privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக் கடையை மூடு! பெண்கள் ஆர்ப்பாட்டம்!!

டாஸ்மாக் கடையை மூடு! பெண்கள் ஆர்ப்பாட்டம்!!

-

டாஸ்மாக்

“டாஸ்மார்க் கடையை இழுத்து மூடுவோம்” என கடந்த 09/06/2012 அன்று மாலை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே பெண்கள் விடுதலை முன்னணி, சென்னைக் கிளை சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை உரையில் தோழர் சித்ரா பேசும் போது “பகுதிக்கு ஒரு பள்ளிக்கூடம் திறக்காத இந்த அரசு வீதிக்கு வீதி டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்துள்ளது” என்றார்.

மாவட்ட செயலர் தோழர் உஷா பேசும் போது

“உழைக்கும் மக்கள் வசிக்கின்ற பகுதியிலேயே சாராயக் கடைகளை வைத்துள்ள இந்த அரசு ரேசன் கடைகளை மட்டும் பல கிலோமீட்டர் தள்ளி வைத்துள்ளது.  இரண்டு அரசு நடத்தும் கடைகள் தான். எது மக்களுக்கு நன்மை தரும் என்பதில் அரசு அக்கறை காட்டவில்லை.

அரசியல் அமைப்பு சாசனத்தில் அரசை நெறிப்படுத்தும் கொள்கையில் பிரிவு     47-ல் போதையூட்டும் பொருட்களை அரசு விற்க கூடாது என உள்ளது. ஆனால், அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்துகிறது.  உழைக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் காவல்துறையினரை குவிக்கின்றது.  இந்த அரசே சட்டத்தை மீறுகிறதே என்று அரசு அதிகாரிகளை இந்த காவல்துறை கைது செய்யுமா?  மேலும் அரசு மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற இலவசங்களை கொடுக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் பல்வேறு மானியங்களை வழங்கி இந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க வழி வகுக்கிறது.  இந்நாட்டின் வளங்களும், நம்முடைய வாழ்க்கையும் மறுகாலனியாதிக்க கொள்கைகளால் பறிபோவதை அறியா வண்ணம் மக்களை ஆளும்வர்க்கம் மக்களை போதையின் மயக்கத்தில் அடிமையாக வைத்திருக்கிறது” என பேசினார்.

 டாஸ்மாக்

பகுதி முழுவதும் சுவரொட்டிகள் மக்கள் கூடுமிடங்களில் ஒட்டப்பட்டன.  பெண்களும் குழந்தைகளும் 60 பேர் கலந்து கொண்டார்கள்.  ஆர்ப்பாட்டம் நடத்திய இடம், குரோம்பேட்டை ரயில் நிலையம் எதிரே என்பதாலும், பேருந்து நிலையம் அருகில் என்பதாலும் மக்களில் பலர் நின்று முழக்கங்களையும், உரையையும் கவனித்தார்கள். சிலர் இந்த போராட்டம் மிக முக்கியமான போராட்டம் என்று வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்கள். பகுதியில் சுவரொட்டி பார்த்து மக்களில் சிலர் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் செய்ய காவல்துறை தங்களால் ஆன எல்லா இழுத்தடிப்பு வேலைகளையும் கவனமாக செய்தார்கள். முதலில் அனுமதி கேட்ட போது காவல் நிலையத்தில் வேண்டுமென்றே பல மணிநேரம் உட்கார வைத்து பின்னர் அவரைப்பார், இவரைப்பார் என்று இழுத்தடித்தார்கள். அன்று புதுக்கோட்டை தேர்தலுக்காக ஜெயா அந்த இடத்தை கடந்து செல்கிறார் என்றும் நிறைய போலீஸ் படையை நிறுத்தியிருந்தார்கள்.  ஆர்ப்பாட்டம் நடந்த போதும் அருகில் இருந்த டாஸ்மாக் கடையை பாதுகாக்க காவல்துறை ஒரு பெரும் படையை நிறுத்தியிருந்தது. டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று தோழர்கள் முழக்கமிட்டதும், குவிந்திருந்த போலீஸ் படையை லத்தியை தூக்கிக் கொண்டு தோழர்களை சுற்றி வளைத்து தாக்குவது போல நின்றது. ஆனாலும் மக்கள் பங்கேற்புடனும், ஆதரவுடனும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

டாஸ்மாக்

_______________________________________________________

– பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. மிக முக்கியமான போராட்டத்தை எடுத்து நடத்தியதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

  சமீபத்தில் ஒரு பெண் வழக்கறிஞரை சந்தித்தேன். மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மதியம் 3மணிக்கு மேல் பெரும்பாலான ஆண் வழக்கறிஞர்களை சந்தித்தால், டாஸ்மாக் வாடை குப்பென்று அடிக்கிறதாம். அதனால், மதியத்திற்கு பிறகு யாரிடமும் நின்று பேசுவதில்லை என வருத்தமாக சொன்னார்.

  சமீபத்தில் பெரியப்பா பையன் வீட்டில் ஒரு விசேசம். 50 குவார்ட்டர்களுக்கு பணத்தை செலுத்தி, டாஸ்மாக் கடையில் டோக்கன்கள் வாங்கி வைத்துக்கொண்டார். அதை தனது சொந்தங்களில் ஒரு பொறுப்பான ‘குடி’மகனிடம் கொடுத்து, யாரிடம் கொடுக்க சொல்கிறராரோ அவரிடம் கொடுக்கவேண்டும் என திட்டம். 42 டோக்கன்கள் முடிந்து, 8 டோக்கன்கள் மிச்சமாம்.

  குடிக்காத குடிமக்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். இது ஒரு சமூக அவலம். மாலையானால் குடியில் இருக்கும் நபர்களிடம், அரசியலை கொண்டு செல்லமுடிவது ஒரு மிகப்பெரிய போராட்டம். பெண்கள் விடுதலை முன்னணி எடுத்திருக்கும் போராட்டம் மிக முக்கியமான போராட்டம். தொடர்ந்து மாநிலம் முழுவதும் மற்ற தோழமை அமைப்புகளும் எடுத்து செல்லவேண்டிய போராட்டம்.

 2. நாம் குடியை எதிர்க்காத ஒரு தலைமுறையை பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். இந்த நிலையில் இந்த வகையான போராட்டம் மிக மிக மிக முக்கியமானது.

 3. இது போன்று பெண்கள் அதிக அளவில் அணி திரண்டால் டாஸ்மாக் கடைகளை நிச்சயம் ஒழித்துவிட முடியும்.

 4. குடிபழக்கம் ஒரு சமூகத்தையே சீரழித்துவிடும். தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆபத்தான விஷயம்.

 5. ஆறறிவு உள்ளவர்கள் எல்லாம் குடிப்பவர்கள், குடிக்காதவர்கள் மனிதரல்லாத உயிரினம் என்று என்னும் ஓர் தலைமுறை இன்று உருவாகயிருக்கின்றது.

  இப்போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

 6. குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நடத்தைக் கெடுக்கும் என்கிற உபதேசத்தோடு ஒரு ஆட்சி நடக்கிறதென்றால் அது நம் குடியையும் நம் உடல் நலத்தையும் கெடுக்கிற ஆட்சியல்லவா? குடிக்கிறவனுக்கு புத்தி எங்கே போச்சு என ஒரு சிலர் வாதிடலாம். உபதேசங்களால் தீர்க்கிற ஒன்றல்ல குடி. சாக்கடைகள்தான் கொசுக்களின் ஊற்றுக்கண் அதுபோல தலைமைச் செயலகம் (சாக்கடை) தானே குடியின் ஊற்றுக்கண். ஊற்றுக்கண்களை ஒழிக்காமல் கேடுகளுக்கு விடிவில்லை. அதை நோக்கிய முதல் படிதான் பெண்கள் விடுதலை முன்னணியின் போராட்டம்.

  மதுக்கடைகளை எதிர்க்காத எந்தக் கட்சியும் மக்களுக்கான கட்சி அல்ல. இவர்களும் சாக்கடைப் புழுக்களே. இப்புழுக்களையும் சாக்கடையிலேயே மூழ்கடிப்போம்.

  போராடிய பெண்களுக்கு வாழ்த்துகள்!

 7. சாராயத்தை ஒழிக்க குரல் கொடுக்கும் ராமதாசே, சரக்கு இல்லாமல் கூட்டம் கூட்டறதில்லை ! ஆனா வாய் சவடாலுக்கு குறைவில்லை!
  சமூகத்துல ஒருத்தன் தண்ணியடிக்கல, சிகரெட் பிடிக்கலன்னா அவன் ஏதோ ஒரு ஆண்மை குறைந்தவன் போலவும் வாழக்கயின் ஒரு பெரிய இன்பத்தை இழந்தது போலவும் பேசப்படுகிறது. இன்னும் சினிமாப் பாடல்களோ காட்சிகளோ பார்களிலும் பப்களிலும் தான் உற்சாகம்நிரம்பும் காட்சிகலளை படமாக்குகின்றன.
  இதில் ஐ.டி கலாச்சாரம் வேறு ! ஐந்துநாள் வேலை செய் ! ஒருநாள் போதையில் இரு !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க