Wednesday, February 8, 2023
முகப்புசமூகம்சாதி – மதம்பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பாக இருந்தது!

பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பாக இருந்தது!

-

பண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” புத்தகத்தின் ஆசிரியருமான டி. என். ஜா உடனான நேர்காணல்

"பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பானதாக இருந்தது" டி என் ஜா.
பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பானதாக இருந்தது டி என் ஜா.

புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபிக்கிறார். “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

பசுக் கொலை பற்றிய சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை செயல்படுத்துவதாக மத்திய பிரதேச அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த சட்டம் கொடுமையானது என்று பல பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த நேரத்தில் இந்திய பாரம்பரியத்தில் ‘புனித’ பசு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் சங்க பரிவார் அதனைப் பயன்படுத்தி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்துவதைப் பற்றியும் ஜா விளக்குகிறார். நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

கேள்வி :

‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை உங்கள் புத்தகம் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” உடைக்கிறது.  இந்த முடிவுக்கு வருவதற்கு நீங்கள் பயன்படுத்திய முக்கிய ஆதாரங்கள் என்ன?

பதில்:

கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. அதன்படி, நான் பார்ப்பன, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நமது முன்னோர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ என்பதை நிரூபித்திருக்கிறேன்.

கேள்வி :

பண்டைய இந்தியாவில் பசுக்கள் உணவுக்காகவும் பலியாகவும் பயன்பட்டதற்கான சில உதாரணங்களை கொடுக்க முடியுமா?

பதில்:

வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்தது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.

வேத நூல்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மாட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு பிற்கால வேத நூல் “பசு நிச்சயமாக ஒரு   உணவுதான்” என்று எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் சொல்கிறது. இன்னொரு வேத நூலில் யாக்ஞவல்க்யர் பிடிவாதமாக பசுவின் மென்மையான இறைச்சியை சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகால மற்றும் வேத காலத்துக்கு பிந்தைய நெறிமுறை நூல்களின் படி, விருந்தாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பசுவை கொல்வது அவசியமானதாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதி ஊர்வல சடங்குகளின் ஒரு பகுதியாக பார்ப்பனர்கள் உண்பதற்கு பசுவின் இறைச்சி வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கிடைக்கும் ஆதாரங்களில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பண்டைய இந்திய நூல்கள், பசுவை பலிக்காகவும், உணவுக்காகவும் கொல்வது பற்றி ஏராளமான குறிப்புகளை தருகின்றன.

கேள்வி:

நீங்கள் இந்தக் கருத்தை விளக்குவதற்கு பழங்கால இந்திய ஆதாரங்கள் பலவற்றை பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால், இடைக்கால அல்லது நவீன இந்தியாவில் பசுவை உணவுப்பொருளாக பயன்படுத்துவது குறித்த மற்ற “இந்து ஆதாரங்கள்” இருக்கின்றனவா?

பதில்:

வேதத்துக்கு பிந்தைய காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பாரம்பரியம் தொடர்ந்தது குறித்து கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன. தர்மசாஸ்திர நூல்களில் மிகவும் செல்வாக்கு படைத்த மனுஸ்மிரிதி (200 கிமு-கி.பி. 200), பட்டினியிலிருந்து தப்பிக்க மாட்டிறைச்சியையும் நாய் இறைச்சியையும் சாப்பிட்ட மிகவும் ஒழுக்கமான பார்ப்பனர்கள் பற்றிய உதாரணங்களை தருகிறது. யக்ஞவல்க்யரின் ஸ்மிரிதி (கி.பி. 100-300) கற்றறிந்த பார்ப்பனர்களை (ஷ்ரோத்ரயா) பெரிய மாடு அல்லது ஆடு அடித்து வரவேற்க வேண்டும் என்று விதித்துள்ளது. மகாபாரத பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்பதை நினைவு கூரலாம். தினமும் 2,000 பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு வினியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லைதான்.

‘பரத்வாஜ முனிவர் ஒரு கொழுத்த கன்றுக்குட்டியை கொன்று ராமனை வரவேற்றார்’ என்று சொல்லப்படுகிறது. மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் காணப்படும் இந்த குறிப்புகள் மதசார்பற்ற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசுகின்றன. பல இலக்கிய படைப்புகளிள் (காளிதாசர், பாவபுத்தி, ராஜஷேகரா, ஸ்ரீஹர்ஷா போன்ற பெயர்களை குறிப்பிட வேண்டும்) மாட்டிறைச்சி சாப்பிடுவது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேள்வி:

பசுவின் புனிதம் என்ற தொன்மம் இந்துக்களின் மனத்தில் எப்படி தோன்றியது? உணவுப் பொருளாக பயன்படுத்துவதற்கு எதிராக பசுவின் புனிதம் பற்றிய கருத்துக்கள் நிலவிய நிகழ்வுகளும் கால கட்டங்களும் இந்திய வரலாற்றில் இருக்கின்றனவா? பழங்கால இந்தியாவில் பசுவை மத ரீதியாகவும் இந்து மதத்தின் புனித சின்னமாகவும் பார்க்கும் பாரம்பரியங்கள் இருந்தனவா?

பதில்:

போபாலில் ஒரு காட்சி. குப்பை குவியல்களை கிளறி உணவைத் தேடும் இது போன்ற பசுக்களை பராமரிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
போபாலில் ஒரு காட்சி. குப்பை குவியல்களை கிளறி உணவைத் தேடும் இது போன்ற பசுக்களை பராமரிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

வேத காலத்தில் பசு புனிதமானதாக இருந்தது என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். அத்தகைய வலியுறுத்தல்கள் அதர்வ வேதத்தில் வரும் அக்ன்யா (கொல்லப்படக் கூடாது என்று பொருள்) என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டவை. வேதப்பசு தொடப்படக்கூடாது என்று இருந்தால் அது யாகத்துக்கான கட்டணமாக (தக்ஷிணை) பார்ப்பனர் பெற்ற பசுவுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. புத்தமும் சமணமும் விலங்கு பலியையும் கால்நடைகளை கொல்வதையும் எதிர்த்தன. ஆனால் அவர்களின் அதிகார பூர்வ இலக்கியங்கள் கூட பசுவை ஒரு புனித விலங்காக குறிப்பிடவில்லை.

புனிதப்பசு என்ற கருத்தாக்கம் மிகவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. முதல் ஆயிரமாண்டின் தொடக்கத்தில் இந்திய சமூகம் படிப்படியாக நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாறும் போது சட்டம் இயற்றுபவர்கள் மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடை செய்ய ஆரம்பித்தார்கள். அது மிகப்பெரிய சமூக கலாச்சார மாற்றத்துக்கு வழி வகுத்தது. இதிகாசங்களிலும், புராணங்களிலும் கலியுகம் என்று விவரிக்கப்படும் மாற்றத்தின் இந்தக் கட்டம் சமூக மரபுகளிலும் பழக்கங்களிலும் பல மாற்றங்களையும் மாறுதல்களையும் கண்டது. முந்தைய பல பழக்கங்கள் கலியுகத்தில் தடை செய்யப்பட்டவையாக பார்ப்பன மத நூல்கள் பேச ஆரம்பித்தன. இந்த பழக்கங்கள் கலிவர்ஜ்யாக்கள் என்று அழைக்கப்பட்டன. இது தொடர்பான நூல்கள் கலியுகத்தில் பசுக்கொலை தடை செய்யப்பட்டது என்று குறிப்பிடுகின்றன.

பசு கொல்லப்படுவதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் ‘தீண்டத்தகாத’ சாதிகளுடன் அடையாளம் காட்டப்படுகின்றன. ஆனால், சில தர்மசாஸ்திர நூல்கள் இந்த செயல்களை மாறுபட்ட நடத்தைகள் என்ற அளவிலேயே பார்க்கின்றன என்பது கவனத்துக்குரியதாகும். தர்மசாஸ்திரங்கள் என்ன சொல்லியிருந்தாலும், மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்ததை ஒதுக்கி விட முடியாது. 19ம் நூற்றாண்டில் கூட சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இதேபோல், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் “உடல் நிலை சரியில்லாத போது மருத்துவர் மாட்டிறைச்சி சூப்பை பரிந்துரைத்தால் அதை சாப்பிடுவதற்கு தயங்கவோ அதைப் பற்றி கேள்வி எழுப்பவோ செய்யாத” ஆச்சார இந்துக்களின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து மகாத்மா காந்தி பேசியிருக்கிறார். இன்று கூட, கேரளாவில் 72 சமூகங்கள் செலவு அதிகமாகும் ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சி சாப்பிடுவதை விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் தீண்டத் தகாதவர்கள் என்று சொல்லப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்துத்துவா சக்திகள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளும்படி அவர்களிடம் பிரச்சாரம் செய்கின்றன.

இவ்வளவு இருந்தும், உபனிஷத சிந்தனைகளில் வளர்ந்த அகிம்சை தத்துவம், புத்த ஜைன உலகப் பார்வைகளில் அதன் முனைப்பான தாக்கம், வைணவ மதத்தில் அதற்கு இருந்த மையப் பங்கு ஆகியவை கொல்லாமை பற்றிய கருத்துக்களை வளர்த்தன. விவசாய சமூகத்தில் அதற்கு இருந்த பொருளாதார மதிப்பின் காரணத்தால் பசு சிறப்பான முக்கியத்துவம் பெற்றது. பசுக்களை பார்ப்பனர்கள் தக்ஷிணையாக பெறுவதால் அவை கொல்லப்படுவதை விரும்பவில்லை.

கேள்வி:

பசுக்கொலை இந்தியாவில் எப்போதிருந்து அரசியல் பிரச்சனையாக மாறியது? இந்த விஷயம் தொடர்பாக ஏதாவது வரலாற்று இயக்கம் இருந்திருக்கிறதா? பசுவின் “உற்பத்தி செய்யப்பட்ட புனிதம்” அரசியல் ஆள் சேர்ப்புக்காக பயன்படுத்தப்பட்டதற்கான உதாரணங்களை நீங்கள் சொல்ல முடியுமா?

பதில்:

அரியானாவில் மாட்டை உரித்த 'குற்றத்துக்காக' ஐந்து தலித்துகளை எரித்துக் கொன்றனர் ஆதிக்க சாதி வெறியர்கள்
அரியானாவில் மாட்டை உரித்த ‘குற்றத்துக்காக’ ஐந்து தலித்துகளை எரித்துக் கொன்றனர் ஆதிக்க சாதி வெறியர்கள்

காலப்போக்கில் பசு ஆட்சியாளர்களின் கையில் ஒரு அரசியல் கருவியாக மாறியது. முகலாய பேரரசர்கள் (எடுத்துக்காட்டாக, பாபர், அக்பர், ஜஹாங்கிர் மற்றும் அவுரங்கசீப்) ஜைன அல்லது பார்ப்பனர்களின் பசுவின் மீதான மரியாதை, வழிபாடு போன்ற உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பசுக் கொலையின் மீது அளவான தடையை விதித்தனர். ‘பசுவையும் பார்ப்பனரையும் பாதுகாப்பதற்காக மண்ணில் அவதரித்த கடவுளாக’ கருதப்படும் ஷிவாஜி, “நாங்கள் இந்துக்கள், இந்த நாட்டின் முறையான உரிமையாளர்கள். பசுக் கொலையையும் பார்ப்பனர்கள் அடக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்கு ஏற்பில்லாத ஒன்று” என்று அறிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால், 18ம் நூற்றாண்டின் இறுதியில் பசு அரசியல் ஆள் திரட்டும் கருவியாக பயன்பட ஆரம்பித்தது. முறையான பசு பாதுகாப்பு இயக்கம், பஞ்சாபில் சுமார் 1870ல் சீக்கிய குக்கா (அல்லது நாம்தாரி) பிரிவினரால் தொடங்கப்பட்டு, 1882ல் தயானந்த சரஸ்வதி முதல் கோரக்ஷினி (பசு பாதுகாப்பு) சபையை ஆரம்பித்த போது வலுவாக்கப்பட்டது. பலதரப்பட்ட மக்களை முஸ்லீம்களின் பசுக் கொலை பழக்கத்தை எதிர்த்து ஒன்று திரட்டுவதற்கு பசு ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டது.

இது 1880களிலும் 1890களிலும் பல மதக் கலவரங்களுக்கு வழி வகுத்தது. அதற்கு முன்பே பசுக் கொலை பற்றிய கருத்துக்கள் வலுவாகி வந்திருந்தாலும், 1888ல் வடமேற்கு மாநிலங்களுக்கான உயர் நீதி மன்றம் ‘பசு ஒரு புனிதமான விலங்கு இல்லை’ என்று தீர்ப்பு சொன்ன பிறகு பசு பாதுகாப்பு இயக்கம் தீவிரமடைந்தது. பசுக் கொலை பல இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு காரணமாக இருந்தது. குறிப்பாக அசம்கர்க் மாவட்டத்தில் 1893ல் நடந்த கலவரங்கள். இந்த கலவரங்களில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல், 1912-1913ல் அயோத்தியை வன்முறை உலுக்கியது. சில ஆண்டுகள் கழித்து 1917ல் ஷாஹாபாத் பேரழிவு ஏற்படுத்திய மத பெருந்தீயை எதிர் கொண்டது.

சுதந்திர இந்தியாவில் கூட பசுக் கொலை மீண்டும் மீண்டும் பிரச்சனைக்குரிய விஷயமாக அரசியல் வானில் உருவெடுத்தது. 1966 இல், சுதந்திரம் அடைந்து சுமார் இரண்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய மதவாத அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தேசிய அளவில் பசுக் கொலையை தடை செய்யும் படி லட்சக்கணக்கான மக்களை திரட்டி பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அது இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு வன்முறையில் முடிந்தது, குறைந்தது எட்டு பேரின் இறப்புக்கும் இன்னும் பல பேர் காயமடையவும் வழி வகுத்தது. ஏப்ரல் 1979 இல், மகாத்மா காந்தியின் ஆன்மீக சீடர் என்று கருதப்படும் ஆச்சார்ய வினோபா பாவே பசுக் கொலையை தடை செய்ய மத்திய அரசை கோரி உண்ணா விரதம் இருந்தார்.

குழப்பவாத மற்றும் அடிப்படைவாத சக்திகள் பசுவை இந்துக்களின் மத அடையாளமாக மாற்றியிருக்கின்றனர். வேத காலத்திலும் சரி, அதைத் தொடர்ந்த பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத மரபுகளின் அடிப்படையிலும் சரி “புனித” பசு எல்லா காலங்களிலும் புனிதமாக இருக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். ஆரம்ப கால இந்தியாவில் அதன் இறைச்சியும் மற்ற இறைச்சி வகைகளும் வழக்கமான உயர்தர உணவின் ஒரு பகுதியாக இருந்தன.

கேள்வி:

மாட்டிறைச்சி சாப்பிடுவது வட இந்தியாவை விட தென் இந்தியாவில் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பழக்கமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்? அத்தகைய அங்கீகரிப்புகளும் எதிர்ப்புகளும் வரலாற்று ரீதியாகவே வளர்ந்திருக்க வேண்டும்.

பதில்:

தென் இந்தியாவில் சில பகுதிகளில் மாட்டிறைச்சி-உண்ணுவது வழக்கமாக இருக்கிறது, ஆனால் அதை பொதுமைப்படுத்த முடியாது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியினரும் தலித்துகளும் முஸ்லீம்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். வட கிழக்கு இந்தியாவின் மலை சமூகங்களும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள். ஆனால் இதையும் நாம் பொதுமைப்படுத்த முடியாது. முன்னாள் தெற்கு பீகாரின் பெரும்பான்மை பழங்குடியினர் பசு இறைச்சி சாப்பிடுவதில்லை.

கேள்வி:

நாம் பழங்குடி மக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்களை விட்டு விட்டால் கூட ஒரு கணக்கீட்டின் படி இந்துக்களில் 40 சதவீதம் பேர் இன்று மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இந்தியா முழுவதும் வசிக்கும் தலித்துகள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இது மிகவும் செலவு குறைவாக கிடைக்கும் இறைச்சி. மத்திய பிரதேச அரசு சமீபத்தில் பசுக் கொலையை மட்டுமின்றி மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் தடை செய்துள்ளது. அந்த தடை கொடுமையானது என்று பலர் கருதுகிறார்கள்  அந்த சட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:

எந்த புத்திசாலி இந்தியனும் தனது கால்நடையை கொல்ல மாட்டான் என்பதே எனது கருத்து. அப்படி அவன் கொன்றால் அந்த சட்டத்தின் கீழ் அவன் தண்டிக்கப்படலாம். விலங்கு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் பசுவுக்கு மட்டும் ஏன் சிறப்பு நிலைமை? சங்க பரிவார் உண்மையிலேயே பசுக் கொலையை தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருந்தால், பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க என்ன செய்திருக்கிறது? பெருநகரங்களில் பசுக்கள் பணக்காரர்களின் ஆடம்பர கார்களுக்கும் ஏழைகளின் தள்ளு வண்டிகளுக்கும் இடையில் தடுமாறிக் கொண்டு போக்குவரத்து தடைகளை ஏற்படுத்துகின்றன. தூக்கி எறியப்பட்ட சாப்பிட தகுதியற்ற உணவுப் பொருட்களையும், நாற்றமெடுக்கும் பிணங்களையும் கொண்ட குப்பை குவியல்களில் அவை மேய்கின்றன.

வயதான, பலவீனமான, பட்டினி கிடக்கும் பசுக்களை கொல்வதையும், ஏழைகளின் புரதமான அவற்றின் இறைச்சியை சாப்பிடுவதையும் தடை செய்வது இயற்கைக்கு எதிரானது. உணவு தேர்வுகளை நெறிப்படுத்தும் சட்டம் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானதும் கொடுமையானதும் ஆகும். ஜன சங்க (இப்போதைய பிஜேபி) தத்துவார்த்த தலைவர் கே ஆர் மல்கானி இயற்கையாக இறந்த மாட்டின் இறைச்சியை சாப்பிடுவதை எந்த தயக்கமும் இல்லாமல் ஆதரித்தார் என்பதை சங்க பரிவாரத்துக்கு நினைவு படுத்த வேண்டும்.

கேள்வி:

இந்தியாவில் பசுக் கொலை எதிர்ப்பு பற்றிய கருத்தாக்கத்தின் புத்துயிர்ப்பு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? பெரும்பாலான பிஜேபி ஆட்சி புரியும் மாநிலங்களில் இந்த பிரச்சனை அரசியல் அணி திரட்டலுக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அதிகாரத்துக்கு வந்தவுடனேயே பசுக் கொலை தடைச் சட்டத்தை கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக அந்த அரசாங்கங்கள் வைத்திருக்கின்றன.

பதில்:

சங் பரிவார் நாட்டின் அரசியலை மத ரீதியிலானதாக்கியிருக்கிறது. பசுக் கொலை எதிர்ப்பு இயக்கத்தின் புத்துயிர்ப்பு இந்த நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றதாகும்.

________________________________________________________

– நன்றி: – அஜய் ஆஷிர்வாத் மஹாபிரஷாஸ்தா (பிரண்ட்லைன்)

தமிழாக்கம்: அப்துல்
__________________________________________________________

 1. சிறந்த ஆய்வுடன் கூடிய நேர்காணல். எங்கள் வீட்டில் மாட்டுக்கறியை உப்புக் கண்டமாக போட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால் கேரளாவில் அனைத்து மதத்தினரும் மாட்டுக் கறியை சர்வ சாதாரணமாக சாப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

  ஆதி காலத்தில் நமது முன்னோர்கள் மாட்டுக் கறியை சாப்பிட்டது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆரியர்கள் தாங்கள் மாட்டுக் கறியே சாப்பிடுவதில்லை என்று சாதிப்பார்களேயானால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள் என்று அவர்களே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள். இதன் மூலம் திராவிடர்களை அடக்கி அவர்களின் பழக்க வழக்கங்களை நிறுத்தி தங்களின் வழிபாடுகளை இந்து மதம் என்ற பெயரில் ஏற்றியிருப்பது நிரூபணமாகிறது. எந்த ரூபத்தில் வந்தாலும் ஆரிய திராவிட கொள்கை சண்டை கால காலமாக இருந்து வந்துள்ளது என்பதும் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • நமது முன்னோர்கள் அதான் திராவிடர்கள் மாட்டுக்கறி மட்டுமல்லாது சுவைமிகுந்த பன்றிகறியும் சாப்பிட்டுள்ளார். எங்க வீட்டில் இட்டிலிக்கு பன்றிகறி குழம்பு வைத்து கலக்குவோம். அதுக்கு என்ன மிஸ்டர் ஜூவனபிரியர்?

   திராவிடரின் சுவை& மனம்மிகுந்த பன்றிமாமிச விருந்துண்ண தயாரா? நாம்தான் திராவிடராயிற்றே?

   • பன்றியின் மாமிசம் உட்கொண்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று வரும்போது தாரளமாக உட்கொள்ள இஸ்லாம் அனுமதி தருகின்றது. இஸ்லாம் அதை தடை செய்ததற்கு காரணம் அதனால் ஏற்படும் நோய்களுக்காக மட்டுமே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை. என்ன பலே பாண்டி புரிந்ததா. கால்புனர்சியை விடும் …சிந்தித்து செயல் படும்…

    • பன்றிக்கறி சாப்பிடுவதால் என்னென்ன நோய் வரும், பரவும் என்று சற்று விளக்க முடியுமா. ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்பட்டு சிறந்த முறையில் சமைக்கப்பட்ட பன்றிக்கறியும் ருசியானதுதான், ஆரோக்கியமானதுதான்.

     (பன்றியால் பரவுவதாக எண்ணப்படும் பல நோய்கள் பிற விலங்கினங்களால் பரப்பப்படுகின்றன, அல்லது மற்றவையாலும் பரப்பப்படுகின்றன.)

     முகமதுவின் கடவுளுக்கு நோயை பற்றி மட்டுமே தெரிந்திருந்தது, கிருமிகள், நோய்க்காரணிகள் நோயை உடல் எதிர்கொள்ளும் முறை இவை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

     பன்றிக்கறி உண்ணக்கூடாது என்பதற்கு டா. ஜாகிர் நாயக் பன்றி தன் துணையை தன் நண்பனுக்கு கூட்டிக்கொடுக்கும் என்பதாக கூறுகிறார். நீங்களோ நோய் பரப்புவதை காரணமாக கூறுகிறீர்கள். எது குர்ரான் சொல்லியது. (எதுவாயினும் தவறே)

   • திண்ணாதவனை தின்னு என வலுவந்தம் செய்வதும் தின்பவனை தின்னாதே என வலுவந்தம் செய்வதும் தவறு பாண்டியா!

 2. சர்வதேச வாதிகள் என சொல்லிகொள்ளும் நீங்கள் எப்போதும்னே இந்தியா பத்தியே பேசுவது ஏன்?தேச பற்றா?சிரியா,ஈஜிப்து,ஆப்கன் செசென்யா போன்ற பிரச்சனைகளை பற்றி பேசலாமே!பண்டைய வரலாறு படிச்சு என்ன ஆக போகுது?அவனவன் விருப்பம் இருப்பதை துன்னுறான்!பண்டைய உலகத்தில் அனைவரும் பண்ணி கறி கூட தான் துனனர்கள் அதையும் எழுது

  • //அவனவன் விருப்பம் இருப்பதை துன்னுறான்!//

   பாஸ் ஏன் உங்களுக்கு வியர்த்து கொட்டுது. உங்களது விருப்பத்தை சொல்ல வேண்டிய இடம் தீவிரவாதிகளின் கூடாரம், ஆர்எஸ்எஸ் காலணி, அகமதாபாத்.

 3. There is no proof of Brahmins eating Beef,the only ones who could have eaten were Kshatriyas and other who had to do physical work.

  The vedam clearly says the man can eat anything if he is hungry and has nothing to eat but the Rig Vedam clearly professes vegetarianism as the highest kind of diet and it is,

  For a sharp mind and a healthy body,vegetarianism supplemented by milk is enough.

  Again for people doing physical work,meat is encouraged.

  Regarding beef,it is obvious. Dietary laws ban mammals from eating other mammals,goat is also one and is an exception but eating a cow is bad for health.Especially mental health.It is like english medicine,quick benefit but long run side effects are bad.

  • சிதம்பரம் குருக்கள்வால் எல்லாம் இரவு முழுதும் தண்ணி அடிச்சிட்டு beef சாப்பிடறாளாம். காலையில் துப்புரவு செய்பவர்கள் காறி துப்புகிறார்கள்.

    • கரி , அய்யர்வாள் தண்ணியடிச்சுட்டு beef சாப்பிடுறதா தானே சொல்லியிருக்கார். விபச்சாரம் பண்ணதாவா சொன்னாரு.. விளக்கு பிடிக்குரதுக்கு.
     ஒரு வேளை அதை ஏன் சொல்லல என்ற கோபமா?

  • //For a sharp mind and a healthy body,vegetarianism supplemented by milk is enough.//

   நீங்க சார்ப் மைண்டுன்னு எதைச் சொல்றேள். ஆயிரமாயிரம் வருஷங்களா ஏமாற்றி கொண்டிருந்ததைச் சொல்றேளா?

     • காசு கொடுத்தா காலையும் நக்குவோம்ல.. அதுக்கு பேரு ஷார்ப் mind னு சொல்லி படம் போடுவோம்ல.. ஹி ஹி..

     • I am not white cross or whatever that is but if you see the amount of violence that place has seen and continues to do,u ll see how inventions are not everything.

      In those countries,if u have a different opinion die,straightaway,inventions do not mean everything.

      Beef/Pork is not the big deal,despite eating all these things they still have problems even health wise and moreover they come from very cold temperatures and beef is not banned in such weather.

      It only says Vegetarian food is better,You can take most Asian cultures including Japan and also many African cultures where agriculture is predominant and red meat is consumed primarily for taste and not otherwise.

      Many of our people migrate to those countries but does that mean they go there because they think eating beef/pork ll make them smart?

      come on.

      People in cold weather eat red meat and people in coastal areas eat fish,that’s a normal thing.

      The whole beef banning thing came because of Jainism and Buddhism and you can go look at many Asian cultures also as to why they don’t eat beef/pork much.

      Today when people are beginning to have a complacent,lazy lifestyle eating red meat ll cause fat to be stored in the arteries unnecessarily.

      So,instead of helping workers get healthy u guys are politically motivating them to eat red meat and end up with congested arteries at the age of 50,when they ll have no medical care also.

      This is how irresponsible you are.

      Appurama,maatukari saaptu veeramaranam adainthar thozharnnu arikkai vera varum.

      • வணக்கம் டாக்டர் கரி/சூப்புரமணி.
       மாட்டுக்கறி தின்னு வளர்ரவனெல்லாம் உங்கள் மேலான மருத்துவ கருத்துப்படி 50 வயதில் ரத்தக்குழாய் அடைபட்டு சிவலோக பிராப்தி அடைந்து விடுவான் என்பது. 1 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் சரியான புரதம் ஆற்றல் கிடைக்காமல் பல மரணமடைந்து விடுகின்றன. இந்தியாவில்தான் இப்படி குறைபாடுள்ள குழந்தைகளும் இறக்கும் குழந்தைகளும் அதிகம். மாட்டுக்கறி தின்னாமல் குழந்தைகளாக இறப்பதைக் காட்டிலும் நன்றாக மாட்டுக்கறியை தின்று 50 60 வயதில் இறப்பது மேல்.

       டாக்குட்டர் ஐயா. மாட்டுக்கறி தின்னால் மட்டும் இதயம் அடைபடும் என்று யார் சொன்னார்கள். கொலஸ்ட்ரால் தின்பதால் மட்டும் வருவதல்ல. உடலில் தானாக உற்பத்தியாகிறது. இப்போது சிறந்த மருந்துகள் கொலஸ்ட்ராலின் உற்பத்தியையும் உண்ட உணவிலிருந்து உடல் உறிஞ்சிக்கொள்வதை தடுக்கவும் பல சிறந்த மருந்துகள் கிடைக்கப் பெறுகின்றன. உங்கள் பசுவதை தடுப்புக் கடையை வேறெங்காவது விரிக்கவும்.

       முடிந்தால் மாட்டுக்கறி தின்று பார்க்கவும். அதன் சுவை நாவில் ஒட்டிக்கொள்ளும்.
       நிச்சயம் மாட்டுக்கறி ஒரு சிறந்த உணவு என்பதில் சிறு சந்தேகமும் கொள்ளவேண்டிய தேவையில்லை.

       • அப்படியே பன்னிக்கறியின் புராதண பெருமைகளையும் விளக்கினால்நன்றாக இருக்கும்…

       • Beef saapdrathula enakku endha prachanayum illa,inaikkum kari vaanga mudiyaama kashtapadura makkal maatukari thaan saapiduraanga,adhula endha prachanayum illa.

        Aana,neraya sambathichittu udal uzhaippe illama sofavula thoonguravunga ellam naaku rusikkaga beef pakkoda,beef biryani ellam saaptukittu irukanga.

        Ippo irukkura nelamayila pasanga ellarum veengi poi peepa maadhiri irukkanga,idhula maatu kari vera saapta avalavu thaan.

        Modhall sonneenga,varumayila vaadura makkal vera vazhi illama maatukari saapiduraangannu,piragu solreenga maatu kari rusiya irukkumnnu,edhu thevaynnu mudivu pannikunga.

        Western researchla poduvagave mammalsa unna koodathunnu solranga,aadavathu parava illa,maadu ellam too much.

        Pacha kuzhanthaingalukku puradham kedaikka aayiram vazhi irukku, arasu atha ozhunga seyyanum.

        Maatukari illamale adha seyyalam.

        • \\
         Aana,neraya sambathichittu udal uzhaippe illama sofavula thoonguravunga ellam naaku rusikkaga beef pakkoda,beef biryani ellam saaptukittu irukanga.

         Ippo irukkura nelamayila pasanga ellarum veengi poi peepa maadhiri irukkanga,idhula maatu kari vera saapta avalavu thaan.
         \\

         மாட்டுக் கறி உண்பதால் மட்டும் வீங்கிப் போவதில்லை. அளவுக்கு அதிகமாக எதைத் தின்றாலும் வீங்கதான் செய்வார்கள். (தயிர் சாதம்,நெய் தின்று உடல் உழைப்பில்லாமல் கோயில் கருப்பகிரகங்களில் உலவும் கிராஸ் பெல்ட்டுகள் ஒரு உதாரணம்)
         \\
         Modhall sonneenga,varumayila vaadura makkal vera vazhi illama maatukari saapiduraangannu,piragu solreenga maatu kari rusiya irukkumnnu,edhu thevaynnu mudivu pannikunga.
         \\

         மாட்டுக்கறி அவசியத்துக்காகவும் தின்னலாம், சுவைக்காகவும் தின்னலாம். எப்படி உண்டாலும் ஏற்கத்தக்கதே. தின்பது மட்டுமே முக்கியம்.

         \\
         Western researchla poduvagave mammalsa unna koodathunnu solranga,aadavathu parava illa,maadu ellam too much.
         \\

         மேமல்ஸ்ல மனிதக்கறியை விடுத்து மற்ற அனைத்தையும் உண்ணலாம். (எந்த ரிசர்ச் என்று மேற்கோள் காட்டினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் உமது ரிக்கு வேதபதிவைப் பார்த்தாலே தெரிகிறது, காதில் விழுந்ததில் உமக்குப் பிடித்தமானதை மட்டுமே வசதியாக நம்பும் ஒரு ஒம்போது ரூவா நோட்டு நீர் என்று. ஏனெனில் எந்த மருத்துவ பாடத்திலும் அவ்வாறு கூறப்படவில்லை என்று எந்த ஒரு இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவனுக்குக் கூடத்தெரியும் உமது புளுகுகளை)

         \\
         Pacha kuzhanthaingalukku puradham kedaikka aayiram vazhi irukku, arasu atha ozhunga seyyanum.

         Maatukari illamale adha seyyalam
         \\

         பச்சக் குழந்தைங்களுக்கு எளிதாக செரிமானம் ஆவது மிருக பொருட்கள்தான். முட்டை, பால் மற்றும் மாமிசம். மாமிசம் 6 மாதத்திற்கப்புறம் தாராளமாக கொடுக்கலாம். மாமிசத்தில் மாடு என்ன, கோழி என்ன, பன்றி என்ன.

         • அப்படியே பன்னிக்கறியின் புராதண பெருமைகளையும் விளக்கினால் நன்றாக இருக்கும்…

          எழுது பன்றிக்கறியின் மகிமைகளை…

       • மருத்துவர். நான் கடவுள் இல்லை அய்யா சொல்கிறார்கள் எல்லாரும் கேட்டு கவனமா செயல் படனும் சரியா? தம்பி இன்னும் தீயா வேல செய்யணும்!

        பன்னி கரி கூட தான் ரொம்ப நல்ல இருக்குதாம்! என் அதோட சுவய பத்தி எழுத கூடாது?

  • … aghaasu hanyate ghavo’rjunyoh paryuhyate
   – RigVeda 10:85-13
   13 The bridal pomp of Sūrya, which Savitar started, moved along.
   In Magha days are oxen slain, in Arjuris they wed the bride.
   – Ralph T.H. Griffith, [1896]

   • இதன் அர்த்தம் என்னவென்றால்
    சூரியாவின் திருமணத்தின் கோலாகலங்களின் புறப்பாடுகள் சவித்ருவால் ஆரம்பிக்கப்பட்டு பின்சென்றன. மக நாட்களில் பசுக்கள் கொல்லப்பட்டன. அர்ஜுரத்தில் மணமுடிக்கப்பட்டது.

    • ஆகயோ — மாசி மாத நாட்களில் . . .
     ஆர்ஜுன்யோ — பங்குனி மாதநாட்களில் . . .
     கன்யதே — கொல்லப்பட்டன.
     காவயோ — பசுக்கள்
     பர்யுக்யதே — மணமுடிக்கப்பட்டது.

     • Avunga North West Pakistanla kadunkulurla ukkanthukittu maatu kari saaptanga,neenga madrasula adikkira 45 degree veyyilla maatukari saapida solreenga,enna oru kolaveri.

      • நீங்கள்தான் சொன்னீர்கள் ரிக்கு வேதம் வெஜிடேரியன் சாப்பிட சொல்லுச்சு என்று. இல்லையென்று ஆதாரம் காட்டிய பின் பாக்கிஸ்தான் அண்டார்டிகா என்று ஜகா வாங்குறீங்க. 45 டிகிரியில மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று ஏதாவது இருக்கா என்ன. இதுக்கும் வேதத்துல இருந்து ஆதாரம் காட்டுங்க உங்க வழியில. (பாக்கிஸ்தானுலயும் மாசி பங்குனியில வெயில்தான் அடிக்கும்).

    • Dear sir,

     It seems you have descended to misquote or use vedas to wrongly support things. Whatever you have said may be for old yugas, in this kali yuga one should adopt 100% ahimsa only. Including avoiding leather articles.

     I use only Rexine type Shoes and belts, it is not very tough. Where there is will, there is way.

     neenga adharmatha parapadhel — dont be mesenger for darkness and Kali Purushan.

     Be Loveable to all creatures. Om Shanthi.

  • Hari bro! Did your father/grandfather taught you these things to counter people like vinavu. When every literature has been gone through by renowned historians and the truth is revealed, why do you stick onto that same old story? It is obvious that you guys have either not evolved or you dont have rational thinking. How can you dare say that brahmins did not eat beef? can you specify any quotes from vedas and suchlike to substantiate your points? Do not bluff like this. You better ask your fellow brahmins to respect the human race and then give respect to other mammals, reptiles or aves, until then don;t vouch for things you cannot substantiate.

   • வேள்வியில் பலி கொடுக்க மாவால் செய்யப்பட்ட விலங்குகளை கொண்டு வருமாறு வேள்வி நடத்தும் வியாழன் (குரு), முனிவர்கள், அந்தணர்கள் கூற, உயிருள்ள விலங்குகளை பலியிட்டு அவைகளின் மாமிசம்தான் வேண்டும் என்று தேவர்கள் அதை எதிர்க்க, இந்த வழக்கில் மன்னர் வசு, வேள்வியை நடத்துபவர், தேவர்களுக்கு சாதகமாக பஞ்சாயத்தை முடிக்கிறார், அதனால் நரகத்தை அடைகிறார் என்று மகாபாரதம், சாந்தி பர்வத்தில் உபரிசரவசின் கதையில் வருகிறது.

    வால்மீகி ராமாயணத்தில் விசுவாமித்திரர் நடத்தும் யாககுண்டத்தில் அரக்கர்கள் இரத்தம், மாமிசம் ஆகியவற்றை வீசி கெடுத்து வந்ததால் அவர் இராமனையும், இலக்குவனையும் யாகத்தைக் காக்க அழைத்துச் சென்றார் என்றும் வருகிறது.

    வேதங்கள், புராணங்கள் தரும் தகவல்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொள் காட்டும் வகையில் ஒரே அவியலாக இருந்து தொலைப்பதை கவனிக்க வேண்டும்..

   • what story?

    I am clearly saying that eating red meat that of mammals is not healthy,if someone can get green leafy vegetables milk,eggs,chicken or at best mutton,thats more than enough.

    If someone is doing physical work,it is validated he eats red meat but if someone is eating red meat for just taste,it is a dangerous thing.You can see so many americans and arabs who are obese like anything just because of red meat.

    I am not saying u wont get obese/heart problems from eating overdose of milk products also but then they are definitely less harmful than over dose of red meat.

    It is upto you frankly,today getting beef is difficult but not impossible,so what is the problem?

    • இதுதான் பார்த்தது, கேட்டது, படித்தது என்று ஒன்றும் தெரியாமல் உளரிக்கொட்டுவது என்பது.
     http://en.wikipedia.org/wiki/List_of_cholesterol_in_foods
     இந்த வலைத்தளத்தில் சென்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் கரி மச்சான் எப்புடி ஒன்னும் தெரியாமலேயே அடிச்சு வுடுதுன்னு. மாட்டுக்கறியில் கொலஸ்ட்ரால் ஒன்றும் முட்டை அளவிலோ அல்லது ஒரு சில மீனல்லாத கடல்வாழ் உயிரினங்களின் அளவிலோ அதிகம் கிடையாது. இப்பொழுது நீடிய நல்வாழ்விற்கும் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் மாட்டுக்கறியையே “வெஸ்டர்ன் ரிசர்ச்” பரிந்துரைக்கிறது.
     http://www.ehow.com/facts_5620466_beef-high-cholesterol_.html
     http://www.livestrong.com/article/257242-the-amount-of-cholesterol-in-beef/
     http://beefmagazine.com/mag/beef_good_news_beef
     http://articles.timesofindia.indiatimes.com/2012-01-10/diet/30524472_1_lean-beef-cholesterol-levels-ldl

     • Idhula ethanai webpageukku credibility irukku,naan Beef kettadhunnullam sollave illa, inaikki irukkura burger kalacharathukku len beef ellam enga poi theda.

      • lean beaf என்றால் தோல் நீக்கப்பட்ட சதை என்று அர்த்தம்.

      • lean beaf எல்லா இடத்திலும் கிடைக்கும். நாகர்கோவிலுக்கு வாருங்கள். சிறந்த சுவையான மாட்டுக்கறி வாங்கித் தருகிறேன். அல்லது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று கூறுங்கள், வீட்டுக்கே வந்து சப்ளை பண்ண ஏற்பாடு செய்து விடுகிறேன்.

        • எல்லாரும் கேட்கும் கேள்வியையே நானும் கேட்கிறேன். ஏன் நீங்கள் தமிழில் எழுத முயற்சிக்கக்கூடாது.

         • சுப்புரமணி கரிக்குமார் ஆனது நல்லதுதான். ஆனால் தமிழும் கற்றுக்கொள்ளுங்களேன். மிகவும் எளிமையான இனிமையான மொழி நம் தமிழ்.

          • இதை நம்பணும்னா தமிழில் பதிவிடுங்கள்..!!!

       • //நாகர்கோவிலுக்கு வாருங்கள். சிறந்த சுவையான மாட்டுக்கறி வாங்கித் தருகிறேன்.//
        நாகர்கோயிலில் எங்கு பீப் பிரியாணி கிடைக்கும் , மாட்டுக்கறி எங்கே கிடைக்கும் நண்பரே,அடுத்த வாரம் நாகர்கோயில் வருகிறேன் , எனக்கு தேவை படுகிறது.

       • பேருந்தை விட்டு இறங்கிய உடனே நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலேயே கிடைக்கும்.

     • Idhe charta neenga ozhunga apdinga Cholestrol edhula irukkunnu,Naan solradhu ivalavu thaan, neenga veliya poi odi aadi uzhaikkira aalunna,neenga etha vena thingalam,edhuvum aagadhu.

      Appadi ethana peru irukkanga ippo and lean beef,adhukku engayya poga.

 4. ஒரு வேளை எல்லாரும் மாட்டு கறி துன்னும் முசுலீமா மாறிட்ட நாத்திகம் பேச ஆளில்லாமல் போகுமே?அப்பால உங்க வினவு இயக்கம் அம்பேல்தான் பரவாயில்லையா?

  • அப்போ தலித்துகளை எல்லாம் நீங்க இந்துவா ஏற்றுக்கொள்வதில்லையா?

  • என்னமோ மக்கள் எல்லோரும் முஸ்லீமா