Sunday, March 26, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!

நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!

-

மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு!

மோடி

குஜராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடந்த மதவெறிப் படுகொலை வழக்கில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கோரி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது விசாரணையை முடித்து, இறுதி அறிக்கையை இரண்டு மாதங்களுக்கு முன்பு அகமதாபாத் விசாரணை நீதிமன்றத்திடம் அளித்தது.  அந்நீதிமன்றம் இவ்வறிக்கையை உடனடியாக வெளியிடாமல் தன்வசமே வைத்திருந்தபோதும், “இப்படுகொலை தொடர்பாக மோடி மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுக்களுக்கும் போதிய ஆதாரமில்லாததால், அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது” எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு எடுத்த முடிவு, மோடி ஆதரவு கும்பலால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மறைமுகமான ஒத்துழைப்போடு வெளியே கசியவிடப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மோடிக்கு எதிராக வழக்குத் தொடுத்த ஜாகியா ஜாஃப்ரியிடமும், அமைதி மற்றும் நீதிக்கான குடிமக்கள் குழுவிடமும் நீதிமன்றம் தற்பொழுது அளித்துவிட்டது.  இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய விதம், அதனின் முதல் மற்றும் இறுதி அறிக்கைகள்; உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன் ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கை, அதனைச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்றுக் கொள்ள மறுத்திருப்பது ஆகியவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிட்டன.

குஜராத்தில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய மதவெறிப் படுகொலையை கோத்ரா சம்பவத்தின் எதிர்வினை என்றும், ஜாகியா ஜாஃப்ரியின் கணவர் இஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதையடுத்துதான் கொல்லப்பட்டார் என்றும் கூறி நியாயப்படுத்தினார், மோடி. அவரது கூற்றை அப்படியே தனது அறிக்கையில் வழிமொழிந்துள்ளது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  மோடிக்கு எதிரான சாட்சியங்களை நடுநிலையாக நின்று ஆராயாமல், ஏதாவதொரு நொண்டிச்சாக்கைச் சொல்லித் தட்டிக் கழித்து மோடியைக் காப்பாற்றியிருக்கிறது.  “இப்படுகொலைக்கும் மோடி அரசிற்கும் இடையே எவ்விதத்திலும் தொடர்பில்லை; கலவரத்தின்பொழுது மோடியின் அரசும் போலீசும் கடமை தவறாது நடந்துகொண்டனர்” என்று புளுகியிருக்கிறது.  சுருக்கமாகச் சொன்னால், போலீசின் அத்துமீறல்களை விசாரிக்க ஆளும் கும்பலால் அமைக்கப்படும் தலையாட்டி விசாரணை கமிசன்களைவிட மிகக் கேவலமான முறையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் அதன் முடிவுகளும் அமைந்துள்ளன.

‘‘இந்து மதவெறிக் கும்பல் குல்பர்க் சொசைட்டி காலனியில் வசித்து வந்த முசுலீம் குடும்பங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் துணிந்த சமயத்தில், எனது கணவர் இஷான் ஜாஃப்ரி நரேந்திர மோடியைப் பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி கோரினார்.  ஆனால், போலீசு துறையைத் தன்னிடம் வைத்துள்ள மோடியோ இத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த எவ்வித முயற்சியும் செய்யவில்லை.  எனவே, இத்தாக்குதல் மோடிக்குத் தெரிந்து, அவரது மறைமுகமான ஒப்புதலோடுதான் நடந்தது” என மோடி மீது  ஜாகியா ஜாஃப்ரி  குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இக்குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளியுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, “மோடிக்கு இஷான் ஜாப்ரியிடமிருந்து எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் வரவில்லை; அவரிடமிருந்து மட்டுமல்ல, குல்பர்க் சொசைட்டியில் வசிக்கும் யாரிடமிருந்தும் தாக்குதல் நடந்த சமயத்தில் மோடிக்கோ, மற்ற உயர் அதிகாரிகளுக்கோ எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் வரவில்லை; குல்பர்க் சொசைட்டி மீது இந்து மதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்த முயலுவது பற்றி அகமதாபாத் போலீசு ஆணையருக்குத் தொலைவரிச் செய்தி அனுப்பியதாக, அப்பொழுது உளவுத்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் அளித்திருக்கும் சாட்சியமும் இட்டுக்கட்டிய பொய்; அத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த அகமதாபாத் போலீசு ஆணையர் தன்னால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளது தூரம் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டு மோடியையும் போலீசு அதிகாரிகளையும் விடுவித்துவிட்டது.

மோடி

இதுவொருபுறமிருக்க, “ஒரு பெரும் கூட்டம் குல்பர்க் சொசைட்டியைச் சுற்றிவளைத்திருந்த சமயத்தில்,  இஷான் ஜாஃப்ரி தனது துப்பாக்கியால் அக்கூட்டத்தை நோக்கிப் பலமுறை சுட்டார்.  இத்தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார்.  இஷான் ஜாப்ரியின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைதான் குல்பர்க் சொசைட்டி மீது தாக்குதல் நடத்தக் காரணமாகிவிட்டது” எனக் குறிப்பிட்டு, இஷான் ஜாஃப்ரி நடத்திய துப்பாக்கிச் சூடுக்கு எதிர்வினையாகத்தான் இப்படுகொலை நடந்ததாகக் காரணத்தைக் கற்பித்திருக்கிறது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  கடந்த பத்தாண்டுகளில் இப்படிபட்ட கற்பிதத்தை மோடியையும், சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் தவிர வேறுயாரும் முன்வைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மார்ச் 1, 2002 அன்று ஜீ  டி.வி. என்ற தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மோடி, “இஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதை வினை என்றும், அவர் கொல்லப்பட்டதை எதிர்வினை என்றும் கூறியதோடு, கோத்ராவில் ரயில் பெட்டி எரிந்து போன சம்பவத்தை, அங்கு வாழும் முசுலீம்களின் கிரிமினல்தனத்தின் வெளிப்பாடு;  (இப்பொழுது) அவர்கள் புரிந்துள்ள கொடூரமான குற்றத்திற்கு எதிர்வினை நடந்து கொண்டிருக்கிறது” என்று வருணித்தார்.  மோடியின் இந்த இந்து மதவெறி பிடித்த பேச்சுகள் அனைத்தும் இந்து மதவெறிக் கும்பலின் கொலைவெறியைத் தூண்டிவிட்டன எனக் குற்றஞ்சுமத்தியிருந்தார், ஜாகியா ஜாஃப்ரி.

‘‘நரேந்திர மோடி ஜீடி.வி.க்கு அளித்த பேட்டியின் மூல சி.டி.யைக் கேட்டிருந்தோம்.  ஆனால், அதனை அந்நிறுவனம் எங்களுக்கு அளிக்கவில்லை” என்ற அற்பத்தனமான நொண்டிச்சாக்கைக் கூறி, மோடி மீது வழக்குத் தொடர முடியாது எனக் கூறிவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  மேலும், இச்சம்பவங்களை வினையாகவும் எதிர்வினையாகவும் குறிப்பிட்டு மோடி கூறியதை, அதன் பின்னணியோடு வைத்துப் பார்க்கும்பொழுது அவர் மீது வழக்குத் தொடருவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டு, மோடியை மட்டுமல்ல, இஷான் ஜாஃப்ரி கொலையை எதிர்வினையாகச் சித்தரித்த தன்னையும் நியாயப்படுத்திக் கொண்டுவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.

‘‘கோத்ரா சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு, எதிர்காலத்தில் இப்படியொரு குற்றச்செயல் எந்தவொரு இடத்திலும் நடக்காதிருக்கும்படி, கடுமையான தண்டனை அளிப்போம்” என மோடி பிப்.27 மற்றும் பிப்.28, 2002 ஆகிய இரு தினங்களிலும் திரும்ப திரும்பக் கூறினார்.  பத்திரிக்கைகள் வாயிலாகவும், சட்டசபையிலும், பொதுமக்களைச் சந்தித்த இடங்களிலும் மோடி இதனைத் திரும்பதிரும்பக் கூறினார்.  இது, சட்டம்  ஒழுங்கை காக்க வேண்டும்; குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை தர வேண்டும் என்ற அவரது உறுதியைக் காட்டுகிறது.  இப்படிபட்ட எண்ணங்கொண்ட மோடி மீது இரு மதத்தினர் இடையே பகைமையைத் தூண்டிவிட்டார் எனக் குற்றஞ்சுமத்துவதற்கு அடிப்படை இருக்க முடியாது.  அது மட்டுமல்ல, அவரது இந்த உரை, “இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக்கூடாதென மோடி அதிகாரிகளிடம் கூறினார்” என அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் மறுதலிக்கிறது.  அப்படியே மோடி கூறியிருந்தாலும்கூட, அது நான்கு சுவருக்குள் கூறிய தனிப்பட்ட கருத்தாகும்.  அதற்காக மோடி மீது வழக்குப் பதிய முடியாது” என மோடிக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை வக்காலத்து வாங்கியிருக்கிறது.

எல்லாச் சதிச் செயல்களுமே நான்கு சுவருக்குள்தான் பேசித் தீர்மானிக்கப்படுகின்றன.  சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வாதப்படி பார்த்தால், கலவரத்தில் நேரடியாக இறங்காமல் சதிச் செயலைத் தீட்டும் முக்கியப் புள்ளிகள் யாரையும் தண்டிக்கவே முடியாது.  மேலும், கோத்ரா சம்பவத்துக்குக் காரணமெனக் குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களைத் தண்டிப்பது பற்றித்தான் மோடி நீட்டி முழங்கி வந்தாரே தவிர, அவர் மதவெறிப் படுகொலைகளை நடத்திய இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராகச் சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை.  மாறாக, அக்கொலைவெறி பிடித்த கும்பலைக் காப்பாற்ற அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார், மோடி.

“முசுலீம்கள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவதற்காக நாம் அகதி முகாம்களை நடத்து முடியாது” என்றவாறெல்லாம் மேடைதோறும் பேசி, முசுலீம்களை அவமானப்படுத்தி வந்தார்.  ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, “மோடி அமைதியை விரும்பினார்; குற்றவாளிகளைத் தண்டிக்க முயன்றார்; அகமதாபாத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்; கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்” என இட்டுக்கட்டிய பொய்களை எடுத்துவைத்து, இந்து மதவெறி கொலைகாரன் மோடியை மத நல்லிணக்கவாதி போலத் தனது இறுதி அறிக்கையில் சித்தரித்துள்ளது.

கோத்ரா சம்பவம் நடந்த நாளன்று (பிப்.27, 2002) இரவில், மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்ததைச் சிறப்புப் புலனாய்வுக் குழு மறுக்கவில்லை.  ஆனால், அக்கூட்டத்தில் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் கலந்து கொண்டதற்கோ, அக்கூட்டத்தில், “இந்துக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது” என மோடி பேசியதாகக் குற்றஞ்சுமத்தப்படுவதை நிரூபிப்பதற்கோ போதிய ஆதாரமில்லை என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவு.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிற அதிகாரிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் இம்முடிவுக்கு வந்ததாகத் தனது இறுதி அறிக்கையில் கூறும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது முதல் அறிக்கையில் அந்த அதிகாரிகளின் சாட்சியங்களை நம்பமுடியாது என முரணாகக் குறிப்பிட்டுள்ளது.  அவர்களின் சாட்சியங்களை நம்ப முடியாது எனும்பொழுது, அக்கூட்டம் தொடர்பான கூட்டக் குறிப்புகளை வாங்கிப் பெற்று, அதன் அடிப்படையில் மோடி மீதான குற்றச்சாட்டு பற்றி சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால், விசாரணைக் குழுவோ அக்கூட்டக் குறிப்புகளைக் கேட்டுப் பெற்று விசாரணை நடத்தாமல், நம்பத்தகாத சாட்சியங்களின் வாக்குமூலங்களை ஏற்று மோடியைக் காப்பாற்றியிருக்கிறது.

மோடி

பிப்.27, 2002 கூட்டம் மோடியும் அதில் கலந்துகொண்ட அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொள்ளுவதற்காக நடத்தப்பட்டிருக்க முடியாது.  குஜராத் மாநிலமெங்கும் முசுலீம்களுக்கு எதிரான கலவரம் எந்நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் நடந்துள்ள அந்த முக்கியமான கூட்டம் எந்தவிதமான எழுத்துபூர்வமான பதிவின்றி நடந்திருக்க முடியுமென்றால், அல்லது அந்தப் பதிவுகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றால், சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியின் கிரிமினல் உள்நோக்கத்தைச் சந்தேகித்திருக்க வேண்டும்.  ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, அக்கூட்டம் நடந்தது தொடர்பாக அரசிடம் ஆவணங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி ஒரு கேள்வியைக்கூட எழுப்பவில்லை.  அதே சமயம், அச்சதிக்கூட்டம் பற்றி சாட்சியம் அளித்துள்ள சஞ்சீவ் பட்டை, மோடி அரசு பல முக்கியமான தடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவருவதை அம்பலப்படுத்தி வரும் சஞ்சீவ் பட்டை, கறைபடிந்தவராகக் குற்றம் சாட்டுகிறது.  அவரது கடந்தகால அதிகாரமுறைகேடுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் அம்பலப்படுத்தி, அவரை நேர்மையற்ற சாட்சியம் என முத்திரை குத்துகிறது.  மதவெறிப் படுகொலைக்கு ஆதரவாக எவ்வித எழுத்துபூர்வமான சாட்சியமின்றிப் பல வாய்மொழி உத்தரவுகளைப் போட்ட மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் போலீசு அதிகாரி சிறீகுமாரின் சாட்சியத்தையும் உள்நோக்கம் கொண்டதென ஒதுக்கித் தள்ளுகிறது.

‘‘சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநருமான ராகவன் சட்டப்படி நடக்கக்கூடிய நேர்மையான அதிகாரி, எவ்விதமான அரசியல் சார்பும் இல்லாதவர், மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடியவர்.  எனவே, அப்படிப்பட்டவரின் தலைமையில் நடக்கும் விசாரணையில் நீதி நிலைநாட்டப்படும்” என ஒளிவட்டம் போட்டுக் காட்டப்பட்டது.  ஆனால், ராகவன் இந்த ஒளிவட்டத்தை மோடியைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.  தனது கீழ் அதிகாரியான ஏ.கே.மல்ஹோத்ரா நடத்திய விசாரணை அறிக்கைகளில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததற்கு மேல், அவர் இந்த விசாரணையில் பாரதூரமான அக்கறை எதுவும் செலுத்தவில்லை.  சோ,  இந்து என்.ராம் ஆகியோரின் ஆலோசனையைப் பெற்றுத்தான் ராகவன் இறுதி அறிக்கையைத் தயாரித்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டையும் நிரூபிப்பதாகவே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகள் அமைந்துள்ளன.

இம்முடிவுகள் மோடியை பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து மட்டும் விடுவித்துவிடவில்லை; அவரின் பிரதமர் கனவுகளுக்கு உந்து பலகையாகவும் பயன்பட்டு வருகிறது.  மேலும், அரசு இயந்திரம் எந்தளவிற்கு இந்துமயமாகியிருக்கிறது என்பதையும்; இந்த அரசு இயந்திரத்தையும் இன்றுள்ள சட்டங்களையும் கொண்டு மோடி, அத்வானி, பால் தாக்கரே உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலின் தளகர்த்தர்களைத் தண்டித்துவிட முடியாது என்பதையும் மீண்டும் எடுத்துக்காட்டுவதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் அதன் முடிவுகளும் அமைந்துள்ளன.

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

________________________________________________

  • ஹரிகுமார்,

   //what abt the 57 people who died in the train?//

   வழக்கு நடத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 36 பேரை குற்றவாளிகள் என்றும் 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
   http://articles.timesofindia.indiatimes.com/2011-02-22/india/28624491_1_maulvi-umarji-godhra-train-maulana-umarji

   ஆனால், அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் கொலைக்கும் பயங்கரவாதத்துக்கும் சதி திட்டம் தீட்டிய மோடி கும்பலின் மீது வழக்கு தொடர்வது கூட நடக்கவில்லை. அதைத்தான் இந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

   • Where is the proof that Modi orchestrated the riots?

    Supreme court has appointed an SIT to do this,i dont know how many of you here seem to be so convinced that Modi did it.No evidence anywhere suggests that,media shouting doesn’t alone declare a case.

    • ஹரிகுமார்,

     ‘ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்ததற்கு ஆதாரம் என்ன?’ என்றுதான் ஹிட்லரும் அவரது நாஜி கட்சியும் ஜெர்மனியில் ஆட்சியில் இருந்தது வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள் ‘நடுநிலையாளர்கள்’.

     உச்ச நீதி மன்றம், எதிர்க்கட்சிகள், மத்திய அரசு இவர்கள் தலையிட விரும்பாத வரம்புக்கு வெளியே, குஜராத்தில் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பது வரை, மோடியின் குற்றங்களுக்கான ஆதாரம் எந்த வடிவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

     ‘ஊடகங்கள் சொல்வது எல்லாம் பொய், தீஸ்தா சால்வத் பொய்யர், மோடி சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் ஒரு அகிம்சா வழி இயக்கம், இந்துத்துவா வாதிகள் அமைதி பிரியர்கள்’ – என்று நாம் நம்ப விரும்புவதை மட்டும் நம்பினால் மட்டுமே மோடி குற்றமற்றவர் என்று நினைக்க முடியும்.

     • All that is not important, Supreme court keeps a SIT to investigate things,even if there is an inch of incriminating evidence against Modi,he ll get prosecuted.So far there is none,Modi has enough enemies inside and outside the party.

      So,nobody is stupid is assume whatever they want.That way i can assume anybody is guilty. Kamaraj should be guilty for Muthuramalinga thevar’s death, why people like Late Pazhani Baba,Al Umma Madani etc were not punished even after brazenly talking about killing people and disrupting communal balance.

      Try to accept justice,world doesn’t move as u want.

      • //All that is not important, Supreme court keeps a SIT to investigate things,even if there is an inch of incriminating evidence against Modi,he ll get prosecuted.So far there is none,Modi has enough enemies inside and outside the party.//

       ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயர் இங்கிலாந்தில் அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டனர். அதை விசாரித்த விசாரணை குழு அரசியல் காரணங்களால் அவர் மீது வழக்கு தொடர முடியாது என்று முடிவு செய்தது.

       http://en.wikipedia.org/wiki/Jallianwala_Bagh_massacre

       டயர் இறந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சரிவுக்குப் பிறகு வரலாறு வேறு விபரங்களை சொல்கிறது. இந்திய மக்களுக்கு உண்மை தெரியும்.

       அதே போல இந்துத்துவா சக்திகள் வீழ்த்தப்பட்ட பிறகு உண்மை நிறுவப்பட்டு வரலாற்றில் மோடி ஒரு கொலைகாரர் என்பது பதிவாகும்.

       //So,nobody is stupid is assume whatever they want.That way i can assume anybody is guilty. Kamaraj should be guilty for Muthuramalinga thevar’s death, why people like Late Pazhani Baba,Al Umma Madani etc were not punished even after brazenly talking about killing people and disrupting communal balance.//

       மோடியை பற்றி பேசும் போது அதை மட்டும் பேசலாம். இல்லை என்றால் விவாதம் திசை மாறி எங்கெங்கோ போகும். காமராசர் மீதான குற்றச்சாட்டு, பழனி பாபா/மதானி விஷயங்களை தனியாக பேசலாம்.

       //Try to accept justice,world doesn’t move as u want.//

       உண்மை, ஆளும் சக்திகள் நீதி என்று ஒன்றை திணிக்க முயற்சித்தாலும் உண்மையை நீண்ட காலம் மூடி வைக்க முடியாது.

       • Modi is not guilty,you may think he could have done more.But thats all there is to it.

        General Dyer is irrelevant here,he is obviously guilty,he did it publically.There is nothing incriminating against Modi.

 1. உங்களைப் பொருத்தவரை முஸ்லீம் அடிப்படைவாதத்துக்கு இன்னொரு பெயர் தான் மத நல்லிணக்கம் என்றால் மோடி மத நல்லிணக்கவாதி அல்ல தான். அதற்காக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

  எந்தக் கோர்ட்டில் கேஸ் போடுவீர்கள் ? போட்டுக்கொள்ளுங்கள்! உங்களால் என்ன #%ங்க முடியும் என்று பார்க்கிறேன்.

  உங்களுக்கெல்லாம் கோவையில் குண்டு போட்டு அப்பவிகளைப் படுகொலை செய்த மதானி தான் மத நல்லிணக்கவாதியாகத் தெரிவார்…உங்களைச் சொல்லிக் குற்றமில்லை

  டீஸ்டா செடல்வாத் அம்மணிக்கு கோர்டி வெச்ச ஆப்புகள் போதாது…இன்னும் வேண்டும் போல் உள்ளது. அம்மணி தான் ஒரு வெளிநாட்டுக் கைக்கூலி என்பதை கோர்டில் திட்டவட்டமாக நிரூபிக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது. எழவு டாட் காமின் தராதரம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்றால், அத்தகய கேவலமான ஜந்து டீஸ்டாவை சப்போர்டு செய்யும் லெவலில் தான், என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறீர்கள்.

  • ஆம் நீங்கள் சொல்வது சரி. இந்து என்று சொன்னாலே இந்துத்வா பாசிசம், பார்பனியம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் முஸ்லிம் , கிறிஸ்தவர் என்றால் மட்டும் மதசார்பின்மையாம். இது என்ன நியாயம்.

   • கரிகாலன்,
    மத அடிப்படைவாதம் என்பது மக்களுக்கு எதிரானது.அதனால் ஒரு நன்மையும் நடக்கப்போவதில்லை. எந்த மதத்தின் அடிப்படைவாதாமும் எதிர்க்கப்பட வேண்டியதே, அதை வினவு செய்துகொண்டு தான் இருக்கிறது.

    ஆனால் ஒவ்வொரு மதவெறியர்களும் இங்கு பின்னுட்டத்தில் ஒரே மாதிரியாக சொல்லி வைத்தார் போல் தான் விவாதிக்கிறார்கள். இந்து மத வெறியர்கள் இசுலாமிய அடிப்படை வாதத்தை கை காட்டி நழுவுவார்கள். இசுலாமியர்களோ இந்து மத வெறியர்களை கை காட்டி நழுவுவார்கள். கிறிஸ்துவர்களை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை.

    பல ஆயிரம் பேரை கொல்ல தலைமை தாங்கிய மோடி மதநல்லிணக்கவாதியா? இதற்கு பதில் சொன்னால் தேவலை. பின்லேடன். ஜிகாத், என்று வடை சுற்ற வேண்டாம்.

    உழைக்கும் மக்களை திட்டமிட்டு பிரிக்கும் இன,மொழி, மத அரசியல்களை எதிர்க்கும் அதே வேளையில் தவறு செய்கிறவர்களை கண்டிப்பது தான் சரி. அவர் எந்த மதமாக இருந்தால் என்ன எந்த இனமாக இருந்தால் என்ன. வினவை தொடர்ந்து வாசிக்கவும்.

    • இரு தரப்பு மீதும் தவறு உள்ளது. ஒரு சாரார் கோத்ரா ரயிலை எரித்தது தவறு என்றால் அதன் எதிர் விளைவாக மறுசாரார் கலவரத்தை தூண்டியதும் தவறு அதே போல் அவசர கால நடவடிக்கை மூலம் தடுக்காததும் தவறுதான். எப்படி ஒரு சிறிய தீப்பொறி பெரிய காட்டுத்தீயாக மாறுகிறது அதோ போல்தான் இதுவும். இதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. ஒருவர் மீது மட்டும் குற்றம் சுமத்தினால் அது எப்படி நியாயமாகும்?

     /*மத அடிப்படைவாதம் என்பது மக்களுக்கு எதிரானது.அதனால் ஒரு நன்மையும் நடக்கப்போவதில்லை. எந்த மதத்தின் அடிப்படைவாதாமும் எதிர்க்கப்பட வேண்டியதே, அதை வினவு செய்துகொண்டு தான் இருக்கிறது.
     உழைக்கும் மக்களை திட்டமிட்டு பிரிக்கும் இன,மொழி, மத அரசியல்களை எதிர்க்கும் அதே வேளையில் தவறு செய்கிறவர்களை கண்டிப்பது தான் சரி. அவர் எந்த மதமாக இருந்தால் என்ன எந்த இனமாக இருந்தால் என்ன.*/

     அப்படி தெரியவில்லையே வினவு திட்டமிட்டு ஒரு சாராரை மட்டும் குற்றம் குறை சொல்வது போல் உள்ளது. என்ன மதமாக இருந்தாலும் என்ன இனமாக இருந்தாலும் தவறென்றால் கண்டிபீர்கள் என்றால் பாகிஸ்தானில் அப்பாவி இந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்து திருமணம் செய்து வைகிறார்கள், இந்து கோயில்கள் இடிக்கபடுகின்றன இந்து வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யபடுகின்றனர். அசாமில் போடோ இன மக்கள் மீது வங்கதேச சட்டவிரோத ஊடுருவல் கும்பலின் இனவெறி தாக்குதல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவற்றையெல்லாம் எதுவும் கேட்பதில்லையே ஏன்? காவி தீவிரவாதம் (அனைத்து இந்துக்களும் அல்ல) பற்றி பேசும் நீங்கள் முஸ்லிம் தீவிரவாதம்(அனைத்து முஸ்லிம்களும் அல்ல) பற்றி பேசாதது ஏன்?

     • Boss, Gujarat is a place of historic bad blood between Hindus & Muslims.Thats why the partition happened. This is why India should have been a Hindu Rashtra.Atleast the North should have been clean off muslims,otherwise centuries of anger will erupt.You think those policemen who are supposed to stop the riots dont have the same feeling? They have it as much as anyone else.Only thing i dont like is killing women and children.One should never do that.

      • ஹரிகுமார்,

       உங்களது கூற்றை நான் ஆமோதிக்கிறேன். ஆமாம். இவர்களை இந்தியாவிலிருந்து இல்லை இந்த உலகிலிருந்தே துடைத்தெறிய வேண்டும். அதற்கு மோடி வழியே உன்னதமான வழி என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்? மோடி வழி இயக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறதா?

       • எங்கே அம்பி,
        ஒரு பதிவு விடாமல் வந்து பார்ப்பனியத்துக்கு முட்டு கொடுக்கும் அம்பி அவர்களே, முன்பு திவா பார்ப்பனர்களை கொல்ல வேண்டும் என்று அல்ல தமிழகத்தை விட்டு விரட்டியடிக்கனும்னு எழுதுனதுக்கே பொங்கி எழுந்த நியாயஸ்தரே,

        இதோ இந்து மதவெறி ஓநாய்கள் கொலை வெறியோடு முஸ்லிம்களை உலகத்திலிருந்தே தொடச்சு எறியணும்,கொறஞ்சது வட இந்தியாவிளுருந்து தொரத்தி அடிக்கனும்னு ஊளையிடுவது குறித்து கள்ள மவுனம் சாதிக்கலாமா. இதுதான் உங்கள் நேர்மையா.

        • அன்பு,

         அம்பி பாரத மாதாக்கு புடவை கட்டி பஜனை பாடிக்கிட்டு இருக்காரு. பஜனை முடிஞ்சதும் வந்துருவாரு.

         இங்கு எத்தனை சாமிங்கதாய்யா இருக்கு. இதுவரைக்கும் இந்தியாவுல இருக்குற கல்லு, மண்ணு, மரம், பட்டை, கொட்டை, காத்து, கருப்பு, ஆகிய பண்டங்களைத்தான் சாமின்னு சொல்லிக்கிட்டு இருந்தாய்ங்க. இப்போ இந்தியாவையே சாமி லிஸ்டுல சேர்த்துட்டாய்ங்களா? வெளங்கிடும் நாடு.

         • யப்பா ஹரிகுமாரா,

          நீங்க யூ.எஸ்., யூ.கே.ன்னு போயிடுவீங்க, அயோத்தியா மண்டபத்துல பூணூல் விக்கற பஞ்சைப் பார்ப்பான் எங்கே போவான்..?! திராவிட வீர சூரர்களால் வெட்டிவீழ்த்தப்பட்ட பார்ப்பன பாசிசத் தீவிரவாதியாகச் செத்தாலும் சாவானே தவிர போவதற்கு வேற போக்கிடம் இல்லாத அவனைப் போன்ற பஞ்சைகள் தான் பார்ப்பனர்களில் பாதிக்கு மேல் இங்கே…

          • I know that,but is there a choice?

           I pity them,but earnestly i feel this is way out for their own good.
           If the the whole public sentiment is grossly against your existence and nobody wants to even listen to you.

           what can they do? If there be some kinda unity among people of their caste and they help each other,something might happen.

          • \\ திராவிட வீர சூரர்களால் வெட்டிவீழ்த்தப்பட்ட பார்ப்பன பாசிசத் தீவிரவாதியாகச் செத்தாலும் சாவானே //

           அம்பி, ரொம்பவே சீன் போட வேண்டாம்.இத்தனை ஆண்டுகால தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு பார்ப்பனர் மீது கூட கொலைவெறி தாக்குதல் நடந்ததில்லை.இட்டுக்கட்டுதலின் மறுபெயர்தான் பார்ப்பனியமோ.

           அப்புறம் போக்கிடம் இல்லாம இங்கயே சுத்தி சுத்தி வர்றீங்களோ.வரலாறு நெடுக நீங்கள் நாடோடி கூட்டம்தான். நிலப்பிரபுத்துவ காலத்துல பெரும்பாலான ஊர்கள்ல அக்கிரகாரம் கட்டிக்கிட்டு கிராமங்கள்ல குடி இருந்தீங்க.அப்புறம் பிரிட்டிஷ்காரனுக்கு தொண்டூழியம் பாக்குறதுக்கு ”கச்சேரி” இருக்கிற சின்ன நகரங்களுக்கு டேராவை மாத்தி போட்டீங்க.அவன் போன பிறகு IIT,IIM .BHEL ,IAS ,காலேஜ வாத்தியார் பேங்க வேலை, இப்படி பெரிய நகரங்களுக்கு ஓடி போனீங்க.இன்னைக்கு தேதில கிராமங்கள்ல கிட்டத்தட்ட அக்கிரகாரமே கிடையாதுன்னு சொல்லலாம்.சின்ன நகரங்கள்ளையும் அக்கிரகாரத்துல பார்ப்பனர்களை விட பிற சாதிக்காரர்கள்தான் குடி இருக்காங்க.ஏன்னா உங்க ஆளுகளுக்கு சொந்த ஊர் சொந்த மண் என்ற பாசமெல்லாம் கிடையாது.அடுத்து பெரிய நகரங்களை விட்டு மேல்நாடுகளுக்கு டேராவ மாத்திக்கிட்டு இருக்கீங்க.40 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சாவியின் ”வாஷிங்கடனில் திருமணம்” நடக்கும் அளவுக்கு உங்கள் ஓட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

          • அன்பு,

           சரித்திர ஆராய்சின்னா இப்படித்தான் இருக்கணும்… இதையும் சேர்த்துச் சொன்னா சீனு சூப்பராயிருக்கும்.. :

           நிலப்பிரபுத்துவ காலத்தில் பார்ப்பானுங்க கோவணம் கட்டிகிட்டு இருந்தானுங்க.. பிரிட்டிஷ்காரன் காலத்தில பட்டாபட்டி டவுசர் போட ஆரம்பிச்சுட்டானுங்க.. இப்ப ஜட்டி போட்டுக்கிட்டு அலையுறானுங்க.. அசிங்கம் பிடிச்ச பச்சோந்திப் பயலுங்க..

           அப்பறம், நீங்க எத்தனை தலைமுறையா அதே ஊரில் இருக்கீங்க, அன்பு…

         • உங்கள் குடும்பத்துப் பெண் விதவையானால் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணும் விதவையாக வேண்டும் என்று விரும்புவீர்கள் போலிருக்கிறதே?

        • அன்பு,

         மோடி குஜராத்தில் தோல்வியடைந்திருந்தால் இத்தனை ஆதரவு இருக்குமா என்பது சந்தேகம்தான்..

         எப்போதோ ’பரமேசு’ நம்ம ’மனிதனை’ கலாய்க்கச் சொன்னதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது..

         “மோடி நீ கேடியா என்னவோ தெரியாது ஆனா உன் தாடி எனக்குப் பிடிச்சிருக்கு” என்பது போல அவரைக் கொண்டாடுகிறார்கள் போல..

         http://www.dinamalar.com/News_Detail.asp?Id=521073

         மோடியிசம், இஸ்லாமிசம் இல்லாத இந்து-முஸ்லீம் சமுதாயம் காலத்தின் கட்டாயம்….

         • He provides great governance, his state is performing extremely well in all indicators and the law is implemented very well,thats most important in India and thats why he wins again and again.

          • What great performance in his state he has achieved.. Simply do not see the GDP and talk rubbish… GDP growth can never be compared with the development of the people directly… If High GDP = Better Living of people is correct… INDIA’s GDP is higher than AUSTRALIA’s GDP so u are saying INDIANS are leading a better life than australians ???

           To measure the living status of people there is another method HDI – Human development Index. In this list INDIA is NOT even in the first 50… Also when HDI was calculated for INDIAN states GUJARAT came ven below TAMILNADU…

           http://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_and_territories_by_Human_Development_Index

         • நான் என்ன கேட்டிருக்கேன்.நீங்க என்ன சொல்லுறீங்க.மீண்டும் ஒரு முறை படிச்சு பாத்துட்டு சொல்லுங்க இது உளறலா,சாமர்த்தியமா.

          • நான் சொல்றது என்னன்னு சுருக்கமாச் சொன்னா, இதான் :

           மோடியிசம், இஸ்லாமிசம் இல்லாத இந்து-முஸ்லீம் சமுதாயம் காலத்தின் கட்டாயம்….

           எத்தனை மார்க் போடமுடியுமோ அதைப் போட்டுக்கங்க, சார்..

           சிலபஸில இல்லாத ஒண்ணையும் சொல்லட்டுமா..?!

           இந்துமதம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கு கொம்பு சீவி விடும் வேலையை நிறுத்துங்கள்.. உங்களுக்கு வெறுப்பேத்த இந்த மாதிரி கமெண்ட்டுகளைப் போடறவங்களை கண்டிக்க என்னைக் கூப்பிடாதீங்க..

          • நேர்மையற்ற முறையில் வாதம் பண்றீங்க அம்பி,

           \\இந்துமதம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கு கொம்பு சீவி விடும் வேலையை நிறுத்துங்கள்.//

           எங்கே அறிவு நாணயம் இருந்தால் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு வெறியூட்டும் வகையில் நான் எழுதியிருப்பதாக எடுத்தக் காட்டுங்கள் பார்க்கலாம்.

           \\உங்களுக்கு வெறுப்பேத்த இந்த மாதிரி கமெண்ட்டுகளைப் போடறவங்களை கண்டிக்க என்னைக் கூப்பிடாதீங்க..//

           இங்கதான் உங்க நேர்மை பல்லிளிக்குது.பார்ப்பனர்களை வெளியேற்றனும்னு கமெண்டு வந்தா பாஞ்சு வர்ற அம்பிக்கு முஸ்லிம்களை வெளியேற்றனும்,கொல்லணும்னு கமெண்டு வந்தா கண்டிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்ல மனசு வர மாட்டேங்குது. இதை சுட்டிக்காட்டினால் கோவம் வருதோ.உங்களை பொருத்தமட்டில் பார்ப்பனர் மட்டும்தான் மனுசங்களா.

          • என்னோட நேர்மை ஒரு பக்கம் கிடக்கட்டும், அன்பு.. உங்க நேர்மை எப்படி..?! பார்ப்பானையும், இந்துக்களையும் விமர்சிக்கவும், முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும் பாய்ந்து வருவது போல், இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் விமர்சிக்கும் வினவு கட்டுரைகளில் உங்களுடைய விமர்சனப் பின்னூட்டம் எதையும் பார்த்த நினவில்லையே.. திப்புவும், சுவனப்பிரியனும் செய்வது போல், வெளிப்படையாக இஸ்லாமியப் பெயருடன் வந்து இந்து மதத்தை விமரிசித்து, இஸ்லாத்துக்கு ஆதரவாகப் பின்னூட்டமிடுவதும் ஒரு வகையில் நேர்மைதான்.. அந்த நேர்மை இங்கே எத்தனை பேர்களுக்கு இருக்கிறது..?!

           மேலே கொலவெறி பின்னூட்டம் இட்ட சுருளி போன்றவர்களைக் கண்டிக்க இஸ்லாமியப் போர்வாளான நீங்க இருக்கீக, திப்பு இருக்காக, ’அல்லாதான் கடவுள் நான் கடவுள் இல்லை’ இருக்காக, தமிழ் இருக்காக, பரமேசு இருக்காக, சந்தானம் இருக்காக, மற்றும் உள்ள உறவினர்களெல்லாம் இருக்காக.. வாப்பா அம்பி.. என்று என்னையும் ஏனய்யா கூப்பிடுகிறீர்கள்..?! இந்த சுருளி என்பவர் யாரோ, என்னமோ.. 150 கோடி முஸ்லீம்களை நாளைக்கு முடிக்கிறேன், இன்னைக்கு 3.5 கோடி பாப்பானுங்களை முடிக்கிறேன் என்று கொலவெறியை பார்ப்பனுங்க பக்கம் திருப்பிட்டார்னா என்ன பண்றது, அன்பு.. எதுக்கு வம்பு.. உங்களுக்கு ஏனிந்த குசும்பு..?!

          • அம்பி,

           ஏன் பயப்படுகிறீர்கள்? நமக்கு ஏன் பயம்? நட்நிலை என்பதெல்லாம் சும்மா உவ்வே. உங்களது பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் ஒரு சனநாயகவாதியன்று என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது. அதை நான் பாராட்டுகிறேன். உங்களது பிராமண ஆதரவையும் மெச்சுகிறேன். ஆனால் ஏன் நீங்கள் அதனை பூசி மெழுகி சொல்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை? நான் நேரடியாகவே சொல்கிறேன். சரி என்கிறேன். தொழிலாளி தனது நலனுக்காக கொலை செய்யலாம் என்றால் ஒரு பிராமின் செய்யக்கூடாதா? ஹிட்லர் தனது இனத்திற்காக படுகொலை செய்தான். இதுவரையில் வந்த அத்துனை அமெரிக்க அதிபர்களும் தங்களது நலனுக்காக உலக மக்களில் பல லட்சம் மக்களை கொலை செய்தார்கள். செய்துகொண்டும் இருக்கிறார்கள். ஏன் மோடி மட்டும் செயக்கூடாதா? முஸ்லீம்களை தீர்த்துகட்டினால்தான் பிராமின் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்றால் ஏன் மோடி அவ்வாறு செய்யக்கூடாது.? இந்த சமூகத்தில் சனநாயகம் என்பதெல்லாம் ஆளுபவனின், ஆளும் இனத்தின் நலனோடு ஒத்துப்போனால்தான் அது சனநாயகம். உண்மையில் capitalism ஒரு பயங்கரவாதம்தான். பயங்கரவாதத்தினாலன்றி இங்கு ஆட்சியை பிடிக்க முடியாது

          • ஐயா சுருளி,

           நீங்க ஹரிகுமாருக்கு மேலே இருக்கீங்களே.. உங்க நாஜித்தனமான எண்ணங்கள் உங்களுக்கே குழியைப் பறிச்சுடும்.. தயவுசெய்து மதவெறியை விட்டொழிங்க..

          • \\என்னோட நேர்மை ஒரு பக்கம் கிடக்கட்டும், அன்பு.. உங்க நேர்மை எப்படி..?! ……….. முஸ்லீம்களையும் விமர்சிக்கும் வினவு கட்டுரைகளில் உங்களுடைய விமர்சனப் பின்னூட்டம் எதையும் பார்த்த நினவில்லையே.//

           நேர்மை இன்றி விவாதம் செய்கிறீர்கள் என்ற குற்றசாட்டை மறுக்க முடியவில்லை.வழக்கம் போல் சாமர்த்தியம் காட்டுறதா நெனைச்சுகிட்டு ஜெயலலிதா கருணாநிதி பாணியில் நீ மட்டும் யோக்கியமா என்ற லாவணி கச்சேரியில் இறங்குறீங்க.சரி சவாலை ஏத்துக்கிறேன்.என்னோட நேர்மையை பரிசீலிக்க முதலில் என்னோட விவாத முறையை பார்க்க வேண்டும்.நானாக முன்வந்து எந்த பதிவிலும் பார்ப்பனியத்தை விமரிசிப்பதில்லை. சாதி,மதவெறியோடு உங்க ஆளுக சூத்திர,பஞ்சம சாதியினர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதும்போது அவற்றுக்கு பதில் அளிப்பது என்ற வகையில்தான் எனது பின்னூட்டங்கள் இருக்கும்.வினவின் விவாதங்களில் அப்படி இஸ்லாமியர்கள் மதவெறியோடு இந்துமத மக்களுக்கு எதிராக எழுதுவதில்லை.இதை உங்களுக்கு ஒரு சவாலாகவே சொல்கிறேன்.முடிந்தால் அப்படி ஒரு இஸ்லாமியரின் பின்னூட்டத்தை எடுத்துக்காட்டி ”இதை ஏன் நீ கண்டிக்கவில்லை” என கேளுங்கள் பார்க்கலாம்..அந்த வகையில் அவர்கள் மெச்சத்தகுந்த நாகரீகத்துடன் விவாதிக்கிறார்கள்.நீங்களே கவனித்து பார்க்கலாம்.இஸ்லாத்தின் மீதான விமரிசனங்களுக்கு பதிலளிப்பதோடு அவர்கள் நிறுத்திக் கொள்கிறார்கள்.பதில் சொல்றேன்ற பேர்ல தரம் தாழ்ந்து பிற மதங்களை விமர்சிப்பதில்லை.பிற மத மக்களுக்கு எதிராக வெறி கொண்டு பேசுவதில்லை.இந்த நிலமையில நான் அவர்களை கண்டித்து விவாதம் செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை.

           \\ திப்புவும், சுவனப்பிரியனும் செய்வது போல், வெளிப்படையாக இஸ்லாமியப் பெயருடன் வந்து இந்து மதத்தை விமரிசித்து, இஸ்லாத்துக்கு ஆதரவாகப் பின்னூட்டமிடுவதும் ஒரு வகையில் நேர்மைதான்.. அந்த நேர்மை இங்கே எத்தனை பேர்களுக்கு இருக்கிறது..?!//

           உங்க நரித்தந்திரத்த விடவே மாட்டீங்களா.அவர்கள் இந்து மதவெறி அமைப்புகளை விமர்சித்துதான் எழுதுகிறார்கள்.இந்து மதத்தை விமர்சிப்பதாக காட்டுங்கள் பார்க்கலாம்.அதே போல் இஸ்லாமிய மதத்தை ஆதரித்து நான் எதுவும் எழுதியதில்லை.அது என் வேலையுமல்ல.ஒரு மதத்தை ஆதரிப்பது எனபது வேறு.அந்த மதத்தை பின்பற்றும் மக்களுக்கு எதிரான அநீதிகளை கண்டிப்பது எனபது வேறு.இதை கூடவா உங்களுக்கு சொல்லித்தரவேண்டும்.

           \\மேலே கொலவெறி பின்னூட்டம் இட்ட சுருளி போன்றவர்களைக் கண்டிக்க இஸ்லாமியப் போர்வாளான நீங்க …………என்னையும் ஏனய்யா கூப்பிடுகிறீர்கள்..?!//

           புரியுது அம்பி,பார்ப்பனியம் இந்து மதவெறியாட்டத்தை முஸ்லிம் கிறித்துவ மக்கள் மீது ஏவி கொன்று ஒழிப்பதற்கு புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் கருத்து தளத்திலும் செயல் தளத்திலும் பெரும் தடையாக இருக்கிறார்கள் என்ற ஆத்திரமே இங்கு வெளிப்படுது.என்ன செய்வது அம்பி,நீங்க விரும்பிய திசையில் எல்லாம் வரலாற்றின் சக்கரத்தை சுழன்றோட செய்ய முடியாது.அதை தீர்மானிப்பவர்கள் உழைக்கும் மக்களே.

          • அம்பி,

           ராஜபக்சேவுக்காக இங்கு யாருமில்லை என்பதற்காக நீங்கள் ராஜபக்சேவை ஆதரிப்பீர்களோ!

          • அன்பு,

           சவாலெல்லாம் விடாதீங்க.. முக்காட்டை விலக்கிப் பார்த்தால்தானே அம்மாசியா, அப்துல் காதாரான்னு தெரியும்.. அம்மாசி கொண்டையும், அப்துல் காதர் தாடியும் கூட சில சமயம் காட்டிக் கொடுத்துடும்.. வெய்ட் பண்ணுங்க..

           அதுவரை என்னை நேர்மையில்லாதவன் என்றே சும்மாக்காச்சி நெனச்சுக்குங்க.. ஓ.கே.?

          • // ராஜபக்சேவுக்காக இங்கு யாருமில்லை என்பதற்காக நீங்கள் ராஜபக்சேவை ஆதரிப்பீர்களோ! //

           ராஜபக்சே இங்கே ஆதரவற்ற அனாதையோ இல்லை அந்தக் கேடி திருப்பதி பக்தகோடிகளோட சேர்ந்து கொண்டு கும்மியடிச்சிக்கிட்டுருந்தாலோ எனக்கென்ன, சந்தானம்..! எதிர்க்க வேண்டியது எம் கடமை…

          • \\சவாலெல்லாம் விடாதீங்க.. .. ……வெய்ட் பண்ணுங்க.//

           உத்தரவு அரசே.அப்படியே ஆகட்டும்.தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்.

       • பார்ப்பனிய இந்து மதவெறி ஓநாய்களே,

        முஸ்லிம் மக்கள் யார்.அவர்கள் என்ன அரபு நாட்டிலிருந்து பஞ்சம் பொழைக்க வந்தவர்களா.அவர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் இந்து மதத்திலிருந்து உங்கள் சனாதன தர்மத்தின் முடை நாற்றத்தையும் கொடுங்கோன்மையையும் சகிக்க முடியாமல் வெளியேறிய சூத்திர பஞ்சம சாதியினர்.இந்த நாட்டின் பூர்வ குடிகள்.இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள். எமது சகோதரர்கள்.அவர்களை வெளியே போக சொல்லவும் கொன்று ஒழிக்கவும் கைபர் போலன் கணவாய் வழியே ஆடு மாடு ஓட்டிக் கொண்டு பிழைக்க வந்த உனக்கு என்ன உரிமை இருக்கிறது.

        வந்தேறி கூட்டமே உனக்கு எவன் அந்த அதிகாரத்தை தந்தது.

        • There is no evidence for your aryan migration theory.People have long debunked that theory,you can do mass DNA testing of everyone in TN and see how close of far are people from central asia/eastern europe.

         Infact that has already been done and the tests have shown that everyone is from here only and also your own Dravidar Kazhagam have started acknowledging it in their own speeches.

         In fact, many muslims of keezhakarai/kerala/UP have afghan/arab blood and there are clear proofs for that.

         • //There is no evidence for your aryan migration theory.People have long debunked that theory,you can do mass DNA testing of everyone in TN and see how close of far are people from central asia/eastern europe.//

          please answer my only question,

          1) If there is NO aryan invansion how did the iranian language “SANSKRIT” came inside TAMIL NADU ???
          http://en.wikipedia.org/wiki/Sanskrit

          • Persian is the Iranian language long before Sanskrit was supposed to have come here.. Moreover, your logic is weak as people spread ‘out of india’ theory also can answer your great question..

          • Jenil,

           I am not giving any indicators.You go and see Gujarat and see how it is.

           In a state with little arable land and no resources,he has industrialized his state and it is still power surplus.

           They have utilized their conditions very effectively and are doing great.They provide electricity to farmers and to all industrial units,they dont rape their rivers and they are still richer than us.

           Moreover TN was a very advanced state even at independence,our people had great educational levels and good attitude to life and work.Despite all that today we are not at the top like Maharashtra and we are still no.2/no.3

           Dont give indexes like HDI,I wont be surprised if most of the HDI is lowered by the muslims of Gujarat.They dont study,they dont work,they are still stuck with their age old stupidity and they lower the HDI of the state.

          • //I am not giving any indicators.You go and see Gujarat and see how it is.In a state with little arable land and no resources,he has industrialized his state and it is still power surplus.//

           There is no need to go and see the dat i gave itself speaks for itself… Ofcourxe i agree he have achived some good (like POWER self sufficiency)… But the overall rating given to MODI as CM is much extra hiked than what he deserves… My point is GROWTH of country or State is NOT measured by no of factories but its measured y the overall quality of life enjoyed by its people.. In that sense GUJARAT still lacks behind Tamilnadu even.. So the the hike given to MODI as CM is highly overrated.

          • After the supposed Aryan invasion, there were number of other invasions viz., persians, scythians, kushans, huns, greeks, arabs, turkish, mangols, etc happened in north india.. North indians are a mix of central asian – european – persian races.. collectively they are called aryans, of aryavartha.. there is no seperate aryan invasion ever happened in India..

           Latest one was english.. so please write your comments in Tamil..

          • You go see the analysis of many castes of South India also and you ll see haplogroups which match with middle east and many ll also have R1A1 and many will also have eastern indian Mongol DNA.

           Basically every country has mixed racial population,everywhere someone has come from somewhere else.

           Most of the people who claim to be sons of the soil in TN also have mixed blood.

           Indo aryan and dravidian are linguistic groups,thats all.

           Not racial markers.

           some maybe more recent than others,makes no difference.

           what is next? people who migrated from one district to another after that year will also become migrants.

           Coastal kerala and karnataka have people with foriegn blood,are they supposed to leave then?

          • //After the supposed Aryan invasion, there were number of other invasions viz., persians, scythians, kushans, huns, greeks, arabs, turkish, mangols, etc happened in north india.. North indians are a mix of central asian – european – persian races.. collectively they are called aryans, of aryavartha.. there is no seperate aryan invasion ever happened in India.//

           Iam also saying the same again and again… There arfe many invansions including SANSKRIT.. and they still exist in INDI.. Y u r worried only when it comes to ARABIC and MUSLIMS ??

         • //In fact, many muslims of keezhakarai/kerala/UP have afghan/arab blood and there are clear proofs for that.//

          Let it be … If Aryans who came with cattle here can live here means let them also live.What is ur problem ???

          • Indo aryans mixed with the people here and contributed to the society and only culture differs and they are sons of the soil,as much as anyone else.

           Muslims especially have different loyalties,they are here because of a religious invasion of native people and not tribal movement and natural mixing of populations.Until they accept that their forefathers were hindus,they should all go to pakistan.

          • Jenil,

           I am replying to the recent post here.

           I suggest you go to Ahmedabad and see whether the quality is better than Chennai or not.

           What quality of life do you see in Chennai,whatever w ehave,they also have.They also have no Tasmac,better traffic,better roads and less red tape when dealing with government.

           Obviously TN is way more industrialized than Gujarat since a longtime but we are still only on par with the,they have all caught up with us.

           regarding why arabic/muslim are different from the others.

           The others were not religious invasions,they were a natural population movement.Today if you ask hindu he wont say my mother tongue is sanskrit,that ll only be a religious language with texts in them..
           But muslims even in AP/Karnataka will clearly say they speak urdu and that is their language.

           Hindus only have their own regional languages but muslims only have urud,even christians dont say english is our motehr tongue.

           even parsis speak gujarati,then what is the problem of these guy?

           If you are telling me that they dont have a fake pseudo-superiority complex about their own thing,then am very sorry.

         • டி என் ஏ என்றெல்லாம் கூறி ஏன் திசை திருப்பப் பார்க்கிறீர்கள். வரலாறு தெளிவாகத் தான் இருக்கிறது. ஏன் அதையும் பொய்யாக்கித் திரிக்கப்பார்க்கிறீர்கள்? டி என் ஏ என்று போனால் உங்களுக்குத் தான் கேவலம். ஏனெனில் அதில் ஆங்கிலேயர் கலப்படம் எல்லாம் வரும்.

          • யார் யாருக்கு அரபுக் கலப்படம் வருகிறது என்பது தெரிந்துவிடும்…

          • You can go ahead and do DNA testing and you ll find out who has what?

           nobody is scared of that.Btw, That was a reply to Jenil for hia question and DNA is obviously important here because you guys claim Aryan Migration theory for everything.

           So,this is necessary to prove that everyone belongs here and nowhere else.

      • //Boss, Gujarat is a place of historic bad blood between Hindus & Muslims.Thats why the partition happened. This is why India should have been a Hindu Rashtra.Atleast the North should have been clean off muslims,otherwise centuries of anger will erupt.You think those policemen who are supposed to stop the riots dont have the same feeling? They have it as much as anyone else.Only thing i dont like is killing women and children.One should never do that.//

       ‘இந்தியா பார்ப்பனர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையேயான விரோத வரலாற்றைக் கொண்டது. அதனால் நாட்டிலிருந்து பார்ப்பனர்கள் விரட்டப்பட வேண்டும், இல்லை என்றால் ஆயிரம் ஆண்டு கோபம் பொங்கிக் கொண்டே இருக்கும்’

       என்று சொல்கிறீர்களா?