Sunday, July 21, 2024
முகப்புவாழ்க்கைபெண்மார்ச் 8 அனைத்து மகளிர் தின அரங்குக் கூட்டம் - செய்தி!

மார்ச் 8 அனைத்து மகளிர் தின அரங்குக் கூட்டம் – செய்தி!

-

உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி ரத்தம் சிந்திய நாளான மார்ச் 8 அன்று திருச்சியில் காலை பெண்ணுரிமைப் போராளி தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கும், அம்பேத்காரின் உருவசிலைக்கும் மாலை அணிவித்து கூடியிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதன் தொடர் நிகழ்வாக மாலை உறையூர்  பகுதியில் அமைந்துள்ள “கைத்தறி நெசவாளர்  திருமண மண்டபத்தில்” அரங்குக் கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கியது.

தலைமையுரையாக பெண்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் தோழர் இந்துமதி பேசும் போது, “பெண்களுக்கு சமூக அக்கறை அதிகரித்து வருகிறது. ஆனால் ஆண்கள் அதை தடைசெய்வதும், வரம்புக்குட்பட்ட உரிமைகளை மட்டும் கொடுப்பதும் உள்ளது. பெண்களுடைய திறமைகள் போர்க்குணங்கள் அதிகரிக்கும் இச்சூழலில் பெண்கள் தம்முடைய குடும்பம் என்ற வட்டத்தை தாண்டி சமூகத்திற்காக உழைக்க முன் வரவேண்டியது அவசியம் இன்று பெண்களுக்கு ஆண்கள் எதிரியல்ல, மாறாக ஆண்-பெண் சேர்ந்து செய்யக் கூடிய ஒரு புரட்சியின் மூலமே பெண் விடுதலை சாத்தியம் மற்றும் மார்ச்-08 வெறும் கோரிக்கை நாளல்ல, அது போராட்ட நாள், சர்வதேச பெண்களின் முழுமையான விடுதலைக்கு போராட பெண்கள் அணி திரள வேண்டும்” என்றார்.

பெண்கள் சட்டத்தின் முன் சமமானவர்களா? என்ற தலைப்பில் வழக்கறிஞர் மீனாட்சி பேசும்போது, “பாமர பெண்களாக இருந்தாலும் படித்த பெண்களாக இருந்தாலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருக்கின்றது. சமீபத்தில் பழங்குடி பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டது. அதேபோல் ராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிந்த “அஞ்சலி குப்தா” என்ற பெண்ணும் பாலியம் வன்முறையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இதற்கு காரணமான குற்றவாளிகள் மீது எந்தவிதமான கடுமையான தண்டனையும் விதிக்கப்படவில்லை.அதேபோல சொத்துரிமையிலும், ஆண்களுக்கு சாதகமாகவே சட்டங்கள் உள்ளன. “குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்” என்பதும், பெண்களுக்கு எதிரானதாகவே உள்ளது. பெண்கள் அமைப்பாக சேர்ந்து போராடும் போதே பெண் விடுதலை சாத்தியமே தவிர சட்டத்தின் மூலம் தீர்வு கிடையாது என உரையாற்றினார்.

மறுகாலனியாக்கச் சூழலில் பெண்கள் மீதான அடக்குமுறையும் அவர்களது விடுதலையும் என்ற தலைப்பில் தோழர் துரை சண்முகம் பேசும்போது:

“மறுகாலனியம் இன்று ஒட்டு மொத்த மக்களையும் வேட்டையாடும் சூழலில் பெண்களின் நிலை என்பது மிக கொடுமையாக உள்ளது. உழைப்பு சுரண்டலின் உதாரணம் சென்னை நோக்கியா கம்பெனியில் வேலை செய்த அம்பிகா என்ற பெண் யந்திரத்தில் வேலை பார்க்கும் போது கழுத்து அறுபட்ட நிலையிலும் உற்பத்தியை நிறுத்தக் கூடாது என நோக்கியா நிர்வாகம் அராஜகம் செய்துள்ளது. இன்று பல நிறுவனங்கள் பெண்களை அழகுப் பதுமைகளாகவே பார்க்கிறது. முதலாளித்துவம் பெண்களின் உழைப்பை சுரண்டுவதாகவே உள்ளது. பெண்கள் அமைப்பாக சேரவேண்டிய அவசியம் குறித்தும் அந்த உணர்வை ஊட்டுவது பெண்கள் விடுதலை முன்னணியின் கடமையாகவும் உள்ளது” என பேசினார்.

பெண்கள் விடுதலை முன்னணியினரின் அறிமுக ஆட்டத்துடன், பெண் தோழரின் சிலம்பாட்டம் நடத்தப்பட்டது. பெ.வி.மு.வின் “நவீன அடிமைகள்” நாடகம் நடத்திக் காட்டப்பட்டது. ம.க.இ.க. மையக் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சியும் சிறுவர் கலைக்குழுவின் கழியல் ஆட்டம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. முல்லைப் பெரியாறு அணை, பற்றிய சிறு நாடகமும் நடத்தப்பட்டது.

இறுதியில் நன்றியுரை, சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவுற்றது. நிகழ்ச்சியில் சுமார் 700பேர் கலந்து கொண்டனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________

செய்தி : பெண்கள் விடுதலை முன்னணி ,திருச்சி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. பெண்கள் விடுதலை முன்னணியின் அனைத்துத் தோழர்களுக்கும் வீர வணக்கங்கள்.

 2. பெண்களுக்கு சாபமாய் அமைகிறது வாழ்க்கை, அதை சகித்துக்கொண்டு போகாமல் போராட்டத்தான் வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது பெண்கள் விடுதலை முன்னணி.

 3. http://www.dailythanthi.com/article.asp?NewsID=715630&disdate=3/13/2012

  தினத்தந்தியில் வெளியான இந்த செய்தியை வேறு எந்த செய்திதாள்களிலும் காணோம் .ஆனால் இதனைப் போன்று சம்பவம் முஸ்லிம் பெண்விசயத்தில் நடந்து இருந்தால் ,இந்த செய்தி உலகம் முழுவதும் மீடியாக்களால் எடுத்து செல்லப்படும் .நமது இங்க்லீஷ் சேனல்கள் அனைத்தும் நாள் முழுவதும் செய்திகள் போட்டு இரவில் காரசாரமான விவாதத்தை நடத்திக் கொண்டு இருப்பார்கள் .பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வரும் .அத்துடன் பத்திரிக்கை தர்மமாக மிகைப்படுத்தல்கள் வரும். முஸ்லிம் பெண்ணுக்காக இவர்கள் அனைவரும் வடிக்கும் கண்ணீர் வெள்ளமாக தெருவெல்லாம் ஓடும் .
  ஆனால் இப்போது பாருங்கள் செய்தியை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்.

 4. இதற்கு கருத்துக்களை பதிவு செய்ய எந்த ஆண்களையும் காணோம் எந்த பெண்மணிகளையும் காணோம் .வினவு பதிவர்களுக்கு முழுக்க முழுக்க முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பற்றி தான் கவலைகள் .எவ்வளவு கண்ணீர் வடிக்கிறார்கள் .வினவுவில் பக்கம்பக்கமாக கண்ணீர் ஓடுகிறது .அந்தோ பரிதாபம் ! ஒரு ஹிந்து சகோதரிக்காக ,ஒரு இந்திய சகோதரிக்காக பரிதாபப்பட நாதியில்லை .என்ன கொடுமை ?

 5. மகளிர் பற்றிய கட்டுரை பின்னூட்டத்தில் மதங்களை மோதவிட விழைகிறீர்கள். பின்னூட்டம் இடாதவர்களையும் வலுக்கட்டாயமாய் இழுக்கிறீர்கள்.

  1800 களில் ராஜாராம் மோகன்ராய் தொடங்கி இன்று வரை சதி பழக்கத்தைப் பழித்து பெரும்பான்மையினர் அவ்வழக்கத்தைக் கைவிட்டுவிட்டனர். முன்பு விரும்பியோ, பிடித்து தள்ளப்பட்டோ உடன் கட்டை ஏறிய பெண்களை சதிமாதா என்று அவர் பரம்பரை வணங்கும். (தென்னிந்தியாவில் இப்பழக்கம் இல்லை. வட இந்தியாவில் சில பிரிவினரால் பின்பற்றப்பட்டது). இன்றைய சூழ்நிலையில் அந்த பிரிவினை சேர்ந்தவர்களே அந்த பழக்கத்தை கைவிட்டுவிட்டனர். இன்னும் சில இழிப்பிறவிகள் தான் இதைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். இந்த கொடுமைகள் இந்து மதத்தில் உண்டு என்பதை எனக்கு தெரிந்து எந்த இந்துக்களும் மறுத்தோ இந்த செயல்களை தற்காலத்தில் ஆதரித்தோ பேசியதாய் தெரியவில்லை.

  • Vijay////இந்த செயல்களை தற்காலத்தில் ஆதரித்தோ பேசியதாய் தெரியவில்லை.///

   ஆதரித்து பேசி பாருங்களேன் .உங்களையும் போலிஸ் கைது செய்யும் .ஏன் நிறுத்த இயலவில்லை ? மீடியாக்கள் கிராமம் கிராமமாக சென்று உடன்கட்டை ஏறுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு முஸ்லிம் பெண்கள் பற்றி விவாதம் நடத்தட்டும் .

   ///மகளிர் பற்றிய கட்டுரை பின்னூட்டத்தில் மதங்களை மோதவிட விழைகிறீர்கள். ///

   மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி பேசினால் மதங்களை மோதவிடுகிறேனா? எத்தனயோ ஹிந்து சகோதரர்கள் பர்தா அணியும் முஸ்லிம் பெண்களுக்ககாக கவலைப்படும் பொழுது நான் உடன்கட்டையை கட்டாயப்படுத்தும் பெண்ணுக்காக பதிவிட்டால் மத மோதல் என்று கூற வருகிறீர்கள்..அப்புறம் தீவிரவாதி என்பீர்கள்.

   • இங்கே பின்னூட்டம் இட அறைகூவல் விட்ட நீங்கள்தான் முஸ்லிம் பெண்களைப் பிறகு காப்பாற்றுங்கள், ஹிந்து பெண்களை முதலில் காப்பாற்ற வேண்டும் என இதைப் பெண்கள் பிரச்சனையாய் பார்க்காமல் இந்துவா முஸ்லிமா என்ற கோணத்தில் பார்க்கிறீர்கள்.

    மேலே உள்ள மூன்று பின்னூட்டத்திலும் பிரச்சனைப் பற்றி பேசாமல் முஸ்லிம், பர்தா என்று தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இது மதங்களை மோத விடும் முயற்சி அன்றி வேரொன்றும் இல்லை.

    “மீடியாக்கள் கிராமம் கிராமமாக சென்று உடன்கட்டை ஏறுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு முஸ்லிம் பெண்கள் பற்றி விவாதம் நடத்தட்டும்”

    உங்கள் கவலை பெண்களுக்கு இழக்கப்படும் அநீதி அல்ல. முஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை விவாதிப்பதை எதிர்க்கிறீர். அப்படித்தானே. திருச்சியில் உள்ள திருடனைப் பிடிக்க சென்னைப் போலீஸ் போனால் முதலில் சென்னையில் உள்ள திருடனை எல்லாம் பிடித்து முடித்துவிட்டு வாருங்கள். அதுவரை என்னைக் கைது செய்யக்கூடாது என்று கூறுவது போல உள்ளது.

    நான் சொல்ல வேண்டியதை சொல்லியாகிவிட்டது. இதற்கு மேலும் இங்கே பேசினால் அது ஆக்கப்பூர்வமான கருத்தாக இருக்கமுடியாது. இதுவே இந்த கட்டுரையில் என் கடைசி பின்னூட்டம்.

 6. Vijay///முஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை விவாதிப்பதை எதிர்க்கிறீர். அப்படித்தானே. திருச்சியில் உள்ள திருடனைப் பிடிக்க சென்னைப் போலீஸ் போனால் முதலில் சென்னையில் உள்ள திருடனை எல்லாம் பிடித்து முடித்துவிட்டு வாருங்கள். அதுவரை என்னைக் கைது செய்யக்கூடாது என்று கூறுவது போல உள்ளது////
  திருச்சியில் உள்ள திருடனை கண்டும் காணாமல் இருந்துவிட்டு ,சென்னையில் திருடாத ஒருவனை சந்தேக கேசில் பிடித்து வழக்கு போடுவது ஏன் என்பதுதான் எனது கேள்வி
  உடன்கட்டை ஏறுவதற்கு உறவினர்களால் விரட்டியடிக்கப்பட்ட பெண்ணைப்போல பர்தாவுக்காக யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அறிவுறுத்தப் படுவதோடு சரி நீங்கள் பர்தா அணிந்து செல்லும் பெண்கள் மட்டும் தான் முஸ்லிம் என்று தவறாக கணித்துள்ளீர்கள்.பர்தா அணியாமலும் முஸ்லிம் பெண்கள் வெளியே செல்லுகிறார்கள் .கல்லூரிக்கு செல்லுகிறார்கள்,அலுவலகத்துக்கு செல்லுகிறார்கள்.பர்தா முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று மூன்றாவது நபர்களுக்கு எப்படி தெரியும்?ஏன் ஆண்கள் மட்டும் கோர்ட் சூட் டை,சூ,சாக்ஸ் அணிவதற்கு பதில் சொல்ல மறுக்குகிரீர்கள் ? அவர்கள் அரைகுறை ஆடை அணிவதை சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை ஏன்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க