privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!

-

ளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார்.

”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…”
அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார்.

“ஒரு நிமிசம், இதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க, சந்தோஷ்?”

”அம்மாவுக்கு, சார்” – போட்டியாளர்

“உன் அம்மா எங்க?” – விட்டால் அழுது விடுவது போன்ற உருக்கமான குரலில் நடுவர்.

”அம்மா வரலை, அம்மாவுக்கு உடம்பு முடியாததால, வந்து உட்கார முடியாது. .அதனால வரலை.” – போட்டியாளர்.

“அப்டியா? நிஜம்மா?” – போலித்தனமான இரக்க வார்த்தைகளில் நடுவர்.

”ஆமா, நிஜமாத்தான் சார்” – பாடலை பாதியில் நிறுத்தச் சொன்ன கலக்கத்துடன் பதிலளிக்கிறார் போட்டியாளர்

“இங்கே பாருங்க, ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு” என்று நடுவர்  சொன்னதும், அரங்கமே திரையில் பார்க்கிறது. அங்கு, வாசலுக்கு வெளியே ஸ்ட்ரெச்சரிலிருந்து ஒரு அம்மாவை இறக்குகிறார்கள். அவரால் நடக்க முடியவில்லை. அப்படியும் விடாமல், கைத்தாங்கலாக அழைத்து வருகிறார்கள். காமிரா போட்டியாளரிடம் திரும்புகிறது. அவரோ, இதைக் காணச் சகியாமல் திரும்பிக் கொள்கிறார். அழுகிறார். உருகுகிறார். அரங்கமே எழுந்து நிற்கிறது. இதற்கேற்ப, ஒரு சோகப் பின்னணி இசை வாசிக்கப்படுகின்றது. பலரும் கைக்கொடுத்து தூக்கிவிட, அந்த அம்மா சிரமப்பட்டு படியேறுகிறார். இதைக் காண்பவர்கள், இன்னும் நெகிழ்ந்து விடுகிறார்கள். வாய் பொத்தி, ”அய்யோ” என்று பதறுகிறார்கள். கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள்.

மேடையில் அவர் நாற்காலியில் அமர்ந்ததும் கரவொலி. இதோடு அந்த போட்டியாளரை விட்டு விடவில்லை. ”சரி, சந்தோஷ், ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க என்ன ஃபீல் பண்ணீங்க, இப்போ என்ன ஃபீல் பண்றீங்க? எப்படியாவது வார்த்தையில அதை கொண்டு வாங்க?” என்று அந்த போட்டியாளரை விடாமல் தோண்டித் துருவி செண்டிமெண்டைப் பிழிந்து எடுக்கிறார்கள்.

நடுவர்கள் கண்களை துடைத்துக் கொள்கிறார்கள். அரங்கத்திலிருப்பவர்கள், இந்தக் காட்சியை காணத் திராணியற்றவர்களாய் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார்கள். அப்படியும் போட்டியாளரை நிகழ்ச்சி நடத்துபவர் விடவில்லை. விக்கித்துப் போய் இருப்பவரிடமிருந்து உணர்ச்சியை வார்த்தைகளாகக் கறந்துவிடத் துடிக்கிறார். “எங்க அம்மாவால நடந்து வர முடியாது, வந்தாலும் நாள் முழுக்க நாற்காலியில உட்கார்ந்து இருக்க முடியாது” என்று போட்டியாளர் சந்தோஷ் தடுமாறுகிறார்.

போட்டியாளரின் தாயையும், நிகழ்ச்சி நடத்துபவர் விடவில்லை. அவரும் தடுமாற்றமான குரலில் பதிலளிக்கிறார். தனக்கு இந்த ஏற்பாடு முன்பே தெரிந்திருந்தாலும், ஆச்சரியமாக இருக்கட்டுமே என்பதற்காக மகனிடம் இது குறித்துச் சொல்லவில்லை என்கிறார். இதற்கும் அரங்கம் கண்கலங்குகிறது. நெகிழ்ந்து கரவொலி எழுப்புகிறது. சிறிது நேரத்தில் விட்ட இடத்திலிருந்து திரும்ப பாடல் தொடங்குகிறது.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !

ர்டெல் சூப்பர் சிங்கர் – தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல் மற்றும்  தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்ற இந்த நிகழ்ச்சி தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பிரசித்தம்.

முதலில் இந்த நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல் அல்லாமல், உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோ வகையைச் சார்ந்தது. அதாவது, பணத்துக்காக நடிக்கும் நடிகர்களை கொண்டதல்ல. நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களைக் கொண்டு, அவர்களின் உணர்ச்சிகளை, வாழ்க்கையை மையமாகக் கொண்டு பணத்துக்காகவும், படோடபமான பரிசுகளுக்காகவும் முக்கியமா டி ஆர் பி ரேட்டிங்குக்காக நடத்தப்படுபவை. முன்னரே திட்டமிட்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைப் பார்த்து சலித்த ரசிகர்களுக்கு உண்மையான விறுவிறுப்பு, ஆவல், த்ரில் முதலான உணர்ச்சிகளை ஊட்டி கல்லா கட்டுவதுதான் இந்த ரியாலிட்டி ஷோக்களின் நோக்கம்.

இவ்வகை நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் 1970களில் அமெரிக்காவில் பிரபலமாக இருந்தது. அமெரிக்காவில் ஓபரா வின் ஃப்ரே என்ற பெண்மணியின் இவ்வகை நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. எல்ல வணிக ஊடகங்களும் அமெரிக்க மாதிரியை வைத்து வளர்ந்தது போல தற்போது இந்த நிகழ்ச்சிகள் இந்தியாவுக்கும் இறக்குமதியாகி இருக்கின்றன.

கோன் பனேகா குரோர்பதி, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, காபி வித் அனு, சச் கா சாம்னா, மானாட மயிலாட, சரிகமபதநி என்று இதில் அநேக ரகங்களுண்டு.  இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் விளையாட்டு, காமெடி, பிரபலங்களை வைத்து, திறமைக்கான தேடல் என்றும் பல வகைகள் உண்டு.  ஏ எக்ஸ் போன்ற சேனல்களில் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களே தனிச்சிறப்பாக நடக்கின்றன. அதில் போட்டி நிகழ்ச்சிக்காக அருவெறுப்பான உணவுகளை உண்பது, சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் செய்யாதவற்றை காமிரா முன்பு செய்வது, சமயங்களில் உயிரைக் காவு கொள்ளக்கூடிய சாகசங்கள், முன்பின் தெரியாதவர்களுடன் சில நாட்களை ஒரே வீட்டில் கழிப்பது  முதலியன.

வகைவகையாக நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றின் நோக்கம் ஒன்றுதான் – காண்பவரின் உணர்ச்சிகளைக் கொண்டு விளம்பரங்களின் மூலம் காசு பார்ப்பது. அதாவது ரியாலிட்டி என்று சொல்லிக் கொண்டாலும் அதில் இயல்பு தன்மை என்பது பேச்சுக்குக் கூட இருக்காது. எல்லாம் ஒரு செயற்கைத்தனம் கலந்து இருக்கும். அதே நேரம் உண்மையில் நடப்பது போல தொகுத்து வழங்குவார்கள்.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !ரியாலிட்டி நிகழ்ச்சிகள், பார்ப்பவரை அடுத்தது என்ன என்பதை இதயத்துடிப்பை எகிறவைத்து, எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி ஈர்த்துப் பிடிக்கின்றன.  எவ்வளவுக்கெவ்வளவு மக்களை ஈர்த்துப் பார்க்க வைக்கின்றன என்பதைப் பொறுத்து அந்த நிகழ்ச்சியின் டி ஆர் பி ரேட்டிங் எகிறும். அதைப் பொறுத்து பணமும் கொழிக்கும். இதைக் கண்டுக்கொண்ட, டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காமதேனுவாக பார்க்கின்றனர். பொழுதுபோக்கு அம்சத்துக்காக நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டது போக,  நிஜத்தைப் போலவே காண்பிக்க வேண்டும், பார்ப்பவர்களின் உணர்ச்சிகளை கட்டிப்போட வேண்டும் என்ற உந்துதலில் நிகழ்ச்சிகளை செயற்கையாக இட்டுக்கட்டி நடத்துகின்றன. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன, தொலைக்காட்சி நிறுவனங்கள். ஆட்டை இழுத்து வந்து, வளர்த்து, பூஜை செய்து வெட்டுவது போலத்தான், ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டிருந்த காட்சி.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் உணர்ச்சிகளின் சுரண்டல் என்றால் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுப்பதும் மற்றொரு வகைச் சுரண்டல்தான். யார் அதிக வாக்குகளை செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் பெறுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அனுப்பப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் காசு. விளம்பரங்கள் மட்டுமல்லாமல் மக்களின் குறுஞ்செய்திகளிலும்  காசு வேட்டைதான், விஜய் டீவிக்கு. இப்படிக் கொள்ளையடிப்பதற்காக, மக்களின் கவனத்தைப் பெறுவதற்கு அவர்களுக்குத் தெரியாமலே வக்கிரமான ரசனைக்குக் கொண்டு சென்று செண்டிமெண்டால் தாக்குவார்கள். இதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுடன், மேல்தட்டு நடுத்தர வர்க்கப் பெற்றோர்களும் அடக்கம்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் பல சுற்றுகளுண்டு. ஒவ்வொரு சுற்றிலும் சிலரைக் கழித்துக்கட்டி கொண்டே வந்து, இறுதியில் மூன்று பேரை நிறுத்துவார்கள். அதுவும் கூட இயல்பானதாக இல்லாமல்,  நிகழ்ச்சியின் காரசாரத்தைக் கூட்ட வேண்டி நடத்தப்பட்ட நாடகமாகவே இருக்கும். மேலும், இந்தச் சுற்றுகளில் தோல்வியடைந்தவர்கள், இறுதியாக  வைல்ட் கார்ட் சுற்றில் போட்டியிடலாம். அதன்பிறகு, செல்போன்கள் மூலம் வாக்கெடுப்பு, இணையம் மூலம் வாக்கெடுப்பு என்று அவர்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. ஆனால், தேர்வு முறைகள் என்று சொல்லப்பட்டாலும், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது விஜய் டிவிக்கே வெளிச்சம். கடந்த முறை சாய் சரண் என்பவரை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தார்கள். அந்த சாய் சரண் தொடர்ந்து மூன்று முறை சூப்பர் சிங்கரில்  விடாமல் கலந்துக் கொண்டார்.

ஒருமுறை ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் இறுதிச்சுற்றுக்கு வந்து விட்டான். அடுத்ததாக, பொது மக்களின் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவனுக்கு வாக்கு சேகரிக்க சென்னை நகரெங்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவனுடைய எஸ் எம் எஸ் எண், எந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும், எந்த நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பன போன்ற விவரங்களுடன். ஒரு செல்போனுக்கு எத்தனை வாக்கு வேண்டுமானாலும் அளிக்கலாமாம். அதில் , அந்த சிறுவன், 10 வயது கூட நிரம்பியிராத அந்த சிறுவன் கூழை கும்பிடு போட்டுக்கொண்டு, ”என்னை வாக்களித்து ஜெயிக்க வைத்து, ஜூனியர் 2 டைட்டிலை வின் பண்ணிக் கொடுங்க, ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சிகள் எந்த அளவுக்கு பெற்றோரின் மனநிலையை, குழந்தைகளின் மனநிலையைச் சீரழித்து வைத்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

இது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று  சொல்லிக் கொண்டாலும் பெரும்பாலான தமிழக மக்கள் இன்னும் இதன் உள்ளே வரவில்லை. அவர்களெல்லாம் ஆரம்ப கட்டத்திலேயே கழித்துக் கட்டப்படுகிறார்கள். பெரும்பான்மை மக்கள் இங்கும் மேடைக்கே வர முடியாது. அப்படியே உள்ளே வரும் ஒன்றிரண்டு பேரும், காமெடிக்காக அல்லது ஒரு உப்புக்கு சப்பாணியாகப் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே வருவது அதிகமும் பார்ப்பன – ஆதிக்க சாதிக் குழந்தைகள்தான். அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் பார்ப்பன மாமிகளும், மாமாக்களும்தான். இந்தப் போட்டிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கு உள்ளும் பொதிந்திருக்கும் திறமைகளை மிளிர வைப்பதல்ல. யாரால், குழந்தைகளுக்காக செலவழிக்க முடியுமோ, அவர்களது நடை, உடை , பாவனைகளுக்காக  மெனக்கெட முடியுமோ அவர்களது குழந்தைகள்தான் உள்ளே வருகிறார்கள். போட்டியாளர்களாகிறார்கள்.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !
சந்தோஷ்: நோயுற்ற இவரது தாயை வைத்து விஜய் டி.வி.யின் ஆபாச சென்டிமென்ட்!

பிறக்கும் போதே குழந்தை என்ன பொறியியல் படிப்பு முடிக்க வேண்டும், எத்தனை இலட்சம் சம்பளத்தில் பணியாற்ற வேண்டும், என்ன ஆய கலைகள் கற்க வேண்டும் என்பதை ஒரு பந்தயக் குதிரையை வளர்ப்பது போல ’தீனி’ போட்டு வளர்க்கிறார்கள், நடுத்தர வர்க்க பெற்றோர்கள். அதுவும் அவர்கள் பார்ப்பனர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே கர்நாடக சங்கீதமும், பரதமும், கணினிக் கல்வியும் கண்டிப்பாக இருக்கும். ஊடக, கலை, சினிமாத்துறைகளில் வாய்ப்பு கிடைத்தால் ஜாக்பாட்தான் என்பது நிதர்சனமாயிருப்பதால் இந்த மாயை பெருக்கெடுத்து ஒடுகின்றது. ஆயினும் ஆயிரத்தில் ஒருவர்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியுமென்றாலும் பெற்றோர்கள் அயர்ந்து விடுவதில்லை.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெறும் குழந்தைகளுக்கு 25 லட்சத்தில் வீடு, கார் என்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. தங்கள் குழந்தைகள் முதலிடத்துக்கு வந்து வீட்டைப் பரிசாகத் தட்டிச் செல்ல வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரும் துடியாய்த் துடிக்கிறார்கள். அதற்காக எந்த அளவுக்கும் மெனக்கெடத் துணிகிறார்கள். லாட்டரி சீட்டு வாங்கினால் லட்சாதிபதி என்று கனவு கண்டு ஒவ்வொரு நாளும் லாட்டரி சீட்டு வாங்கி பாமரர்கள் ஏமாறுகிறார்கள், இல்லையா? அது போல, தங்கள் குழந்தையை ரேஸ் குதிரைகளாக நினைக்கும் பெற்றோரின் இந்த  மனநிலையை விஜய் டிவி நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விஜய் டிவி ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கிறது என்றால் பெற்றோர்கள் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகிக்கிறார்கள்.

அந்தச் சிறுவனைப் பார்த்தால் பத்து வயதுதான் இருக்கும். மாலையில் ஐந்து மணி வாக்கில் தனது தந்தையுடன் அந்த ஸ்டூடியோ வாசலில் நின்றுக் கொண்டிருக்கிறான். ஜிகினாக்களுடன் பளபளக்கும் உடை அணிந்திருக்கிறான். முகத்தில் மேக்கப். இருந்தும், முகம் சோர்ந்திருக்கிறது. மதியம் அவன் சாப்பிட்டிருக்கவில்லை. பசிக்கிறதென்றும், ஜூரம் வருவது போலிருக்கிறது என்றும் தந்தையிடம் முணுமுணுக்கிறான். ஆனால், அவனது தந்தையோ பதைப்பதைப்புடன் இருக்கிறார். ஏனெனில், இந்த ஆண்டை விட்டால், தனது மகன் அதற்கான வயது வரம்பைத் தாண்டி விடுவான் என்கிறார்.

சூப்பர் சிங்கர் பாடல் போட்டிக்கான சுற்றுதான், அது.  அதில் அவன் ஜெயித்துவிட்டால், அடுத்த சுற்றில் பாடத் தயாராக வேண்டும். திரும்ப இதே போல ஏழு அல்லது எட்டு மணி நேரங்கள். அந்தச் சுற்றில் நடுவர்களுக்கு முன்பு தோன்றுவதற்கேற்ப  உடை அணிந்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, அவன் இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் அவனது வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிடும் என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இதன் மூலம் சினிமாவில் பாட சான்ஸ் கிடைக்கும் என்று பரப்பப்பட்டு வருகிறது.

அதற்கேற்றாற் போல்,  நடுவராக வரும் ஏதாவது ஒரு இசையமைப்பாளரும் ஆசை காட்டுகிறார். ஆனால், அப்படி சினிமாவில் பாடும் வாய்ப்பு பெற்றவர்கள் மிகவும் சொற்பமே. இன்று தனித்த குரலிசை என்று ஒன்று திரையிசையில் இல்லாமல் போய்விட்ட பின்னரும் இத்தகைய ஆசைகளை அந்தப் பெற்றோர்கள் விடுவதாக இல்லை.

குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், ”நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.

ஏனெனில், அது தற்போது பரிசை நோக்கிய ஓட்டமாக மாறி விட்டது. கலந்து கொள்ளும் தங்கள் குழந்தைகள் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென்று அனைவரும் நினைக்கிறார்கள். எப்படியாவது பரிசுப்பொருளைக் கைப்பற்ற எண்ணுகிறார்கள். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் விற்கத் தயாராக இருப்பவர்கள் தங்கள் குழந்தையை விற்கத் தயாராகிவிடுகிறார்கள். அதற்காக, விஜய் டிவியிடம் முற்றுமுழுவதுமாகச் சரணடைந்து விடுகிறார்கள். தன் குழந்தை மேடையில் பாடினால், அரங்கில் அமர்ந்தபடி தந்தை நடனமாடுகிறார். பாட்டி எழுந்து குத்தாட்டம் போடுகிறார்.

ஆட்டமும், பாட்டமும் உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருப்பது போன்ற யதார்த்தம் நடுத்தர வர்க்கத்திடம் இல்லை. ஆனாலும் அவர்கள் ஆடுவதும், பாடுவதும் மனித உணர்ச்சிகளை இயல்பாக பண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை. அது செயற்கையாக தன்னை பிறர் பார்க்க வேண்டும், அப்படி ஆடினால்தான் காமரா தன்னைப் பார்க்கும், தான் அதிகம் பார்க்கப்பட்டால்தான் தனது குழந்தையின் பிராண்ட் இமேஜ் உயரும் என்ற பச்சையான சுயநலமே இத்தகைய ஜோடனைகளைத் தோற்றுவிக்கின்றது.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.

இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.

ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.

விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.

சமூகச் சூழலைப் பற்றி கவனிக்காமல் அல்லது கவலைப்படாமல், சாயப்பட்டறைளிலும், பட்டாசுத் தொழிற்சாலையிலும், டீக்கடைகளிலும் பணிபுரியும் குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தைத் தொலைத்து விடுவதாகவும், குழந்தை தொழிலாளிகளை ஒழிக்க வேண்டுமென்றும் கூச்சல் இடும் நடுத்தர வர்க்கத்தின் கண்களுக்கு, விஜய் டிவி குழந்தைகளின் உண்மையான திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தெரிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்த நிகழ்ச்சிக்கு வெளியே, சமூக அரசியல் காரணங்களால் வஞ்சிக்கப்பட்ட எண்ணற்ற குழந்தைகளின் நிலை பற்றி எண்ணுவதற்குக் கூட இவர்களுக்கு நேரமிருப்பதில்லை.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – விஜய் டி.வி.யின் அடுத்த சுரண்டல் ரெடி

குரங்காட்டியிடம் மாட்டிய குரங்குகளுக்குக் கூட சுதந்திரமிருக்கும். ஏர்டெல் சூப்பர் சிங்கருக்காக விஜய் டிவியிடம் மாட்டிய குழந்தைகள் நிலை அதைவிடப் பரிதாபம்.  போட்டியாளராகிவிட்டால், பள்ளிக்கூடத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் மட்டம்தான். ஏதோ வானத்திலிருந்து குதித்தது போல, பள்ளிக்கூடங்களும் குழந்தைகளுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி விடுகின்றன. போட்டி முடிந்து விட்டாலோ, அடுத்த சீசன் தொடங்கி விடுகிறது. அடுத்த பலியாடு மாட்டும் வரை, விஜய் டிவி எங்கெல்லாம் நிகழ்ச்சி நடத்துகிறதோ அல்லது ஆட்டம் பாட்டம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த வெற்றியாளர்கள் சென்று நிகழ்ச்சி நடத்த வேண்டும். கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போலவே விஜய் டிவி இந்த வெற்றியாளர்களைத் தமது பிரச்சாரப் பீரங்கிகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. இலவசமாகக் கிடைத்த விளம்பரத்தை மனதில் கொண்டோ அல்லது விஜய் டிவிக்கு காட்ட வேண்டிய நன்றி விசுவாசத்தை நினைத்தோ, வெற்றியாளர்கள் இதனை மறுத்துப் பேசவும் முடியாது.

முதலாளித்துவ சமூகத்தில், பண்டங்களை சந்தைப்படுத்துவதற்கே ஊடகங்கள் தேவை. சந்தையில் பலியிட தங்கள் குழந்தைகள்  பண்டங்களா என்பதை பெற்றோர்கள் சிந்திக்கட்டும்.
_____________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

___________________________________________________

  1. ///அதிகமும் பார்ப்பன – ஆதிக்க சாதிக் குழந்தைகள்தான். அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் பார்ப்பன மாமிகளும், மாமாக்களும்தான்////
    நீர் வேணும்னா பார்ப்பனரல்லா மாமிக்களையும் மாமாக்களையும் வைத்து
    விரல் சூப்புர சிங்கர்னு மக்கள் டிவியிலோ வினவு டிவியிலோ போடுங்களேன்… யார் வேணுங்கறது….

    • ஆட சுப்ப்பெர் அப்பு….இந்த மாதிரி கேள்வி கேட்டா இவைங்க ஓடி போய்டுவாய்ங்க இல்ல???

      ///அதிகமும் பார்ப்பன – ஆதிக்க சாதிக் குழந்தைகள்தான்///
      குழந்தைகள் கிட்ட கூட ஜாதி பாக்குற கேவலமான மனப்பான்மை தான் இந்த தலித்திய கோமான்களுடையது

      மற்றபடி குழந்தைக தங்கள் பாலியத்தை துலைத்து விடுகிறார்கள் என்பத உண்மையே

  2. உண்மைதான்,”தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்” என்று சொல்லிக்கொள்ளும் விஜய் டிவி தேர்வு செய்ததில் பாதி பேர் கேரளத்தவர் தாம்.

  3. ரத்தம் கொதிதிர்கிறது எத்தனையோ தடவை இத மாதரி நிகழ்சிகளை பார்க்கும் போது. மனிதனின் உணர்ச்சியை இலக்காக வைத்து கொள்ளை அடிக்கப்படும் ரதக்காட்டேரிகள் இவர்கள். அவர்கள் ஆடும் ஆட்டமும் , பாடும் பாடலும் முழுக்க முழுக்க பிஞ்சியிலே பழுத்தது போல தோற்றத்தை ஏற்படுத்துகிறன. மானாட மயிலாட (மார்பாட) என்னும் ஏகத்திற்கும் பாலியல் குற்றம் செய்ய தள்ளும் நிகழ்சிகளை தடை செய்ய வேண்டும். பணத்திற்காக ஏதும் செய்யும் குடும்பம் இருக்கும் வரை இந்த சமூகம் சரியான பாதைக்கு திரும்பாது. விபச்சாரம் செய்ய பெண்ணை அனுப்புவதும் அடுத்தவர்கள் முன் அரைகுறையாக ஆடுவதும் (கலை என்னும் பேரில்) ஒன்றுதான். பாலியல் குற்றம் செய்பவனுக்கு மரண தண்டனை என்றால் செய்ய தூண்டியவளுக்கு??????

  4. நல்ல அலசல். சிந்திக்க வைக்கும் பல கருத்துக்கள். பலவித கோணங்களில் ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள். குழந்தைகள் சித்திரவதைக்கு உள்ளாகும் நிகழ்வுகளை வெளிப்படுத்தியது சாதாரண மனிதனின் கண்ணுக்கு புலப்படாத விடயமே.
    இக்காலங்களில் ஆடம்பரமும், மளிரும் வெளித்தோரணமும் நவீன நாகரீகத்தின் அடிப்படை சட்டம் என்பதுபோல் ஆகிவிட்டது.
    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பணம் செய்யும் இயந்திரமாக்கும் தொழிலே இது போன்ற நிகழ்ச்சிகள்.
    முனியாண்டிகளும் முத்தம்மாக்களும் சின்னத் திரையில் பார்த்து காலத்தை ஓட்ட வேண்டியதுதான் பாக்கி.
    பகிர்வுக்க நன்றி.

  5. ஊடகங்கள் நம் அபல நிலையை கண்ணீராக்கி அவர்கள் காசாக்குகிறார்கள்.

  6. இதில் பங்கேற்பவர்கள் மட்டுமே சமுக சீரழிவிற்கு காரணமல்ல, இதை பார்பவர்களும் தான்.
    ஒரு முறை விஜய் டிவியில், வரும் ஒரு நிகழ்ச்சியின் விளம்பரம் பார்த்தேன் அந்த போட்டியின் பெயர் நினைவிலில்லை, ஒரு சிறுவன் நடனம் ஆடுகிறான் தவறி கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு பட்டு இரத்தம் வருகிறது அனாலும் அவன் அடியே தீருவேன் என்று அடம் பிடுத்து ஆடுகிறான், இரத்தம் வருவதை பார்த்து நாம் மனம் பதைத்து, உணர்ச்சிவசப்பட்டு அவனது அட்டிடுடெ டை பாராட்ட தூண்டபடுகிறர்கள்.

  7. \\ஆட்டமும், பாட்டமும் உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருப்பது போன்ற யதார்த்தம் நடுத்தர வர்க்கத்திடம் இல்லை. ஆனாலும் அவர்கள் ஆடுவதும், பாடுவதும் மனித உணர்ச்சிகளை இயல்பாக பண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை.//

    அய்யா சமதர்ம சாம்பியன் வினவு அவர்களே.. நடுத்தர வர்க்கம் மேல் உமக்கு ஏனய்யா இவ்வளவு காண்டு.. அவர்கள் என்ன வழிப்பறி கொள்ளையடித்தா பிழைப்பு ஓட்டுகிறார்கள்.

    லூசுத்தனமாய் இருக்கிறதே உம்முடைய சொத்தை பதிவுகள்..

    • வினவுக்கு நடுத்தர வர்கத்தினர் அதுவும் அவாள் குசு விட்டா கூட பொறுக்காது

      • எந்த வர்கத்தினர் குசு விட்டாலும் பக்கத்தில நிக்க முடியதுடே

  8. எல்லாம் ஆதிக்க சாதிக்குழந்தைகள்தான். நீ சொல்றத பாத்தா உண்மைத்தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அப்புறம் எதுக்கு இந்த குதி குதிக்கிற? ஓ, குறுஞ்செய்தி அனுப்பி பணத்தை இழப்பதெல்லாம் திராவிடர்களோ. அதனாலதான் இப்படி புலம்புரியா?

  9. ஜாதி பெயர் இல்லாமல் ஒரு விஷயத்தை அலச முடியவில்லை ஒருவராலும். வயிற்று போக்கு முதல் கேன்சர் வரை எல்லாவற்றிற்க்கும் பார்ப்பணனை வசை பாடுவது ஒரு வித பேஷன் ஆகிவிட்டது

    • I totally agree with you well wisher.

      How does it matter which caste any child belongs to? He or she is still a child and have no idea what their stupid parents make them do.

      I strongly condemn this Vinavu because I like the topics that you write about but it would be great if you can leave the caste out of it.

      • if you have watched the past episodes, you would have came across the slang voluntarily used by the contestants to show their caste.

        and when we speak about rabies we cannot avoid the word DOG.

        • I dont watch any Indian TV shows as I cannot waste my precious time on these kind of stupid shows. I was not pointint out just this post from Vinavu but in general what I have observed from Vinavu’s other posts. It seems like Brahmins are the only ones who are to blame for everything and I just hate this holier-than-thou attitude.

          Mr. Coimthur_thambi: We are indeed blessed to have among our midst, people like you (I assume you are not a brahmin), who are perfect. And, before we judge others – their human frailties, we may want to take a cue from a book (in this case, John 8:7) that has taught humankind invaluable lessons. “May he who has never sinned, cast the first stone” (sorry, I’m paraphrasing slightly given the context)

          • If you have’t watched the show but you have read the post by vinavu, then how can you judge that the post and vinavu as brahmin bashers. I think it not only suits this post but also all other posts (assumed you haven’t read nothing inside the post).

            //“May he who has never sinned, cast the first stone”// nice context and thanks for the voulntary surrender.
            Enjoy each and every moment with people like us…

        • “you would have came across the slang voluntarily used by the .. to show their caste”. Yes. This is the most irritating act. And your comment.. “when we speak about rabies we cannot avoid the word DOG”. I like this.

  10. சரியானக் கோணத்தில் பார்க்கப்பட்டு எழுதப்பட்ட பதிவு. இன்றைய வணிக உலகம் எல்லாவற்றையும் காசாக்குகிறது என்பதைப் பதிவு வெளிப்படுத்துகிறது. மேலும் குழந்தை உள்ளத்தை மாய உலகத்திற்கு அடிமைப்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறுவது அவசியமானது. – வாகை

  11. பார்ப்பனர்களைப் பற்றி பேசினால் பொத்துக் கொண்டு வந்து விடுகிறதோ? அவர்கள் என்ன சூது வாது தெரியாத அப்பாவிகளா? இலலை கலாச்சார காவலர்களா? பிற்போக்குத் தனத்தின் மொத்த உருவமாய், அடக்குமுறையாளர்களாய் பார்ப்பனர்கள் இருந்த காலத்தில் அவர்களது ஏற்றத்தாழ்வு மனப்பான்மை எப்படி இருந்ததோ அதே போல் தான் இப்போதும் வஞ்சகமாய் இருக்கிறது. இன்றும் திரைப்படப் பாடகர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்கள் தான். தமிழிசையைக் காப்பி அடித்து அதைக் கர்நாடக இசை என்றார்கள். தமிழ்க் கலையான பரத நாட்டியத்தை பார்ப்பன பரத முனிவன் தான் இயற்றினான் என்றார்கள். இப்படித் திருடர்களாக, வஞ்சகர்களாக பார்ப்பனர்கள் இருப்பதனால் அவர்களைத் தேவையிருக்கும் போது விமர்சிப்பதில் தப்பில்லை.
    மேலும் வினவு அனைத்துக் கட்டுரைகளிலும் பார்ப்பனர்களை விமர்சிப்பது போல் கூறுகிறார்கள். கட்டுரையைப் பற்றியோ, கட்டுரையின் மையக்கருத்தைப் பற்றியோ எதுவும் கூற வக்கில்லாமல் இது போன்று அவதூறுகளைக் கூறுவதன் மூலம் தங்களின் நேர்மையற்ற தன்மையை அனைவருக்கும் உணர்த்துகிறார்கள்.

    • இதுக்கு பேரு தான் செருப்பால அடிச்சி, கருப்பட்டியை கைல கொடுத்து அனுப்புறதுங்கிறது…. சூப்ப்ர்…

    • தலைப்பில் பார்பான் இல்லை அதனால் தலைப்பை மட்டும் படித்து கமன்ட் போடர ஆசாமிகள் இன்னும் வரல..

    • தங்கள் கருத்து மிகவும் நன்றாகவுள்ளது. ஒரு விடயத்தை மற்றும் உங்களுக்கு தெளிவு செய்ய உரிமை எடுத்துக் கொள்கிறேன்.

      //தமிழிசையைக் காப்பி அடித்து அதைக் கர்நாடக இசை என்றார்கள்//.

      தமிழிசை என்பதே கர்நாடக இசை. தமிழிசைக்கு கர்நாடக இசை என்று பெயர் வந்த காரணம் மிகவும் நுட்பமானது. பண்டை தமிழகம் என்பது இன்று இருக்கும் தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் டெக்கான் பிளாட்டு வரை.

      அதவது கடல் மட்டத்தில் இருந்து தாள்மையாக இருக்கும் பகுதி, அதவது மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகளும், வடக்கில் டெக்கான் பிளாட்டுவம் ஓங்கி இருக்கும். தெற்கேவும், கிழக்கிளும் கடல் சூள்ந்து இருக்கும் ஆகயால் தமிழகம் ஒரு தாள்மையான நில பரப்பில் அமையபட்ட ஒரு நிலம். தாள்மையான் நிலத்துக்கு “கர்நாடு” என்று தமிழில் பொருள்ளும் உண்டு. தமிழகத்துக்கு கர்நாடு என்று பெயரும் உண்டு.

      மேலும் வடக்கே இருந்து வந்ட்க முகலாயர்கள் இந்த இசையை கேட்டு ரசித்ததாலும், கர்நாடகத்தில் இருந்து, அதவது தாள்மையான நிலப்பரப்பு மக்கள் இசை என்பதால் அதற்கு கர்நாடக இசை என்று பெயரிட்டனர். உண்மை யாதெனில் கர்நாடக இசை என்பது தமிழ் இசையே.

      மேலும் பார்ப்பன சிகாமனிகள் இன்று வரை திருவையாரில் கர்நாடக இசை சங்கமத்தை நடத்த காரணம் அதுதான். நம்யிடம் இருந்து களவான்ட இசையை நமது நிலத்திலே அதற்கு சங்கமத்தை நடத்தி அதை அவர்கள் இசையாக திரித்து என்னமோ இவனுங்க உருவாக்கின இசையாக வேடம் இடுவது கிழ்தனத்திலும் கிழானது.

      • // மேலும் பார்ப்பன சிகாமனிகள் இன்று வரை திருவையாரில் கர்நாடக இசை சங்கமத்தை நடத்த காரணம் அதுதான். நம்யிடம் இருந்து களவான்ட இசையை நமது நிலத்திலே அதற்கு சங்கமத்தை நடத்தி அதை அவர்கள் இசையாக திரித்து என்னமோ இவனுங்க உருவாக்கின இசையாக வேடம் இடுவது கிழ்தனத்திலும் கிழானது. //

        பார்ப்பன சிகாமணிகளின் ‘இசைத்திருட்டையும்’, அதை விடாமல் காப்பாற்றும் முயற்சியையும் பார்த்தாவது தமிழிசையை மக்களிடமும், ஊடகங்களிலும் வளர்க்கும் செயல்களில் இறங்காமல், பேசிப் பேசியே பொழுதைக் கழிப்பதுதான் ‘அற்புதசுகம்’..!!!

        • அப்படி வளர்க்க நினைக்கும் உங்கள் பார்ப்பன மக்கள் திருவையாரில் ஒரு தல்தபட்ட சமுதாயத்தை செற்ந்த மக்களை கூட்டி தியாகராசர் “சன்னதியில்” பாட்டு சொல்லி தர தயாரா?

          சும்மா இசையை வளர்கிறோம் என்று சொல்லி நீங்க பேசி பேசி உங்கவாலே வளர்காம.இதை செய்ய தயாரா?

          • // அப்படி வளர்க்க நினைக்கும் உங்கள் பார்ப்பன மக்கள் திருவையாரில் ஒரு தல்தபட்ட சமுதாயத்தை செற்ந்த மக்களை கூட்டி தியாகராசர் “சன்னதியில்” பாட்டு சொல்லி தர தயாரா? //

            இசையில் சாதியை நுழைக்கப் படாது..!!! தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் இல்லையா??!! தியாகராசர் சன்னிதியில் அவர்கள் போய்ப் பாடினால் யார் தடுக்க முடியும் இன்று?!

            // சும்மா இசையை வளர்கிறோம் என்று சொல்லி நீங்க பேசி பேசி உங்கவாலே வளர்காம.இதை செய்ய தயாரா? //

            பார்ப்பான் தான் செய்யணுமா? நீங்க செய்யமாட்டேளோ??!! அவன் என் இசையை திருடிட்டான், சுட்டுட்டான்னு அதனால் அவன்தான் செய்யணும், நாங்க சிபாரிசு மட்டும்தான் செய்வோம் என்கிறீர்களோ.!

            • //இசையில் சாதியை நுழைக்கப் படாது..!!! தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் இல்லையா??!! தியாகராசர் சன்னிதியில் அவர்கள் போய்ப் பாடினால் யார் தடுக்க முடியும் இன்று?! //

              சும்மா இந்த ஆர் எஸ் எஸ் பேச்செல்லாம் பேசாதீங்க. இத்தனை ஆண்டுகளாக நடக்கும் சங்கமத்தில் ஏன் இதுவரை அம்மக்கள் முன்வருவதில்லை என்று சொல்ல முடியுமா? வந்தால் தானே பாட அனுமதிப்பது அவர்கள் வரவே கூடாது என்று நினத்து செயல்பட்டால் எப்படி நடக்கும்.

              சரி நான் தாழ்த்தபட்ட சமுதாயத்தில் இருந்து பாடகர்களை அழைத்து வருகிறேன் நீங்கள் அவர்களை பாட வைக்க தயாரா? பேச வேண்டாம் காரியத்தில் இடுபடுவோம்.

              • அட நீங்க வேற செந்தமிழன்… தமிழில் ஓதுவதற்க்கே இந்த அம்பிகள் விடுவதில்லை. இந்த லட்சணத்தில் காபிரைட் வாங்கி வச்ச ‘சரிகமபதநி’யை விட்டுவிடுவார்களா? ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் ஒரு வசனம் வரும். “சங்கீதத்தத்துக்கு ஒரு சாரார் மட்டும் ஏகபோக உரிமை கொண்டாடாதீர்கள்” என்று. இதுல காமெடி என்னன்னா… அந்த வசனத்தை எழுதுனதும் ஒரு பார்ப்பான்… அதை பேசி நடிச்சதும் ஒரு பார்ப்பான்…!!!

              • செந்தமிழரே,

                திருவையாற்றில் 5 நாட்கள் நடக்கும் பொது விழாவான தியாகராசர் ஆராதனை விழாவில் சாதி வேறுபாடில்லாமல் அனைத்து கர்னாடக இசைக் கலைஞர்களும் கலந்து கொண்டு அவர் ‘சன்னிதியில்’ (சமாதி) பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

                அது சரி, உங்களிடம் தமிழிசையை வளர்க்கும் வழி கேட்டால் எந்தரோ மகானுபாவுலு என்று தெலுங்கில் தியாகராசரை ஆராதிக்க கிளம்பிவிட்டீர்களே.!!!

      • என்னயா சொல்லவருகுரீர்- கர்நாடக இசைதான் தமிழ் இசை என்கிறீரா?

        • தமிழ்ப் பாணர்களின் பண்களும், வட இந்திய ராகங்களும் கலந்து புதுவடிவெடுத்ததுதான் கர்நாடக இசை. இசைக்கருவிகள் தமிழர்களுடையது. ஆனால் கர்நாடக இசையும் தமிழிசையும் ஒன்று என்று கூறுவது திராவிடனும் தமிழனும் ஒன்று என்று கூறிக் கொண்டிருப்பதைப் போலத்தான்..!!!

          • இசை கருவியை கண்டுபிடித்த தமிழன் ராகங்கள் மட்டும் தெரியாமல் விழித்தான என்ன? யாழ் இசை கருவியில் உண்டாக்க பட்ட ராகங்கள் எத்தனை என்று தெரியுமா? இயலுக்கு ஏற்ப இசை ராகங்களையும் கருவியையும் உண்டாக்கியவன் தமிழன். சும்மா வட இந்திய ராகம் கலந்து புதுவடிவெடுத்ததுதான் கர்நாடக இசை என்று சொல்லாமல். ஆதரத்துடன் கூறுங்கள் பார்ப்போம்.

            • தமிழில் பண் என்பதைத்தான் வடமொழியில் ராகம் (ராக்) என்பார்கள். கர்னாடக இசை சுத்தமான தமிழ்ப் பண்களைத்தான்(ராகம்!) இன்னும் கொண்டிருக்கிறதா?! அடானாவைத் தூக்கி உடானாவில் போட்டு எசகு பிசகாக எங்கேயோ சுளுக்கிக் கொண்டு செத்தவனெல்லாம் தமிழன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்னய்யா பெருமை இருக்கிறது..!!!

          • கர்நாடக இசை தமிழிசையே.

            இது தொடர்பான கட்டுரைகள் கீழுள்ள இணைப்பில் உள்ளது.

            inioru.com/?s=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87

        • மேலும், இசையின் தனிச்சிறப்பு அது மொழி, சாதி, மத, இன, பிரதேசங்களை கடந்த இயற்கையின் ஓசை. தமிழிசையை வளர்க்கவேண்டும் என்பது மற்ற இசைகளை புறக்கணிக்கும் நோக்கத்தில் அல்ல. தன் வீட்டுப் பிள்ளையை வளர்க்கவேண்டும் என்ற அக்கறையை அடுத்தவீட்டுப் பிள்ளைகளை உதைக்கவேண்டும் என்று பொருள் கொள்வதில்லை அல்லவா?!!

      • தங்களது கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறுவது உண்மைதான். கர்நாடக இசை என்பதே தமிழிசை தான். ஆனால் இந்தப் பார்ப்பன வஞ்சகர்கள் எந்த மொழி இசையைத் திருடினார்களோ அந்த மொழியில் பாடினால் தீட்டு என்று திமிர்த்தனமாக கூறுகிறர்கள். அப்படி அவர்கள் கூறுவதற்கு அவர்களது திமிர் மட்டும் காரணம் அல்ல. தமிழர்கள் என்று கூறிக்கொண்டு இசை என்றால் அது கர்நாடக இசை தான் என்று கூறும் பார்ப்பன அடிவருடிகளும்தான் அதற்குக் காரணம். அந்தத் திமிர்தான் தில்லையில் தமிழை உள்ளே விட மறுத்தது.

        இந்தப் பார்ப்பன அடிவருடிகளைப் பற்றி பாவேந்தர் ஒரு பாடல் எழுதினார்.

        “நாயும் வயிற்றை வளர்க்கும்;
        வாய்ச்சோற்றைப் பெரிதென்று நாடலாமோ?

        போய் உங்கள் செந்தமிழின்
        பெருமையினைப் புதைப்பீரோ?

        எம்தமிழை அறிவீரோ??
        தமிழறிவும் உள்ளதுவோ
        உங்கட் கெல்லாம் ?

        வெளியினில் சொல்வதெனில்
        உம்நிலை வெட்கக்கேடன்றோ ? நீவீர்

        கிளி போலச் சொல்வதன்றித்
        தமிழ் நூல்கள் ஆராய்ந்து
        கிழித்திட்டீரோ.”

        • கோவிலில் தமிழிசையில் பஜனை பாடினால் பக்தி வளரும் அளவுக்கு தமிழிசை வளருமா? மார்கழி கச்சேரிகள், தியாகராஜர் ஆராதனை அது, இது என்று கர்நாடக இசையை பார்ப்பனர்கள் வளர்க்கும் போது, தமிழிசையை திருமணவிழாக்களில் கூட பாடி வளர்க்கும் எண்ணம் இல்லாமல், பார்ப்பான் பண்றானே என்று இசையைக் கூட வெறுக்கும் போக்கை கொண்டிருப்பது மட்டும் தமிழிசையை வளர்க்க உதவாது.

          • சிந்திக்க வைக்கும் கருத்து. இதுகுறித்து மேன்மேலும் பல தகவல்களை சேகரிக்க வேண்டும். நன்றி அம்பி.

            • நன்றி பொன்ராஜ். முனைப்புள்ளவர்கள் முயன்றால் முடியாதது இல்லை..!!!

  12. I really welcome this article. Thought provoking. Well analysed. Presents multi dimensional view of a single issue. Very much useful for introspection of middle and upper classes whose activities influence the vast majority of our people.

  13. நான் March 19, 2012-ல் எழுதியது. வேறு ஒரு பதிவில்;

    “தனது ஐந்து வயது குழந்தைகளுடன் ஆபாசமான சினிமா, ஆபாசமான பாட்டுகள், இத்யாதி இத்யாதி…இவைகளைப் பார்ப்பார்கள், ரசிப்பார்கள். ஏன் ஐந்து வயது குழந்தையாக இருந்தாலும், ஆபாச நடனங்களை ஆபாச அங்க அசைவுகளுடன், தொலைக் காட்சியில் ஆட விடுவார்கள்; அதையும், மற்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் ரசிப்பார்கள். தினமும் நடக்கும் இது மாதிரி கூத்தை, பரந்த நமது தமிழ் சமுதாயத்தில் தடை செய்ய யாரும் முன் வர மாட்டார்கள். அதில், குழந்தைகள் கெடாதா என்று யாரும் கேட்கக் கூடாது. நம்புங்கள் கெடாது”

    அந்தப் பதிவின் தலைப்பு: சென்னை டீச்சரம்மா செய்தது சரியா என்பதில்லை என் கேள்வி; போலீஸ் செய்தது சரியா என்பதே? at

    http://www.nambalki.com/2012/03/blog-post.html

  14. I agree with most of these except the cast. There is no cast discrimination but strong discrimination against tamil kids.Its pretty obvious that Mallu & Telugu kids are judges pets and talented tamil kids get eliminated without even getting a chance to enter finals.They make a fool of viewers and spoil the innocence of children.

    I feel soo sorry for kids that come from USA and Canada to this show.I think they must be taking a break from school to participate . Thatz really stupid

  15. தலைவா.. தங்களது இந்த அருமையான பதிவு பல பின்னணிகளை (உண்மைகளை) புரியவைக்கிறது… இருந்தாலும் கொஞ்சம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தால்… இன்னும் அருமையாக இருக்கும்… படிப்பவரின் நேரத்தையும் கருத்தில்கொள்ளவும்… புரிதலுக்கு நன்றி…

  16. இது போன்ற பரிசுப்போட்டி நிகழ்ச்சிக்களை ஒரு சில வாரங்கள் தொடர்ந்து பார்த்த பிறகு படித்தால்தான் இந்த கட்டுரையின் அர்த்தம் புரியும்…

    பார்ப்பன இசை கோமாளிகளை சுரண்டவும், இந்த இசை கோமாளிகள் மூலம், கர்நாடக சங்கீதம் படித்தால் பார்ப்பன கோமாளி ஆகிவிடலாம் என துடிக்கும் சில சாப்ட்வேர் நடுத்தட்டு வர்க்க கோமாளிகளை சுரண்டவும் இந்த நிகழ்சிகள் நடத்தப்படுகிறது…

    இந்த நிகழ்சிகளில் இந்திய முழுதும் மற்றும் சிங்கப்பூர், கனடா ஏன் செவ்வாயில் வசிக்கும் வசதி பார்ட்டிகள் கூட கலந்துகொள்ள முடியும்… ஆனால் தென் மாவட்டங்களை அதிலும் கிராமங்களை சேர்ந்த ஒரு குழந்தை கூட கலந்து கொள்ள முடிவதில்லை… ஏனென்றால் கிரமாத்து குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்ய முடியாது…

    சொல்லி வைத்தார் போல ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கும்… இல்லாவிட்டால் இவர்களே கண்டு பிடித்து உருவாக்கிவிடுவார்கள்… சென்ற எபிசொட் வரை உயிரோடு இருந்த தகப்பன் இறந்த பின் அடுத்த எபிசோடுக்கு வந்த குழந்தை மற்றும் தாயின் முன்னாள் தகப்பன் போன எபிசோடில் பேசியதை போட்டு காண்பித்து அவர்களின் உணர்ச்சி செண்டிமெண்டுகளை பிழிந்து எடுத்து மக்களிடம் விற்பது ஒரு வகை உணர்ச்சி கற்பழிப்பு என்று தான் கூறவேண்டும்… இந்த நிகழ்சிகள் அனைத்தும் உணர்ச்சி விபச்சார நிகழ்சிகள் தான்…

    ஆனாலும் இந்த விஜய் டிவி எத்தனுக்கு எத்தன் ஜித்தன் நம்ம சன் டிவி… ஒரு எபிசோடுக்கு 2 கோடி கொடுத்து சிவகுமாரின் மகனை வைத்து “ஒரு கோடி” என்று அவன் சுரண்டல் நிகழ்ச்சி போட்டால், “வந்து முதல்ல ஒரு கோடியை வாங்கிக்கங்க (அப்புறம் திருப்பி கொடுத்துட்டு அழுதுக்கிட்டே போங்க)” என்று சில ஆயிரங்களில் ஒரு கேடியை வைத்து சுரண்டல் நிகழ்ச்சி போட்டு விட்டில் பூச்சி மக்களை விளக்கை நோக்கி இழுக்கிறான்…

    லாட்டரிகள் தடை செய்யப்பட்டுள்ள ஊரில், இது போன்ற சுரண்டல் லாட்டரிகளை தடை செய்ய கேட்பாரில்லை… ?

  17. vinavu the thought about the children and social welfare really gets an applause..but the drama mentioned about amma is not all that fair enough.she as a parent should be happy to see her child performing.there might be little recipe added in it..but its media and its a business too.we dont eat anything raw as it is..we have so much of recipe..and it differs on the taste..and by the way the guy santhosh is graduated in Bachelor of Science degree in Biotechnology and Bioinformatics and no parent is gonna spoil their childrens carrier for these programs..because every parent will be sure so much careful abt the future of thier child than anyoneelse

  18. இந்த விஜய் டிவி ஆளுங்கள மாதிரி அய்யோக்கிய பயலுவ இந்த உலகத்திலே எங்கேயும் இருக்க மாட்டானுவ. எல்லா போட்டியாளர்களுக்கும் ஒரு சோகம் இருக்கும். அதை பத்தி திரும்ப திரும்ப நோண்டி நோண்டி கேள்வி கேப்பானுங்க. அதுக்கு ஒரு சோக பின்னணி இசை வேற. போட்டியாளர்கள், பார்வையாளர்கள், ‘நீதிபதிகள்’ எல்லோருமே கதறி கதறி அழுவானுங்க. இந்த தமிழ் நாட்டு ஜனங்களை சென்டிமென்டால் அடிச்சா செருப்பால அடிச்சா மாதிரி பொத்துனு விழுவாய்ங்கன்னு இந்த டிவி நாய்ங்களுக்கு நல்லா தெரியும். இவங்க டி.ஆர்.பி நல்லா எகுரும், இவுங்களுக்கு நல்ல விளம்பரம் வரும், நிறைய காசு வரும். இதை டிவில பார்த்து கண்ணீர் வடிக்குற எல்லா ‘இளகிய’ மனசுக்காரங்களுக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன். அங்க டிவில அழுவுற எல்லோரும் அழுவரதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு: ஒண்ணு விளம்பரம், இன்னொன்று உங்க காசை புடுங்கறது. ஆனா எந்த காரணமும் இல்லாம உங்க காசையும், கண்ணீரையும், நேரத்தையும் இப்படி ஏன்டா வீணாக்கறீங்க? நீங்க கண்ணீர் விடறதுக்கு தினம் தினம் நம்ம சமுதாயத்துல ஆயிரம் காரணங்கள் இருக்கு. ஒரு தடவை நீங்க உங்க வண்டியில வெளிய போகும் பொது, தெரு ஓரத்துல உறங்கும் மனிதர்களை பாருங்கள். அவர்களுக்காக கொஞ்சம் கண்ணீர் விடுங்கள். முடிந்தால் உதவியும் செய்யுங்கள். இப்படி டிவி, சினிமாவ பாத்து அழுது தொலையாதீங்க.

  19. நண்பா அயோக்கியன் என்று பார்க்க போனால் நமது அரசாங்கம் கூட தான் ..அதிகம் வருமானம் வரும் மது கடைகள் நம்மளை வாங்க என்று அழைப்தில்லை ..மது கேடு என்று எழுத பட்ட போதும் அதற்கு மதிப்பு இல்லையே..பொழுது போக்கு நிகழ்ச்சிகள் வேண்டாம் என்றல் ஒதுக்கப்பட வேண்டியது அவர் அவர் விருப்பம்..அதை வைத்து விளம்பரம் தேடும் இந்த வாதங்கள் கூட அரசியல் தான்..இதை விமர்சனம் செய்யும் நேரத்தை நாம் வஞ்சிக்க பட்டவர்கள் என்று கூறும் நமது தமிழ் சகோதரர்கள் , சகோதிரிகள் ..யாராவுது ஒருத்தருக்கு உதவ என்ன பண்ணலாம் என்று யோசிக்கலாம் ..நான் என்னால் முடிந்த அளவில்..இரண்டு சகோதிர்களுக்கு பள்ளிப்பாடம் கற்க நிதிஉதவி செய்துள்ளேன் ..தமிழன் பாசம் இந்த இன்டர்நெட் தான் உள்ளது.நிஜத்தில் காண்பது மிக அரிது..நிஜத்தில் உதவும் தமிழனுக்கு கோபப்பட நேரம் இல்லை இங்கு ..நேரம் இருந்தால் நலிந்த சமுகத்தை முன்னேறற்ற யோசியுங்கள் .

    • நண்பரே நீங்கள் இரண்டு சகோதரிக்கு உதவியதற்கு வாழ்த்துக்கள். ஆனால் மற்றவர்கள் யாரும் அப்படி செய்வதில்லை என்று நீங்கள் எண்ணியதிற்கு எனது அனுதாபங்கள். இங்கே கோபப்படுபவர்கள் யாரும் நிஜத்தில் கோபப்படுவதில்லை என்றோ உதவுவது இல்லை என்றோ நீங்கள் நினைப்பது வேடிக்கையாக உள்ளது. நான் என்னென்ன செய்துள்ளேன் என்று பட்டியலிட விரும்பவில்லை. அதற்கான இடமும் இது இல்லை. வாதத்திற்கு வருவோம். எல்லாம் அவர் அவர் விருப்பம் என்ற வாதம் நியாயம் தான். ஆனால் மக்களின் அறியாமையை, பலவீனத்தை பயன்படுத்தி ஒரு தொலைக்காட்சி “சட்டப்படி” கொள்ளை அடிப்பதை பார்த்து கோவம் கொள்வதும் அவர் அவர் விருப்பம் தான். இப்படி அவர்கள் உணர்ச்சியை தூண்டி அதில் காசு பார்ப்பது தான் மிக பெரிய அரசியல். அரசாங்கத்தில் இருப்பவர்கள் நல்லவர்கள் என்று இங்கு யாரும் சொல்லவில்லையே. அவர்களும் அய்யோக்கியர்கள் தான். இதை போல் பல உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் தலைப்பை விட்டு வெளியே செல்ல வேண்டாம். இந்த தொலைக்காட்சி மக்களை சுரண்டுகிறார்களா இல்லையா என்பது தான் கேள்வி. நீங்கள் இல்லை என்று நினைத்தாலோ அல்லது இதை இணையதளத்தில் விவாதிப்பது வீண் என்று நினைத்தாலோ நாம் ஒன்றும் செய்வதிற்க்கில்லை.

  20. நண்பா உங்களுது வாழ்த்துகளுக்கு நன்றி .நான் மற்றவர்கள் உதவவில்லை என்று கூறவில்லை நண்பா, நிஜத்தில் அறியாமையை போக்க தலைமுறைனர் மிகவும் அரிது என்றுதான் கூறினேன்.
    இந்த உணர்ச்சி சுரண்டல் கண்டிப்பான உண்மை ..இல்லை என்று கூறவே இல்லை..இந்த சுரண்டல் எல்லா தொலைகட்சியுளும் உண்டு என்பதை மறந்துவிடீர்கள்,,எனது ஆதங்கம் அதுதான்..விஜய் டிவி மட்டும் இல்லை,கூடுதலான தமிழ் டிவி கள் அனைத்தும் இதைத்தான் செய்கிறது .

  21. சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்! நல்ல கட்டுரை & கருத்துக்கள். அவைகளில் சிந்திக்கவேண்டிய சில வரிகள் :

    //இங்கே பாருங்க, ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு” என்று நடுவர் சொன்னதும், அரங்கமே திரையில் பார்க்கிறது. அங்கு, வாசலுக்கு வெளியே ஸ்ட்ரெச்சரிலிருந்து ஒரு அம்மாவை இறக்குகிறார்கள். அவரால் நடக்க முடியவில்லை. அப்படியும் விடாமல், கைத்தாங்கலாக அழைத்து வருகிறார்கள். காமிரா போட்டியாளரிடம் திரும்புகிறது. அவரோ, இதைக் காணச் சகியாமல் திரும்பிக் கொள்கிறார். அழுகிறார். உருகுகிறார். அரங்கமே எழுந்து நிற்கிறது. இதற்கேற்ப, ஒரு சோகப் பின்னணி இசை வாசிக்கப்படுகின்றது. பலரும் கைக்கொடுத்து தூக்கிவிட, அந்த அம்மா சிரமப்பட்டு படியேறுகிறார். இதைக் காண்பவர்கள், இன்னும் நெகிழ்ந்து விடுகிறார்கள். வாய் பொத்தி, ”அய்யோ” என்று பதறுகிறார்கள். கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள்
    பார்ப்பவர்களின் உணர்ச்சிகளை கட்டிப்போட வேண்டும் என்ற உந்துதலில் நிகழ்ச்சிகளை செயற்கையாக இட்டுக்கட்டி நடத்துகின்றன //

    //ஏர்டெல் சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் பல சுற்றுகளுண்டு. ஒவ்வொரு சுற்றிலும் சிலரைக் கழித்துக்கட்டி கொண்டே வந்து, இறுதியில் மூன்று பேரை நிறுத்துவார்கள். அதுவும் கூட இயல்பானதாக இல்லாமல், நிகழ்ச்சியின் காரசாரத்தைக் கூட்ட வேண்டி நடத்தப்பட்ட நாடகமாகவே இருக்கும். மேலும், இந்தச் சுற்றுகளில் தோல்வியடைந்தவர்கள், இறுதியாக வைல்ட் கார்ட் சுற்றில் போட்டியிடலாம். அதன்பிறகு, செல்போன்கள் மூலம் வாக்கெடுப்பு, இணையம் மூலம் வாக்கெடுப்பு என்று அவர்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. ஆனால், தேர்வு முறைகள் என்று சொல்லப்பட்டாலும், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது விஜய் டிவிக்கே வெளிச்சம். கடந்த முறை சாய் சரண் என்பவரை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தார்கள். அந்த சாய் சரண் தொடர்ந்து மூன்று முறை சூப்பர் சிங்கரில் விடாமல் கலந்துக் கொண்டார்.//

    //இது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று சொல்லிக் கொண்டாலும் பெரும்பாலான தமிழக மக்கள் இன்னும் இதன் உள்ளே வரவில்லை. அவர்களெல்லாம் ஆரம்ப கட்டத்திலேயே கழித்துக் கட்டப்படுகிறார்கள். பெரும்பான்மை மக்கள் இங்கும் மேடைக்கே வர முடியாது. அப்படியே உள்ளே வரும் ஒன்றிரண்டு பேரும், காமெடிக்காக அல்லது ஒரு உப்புக்கு சப்பாணியாகப் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

    போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே வருவது அதிகமும் பார்ப்பன – ஆதிக்க சாதிக் குழந்தைகள்தான். அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் பார்ப்பன மாமிகளும், மாமாக்களும்தான். இந்தப் போட்டிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கு உள்ளும் பொதிந்திருக்கும் திறமைகளை மிளிர வைப்பதல்ல. யாரால், குழந்தைகளுக்காக செலவழிக்க முடியுமோ, அவர்களது நடை, உடை , பாவனைகளுக்காக மெனக்கெட முடியுமோ அவர்களது குழந்தைகள்தான் உள்ளே வருகிறார்கள். போட்டியாளர்களாகிறார்கள்/ -கட்டுரையாளர் //

    “//தனது ஐந்து வயது குழந்தைகளுடன் ஆபாசமான சினிமா, ஆபாசமான பாட்டுகள், இத்யாதி இத்யாதி…இவைகளைப் பார்ப்பார்கள், ரசிப்பார்கள். ஏன் ஐந்து வயது குழந்தையாக இருந்தாலும், ஆபாச நடனங்களை ஆபாச அங்க அசைவுகளுடன், தொலைக் காட்சியில் ஆட விடுவார்கள்; அதையும், மற்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் ரசிப்பார்கள். தினமும் நடக்கும் இது மாதிரி கூத்தை, பரந்த நமது தமிழ் சமுதாயத்தில் தடை செய்ய யாரும் முன் வர மாட்டார்கள். அதில், குழந்தைகள் கெடாதா என்று யாரும் கேட்கக் கூடாது. நம்புங்கள் கெடாது”- நம்பள்கி//

    // பார்ப்பன இசை கோமாளிகளை சுரண்டவும், இந்த இசை கோமாளிகள் மூலம், கர்நாடக சங்கீதம் படித்தால் பார்ப்பன கோமாளி ஆகிவிடலாம் என துடிக்கும் சில சாப்ட்வேர் நடுத்தட்டு வர்க்க கோமாளிகளை சுரண்டவும் இந்த நிகழ்சிகள் நடத்தப்படுகிறது… இந்த நிகழ்சிகளில் இந்திய முழுதும் மற்றும் சிங்கப்பூர், கனடா ஏன் செவ்வாயில் வசிக்கும் வசதி பார்ட்டிகள் கூட கலந்துகொள்ள முடியும்… ஆனால் தென் மாவட்டங்களை அதிலும் கிராமங்களை சேர்ந்த ஒரு குழந்தை கூட கலந்து கொள்ள முடிவதில்லை… ஏனென்றால் கிரமாத்து குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்ய முடியாது… சொல்லி வைத்தார் போல ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கும்… இல்லாவிட்டால் இவர்களே கண்டு பிடித்து உருவாக்கிவிடுவார்கள்… சென்ற எபிசொட் வரை உயிரோடு இருந்த தகப்பன் இறந்த பின் அடுத்த எபிசோடுக்கு வந்த குழந்தை மற்றும் தாயின் முன்னாள் தகப்பன் போன எபிசோடில் பேசியதை போட்டு காண்பித்து அவர்களின் உணர்ச்சி செண்டிமெண்டுகளை பிழிந்து எடுத்து மக்களிடம் விற்பது ஒரு வகை உணர்ச்சி கற்பழிப்பு என்று தான் கூறவேண்டும்… இந்த நிகழ்சிகள் அனைத்தும் உணர்ச்சி விபச்சார நிகழ்சிகள் தான்…-manithan //

    //முனியாண்டிகளும் முத்தம்மாக்களும் சின்னத் திரையில் பார்த்து காலத்தை ஓட்ட வேண்டியதுதான் பாக்கி.- மாசிலா //

    • // if you have watched the past episodes, you would have came across the slang voluntarily used by the contestants to show their caste.
    and when we speak about rabies we cannot avoid the word DOG.- coimthur_thambi //

    // சரியானக் கோணத்தில் பார்க்கப்பட்டு எழுதப்பட்ட பதிவு. இன்றைய வணிக உலகம் எல்லாவற்றையும் காசாக்குகிறது என்பதைப் பதிவு வெளிப்படுத்துகிறது. மேலும் குழந்தை உள்ளத்தை மாய உலகத்திற்கு அடிமைப்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறுவது அவசியமானது. – வாகை //

  22. இங்காவது தமிழ்ப் பிள்ளைகளை- அரவணைக்கும்/ பாலூட்டும் தமிழ் தாய்மார்கள்
    கிடைப்பார்களா???

    //”மதுரையில் சர்வதேச தரத்தில் திரைப்பட பயிற்சிக் கழகம்: துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தகவல்.”//

    தமிழர்களுக்கு என்று தனி அமைப்புகள், தமிழ்த் திரைப்பட துறையில் மட்டும் இல்லை”:திரைப்பட இயக்குநர்கள் .; தெலுங்கருக்கு – நைனா, அம்மா; மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா; கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி; தமிழருக்கு – பொது அப்பா, அம்மா; என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாந்ததைச் சொல்லுகிறோம்.; ஹி ஹி..ஹி . இப்படியாகத்தானே எல்லா துறைகளிலும், தொலைக்காட்சியிலும், தமிழ்த்திரையுலகிலும் தமிழர்களின் மனதை கொள்ளை கொண்டு அருஞ் சேவை புரிந்து வருகிறோம்.
    எல்லாம் அவன் செயல்.வேறொன்றும் அறியோம் – பராபரமே!!!

    Byகடலூர் சித்தன்.ஆர்
    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest+News&artid=596747&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%

  23. ரத்தம் கொதிதிர்கிறது எத்தனையோ தடவை இத மாதரி நிகழ்சிகளை பார்க்கும் போது. மனிதனின் உணர்ச்சியை இலக்காக வைத்து கொள்ளை அடிக்கப்படும் ரதக்காட்டேரிகள் இவர்கள். அவர்கள் ஆடும் ஆட்டமும் , பாடும் பாடலும் முழுக்க முழுக்க பிஞ்சியிலே பழுத்தது போல தோற்றத்தை ஏற்படுத்துகிறன. மானாட மயிலாட (மார்பாட) என்னும் ஏகத்திற்கும் பாலியல் குற்றம் செய்ய தள்ளும் நிகழ்சிகளை தடை செய்ய வேண்டும். பணத்திற்காக ஏதும் செய்யும் குடும்பம் இருக்கும் வரை இந்த சமூகம் சரியான பாதைக்கு திரும்பாது. விபச்சாரம் செய்ய பெண்ணை அனுப்புவதும் அடுத்தவர்கள் முன் அரைகுறையாக ஆடுவதும் (கலை என்னும் பேரில்) ஒன்றுதான். பாலியல் குற்றம் செய்பவனுக்கு மரண தண்டனை என்றால் செய்ய தூண்டியவளுக்கு??????

  24. பள்ளி கல்லூரிகளில் என்ன முறை பயன்படுத்த படுகிரோதோ அதே முறை தான் இங்கேயும். அடிப்படை கல்ல்வியல் கலாச்சாரம் மாரதவகையில் பெரிய மாற்றத்தை சமுதாயத்தில் காண முடியாது

  25. […] சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும… குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் பாடுகிறார்கள். முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். கண்ணடிக்கிறார்கள். பெற்றோர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “குரல்ல பீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். […]

  26. “முதலாளித்துவ சமூகத்தில், பண்டங்களை சந்தைப்படுத்துவதற்கே ஊடகங்கள் தேவை. சந்தையில் பலியிட தங்கள் குழந்தைகள் பண்டங்களா என்பதை பெற்றோர்கள் சிந்திக்கட்டும்.”

  27. குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.

  28. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் உணர்ச்சி பெருக்கான காட்சிகளே திட்டமிடப்பட்ட நாடகத் தன்மை வாய்ந்ததத்தான் காண்பிக்கப்படுகிறது. சிறப்பான கட்டுரை. சினிமா வாய்ப்பு எனும் பெயரில் எண்ணற்ற இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் அயோக்கிய கும்பலுக்கும் இவர்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை, என்ன இவர்கள் அரங்கம் அமைத்து ஏமாற்றுகிறார்கள். அதிலும் நீங்கள் சுட்டிக்காட்டி இருப்பதை போல சூப்பர் டூப்பர் சிங்கரில் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தேர்வாகும் அனைவரும் அவாக்களாக மட்டுமே இருந்தும் இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் அனைவராலும் கவரப்பட்டிருப்பது முரண்பாடு. பலமுறை இந்த நிகழ்ச்சியை பார்க்க அமர்ந்தும் , இவர்கள் காட்டும் பேரரசுவை மிஞ்சும் உணர்ச்சி பெருக்கான காட்சிகளால் டென்ஷனாகி வெளியே கிளம்பிவிடுவேன். சூப்பர் சிங்கர் ஜூனியர் – மிக நீண்ட குடுமி வளர்த்தவருக்கான தேடல்

  29. ஒருபுறம் பாலியல் வன்முறையை தூண்டும் நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, மறுபுறம் “நீயா நானா” போன்ற நாட்டாமை நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சி நடத்துகிறது. இதில் மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால், ஒருசிலரை ஒப்பனை செய்து மீண்டும் மீண்டும் கலந்துகொள்ள செய்வது.

    இந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி முழுவதும் அவாக்களின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. இதில் குறிப்பிட்ட சுற்றுக்கு மேல் நீங்கள் வரவேண்டும் எனில் நீங்கள் குறைந்தபட்ச முகவெட்டுடணும் , வயது குறைவாகவும் இருக்கவேண்டும். அப்படியில்லையெனில் நீங்கள் அவாவாவது இருக்கவேண்டும்.

Leave a Reply to raam murali பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க