privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்

மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்

-

தமிழக-மின்வெட்டு-ஜெயலலிதா-கார்டூன்

கடுமையான மின்வெட்டுக்குக் காரணம் என்ன? தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்வெட்டுக்கே ஆற்காடு வீராசாமியின் பெயரைச் சூட்டி,  ஒரு அமைச்சரின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல்தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பதுபோல பிரச்சினையைச் சுருக்கி சித்தரித்தன ஊடகங்கள். மின்வெட்டு காரணமாக மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, “ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின் பற்றாக்குறையைப் போக்குவேன்” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தார்.

சென்ற ஆண்டு டிசம்பரில் எப்.ஐ.சி.சி.ஐ. என்ற இந்தியத் தரகு முதலாளிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், “2012 இல் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது” என பிரகடனம் செய்தார். 2012ஆம் ஆண்டோ, எட்டு மணி நேர மின்வெட்டுடன் தொடங்கியிருக்கிறது. “2014இல் தமிழகம் மின் உபரி மாநிலமாக இருக்கும்” என்று இப்போது குறி சொல்லியிருக்கிறார் அமைச்சர்.

திட்டமிட்டபடி அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்காதது, இருக்கின்ற மின்நிலையங்களில் பழுது காரணமாக உற்பத்தி குறைந்திருப்பது, மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காதது என்று தற்போதைய மின்பற்றாக்குறைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

2006இல் தமிழகத்தின் மின் தேவை 8500 மெகா வாட். 2012இல் 12,000 மெகாவாட். பெருகியிருக்கும் இந்த மின் தேவையை ஈடு செய்யும் விதத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின் உற்பத்தி பெருக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறது அ.தி.மு.க. கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க; தி.மு.க. இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் அரசின் சார்பில் புதிதாக மின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை என்பதே உண்மை.

இருப்பினும் மின்வெட்டு தீவிரமடைய அடைய, மக்களின் கோபம் இந்தக் கட்சிகளை நோக்கித் திரும்பாமல்,  அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை நோக்கித் திட்டமிட்டே திருப்பப் படுகிறது. தினமலர், காங்கிரசு அமைச்சர் நாராயணசாமி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதாக் கட்சி, கருணாநிதி, போலி கம்யூனிஸ்டுகள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தை நடத்துகிறார்கள்.

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதைதான். கடுமையானதொரு மின்பற்றாக்குறையில் நம்மைத் தள்ளிய குற்றவாளிகள் இவர்கள்தான். அணு மின்சாரம்தான் இதற்குத் தீர்வு என்று அடுத்த படுகுழியையும் இவர்கள் நமக்குத் தயார் செய்கிறார்கள்.

“மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற!” என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்.  மின்வெட்டுக்கு எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாத, கூடங்குளம்  இடிந்தகரை மக்களைக் குற்றவாளிகளாக்குகிறார்கள்.

இப்படி ஒருபுறம் மக்களின் கோபம் குறி தவறிப் போக, இன்னொரு புறம், பிப். 16 அன்று தமிழகத்தின் பிரபல நாளேடுகளில் வெளிவந்த ஒரு விளம்பரம் மின்வெட்டு பிரச்சினையின் முக்கியமானதொரு பரிமாணத்தை நமக்கு காட்டியது.

“தமிழகத்தில் மின்பற்றாக்குறையின் அளவு 30%. இந்தப் பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, இலட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கும், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின்வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டே இல்லை. மேற்கூறிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித் தடங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காட்டிலும் தமிழக மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை குறைவு என்பதால், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மின்சாரத்தை ஒட்ட உறிஞ்சுகிறார்கள்.  மின்சாரம் என்பது தமிழக மக்களின் பொதுச்சொத்து என்பதை உணர்ந்து, தாங்கள் அனுபவித்து வரும் இச்சலுகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும்”

என்று தமிழகத்தின் ஜவுளி, இஞ்சினியரிங் ஆலைகள், பவுண்டரிகள் மற்றும் சிறுதொழில் முனைவோரின் சங்கங்கள் அந்த விளம்பரத்தில் கோரியிருந்தனர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை. அரசாங்கமும் இந்த அநீதிக்கு பதிலளிக்கவில்லை.

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்எனினும் இந்த விளம்பரம், தமிழக மின்வெட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும், அதில் பளிச்சென்று தெரியும் மறுகாலனியாக்க கொள்கையையும் அம்பலப் படுத்துகிறது. நோக்கியா, ஹூண்டாய், போர்டு, ரெனால்ட், நிஸ்ஸான், டைம்லர், அப்போலோ டையர்ஸ், செயின்ட் கோபெய்ன், நோக்கியா, சீமன்ஸ், மோசர் பேர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், வாசல் முதல் கழிவறை வரை குளிரூட்டப்பட்ட ஆடம்பர மால்கள், ஐ.டி. நிறுவனங்களுக்காக உள்நாட்டுத் தொழில்கள் காவு கொடுக்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறது.

இனி தமிழகத்தின் மின் உற்பத்தி, விநியோகம் தொடர்பான சில அடிப்படையான புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 2010-11ஆம் ஆண்டில் தமிழகம் பயன்படுத்திய மொத்த மின்சாரம் 7499 கோடி யூனிட்டுகள். இதில் மாநில அரசுக்கு சொந்தமான மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 2578.40 கோடி யூனிட்டுகள். மீதமுள்ள 4920.60 கோடி யூனிட்டுகளை மத்திய மின் தொகுப்பிலிருந்தும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தமிழக அரசு வாங்கியிருக்கிறது.

மொத்த மின்சாரத்தில்  18.5% கம்பித்தட இழப்பு மற்றும் திருட்டுக்குப் போய் விடுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் வாரியத்துக்கு ஏற்படும் இழப்பு மட்டும் ரூ.2000 கோடி.

மாநில அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு 0.21 காசுகள் (நீர்மின்சக்தி). அதிக பட்சம் யூனிட்டு ரூ.2.14 காசுகள்(அனல்மின்சக்தி). தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழக அரசு விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு ரூ.3.96. அதிகபட்சம் ரூ.17.00.

201112 கணக்கீட்டின்படி மின்வாரியம் உற்பத்தி செய்கின்ற மற்றும் வாங்குகின்ற மொத்த மின்சாரத்தின் சராசரி அடக்க விலை  யூனிட் ஒன்றுக்கு ரூ.5.31. விற்பனை செய்கின்ற மின்சாரத்தின் சராசரி விலை யூனிட் ஒன்றுக்கு 3.81. இந்த வகையில் தற்போது யூனிட் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1.50. இதனை ஈடு செய்வதற்குத்தான் மின் கட்டண உயர்வு என்று ஜெயா அரசு கூறுகிறது.

தமிழகத்தின் மின்சாரம் வீடுகள் 27%, விவசாயம் 20.93%, வணிக நிறுவனங்கள் 10.43%, தொழிற்சாலைகள் 34.92% என்றவாறு நுகரப்படுகிறது. வீடுகளுக்கு ரூ.1.85 முதல் ரூ.2.90 வரை; வணிக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5.05 முதல் ரூ.6.00 வரை; தொழில் துறைக்கு ரூ.3.30 முதல் ரூ.4.05 வரை  என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு குறைந்த பட்சம் ரூ.2.00 இல் தொடங்கி அதிகபட்சம் ரூ.5.75 என்று உயர்த்தவிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

மேற்கூறிய விவரங்களிலிருந்து பெறப்படும் உண்மை என்ன? மாநில அரசானது, மின் உற்பத்தி நிலையங்களைத் தானே நிறுவாமல், தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதால்தான் மின்சாரத்தின் விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. தமிழக மின்வாரியத்தின் 9% மின்சாரத் தேவையை நிறைவு செய்து விட்டு, வாரியத்தின் வருவாயில் 35 சதவீதத்தை தனியார் முதலாளிகள் விழுங்கிவிடுகின்றனர் (இந்தியா டுடே, பிப்,29, 2012).

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்மின் கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், ‘தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரம் வாங்குவது ஏன்?’ என்று மக்கள் கேட்டதற்கு, “அவ்வாறு வாங்கவில்லையென்றால், 18 மணி நேர மின்வெட்டை அமல்படுத்த வேண்டியிருக்கும்” என்று பதிலளித்திருக்கிறார் தமிழக மின்வாரியத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் (தினமலர், ஜன30, 2012). தமிழக மின்வாரியத்தின் தற்போதைய கடன் 56,000 கோடி ரூபாய் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த 56,000 கோடி கடன் வந்தது எப்படி? விவசாயத்துக்கான இலவச மின்சாரம்தான் இதற்கு காரணம் என்று பலரும் இதற்கு பதிலளிக்கக் கூடும். அது உண்மைதானா என்பதை விவரங்களிலிருந்து பின்னர் பார்ப்போம். விவசாயத்துக்கு ஆற்றுத் தண்ணீரை விவசாயிகளுக்கு இலவசமாகத் தரக்கூடாது என்று கூறுவதும், இலவச மின்சாரம் கூடாது என்று கூறுவதும் ஒன்றே.  நீர்ப்பாசனம் என்பது விவசாயத்துக்கான அடிப்படைக் கட்டுமான வசதியாகும். இதனை செய்து தருவது அரசின் கடமை. கால்வாய் அல்லது ஏரிப்பாசன வசதிகளை அரசு செய்து தரத் தவறியதால், தனது சொந்தச் செலவில், கிணறு/பம்புசெட் போட்டுக் கொள்ளும் விவசாயிக்கு மின்சாரத்தை வழங்குவது அரசின் கடமை. அது இலவசமல்ல, சலுகையுமல்ல.

ஆறு வழிச்சாலைகள், சலுகை கட்டணத்தில் சரக்கு ரயில்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம்தண்ணீர் உள்ளிட்ட வசதிகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள், பிட்டர்டர்னர் முதல் பொறியியல், மேலாண்மைத் துறைகள் வரையிலான அனைத்திலும் தகுதியான நபர்களை உருவாக்கி முதலாளிகளுக்கு வழங்கும் கல்லூரிகள், ஏற்றுமதி மானியங்கள், இறக்குமதி வரிச்சலுகைகள்  என மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொட்டுகின்ற அரசு, இவற்றையெல்லாம் முதலாளிகளுக்கான ‘இலவசம்’ என்று அழைப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

யூனிட் 17 ரூபாய் வரை விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்தை, ரூ.3.30 விலையில் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசு, இதனை மானியம் என்று கூறுவதில்லை. அதனால் ஏற்படும் இழப்பையும் கணக்கிட்டுக் கூறுவதில்லை. இதைத்தான் மின்வெட்டுக்காக சிறு தொழிலதிபர்கள் கொடுத்துள்ள விளம்பரம் அம்பலப்படுத்துகிறது.

அதேபோல, கம்பித்தட இழப்பு என்று கூறப்படும் சுமார் 18.5 சதவீதத்தில் பெரும்பகுதி  ஆலை முதலாளிகள் செய்யும் மின்சாரத் திருட்டாகும். துணை மின்நிலையங்களிலிருந்தே நேரடியாகவே மின்சாரம் திருடப்பட்டாலும், அந்த மின்சாரமும் ‘இழப்பு’ என்று காந்திக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகிறது. இவை ஒருபுறமிருக்க, “தகவல் தொழில் நுட்பத்தின் துணையுடன் இயங்கும் தொழில்களுக்கான (ITES) மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 5 ரூபாயிலிருந்து ரூ.3.50 ஆக குறைக்க வேண்டும்” என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது தமிழ்நாடு மின்வாரியம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மின்சாரத்தின் விலை என்ன என்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள யாருமறியாத இரகசியம். இவை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பற்றிய விவரங்கள்.

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்இனி வாங்கப்படும் மின்சாரத்துக்கு வருவோம். மின் வாரியம் அளிக்கும் விவரங்களின்படியே, அரசாங்க மின்சாரத்தின் விலையை விட தனியார் மின்சாரத்தின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகமாக இருப்பதுதான் மின் வாரியத்தின் நட்டத்துக்கு காரணம். இன்டிபென்டென்ட் பவர் புரொடியூசர்ஸ் (சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள்) என்று அழைக்கப்படும் தனியார் முதலாளிகளிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொண்டும், மெர்ச்சென்ட் பவர் கார்ப்பரேசன் (வணிக மின் உற்பத்திக் கழகங்கள்) என்று அழைக்கப்படுவோரிடம் சந்தை விலையிலும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது அரசு. மின்சாரத்தின் வெளிச்சந்தை விலை சென்ற ஆண்டில் மட்டும் குறைந்த பட்சம் யூனிட் ரூ.1.10 இல் தொடங்கி ரூ.12.00 வரை ஏறி இறங்கியுள்ளது. இதில் எப்போதுமே குறைந்த பட்ச விலையைக் கூறுவது அரசு மின் நிலையங்களாகவும், அதிக பட்ச விலையைக் கோருவது தனியார் முதலாளிகளுமாகவே இருக்கின்றனர்.

இன்று மின் வெட்டை சமாளிப்பதற்காக யூனிட் ரூ.4.50 விலையில் குஜராத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு வாங்கி வருகிறது. இதில் 235 மெகாவாட் மட்டுமே வந்து சேர்வதாகவும் 265 மெகாவாட் மின்தட இழப்பில் போய்விடுவதாகவும் கூறுகிறார் அமைச்சர் நத்தம் விசுவநாதன். இதனால், வாங்குகின்ற மின்சாரத்தின் உண்மையான விலை யூனிட்டுக்கு 10 ரூபாய் ஆகிவிடுகிறது. இதே மின்சாரத்தை தமிழகத்தின் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அரசு வாங்க முடியும். தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் மட்டும் 6007 மெகாவாட். தனியார் அனல் மின் நிலைய உற்பத்தித் திறன் 1180 மெகாவாட். “சென்ற ஆண்டு யூனிட் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை கொடுத்து 1500 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் வாங்கினோம். 10,000 கோடி ரூபாய் அவர்களுக்கு பாக்கி வைத்திருப்பதால், இந்த ஆண்டு எதுவும் செய்வதற்கில்லை” என்று கூறுகிறார் ஒரு மின்வாரிய அதிகாரி. (டைம்ஸ் ஆப் இந்தியா, பிப்.23, 2012)

இதுநாள் வரை  யூனிட் 5 ரூபாய்க்கு தங்களிடம் மின்சாரத்தை வாங்கிவந்த மின்வாரியம், இப்போது ரூ.3.50 கேட்பதாகவும், இதன் காரணமாக 800 மெகாவாட் அனல்மின் உற்பத்தியை முடக்கவேண்டியிருக்கும் என்றும் சென்ற ஆண்டு மே மாதம் தமிழக அரசிடம் தெரிவித்திருக்கிறது தனியார் மின் உற்பத்தியாளர் சங்கம். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 30, 2011) “மின்சாரத்தின் விலையைக் கூட்டி விற்பதன் மூலம் மின் வாரியத்தை நட்டத்தில் தள்ளுகின்ற தமிழ்நாட்டிலுள்ள 5 தனியார் அனல் மின் நிலையங்களை உடனே அரசுடைமை ஆக்கு” என்று தீர்மானமே இயற்றி தி.மு.க. அரசுக்கு அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் சங்கம் (தி இந்து, 19.5.2008).

தனியார் மின் நிலையங்களை அரசுடைமை ஆக்குவது இருக்கட்டும், முதலில் கூரை ஏறிக் கோழி பிடித்தார்களா என்று பார்ப்போம். 20052010 காலகட்டத்தில் மின் தேவை 3977 மெகாவாட் அதிகரித்தது என்றும், ஆனால் வெறும் 290 மெகாவாட் அளவிற்கு மட்டுமே புதிதாக உற்பத்தி செய்யப்பட்டதென்றும் 200910 க்கான கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது. இது ஒன் றைத் தவிர 20012010 காலகட்டத்தில், (அதாவது அ.திமு.க; தி.மு.க. இரு ஆட்சிகளிலும்) புதிதாக ஒரு மெகாவாட் கூட உற்பத்தித்திறன் கூட அதிகரிக்கப்படவில்லை.

இந்தப் பத்தாண்டுகளில் ஜெயாவும் கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் கொண்டு வந்து இறக்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், சென்னையிலும் மற்ற பெரு நகரங்களிலும் பெருகியிருக்கும் ஆடம்பர மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே பெருகியிருக்கும் விதவிதமான மின் உபகரணங்கள், ஏ.சி.மிசின்கள் ஆகிய இவற்றுக்கான மின்சாரத்தை யார் கொடுப்பது? இதற்காகவேனும் மாநில அரசு தனது சொந்த அனல் மின்நிலையங்களைத் தொடங்கவேண்டும் என்று அ.தி.மு.க; தி.மு.க அரசுகளுக்குப் புரியாததற்குக் காரணம் அறியாமையா, நிர்வாகத் திறமையின்மையா?

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்இரண்டுமல்ல. புதிதாக அரசுப் பள்ளிகளோ கல்லூரிகளோ திறக்காமல், மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளைக்கு கல்வியைத் திறந்து விட்டிருப்பதற்கு எது காரணமோ, அதுதான் அரசு தனது சொந்த முதலீட்டில் மின்நிலையங்களைத் தொடங்காததற்கும் காரணம். “மருத்துவம், கல்வி ஆகியவற்றைப் போலவே, மின்சாரமும் ஒரு விற்பனைச் சரக்கு. பொதுநல நோக்கிலோ அல்லது சமூக நோக்கிலோ அரசாங்கம் மக்களுக்கு மின்சாரத்தை குறைந்த விலையில் வழங்குவது கூடாது. அதன் விலை சர்வதேச சந்தை விலையோடு ஒத்திருக்கவேண்டும். அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மின் துறையில் முதலீடு செய்ய இயலும்” என்ற உலக வங்கியின் ஆணைப்படி 2003 இல் பாரதிய ஜனதா அரசு  புதிய மின் சட்டத்தை இயற்றியது.

அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட 1948 மின்சாரச் சட்டம், மின்சாரம் என்பதை விவசாயம், தொழில், மற்றும் வீட்டு உபயோகங்களுக்கான அத்தியாவசியத் தேவையாகவும், லாப நோக்கமின்றி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவையாகவும் வரையறுத்தது. இதன் காரணமாகத்தான் பல மாநிலங்களின் குக்கிராமங்கள் வரை மின்கம்பிகள் சென்றன. 2003 சட்டமோ மின்சாரத்தை லாபமீட்டும் சரக்காகவும், மின் விநியோகத்தை வணிக நடவடிக்கையாகவும் வரையறுத்தது. மாநில மின் வாரியங்கள் மின் உற்பத்தி, மின் கடத்துதல், மின் விநியோகம் என்று மூன்று நிறுவனங்களாக உடைக்கப்பட்டன. மின் உற்பத்தி தனியார் மயமாக்கப்பட்டது.

இன்று அனைத்திந்திய அளவில் தனியார் மின் நிலையங்களின் உற்பத்தி 48,000 மெகாவாட். நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் இது 23% ஆகும். அடுத்த சில ஆண்டுகளில் தனியார் உற்பத்தி மேலும் 30,000 மெகாவாட் அதிகரிக்க இருக்கிறது. அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளை அனுமதிக்க இருக்கிறது மன்மோகன் அரசு. தமிழ்நாட்டில் மட்டும் 18,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 10 வணிக மின் உற்பத்திக் கழகங்களுக்கு (அனல் மின்சாரம்) தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் கார்ப்பரேட் முதலாளிகளின் பங்கு மென்மேலும் அதிகரிப்பதையே இவை காட்டுகின்றன. இது அதிகரிக்க அதிகரிக்க மின்சாரத்தின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசின் கையிலிருந்து அவர்கள் கைக்கு முழுவதுமாக மாறிவிடும். ‘மேட்டூர் நீர்மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு 20 காசு’ என்று தமிழக மின்வாரியம் கூறினாலும், ‘கூடங்குளம் அணுமின்சாரம் அஞ்சே காசுகள்’ என்று அப்துல் கலாம் கூவினாலும், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு நாம் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளாகத்தான் இருப்பார்கள். மருத்துவம், கல்வி முதலான துறைகளில் மக்களின் இரத்தத்தைப் பிழிந்து காசாக்கத் தெரிந்த முதலாளிகள், கரெண்டு பில்லுக்கான காசை நம் எலும்பைப் பிழிந்தேனும் எடுத்துவிடுவார்கள்.

மின்சாரம் தனியார்மயம் என்பது உழைக்கும் வர்க்கத்தின் மீதும், உள்நாட்டு சிறு தொழில்கள் மற்றும் விவசாயத்தின் மீதும் நிரந்தரமான மின்வெட்டைத் திணித்துவிடும். இன்றைய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம், மின்சாரம் வாங்குவதற்கு தமிழக மின்வாரியத்திடம் பணமில்லை என்பதே; மின்சாரப் பற்றாக்குறை என்பது இரண்டாவது காரணம்தான்.  மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் நாளை பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகளின் கைகளுக்கு முற்றிலுமாக மாறிவிடும்போது, அவர்கள் சொல்லும் சர்வதேச சந்தை விலைக்கு மின்சாரத்தை வாங்க நம்மிடம் பணமிருக்காது. எனவே மின்வெட்டு நம்மீது திணிக்கப்படும். அந்த மின்வெட்டிலிருந்து நம்மைக் காப்பாற்ற எந்த அணு சக்தியாலும் முடியாது. அதற்கு மக்கள் சக்தி தேவைப்படும். இன்று கூடங்குளத்தைக் கூடாதென்று நிறுத்தி வருகிறதே, அதே மக்கள் சக்திதான்!

______________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012
___________________________________________

  1. , கரெண்டு பில்லுக்கான காசை நம் எலும்பைப் பிழிந்தேனும் எடுத்துவிடுவார்கள். முதுகெலும்பு உள்ளவர்கள் இல்லதாவர்கள் யோசிக்க வேண்டிய உண்மைகள்

  2. // நீர்ப்பாசனம் என்பது விவசாயத்துக்கான அடிப்படைக் கட்டுமான வசதியாகும். இதனை செய்து தருவது அரசின் கடமை. கால்வாய் அல்லது ஏரிப்பாசன வசதிகளை அரசு செய்து தரத் தவறியதால், தனது சொந்தச் செலவில், கிணறு/பம்புசெட் போட்டுக் கொள்ளும் விவசாயிக்கு மின்சாரத்தை வழங்குவது அரசின் கடமை. அது இலவசமல்ல,// சலுகையுமல்ல.

    //ஆறு வழிச்சாலைகள், சலுகை கட்டணத்தில் சரக்கு ரயில்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம்தண்ணீர் உள்ளிட்ட வசதிகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள், பிட்டர்டர்னர் முதல் பொறியியல், மேலாண்மைத் துறைகள் வரையிலான அனைத்திலும் தகுதியான நபர்களை உருவாக்கி முதலாளிகளுக்கு வழங்கும் கல்லூரிகள், ஏற்றுமதி மானியங்கள், இறக்குமதி வரிச்சலுகைகள் என மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொட்டுகின்ற அரசு, இவற்றையெல்லாம் முதலாளிகளுக்கான ‘இலவசம்’ என்று அழைப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.//

  3. Time has to come to sake the politician Corruption. And the people will through them to Jail. It will happen in the name of People’s revolution of india.

    An Old Story:

    The Ant works hard in the withering heat all summer building its house and laying up supplies for the winter. The Grasshopper thinks the Ant is a fool and laughs, dances and plays the summer away.
    Come winter, the Ant is warm and well fed. The Grasshopper has no food or shelter so he dies out in the cold.

  4. பெருகி வரும் மின்பற்றாக்குறையைப் போக்க கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்காவிட்டால் வேறு வழியே இல்ல என்பது போல் ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையான அடிப்படை காரணங்களை மக்கள் புரிந்து கொள்ளும்படி புட்டுப்புட்டு வைத்துள்ளது கட்டுரை.

  5. /// தொழில் துறைக்கு ரூ.3.30 முதல் ரூ.4.05 வரை என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. ///

    இதை நிருபியுங்களேன். கிட்டதிட்ட 6.00 ரூபாய் விதிக்கிறார்கள். சும்மா அளக்க வேண்டாம்.

    அய்.டி துறையில் எங்கு 24 மனினேர மின்சாரம் என்றும் நிருபியுங்களேன் ? எல்லோரும் ஜென்னரேட்டர் எதுக்கு வச்சிருக்காங்களாம் அப்ப ? தனி ஃபீடர்கள் அவர்களுக்கு கிடையாது. எனவே மின்வெட்டு அவர்களுக்கும் தான் உண்டு.

    நோக்கியா, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு மின்வெட்டே கிடையாதா என்ன ? அவர்களுக்கு என்ன தனி feedersஆ இருக்கிறது ? மேலும் அவர்களுக்கு விதிக்க்படும் கட்டிணத்தில் என்ன சலுகை ? என்ன ரகசியம் ? சும்மா ஆதரமில்லாமல் மேலே உட்டதை போல் உட வேண்டாம்.

    இந்த பன்னாடு நிறுவனங்கள் எத்தனை மெகாவாட் மொத்தமாக உபயோக்கிறார்கள் என்று முதலில் break up கொடுக்கவும். பிறகு தெரியும் யார் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள் என்று. சமீப காலங்களில் இந்த பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்தை விட குஜராத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். ஃபோர்ட் கார் நிறுவனம் அதன் அடுத்த விரிவாக்கத்தை குஜராத்தில் தான் துவங்கியுள்ளது. காரணம் இங்கு நிலவும் மின்வெட்டு மற்றும் பற்றாகுறை.

    TNEB is corrupt, top heavy and mismanaged (like most PSUs) ; மேலும் வீட்டு உபயோகத்திற்க்கு மானிய விலையில் அளித்தால், உயர் நடுத்தர வர்கத்தினர் தான் மிக அதிகம் ஏ.சி வாங்கி உபயோக்கின்றனர். 500 யூனிட்டுக்கு மேல் உபயோக்க்கிப்பவர்களுக்கு தொழில்துறை அளவு கட்டிணம் வைத்திருந்தால், இத்தனை ல்ச்சம் புதிய ஏசி மெசின்கள் கடந்த சில வருடங்களில் வாங்கபடமால் இருந்திருக்கும்.

  6. //ஏற்றுமதி மானியங்கள், இறக்குமதி வரிச்சலுகைகள் என மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொட்டுகின்ற அரசு, இவற்றையெல்லாம் முதலாளிகளுக்கான ‘இலவசம்’ என்று அழைப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்./////

    இந்த சலுகைகளை மாநில அளிப்பதால் தான் புதிய முதலீடுகள் அதன் மூலம் மிக மிக அதிகம் வரி வசூல் மற்றும் employment generation (both direct and indirect) and general increase in economic growth சாத்தியமானது. இதே தமிழகத்தில் இந்த சலுகைகள், பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் இல்லாத காலங்களோடு ஒப்பிட்டால் தான் தெரியும். அன்று no vacancy போர்டுகள் தான் எங்கும். இன்று தான் wanted போர்டுகள்.

    கடந்த 15 வருடங்களில் வரி வசூல் அளவு எத்தனை சதம் வளர்ந்துள்ளது என்று தெரிந்துகொண்டு பேசுங்கள். தமிழக சரித்திரத்தில் இத்தனை ஆயிரம் கோடிகள் வரி வசூல் மழை கொட்டியதில்லை.

    The Economic Survey (2009-10) says gross central revenues more than doubled in 2004-05 and 2009-10, from Rs 3.04 lakh crore to 6.41 lakh crore. This helped finance the social spending boom.

    http://www.ssmrae.com/admin/images/320ec0c6f823429bab626525b8f40242.pdf
    An Assessment Study On Own Tax Revenue (Otr) In Tamil Nadu

  7. //– தொழில் துறைக்கு ரூ.3.30 முதல் ரூ.4.05 வரை என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது–
    இதை நிருபியுங்களேன். கிட்டதிட்ட 6.00 ரூபாய் விதிக்கிறார்கள். சும்மா அளக்க வேண்டாம்.//

    உங்களுக்கு வரும் பில் மட்டும்தான் உலகம் என்று இருக்காமல் விபரங்களின் அடிப்படையில் பேசுவதுதான் சரியாக இருக்கும்.

    இணையத்தில் கிடைக்கும் தகவல்
    http://www.tangedco.gov.in/TariffDetailsNew.php

    இதில் எந்த தொழில் துறைக்கும் நீங்கள் சொல்லும் ரூ 6 கட்டணம் இல்லை. கட்டணம் ரூ 1.80 முதல் ரூ 5 வரை வேறுபடுகிறது. கடை முதலிய வணிக நிறுவனங்களுக்குத்தான் 6 ரூபாய் கட்டணம் வருகிறது.

    1. உயர் அழுத்த தொழிற்சாலை பயன்பாடு – ரூ 4
    2. வணிக நிறுவனங்கள் (கடைகள், அலுவலகங்கள்) – ரூ 5.80
    3. வீடுகளுக்கு – ரூ 1.10, ரூ 2.60, ரூ 3.50, ரூ 5.75 (வெவ்வேறு பயனீட்டு அளவுகளுக்கு)
    4. குடிசை, குறு தொழில்களுக்கு – ரூ 1.80, ரூ 2.70, ரூ 3.50 (வெவ்வேறு பயனீட்டு அளவுகளுக்கு)
    5. விசைத்தறி – ரூ 1.40, ரூ 2.25, ரூ 2.50 (வெவ்வேறு பயனீட்டு அளவுகளுக்கு)
    6. மற்ற தொழில்களுக்கு – ரூ 4, ரூ 5 (வெவ்வேறு பயனீட்டு அளவுகளுக்கு)
    7. வணிக எல்டி வழங்கல் – ரூ 4.30, ரூ 5.30, ரூ 6.50

    //அய்.டி துறையில் எங்கு 24 மனினேர மின்சாரம் என்றும் நிருபியுங்களேன் ? எல்லோரும் ஜென்னரேட்டர் எதுக்கு வச்சிருக்காங்களாம் அப்ப ? தனி ஃபீடர்கள் அவர்களுக்கு கிடையாது. எனவே மின்வெட்டு அவர்களுக்கும் தான் உண்டு.
    நோக்கியா, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு மின்வெட்டே கிடையாதா என்ன ? அவர்களுக்கு என்ன தனி feedersஆ இருக்கிறது ? மேலும் அவர்களுக்கு விதிக்க்படும் கட்டிணத்தில் என்ன சலுகை ? என்ன ரகசியம் ? சும்மா ஆதரமில்லாமல் மேலே உட்டதை போல் உட வேண்டாம்.//

    அப்படி சலுகை கொடுக்கப்படவில்லை என்று ஆதாரம் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்த வரை நோக்கியா ஹூண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளுக்கு சிறப்பு சலுகையாக அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சலுகை விலையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அத்தகைய ஆவணம் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன் (பொதுவில் அந்த ஆவணங்கள் கிடைப்பதில்லை)

    //இந்த பன்னாடு நிறுவனங்கள் எத்தனை மெகாவாட் மொத்தமாக உபயோக்கிறார்கள் என்று முதலில் break up கொடுக்கவும். பிறகு தெரியும் யார் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள் என்று.//

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 16.8.2011 தேதியிட்ட கொள்கை ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி 2010-11ல் மின் பயன்பாட்டு விபரம்

    1. வீடுகள் – 148.73 லட்சம் இணைப்புகள் (66.56%), 16,387 மில்லியன் யூனிட்டுகள் (27.15%), சராசரி மாதத்துக்கு 91 யூனிட்டுகள்
    2. விவசாயம் – 19.73 லட்சம் இணைப்புகள் (8.83%), 12,632 மில்லியன் யூனிட்டுகள் (20.93%), சராசரி மாதத்துக்கு 533 யூனிட்டுகள்
    3. வணிக முறை – 28.20 லட்சம் இணைப்புகள் (12.62%), 6,297 மில்லியன் யூனிட்டுகள் (10.43%), சராசரி மாதத்துக்கு 186 யூனிட்டுகள்
    4. தொழில்கள் – 5.37 லட்சம் இணைப்புகள் (2.41%), 21,075 மில்லியன் யூனிட்டுகள் (34.92%), சராசரி மாதத்துக்கு 3,270 யூனிட்டுகள்

    2.41% இணைப்புகளை கொண்டுள்ள தொழிற்சாலைகளுக்கு 34.92% மின்சாரம் போகிறது (சராசரியாக ஒரு இணைப்புக்கு மாதம் 3,270 யூனிட்டுகள்). இதில் அன்னிய முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மெகா தொழிற்சாலைகள்தான் பெரும்பங்கை தின்று தீர்க்கின்றன என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என்று நம்புகிறேன்.

    //சமீப காலங்களில் இந்த பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்தை விட குஜராத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். ஃபோர்ட் கார் நிறுவனம் அதன் அடுத்த விரிவாக்கத்தை குஜராத்தில் தான் துவங்கியுள்ளது. காரணம் இங்கு நிலவும் மின்வெட்டு மற்றும் பற்றாகுறை.//

    குஜராத் மக்களையும் மண்ணையும் சல்லிசாக விற்பதற்கு நரேந்திர மோடி தலைமையில் தரகர்கள் தயாராக இருக்கும் போது பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு போவதில் என்ன ஆச்சரியம்!

    //TNEB is corrupt, top heavy and mismanaged (like most PSUs)//

    ஆமாம், விஜய் மல்லையா போன்ற திறமையான தனியார் முதலாளிகள் கையில் கொடுத்தால் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல அதிக விலைக்கு மின்சாரம் உற்பத்தி செய்து தருவார்கள் (அரசு உற்பத்தி செலவு ரூ 0.21 முதல் ரூ 2.14 வரை, தனியார் விற்பனை விலை ரூ 3.96 முதல் ரூ 17.00 வரை)

    //மேலும் வீட்டு உபயோகத்திற்க்கு மானிய விலையில் அளித்தால், உயர் நடுத்தர வர்கத்தினர் தான் மிக அதிகம் ஏ.சி வாங்கி உபயோக்கின்றனர். 500 யூனிட்டுக்கு மேல் உபயோக்க்கிப்பவர்களுக்கு தொழில்துறை அளவு கட்டிணம் வைத்திருந்தால், இத்தனை ல்ச்சம் புதிய ஏசி மெசின்கள் கடந்த சில வருடங்களில் வாங்கபடமால் இருந்திருக்கும்.//

    இது நியாயமான பேச்சு. இதை செய்வதற்கு லிபர்டேரியன்கள் சார்பில் ஒரு போராட்டத்தை ஆரம்பியுங்கள் 🙂

    • //2.41% இணைப்புகளை கொண்டுள்ள தொழிற்சாலைகளுக்கு 34.92% மின்சாரம் போகிறது (சராசரியாக ஒரு இணைப்புக்கு மாதம் 3,270 யூனிட்டுகள்). இதில் அன்னிய முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மெகா தொழிற்சாலைகள்தான் பெரும்பங்கை தின்று தீர்க்கின்றன என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என்று நம்புகிறேன்.////

      இதில் தான் break up கேட்டேன். முக்கியமாக HT மினழுத்தம் உபயோக்கிக்கும் தொழிற்சாலைகளில், இந்த பன்னாட்டு நிறுவனங்கள் எவை மற்றும் எத்தனை சதம் என்று தான் கேட்டேன். சிமெண்ட் ஆலைகள், நூல் மில்கள், மேட்டும் கெமிக்கல்ஸ் மற்றும் பல இதர துறை நிறுவனங்கள் உள்ளன. continious process industries உள்ளன. பன்னாட்டு தொழிற்சாலைகள் இதில் எத்தனை சதம் ?

      மேலும் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க. ஏன் ? மே.வங்க ‘போலி’ கம்யூனிஸ்டுகளும் போட்டி போட்டனர் ? ஏன் ? அவர்கள் எல்லோரும் மடையர்கள் அல்லது அயோக்கியர்களா என்ன ? பன்னாட்டு நிறுவனங்களை வரவழைப்பதால் கிடைக்கும் மொத்த நன்மைகளை உணர்ந்து தான். நேரடி வேலை வாய்பு மற்றும் வரி வசூல் ஒரு பகுதி தான். இதர secondary and ripple effects and long term effects தான் இன்னும் முக்கியம். feeder and sub-feeder industrial developments, effects in State GDP growth, etc. சிரிபெரும்புதூர் முதல் ஒரகடம் வழியே அரக்கோணம் வரை சுற்றி பாருங்கள். வெறும் நோக்கியா, ஃபோர், ஹுண்ட்டாய் மட்டும் தான் பேசப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இங்கு உருவான உதிர் மற்றும் துணை தொழிற்சாலைகள், குறுந்தொழில்கள், அதற்கான சப்பளையர்கள் என்று பெரும் மாற்றம். இதெல்லாம் நல்ல அருமையான மாற்றங்கள்.

      தமிழக வரி வசூல் பட்டியலில் விற்பனை வரியை பாருங்கள். 80களின் தொகைகள, ஏன் 90களின் நிகர விற்பனை வரியை ஒப்பிடவும். எல்லா பெரும் நிறுவனங்களும் அதன் துணை மற்றும் சப்பளையர் நிறுவனங்களும், அதில் வேலை செய்பவர்கள் வாங்கு சம்பளத்தில் செலவு செய்து வாங்கப்படும் பண்டங்களுக்கான விற்பனை வரிகளும் இதற்க்கு முக்கிய காரணம்.

      குஜராதில் ஊழல் குறைவு. முக்கியமாக முதலமைச்சர் பெட்டி வாங்குவதில்லை. தன் சகாக்களையும் வாங்க விடுவதில்லை. தடையில்லா மின்சாரம், அருமையான சாலை மற்றும் துறைமுக வசதிகள். எனவே அங்கு தொழில் பெருகுகிறது. (2002 இனப்படுகொலையில் மோடியில் பங்கு, பெறுப்பு வேறு விசியம்).

      சரி, இங்கு தனியார் மின் உற்பத்தி அதிக விலை சொல்கிறார்கள் என்றால் அவர்களை தேசியமயமாகலாமா ? பிறகு மேலும் புதிய தேவைக்கு எங்கு போவது ? அரசு உற்பத்தி செய்தால் மறைமுக செலவு இன்னும் அதிகம் (ஊழல் மற்றும் நிர்வாக செலவுகளை சேர்த்தி). மேலும்..

  8. //இந்த சலுகைகளை மாநில அளிப்பதால் தான் புதிய முதலீடுகள் அதன் மூலம் மிக மிக அதிகம் வரி வசூல் மற்றும் employment generation (both direct and indirect) and general increase in economic growth சாத்தியமானது.//

    அவற்றை இலவசங்கள் என்று ஏன் அழைப்பதில்லை என்பதுதான் கேள்வி.

    –அவங்க முதலீடு செய்து
    –அதனால் வரி வசூல் கிடைத்து
    –அதனால் பொருளாதாரம் வளர்ந்து
    –அதனால் வேலை வாய்ப்பு பெருகி
    –அதனால் மக்கள் நலத் திட்டங்கள் பெருகின
    என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

    தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையிலிருந்து சில விபரங்களைப் பார்ப்போம். (2009-10 க்கும் 2011-12க்கும் ஒப்பீடு)

    1. நிறுவன வருமான வரி மூலம் வரவு – ரூ 3,603 கோடியிலிருந்து ரூ 5,297 கோடியாக உயர்வு
    2. சொத்து வரிகள் – ரூ 3,798 கோடியிலிருந்து ரூ 6,585 கோடியாக உயர்வு
    3. மாநில ஆயத் தீர்வை (டாஸ்மாக்) – 6,740 கோடியிலிருந்து ரூ 10,191 கோடியாக உயர்வு
    4. மாநில விற்பனை வரி – ரூ 22,661 கோடியிலிருந்து ரூ 37,196 கோடியாக உயர்வு

    அதாவது அவ்வளவு இலவசங்கள் பெற்று, பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை (ரூ 5,297 கோடி என்று வைத்துக் கொள்வோம்) விட குடிமகன்கள் குடித்து வழங்கும் ரூ 10,191 கோடியையும், சாதாரண மக்கள் பொருள்கள் வாங்கும் போது கொடுக்கும் ரூ 37,196 கோடியையும் நம்பிதான் மாநில அரசு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகிறது.

    நீங்கள் சொல்வது போல இலவசங்களை அள்ளிக் கொடுத்து கார்பொரேட்டுகளை ஊக்குவித்துதான் நாட்டு மக்கள் எல்லோரும் வசதிகளை பெற வேண்டும் என்றால், அதற்குள் நாட்டின் நிலங்களையும், தண்ணீரையும், காற்றையும் நச்சாக்கி விட்டு அவர்கள் இன்னொரு நாட்டுக்கு நகர்ந்திருப்பார்கள்.

    • // சாதாரண மக்கள் பொருள்கள் வாங்கும் போது கொடுக்கும் ரூ 37,196 கோடியையும் நம்பிதான் மாநில அரசு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகிறது.////

      இந்த சாதாரண மக்கள் எப்படி கடந்த 15 ஆண்டுகளில் மிக அதிகம் பொருட்களை வாங்க இயன்றது ? அதாவது அவர்களின் buying capacity திடிரென எப்படி பல மடங்கு அதிகரித்தது ? per capita basis இல் ? சுதந்திரம் வந்து முதல் 40 ஆண்டுகளில் சாத்தியமாகத வளர்ச்சி, 90களுக்கு பிறகு எப்படி சாத்தியமானது ?

      80கள் வரை நிகர வரி வசூல் மிக குறைவு. பற்றாக்குறை மிக அதிகம். வேலைவாய்ப்பும் மிக குறைவு. இன்று போல் அன்று ஊரெங்கும் wanted போர்டுகள் இல்லை. ஏன் ?

    • //அதற்குள் நாட்டின் நிலங்களையும், தண்ணீரையும், காற்றையும் நச்சாக்கி விட்டு அவர்கள் இன்னொரு நாட்டுக்கு நகர்ந்திருப்பார்கள்.///

      நண்பர் மாசி,

      சுற்றுசூழலை மாசுபடுத்துவதில் நம்ம லோக்கல் தொழிற்சாலைகளை விஞச முடியாது. பன்னாட்டு நிறுவனங்கள் (முக்கியமாக பாஸ்கோ போன்றவைகளுக்கு பழங்குடியினரின் நிலங்களை கையகபடுத்துவதில் தான் குற்றாச்சாட்டுகள்.

      நீங்க கடந்த 15 வருடங்களாக தோல் துறையில் தான் உள்ளீர்கள். அதில் வேலை செய்துவிட்டு, பிறகு அந்த துறைக்கு இன்று ஆலோசகராக செயல்படுகிறீர்கள். ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படு கழிவு நீர்களால் பெரும் பாதிப்பு. You too are part of this industry and hence your stance here about MNCs seem double standards !!

      மாசுகட்டுபாட்டு துறைக்கென கடுமையான சட்ட திட்டங்கள் நிறைய இங்கு உள்ளன. அவை பல நேரங்களில் ஏட்டளவில் தான் உள்ளன. அமலாக்காமல் தடுப்பதில் பெரும் ஊழல். இதெல்லாம் நம் தவறுகள். இதில் பன்னாட்டு நிறுவனங்களை ஏன் குற்றம் சொல்வானான் ? வளர்ந்த லிபரல் ஜனனாயக நாடுகளில் இதே போல் ஏய்க்க முடியாது. ஏன் ?

      • அதியமான்,

        நீங்கள் சொல்லும்
        1. மாநிலங்கள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க போட்டியிடுகின்றன
        2. மக்கள் அதிக வருமானம் பெற்று அதிக பொருட்களை வாங்க முடிகிறது
        3. உள்ளூர் தொழிற்சாலைகளும் மாசு படுத்துகின்றன.
        என்ற மூன்றும் LPG எனப்படும் தாராளமயமாக்கம், தனியார் மயமாக்கம், உலகமயமாக்கம் இவற்றின் போற்றுதலாகவே இருக்கிறது.

        உங்கள் உலகப் பார்வையில் இருக்கும் கோளாறாக எனக்குப் புரிந்ததை விளக்குகிறேன்.

        1. ஒரு ஊரில் A, B என்று இரண்டு குடும்பங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். A குடும்பத்தினர் தமக்குத் தேவையான மூன்று வேளை உணவை சமைத்துக் கொள்கிறார்கள். B குடும்பத்தினரும் தமக்குத் தேவையான மூன்று வேளை உணவை சமைத்துக் கொள்கிறார்கள்.

        ஒரு நாள், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை முன்னிட்டு அரசு வகுத்த கொள்கையின் அடிப்படையில் இரண்டு குடும்பத்தினரும் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள். எளிமையாக புரிந்து கொள்ள A வீட்டில் சமைக்க B குடும்பத்திலிருந்து ஒருவர் போகிறார், B வீட்டில் சமைக்க A குடும்பத்தினர் ஒருவர் போகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

        இருவரும் தமது வாடிக்கையாளர் (சந்தை)க்குப் பொருத்தமான முறையில் சமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். தமது குடும்பத்துக்கு சமைப்பது மறந்து போகும், பழக்கம் விட்டுப் போகும். இரண்டு பேருக்கும் ஊதியம் வரும்.

        இந்த தாராளமயம் மூலம் வருமான அதிகரிப்பு, இரண்டு பேரின் சம்பளமும் நாட்டின் உற்பத்தியில் சேர்ந்து பொருளாதார வளர்ச்சி, இரண்டு பேரும் வருமான வரி, சேவை வரி கட்டுவார்கள். ஏதாவது ஏஜன்சி மூலம் வேலை பார்த்தால், அவர்களுக்கான கட்டணமும், லாபமும் போகும்.

        இது தாராள மய, தனியார் மய பொருளாதார வளர்ச்சியின் ஒரு முகம்

        அ. விவசாயத்துக்கு பாசன வசதிகளை (ஏரி, ஆறு, வாய்க்கால்) ஒழித்து விட்டு — (அரசாங்கம் அதை எல்லாம் செய்யக் கூடாது)– விவசாயிகளுக்கு பம்ப்செட் வைத்து கொடுப்பார்கள். மோட்டர் விற்பனை, மின்சக்தி உற்பத்தி, இலவச மின்சாரம் என்று பொருளாதாரம் சக்கை போடு போடும்.

        ஆ. பொது போக்குவரத்தை ஓய்த்துக் கட்டி விட்டு — (அரசாங்கம் அதில் எல்லாம் ஈடுபடக் கூடாது) — போக்குவரத்துக்கு உதவியாக டூவீலர், கார்கள் விற்பாற்கள். கார் தொழிற்சாலை, அதற்கு துணை தொழிற்சாலை என்று உற்பத்தி உயர்வு, வரி வசூல் என்று பொருளாதாரம் வளரும்.

        இதுதான் உங்கள் லிபர்டேரியன் அணுகுமுறையின் பிரச்சனை.

        2. இத்தோடு உலகமயமாக்கலை சேர்ப்போம்.

        மேலே சொன்ன உதாரணத்தில், A குடும்ப உறுப்பினர் B வீட்டில் சமைத்து சம்பளம் வாங்குவது பொருளாதார செயல்பாடுகளின் ஒரு பாதி மட்டுமே.

        அ. A சமைத்த உணவை B வீட்டினர் சாப்பிடுவது
        ஆ. A சம்பளப் பணத்தை வைத்து தனது வீட்டில் சமைக்க ஏற்பாடு செய்வது

        இன்னொரு பாதி.

        B வீட்டுக்காரர்கள் ஊர் மாறி போய் விட்டால், A குடும்பத்தினருக்கு வருமானம் போச்சு, அவர்கள் கற்று வைத்திருந்த வித்தை B குடும்பத்துக்கு சமைக்கத்தான் உதவும். தமது வீட்டில் சமையல் செய்வதற்கான முறையும் மறந்து போயிருப்பார்கள்.

        இப்போது எல்லோரும் நடுத்தெருவில்.

        உலகமயமாக்கம் அனைத்து நாடுகளின் அடிப்படை பொருளாதார ஆதாரங்களை குலைத்து, கார்பொரேட்டுகளின் குறுகிய கால லாபத்துக்காக பொறுப்பின்றி உலகின் வளங்களை சுரண்டுகிறது.

        3. உள்ளூர் தொழிற்சாலை தவறு செய்து மாட்டிக் கொண்டால் அவர்களுக்கு பொறுப்பு உண்டு. குறைந்த பட்சம் நம்ம ஊர் நம்ம நாடு என்ற பற்றாவது இருக்கலாம்.

        போபால் யூனியன் கார்பைடு போல வெளிநாட்டிலிருந்து வந்து மக்களை கொன்று குவித்து விட்டு எந்த பொறுப்பும் எடுக்காமல் ஓடி விடுவதுதானே உலகமயமாக செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் அணுகுமுறை. அவர்களை யார் கேள்வி கேட்க முடியும்?

        அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவில் வேலையில்லாமை தலைவிரித்து ஆடினாலும் தமது லாபத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக சீனாவிலும் இந்தியாவிலும் உற்பத்திக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உலகமயமாக்கம் தரும் பலன்.

        • அய்யா மா சிவகுமார். அதியாமான் அய்யா கண்ணை மூடி விட்டார் உலகம் இருட்டாகிவிட்டது. நீங்கள் என்ன தான் உலகம் வெளிச்சமாக இருக்கிறது என்று நிருபிக்க நினைத்தாலும் அவர் கண் திறக்க வேண்டுமே? அவர் கண்ணை மூடிவிட்டார் உலகம் இருண்டுவிட்டது.

          அவர் கண், அதை திறக்கவேமாட்டார் உலகமும் ஊழி கால இருட்டில் இருக்க போகிறதென்று பிதற்றுகிறார். நீங்களும் அவரின் தவத்தை கலைக்க ரம்பையாக நடனம் ஆடிக்கொண்டிருக்கிறீகள்..

        • //இது தாராள மய, தனியார் மய பொருளாதார வளர்ச்சியின் ஒரு முகம்

          அ. விவசாயத்துக்கு பாசன வசதிகளை (ஏரி, ஆறு, வாய்க்கால்) ஒழித்து விட்டு — (அரசாங்கம் அதை எல்லாம் செய்யக் கூடாது)– விவசாயிகளுக்கு பம்ப்செட் வைத்து கொடுப்பார்கள். மோட்டர் விற்பனை, மின்சக்தி உற்பத்தி, இலவச மின்சாரம் என்று பொருளாதாரம் சக்கை போடு போடும்.

          ஆ. பொது போக்குவரத்தை ஓய்த்துக் கட்டி விட்டு — (அரசாங்கம் அதில் எல்லாம் ஈடுபடக் கூடாது) — போக்குவரத்துக்கு உதவியாக டூவீலர், கார்கள் விற்பாற்கள். கார் தொழிற்சாலை, அதற்கு துணை தொழிற்சாலை என்று உற்பத்தி உயர்வு, வரி வசூல் என்று பொருளாதாரம் வளரும்.

          இதுதான் உங்கள் லிபர்டேரியன் அணுகுமுறையின் பிரச்சனை.///

          sorry MaSi, உங்க ‘புரிதல்’ மிக கொடுமையாக இருக்கிறது. விவசாய பாசன வசதிகளை ‘ஒழித்துக்கட்ட’ எந்த மடையனும் என்றும் சொன்னதில்லை. சொல்லப்போவதும் இல்லை. தாரளமயமாக்கல் என்றால் இது அல்ல. விவசாய கட்டமைப்பை பேணுவது மிக அடிப்படை தேவை. காம்ன்ஸ் சென்ஸ் போதும் இதற்க்கு.

          பொதுபோக்குவரத்தை ‘ஒழித்து கட்ட’ யார் சொன்னார்களம். பொது போக்குவரத்து போதுமான அளவு இல்லாதை பற்றி தான் நண்பா நான் ரொம்ப நாளா தனியா ‘கத்திக்கிட்டு’ இருக்கேன். பொது போக்குவரத்து என்பது அரசும் நடத்தலாம் அல்லது தனியார்களும் நடத்தலாம். பேருந்து, விமான சேவைகள் போன்றவைகளில். ஆனால் பற்றாக்குறை இல்லாமல், மலிவாக, சரியாக கிடைக்க வேண்டும். ஆனால் இங்கு பெர்மிட் ராஜ்ஜியம் இன்றும் பேருந்து போக்குவரத்து துறையில் உள்ளது. லாரி போக்குவரத்தில் இல்லாதாதல் அதில் பற்றாக்குறை, மோனோபோலி, ஊழல் இல்லை.
          தாரளமயமாக்கல் இன்னும் பேருந்து போக்குவரத்தில் வரவில்லை.

          ///போபால் யூனியன் கார்பைடு போல வெளிநாட்டிலிருந்து வந்து மக்களை கொன்று குவித்து விட்டு எந்த பொறுப்பும் எடுக்காமல் ஓடி விடுவதுதானே உலகமயமாக செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் அணுகுமுறை. அவர்களை யார் கேள்வி கேட்க முடியும்?///

          அது நடந்தது 84இல். அன்று தாரளமயமாக்கல், உலகமயமாக்ல் எல்லாம் இல்லை. ஆனால் இன்று பல நூறு பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன். உங்க தோல் துறையில் கூட பல இங்கு உள்ளன. அவறை எல்லாம் அனுமதிக்காமல், முன்பு போல் மூடிய பொருளாதார கொள்கையை தான் முன்மொழிகிறீர்களா என்ன ?

          உலகமயமாக்கலை எதிர்ப்பவர்கள், இந்த இணையத்தையும் எதிர்க்கிறார்கள் என்று அர்த்தம். எனென்றால், உலகமயமாக்கலின் மிக சிறந்த விளைவு இந்த இணையம்.
          ??? !!!!

          • அய்யா அதியமான்,

            84க்கு பின் கடந்த 5 வருடங்களில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனார். இது போபாலை விட பெரியது. அதே போல் கோக் இதர பன்னாட்டு கம்பனிகள் நீர்வளத்தை மாசு படுத்துவதும் 84ல் அல்ல.

            தனியார் நிறுவனங்கள் வந்தால் விமான சேவை சிறக்கும் என்றார்கள் இப்பொழுது அதே முதலாளித்துவ பத்துரிக்கைகளே கிங்கிபிஷ்ர் முதல் பல இந்திய தனியார் விமான கம்பனிகளை நம்பி முதலீடு செய்ய முடியது என்று அவல் மெல்லுகிறார்கள்.

            வால்மார்ட்டோ ரிலைன்ஸ் ஃப்ரஷோ நிச்சயம் விவசாயத்தில் பல டெக்னிலாஜியை புகுத்துவான் ஆனால் அதை வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் விவசாயிகள் பலர் இறந்துவிட்டிருப்பார்கள்..

            91 பின் தான் செல்போன் வந்தது நோக்கியவும் வந்தது. நல்ல டெக்னாலிஜியை மக்கள் பிணத்தின் மீது கொடுக்க வேண்டும் என்பது உங்களின் வாதம், நல்ல டெக்னாலிஜியை மக்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது மாசியின் வாதம்.
            உங்கள் புரிதலை இப்பொழுது எதில் போடப்போகிறீர்கள்?

            • //84க்கு பின் கடந்த 5 வருடங்களில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனார். இது போபாலை விட பெரியது. அதே போல் கோக் இதர பன்னாட்டு கம்பனிகள் நீர்வளத்தை மாசு படுத்துவதும் 84ல் அல்ல.///

              விவசாயிகள் தற்கொலைக்கான காராணிகள் பற்றி இங்கு ஆயிரம் முறை பேசியாச்சு. தாரளமயமாக்கல் தான் காரண்ம் என்றால் இந்தியாவெங்கும் அனைத்த்து மாநிலங்களிலலும் விவசாய தற்கொலைகள் ஒரே விகிதத்தில் இருந்திருக்க வேண்டும். முக்கியமாக தமிழகத்தில். லோக்கல் காரணிகள் பற்றி பேசியிருக்கிறோம்.

              கோக், பெப்சி நீர்வளத்தை உறுஞ்சுகின்றன. ஆம். ஆனால் லோக்கல்மினரல் வாட்டர் நிறுவனக்கள் அதைவிட மிக அதிகம் எடுக்கின்றன. சரி, இந்த கோக், பெப்சி தவிர வேறு நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவங்கள் இங்கு உள்ளன. உதாரணமாக சீமன்ஸ், அரீவா, இண்டெல், போன்று. அவை பற்றி எல்லாம் பேசலாமே ?

              ///நல்ல டெக்னாலிஜியை மக்கள் பிணத்தின் மீது கொடுக்க வேண்டும் என்பது உங்களின் வாதம், நல்ல டெக்னாலிஜியை மக்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது மாசியின் வாதம்.// இல்லை. தவறு. மிக எளிமைபடுத்தப்பட்ட தவறான புரிதல். இன்னும் சொல்லப்போனால் மாசி இருக்கும் தோல் பதினிடும் துறையில் உருவாகும் கழிவு மற்றும் சுற்றுசூழல் கேடு பற்றி அறிவேன். சும்மா பொத்தாம் பொதுவாக பேசவேண்டாம். எந்த டெக்னாலாஜி மக்களின் பிணத்தின் மீது ? ஆதாரமில்லாத பேச்சு.

          • நல்லது அதியமான்.

            பொது போக்குவரத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்கள், விவசாய கட்டமைப்புகள் செய்து கொடுப்பதையும் ஆதரிக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி.

            1. முதலில் தனியார் மயத்தை எடுத்துக் கொள்வோம்.

            பொது கட்டமைப்புகள் உருவாக்கி வழங்குவதற்கு பொதுத் துறை நிறுவனங்கள்தான் குறைந்த செலவில் பொறுப்பாக செயல்பட முடியும் என்பதற்கு
            அ. மேலே கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் மின் உற்பத்தி செலவு,
            ஆ. பால் வாங்கி வினியோகிப்பதில் ஆவின், அமுல் போன்ற கூட்டுறவு நிறுவனங்களின் சிறப்பு
            இ. பேருந்து போக்குவரத்தில் அரசு போக்குவரத்து கழங்களின் சேவை
            உ. தொலைபேசி துறையில் பிஎஸ்என்எல் சேவை
            ஆகியவை உதாரணமாக இருக்கின்றன.

            பொது சேவைகளை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் லாயக்கில்லை என்று தெரிந்தும் பொதுத் துறை நிறுவனங்களை மூட வைத்து தனியார் கையில் கொடுப்பதுதான் தனியார் மயம். இந்த துறைகளில் தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வைத்து பயனாளர்களை மொட்டை அடிப்பதுதான் (நெடுஞ்சாலை துறையில் டோல்கேட் என்ற பெயரில் நடக்கும் பகல் கொள்ளையையும், மல்லையா போன்ற முதலாளிகளின் வீணாக்கல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்) தனியார் மயத்தின் பலன்.

            2. இரண்டாவதாக தாராள மயம்.

            தாராள மயம் மேலோட்டமாக பார்க்கும் போது கவர்ச்சியாக குறை இல்லாததாக தெரிந்தாலும் நடைமுறையில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது.

            நீங்கள் சொன்ன தோல் துறை/ஜவுளித் துறை மாசு படுத்தல் தாராளமயத்துக்கு எதிரான ஒரு நிகழ்வு. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு நிச்சயமில்லாத சந்தை சூழலில் செயல்படும் தனியார் நிறுவனங்களால் சுற்றுச் சூழலையும், தொழிலாளர் நலனையும், சமூக நலனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியாது என்பது நிதர்சனம்.

            நீண்ட கால நோக்கில் தாராள மயம் என்பது உலகளாவிய தொழிற் கழகங்களை வளர்த்து விட்டு சுற்றுச் சூழல் அழிவு, புவி வெப்பமாதல், உலக யுத்தங்கள் என்றுதான் வழி வகுக்கின்றது.

            3. மூன்றாவதாக, உலக மயமாக்கலை எடுத்துக் கொள்வோம்.

            உலக மக்கள் அனைவரும் இணைந்து செயல்படுவதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஒவ்வொரு பகுதியினரும் தமது சுய தேவைகளை தாமே நிறைவு செய்து கொண்டு, அதிகப்படி உற்பத்தியை பிறபகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து, பிற பகுதிகளிலிருந்து தமக்கு தேவையானவற்றை இறக்குமதி செய்வதுதான் அடிப்படை மனித நல பொருளாதார அமைப்பாக இருக்க முடியும்.

            இன்றைய உலக மயமாதல் என்பது ‘பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் செயல்படுவதற்கு வசதி செய்து தருவதாக’ செயல்படுகிறது. மனிதர்களின், நாட்டு குடிமக்களின் நலன்களை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.

            மக்கள் எதிர்த்து போராடி விடாமல் சமாதானப்படுத்துவதற்காக சில சலுகைகளையும் நலத் திட்டங்களையும் காட்டிக் கொண்டே, பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் முடிவில்லா-வளர்ச்சியை-துரத்தும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிலத்தையும், தண்ணீரையும், காற்றையும் எழுதிக் கொடுப்பதுதான் நடக்கிறது. அந்த நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் இடக்கரடக்கலாக (euphemism) மக்கள் நல திட்டப் பெயர் வழங்குகிறார்கள்.

            –நியாய விலைக் கடைகள் ஒழிக்க வரும் சட்டத்துக்குப் பெயர் ‘உணவு பாதுகாப்பு மசோதா’
            –கல்வியை தனியார் மயமாக்க வரும் சட்டத்துக்குப் பெயர் ‘கல்வி பெறும் உரிமை சட்டம்’
            –தண்ணீரை தனியார் மயமாக்க வரும் சட்டத்துக்கு பெயர் ‘தேசிய நீர் வள மேலாண்மை சட்டம்’

            பொருளாதார வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக திட்டமிடப்பட வேண்டும். ‘பணக்கார 1%த்துக்கு அதிக வருமானம் வந்தால், அவர்கள் அதிகம் செலவழிப்பார்கள், அதிகம் முதலீடு செய்வார்கள் அதன் மூலம் மீதி 99% பிழைத்துக் கொள்ளலாம்’ என்ற தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதார கொள்கைகள் உலகெங்கும் தோல்வியடைந்து மக்களை அளவில்லா துன்பங்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கின்றன.

            • //பொது கட்டமைப்புகள் உருவாக்கி வழங்குவதற்கு பொதுத் துறை நிறுவனங்கள்தான் குறைந்த செலவில் பொறுப்பாக செயல்பட முடியும் என்பதற்கு
              அ. மேலே கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் மின் உற்பத்தி செலவு,
              ஆ. பால் வாங்கி வினியோகிப்பதில் ஆவின், அமுல் போன்ற கூட்டுறவு நிறுவனங்களின் சிறப்பு
              இ. பேருந்து போக்குவரத்தில் அரசு போக்குவரத்து கழங்களின் சேவை
              உ. தொலைபேசி துறையில் பிஎஸ்என்எல் சேவை
              ஆகியவை உதாரணமாக இருக்கின்றன.///

              இல்லை மாசி. ஆதரமில்லாத வாதம். தனியார் துறை மின் உற்பத்தின் நிகர செலவு வெளியே தெரிகிறது. அரசு துறையின் உற்பத்தி செலவுகள் தான் அதிகம். per unit cost of productionஅய் ஒப்பிட்டு பார்க்கவும்.

              பால், தொலைபேசி துறையில் அப்ப தனியார்களை அனுமதிக்காமலே இருக்கலாமே ? 1990கள் வரை இந்த பி.எஸ்.என்.எல் சேவை கட்டிணங்கள் மற்றும் பற்றாக்குறை எப்படி இருந்தது என்று அறிவீர்கள் ? போட்டி உருவானவுடன் தான் கட்டிணங்கள் கடுமையாக வீழ்ந்தன. முக்கியமாக 2002இல் ரிலையன்ஸ் டெலிகாம் நுழைந்து incomming call free அறிமுகப்படுத்தியவுடன் தான் கட்டிணங்கள் வீழ்ச்சி.

              பேருந்து போக்குவரத்து துறை பற்றி பல வருடங்களாக எழுதிவருகிறேன் :

              http://www.tamilpaper.net/?p=4130
              அரசாங்கம் விலகிக்கொள்ளட்டும்!

              //நீண்ட கால நோக்கில் தாராள மயம் என்பது உலகளாவிய தொழிற் கழகங்களை வளர்த்து விட்டு சுற்றுச் சூழல் அழிவு, புவி வெப்பமாதல், உலக யுத்தங்கள் என்றுதான் வழி வகுக்கின்றது.///

              அது உண்மையான தாரளமயமாக்கல் அல்ல. மே.அய்ரோப்பாவில் இந்த தாரளமயமாக்கல் கொள்கைகள் தான் பல ஆண்டுகளாக. (அதாவது industrial licensing, controlled economy கிடையாது. தாரளமயமாக்கல் என்றால் உண்மையில் என்னவென்று உங்களுக்கு இன்னும் குழப்பம். லைசென்ஸ் ராஜ்ஜியத்தை உடைப்பது தான் தாரளமயமாக்கம்). யுத்தங்களை லிபரல் ஜனனாயக பாணி நாடுகள் உருவாக்கமாட்டார்கள். அப்படி உருவாக்கினால் அவர்கள் உண்மையான லிபரல் ஜனனாயகங்கள் அல்ல.

              ///–நியாய விலைக் கடைகள் ஒழிக்க வரும் சட்டத்துக்குப் பெயர் ‘உணவு பாதுகாப்பு மசோதா’
              –கல்வியை தனியார் மயமாக்க வரும் சட்டத்துக்குப் பெயர் ‘கல்வி பெறும் உரிமை சட்டம்’///

              இல்லையே. நியாய விலை கடைகளை ஒழிக்க யாரும் எங்கும் சொல்லவில்லையே. அவை ஒழிங்கா, நேர்மையா செயல்பட வேண்டும் என்று தான் விவாதம். உதாரணமாக இந்திய அளவில் தமிழகம் இந்த விசியத்தில் பரவாயில்லை என்று ஒரு அனுமானம் ! PDS and other welfare funding have risen phenomenally during the last 15 years. try to read about the figures about this first before tending sweeping and wrong statements.

              கல்வி மருத்துவ துறைகளில் தனியார்களை ‘ஊக்குவிப்பது’ இருக்கட்டும். அரசு ஒதுக்கும் தொகைகளின் அளவுகள் கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை சதம் அதிகரித்துள்ளது என்று பார்க்கவும். ஆனால் அரசு ஊழியர்களின் பொறுப்பற்றதனம் மற்றும் ஊழலால், மக்கள் தான் அவதிப்படுகின்றன. தனியார்களை நாடுகின்றனர். இதற்க்கு அரசு ஊழியர்களை கண்டிக்காமல், திருத்தாமல், சும்மா தனியார்மயத்தை குற்றம் சொல்லி பயனில்லை.

              //–தண்ணீரை தனியார் மயமாக்க வரும் சட்டத்துக்கு பெயர் ‘தேசிய நீர் வள மேலாண்மை சட்டம்’////

              இதை எதிர்க்கலாம். இதை ஏற்க்கமுடியாது. சட்டம் வராது தடுக்கப்படும். கடுமையான, நியாயமான எதிர்ப்பு.

              //பணக்கார 1%த்துக்கு அதிக வருமானம் வந்தால், அவர்கள் அதிகம் செலவழிப்பார்கள், அதிகம் முதலீடு செய்வார்கள் அதன் மூலம் மீதி 99% பிழைத்துக் கொள்ளலாம்’ என்ற தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதார கொள்கைகள் உலகெங்கும் தோல்வியடைந்து மக்களை அளவில்லா துன்பங்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கின்றன.//

              மிக தவறான புரிதல். மொதல்ல இது உண்மையல்ல. free markets based on a liberal democracy (with a welfare mechanism) is the standard model which enabled most of the developed nations in dramatically reducing poverty in a few decades. பணக்காரகள் என்றாலே பரம்பரை பணக்காரர்கள் / ஜமீந்தார்கள் என்று ஏன் தவறாக கருதரீக. உங்களை போன்ற தொழில்முனைவோர்களாக, சிறிய முதலீட்டில் ஆரம்பித்தவர்கள் தான் அனைவரும். அல்லது அவர்களின் முன்னோர்களும். முக்கியமாக கடந்த 20 வருடங்களில் பழைய பெரிய தொழிற்குடும்பங்களை புறந்தள்ளிவிட்டு, பல ஆயிரம் புதிய தொழில்முனைவொர்கள் உருவாகி உள்ளனர்.

              • //தனியார் துறை மின் உற்பத்தின் நிகர செலவு வெளியே தெரிகிறது. அரசு துறையின் உற்பத்தி செலவுகள் தான் அதிகம். per unit cost of productionஅய் ஒப்பிட்டு பார்க்கவும்.//

                எப்படி ஒப்பிட வேண்டும்? அதாவது தனியார் நிறுவனங்கள் அரசு மின் நிலையங்களை விட குறைந்த செலவில் உற்பத்தி செய்து, ஆனால் அதிக விலைக்கு (ரூ 18 வரை) விற்று லாபம் பார்க்கிறார்கள் என்கிறீர்களா? இதுதான் தனியார் மயத்துக்கு எதிரான குற்றச்சாட்டே! தட்டுப்பாடு இருந்தால் அதை பயன்படுத்திக் கொண்டு கொள்ளை லாபம் பார்ப்பது போட்டி பொருளாதாரத்தின் அடிப்படை நியாயம்தானே! அதன் விளைவுகளைத்தான் நாம் இப்போது பார்க்கிறோம்.

                //பால், தொலைபேசி துறையில் அப்ப தனியார்களை அனுமதிக்காமலே இருக்கலாமே ?//

                இருந்திருக்கலாமே! ஒரு துறையில் லாபம் சம்பாதிக்க வாய்ப்பு இல்லாதது வரை, அதிக முதலீடு தேவைப்படும் நிலை இருக்கும் வரை அரசு அதை கட்டி பராமரிக்க வேண்டும், நிலைமை சாதகமாக ஆன பிறகு தனியாருக்கு அது திறந்து விடப்பட வேண்டும். இதுதான் தனியார் மயத்தின் அடிப்படை.

                சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் விற்பனை விலை கட்டுப்படியாகவில்லை என்று ரிலையன்சும், ஷெல்லும் தமது பெட்ரோல் நிலையங்களை மூடி வைத்தார்கள். அந்த நேரத்தில் பொதுத் துறை நிறுவனங்கள்தான் பெட்ரோல் வழங்கி வந்தன.

                //1990கள் வரை இந்த பி.எஸ்.என்.எல் சேவை கட்டிணங்கள் மற்றும் பற்றாக்குறை எப்படி இருந்தது என்று அறிவீர்கள் ? போட்டி உருவானவுடன் தான் கட்டிணங்கள் கடுமையாக வீழ்ந்தன. முக்கியமாக 2002இல் ரிலையன்ஸ் டெலிகாம் நுழைந்து incomming call free அறிமுகப்படுத்தியவுடன் தான் கட்டிணங்கள் வீழ்ச்சி.//

                1990கள் வரை DOT (பிஎஸ்என்எல் இல்லை) சேவை கட்டணங்கள், பற்றாக்குறை இருந்தன. அதற்கு காரணங்கள்

                1. அரசுத் துறை நிர்வாக சீர்கேடுகள்.
                2. தொழில்நுட்பம் வளராமை.

                தொழில்நுட்பம் (கம்பியில்லா தொலைபேசி, இணையம்) வளர ஆரம்பித்ததும் தனியாருக்கு திறந்து விடும் நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. நிர்வாக சீர்கேடுகளை சரி செய்து (பிஎஸ்என்எல் ஆக மாற்றியது அதற்குத்தான்), புதிய தொழில்நுட்பத்தை பிஎஸ்என்எல் மட்டும் செயல்படுத்தியிருந்தால் இன்றிருப்பதை விட குறைந்த கட்டணத்தில் நாம் சேவை பெற்றிருக்க முடியும். தனியார் வீணாக்கலும் டாம்பீகமும்தான் பொருளாதார சீரழிவுக்கு காரணம்.

                உதாரணமாக, சென்னையில் பழைய பேருந்துகளை அரசுத் துறையில் ஓட்டிக் கொண்டு, புதிய வோல்வோ, சொகுசுப் பேருந்துகளை அரசு கழகங்கள் ஓட்டாமல் தனியாரை மட்டும் அனுமதித்திருந்தால்ல் ‘தனியார் சேவை என்னா குளு குளுன்னு இருக்கு’ என்று போற்றுவோம். ஆனால், அப்போது கட்டணம் இப்போது இருப்பதை விட அதிகமாகியிருக்கும். தனியாரின் லாபத்துக்கும் நாம்தானே கொடுக்க வேண்டியிருக்கும்.

                அதுதான் தொலைதொடர்பு துறையிலும் பால் துறையிலும் நடக்கிறது. இவ்வளவுக்கும் பிறகும் காலையில் கடையில் மக்கள் ஆவின் பாலைத்தான் விரும்பி வாங்குகிறார்கள், ஏமாற்று இல்லாத பில்லிங் கட்டணத்துக்கு பிஎஸ்என்எல்லைத்தான் நாடுகிறார்கள். தனியார் கை முறுக்கல்கள் இல்லா விட்டால் பிஎஸ்என்எல் இப்போது இருப்பதை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

                //பேருந்து போக்குவரத்து துறை பற்றி பல வருடங்களாக எழுதிவருகிறேன் :
                http://www.tamilpaper.net/?p=4130
                அரசாங்கம் விலகிக்கொள்ளட்டும்!
                //
                தேவையில்லை. அரசாங்கம் விலகிக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பேருந்து சேவை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். டப்பாவான வண்டிகளில் ஆட்டு மந்தைகள் போல மக்களை ஏற்றிக் கொண்டு இஷ்டம் போல சேவை அளித்துக் கொண்டிருப்பார்கள் தனியார்.

                இன்றும் சென்னையை தவிர்த்த வெளியூர்களில் தனியார் பேருந்துகளில் உரத்த ஒலியில் சினிமா பாடலும் ஜிகுஜிகு என்று வெளிச்சமும் போட்டு ஓட்டினாலும் பயணிகளை ஆடு மாடுகள் போலத்தான் விரட்டி அடைக்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். பொதுத்துறை, கூட்டுறவுத் துறை சேவையில் வேலை செய்பவர்களுக்கும் சரி, சேவை பெறுபவர்களுக்கும் சரி ஒரு சுயமதிப்பு இருக்கிறது.

                சிந்தாமணி சூப்பர் மார்க்கெட், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ஆவின் பால் வழங்கும் நிலையங்கள், அரசு பேருந்துகளில் வேலை செய்பவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வும் dignityம் தனியார் சேவை நிறுவனங்களில் வேலை செய்பவர்களிடம் நீங்கள் பார்க்க முடியாது.

                ஆனால், இன்றைய உலக/தேசிய பொருளாதார சூழலில் பொதுத்துறை நிறுவனங்கள் பிழைத்திருக்க முடியாமல் ஒழித்துக் கட்டப்பட்டு அம்பானி, மல்லையா போன்ற தனியார் முதலாளிகள் கையில் பொருளாதாரம் சிக்குவதுதான் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது.

                //அது உண்மையான தாரளமயமாக்கல் அல்ல. மே.அய்ரோப்பாவில் இந்த தாரளமயமாக்கல் கொள்கைகள் தான் பல ஆண்டுகளாக. (அதாவது industrial licensing, controlled economy கிடையாது. தாரளமயமாக்கல் என்றால் உண்மையில் என்னவென்று உங்களுக்கு இன்னும் குழப்பம். லைசென்ஸ் ராஜ்ஜியத்தை உடைப்பது தான் தாரளமயமாக்கம்). யுத்தங்களை லிபரல் ஜனனாயக பாணி நாடுகள் உருவாக்கமாட்டார்கள். அப்படி உருவாக்கினால் அவர்கள் உண்மையான லிபரல் ஜனனாயகங்கள் அல்ல.//

                மேற்கு ஐரோப்பாவின் தாராள மயமாக்கல் கொள்கைகள் ஆசிய/ஆப்பிரிக்க நாடுகளின் முதுகின் மீதுதான் செயல்படுத்தப்பட்டன என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் மாசுபடுதலை கட்டுப்படுத்த தோல் தொழிலை இந்தியாவுக்கு மாற்றுவார்கள், சாயத் தொழிலை திருப்பூருக்கு தள்ளி விடுவார்கள். அவர்கள், லிபரல் ஜனநாயகம் என்று அழுக்கு படாமல் அனுபவிப்பார்கள்.

                அதே மாதிரி முழு உலகமும் ஆக வேண்டுமானால் சந்திர மண்டலத்தில் புது உலகைக் கண்டு பிடித்து அங்கிருக்கும் மக்களையும் நிலத்தையும் exploit செய்தால்தான் முடியும். முதலாளித்துவ போட்டி சந்தை முறையில், நிச்சயமற்ற சூழ்நிலையில் இயங்கும் போது, மக்கள் நலம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்றவை புறக்கணிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்படுவதுதான் நடைமுறை.

                //இல்லையே. நியாய விலை கடைகளை ஒழிக்க யாரும் எங்கும் சொல்லவில்லையே. அவை ஒழிங்கா, நேர்மையா செயல்பட வேண்டும் என்று தான் விவாதம். உதாரணமாக இந்திய அளவில் தமிழகம் இந்த விசியத்தில் பரவாயில்லை என்று ஒரு அனுமானம் ! PDS and other welfare funding have risen phenomenally during the last 15 years. try to read about the figures about this first before tending sweeping and wrong statements.//

                நீங்கள் நியாய விலைக் கடைகளை ஒழிக்க வேண்டாம் என்று கருதுவது அறிந்து மகிழ்ச்சி.

                ஆனால் மன்மோகன் சிங் தலைமையில் செயல்படுத்தப்படும் LPG பொருளாதார மாடலில், நியாய விலைக் கடைகளுக்கு அரசு மானியம் அளிப்பதை குறைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை. உணவு பாதுகாப்பு மசோதா அதைத்தான் பேசுகிறது. விபரங்களைப் படித்து விட்டுத்தான் சொல்கிறேன். உங்களிடம் மாற்று விபரம் இருந்தால் தெரிவியுங்கள்.

                //கல்வி மருத்துவ துறைகளில் தனியார்களை ‘ஊக்குவிப்பது’ இருக்கட்டும். அரசு ஒதுக்கும் தொகைகளின் அளவுகள் கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை சதம் அதிகரித்துள்ளது என்று பார்க்கவும். ஆனால் அரசு ஊழியர்களின் பொறுப்பற்றதனம் மற்றும் ஊழலால், மக்கள் தான் அவதிப்படுகின்றன. தனியார்களை நாடுகின்றனர். இதற்க்கு அரசு ஊழியர்களை கண்டிக்காமல், திருத்தாமல், சும்மா தனியார்மயத்தை குற்றம் சொல்லி பயனில்லை.//

                தனியார் துறையில் பொறுப்பற்றத்தனம், ஊழல் இருந்தால் என்ன செய்கிறீர்கள்? வங்கி கடன் கொடுத்து காப்பாற்றுகிறீர்கள். அரசுத் துறையில் பொறுப்பை கொண்டு வந்து ஊழலை ஒழிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அதைத் தட்டிக் கழித்து விட்டு தனியார்மயம்தான் தீர்வு என்று சொன்னால் இப்போது நாம் பார்க்கும் சிக்கலில்தான் மாட்டி விழிப்போம்.

                //இதை எதிர்க்கலாம். இதை ஏற்க்கமுடியாது. சட்டம் வராது தடுக்கப்படும். கடுமையான, நியாயமான எதிர்ப்பு.//

                தண்ணீர் தனியார் மயமாக்கலை நீங்கள் எதிர்ப்பது தெரிந்து மகிழ்ச்சி.

                //மிக தவறான புரிதல். மொதல்ல இது உண்மையல்ல. free markets based on a liberal democracy (with a welfare mechanism) is the standard model which enabled most of the developed nations in dramatically reducing poverty in a few decades. பணக்காரகள் என்றாலே பரம்பரை பணக்காரர்கள் / ஜமீந்தார்கள் என்று ஏன் தவறாக கருதரீக. உங்களை போன்ற தொழில்முனைவோர்களாக, சிறிய முதலீட்டில் ஆரம்பித்தவர்கள் தான் அனைவரும். அல்லது அவர்களின் முன்னோர்களும். முக்கியமாக கடந்த 20 வருடங்களில் பழைய பெரிய தொழிற்குடும்பங்களை புறந்தள்ளிவிட்டு, பல ஆயிரம் புதிய தொழில்முனைவொர்கள் உருவாகி உள்ளனர்.//

                ஐரோப்பிய நாடுகளின் ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களின் செல்வமும் செழிப்பும் கோடிக்கணக்கான வளரும் நாட்டு மக்களின் மீது ஏற்றப்பட்ட சுமையின் மூலம்தான் சாதிக்கப்படிருக்கின்றன. சீனாவின் தொழிற்சாலைகளிலும், இந்தியாவின் வீதிகளிலும், ஆப்பிரிக்காவின் காடுகளிலும் மேற்கு ஐரோப்பிய செல்வ செழிப்பின் பாதிப்புகள் தள்ளி விடப்பட்டுள்ளன. சீன, இந்திய, ஆப்பிரிக்க மக்களும் அப்படி செல்வ செழிப்பு அடைய வேண்டுமென்றால் இந்த பூமியில் சாத்தியமில்லை.

                • //சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் விற்பனை விலை கட்டுப்படியாகவில்லை என்று ரிலையன்சும், ஷெல்லும் தமது பெட்ரோல் நிலையங்களை மூடி வைத்தார்கள். அந்த நேரத்தில் பொதுத் துறை நிறுவனங்கள்தான் பெட்ரோல் வழங்கி வந்தன.///

                  காரணம், அரசு எண்ணை நிறுவனங்கள் செயற்க்கையாக நஸ்டத்தில் விற்றதால் போட்டி போட முடியவில்லை. எளிமையான காரணம்.

                  ஆவின் நிறுவனத்தில் நடக்கும் ஊழல் பற்றி பேசுங்களேன். சமீபத்தில் கூட பெரிய அளவில் மாட்டினர். ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு போன்றவையால எல்லா அரசு நிறுவனங்களின் உற்பத்தி செலவு அதிகமாகதான் இருக்கும். மின் உற்பத்தி நிறுவனங்களிலும் தான். தனியார் மின் உற்பத்தி துறையின் லாபங்கள் எத்தனை சதம் என்றும் பாருங்கள். கொள்ளை லாபமா என்று பார்க்கவும்.

                  பி.எஸ்.என்.எல் மட்டுமே தொடர்ந்து இயங்க அனுமதித்து, தனியார்களே தொலைபேசி சேவையின் இன்று வரை அனுமதிக்காமல் இருந்திருக்க வேண்டும். அப்ப இந்த உரையாடல் இன்று இங்கு சாத்தியாமாகியிருக்காது.

                  //ஐரோப்பிய நாடுகளின் ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களின் செல்வமும் செழிப்பும் கோடிக்கணக்கான வளரும் நாட்டு மக்களின் மீது ஏற்றப்பட்ட சுமையின் மூலம்தான் சாதிக்கப்படிருக்கின்றன. //

                  ஆதாரமில்லாத பேச்சு. வளரும் நாடுகள் மீது என்ன ‘சுமையாம்ம்’ ? 1945இல் பேரழிவை சந்தித்த ஜப்பான், தென்.கொரியா, தைவான் போன்ற நாடுகள் பிறகு வளர்ந்த நாடுகளாக உருமாற என்ன பாதையை / கொள்கைகளை தேர்ந்தெடுத்தன என்று தேடிப்படிக்கவும். ஆனால் இந்தியா அதை செய்யாமல் திட்டமிட்ட ஸ்டேடிஸத்தை தேர்ந்தெடுத்தால் தான் இங்கு இத்தை சீரழிவு, ஊழல் எல்லாம்.

                • ///ஆனால் மன்மோகன் சிங் தலைமையில் செயல்படுத்தப்படும் LPG பொருளாதார மாடலில், நியாய விலைக் கடைகளுக்கு அரசு மானியம் அளிப்பதை குறைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை. உணவு பாதுகாப்பு மசோதா அதைத்தான் பேசுகிறது. விபரங்களைப் படித்து விட்டுத்தான் சொல்கிறேன். உங்களிடம் மாற்று விபரம் இருந்தால் தெரிவியுங்கள்.////

                  இல்லை. குறைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. தேவையில்லாமல், வசதியானவர்களுக்கு அளிப்பதை தடுக்க வேண்டும், ஊழலை தடுத்து, targeted subsidy for the really needy வேண்டும் என்று தான் விவாதம். கடந்த 10 ஆண்டுகளில் நியாய விலை கடைகளுக்கு அனைத்து இந்திய அளவில் அளிக்க்ப்படும் நிதி / மான்யம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. குறையவில்லை.

  9. இதுதான் இன்றைய தனியார் மின் சந்தையில் ஒரு யூனிட்டுக்கான விலை, மணிநேரமாக!
    தென் மாநிலங்கள் முழுதும் ரூ10/யூனிட்டுக்கு.வடமானிலங்களில் ரூ3 மட்டுமே! காரணம் அங்கு தொழில்கள் குறைவு அல்லது மிகுதியான மின் உற்பத்தி!

    தற்போதிய நிலவரப்படி,மராட்டியமும்,குஜராத்தும் தமிழக ஆலைகளுக்கு வலைவீசிக் கொண்டிருக்கின்றன,சலுகைகளுடன்! குறிப்பாக ஜவுளி ஆலைகளுக்கு! திருப்பூர் சாயப்பிரச்னையோடு மின் தடையும் சேர்ந்து கும்மி கொட்டுவதால், விரைவில் ஆலைகள் தமிழகத்தை விட்டு வெளியேர நல்லதொரு வாய்ப்பு உருவாகி வருகிறது!

    http://www.iexindia.com/Reports/AreaPrice.aspx

  10. //“தமிழகத்தில் மின்பற்றாக்குறையின் அளவு 30%. இந்தப் பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, இலட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கும், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின்வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டே இல்லை. மேற்கூறிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித் தடங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காட்டிலும் தமிழக மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை குறைவு என்பதால், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மின்சாரத்தை ஒட்ட உறிஞ்சுகிறார்கள். மின்சாரம் என்பது தமிழக மக்களின் பொதுச்சொத்து என்பதை உணர்ந்து, தாங்கள் அனுபவித்து வரும் இச்சலுகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும்”// அய்யா அதியமான் அவர்கள் மேலே உள்ளதுக்கும் கருத்து சொல்லலாம். எல்லாரும் முதலாளிதானே இதிலென்ன பன்னாட்டு, உள்நாட்டு என்று பாகுபாடு? இப்பாகுபாடுக்கு அடிப்படையான கொள்கைக்கு பெயர் என்ன? மறுகாலனியாக்கம்னு நாங்க சொல்றோம், ஆனா அதியமான் ரெண்டு விதமா சொல்றாரு, மேற்படி பன்னாட்டு கும்பல் அம்பலமானா அத க்ரோனி கேப்பிடலிசம், உண்மையான கேப்பிடலிசம் கிடையாது அதனால அத கேப்பிடலிசம்னு சொல்லி கேப்பிடலிசத்த கேவலப்படுத்தாதீங்கன்னு சொல்வாரு, அதுவே இப்போ எழுதுன மாதிரி கட்டுரைன்னா உடனே இதுதான் கேப்பிடலிசம் இப்படித்தான் நாடு டெவெலப் ஆகுதுன்னு சொல்வாரு. இதுக்குப் பேருதான் உட்டால்லக்கடி சம்மர் சால்ட்டு…

  11. When our rural children are struggling to study in the evening and night hours, the urban malls and multiplexes are exploiting the scarce power for centralized AC and decorative lights. This is injustice. Electricity should be declared as basic right and be nationalized.

  12. அரசாங்கம் நினைத்தால் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தலாம்…
    ஸ்மார்ட் க்ரிட் போன்ற தொழில்நுட்பங்களை வைத்து ஆற்றல் இழப்பைக்குறைத்து, அதிக சக்தித்திறனுடன் மின் வினியோகம் செய்யலாம்…

    ஆனால் பற்றாக்குறை என்று காலா காலமாகப்புலம்பி மக்களை நம்ப வைக்கிறார்கள்…

    மின் விநியோகம், பொருளாதாரக்கொள்கை பொன்றவைகள் எப்பொழுது தேர்தல் வெற்றியில் முக்கியப்பங்கு வகிக்கிறதோ அப்போத்து தான் விடிவு காலம்…

    இதை வைத்து அனு மின்நிலயம் மிகவும் அவசியம் என்று மக்களை முட்டாளாக்காமல் இருந்தால் சரி…இருளில் இருந்தாலும் உயிர் பயம் இல்லாமலாவது இருக்கலாம்…

  13. இன்னுமொரு விஷயம்…சிறப்புப்பொருளாதார மன்டலங்களில் இயங்கும் பல பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல் வாதிகள் / பெரும்புள்ளிகளின் இடத்ட்கிலேயே இயங்குகின்றன…

    அதனால் தான் இவ்வாறு வசதி செய்து கொடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது…

  14. இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்…
    மன்னென்னை விளக்கிற்கு ஒரு யூனிட்டிற்கு ஆகும் செலவு: ரூ. 10/-
    (மானியம் உள்ளிட)…
    நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரித்தால் ஒரு யூனிட்டிற்கு ஆகும் செலவு: ரூ. 4/-

    இதன் மூலம் பணம் செலவு…இழப்பீடு என்ற அரசாங்க வாதம் நம்ப முடியவில்லை…

    ஆதரம்: http://online.wsj.com/public/resources/documents/WorldBankreport0215.pdf

  15. >தமிழ்நாட்டில் மட்டும் 18,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 10 வணிக மின் உற்பத்திக் கழகங்களுக்கு (அனல் மின்சாரம்) தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

    மிக நல்ல காரியம்.தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தியாளர்களே விலை சொலி விற்கும் முறையும் வரவேண்டும். தமிழக மின்வாரியம் மின் வழங்கலுக்கான் கட்டணம் மட்டும் நுகர்வோரிடம் வசூலிக்கலாம். ( ஒரு ஆள் செய்யும் வேலையை பேர் செய்தாலும்)

    நாட்டில் தேவை ஒரு புறம் இருக்கு, தேவையை ஈடுசெய்ய தொழில் முனைவோர் இருக்கிறார்கள். இவை இரண்டையும் இணைக்க அரசு பாலமாக மட்டும் செயல்படவேண்டும். மின் நிலையங்கள் அரசுக்கு ஒரு 10% அரசுக்கு கட்டாயம் வழங்கிடணும் என்று இருந்தால் அரசு ஏழைகள், உழவர்களுக்கு அதை சலுகையாகவோ இலவசமாகவோ வழங்கலாம் . தமிழ்நாடு முன்னேற அலிபாபா மட்டும் சிந்தித்தால் சாலாது.

  16. உண்மையை கூறியுள்ளீர்கள்.
    கூடங்குளம் மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக போராடுகிறார்கள்
    ஆனால் எச்ச அரசியல் கட்சிகள் அவர்களுடன் சேர்ந்து போராடுவதை விட்டு பிற மக்களின் கோபத்தை கூடன்குள மக்கள் மீதே திசைத் திருப்பி குளிர் காய்கிறார்கள்.
    அதனால் பொது மக்கள் உண்மையான குற்றவாளிகளை தப்ப விட்டு விடுவார்களோ என்று பயமாக இருக்கின்றது.

  17. கோவை அருகில் உள்ள ஒரு சிற்றூர் நாட்டுக்கே வழிகாட்டி இருக்கிறது.

    தன்முயற்சியாலும் சிறு அரசு உதவி மற்றும் வங்கி கடன் மூலம் ஒரு காற்றாலையை நிறுவி மின் உற்பத்தி செய்யும் ஓடந்துறை ஊராட்சி இப்போது ஆண்டுக்கு 19 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.

    பார்க்க.http://www.caleidoscope.in/eco-ideaz/powering-ahead-on-entrepreneurial-zeal-odanthurai.html

    சுட்டியிலிருந்து.
    The wind-farm in the Odanthurai generates 7.5 lakh units of electricity in a year. While the panchayat’s need is only 4.5 lakh units, the remaining power is sold to Tamil Nadu Electricity Board, fetching the panchayat an annual income of Rs. 19 lakh. “After repaying the bank loan of Rs. 1.15 crore over seven years, the cost of generating electricity will be virtually zero,” beams Shanmugam

    அதே கோவை மாவட்டத்தில்தான் அரசு மானிய விலையில் நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து காற்றாலைகளை நிறுவ ஊக்கம் கொடுத்து வங்கி கடன்களையும் வாரிக்கொடுத்து மின்சாரம் உற்பத்தி செய்ய வைத்துள்ளது.அப்புறம் அவன் கிட்டயே ஒரு அலகு 17 ரூபாய் வரைக்கும் விலை கொடுத்து வாங்குகிறது.அவல் நம்முடையது.[நிலமும் காற்றும்] உமியும் நம்முடையது.[வங்கி கடன்] ஊதி ஊதி தின்கிறது மட்டும் தனியார் முதலாளிகள்.இந்த தனியார்மய கொள்ளையைத்தான் நாட்டை முன்னேற்ற வாராது வந்த மாமணி என போற்றிப் பாடுகிறார் நண்பர் அதியமான்.

    • இந்த கிராமத்தின் முன்னுதாரணத்தை ஏன் மற்ற கிராமங்களும் பின்பற்றவில்லை என்று ஆச்சரியமும், வருத்தமும் வருகிறது..

  18. தனியார்மயமாக்கலை நியாயப்படுத்த ஆளும் கும்பல் எடுத்து வைக்கும் வாதங்களே உழைக்கும் மக்களை இழிவு படுத்துவதாக உள்ளன.

    Modern breads நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்த்தபோது அதற்கு கற்பித்த நியாயம்.
    ”ரொட்டி சுடுவது அரசாங்கத்தின் வேலையில்லை”. ரொட்டி சுடுவது என்ன கேவலமான ஒன்றா.இப்படியே விட்டால் ஓட்டுனர் வேலை அரசுக்கு இழுக்கு என போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கலாம். பால் பீச்ச முடியாது என ஆவின் அமுல் ஆகியன கைகழுவப் படலாம்.

  19. @ மா.சிவக்குமார் & அதியமான்.. ஆக்கப்பூர்வமான விவாதம். உங்கள் விவாதகங்களில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். மற்ற வினவு கட்டுரைகளின் பின்னூட்டங்களும் மத, இன காழ்ப்புணர்ச்சிகளின்றி பிரச்சனையின் மூலம், தீர்வுகளின் பரிசீலனையை நோக்கி ஆக்கப்பூர்வமாக இருக்குமானால் மிகவும் நன்றாக இருக்கும்.

  20. மின் வெட்டு குறித்த வினவு, புதிய ஜனநாயக இதழ்களின் கட்டுரைகள் மின்வெட்டின் பின்னணியுள் உள்ள உலகமயக் கொள்கையை தொட்டுக் காட்டுகிறது. தமிழகத்தில் கிராமப்புற விவசாயிகளுக்கும் , கிராமப்புற தொழில்களுக்கும் தற்போது மூன்று மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 1980 களுக்குப் பின் மின் வழங்கலை நகர்புற மின் வழங்கல், கிராமப்புற மின் வழங்கல் என பிரித்து விட்டனர். கிராமப்புறங்களுக்கு “கிராமப்புற கட்டுப்பாட்டு மும்முனை மின் வழங்கல் கொள்கையை” நடைமுறை படுத்துகின்றனர். இந்த கொள்கையின் படி எப்பொழுதும் கிராமப்புறங்களுக்கு பகலில் அதிகபட்சமாக ஆறு மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைக்கும். மின் வெட்டு வந்துவிட்டால் அது ஒரு மணிநேரமாகக் கூட குறைந்து விடும். இது கிராப்புறத்தின் வளர்ச்சியை தடுக்கும் செயலாகும். இந்த அநீதியை எதிர்த்து தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்துள்ளது. கிராமப்புற வளர்சிக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு வினவு இதழும், அதன் வாசகர்களும் துனை நிற்க வேண்டும் என தோழமையோடு வேண்டுகிறோம்.

    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:

    கி.வே.பொன்னையன், அமைப்பாளர்,
    தற்சார்பு விவசாயிகள் சங்கம்,
    17, கிழக்கு புதுவீதி, சென்னிமலை-638051,
    ஈரோடு மாவட்டம்.
    அலைபேசி:9788648605
    மின்னஞ்சல்:kiveponnaiyan@gmail.com

  21. தினமலர் :ஆகஸ்ட் 18,2011,
    குந்தா மின் திட்டத்திற்கு நந்தியாக நிற்கும் மத்திய அரசு : சட்டசபையில் தமிழக அரசு கண்டனம்:
    குந்தா நீர் மின் திட்டத்திற்கு மற்ற மாநிலங்களிடமும், காவிரி ஆணையத்திடமும் அனுமதி வாங்க வேண்டுமென, மத்திய அரசு நந்தி போல் முட்டுக்கட்டை போடுவதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
    ———————————————————————————————————-
    இதில், 1,200 கோடி ரூபாய் செலவில், 500 மெகாவாட் திறன் குந்தா நீர் மின் திட்டத்திற்கு, நதி நீர் பிரச்னை எனக் கூறி, மத்திய அரசு நந்தி போல குறுக்கே நின்று முட்டுக்கட்டை போடுகிறது. உற்பத்தி செலவும் மிகக் குறைவு.

    ஆனால், காவிரி ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டுமென, தேவையில்லாமல் மத்திய அரசு தடுக்கிறது. குந்தா நதி, காவிரி நதிக்கும் கிளை நதிக்கும், கிளை நதியாக உள்ளது. இதற்கு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை மாநிலங்களிடம், மத்திய அரசு அனுமதி வாங்கச் சொல்கிறது. இந்த மின் திட்டம், தமிழக எல்லையில், தமிழக தண்ணீரை பயன்படுத்தி நிறைவேற்றப்படும் திட்டத்திற்கு, பக்கத்து மாநிலத்திடம் ஏன், நாம் அனுமதி வாங்க வேண்டும். இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். எப்படியும், முதல்வரின் தொடர் முயற்சியால், இத்திட்டமும் நிச்சயம் நிறைவேற்றப்படும். இவ்வாறு விஸ்வநாதன் பதிலளித்தார்.

    கூடங்குளம் பற்றி வாய் கிழிய பேசும் மத்திய அரசு இத்தட்டத்தை பற்றி மௌனம் சாதிப்பது ஏன் ???????????

Leave a Reply to K.R.Athiyaman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க