Sunday, November 3, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-ஜனநாயகம்-ஏப்ரல்-2012

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1.  அணு உலை அல்லது சிறை!
(அணு உலையைவிட அரசுதான் மிகக் கொடியது என்ற படிப்பினையை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.)

 2.  அணு உலைகளைவிட ஆபத்தானவை!

 3. சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்திய நரி!
(ஐ.நா.வின் தீர்மானத்தை திருத்தத்துடன் ஆதரித்து, பாசிச ராஜபக்சேவை மனித உரிமை மீறல் விசாரணைகளிலிருந்து காப்பாற்றியுள்ளது இந்தியா.)
( கியூபா: இனப்படுகொலைகளின் கவசமா, இறையாண்மை?)

4.  பாசிசமயமாகும் அரசு!
வடமாநிலத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, எல்லா பிரிவு மக்களையும் கண்காணிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாகக் கருதும் அரசின் அணுகுமுறை காலனிய ஆட்சியை நினைவுபடுத்துகிறது.)

5.தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!
(பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புத்தேடி குடியேறும் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள் என்று கூறி சிவசேனா பாணியில் நஞ்சு கக்குகிறது த.தே.பொ.க. தலைமை.)

6.பெண்ணுரிமையின் பேராயுதம்.                                      
(அனைத்துலக மகளிர் தினம்.)

7. பகத்சிங் வழியில் விடுதலைப் போரைத் தொடர்வோம்!”                 
(பு.மா.இ.மு.வின் பிரச்சாரம், உறுதியேற்பு!)

8. செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!                                    
(தனியார்மயம் – தாராளமயம் எல்லா முனைகளிலும் தோல்வியடைந்த பிறகும் அதே செக்குமாட்டுப் பாதையில் செலுத்தப்படுகிறது, பட்ஜெட்.)

9. தனியார்மயத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் பிரச்சாரம்.
(108 ஆம்புலன்ஸ் சேவை:)

10. வர்க்க ஒற்றுமையுடன் முன்னேறும் ஓசூர் தொழிலாளர் போராட்டம்.

11. மின்சாரச் சந்தையை வட்டமிடும் பணந்தின்னிகள்.                    
(ஆன்லைன் சந்தையில் சூதாடப்படும் பண்டமாக மின்சாரத்தை அங்கீகரித்துள்ளது அரசு. வருங்காலத்தில் மின்கட்டணம் என்பது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி இறங்கும்.)

12. கட்டணக் கொள்ளையை வீழ்த்திய பெற்றோர்களின் போராட்டம்!

13. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடு!”                                                   
(புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் ஆர்ப்பாட்டம்.)

14. மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!
(கனிம வளங்களைக் கொள்ளையிடும் மாஃபியாக்களின் ஆதிக்கமும் அட்டூழியங்களும் யாரும் கேள்வி கேட்க முடியாத வண்ணம் அதிகரித்து விட்டன்.)

15. வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!
(கொத்தடிமைத் தொழிலாளர்கள் எத்தனைக் கொடூரமாகச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வெள்ளையன் என்ற தொழிலாளியின் கண்ணீர்க்கதை!)

16. அணுஉலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை!        
(அணு விபத்து உள்ளிட்டு அனைத்து ஆலை விபத்துகளுக்கும் காரணமான முதலாளித்துவ இலாபவெறியையும் அதிகார வர்க்க அலட்சியத்தையும் அதிநவீன தொழில்நுட்பங்கள் தடுத்து விடுமா?)

17. பேரழிவின் தொடக்கம்!                                               
(உயிராதாரமான தண்ணீரை விற்பனைச் சரக்கு என்று அறிவித்திருப்பதன் மூலம் ஒரு பேரழிவை முன்மொழிகிறது, தேசியத் தண்ணீர்க் கொள்கை.)

18. விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்.

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. Porattam thoradavendum…Poradupavane velluvan…Mudivu anpathe kidayathu, porattathukku..
    Thanneer allorukkum sondham…athai american companikalukku vittu koduthal, vivasayam appadi valarum…namathu nadu vivasaya nadu anpathu kuzhahigal pada puthakagalil padipatthadu mattum thana ?

    Kalvi koduppthu namathu kadamai….arasin nadavadikkaikalai kavanikkum makkal kailakathathanamaka erukkirargal..
    Adtchi marinal nallathu ana ninaithalum, namellam BETWEEN THE DEVIL AND THE DEEP SEA…

  2. ஒரு மிக பெரியநாட்டின் தலைவர்களைப் பற்றி இவ்வலவு கீல்தரமாக எழுதுவது சரியல்ல.

  3. […] – புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012 Share this:TwitterFacebookLike this:LikeBe the first to like this post. By தமிழக மீனவர்கள் • Posted in அரசியல் 0 […]

  4. […] – புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012 Share this:TwitterFacebookLike this:LikeBe the first to like this post. By தமிழக மீனவர்கள் • Posted in பருவதராஜகுலம் 0 […]

  5. புதிய ஜனநாயகம் ஏப்ரல் இதழை பேருந்து நிலையத்தில் மக்களிடையே பேசி விற்ற அனுபவங்கள்.

    இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு, குடி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் கழுவும் தண்ணீரையும் எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்களிலிருந்துதான் வாங்க வேண்டியிருக்கும் போன்றவற்றிற்கு பலர் ஆதரவான எதிர்வினை செய்தார்கள். பேருந்து நடத்துனர்களும், ஓட்டுனர்களும், பேருந்து நிலைய கடைக்காரர்களும் தோழர்களுக்கு நட்புடன் உதவி செய்தார்கள்.

    பேசிய உரைக்கு மாதிரி.

    அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

    நாங்கள் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற மார்க்சிய லெனினிய அமைப்பிலிருந்து புதிய ஜனநாயகம் என்ற பத்திரிகையை அறிமுகம் செய்ய வந்திருக்கிறோம். இந்த பத்திரிகை மற்ற வணிக பத்திரிகைகள் போல் இல்லாமல் மக்கள் பிரச்சனைகளை நேர்மையாக மக்களின் சார்பில் பேசும் பத்திரிகை. இந்த பத்திரிகையில் விளம்பரங்களே கிடையாது, மக்களிடம் நேரடியாக பிரச்சாரம் செய்து வாங்கும் நன்கொடை மூலமாகவே நடத்தப்படும் பத்திரிகை.

    இன்றைய கால கட்டத்தில் நம்மை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனை நம்மை ஆளும் கட்சிகள். தேர்தலில் ஜெயிக்க கருணாநிதியும் ஜெயலலிதாவும் என்னதான் சண்டையில் ஈடுபட்டிருந்தாலும், அதன் மூலம் பெறும் பதவிகளின் மூலம் அடிக்கும் கொள்ளைகளுக்காக உட்கட்சி சண்டைகள் நடந்தாலும் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் அவர்கள் ஒன்றுபட்டு செயல்படுகிறார்கள், மக்களுக்கு எதிராக.

    நமக்கு ஒரு பிரச்சனை என்று ஏற்பட்டால் என்ன செய்வோம்? பக்கத்து வீட்டுக் காரர்களிடம் பேசுவோம். கொஞ்சம் தீவிரமான பிரச்சனை ஏற்பட்டால் போலீசில் புகார் கொடுப்போம். இன்னும் தீவிரமாக இருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடுக்கலாம். எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அல்லது முதலமைச்சருக்கு நேரடியாக மனு அனுப்புவோம். இது எதுவும் பலனை தரவில்லை என்றால் அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    அப்படி ஒரு போராட்டத்தில் ஈடுபட்ட கூடங்குளம் மக்களை, கொச்சைப்படுத்தி, புறக்கணித்து அவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அணு உலையை இயக்கிக் காட்டியிருக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தேச துரோகம் உட்பட பல வழக்குகளை தொடர்ந்திருக்கிறார்கள். ஆனாலும், கூடங்குளம் பகுதி மக்கள் தமது ஜனநாயக போராட்டத்தை இன்னும் தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலைமையில் ஜப்பானின் புகுஷிமாவில் இருந்த அணு உலையில் ஏற்பட்ட விபத்திற்கு பிறகு அந்த நாட்டில் 32 அணு உலைகளில் 31ஐ மூடி விட்டார்கள். புகுஷிமா பாதிப்பு பற்றிய முழு விபரங்களும் கிடைக்காமல் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    இதில் என்ன ஜனநாயகம் இருக்கிறது? அமைதியான வழியில் போராடுவதற்கு கூட உரிமை இல்லாத நாட்டில் நாம் நமது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது.

    கேட்டால் தமிழ்நாட்டில் மின்சாரம் பற்றாக்குறை, அதனால் கடுமையான மின்வெட்டு. கூடங்குளம் வந்தால்தான் மின்சார பற்றாக்குறை சரியாகும் என்று காரணம் சொல்கிறார்கள். உண்மையில் மின்வெட்டு எதனால் ஏற்படுகிறது?
    மின் கட்டணம் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து ஏன் கடுமையாக உயர்த்தப்பட்டது? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே விடைதான். தனியார் கம்பெனிகள் அதிக லாபம் சம்பாதிக்கத்தான் நமக்கு மின்வெட்டும் மின்கட்டண உயர்வும்.

    மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பது மாற்றப்பட்டு, இப்போது பெட்ரோல் அல்லது டீசல் போடுவது போல தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு மின்சாரத்தை மக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை. கடந்த 20 ஆண்டுகளில் அரசு புதிய மின்உற்பத்தி நிலையங்களை நிறுவுவதை நிறுத்தி வைத்திருக்கிறது. அனல் மின் நிலையம், காற்றாலை, சூரிய மின்சக்தி போன்றவற்றை தனியார் நிறுவனங்கள் மட்டுமே நிறுவும்படி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தனியார் மின்சார உற்பத்தியாளர்களின் பங்களை 60% ஆக உயர்த்துவதாக கூறி வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்றிருக்கிறார் மத்திய அமைச்சர் ஷிண்டே. தனியார் மின்சார உற்பத்தியில் என்ன பிரச்சனை?

    தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அதிக பட்ச செலவு யூனிட்டுக்கு ரூ 2.14 காசுகள், குறைந்த பட்சி செலவு யூனிட்டுக்கு 21 காசுகள். தனியார் உற்பத்தி நிலையங்களில் விலை யூனிட்டுக்கு 17.78, ரூ 8.74, ரூ 8.63, ரூ 6.58, ரூ 17.74 என்று ஏறி இறங்குகிறது. அப்படி அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க முடியா விட்டால் இழப்பீடாக மின்வாரியம் தனியார் நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கொடுக்க வேண்டும்.

    இது ஒரு பக்கம் இருக்கு இன்னொரு பக்கம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரிய நிறுவனங்களுக்கும் மல்டிபிளெக்சுகளுக்கும், ஐடி நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பலத்த இழப்பு ஏற்படுகிறது. மின் வாரியத்தின் கடன் தொகை 50,000 கோடி ரூபாயை தாண்டி விட்டிருக்கிறது. இதை சரி செய்யத்தான் சாதாரண மக்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

    இது போல நமது நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் மாபியாக்களின் அட்டகாசம் எல்லா துறைகளிலும் அதிகரித்து வருகிறது. ஆற்றில் மண் அள்ளுபவர்களை தடுத்த இளைஞர் லாரி ஏற்றி படுகொலை, மத்திய பிரதேசத்தில் சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்துக் கொண்டு வந்த லாரியை நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரியை லாரி ஏற்றி கொன்று விட்டனர்.

    இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அதே தனியார் மய தாராள மய கொள்கைகளை செயல்படுத்துவதையே தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் மன்மோகன் சிங், அலுவாலியா வழிகாட்டலிலான மத்திய அரசு.

    ஆனால், சாதாரண மக்கள் இன்னமும் கொத்தடிமைகளாக கல் குவாரிகளில் சில ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க முடியாமல் வேலை செய்து கொண்டு கொடுமைகளை சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திருவாக்கரையில் கல் குவாரியில் வேலை செய்யும் வெள்ளையன் என்பவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தெரிந்து கொண்டு அவரைப் போன்றவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட வேண்டும்.

    தண்ணீரை தனியார் மயமாக்குவது என்ற கொள்கை முடிவை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. குடிப்பதற்கு, பாசனம் செய்வதற்கு, வீட்டு உபயோகத்துக்கான தண்ணீர் விலைக்கு விற்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தண்ணீர் வளங்களை தனியார் கட்டுப்பாட்டுக்கு மாற்றும் பணியை சுறுசுறுப்பாக செய்து வருகிறது. நமது வாழ்க்கையையும், பண்பாட்டையும், நாட்டையும் அடகு வைக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக போராட வேண்டியதன் அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க