privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க"எனிசி கோனியாக்": என்ன சரக்கு இல்லை எங்கள் டாஸ்மாக்கில்...!

“எனிசி கோனியாக்”: என்ன சரக்கு இல்லை எங்கள் டாஸ்மாக்கில்…!

-

செய்தி-20

எலிட்-டாஸ்மாக்

மிழகத்தில் எத்தனையோ ஊழல், சோகம், அவலம், பிரச்சினைகள் இருந்தாலும் தமிழ் மக்கள் பெருமைப்படும்படியாக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் டாஸ்மாக்கை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்கள். பேருந்து, மின்சாரம், பால் எல்லாவற்றையும் விலை உயர்த்தினாலும் பாழாய்ப் போன தமிழக மக்கள் அவற்றைப் பயன்படுத்தி நட்டத்தையே அரசுக்கு கொடுத்து வருகிறார்கள்.

இதில் பாதி நாள் மின் தடை போட்டாலும் மின்சார வாரியம் நட்டத்தில்தான் நடக்கிறது. இந்த நட்டமும் தனியார் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வருவதால் இங்கு முதலாளிகள் ஷேமகரமாக வாழ்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நட்டத்தை ஈடு செய்யும் விதமாக டாஸ்மாக்கில் புரட்சித் தலைவியின் பொற்பாத நிர்வாகத் திறன் காரணமாக கடந்த ஆண்டு 18,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. நடப்பாண்டில் இதை 20,000 கோடி இலக்கு வைத்து அரசு அதிகாரிகள் பேயாக வேலை பார்த்து வருகிறார்கள். கருணாநிதியின் சதியை மீறி இந்த இலக்கை அரசு அடைவது உறுதி என்று அம்மா சபதம் போட்டுள்ளார்கள்.

அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கு மருந்தில்லை, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணைய் இல்லை என்று பிளாட்பாரம் பரதேசிகள் பஞ்சப்பாட்டு பாடினாலும் டாஸ்மாக்கின் புகழ் மங்கப் போவதில்லை. மல்லையா சரக்கு போதாது என்று மேன்மக்கள் கவலை அடைந்தது அம்மாவிற்கு தெரிய வந்ததுமே எலைட் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. ஏ.சி வசதி உள்ள பார்களும் அனுமதிக்கப்பட்டன. குப்பன், சுப்பன்கள் குடித்து விட்டு வாந்தி எடுக்கும் அலங்கோல பார்களில் இனி மேன்மக்கள் அவதிப்படத் தேவையில்லை என்று அம்மாவின் ஆட்சி அருள் பாலித்து வருகிறது.

இதன் அங்கமாக பிரெஞ்சுத் தேசத்தின் புகழ் பெற்ற “எனிசி கோனியாக்” எனும் உயர்ரக பிராந்தி பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு எலைட் கடைகளில் கிடைக்க அம்மா ஏற்பாடு செய்திருக்கிறார். 700 மி.லி கொண்ட ஃபுல் பாட்டிலின் விலை ரூ. 3.425 ஆகும். பிரெஞ்சு நாட்டின் கோனியாக் நகரத்தில் உயர்ரக திராட்சையில் செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஊறப் போட்டு ஸ்பெஷலாக  தயாரிக்கப்படும் இந்த பிராந்தியெல்லாம் தமிழன் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தேன் சொட்டும் அமுதமாகும்.

ஒரு நாளைக்கு 28 மணிநேரமும் உழைக்கும் புரட்சித் தலைவயின் பொற்பாத ஆட்சியில் மட்டுமே இத்தகைய சாதனைகள் நடக்கும் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்.

வாழ்க புரட்சித் தலைவி அம்மா அவர்கள்!

ஜெய் டாஸ்மாக், ஜெய ஜெய எலிட் டாஸ்மாக்!

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: