Monday, May 5, 2025
முகப்புசெய்திநாளை வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் - ஏன்?

நாளை வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் – ஏன்?

-

செய்தி-04

வேலை-நிறுத்தம்ங்கிகள் ஒழுங்கமைப்புச் சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங்களில் வரும் ஆக.22-ம் தேதி திருத்தங்களை செய்ய காங்கிரசு நரி அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தச் சட்ட திருத்தங்களினால் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் மெல்ல மெல்ல தனியார் முதலாளிகளின் கைகளுக்குச் சென்று விடும். மேலும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள தனியாரின் வாக்குரிமை அதிகரித்து விடும். இருக்கும் தனியார் வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களோடு சேர்ந்து விடும்.

அதன்படி தனியார் வங்கிகளில் இருக்கும் இந்திய மக்களின் சேமிப்பான எட்டு இலட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊக வணிக சூதாட்டத்திற்கு பயன்படும். அதன் பிறகு விவசாயிகள், ஏழை மாணவர்கள் முதலிய எளிய பிரிவினருக்கு வழங்கப்படும் கடனுதவிகளை எதிர்பார்க்க முடியாது. தற்போதே நுண் கடன் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன்கள் அந்நிறுவனங்களால் அதிக வட்டிக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதையெல்லாம் எதிர்த்து பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகஸ்டு 22. 23-ம் தேதியன்று வேலை நிறுத்தம் செய்கின்றார்கள். இந்த வேலை நிறுத்தம் இத்தகைய தனியார் மயமாக்கும் சதியை எதிர்த்து மட்டுமல்ல, ஊழியர்கள், அதிகாரிகளது பொருளாதார கோரிக்கைகளுக்காகவும் நடைபெறுகின்றது. உண்மையில் வங்கி ஊழியர்கள் பலரது கவலை இந்த பொருளாதார கோரிக்கைகளின்பால்தான் இருக்குமென்றாலும் இந்த வேலை நிறுத்தத்தை நாம் ஆதரிக்க வேண்டியது அவசியம்.

வங்கி வேலை நிறுத்தம் என்பதால் வரக்கூடிய இடர்களை பட்டியலிட்டு நடுத்தர வர்க்க எரிச்சலைக் காட்டாமல் மொத்த நாடும் எப்படி விலைபோகிறது என்ற கவலையை கற்றுக் கொள்வது அவசியம்.

இது குறித்து ‘தீக்கதிரில்’ விரிவான கட்டுரை வந்திருக்கிறது. வாசகர்கள் அவசியம் படியுங்கள்:

வங்கி ஊழியர்களின் தேசபக்தப் போராட்டம் – தீக்கதிர்

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: