Friday, June 14, 2024
முகப்புசெய்திகூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்.....

கூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்…..

-

கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டம்-14கூடங்குளம் கடற்கரையில் நடந்த தடியடியில் எத்தனை பேர் காயம் பட்டனர், எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற எண்ணிக்கை தெரியவில்லை. தடியடிக்குப் பின்னர் இடிந்த கரைக்கு திரும்பிய மக்கள் அங்கே தேவாலய பந்தலில் குழுமியிருக்கின்றனர். நாளை முதல் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். இடிந்தகரையில் நுழைந்த போலீசு ஊர் முழுக்க மிரட்டல் தோரணையில் சுற்றிவிட்டு முக்கியமாக உண்ணாவிரத மேடையில் சிறுநீர் கழித்து தனது வக்கிரத்தை தீர்த்துவிட்டு பின்னர் திரும்பியிருக்கிறது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் தோழர் ராஜூ தலைமையில் போராடும் மக்களோடு உடன் இருக்கின்றனர். சிதறிய மக்களை மீண்டும் அணிதிரட்டும் வேலையினை அவர்கள் போராட்டக்குழுவினரோடு சேர்ந்து செய்து வருகின்றனர். தோழர் ராஜூ போராட்டத்தின் போது மூன்று இடங்களில் மக்களிடையே பேசினார்.

கூடங்குளம் நகரில் 5000த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் போலீசுக்கும் இன்று முழுவதும் ஒரு பெரும் போரே நடந்துள்ளது. போலீசு தெருத்தெருவாய் மக்களை அடித்து விரட்டியிருக்கிறது. ஏராளமான மக்கள் சொத்துக்களை போலீசு அடித்து நாசப்படுத்தியிருக்கிறது. தற்போது முக்கிய சாலையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் தெருக்களில் குழுமி உள்ளனர். நள்ளிரவில் போலீசு படையெடுத்து ஆண்களை கைது செய்யலாம் என்று தெரிகிறது. இங்கு காலையில் டம்மி குண்டுகளை வைத்து நடந்த துப்பாக்கி சூட்டை உண்மையான துப்பாக்கி சூடு என முதலில் தவறாக தெரிவித்திருந்தோம். இங்கு நடந்த போலீஸ் தடியடியில் சுமார் 50 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

தூத்துக்குடி நகரில் மீனவர் சங்கங்கள் போராட்டம் தொடர்கிறது. மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் வெகுநேரமாக மறித்து நிறுத்தப்பட்டிருக்கிறது. நாகர்கோவில் – தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள மணப்பாடு கிராமத்தில் போராடிய மக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்தோணி ஜார்ஜ் எனும் மீனவர் கொல்லப்பட்டார்.  ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்கிறது.

சென்னை, மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் கூடங்குளம் தடியடியைக் கண்டித்து இன்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். திருச்சியில் பேருந்து நிலையம் அருகே ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் மறியல் செய்து கைதாயிருக்கின்றனர். கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போலீசு தடியடியைக் கண்டித்து வேலை நிறுத்தம், சாலை மறியல் செய்து கைதாயிருக்கின்றனர்.

___________________________________________________

வினவு செய்தியாளர்கள், கூடங்குளத்திலிருந்து…

___________________________________________________

  1. கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது

  2. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு. மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றம்

    போலீஸ் அராஜகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்.

    மமக தலைமையகம் அறிவிப்பு

  3. அணுஉலையை விரட்டணுனா போராட்டத்த மாத்தணும்
    கூடங்குளம் இன்னும் ஒரு நந்திகிராமமாகணும் … என்ற பாடல் ஒலி இன்று உண்மையானது. தமிழ் செய்தி ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா, ஞானதேசிகன், கோமாளி கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், மத்திய அமைச்சர் நாராயண சாமி போன்றவர்களிடம் தான் ஆகியோரிடம் தான் அதிகம் கருத்து கேட்டது. போராட்ட காரர்களை கொச்சைப் படுத்துவது போலவே இந்த செய்திகள் இருந்தது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க