privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவாடகைதாரர் விவரம் சேகரிக்கும் போலீசுக்கு முதல் கட்ட ஆப்பு - HRPC வழக்கில் தீர்ப்பு !!

வாடகைதாரர் விவரம் சேகரிக்கும் போலீசுக்கு முதல் கட்ட ஆப்பு – HRPC வழக்கில் தீர்ப்பு !!

-

வாடகைதாரர்களின் தகவல்களை காவல் துறையினருக்கு  தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

சென்னை மாநகரத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளையும் அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய “என்கவுன்ட்டர்“ நாடகத்தில் வெளிமாநிலத்தவர்களை கொலைசெய்ததையும் முகாந்திரமாக வைத்து சென்னைக் காவல் துறை ஆணையாளர்  கடந்த 03.03.2012 அன்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் சென்னை மாநகரத்தில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருப்பதாகவும் அவர்களால் சமூக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தடுக்கும் தேவையைக் கருதி அனைத்து வீட்டு உரிமையாளர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் காவல் துறை கொடுக்கும் விண்ணப்பத்தில் வாடகை தாரர்கள் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அளிக்காத பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ்  (இப்பிரிவின் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்க முடியும்) குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டிருந்தார்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் மக்களின் தகவல்களை தரவாக்கும் பணியினை மேற்கொண்டு அதன் மூலமாக பற்றிப் பரவும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நீண்டகால அரசின் தேவையை நிவர்த்தி செய்யவே இவ்வுத்தரவு உண்மையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை ஆணையாளரின் மேற்கூறிய உத்திரவினை பல்வேறு இடங்களில் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து காவல் துறையினர் விவரங்களைச் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த தென் சென்னை உதவி ஆணையாளர், தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட சுமார் 22,000 வீட்டு உரிமையாளர்கள் வாடகைதரார்களின் தகவல்களை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். காவல் துறை தயாரித்துள்ள விண்ணப்பத்தில் வாடகைதாரரின் புகைப்படம், அவரது நிரந்தர முகவரி, அவர் ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த முகவரி, செல் பேசி எண், வேலை செய்யும் இடம் மற்றும் அதன் முகவரி மற்றும் தன்னுடன் தங்கியிருப்பவர்களின் விவரம் மற்றும் அவர்களுடனான உறவு ஆகியவற்றை நிரப்பி அனைவருடைய புகைப்பட அடையாள அட்டையின் நகல்களை இணைத்து வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் கையொப்பம் இடவேண்டும்.

காவல் துறை மேற்கூறிய உத்திரவினை சில மனித  உரிமை ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும் எதிர்த்து குரல் எழுப்பியிருந்தாலும், இதற்கெதிரான வலுவான எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்படாத காரணத்தால் காவல் துறையினர் இதனை தீவிரமான அமல்படுத்த முனைந்தனர்.  மேலும் இதே போன்று கல்வி நிறுவனங்கள் மூலமாக மாணவர்களின் தகவல்களைத் தரவு செய்யவும், வெளிமாநில தொழிலாளர்களின் தகவல்களைத் தரவு செய்யவும் காவல் துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கூறிய காவல் துறை ஆணையாளரின் உத்திரவினை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக் கிளை, எமது செயலாளர் வழக்குரைஞர் மில்ட்டன் பெயரில் பொது நல வழக்கு ஒன்றினைச்  சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. நேற்று அவ்வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி ஆயத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. அதே போன்று அண்ணா நகரைச் சேர்ந்த மருத்துவர் சிறிதர் என்பரும் பொது நல வழக்கு தொடுத்திருந்தார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் புருஷோத்தமன் அவர்கள் காவல் துறை ஆணையாளரின் உத்திரவானது பொது மக்களின் தகவல்களை சட்ட அங்கீகாரம் இல்லாமல் காவல் துறை பெற்று பராமரிக்க இயலாது என்கிற நிலையில், பொது அமைதிக்காக உடனடி ஆபத்துக்களைத் தடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை, காவல் துறை ஆணையாளர் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார் எனவும், இவ்வாரான நடவடிக்கை வாடகைதாரர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பறிப்பதாகவும் அவர்களின் தனிமைச் சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்குவதாகவும், உடைமையாளர் மற்றும் உடைமையற்றோரைப் பாகுபடுத்தும் நிலையை உருவாக்குவதாகவும், வாடகைதாரர்களையும், வெளிமாநிலத்தவரையம் கிரிமினல்களாக சித்தரிப்பதாகவும், வீட்டு உரிமையாளர்களை வாடகைதார்களைப் பற்றிய இன்ஃபார்மர்களாக மாற்றும் கயமைத்தனமான நடவடிக்கை இது என்றும் வாதிட்டார்.

மேலும் மே 1-ம் தேதிக்குள் வாடகைதாரர்களின் தகவல்களைத் தராமல் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது ஏற்க இயலாத ஒன்று எனவும் வலியுறுத்தினார். மருத்துவர் சிறிதருக்கு ஆஜரான வழக்குரைஞர் சத்தியசந்திரன் அவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையில் இவ்வுத்திரவு மூலம் பகைமைபாராட்டும் உணர்வை தூண்டும் அரசே தூண்டியுள்ளது என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் மும்பை, பெங்களுர் போன்ற மாநகரங்களில் இதே போன்று அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் சென்னை மாநகரத்தில் அமல்படுத்தியுள்ளதாகவும்  கூறினார்.

இறுதியில் தலைமை நீதிபதி ஆயம் தகவல்களைத் தராமல் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு மட்டும் இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. வழக்கானது அரசின் பதில் மனுவிற்காக இரு வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அரசு வழக்குரைஞர் கூறியது போலவே புது தில்லி, மும்பை மற்றும் பெங்களுர் போன்ற பெருநகரங்களில் அம்மாநகர காவல் துறையினர் தீவிரவாத அச்சுறுத்தலைக் காரணம் காட்டி இதே மாதிரியான உத்திரவைகளை பிறப்பித்து மக்களின் தகவல்களைத் திரட்ட முனைந்து வருகின்றனர். அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்;; இங்கோ கொள்ளையர் அச்சுறுத்தல்;; இவ்வாறான அச்சுறுத்தல் பீதிகளை மிகைப்படுத்தி, அரசு பயங்கரவாதமானது அனைத்து மக்கள் தகவல்களையும் தரவுபடுத்தும் பணியினை எளிமையாகச் செய்துவிடலாம் என்று முனைந்து வருகின்றது. இதற்காக அரசியலமைப்பு சட்ட உரிமைகள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றையெல்லாம் பறித்து, ஒட்டுமொத்த சமூகத்தையும் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர எத்தனிக்கிறது.

பொதுவாகவே, பொது நல வழக்கு என்பது ஒரு வகையில் அரசின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை சமூகத்தில் விவாதத்திற்கு கொண்டு வரும் ஓர் நடவடிக்கையாகவே இருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஜனநாயகமற்ற அரசின் பாசிச செயல்பாடுகளை மக்கள் போராட்டங்களின் மூலம்தான் முறியடிக்க இயலும். அதற்கு இவ்வுத்திரவு மக்களிடம் விவாதத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று கருதுகிறோம்.

மக்கள் போராட்டத்திற்காக எமது பிரச்சாரத்தையும் துவக்கவுள்ளோம்.

எங்களோடு அணி சேருங்கள்!

மக்கள் உரிமைகளைப் பறிக்கும் அரசின் கொடுங்கோன்மையை தடுத்திடுவோம்!

__________________________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

சென்னைக் கிளை.
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. வடமாநிலத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோர் எல்லாம் தீவிரவாதிகள் என முத்திரை குத்தும் ஜெயலலிதா அரசின் மனப்போக்கு அருவெறுக்கத்தக்கது..ஆட மாட்டாதவள் தெரு கோணல் என்றாளாம் அது போல!!!!

  2. ஆமா வட இந்தியர்கள் இங்கு வந்தேறி குற்ற எண்ணிக்கையை அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை!திராவிட அரசியலின் பலன் வட இந்தியர்கள் எண்ணிக்கை புற்றீசல் போல அதிகரித்ததே(ironical)!சென்னையில் என்கு பார்க்கினும் வட இந்தியர்களே!இது தமிழ்நாடா இல்லை சிக்கிமா என ஒரு டவுட்டு வராமல் இல்லை!இதை ஒரு கட்டுப்பாட்டில் வைக்க முயல்வதில் என்ன தவறு?

    • தமிழ்நாட்டில் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டோரில் பெரும்பான்மை தமிழகத்தை சார்ந்தவர்கள்தான். அதன்படி உங்கள் கவலை நம்மாளு இலட்சம் பேர் என்ன வேண்டுமானாலும் குற்றம் செய்யலாம், வட இந்தியவைச் சேர்ந்த ஒருவன் கூட குற்றம் செய்யக்கூடாது. மற்றபடி இப்போது வாடகைதாரர் முகவரி சேகரிப்பு வட இந்தியருக்கும் மட்டும் இல்லை, எல்லாருக்கும்தான்.

      • அதன்படி உங்கள் கவலை நம்மாளு இலட்சம் பேர் என்ன வேண்டுமானாலும் குற்றம் செய்யலாம், வட இந்தியவைச் சேர்ந்த ஒருவன் கூட குற்றம் செய்யக்கூடாது////
        .
        .
        அப்படி சொல்லவில்லை!இங்கு இருக்கும் தமிழனுக்கு முதலில் வாழ்வளிக்க வேண்டும்!அப்பால வந்தேரிகளை கவனிக்கலாம்!உங்க தேசிய பார்வை புல்லரிக்க வைக்குது!காங்கிரசில் சேரலாம் வினவு!

      • என்ன லாஜிக் இது, இதன் உண்மையான அவசியம் தெரியாமல் பேசுவது வேதனையான விசயம், இப்போ விழுப்புரத்தில யாராவது ஒரு குற்றச்செயல்ல ஈடுபட்டால், குற்றம் நடந்த உடன் க்டைத்த துப்பை வைத்து குற்றவாளியை காவல் துறையால் நெருங்க முடியும், ஆனால் வட இந்திய கொள்ளைக்காரர்கள் இங்கு படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வருகிறார்கள், ஒரு வீட்டில் 12 பேர் தங்குகிறார்கள், சென்னையில் ப்ல இடங்களில் வட இந்தியகள் அதிகம்,ஆனால் அவர்களைப்பற்றிய விபரம் இங்கு யாரிடமும் இல்லை…இதனால் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச்செல்வது எளிமையாகைவிடுகிறது..வீட்டு உரிமையாளருக்குக் கூட தன் வீட்டில் தன் வீட்டில் தங்கியிருப்பவர் முகமோ, அவர் எஙகு வேலை செய்கிறார், என்ன வேலை செய்கிறார் போன்ற விபரங்கள் தெரிவதில்லை..

        அந்த இடங்களில் குற்றச்செயல்கள் அதிகம் சில எடுத்துக்காட்டு…

        1. சில மாதஙகளுக்கு முன் வட இந்தியாவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட கள்ளநோட்டுகள் சிக்கியது, சோயிப் என்பவன் கைது செய்யப்பட்டான், அவன் பக்கிஸ்தானின் அச்சிடப்பட்டு கடத்தி வந்த கள்ளநோட்டு அது, அவன் சென்னைக்கு பலமுறை வந்துள்ளான், அவன் எங்கு எத்த்னை முறை தங்கியிருந்தான் போன்ற விபரங்கள் காவல் துறையிடம் இல்லை…
        2. திருப்பூர் அருகே தறிநெய்யும் வேலைக்கு திணக்கூலி தான் ஆனால் சம்பளம் 300 – 500, அஙகு சிலனாள் முன்பு தறி உரிமையாளரும், அவரது மனைவியும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு, பணம்நகை கொள்ளைஅடிக்கப்பட்டிருந்தது…அங்கு அதற்க்கு மெளதல்நாள் 5 வடனாட்டவர் அந்தத்தறியில் வேலை செய்த்ள்ளனர், அவர்களின் விபரம், முகவரி குறைந்த பட்சம் பேர் கூட அந்த தறி உரிமையாளர் குறிப்பெடுத்து வைக்கவில்லை..

        வினவு அண்ணா, வடைந்தியனோ, கிழ்க்கிந்தியனோ, தென்னிந்தியனோ தமிழகம் வந்து வேலை பார்த்தால் அவன் வேலை பார்க்கும் கம்பெனியிலும், தஙகியிருக்கும் வீட்டிகும் முழுத்தகவலும் தெரிந்திருக்க வேண்டும், யார் குற்றச் செயலில் ஈடுபட்டாலும் கண்டுப்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்…

        • வடமாநிலத்தவர் இங்கு வந்து முறையாக வேலை செய்தால் பதிவு செய்ய தொழிலாளர் சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால் ஒப்பந்த முறையில் அடிமாட்டு கூலிக்காக வேலைக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் பற்றி பதிவு செய்யப்படுவதில்லை.ஏனெனில் சட்டப்பூர்வமாக சில உரிமைகள் கொடுக்க கூடாது என்பதற்கு.( வெளிநாடுகளில் டூரிஸ்ட் விசாவில் வேலைக்கு செல்வது போன்று) எனவே நியாயமாக பேசினால் மேலே சொன்ன விசயங்களை பின்பற்றுவதில்லை.

          வீட்டு உரிமையாளரிடம் உண்மையான முகவரியை கொடுக்க நீங்கள் சொல்லும் குற்றவாளிகள் என்ன அப்பாவிகளா? ஒருவேளை வேட்டு உரிமையாளர் கொடுக்கும் விபரம் தவறானதாக இருந்த்தால் அவர் பொறுப்பாக முடியுமா?

          சந்தேகம் உள்ளவர்களை விசாரணை செய்ய காவல்துறையை தடுத்தது யார்?

          காவல்துறையில் உள்ள 30 மேற்பட்ட பிரிவுகளுக்கு என்னதான் வேலை?

          இந்த உத்தரவின் மூலம் வீட்டு உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறிக்காமல் இருந்தால் சரி?

    • இந்த இடம்பெயர்வதை பெரிதும் ஊக்கவிப்பது உங்கள் இந்திய அரசே! ஒரு தனியார் நிறுவனத்துடன் உங்கள் மத்திய அரசு “சிக்கில்டு லேபர்” பயிர்ச்சியை பெறும் அளவில் தமிழகத்தில்லும் மற்ற மாநிலங்களிலும் செய்து வருகிறது. அதை வெளிப்புரமாக பார்க்கும் பொழுது பெரிய சேவையாக தெரியும் ஆனால் அது அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் “ஸ்டேட் ஐடென்டீடியை” முற்றிலுமாக மாற்றிவிடும்.

      1. இதில் பயிர்ச்சி கொடுக்கபடும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீலே உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
      2. பெறும்பாலும் கிராமம் மற்றும் சின்ன நகரங்களில் இருக்கும் மக்களே சேர்க்கபடுகிறார்கள்.
      3. அப்படி பயிர்ச்சி கொடுக்கபடுபவர்கள் வறுமை கோட்டுக்கு கீலே உள்ளவர்களா என்று சில சான்றிதழ்கள் வாங்க படுகிறது.
      4. பின்பு குறிப்பிட்ட காலம் வரை பயிர்ச்சி வளங்கபடுகிறது. அதில் பெயருக்காக சிலர் தங்கள் மாநிலத்திலே வேலை வாய்ப்பு வாங்கி தரப்படுகிறது, பெரும்பாலும் பயிர்ச்சி பெற்றவர்கள் வேறு மாநிலங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது.
      5.அப்படி வேலை வாய்ப்பு பெற்று செல்பவர்கள் பெறும்பாலும் தத்தம் குடும்பங்களுடன் சென்று அங்கு இடம் பெயறுந்து விடுகிறார்கள்.

      இதனால் ஒரு கட்டத்தில் பிற மாநிலத்தார்களின் வருகை அதிகறிக்கும் அதன் விலைவாக ஒரு மாநிலத்தின் தனித்துவம் முற்றிலுமாக அழிந்துவிடும். அந்த மாநிலத்தின் கலாசாரம், மொழி மற்றும் பண்பாடு காலப் போக்கில் மறைந்து விடும். இது ஒருமை பட்ட இந்தியாவை ஏற்படுத்த செய்ய படும் நச்சு வேலை. அப்படி மாநிலங்களின் தனித்தன்மை மறையும் பொழுது ஒரே மொழி மற்றும் பண்பாடு உறுவாக்குவது கடினமாகாது.

      மக்களின் பொருளாதாரத்தை மேபம்படுத்துகிரோம் என்ற போர்வையில் அடித்தட்டு மக்களை அவர்கள் அறியாவன்னம் அவர்கள் சொந்த நிலங்களில் இருந்தும் ஊர்களில் இருந்தும் இடம் பெயர செய்துவிடுகிறது. முதலில் அந்த அந்த மாநிலத்தின் மக்கள் இப்படி இடம் பெயர்ந்து வரும் மக்களை ஏற்க மறுப்பார்கள் காலப் போக்கில் அது மறைந்து விடும்.

      உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் இக்காலகட்டத்தில் படித்து பட்டம் பெற்ற யாராயினும் பிலைப்புக்காக வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை பார்ப்பதை மறுப்பதில்லை. அப்படி வந்து நல்ல சம்பளத்துடனும் சமுதாயத்தில் ஒரு மேல் அல்லது நடுத்தர தட்டில் இருக்கும் வெளி மாநில மக்களை நாம் ஏற்றுக் கொண்டு அவர்களுடம் இனைந்து தான் வாழ்கிறோம்.

      சமிபத்தில் இந்து நாளேட்டில் காஸ்மீர் இளம் வயது ஆண்களையும், பெண்களையும்; பஞ்சாப், டெல்லி, அரியான போன்ற மாநிலங்களுக்கு அரசே வேலை வாய்ப்பு செய்து கொடுத்து அனுப்பி வைத்தது என்ற செய்தி நான் மேலே சொன்ன கருத்துகளை உறுதி செய்யும் விதமாக உள்ளது. அந்த சுட்டி உங்களுக்காக இனைத்துள்ளேன்.

      Tகெ Hஇன்டு : ணெந்ச் / ணடிஒனல் : Kஅஷ்மிரி யொஉத் வென்டுரெ ஒஉட் டொ ச்கபெ ட்கெஇர் டெச்டினிஎச்

      க்ட்ட்ப்://ந்ந்ந்.ட்கெகின்டு.சொம்/னெந்ச்/னடிஒனல்/அர்டிச்லெ2724236.எசெ

      அப்படி ஒரு மாநிலத்தின் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று உங்கள் அரசாங்கம் கறுதுமே ஆயின், அந்த உழைக்கும் மக்களுக்கு பயிர்ச்சிகளை வழங்கி அவர்கள் மாநிலத்திலே வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டியது தானே.

      மேலும் இடம் மாறும் மக்கள் இளம் வயதினர்களே! இந்த செயல் பாட்டிற்கு உங்களுக்கு அர்த்தம் புரியும் என்று நம்புகிறேன்.

      ஒன்று பிற மாநில மக்கள் இடம் பெயற்வதை சட்டபடி அனுமதிக்காமல் இருப்பதற்கு உங்கள் அரசாங்கத்துக்கு துனிச்சல் இருக்கிறதா? வேண்டுமானால் அதை செய்யுங்கள். அதை விட்டு விட்டு நடுத்தர மக்கள் மீது உங்கள் அரசாங்கத்தை வீரம் காட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள்.

      ஆம் தமிழ் நாட்டில் பிற மாநிலத்தார்களின் ஆதிக்கம் நல்லது இல்லை என்று நான் ஒப்பு கொள்கிறேன் அதற்கு தமிழ் நாட்டு தமிழனாக எதிர்ப்பினை செய்யுங்கள்.

  3. இங்குள்ள தமிழர்களின் பிழைப்பை வட மாநிலத்தவர்கள் தட்டி பிடிப்பது உண்மையா இல்லையா?ஹோட்டல்களில் மொதலாளிகளை கேளுங்கள் ஏன் வட மாநிலத்தவர்களை வேலைக்கு வைக்கிறீர்கள் என்று?அவர்கள் சொல்லும் பதில் கொஞ்ச சம்பலதுக்கே மாடு மாதிரி உழைப்பதால்!ஆக இவர்கள் மொதலளிகளுக்கு உதவியாக இருப்பதை தடுக்க வினவு என்ன செய்தது?குறைந்த பட்ச சம்பளம் என்று ஒன்று இரோக்கே!அது இவர்களை பொறுத்தவரையில் இல்லை அதனால் தமிழர்களுக்கு வேளை கொடுக்காமல் இவர்களை எடுத்துகொல்கின்றனர்!திராவிட அரசியல் குறித்து வாய் கிழிய பேசும் களின்ஜர் அரசே பீகாரில் இருந்து கொத்தடிமைகளை இருக்குமதி செய்தது சட்ட சபை கட்ட!அவர்கள் திரும்பி பீகார் போகவில்லை!எனில் அவர்கள் எங்கே?இதை கண்காணிப்பது தவறா?

      • அய்யா அடிமாட்டு ஊதியத்துக்கு வேலை பார்க்கும் வட இந்தியர்களின் தொழிலாள உரிமை பற்றி வினவு போராட்டம் நடத்தவில்லையா?ஏன்?

        • ராசா, ரவி, காத்தவராயன், ராஜன்,

          இப்படி ஒரே ஆள் வட இந்திய ஏழை மக்களை எதிர்த்து பல முனைத்தாக்குதல் நடத்துவது சரியா? ‘தமிழனின்’ வீரம் இதுதானா?

          • கனவு, மெய்கான், நரன்
            இவர்களையெல்லாம் விட்டுவிட்டீர்களே வினவு

            —–

            இந்தாளே ஒரு ஆர்.எஸ்.எஸ் அல்லக்கை, பல பேருல வந்து இவரே பின்னூட்டம் போட்டு, இவருக்கு இவரே பதில் போட்டுக்குற காமெடி பீசு, இந்தாளை மதிச்சு இங்க பலபேரு விவாதிக்கிறத்தில்லை, ஆனா உங்களுக்கு நல்ல மனசு

            • ஆர் எஸ் எஸ் எப்போ தமிழனுக்கு ஆதரவா பேச ஆரம்பித்தது?சொல்லவே இல்ல!நீ இப்போ சொன்னதுதான் காமெடி பீசு
              *
              \
              *
              இவரே பின்னூட்டம் போட்டு, இவருக்கு இவரே பதில் போட்டுக்குற///…
              .
              .
              எங்க காமி பாப்போம்?

            • எதிர்கருத்து சொல்பவர்கலேல்லாம் ஆர் எஸ் எஸ் ,ஒரே ஆள் ,இந்துத்துவா என்று கருதும் உங்கள் மன நிலையை எண்ணி வருந்துகிறேன்!அப்பால எனக்கு வேளை இருக்கு!வெறும் கொடி பிடிப்பது எனது வேலை இல்லை!மூணு வேளை பசிக்குதே!வேலை செய்ய வேண்டாமா?அதனால் குட பை!

    • வடமாநிலத்தவர் இங்கு வந்து முறையாக வேலை செய்தால் பதிவு செய்ய தொழிலாளர் சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால் ஒப்பந்த முறையில் அடிமாட்டு கூலிக்காக வேலைக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் பற்றி பதிவு செய்யப்படுவதில்லை.ஏனெனில் சட்டப்பூர்வமாக சில உரிமைகள் கொடுக்க கூடாது என்பதற்கு.( வெளிநாடுகளில் டூரிஸ்ட் விசாவில் வேலைக்கு செல்வது போன்று) எனவே நியாயமாக பேசினால் மேலே சொன்ன விசயங்களை பின்பற்றுவதில்லை.

      வீட்டு உரிமையாளரிடம் உண்மையான முகவரியை கொடுக்க நீங்கள் சொல்லும் குற்றவாளிகள் என்ன அப்பாவிகளா? ஒருவேளை வேட்டு உரிமையாளர் கொடுக்கும் விபரம் தவறானதாக இருந்த்தால் அவர் பொறுப்பாக முடியுமா?

      சந்தேகம் உள்ளவர்களை விசாரணை செய்ய காவல்துறையை தடுத்தது யார்?

      காவல்துறையில் உள்ள 30 மேற்பட்ட பிரிவுகளுக்கு என்னதான் வேலை?

      பீகாரிலிருந்து பெயர் முகவரிகூட தெரியாமல் ஆட்களை அழைத்து வந்த அதிகாரிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி இது.

  4. ஆகா வினவு பேசுகிறார் தேசியம்!வாரீர் காணீர் பார்த்து மகுழுவீர்!
    அப்படியே பக்கத்து மாநிலத்தவர்கள் தண்ணி உட மாற்றாங்க!அதுக்கு உங்க தேசிய டவுசர் மாட்டினால் ஏதேனும் பலன் உண்டா என தயவு கூர்ந்து சொல்லவும்!

    • //ஆகா வினவு பேசுகிறார் தேசியம்!வாரீர் காணீர் பார்த்து மகுழுவீர்!
      அப்படியே பக்கத்து மாநிலத்தவர்கள் தண்ணி உட மாற்றாங்க!அதுக்கு உங்க தேசிய டவுசர் மாட்டினால் ஏதேனும் பலன் உண்டா என தயவு கூர்ந்து சொல்லவும்!//

      தினமல மாதிரி படிக்காமல் தெளிவாய் படித்து பின்னூட்டம் போடவும்.

  5. பார்ரா! இவர்கள் திரைகடலோடியும் திரவியம் தேடுவார்களாம் ஆனால் அடுத்தவன் தேடினால் ஒத்துக்கமாட்டார்களாம். நல்லா இருக்கே நாயம்.

    பால்தாக்கரேக்கும் இவர்களுக்கும் ஏதேனும் வேறுபாடுகள் இருக்கிறதா!

    • பக்கத்து மாநிலத்தவர்கள் தண்ணி உட மாற்றாங்க!உங்க தேசிய டவுசர் மாட்டினால் ஏதேனும் பலன் உண்டா என தயவு கூர்ந்து சொல்லவும்!

      • வர்ற எம்பி தேர்தல்ல எவனுக்கு ஓட்டுப் போடப் போறீங்களோ அவன் கிட்ட கேளுங்க.

  6. இதோடு சேர்த்து வீட்டுக்கு எவ்வளவு வாடகையாக வசூளிக்கிரீர்கள் என்ற தகவலையும் பெற்று, தொகை அரசு நிர்ணயித்ததை விட அதிகமாக இருந்தால்(இருக்கும்), அதற்குரிய நடவடிக்கை எடுக்கப் படுமேயானால், இதுவும் வரவேற்க்கத்தக்கதே!!!!!

  7. அவர்களாகவா வருகிறார்கள்… நம்மாளுங்கதான் சம்பளம் குறைவா கொடுத்து வேலை பார்ப்பதற்காக தங்களுடன் வைத்திருக்கிறார்கள்… இது போன்றவர்களை மட்டும் கணக்கெடுப்பு நடத்தினால் பரவாயில்லை. அதற்காக ஒட்டு மொத்த வீட்டு வாடகைக்கு குடியிருப்பவர்களையும் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று சொன்னால் எப்படி? வயிற்று வலி என்றால் வயிற்றை ஸ்கேன் செய்து பார்ப்பதை விட்டுவிட்டு, ஒட்டு மொத்த உடம்பையும் ஸ்கேன் செய்வது போல் இருக்கிறது இவர்களுடைய வேலை….

  8. நன்னா சொன்னேள் போங்கோ! நாங்க வட நாட்டில் இருந்து இங்கு பிழைக்க வரோமோல்யோ?இதை தடுக்கா இவா யாரு?எங்களிடம் வட இந்திய மத்திய அரசு இருக்கு!அதை வைத்து எந்த தடையையும் உடைபோம்! நீங்க என்கலவால சப்போர்ட் பண்றது நன்னா இருக்கு!நன்றிடா அம்பி!
    இப்படி நாலு பேர் தேஷியம் பேஷ்ராதாலதான் நாடு நன்னா இருக்கு

  9. நாம இங்கிருந்து வட நாட்டுக்கு போனா நம்மளை மதராசின்னு கேவலபடுத்துறான்!ஆனா அவனுங்க இங்க வந்து பிழைக்க நாம் போராட வேண்டியிருக்கு!நல்லா இருக்கு தமிழன் நிலை!வாழ்க தேசியம்!வெங்காயம்!

    • மிஸ்டர் தடி, அது தேசியம் இல்லை. சர்வ தேசியம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர்ந்த தத்துவம் கொடுத்த செந்தமிழ் நாட்டினில் ஏனிந்த சின்ன புத்தி. மற்றபடி தேசியத்தில் (இந்திய தேசியத்தில்) நம்பிக்கை இழந்து வருடங்கள் பல ஆகி விட்டன.

  10. ஆளுறவன் எல்லாம் நல்லவன் ஆளப்படுகிறவன் எல்லாம் அடிமைகள்.சொந்த வீட்டுக்காரன் எல்லாம் யோக்கியன், வாடகைக்கு குடியிருப்பவன் எல்லாம் அயோக்கியர்கள். நிரந்தர முகவரி என்று காவல் துறை எதை எதிர்ப்பார்க்கிறது என்று தெரியவில்லை.நிரந்தர முகவரி என்ற ஒன்று இல்லாமல் இருக்கும் மக்கள் தொகை எவ்வளவு என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.வாடகை வீட்டில் பிறந்து வளர்ந்து திருமணமாகி தன் மனைவியோடு வேரு ஒரு வாடகை வீட்டில் குடியேறினால் அந்த நபருக்கு எது நிரந்தர முகவரி?ஒரு காவல் நிலைய எல்லையில் இருந்து அதே காவல் நிலைய எல்லைக்கு வீடு மாறினால், அந்த நபர் மீண்டும் ஒரு தகவல் அறிக்கை கொடுக்க வேண்டும்.இன்னும் கூட விரிவாக பேசலாம்.தொடர்ந்து பேசுவோம் இந்தத் திறந்த வெளி கொட்டடி ஆணையைப் பற்றி…

  11. நல்ல வேளை. போலீசு, வாடகைதாரர்கள் மாசா மாசம் வந்து ஸ்டேஷனில் ‘கைரேகை’ பதிந்துவிட்டு போகவேண்டும் அப்படீன்னு சொல்லலை!! ஒருவேளை, அப்படி சொல்லியிருந்தா இந்தக் கட்டுரைக்கு எதிர்ப்பு சொல்பவர்களுக்கு சுருக்கென்று உரைத்திருக்குமோ?! அப்போ, கலிபோர்னியாவுல இந்திய மாணவர்களுக்கு போட்ட கால் விலங்கும் சரிதானா?

  12. சென்னைக்கு அருகில் மடிப்பாக்கம் அங்கே சில வெடமாநிலத்தவர் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர் அருகில் ஒரு பெண்மணி சற்றுவயதானவர். இவர்களின் உடை உருவம் இவைகளைப்பார்த்து அவர்களுக்கு உதவிசெய்து வந்தார் பின்னர் வீட்டுக்கு வரவைத்து உணவு கொடுக்க ஆரம்பித்தார் இந்த அம்மையாரின் தனிமை இவர்களைத்துண்டியது போலும் ஒருநாள் ஒரு பெண் உட்பட மூன்றுபேர் சேர்ந்து அநைஅம்மையாரின் கழுத்தை அறுத்து வீட்டில் இருந்ததை கொள்ளையடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள் அவர்கள் ஊருக்குச்இதற்குக்காரணம் என்ன
    இங்கே நடை பெருமு குறுறுங்களில் பெரும்பாலானவை மதல்முரைக் குற்வாளிகளால் செய்யப்படுவதால் காவல்துறையினரால் கண்டுபிடிக்கமுடியாமல் போவது வாடிக்கையாக இருக்கிறது இதவெல்லாம் இருக்கட்டும்
    மந்தை மந்தையாக வரும் வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் புகுந்தால் இது தமிழ் நாடாகவே இருக்குமா அல்லது மத்திப்பிரதேசம் பீகாராக இருக்குமா?
    தமிழ்நாட்டின் மக்கள் தொகை வந்தேரிகளால் உயர்ந்துவருவதை நாம் வரவேற்க முடியாது அவர்களின் படையெடுப்பு கட்டுப்படுத்தலுக்கு வினிவு வைத்திருக்கும் திட்டம் என்ன ஒரு மாநிலத்தில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கு மிகுதியாக இருப்பது ஆபத்து அல்லவா? போய் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குச்சென்று பாருங்குகள் இது தமிழ் நாடு தானா என்று சந்தேகம் நிச்சயமாக வரும்
    அடுத்து உழைப்புச்சுரண்டலுக்கு ஆதரவாக வினவு
    பேசுகிறதா?
    இதில் உழைப்புச் சுரண்டல், சமூக கலாச்சார பிறழ்வுகள் எல்லாம் சார்ந்த ஒரு விஷயத்தில் வினவு மேலோட்மாகப்பார்க்கிறது என்று நம்மால் தளிளிவிட முடியவில்லை உமது அகில இந்தியக் கருத்தியலினால் உருவான நிலைப்பாடு இது
    இந்து இந்தி இந்தியா இந்த மூன்றும் ஒன்றை ஒன்று இணைந்தது ஏதேனும் ஒன்றை நீங்கள் ஆதரிப்பதானால் கூட நீங்கள் மற்ற இரண்டையும் ஆதரிப்பதாகவே முடியும்
    இந்தியா என்பதே பார்ப்பன பனியா மேலாதிக்க அரசுதான்
    இந்த புரிதல் இருந்தால் மட்டுமே இங்கு உங்கள் கொள்கைகளை வென்றெடுக்க முடியும் அதில்லாமல் நீங்கள் என்ன முற்போக்கு பேசினாலும் அது விழலுக்கு இரைத்த நீர்தான்
    Reply

    Leave a Reply

    • அதாவது இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து வேறு ஒரு மாநிலத்திற்கு பிழைக்கப் போனால் அது வயிற்றுப் பிரச்சினை அல்ல, அகில இந்தியக் கருத்தியலினால் விளைவான நடவடிக்கை என்கிறீர்கள். இதன் பொருள் என்ன? ஏழை பீகாரி இந்திய தேசியக் கருத்தை ஏற்றுக் கொண்டதினாலேயே இப்படி இடம் பெயருகிறான் என்றால், தமிழன் இங்கிருந்து பெங்களூரு, கேரளா, மும்பை, ஆந்திரா, மலேசியா, வளைகுடா என்று பிழைக்கச் செல்கிறானே அதற்கு காரணம் என்ன? அவர்களெல்லாம் இந்திய தேசிய கருத்தியலை மனப்பாடம் செய்ததினால் வந்த விளைவா? உங்களை ‘ஆய்வை’ விரித்துச் சென்றால் துரதிர்ஷ்டவசமாக இத்தகைய அபரமான கண்டு பிடிப்புகள் வருகிறது.

    • முதலில் உங்களுடைய எதிரிகள் யாரென்று தீர்மானியுங்கள், மார்வாடி, பனியாவா, அல்லது சோத்துக்கே வக்கற்ற சாதாரண உழைக்கும் மக்களா?

  13. தமிழ்நாட்டில் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டோரில் பெரும்பான்மை தமிழகத்தை சார்ந்தவர்கள்தான். அதன்படி உங்கள் கவலை நம்மாளு இலட்சம் பேர் என்ன வேண்டுமானாலும் குற்றம் செய்யலாம், வட இந்தியவைச் சேர்ந்த ஒருவன் கூட குற்றம் செய்யக்கூடாது. மற்றபடி இப்போது வாடகைதாரர் முகவரி சேகரிப்பு வட இந்தியருக்கும் மட்டும் இல்லை, எல்லாருக்கும்தான்.
    இது என்ன மாதிரி பதில் ?
    இதனை சிக்கெடுப்பதாக இருந்தால்…… விகிதாச்சாரம் அல்லவா பேசவேண்டும்
    தமிழ் நாட்டில் பூர்விகத் தமிழர்கள் அதாவது தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தொகை,இவர்களால் செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளின் குற்ற விகிதாசாரம்
    பஞ்சம் பிழைக்க தமிழ் நாடட்டுக்குள நுழைந்த வந்தேரி வடநாட்டடவன் இவர்களின் தொகை இவர்களால் செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை தற்போதைய குற்ற விகிதாச்சாரம் இவைகளுக்கான இடைவெளி ஆகியவைகளை வைத்துப்பார்த்து ஆய்ந்து பேசுவது சரியாக இருக்கும் அதைவிட்டு என் வீட்டுக்கு வெள்ளைஅடித்தேன் என்று போகிறபோக்கில் பதில் செல்வது ஏன்? அட சிவப்பூ….. முற்போக்கே……….

    • நீங்கள் இந்த ஆய்வை செய்து விட்டுத்தான் வட இந்தியர்கள் குற்றவாளிகள் என்று பேசுகிறீர்களா? இல்லை எனில் நீங்கள் வாய் போன போக்கில் பேசுவதை ஆய்வுகளின்றி அப்படியே ஏற்கவேண்டும். மற்றவர் மறுத்தால் அவர்கள் மட்டும் ஆய்வு விவரங்கள் தரவேண்டும். இதிலும் நம்மாளு தத்துவம்தான் பல்லிளிக்கிறது! வாழ்க நம்மாளு!

  14. ஒரு மாநிலத்திலிருந்து ஒரு மாநிலம் என்று பேசுவதே அடிப்படைத்தவறு ஒரு தேசத்திலிருந்து ஒரு தேசம் என்று சொல்லவேண்டும் ஆம் அப்படி தேசம் என்ற வரையறை வைத்தால் பாஸ்போர்ட் விசா எல்லாம் வருகிறது அடுத்தது வருபவனின் அநைத்து தகவல்கறும் பெற்று அவனை உள்ளே விடுவதா வேண்டாமா என்ற முடிவெடுக்க முடியும்
    நாங்கள் இங்கு இருப்பவர்களைப்பற்றி பேசுகிறோம்.
    நீங்கள் தங்களுக்காகவோ மற்றவர்களுக்காகவோ ஓடிப்போனவர்களைப்பற்றிப் பேசுவது போல் பேசி இங்குள்ளோரின் வாழ்வாதாரத்தைகுலைப்பதற்கு வழிசெய்வதை வரவேற்கிறீர்கள்
    இயல்புக்குமீரிய வீக்கமாக இருந்துவரும் வெளிமாநிலத்தவர்களுக்கான வாழ்வாதார திட்டமிடுதலை எங்களுக்கு இருக்கிற சுமையோடு கூட்டவேண்டுமா?

  15. நீங்கள் இந்த ஆய்வை செய்து விட்டுத்தான் வட இந்தியர்கள் குற்றவாளிகள் என்று பேசுகிறீர்களா? இல்லை எனில் நீங்கள் வாய் போன போக்கில் பேசுவதை ஆய்வுகளின்றி அப்படியே ஏற்கவேண்டும். மற்றவர் மறுத்தால் அவர்கள் மட்டும் ஆய்வு விவரங்கள் தரவேண்டும். இதிலும் நம்மாளு தத்துவம்தான் பல்லிளிக்கிறது! வாழ்க நம்மாளு!

    ஆம் ஆம் ஆம்

  16. //ஏழை பீகாரி இந்திய தேசியக் கருத்தை ஏற்றுக் கொண்டதினாலேயே இப்படி இடம் பெயருகிறான் என்றால்,//

    என்னங்க வாதம் பிடித்துக்கொண்டதா பதிலில் தெளிவு இல்லையே ஏழை பீகாரி இந்திய தேசியக் கருத்தை ஏற்றுக் கொண்டடானா என்பதல்ல இந்கு நான் சொல்வது
    வினவு அந்த நிலையிலிருந்துதான் தவறான கருத்தியலை வெளியிடுகிறது என்கிறேன்
    ஒப்பீட்டளவில் தமிழகத்தைவிட வடமாநிலங்களில் குற்ற நடவடிக்கைகள் அதன் தாத்பர்யங்கள் அதிகமாகவும் வீச்சில் தனித்த இயல்பும் கொண்டிருப்பதை நீங்கள் பேசுகிற அகில இந்தியம் அறியும் இந்த நிலை தமிகத்திலும் வந்துவிடக் கூடாதே என்ற கவலையும் எங்களுக்குஇருக்கிறது

  17. வட இந்தியர்கள்தான் அதிகமாக குற்றநடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் அதற்கான காரணம் என்ன? என்பதையும் நாம் தேட வேண்டும். குறைந்தக் கூலி, அதிக நேர வேலை, அதிக வாடகையில் சிறிய வீடு போன்ற பல வகையில் துன்பத்திற்கு உள்ளாகும் ஒருவன் தான் இருக்கும் இடத்தை எவ்வாறு நேசிக்க முடியும்? ஒருவனை சக மனிதனாக மதிப்பதே அவனை நம்மை நேசிக்க வைக்க முடியும்…வாடகைதாரர்கள் குற்றவாளிகள் அதிலும் வட இந்திய வாடகைதாரர்கள் முழுமையான குற்றவாளிகள் என்று மக்களின் மனதில் நஞ்சை கலக்கும் போலீஸ் முயற்சிக்கு ஆளாகமல் இருப்பதே நல்ல மனிதனுக்கு அழகு

  18. நாங்கள் யாரும் வாடகைக்கு இருக்கும் வடமாநிலத்தவர் அனைவரும்முழுமையான ? குற்றவாளிகள் என்று சொல்லவில்லை நாங்கள் சொல்லும் கருத்தியலே வேறு இப்போது போல் வடமாநிலத்தவர்தமிழகத்துக்கு மூட்டைமுடிச்சுகளுடன் படை எடுத்துவரும் நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் நாடு தமிழ்நாடாக இருக்காது …..அதனால் அவர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட வேண்டும் இல்லாவிட்டால் அயல் மாநிலத்தவரால் தமிழ் நாட்டிலேயே தமிழன் அகதியாகின்ற நிலை வந்துவிடும்

  19. தவறு இனியன்.மிகவும் தவறு.வட இந்திய மாநிலங்களிருந்து பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்கள் இரு கரம் நீட்டி வரவேற்கப்பட வேண்டியவர்கள்.அவர்களுடைய மாநிலங்களில் நிலவும் கடுமையான வேலை இல்லா திண்டாட்டத்தாலும் வறுமையினாலும் கஞ்சிக்கு வழி தேடி வரும் அந்த சகோதரர்கள் தங்கள் குருதியையும் வியர்வையும் சிந்தி தமிழ் மண்ணை வளப்படுத்துகிறார்கள்.

    அவர்கள் தமிழ் உழைப்பாளர்கள் வேலை வாய்ப்பை தட்டிப் பறிக்கவில்லை.தமிழ் நாட்டில் தொழில் செய்யும் எந்த ஒரு தொழில் முனைவோரிடமும் ,விவசாயம் செய்யும் விவசாயிகளிடமும் பேசிப்பாருங்கள்.கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுவதை நீங்கள் உணர முடியும்.இதற்கான காரணங்கள் மைய மாநில அரசுகள் பின்பற்றி வரும் பொருளாதார கொள்கைகளில் புதைந்து கிடக்கின்றன.அவற்றை எதிர்த்து போராடி முறியடிக்கும் போது வட மாநில மக்கள் பிழைப்புக்காக இடம் பெயர்வது தானாகவே குறைந்து விடும்.ஆக தமிழ் மக்கள் செய்ய முன்வராத வேலைகளை \அவற்றில் பல உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடியவை/ அற்பக் கூலிக்கு செய்து பிழைக்கும் வட இந்திய தொழிலாளர்கள் அரவணைக்கப் படவேண்டியவர்கள்.

    ஒரு சில வட இந்தியர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டதை வைத்து அவர்கள் அனைவருமே அப்படித்தான் என பொதுமைப்படுத்தி காவல்துறை காட்டாட்சியை ஆதரிக்க முடியாது.இந்த நிலை தொடர்ந்தால் நாளை தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களை,சில பல ஊர்களை சேர்ந்தோரும் அப்படி பொதுமைப்படுத்தப்படலாம்.ஆட்டையும் மாட்டையும் கடித்த ஓநாய் மனிதர்களை கடிக்காது என்று சொல்ல முடியுமா.

  20. வேலை செய்ய ஆட்கள் இல்லை என்பது தவறு குறைந்த கூலிக்கு ஆட்கள் சிடைக்க வில்லை என்று சொல்லுங்கள் அப்படியானால் உழைப்புச்சுரண்டலுக்கு தமிழன் எதிர்ப்பு தெரிவிக்கிறான் அதேபோது வடமாநிலத்தவன் துணைபோகிறார்கள் “ “ நீங்க குடுக்கறத குடுங்க நான் மாடாய் உழைக்கிறேன்“ என்பதற்கு நீங்கள் துணைபோகிறீர்கள் இதற்குப்பேர் கொள்கை கூப்பாடு

    //வட இந்திய மாநிலங்களிருந்து பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்கள் இரு கரம் நீட்டி வரவேற்கப்பட வேண்டியவர்கள்/.
    தமிழன் தமிழ்நாட்டிலேயே அகதியான பின்னர் நீங்கள் என்ன முழக்கம் வைப்பீர்களோ தெரியாது ……

    தமிழகத் தொழிலாளர்களின் சம்பளம், வேலை நேரம் மற்றும் தொழிற்சங்க உரிமை இவை அனைத்திலும் குருக்குச்சால் ஓட்டி, தொழிற்சங்க உரிமைகளுக்கு வேட்டு வைத்துக்கொண்டிருக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வடமாநில வந்தேரிகளின் படைஎடுப்பை இரு கரம் நீட்டி வரவேற்க வேண்டுமாம்………. சொலகிறது வினவு
    இவர்கள் வர்க்கப்பிரச்சனையை நோக்குகிற பார்வை சரியானதுஎன்று சொல்ல முடியவில்லை
    ஒரு பிரச்சனையை பலகோணங்களிலிருந்தும் ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதுதான் சரியாக இருக்கும்
    எங்கள் நாடு தமிழ்நாடு இது வந்தேரிகளின் வேட்டைக்காடாக மாற்ற எத்தனிக்கும் வினவை நாங்கள் எற்றுக்கொள்ள முடியாது

  21. குறைந்த கூலிக்கு கூடுதல் நேரம் உழைக்க வட இந்திய தொழிலாளர்கள் அணியமாய் இருப்பதால்தான் அவர்களுக்கு இங்கு வேலை கிடைக்கிறது எனபது உண்மைதான்.அப்படியானால் தமிழ் தொழிலாளர் நலம் நாடுவோர் யாரை எதிர்த்து போராட வேண்டும்.குறைந்த பட்ச கூலி,வேலை நேரம்,இன்ன பிற தொழிலாளர் உரிமைகளை உத்தரவாதப்படுத்தி தர வேண்டிய அரசு அந்த கடமையை தட்டிக் கழிக்கிறதா இல்லையா.இந்த கேடு கெட்ட சூழலை நல்வாய்ப்பாக கொண்டு பணத்தாசை பிடித்தோர் வட இந்திய தொழிலாளர்களை அழைத்து வந்து சுரண்டுகின்றனர்.அவர்கள் என்ன தமிழ் தொழிலாளர்களை வஞ்சிக்கும் எண்ணத்தோடா புறப்பட்டு வருகின்றனர்.அவர்கள் வறுமை பிடரியை பிடித்து தள்ளுகிறது.வந்த இடத்திலும் அவர்கள் உழைத்துத்தான் பொருளீட்டுகின்றனர். அவர்களை போய் எதிரிகளாக சித்தரிப்பது உண்மையான எதிரிகளை அடையாளம் காண விடாமல் தடுக்கும் வஞ்சகமே அன்றி வேறில்லை.

    மேலும் உழைப்பே இன்று உலகில் உள்ள அனைத்து செல்வங்களையும் உருவாக்கி தந்துள்ளது.தருகிறது.அந்த உழைப்பை நல்கும் தொழிலாளி வேறொரு மொழி பேசுகிறான் என்பதால் அந்நியன் ஆகி விட மாட்டான்.இந்த மண்ணை உழைத்து வளப்படுத்துவதால் அவன் நம்மில் ஒருவன்.

    தமிழகத்தை பொறுத்தவரை அந்நியர்கள் யாரென்றால் சென்னை,திருப்பூர், கோவை என தமிழக நகரங்கள் பெரும்பாலானவற்றில் பொருளாதார ஆதிக்கம் செலுத்தும் மார்வாடிகள் முதலான பனியா கும்பலை சொல்லலாம். அவர்கள்தான் பட்டி தொட்டி முதற்கொண்டு தமிழகம் முழுவதும் வட்டிக்கடை நடத்தி தமிழ் மக்களை சுரண்டுகிறார்கள்.துணி,செருப்பு,பின்னலாடை,மின் சாதனங்கள்,மின்னணு பொருட்கள்,தங்கம் என அனைத்து பொருட்களின் சந்தையை கைப்பற்றி கட்டுப்படுத்துகிறார்கள்.அதன் மூலம் கணக்கற்ற வகையில் தமிழகத்தை கொள்ளையிட்டு அள்ளிச் செல்கின்றனர். எடுத்துக்காட்டாக தங்க சந்தையை பார்க்கலாம்.சமூகத்தின் பல்வேறு பிரிவினர் நகைக் கடைகளை நடத்தினாலும் அவர்கள் அனைவருக்கும் சரக்கு அளிக்கும் இடத்தை வட நாட்டு பனியா கும்பல்தான் கைப்பற்றி வைத்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நாளொன்றுக்கு அவர்கள் கொள்ளையிடும் தொகை கணக்கில் அடங்காதது.[தங்க விலை உலக சந்தை என வகுப்பு எடுக்க வேண்டாம்.விலை ஏறும்போது ஒரே நாளில் அதை சென்னை சந்தையின் விலையாக கொள்வார்கள்.இறங்கும்போது அதனை அமுலுக்கு கொண்டுவர சில பல நாட்கள் எடுத்துக் கொள்வார்கள்]

    அடுத்து தொலை தொடர்பு துறை எரிஆற்றல் துறை ,தானியங்கி வாகனங்கள் துறையில் ஆரம்பித்து காய்கறி வணிகம் வரை பாரதி ஏர்டெல்,bajaj ரிலையன்சு டாட்டா என்று தமிழ் நாட்டை கொள்ளையிடும் பனியா கும்பல்தான் உண்மையான எதிரிகள்.அவர்களிலும் பெரிய எதிரி இந்த பனியா கும்பலால் மட்டுமல்லாது பார்ப்பனிய ஆதிக்க கும்பலாலும் இயக்கப்படும் இந்திய ஏகாதிபத்தியம்தான்.அது வருமான வரி,பணி வரி,சுங்க கலால் வரி என தமிழகத்தை கொள்ளையிடுவதற்கு கணக்கு வழக்கு ஏதுமில்லை.

    இப்படியான உண்மையான எதிரிகளை அடையாளம் காண்பதை விடுத்து அற்ப கூலிக்கு மாடாக உழைக்கும் வட இந்திய மக்களை எதிரிகளாக பாவிப்பது இனவெறியாக மாறும் அபாயத்தை உள்ளடக்கி உள்ளது.இந்த வகையான போக்கு நாளடைவில் சிவ சேனா காலிகளின் மராத்திய இனவெறி போன்று தமிழ் மக்களை சீரழிக்க கூடியது.

    • சரியான பதில் , நாம் எதிர்க்க வேண்டியது பனியா கும்பலையும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் தான், உழைக்கும் மக்கள் எங்கே இருந்து உழைத்தாலும் பாராட்ட பட வேண்டியவர்களே !!

    • சகோதரர் திப்பு வழமை போல் தங்களது கருத்துக்கள் அருமையாக இருக்கிறது.நன்றி!

  22. இந்தநிலைக்கு அடிப்படைக்காரணமென்ன? இந்த பார்ப்பண பனியா கும்பல் இந்த நரவேட்டைக்கு பயன்பட கண்டுபிடித்ததுதான் இந்தியம். அதன்மூலம்தான் அது அனைத்து தேசிய இனங்களையும் நசுக்கி இந்திய தேசியமாக விரித்து ஒட்டச்சுரண்டுகிறது சரி இதை(இந்தியம் ) எதிர்த்து நாங்கள் போராடுவதாகக்கொள்வோம் அப்போது வினவு என்னசொல்லும் இது இனவெறி பிராந்தியவாதம் என்று பார்ப்பன பனியாக்கள் கக்குகின்ற அதே வாதத்தை அல்லவா சொல்லும்அவர்களோடுதானே நிற்கும் ?

  23. வாடகைதாரர் விவரம் சேகரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி – 2 மாதங்களுக்குள் கொடுக்க கமிஷ்னர் உத்தரவு! – தினமலரில் செய்தி வந்து உள்ளது..

    http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2013/11/29/Article//006/29_11_2013_006_004.jpg

    இது உண்மையா..? HRPC தொடுத்த வழக்கில் தீர்ப்பு இதுதானா? அப்படியென்றால் அது குறித்து வினவில் செய்தி ஏன் வெளியிடவில்லை.

    மீண்டும் வினவு செய்திகள், ஒருவரி செய்திகள் வெளிவரும் போது அதிகமான செய்தி விமர்சனங்களை அறியமுடியும் என கருதுகிறேன். வினவு பரிசீலிக்க வேண்டும்.

Leave a Reply to Paiya பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க