முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-கலாச்சாரம்-ஆகஸ்டு-2012

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

அடிமைகளின் தேசம்!
“வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது.”

கடவுளை நொறுக்கிய துகள்!
“இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவாக மாற முடிகிறது. அறிவியலுக்குள் ஒரு வரலாற்று தொடர்ச்சி வந்துவிடுகிறது. நியூட்டனின் ஆப்பிள் நம்முடைய ஆப்பிளாகிவிடுகிறது.” “தங்களுடைய அறிதல் முறை புலன்சாராத அறிதல் என்று கூறும், மதவாதிகள், ஜக்கி, நித்தி, ரவிசங்கர்ஜிக்களின் அறிதல்கள், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ரகத்தை சேர்ந்தவை. புலனறிவுக்கும், பகுத்தறிவுக்கும் மொழியின் சாத்தியத்துக்கும் அப்பாற்பட்டவையாக அவர்களால் சித்தரிக்கப்படுபவை. எனவே அவை நம்முடைய ஆப்பிளாக முடியாதவை.”

கடவுளை நொறுக்கிய துகள்! ஒரு வரலாற்று விளக்கம்
“கடந்த மாதத்தில் உள்ளூர் பத்திரிகைகள் முதல் உலகப் பத்திரிகைகள் வரை தலைப்புச் செய்தியாக இருந்தது – ‘கடவுள் துகள்’. ஐரோப்பாவின் செர்ன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘கடவுள் துகளை’க் கண்டுபிடித்து விட்டனர் என்பதே இச்செய்திகளின் சாராம்சம். விஞ்ஞான மொழியில் சொல்வதானால் தற்போது ‘பிடிபட்டிருக்கும்’ துகளை ஹிக்ஸ் போசான் துகள் என்று சொல்லலாம். இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்க்கும் முன் இந்த ஆராய்ச்சியைப் பற்றியும் அந்தத் துகளைப் பற்றியும் விஞ்ஞானம் சொல்லும் விளக்கங்களைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

நாமக்கல்பிராய்லர்பள்ளிகள்!
“நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே இந்தப் பள்ளிகள் உத்திரவாதமளிப்பது போல் அதிக மதிப்பெண்களைப் பெறுவதில்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்ட இரண்டாண்டுகளில் இம்மாணவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவர்களை வேறொரு வகையில் உளவியல் ரீதியில் தயார் செய்கின்றது. அடிமைத்தனம், பந்தயத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய வெறி, காரியவாதம், சமூக உறவுகளின்மை என்று பலவற்றை அந்த மாணவர்கள் பெறுவதோடு, வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழவும் வேண்டியிருக்கிறது.”

 கல்லறைக் கருநாகங்கள்!
தனக்கு நடந்த அநியாயத்தைப் பாட்டி போதகரிடமும், சர்ச் கமிட்டி மெம்பர்களிடமும் முறையிட்டிருக்கிறாள். அவர்களோ, கோயில் குட்டியாருக்கு ஏற்கெனவே சம்பளம் குறைவு என்றும், இருந்தாலும் அத்தனை கஷ்டத்தோடும் தேவ காரியத்தில் ஈடுபட்டிருப்பவர் மேல் அபாண்டமாகக் குற்றம் சொல்லக் கூடாது என்றும், அப்படிப்பட்ட காரியத்தை அவர் செய்யக் கூடியவரல்ல என்றும் பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள். தான் அத்தனை நேசித்த கோயிலைச் சேர்ந்தவர்களே ஏமாற்றி விட்டார்களே என்ற விரக்தியில் அவர் இப்போதெல்லாம் கோயிலுக்குப் போவதில்லையாம்.”

சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் எஸ்.எம்.எஸ். புரட்சி!
“உண்மையில் ஊழலையோ, பிற சமூகக் கேடுகளையோ எதிர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தெருவிலறங்கிப் போராடியாக வேண்டும். ஆனால், அதற்கு லீவு போட வேண்டும்; வெயிலில் நிற்க வேண்டும்; அரசு அடக்குமுறைகளைச் சந்திக்க வேண்டும்; சம்பள இழப்பைச் சந்திக்க வேண்டும் – அதிகபட்சமாக வேலையிழப்பையே கூட சந்திக்க வேண்டியிருக்கலாம் – இந்த இக்கட்டான நேரத்தில் தான் அமீர் கான் ஆஜராகிறார். சும்மா ஒரு எஸ்.எம்.எஸ் செய்தாலேயே நீங்களும் ஒரு சமூகப் போராளியாகி விடலாம் என்கிற எளிய வழியைத் திறந்து விடுகிறார். நாம் யாரையும் குற்றவாளியாக்க வேண்டாமே என்கிறார்.”

 கருணையா, கொலையா? வரமா, சாபமா?
“அந்த முப்பதாவது நாள், அதிகாலை நான்கு மணியளவில் திண்ணையில் படுத்திருந்த சுதா, நாலு வயசு முதல் குழந்தையை தன் பாவடை நாடாவாலும், இரண்டு மாதம் கூட முடியாத அடுத்த குழந்தையை தன் கை விரல்களாலும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு, கடைசியாகப் புடவையால் தானும் தூக்குப் போட்டு விட்டாள். உயிர் போகும் நிலையில் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த உறவுக்கார சனங்க வெளியில் வந்து பார்த்து, சுதாவைக் காப்பாற்றி உடனே கார் வைத்து நகரத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.”

 திரைவிமரிசனம்: ‘மேட் சிட்டி‘: பேனைப் பெருமாளாக்கும் செய்தி ஊடகங்கள்!
“சன் டி.வி.யின் உலகச் செய்தியோ, புதிய தலைமுறையின் நாசூக்கான விவாதமோ எல்லாமுமே அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களின் பாதையில்தான் பயணிக்கின்றன. அத்தகைய அமெரிக்க செய்தி ஊடகங்களின் வணிக வெறி ஒரு அப்பாவியை எப்படி அலைக்கழித்து, அவனது இயல்பான பிரச்சினையை எப்படி ஒரு தேசியப் பிரச்சினையாக மாற்றி, மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசும் திரைப்படம் தான் இயக்குநர் கோஸ்டா கவ்ராசின் ’மேட் சிட்டி’.”

குறுக்கு வெட்டு
ஜீன்ஸ் அணிந்தால் கொலை, பேட்மேன் ரிடர்ன்ஸ், ராம்போவுக்கு புரியுமா, இந்தியாவின் உறக்கமின்மை, தங்கக் கவலைகள், காதல் கொலை, கட்சி மாறி ஓட்டுப்போடும் கட்டுப்பாடான கட்சி…

பிச்சை புகினும் கற்கை நன்றே….
“யாருமற்ற அநாதையாக்கப்பட்டு, பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்ற ஒரு சிறுமி… வர்க்க உணர்வோடு ஒரு அமைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையும், விருப்பமும், தன் வர்க்கத்தை உணர்ந்து கொள்ளும் அந்தத் தருணமும் மனித குலத்தின் ஆழமான அர்த்தமான உணர்ச்சிகளில் ஒன்று. நிலை மறந்து மரத்துக் கிடக்கும் இந்த சமூகத்திற்கு அந்தச் சிறுமி போட்ட உணர்ச்சியின் பிச்சை அது!”

மாட்டுத்தாவணிகோயம்பேடு
“தனியார்மயத்தால் தறிகெட்டு ஓட்டி நாட்டையே விபத்துக்குள்ளாக்கும் மன்மோகனையும், ப. சிதம்பரத்தையும் ‘மினிஸ்டர்’ என மரியாதையாகப் பேசும் வாய்கள் பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல் “ஊம்.. வந்துட்டேன், ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

 1. தோழர் சீனிவாசன் அவர்களின் மரணச் செய்தி பழைய செய்தியாக இருந்தாலும் இச்செய்தி மீண்டும் என் கண்களை குளமாக்கிவிட்டது.

 2. அதேதான், சீனிவாசனில்லாத பு.க.முகவரி. நினைக்கயில் நெஞ்சு கனத்துப்போய்விட்டது. இன்று நடந்த பு.ஜ வாசகர் வட்டக்கூட்டத்தில் தோழருக்கு நினைவஞ்சலி செலுத்தினோம்.

 3. மூன்று மாதத்திற்கு பிறகு, புதிய கலாச்சாரத்தை காணும் பொழுது சந்தோசமாக இருக்கிறது.

  பு.கவை ஆர்வமாக ஒரேநாளில் நேரம் செலவழித்து படித்து விடுபவர்களை பார்க்கிறேன். புகவிற்கான வரவேற்பு எப்பொழுதுமே இருக்கிறது.

  மாதமாதம் எப்பொழுது கொண்டுவரப்போகிறீர்கள் என ஆவலாய் இருக்கிறோம்.

  மற்றபடி, கட்டுரைகள் குறித்து படித்தபிறகு கருத்துகள் இடுகிறேன்.

 4. நாமக்கல் பள்ளிகள் பற்றி முன்பே கட்டுரை எதிர்பார்த்தேன்.நண்பர் ஒருவர் வரும் வருடம் பணி ஓய்வு பெறவுள்ளார்.நாமக்கல் அருகில் வீடு எடுத்து தங்கி பிள்ளைகளை படிக்கவைக்க இருப்பதாக கூறினார்.என்ன கொடுமை சார் இது?.நிற்க.
  பு.க.வீட்டிற்கு வந்ததும் பழைய நிலுவை விவரம் குறிப்பிட்டு கண்டிப்புடன் கடிதம் வரும்.தோழர் அதில் கையெழுத்திட்டிருப்பார்.நான் நிலுவைத் தொகையினை தோழர் மரணத்துடன் போராடிக்கொண்டிருந்தபோதுதான் நேர் செய்தேன்.ம்ம்..

 5. கடவுள் துகள் கட்டுரையில் அறிவியலாளர்களின் வரிசையில் கூறப்பட்டவர் அப்துல் சலாம் கிடையாது, அவர் அப்துஸ் ஸலாம். இவர் பாகிஸ்தானிய இயற்பியல் மாமேதை. பிராமணன் களுக்கு மட்டும்தான் அறிவு உண்டு, முஸ்லிம்கள் முட்டாள்கள் என்று கூறும் காவி பன்னிகள் முகரைகளில் இவர் பெயரே கரியாக அப்பிக்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரேநோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியாவார். இவரை பாகிஸ்தான் அவமானப்படுத்தியது வேறு விஷயம். பெயரை திருத்தவும். அதனைநம்மூர் அப்துல் கலாம் கோமாளியாக அனைவரும் தவறாக புரிந்து கொள்வார்கள். இந்த காமெடியனுடன் அந்த மாமேதையை ஒன்று சேர்த்து விடாதீர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க