‘வால்மார்ட் வந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று ஊடகங்கள் மற்றும் தாராளமயதாசர்களால் கொடிபிடிக்கப்படுகிறது. ‘சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால்தான் நாடு முன்னேற முடியும், நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்க முடியும்’ என்று நாட்டை ஆளும் பணியை அன்னிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு போட்டி போடுகின்றனர் ஆளும் காங்கிரசு கட்சியும் அதை எதிர்ப்பது போல பாவனை செய்யும் பாரதீய ஜனதா கட்சியும்.
நமது நாட்டில் இப்போது செயல்படும் சில்லறை வணிக முறையில் எத்தகைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? அவற்றுக்கு அரசு ஆதரவு அல்லது மானியம் அல்லது நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று பார்க்கலாம்?
சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில், பேருந்து ஓடும் சாலையிலிருந்து பிரிந்து போகும் தெருவில் இருக்கும் கடையை எடுத்துக் கொள்வோம். சுமார் 300 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் அமைந்திருக்கிறது அந்தக் மளிகைக் கடை. போட்டிக்கும் குறைவில்லாத சூழல். இரண்டு கடை தள்ளி மற்றொரு மளிகைக் கடை இருக்கிறது. இருநூறு மீட்டர் தொலைவில் இன்னொரு மளிகைக் கடையும் உண்டு. பிரிந்து போகும் கிளைத் தெருக்களில் சின்னச் சின்னதாக பல மளிகைக் கடைகள். மெயின் ரோட்டைத் தாண்டி மறுபகுதியில் மளிகைக்கடையாக இருந்து சூப்பர் மார்கெட்டாக மாறிய கடைகள், பிர்லா குழுமத்தின் மோர் சூப்பர் மார்கெட், ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் என்று கார்பொரேட் நிறுவன பேரங்காடிகள்.
இந்த வட்டாரத்தில் பெருமளவு சுறுசுறுப்பாக வியாபாரம் நடப்பது இந்தக் கடையில்தான்.
கடையின் உரிமையாளர், அவர் மனைவி, தம்பிகள், வயதான தந்தை என்று 6 குடும்ப உறுப்பினர்கள் கடை வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆள் மாறி மாறி காலையில் 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கடை திறந்திருப்பதற்கு தேவையான வேலைகளை செய்கிறார்கள். இவர்களைத் தவிர சம்பளத்துக்கு இரண்டு பேர் வைத்திருக்கிறார். மொத்தம் 8 பேர் நேரடியாக வாழ்க்கை நடத்துகிறார்கள். சொந்தமாக வீடு கட்டி வசதியாகவே வாழ்கிறார்கள்.
மளிகைச் சாமான்கள், பால், காய்கறி, தண்ணீர், தின்பண்டங்கள் மற்றும் சகலவிதமான வீட்டு உபயோக பொருட்களை விற்கிறார்கள்.
உரிமையாளர் 4 மணிக்கு எழுந்து சந்தைக்கு காய்கறி வாங்கப் போவார். ஆறரை மணிக்கெல்லாம் ஒரு தம்பி வந்து கடையை திறப்பார். சந்தையிலிருந்து திரும்பி வந்தவரும் பொருட்களை எடுத்துக் கொடுக்க நிற்பார். காலை நேரம் சுறுசுறுப்பான நேரம். பால் வாங்க வருபவர்கள், அன்று வாங்கி வரும் காய்கறி வாங்கிப் போக வருபவர்கள் என்று பரபரப்பாக இயங்கும். அந்த நேரத்தில் வயதான தந்தையும் உதவிக்கு சேர்ந்து கொள்வார். பகல் வேளையில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் மாறி மாறி யாராவது ஒருவர் கடையில் இருப்பார்கள். தண்ணீர், பால், வீடுகளுக்கு பொருட்களை கொண்டு கொடுப்பது போன்ற வேலைகளை சம்பளத்துக்கு இருக்கும் இரண்டு பையன்கள் வேலை செய்வார்கள்.
இரவு 10.30 வரை கடை திறந்திருக்கும். ஓய்வாக இருக்கும் போது பொருட்களை அடுக்கி வைப்பது, கணக்கு எடுப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டியதுதான். வாரத்துக்கு 7 நாளும் உழைப்பு, வார விடுமுறை கிடையாது. தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்வுகளுக்குப் போக வேண்டியிருந்தால் ஒழிய கடைக்கு விடுமுறை கிடையாது.
இது போன்ற கடைக்குப் பொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் எத்தகையவை, அவற்றில் எவ்வளவு பேர் வேலை பார்ப்பார்கள்?
சுமார் 100க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் பொருட்களைக் கொண்டு வந்து போடுகிறார்கள். அவற்றில் தயாரிப்பு நிறுவனங்களின் ஏஜன்சிகளும், நேரடியாக பொருட்களை தயாரித்து கொண்டு வருபவர்களும் அடங்குவார்கள்.
ஆச்சி மசாலா, சக்தி மசாலா, அரசன் சோப்பு, இதயம் நல்லெண்ணெய், பிராண்டட் பருப்பு வகைகள், எழுதுபொருட்கள் போன்ற பொருட்களுக்கான ஏஜன்சிகளில் சுமார் 5 முதல் 10 பேர் வேலை செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் கடைகளுக்கு அவர்கள் பொருட்களை கொண்டு தருகிறார்கள். இத்தகைய ஏஜன்சிகளில் சேல்ஸ்மேன்கள், சப்ளையர்கள், சேல்ஸ் மேனேஜர்கள் போன்றவர்கள் கடைகளுக்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதையும், விற்ற பொருட்களுக்கான பணத்தை வசூல் செய்வதையும் செய்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான பேர் வேலை செய்வார்கள். அவை மாநிலம் முழுமைக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அமைந்திருக்கலாம்.
இரண்டாவதாக, சேமியா, அப்பளம், ஜூஸ், சுக்கு, ஆசிட், லோசன், கடலை, ஓம திரவம், சிப்ஸ், தரை துடைப்பு, துடைப்பம், கற்கண்டு, முறுக்கு, பிஸ்கட், லோஷன், துடைப்பம், கடலை மிட்டாய், மெழுகுவர்த்தி, கருவாடு போன்ற பொருட்களை செய்து வழங்குபவர்கள். இவை பெரும்பாலும் குடிசைத் தொழில்களாக செயல்படுகின்றன. நகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வீடுகளில் பொருட்கள் செய்யப்பட்டு எடுத்து வரப்படுகின்றன. ஒரு மளிகைக்கடையில் விற்கப்படும் இத்தகைய பொருட்களை செய்யும் தொழில்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். பொருட்களை டூவீலர் அல்லது சைக்கிளில் கொண்டு வந்து கடையில் போட்டு விட்டு, பணம் வாங்கிக் கொண்டு போவார்கள்.
சுமார் 50 வகையான இத்தகைய பொருட்களை தயாரிப்பதில் ஆயிரக்கணக்கான பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது. .
முட்டை கொண்டு வந்து தருபவர் கோழிப்பண்ணைகளிலிருந்து வந்து இறங்கும் முட்டைகளை மொத்தமாக வாங்கி சைக்கிளில் கட்டி எடுத்து வந்து கடைகளுக்குக் கொடுத்து விட்டுப் போவார். பால், மோர், தயிர் போன்றவற்றுக்கு ஆவின், ஆரோக்கியா ஏஜன்சிகளை கடைக்காரரே எடுத்திருக்கிறார். ஆவின் நிறுவனத்தின் மாநிலம் முழுவதற்குமான கூட்டுறவு பண்ணைகள், பால் பிடித்து வரும் வண்டிகள், பால் பதப்படுத்தும் தொழிலகங்கள், பால் கொண்டு வந்து போடும் ஊழியர்கள் என்று நூற்றுக் கணக்கானவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அரிசி, உளுந்து, பருப்பு வகைகளுக்கு சில்லறையாக விற்பதற்கு மொத்தச் சந்தையிலிருந்து மூட்டையில் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். அரிசி மண்டி, வெல்ல மண்டி, பயறு மண்டி என்று மொத்த வியாபாரிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். காலையில் காய்கறி சந்தைக்குப் போய் காய், பழம் வாங்கி வருகிறார் கடைக்காரர். லாரிகளில் தூரத்திலிருந்து வரும் காய்கறிகள் தவிர, சுற்றி இருக்கும் கிராமங்களிலிருந்து வரும் காய்கறிகளும் விற்கப்படுகின்றன. சிறு விவசாயிகள் தமது விளைபொருட்களை விற்பதற்கான முக்கியமான வழியை சில்லறை வணிகர்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.
இவ்வாறாக மளிகைக் கடை சில்லறை வணிகத்தின் மூலம் ஒவ்வொரு நகரத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் பெரும்பகுதியினர் சுயமாக தொழில் செய்பவர்கள். இவர்களில் யாருக்குமே அரசு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. வங்கிக் கடன்கள், மானியங்கள் போன்ற சலுகைகளும் சுத்தமாக கிடைப்பது இல்லை. முழுக்க முழுக்க தமது உழைப்பு, சேமிப்பு, சமூக ஆதரவு மூலமாகவே இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
இவர்களின் வருமானம், லாபம் நாட்டுக்குள்ளேயே செலவழிக்கப்படுகிறது அல்லது முதலீடு செய்யப்படுகிறது. உதாரணமாக மளிகைக் கடைக்காரர் சம்பாதிக்கும் பணத்தை உள்ளூரிலேயே வீடு கட்ட, கடையை விரிவு படுத்த பயன்படுத்துவார். அது மறைமுகமாக அடுத்த சுற்று வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுக்கிறது. இப்படியாக, இந்தியா முழுவதும் சுமார் 15 கோடி மக்கள் சில்லறை வணிக துறையின் மூலம் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.
வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் சில்லறை வணிகர்கள் பொருட்கள் வாங்குவதையே உலகமயமாக்கியிருப்பவர்கள். வால்மார்ட்டில் விற்கப்படும் பால் பாக்கெட் ஆவின் பாலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விலை குறைவாக கிடைத்தால் ஆஸ்திரேலியாவிலிருந்து பதப்படுத்தப்பட்ட, டெட்ராபேக் பாலை விற்க ஆரம்பிப்பார்கள். காய்கறிகள், முட்டை போன்றவற்றை ஒப்பந்த பண்ணை முறையில் பணக்கார விவசாயிகள் அல்லது முதலாளிகளிடம் ஒப்படைத்து சிறு விவசாயிகளையும், குடிசைத் தொழில்களையும் ஒழித்து விடுவார்கள். அரிசி, பருப்பு, வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், பழங்கள் கூட குறைந்த விலையில் வால்மார்ட்டின் தரத்துக்கு கிடைக்கக் கூடிய எந்த நாட்டிலிருந்தாவது இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும்.
இப்படி துரத்தியடிக்கப்படும் 15 கோடி மக்களுக்குப் பதிலாக சில ஆயிரம் பேரை கூலி உழைப்பாளிகளாக வைத்துக் கொள்வதுதான் வால்மார்ட் மக்களுக்கு வழங்கும் ஒரே வேலைவாய்ப்பாக இருக்கும். வால்மார்ட்டில் வேலை செய்வது என்பதன் பொருள் குறைந்த ஊதியம், ஓவர் டைம் கொடுக்காமல் அதிக நேரம் வேலை வாங்கப்படுதல், போதுமான மருத்துவ வசதிகள் மறுப்பு என்று பலவிதமான சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதே ஆகும்.
‘வால்மார்ட்டில் குறைந்த விலை அல்வா கிடைக்கலாம், ஆனால் வால்மார்ட் அழித்து விடப் போகும் கோடிக்கணக்கான வாழ்க்கைகள், என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாதது’ என்பது கார்பொரேட் சில்லறை வணிகத்தை அனுமதித்த பல நாடுகளின் அனுபவம்.
வால்மார்ட் சில்லறை வணிக குடும்பங்களை மட்டுமல்ல, அவர்களுக்கு சப்ளை செய்யும் குடிசைத் தொழில்கள், சிறு, நடுத்தர விவசாயிகள், அத்தனை பேரையும் சேர்த்தே அழிக்கிறது. தூக்கி எறியப்படும் இந்த மக்கள் ஏற்கனவே வாழ்ந்து வந்த வாழ்க்கையை இழப்பதோடு மலிவான கூலியுழைப்பு சந்தையின் ரிசர்வ் சக்திகளாக அலைய வேண்டியிருக்கும்.
இந்த அழிவை தடுத்த நிறுத்தா விட்டால் அதன் சமூக, அரசியல் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். வால்மார்ட்டை ஆதரிக்கும் அறிவாளிகள் தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அண்ணாச்சி கடைகளுக்குச் சென்று அந்த கடை மூலம் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பதை கேட்டறிந்து தெரிந்து கொள்ளலாம். பின்னர் பிராயச்சித்தமாக வால்மார்ட்டை எதிர்க்கும் போராட்டங்களிலும் கலந்து கொள்ளலாம். செய்வார்களா?
– செழியன்
Even Consumers also benefited with annachi kadai. Compare the Corporate shops rate (Spencers, Reliance fresh, More) with annachi kadai. Am sure that annachi kdai will give products in less price. But in those super markets, we should pay the MRP. If wallmart enters, that MRP also will be increased. We will not have any other option to buy goods in affordable price. Wall Mart is dangerous to all kind of people’s. Everyone should oppose wallmart.
I think you have told in reverse. In supermarket only they sell, prices less than MRP. In all other shops, everything is sold at MRP only. If anybody requests only they give one or two rupees back.
அதாவது, மொத்தவிலை அன்னாச்சி கடைகளிள் விலை கம்மியாகத்தான் இருக்கிறது. சிறிய சிறிய கடைகளில் விலை MRPல் தான் விற்கப்படுகிறது. மேல்தட்டு மக்கள் (அல்லது அப்படி நினைத்துக் கொள்பவர்கள்) More, Reliance, Nilgris, பிற Supermarkets போன்ற பெரிய கடைகளில் தான் வாங்குவார்கள்….(Prestige issue)
சென்னையில் உள்ள கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட் சென்று பாருங்கள் தெரியும். வால்மார்ட்டும் அது போன்ற ஒன்று தான்.
dont generalize annachi kadai,there are all kinds of annachi kadai and nobody gives it for less price,price is likely to be more because annachi buys in small quantity from wholesaler.
//there are all kinds of annachi kadai and nobody gives it for less price,price is likely to be more because annachi buys in small quantity from wholesaler.//
உங்களுக்கு மளிகைக் கடைகளில் பொருள் வாங்கிய பழக்கமே இல்லை என்று தோன்றுகிறது. பெரும்பாலான மளிகைக் கடைகளில் அதிக பட்ச விற்பனை விலைக்கு குறைவாகவே பொருட்களை விற்கிறார்கள். மொத்த விற்பனையாளர் கொடுக்கும் கமிஷனில் ஒரு பகுதியை வாடிக்கையாளருடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பரவலாக இருக்கிறது.
well i lived in madras and trichy and i haven’t seen this happening there.
பெரும்பாலான மளிகை கடைகளில் அதிகபட்ச விலையிலேயே (எம்.ஆர்.பி) வியாபாரம் நடைபெறுகிறது. அதில் தவறும் இல்லை. ஆனால் சில கடைகள் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையில் (ஒரே நபரால் இயங்கப்படுகிறது) ஈடுபடுகின்றனர். அவர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்.
மாநகரங்களில் வால்மார்ட் வரணும்கிறானுங்க சரி ஆனால் கிராமங்களுக்கும் வால்மார்ட் வருமா?
எல்லாத்தியும் தனியார் மயமாக்கி விடறானுங்க…நாளைக்கு நாம புள்ள பெக்கறுதுக்கும் விக்கறதுக்கும் கூட அன்னிய முதலீடு வரும் போல இருக்கே ..
என்ன கொடும சார் இது
ஒரு வேன்டுகோள் , புதிய ஜனனாயகம் மற்றும் புதிய கலாசாரம் கோவையில் எங்கு கிடைக்கும்? கோவை வாசகர்கள் யாராவது சொன்னால் நன்றி.
book store opposite to victoria hall. i.e near khadhi bhavan.
அருமையான கட்டுரை
இந்த மாதிரி சுயமரியதையோட ஒழைத்து கஞ்சி தண்ணியே குடிச்சுட்டு கடையிலேயே ஒலகம் தெரியாம கேடக்கிறவாய்ங்களுக்கு ஒன்னும் ஆகிடக்கூடாதுன்னு மனசு கேடந்து அடிச்சுகிறுது. பாவம் இவிய்ங்களா வாழ விடுங்க
எத்தன தடவை இவிய்ங்கிட்ட கடனாக சாமன்ய்ங்கே வாங்கிட்டு கடனே திருப்பி கொடுக்க முடியாமே அங்கிட்டு போன புடிச்சு கடனே கேப்பாரு பயந்து வேறு ரூட்டுலே சுத்தி போயிருக்கிறேன் அப்புடியும் எதர்த்தமாக எதிரே பார்த்துட்டு என்ன பாய் கட பக்கட்டே ஆள காணம் அப்புடியின்னு வெள்ளேந்தியாக கேட்டுயிருப்பாய்ங்கே
வால்மார்ட் வேணாம் ஒரு மயிரும் வேணாம் அவிங்களா வாழ வைப்போம் அதன் மூலம் நம்மளும் சேர்ந்து வாழ்வோம்.
Its true friend.
Avuru enna kanduvatti kaarara, sattai pudichu kekka,avrukku theriyum eppadiyum neenga kudupeengannu. prachanai panni vyaparatha ethukku kedukkanum.
வால்மார்ட் வந்தால் சில்லறை வணிகர்கள் பாதிக்கபடுவார்கள் என்று புலம்புவது வியப்பாக உள்ளது பொருட்களை தரமானதாக குறைந்த விலையில் சரியான அளவில் யார் கொடுத்தாலும் அதை நுகர்வோர்கள் வரவேற்று வியாபாரம் அமோகமாக நடைபெறும்.உண்மை இவ்வாறு இருக்க அவன் வந்தால் இவன் அழிந்துவிடுவான் என்று கூக்குரல் இடுவது நியாமா? சில்லறை வியாபாரிகள் நியாயமாக நடந்துகொண்டால் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது
Dear Rabbani, i would like to ask only one question???.. Who is dominating our beverage industry.. our local players or global players???
Even i discussed about this retailer issue to southern regional manager of a reputed concern. He simply said it depends upon the market potential of the retailer as like u…
consumers run behind which is popular, if walmart enters our people will surely forget small retailers. but again it will be segmented to classes of people only below poverty line support small retailer, i dont know to extend this will be practical……
எங்கள் பகுதியில் ஒருவர் விருதுநகர், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து மொத்தமாக வாங்கி, அதை சுத்தமாக சலித்து, புடைத்து சிறு சிறு பாக்கெட்டுகளாக அடைத்து கடைகளுக்கு வினியோகம் செய்கிறார். 20 அல்லது 25 பெண்கள் வேலை செய்கிறார்கள். அந்த பெண்கள் கொண்டுவரும் பணத்தை நம்பி அவர்களின் குடும்பத்தில் எத்தனை உயிர்கள் காத்திருக்கிறது என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
செய்ய மாட்டார்கள்,மாறாக அந்த அடிவருடி,அல்லக்கை,சொம்புதூக்கிகள்
எப்போதும் பாடும் புராணத்தையே பாடுவார்கள்.ஆனால் ஒன்று நாடு
சிங்கப்பூர் போல ஆகிவிடும்.ஊழல் மற்றும் லஞ்ச விசயங்களில் அல்ல
வாழ்க்கை செலவினங்களில்.
ரப்பானி நீ இன்னும் வளரனும் தம்பி.
உனக்கு இதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் புரியாது.
அண்ணாச்சி என்றால் என்ன ? இது ஒரு ஜாதி அடையாளமா ? அல்லது வியாபாரம் செய்து பிழைக்கும் சோம்பேறிகளின் கூடாரமா ? . வியாபாரம் என்பதே மோசடி இதில் அண்ணாச்சி செய்தால் என்ன செட்டியார் செய்தால் என்ன ? வால் மார்ட் செய்தால் என்ன ? . அண்ணாச்சி செய்தால் நேர்மையா வால்மார்ட் செய்தல் அநீதியா ?
In India, people who are unprivileged to goto school and study have very less ways to survive. These chain shops (maligai kadaigal) are main source of employment and suppliers,agencies are again a business. How many small scale industries,the products manufactured locally,its marketing,advertisement,its employment opportunities and so on..its a beautiful ecosystem atleast until all Indians are educated not just as Engineers,Doctos but as Agricultarist,Flowerist,Farmer,Geotechnologist,likewise many day-day life science and technologies.
Eppo FDI in Retail vandalum..ranakalam taan dee..evanaiyum ulla vida padathu makkaley..even though IT la irundalum itha naan fully support pannuven groundla irangi vendumna..
மனித வாழ்க்கையின் கூறுகளான சமூக, பொருளாதார, மற்றும் அரசியலை அண்ணாச்சிகளும்,அவர்களின் வாடிக்கையாளர்களும் கவனிக்கத்தவறியதுதான் வால்மார்ட் உருவாவதற்கு அடிப்படை.கடுகு உளுந்து விற்பதும் வாங்கிச் சாப்பிடுவது மட்டும் வாழ்கை அல்ல.அண்ணாச்சிகளும் வாடிக்கையாள்ர்களும் அரசியலைக்கவனித்தால் எல்லாம் சரியாகி விடும்.
mom and pop(Annachi) stores wont die just like that and Annachis are smart enough to do business. 50-100 yearsukku munnadi annachi ellam maligai vechu thaan pozhaichaangala.
Illa vikkurathukku samaane illaya. This will certainly develop lot of employment and by doing all this protectionism,we are just keeping people tied up.
Only one question,how many of annachi’s kids based in cities/towns want to continue in the shop. These days even Farmer’s and Farm labourer’s kids become engineers.
//mom and pop(Annachi) stores wont die just like that and Annachis are smart enough to do business. 50-100 yearsukku munnadi annachi ellam maligai vechu thaan pozhaichaangala.//
என்ன சொல்ல வருகிறீர்கள்? ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க’ என்பதால் அடித்து துவைப்பதை நியாயப்படுத்துகிறீர்களா? சில்லறை வணிகத்தில் பெருநிறுவனங்களை அனுமதித்ததால் mom and pop கடை நடத்துபவர்கள் மீது சுமை அதிகமாயிருக்கிறது. அன்னிய நிறுவனங்களையும் அனுமதித்தால், பலர் கடையை மூடி விட்டு கூலி வேலைக்கு போக நேரலாம், எஞ்சியவர்கள் இன்னும் அதிகமாக உழைத்து குறைந்த வருவாயில் சிரமப்பட வேண்டியிருக்கும்
//Illa vikkurathukku samaane illaya. This will certainly develop lot of employment and by doing all this protectionism,we are just keeping people tied up.//
எது மாதிரி வேலை வாய்ப்பு? வால் மார்ட் பற்றிய ஆவணப் படத்தைப் பார்த்தீங்களா? ரிலையன்ஸ் பிரஷ்சில் கிடைக்கும் வேலை வாய்ப்பு கொத்தடிமை வேலையை விடக் கொடுமையானது என்பது நம் நாட்டு நிதர்சனம்.
//Only one question,how many of annachi’s kids based in cities/towns want to continue in the shop. These days even Farmer’s and Farm labourer’s kids become engineers.//
‘எத்தனை அண்ணாச்சி கடைகள் தொழிலை மூடி விட்டுப் போக விரும்புகிறார்கள்?’ என்று உங்களிடம் கணக்கு இருக்கிறதா? அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு முன்பு அப்படி ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதா?
விவசாயிகளில் எத்தனை பேர் விவசாயத்தை வெறுத்து விட்டுப் போனார்கள்? எத்தனை பேர் அரசின் கொள்கைகளால் விவசாயத்தை விட்டுத் துரத்தப்பட்டார்கள்?
சில காலமாக (எனக்கு தெரிந்து 10 ஆண்டுகளாக) மொத்த விற்பனை மட்டுமே செய்துகொண்டிருந்த பெருவணிகர் சிலர் திடீரென்று காய்கனி அங்காடிகளைத் திறந்தனர். அதில் சுற்றி இருந்த சில்லரை வணிகர்கள் (தள்ளுவண்டி, பிளாட்பார கடைகள்) விற்பதை விட குறைந்த விலையில் விற்று அவர்கள் வயிற்றில் அடித்தனர். இப்போதும் அடித்து கொண்டிருக்கின்றனர். அந்த அண்ணாச்சிகளுக்கு எதிராக ஏன் போராட்டங்கள் நடைபெறவில்லை?
சென்னை-பெரம்பூரில் இப்படி ஒரு காய் கனி அங்காடியைத் திறந்துவைத்து சில்லரை வியாபாரிகள் வயிற்றில் அடித்தவர் வியாபாரிகள் சங்கத் தலைவர் த.வெள்ளையன். அது மட்டுமல்ல அந்த அங்காடி உள்ள தெருவையே ஆக்கிரமித்து, அருகில் உள்ள வீட்டுவாசல்களில் தன்னுடைய குப்பைகளைக் கொட்டி குப்பைத்தொட்டியாகவும் ஆக்கிவைத்துள்ளனர்.
பணம், செல்வாக்கு உள்ள அண்ணாச்சிகள் இப்படி வாய்ப்புகளை உபயோகப்படுத்திக்கொள்கின்றனர். தங்களுக்குப் போட்டியாக அன்னிய முதலீடு வரவே, முதலை கண்ணீர் வடிக்கின்றனர்.
ஆகையால் தாங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல் எல்லா அண்ணாச்சிகளும் ஒரே இனமல்ல. நீங்கள் குறிப்பிட்டதால் தான் நானும் ‘அண்ணாச்சி’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கிறேன். முற்போக்காளர் என்று கூறிக்கொண்டு இப்படி கட்டுரை முழுக்க ‘ஜாதிப்பெயர்’ பயன்பாடு தேவையா?
ரிலையென்ஸ் ப்ரெஷில் சிலமுறை பொருள் வாங்கியதுண்டு. ஆனால் அவர்கள் நிலைப்பற்றி தெரியாது. ஆனால் என் வீட்டருகே உள்ள மளிகைக்கடையில் ஊரில் இருந்து 10 முதல் 16 வயது வரை உள்ள 2 – 3 சிறுவர்களை அழைத்துவந்து கொத்தடிமை போலத்தான் வைத்திருந்தார்கள். சொன்ன வேலை செய்யாவிட்டால் அடியும் உண்டு. மளிக சாமான் குடோன் படுக்கையறை. வால்மார்ட் வந்தால் தன் நிறுவனத்தில் பணிபுரிவோரை அதிக நேரம் வேலை வாங்கும், மருத்துவ வசதி தராது என்றெல்லாம் ஆரூடம் கூறுகிறீர்கள். ஆனால் ஏற்கனவே அந்த நிலையில் தான் மளிகை கடையில் வேலை செய்வோர் உள்ளனர். சொல்லப்போனால் என் வீட்டுப்பக்கத்தில் உள்ள ரிலையன்ஸ் 9.30 மணிக்கு அடைக்கப்படும். பக்கத்திலேயே உள்ள இன்னொரு ‘மார்ட்’ இரவு 11.30 வரை திறந்திருக்கும். அதில் பணிபுரிபவருக்கு ஓ.டி. எல்லாம் கிடையாது.
தங்களிடம் நான் கோருவது ஒன்றே ஒன்று தான். அன்னிய முதலீட்டை விஷம் என்று எதிர்க்கும் அதே நேரம் தற்போது உள்ள மளிகைக்கடை வியாபாரிகளை தேவதூதர்களாக காட்டவேண்டாம். அவர்களும் சந்தர்ப்பவாதிகளே.
நான் கோலா குடித்து பழக்கப்பட்டவன் (வினவு இதனால் என்னை திட்டவேண்டாம்)
அண்ணாச்சி கடைகளிலோ , இல்லை கூல் ட்ரிங்க்ஸ் கடைகளிலோ வாங்கினேன் என்றால் அதிகபட்ச விலைக்கு மேலாக (கூலிங் காஸ்ட்) என்று இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை அதிகம் வாங்குகின்றனர், இதில் சங்கம் வைத்து ஒரே மாதிரி விலை வேறு (யாராவது விலை குறைவாய் விற்றால், சங்கம் மூலம் நடவடிக்கை),
reliance fresh , more market , போன்றவைகளில் இந்த பிரச்சனை கிடையாது, இதற்கு வினவின் மறுமொழி என்ன?
நான் இந்த பன்னாட்டு கடையில் நுழைவதக்கே கட்டணமாக 1200 தைவான் டலர்கள் என்ற பகல் கொள்ளையால் பாதிக்கப்பட்டவன். ஒரு வருடத்திற்கு இப்படி 1200 விதம் லட்சகணக்கான மக்களிடம் அடிக்கும் பகல் கொள்ளைக்கு (எந்த பொருளும் கொடுக்காமல் கோடிகணக்கில் சம்பாதிப்பதை வேறு எப்படி சொல்ல ) உங்களின் பதில் என்ன?.
annachai kadhikarar has purchased vegetable per Kg for only Rs.10/- in whole sale market but he is sell at Rs.40 and to retail how much he wants gain?