இந்த இதழில் வெளியாகியிருக்கிறது. இது போன்ற செய்திகளை மற்ற பத்திரிகைகள் வெளியிடுவதில்லை. அவர்களுக்கு ஆதாயம் தரும் செய்திகளைத்தான் வெளியிடுகிறார்கள்.

  மூன்றாவதாக, அட்டைப்படத்தில் நீங்கள் பார்க்கும் ஜெயா-சசி-சோ நாடகக் காட்சிகள். ஜெயலலிதா அம்மா சசிகலா குடும்பத்தை வெளியேற்றி விட்டார்கள் என்று பல பத்திரிகைகளிலும் பரபரப்பாக எழுதி வருகிறார்கள். ஆனால் அதை ஏதோ உறவில் ஏற்பட்ட பிணக்கு/பிரிவு என்று சித்தரிக்கிறார்கள். உண்மையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்த போது ஜெயலலிதாவுக்கு அருகில் பிரியாமல் இருந்து பினாமி பெயர்களில் சொத்து குவித்தது, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டது என்று சேர்ந்தே செயலாற்றி வந்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இதில் ஜெயலலிதாவுக்கு எதுவும் தெரியாது, சசிகலாதான் எல்லா தவறுகளையும் செய்தால் என்று சொல்வது எப்படி சரியாகும்?

  மக்களாகிய நாம் 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் அமைச்சர்கள், மாவட்ட தலைவர்கள் அடாவடி செய்தார்கள், நில அபகரிப்பு செய்தார்கள், ஊழல் முறைகேடு செய்தார்கள் என்று தேர்தலில் ஓட்டை மாற்றிப் போட்டால் சரியாகி விடும் என்று அதிமுக ஆட்சி கொண்டு வந்தோம். கடந்த 8, 9 மாதங்களில் என்ன நடக்கிறது. கிராமப் புறங்களில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு 8 மணி நேரத்துக்கும் அதிகமாக்கப்பட்டிருக்கிறது. பேருந்து கட்டணம் உயர்ந்திருக்கிறது, பால் விலை உயர்ந்திருக்கிறது. நிர்வாகத்தில் அதிகாரிகளும் அமைச்சர்களும் பந்தாடப்படுகிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டிடம் பாழடையும் படி விடப்பட்டிருக்கிறது

  இதெல்லாம் சசிகலா வெளியேற்றப்பட்டு விட்டதால் சரியாகி விடும் என்கிறார்கள். உண்மையில் சசிகலா கும்பலின் வெளியேற்ற பின்னணி என்ன, இனிமேல் எந்த மாதிரியான அதிகார அமைப்பு உருவாகும், மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று புரிந்து கொள்ள விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.

  இன்னும் பன்னாட்டு அரசியலில் அமெரிக்க ஈரான் மீது செலுத்த முயலும் ஆதிக்கப் போர், மேற்கத்திய நாடுகளில் தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி, வங்கிகள் திவலாதல் போன்ற விபரங்களையும் புரிந்து கொள்ள கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. இந்த பத்திரிகையை வாங்கிப் படித்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

  இது போன்ற உரையை பல வடிவங்களில் பேசி பேருந்துகளில் பிரச்சாரம் செய்தோம்.

  ஒரு பேருந்தில் ஒரு பெரியவர் ‘இந்தப் பத்திரிகையைப் பற்றிச் சொல்லுங்கள், ஏன் நக்கீரனை குறை சொல்கிறீர்கள்’ என்று கோபப்பட்டார்.

  இன்னொரு பேருந்தில் ஒரு அம்மா, ‘அதை எல்லாம் ஏம்பா வாய் வறள பேசி கஷ்டப்படுறீங்க. எப்ப ஓட்டு போட காசு வாங்க ஆரம்பிச்சாங்களோ அப்பவே மக்கள் திருத்த முடியாதவங்களாகிட்டாங்க. ஏதாவது பொருளைக் கொண்டு வந்து ஒன்று வாங்கினால் இரண்டு இனாம் என்று விற்றால் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவாங்க, இப்படி ஏன் கஷ்டப்படுறீங்க’ என்று பரிதாபப்பட்டார்.

  இன்னொரு பேருந்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து 3 பேர் பத்திரிகை வாங்கிக் கொண்டார்கள். கூட்டமாக இருந்த பேருந்தில் காசை கைமாற்றிக் கொடுத்து நான்கைந்து பத்திரிகைகள் வாங்கப்பட்டன. குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பற்றி பேசும் போது கண்களில் புரிதலோடும் தலையாட்டலோடும் பலர் உரையில் ஐக்கியமானதை புரிந்து கொள்ள முடிந்தது. உலக அரசியல் பற்றி சொன்னதும் ஒருவர் வாங்க முடிவு செய்ததாக புரிந்தது. புத்தகத்தை நீட்டியதும் தயக்கம், சில விநாடிகள் நின்றிருந்தால் வாங்கிக் கொள்கிறார்கள்.

 2. அமெரிக்க என்ற முதாளித்துவ நாட்டுக்கு மறைமுகமாக ஆதரவு தந்துகொண்டு இருக்கிறீர்கள். கூடங்குளத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கும் கிருத்துவ பாதிரிகள் அனைவரும் அமெரிக்காவின் ஏஜண்டுகள் என்பதை சமயத்தில் மறைத்துவிட்டு பத்திரிகை நடத்துகிறீர்கள். எதெற்கெடுத்தாலும் அமெரிக்காவை வைத்தே பத்திரிகை நடத்துவது ஜனநாயகத்தை கேளிக்கூத்தாக்கும். பிராமண எதிர்ப்பு என்பது முட்டாள்தனமானது. ஜாதி பேதத்தை உருவாக்கும் மறைமுக முயற்ச்சி. வன்னியர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க