Sunday, October 13, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்!

  1. “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – புரட்சிகர அமைப்புகள் நெல்லை மற்றும் கூடங்குளத்தில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி!
  2. கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய – மாநில அரசுகளில் சதி!
  3. மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்!
  4. குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
  5. ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!
  6. யேனாம் படுகொலை: முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராக….
  7. ‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
  8. காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி
  9. “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – மக்களின் பேராதரவோடு தொடரும் பிரச்சார இயக்கம்
  10. “ஆபத்தான அணுஉலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்” – எதிரிகளை இனங்காட்டி….துரோகிகளைத் தோலுரித்து போராட அறைகூவிய பொதுக்கூட்டம்!
  11. தீண்டாமையின் புதிய அவதாரம்
  12. மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம், இந்தியாவின் அடிமைத்தனம்!
  13. டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?
  14. புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்
  15. ஜெயாவின் நிர்வாகத்திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

புதிய ஜனநாயகம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. புதிய ஜனநாயகம் (அதாவது புதிய இஸ்லாமியம்) இதழ் படித்து நன்றாக சிரித்தேன். உலக அரங்கில் ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்துக்கொன்று இருக்கும் இந்த இஸ்லாமை நீங்கள் பாராட்டி ஆதரித்து எழுதுவது கேலிக்கூத்து தவிர வேற ஒன்றும் இல்லை. இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம் என்று பெயர். உலக செய்திகளை நீங்கள் படிப்பதில்லை போலும். தினசரி இஸ்லாமிய பயங்கரவாதத்தால் மக்கள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதை விடுத்து எதேர்கெடுத்தாலும் இந்துக்களை கண்டிப்பது துவேசிப்பது கண்டனத்திற்குரியது.

    குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உள்ளது. இது உங்களுக்கு பொறாமையாக உள்ளது. ஏனெனில் உங்கள மாநிலமான காஷ்மீர் கீழே போய்க்கொண்டு உள்ளது. வளர்ச்சி உங்களுக்கு பிடிப்பதில்லை போலும். உங்கள் நிலை பரிதாபமாக உள்ளது.

    இப்படியே வளருங்கள் வாழ்த்துகிறோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  2. அய்யா,’உலகம் தெரிந்தவரே’ உள்ளூர் நிலவரம் தெரியாமல் பேசுகிறீரே? குண்டுவைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் பங்கு குறித்த உண்மைகள் பட்டவர்த்தனமானபின்னும்; குஜராத் இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது மட்டுமல்லாது, அவற்றுக்கெதிரான வழக்கை இழுத்துமூட நரேந்திர மோடி அண்ட் கோ செய்யும் நரித்தனங்கள் நாளும் அம்பலமாகிவரும் வேளையில் இது குறித்துப் பேசாமல், அங்கே பார் இங்கே பார் பாயை பார் பயங்கரவாதம் பார் என்று ஏன் அய்யா, போக்கு காட்டுகிறீர்!
    புதிய ஜனநாயகம் பத்திரிக்கை புதிய இஸ்லாமாகவே இருந்துவிட்டு போகட்டும், அவர்கள் எழுப்பியிருக்கும் அக்”குறிப்பான” கேள்விகளுக்கு தங்களின் பதில் என்ன?
    நாணயமும் நேர்மையும் இருப்பின் பதில் சொல்ல கடமைப்பட்டீர்களாக!

    • கோத்ராவில் நடந்தது என்ன? அப்பாவி இந்துக்கள் இஸ்லாமிய பயங்கர வாதிகளால் பெட்ரோல் குண்டுகள் வீசி ரயிலில் கொல்லப்பட்டார்கள். அங்கு பணியிலிருந்த ரயில்வே ஊழியர்களே இதற்கு சாட்சி. இதனை எல்லாம் மூடிமறைத்துவிட்டு “பெட்ரோ டாலருக்காக” வக்காலத்து வாங்குவது சரியல்ல. இதனை குஜராத்தில் சொல்லிப்பாருங்கள். அனைவரும் உங்களின் இந்த பொய்யை பார்த்து சிரியாய்சிரிப்பார்கள். உங்களைப் பார்த்துத்தான்!!!!

      ஒரு பொய்யை பலமுறை கூறி “கோயபல்ஸ்” போல் உண்மையாக்க முயற்சிக்காதீர்கள். இது ஒரு பாசிசமாகும். மக்களை ஜாதி சமயம் மொழி பிராநதிய உணர்வுகளுக்கு ஆளாக்காதீர்கள். மக்கள் அனைவரும் திவிரவாதமற்ற நிலையில் அச்சமின்றி வாழ வழிவிடுங்கள். பொய் சொல்லி பத்திரிகை நடத்துவதை தவிருங்கள்.

      • நட்ராயன், கூடங்குளம் வேணாம்னா அமெரிக்க பாதிரி டாலர் வாங்கிட்டாங்கன்னு எழுதறீங்க, இந்து மதவெறி எதிர்ப்புன்னா பெட்ரோ டாலரா… அப்ப நீர் என்ன குஜராத் பனியா வட்டிக்கடை சேட்டுகிட்ட மூளையை அடமானம் வச்சு காசு வாங்கிட்டுத்தான் பேசுறீங்களா? உங்களுக்கு பதில் சொல்ல வரலையின்னா இப்படி காசுவாங்கிட்டு எழுதறான்னு எழுதறத நிருத்துங்க, படிக்கவே தமாசா இருக்கு.

        குஜராத் சம்பவத்துக்கு ஆப்பு வச்ச இந்திய நீதிமன்றம் காசு வாங்கிச்சுன்னு அங்கபோய் சொல்லிடாதீங்க, கன்டம்ப்ட் ஆஃப் கோர்டுல தூக்கி உள்ள போட்டுடுவாங்க

      • நாட்டாமை அண்ணே,,, ஸாரி, நாட்றாயான் அண்ணே.
        புதிய ஜனநாயகம் இதழின் தலைப்பையும் முடிவையும் மேலோட்டமாக மேய்ந்துவிட்டு கருத்து போடுறீகபோல! விசயத்துக்குள்ளயே வர மாட்டீங்கறீங்களே! ‘நாறவாயன் நாராயணசாமி’ மாரீல்ல நீங்களும் பேசிட்டு திரியிறீக…. டாலர வாங்கிட்டான் காச வாங்கிட்டான்.. புதிய இஸ்லாமு அப்படி இப்படீனு பினாத்துறீகளே! சரி அத வுடுங்க!
        கொஞ்சம் தண்ணிய குடிச்சிட்டு நிதானமா பத்திரிக்கைய படிச்சு பாருங்க பாஸ். கருத்தெல்லாம் அப்பால போட்டுக்கலாம்…!

  3. என்ன நாட்றாயன், ஆளயே காணோம்!
    மறுமொழிகளை போட்டு உங்க புலமைய கொஞ்சம் பதிவுலகத்துக்கு பகருங்க பாஸ்!

    //இதனை எல்லாம் மூடிமறைத்துவிட்டு “பெட்ரோ டாலருக்காக” வக்காலத்து வாங்குவது சரியல்ல.//
    பெட்ரோ டாலர் குறித்த தங்களது ‘அறிவை’ கண்டு வியந்து போனேன் நாட்றாயன்!
    பெட்ரோ டாலருக்காக நாயாய் அலைவது தங்கள் நரேந்திரமோடி தான் என்பதை நாடே அறியும். நீங்கள் வியந்தோதும் குஜராத்தின் ‘வளர்ச்சி’யே இதற்கு சாட்சி!

    //மக்களை ஜாதி சமயம் மொழி பிராந்திய உணர்வுகளுக்கு ஆளாக்காதீர்கள்.//
    உண்மைதான், நரேந்திரமோடிக்கு மெயில் அனுப்புவதற்கு பதிலாக வினவுக்கு அனுப்பிட்டீங்களா, நாட்றாயன்?
    என்னங்க போங்க, கொஞ்சம் சூதானமா செய்யக்கூடாதா…? சரி விடுங்க,
    நரேந்திரமோடி அண்ட் கோ தனது கிரிமினல்தனம் அயோக்கியத்தனம் கொலைக்குற்றங்களையெல்லாம் மூடிமறைக்க இந்துமதவெறியையும் குஜராத்தின் பெருமிதம் பேசி பிராந்திய உணர்வையும்தான் தூண்டி விடுகிறார் என்பது உலகம் அறிந்ததுதானே!

  4. ஞாயிற்றுக் கிழமை காலை புதிய ஜனநாயகம் விற்பனை.
    =====
    “அன்பார்ந்த உழைக்கும் மக்களே, புதிய ஜனநாயகம் என்ற அரசியல் மாத இதழை அறிமுகம் செய்ய வந்திருக்கிறோம். மற்ற பத்திரிகைகளைப் போல வணிக நோக்கம் இல்லாமல் மக்கள் பிரச்சனைகளை மக்கள் சார்பில் நேர்மையாக அலசி வழங்கும் பத்திரிகை இது. மக்களிடையே நேரடியாக பிரச்சாரம் செய்து பெறும் நன்கொடை மூலம்தான் நடத்தப்படுகிறது, விளம்பரங்களே இருக்காது.

    இந்த இதழில் வெளியாகியிருக்குத் தற்போதைய பிரச்சனைகளைப் பற்றி ஓரிரு நிமிடங்கள் விளக்குகிறோம்.

    இன்று தமிழ்நாட்டில் நம் அனைவரையும் பாதிக்கும் பிரச்சனை மின்வெட்டு. நகரங்களில் 2 மணி நேரமும், கிராமப் புறங்களில் 8 மணிநேரமும் மின் வினியோகம் தடைபடுகிறது. இதற்கு காரணம் என்ன, இதில் இருக்கும் அரசியல் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த மின்வெட்டு வீடுகளுக்கும், சிறு தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும், கடைகளுக்கும் மட்டும்தான். நோக்கியா, யுண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அரசுடனான சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ் தடையில்லா மின்சாரத்தை பெறுகின்றன. சரி, அவங்களுக்கும் மின்சாரம் தேவைதான், கொடுக்க வேண்டியதுதான். மின்சாரம் ஏன் பற்றாக்குறையாக இருக்கிறது?

    சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 7,500 கோடி யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில். இதில் மூன்றில் ஒரு பகுதிதான் தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்த மின்சாரம். அப்படி உற்பத்தி செய்வதற்கு நீர் மின்சாரத்துக்கு சுமார் யூனிட்டுக்கு 25 பைசாவும், நிலக்கரி பயன்படுத்தி உருவாகும் அனல் மின்சாரத்துக்கு சுமார் 2 ரூபாயும் செலவாகிறது. மீதி உள்ளதில் ஒரு கணிசமான பகுதி தனியார் மின்உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படுகிறது. அவர்கள் நிலைமையைப் பொறுத்து யூனிட்டுக்கு 4 ரூபாய் முதல் 17 ரூபாய் வரை விற்கிறார்கள்.

    அதை வாங்கும் மின்சார வாரியம் (இப்போது கம்பெனியாக மாற்றியிருக்கிறார்கள்), வீடுகளுக்கு ரூ 1.50க்கும், தொழிற்சாலைகளுக்கு 3.50க்கும், கடைகளுக்கு 6 ரூபாய்க்கும் கொடுக்கிறது. இப்படி 17 ரூபாய்க்கு தனியாரிடமிருந்து வாங்கும் மின்சாரத்தை இன்னொரு பக்கம் தனியார் நிறுவனங்களுக்கு ரூ 3.50க்கு கொடுத்தால் என்ன ஆகும்? இழப்புதான். இந்தக் கணக்கில் மின்சார வாரியத்துக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தனியார் உற்பத்தியாளர்களுக்கு பணம் பாக்கி வைத்திருக்கிறது. அதனால் மின் உற்பத்தியை தொடர முடியாது என்று மிரட்டுகிறார்கள் தனியார் உற்பத்தியாளர்கள்.

    இப்படிப்பட்ட நிலையில் திறமையான, மக்கள் நலம் நாடும் தலைவர் அல்லது நிர்வாகி என்ன செய்ய வேண்டும். தனியார் மின் உற்பத்தியை அரசுடமையாக்கி, குறைந்த விலையில் உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்க வேண்டும். அதைச் செய்ய ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியும் சரி முடியாது.

    இதற்கிடையில் ஜெயலலிதாதான் உலகிலேயே சிறந்த நிர்வாகி, மிகச் சிறந்த முதலமைச்சர், இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர், நாளைக்கு இந்திய பிரதமர் என்று சோ போன்ற பார்ப்பன மேதைகள் எழுதுகிறார்கள். அவரது நிர்வாக லட்சணம் இதுதான். ஆட்சிக்கு வந்து முதல் வேலையாக 3 மாதங்களுக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு பாடத் திட்டம் என்ன என்பதில் குளறுபடி செய்தார். சமச்சீர் பாடத் திட்டம் வேண்டாம் என்று முரண்டு பிடித்து, நீதிமன்றங்கள் ஏறி இறங்கி, கடைசியில் அதையே ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. ஒரு முடிவு எடுத்தால் அது யாரை பாதிக்கும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது கூட தெரியாம என்ன நிர்வாகி!

    நாம எல்லாம் 5 பைசா கொடுத்து ஒரு குண்டூசி வாங்கினாலும், காசு கொடுத்து வாங்கின பொருள் வீணாக்கக் கூடாது என்று கவனமாக இருப்போம். இந்த அம்மா ஆட்சிக்கு வந்ததும் ‘போன திமுக ஆட்சியில் 1000 கோடி ரூபாய் செலவழித்து கட்டின தலைமை செயலக கட்டிடத்தில் ஊழல், அதை மருத்துவமனை ஆக்கப் போகிறேன்’ என்றார்கள். ‘நியாயம்தான்,ஊழல் என்றால் விசாரணை நடத்துங்க, மருத்துவமனையா மாற்ற வேண்டும் என்றால் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்’ அவ்வளவு திறமையான நிர்வாகி 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தை பாழாக்கி நிற்க வைத்திருக்கிறார். இதுதான் அவரது திறமை!

    யாரை அமைச்சராக்குவது, யாரை அரசு பதவிகளில் நியமிப்பது என்பதில் கூட தெளிவில்லாதவர்தான் இவர்.

    இவரும் குஜராத்தில் மோடி போல தமிழ்நாட்டை முன்னேற்றி விடுவார் என்கிறார்கள். மோடி ஒரு கொலைகாரப் பாவி. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மத வெறியர்களால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை, பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்த குஜராத்தில் முதலமைச்சராக போலீசை கையில் வைத்துக் கொண்டு அதற்கு எந்த வித நியாயமும் கிடைக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியர்களாகிய ஒவ்வொருவரும் வெட்கப் பட வேண்டிய நிகழ்வு அது.

    கூடங்குளம் போராட்டம் பற்றிய உண்மை நிலவரங்கள், உலக நிதி நெருக்கடி, அமெரிக்காவின் ஏகாதிபத்திய அடாவடிகள் குறித்தும் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. வாங்கி படித்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். ”
    =
    ======
    ஒரு பேருந்தில் பேச ஆரம்பித்ததும் ஒரு பெரியவர் பேச விடாமல் தகராறு செய்ய ஆரம்பித்தார். ஜெயலலிதா பெயரைக் குறிப்பிட்டு எப்படி பேசலாம்? பொதுவாக பேசிவிட்டுப் போங்க என்று சத்தம் போட ஆரம்பித்தார். ‘உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், வெளியில் எத்தனையோ சத்தம் கேட்கிறது போல இதுவும் என்று நினைத்துக் கொண்டு காதைப் பொத்திக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதும் அதைப் பிடித்துக் கொண்டார். ‘நீ எப்படி அதை சொல்லலாம், உன் கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டாமா’. இப்படி வாக்குவாதம் நடக்கும் போது பின் வரிசையில் நான்கைந்து பேர் கூப்பிட்டு பத்திரிகை வாங்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து அறிமுகப் பேச்சை தொடர்ந்தோம். கடைசியில் பெரியவரிடம் போய் ‘1000 கோடி ரூபாய் தலைமை செயலக கட்டிடத்தை பாழடைந்து நிற்க வைத்திருக்கிறார். அவரெல்லாம் கிரிமினல்’ என்று சொல்லி விட்டு வந்தோம்.

    இன்னொரு பேருந்தில் பத்திரிகை வாங்கிய ஒருவர்,
    ‘இப்படி பத்திரிகை வாங்கி படிப்பதாலே பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? அவங்களா பார்த்து திருந்தினாத்தான் உண்டு’
    ‘அவங்க என்றால் யாரை சொல்றீங்க? அவங்க என்ன பிறக்கும் போதே தலையில் இரண்டு கொம்போடு பிறந்தவங்களா? நம்ம நாடு, நம்ம மக்கள் மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் பிரச்சனை தீரும்’

  5. தோழர் விச்சு,
    உங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள். தொடர்ந்து பணியாற்றுவோம்!.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க