privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்கா"ரமணா" ஸ்டைலில் மின்னசோட்டா மருத்துவமனையின் கொள்ளை!

“ரமணா” ஸ்டைலில் மின்னசோட்டா மருத்துவமனையின் கொள்ளை!

-

அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக் கழகத்தின் மருத்துவமனை, நோயாளிகளை கந்து வட்டிக்காரன் போல கொடுமைப் படுத்தியுள்ளது. தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளை எழுப்பி பணம் கேட்பது, அவசர சிகிச்சை அறைகளிலும் குழந்தைப் பேறு பகுதிகளிலும் நோயாளிகளையும் உறவினர்களையும் பணம் கட்டச் சொல்லி தொந்தரவு செய்வது போன்ற சட்ட விரோத செயல்களை மருத்துவமனை செய்திருக்கிறது.

படிக்க

யூஎம்எம்சி“ஒரு நோயாளி மாரடைப்புக்கான அறிகுறிகளால் துன்புற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு உதவி செய்வதற்கு பதிலாக அன்றைய கட்டணமாக $672 அவர் கட்ட வேண்டும் என்பதாக ஒரு மருத்துவமனை ஊழியர் அவரிடம் சொன்னார்” என்பது மாநில தலைமை அரசு வழக்கறிஞர் லோரி ஸ்வான்சன் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை நோயாளிகளிடமிருந்து மருத்துவக் கட்டணங்களை வசூலிக்கும் பொறுப்பை அக்ரிட்டிவ் ஹெல்த் என்ற கடன் வசூல் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. பணம் வசூலிக்கும் ஊழியர்களுக்கு நோயாளிகளின் நோய்கள் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்கக் கூடாது என்ற விதியை மீறி, அக்ரிட்டிவ் ஹெல்த்துடன் சேர்ந்து மருத்துவமனை ‘நிலுவைகளை செலுத்தா விட்டால் சிகிச்சை மறுக்கப்படும்’ என்று நோயாளிகள் மிரட்டியுள்ளது.

தங்கள் வலைத்தளத்தில் “நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்களை முதன்மைப் படுத்துகிறது” (Putting patients first makes us #1) என்று பிரகடனப்படுத்தியிருக்கும் இந்த மருத்துவமனை கட்டணம் கொடுக்க முடியாத ஏழைகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் சட்ட விரோத செயலையும் செய்துள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 21 கேஸ்களில் 7-ல் மருத்துவ சிகிச்சை வழங்கும் நேரத்தில் பணம் வசூலிக்க மருத்துவமனை பயன்படுத்திய முறைகள் நோயாளிகளின் உரிமைகளை மீறுவதாக இருந்தன என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

ஆய்வு அறிக்கையில் வெளியான தகவல்கள் மக்ககள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மருத்துவ கடன்கள் வசூலிப்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று செனட்டர் அல் பிராங்கன் முதலானவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

இந்த அறிக்கையின் விளைவாக மின்னசோட்டா பல்கலைக் கழக மருத்துவமனை மத்திய அரசு திட்டங்களான மெடிக்எய்ட் (ஏழைகளுக்காக அரசு காப்பீடு), மெடிகேர் (வயதான மற்றும் மாற்று திறனாளிகளுக்காக அரசு காப்பீடு) திட்டங்களிலிருந்து நீக்கப்படலாம். மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் யூஸ்டில் பதவி விலகியுள்ளார்.

நோயாளிகளிடம் பணம் வசூலிப்பதன் மூலம் பல ஆண்டுகளாக ஆதாயம் பெற்று வரும் அக்ரிட்டிவ் 2011-ம் ஆண்டு $29.2 மில்லியன் (ரூ 160 கோடி), லாபம் ஈட்டியிருக்கிறது. நோயாளிகளை மிரட்டியதற்காக அரசு தலைமை வழக்கறிஞர் ஸ்வான்சன் அதன் மீது மின்னசோட்டா மாநிலத்தில் செயல்பட இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளார்.

ஆனால் யாரும் “தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை சுரண்ட ஏன்  அனுமதிக்க வேண்டும்? அரசு ஏன் மருத்துவமனைகளை நடத்துவதில்லை? மக்களின் வாழ்வாதார பிரச்ச்னையான மருத்துவ சிகிச்சை அளிப்பதை அரசு ஏன் புறக்கணிக்கிறது?” என்ற கேள்விகளை எழுப்புவதில்லை.

கியூபா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் அரசே பொது மருத்துவமனைகளை நடத்துகிறது. மக்களுக்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகின்றன. ஒலிம்பிக் துவக்க விழாவின் போது தனது பொது மருத்துவமனை அமைப்பை பற்றி பிரிட்டன் பெருமையாக பேசியது. என்றாலும் அங்கும் இப்போது பொது மருத்துவத்திற்க்கான மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. கியூபாவில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ சிகிச்சைகள் உலகிலேயே மலிவான முறையில் வழங்கப்படுவது பிரசித்தி பெற்றது.

அமெரிக்காவில் வாழும் மக்கள் கனடாவிற்கோ, கியூபாவிற்கோ திருட்டுத்தனமாக சென்று பெரும் வியாதிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்வது வேடிக்கையல்ல, வெட்கக் கேடானது. அமெரிக்காவின் மருத்துவத் துறையை பற்றி மைக்கேல் மூர் தயாரித்த “சிக்கோ” எனும் ஆவணப்படம் அமெரிக்க தனியார் மருத்துமனைகளின் மக்கள் விரோதப் போக்குகளையும் அவலங்களையும் படம் பிடித்து காட்டியிருக்கிறது.

முதலாளிகளின் சொர்க்கம் அமெரிக்காவில் மருத்துவமனைகளில் ஏழைகள் புறக்கணிக்கப்படுவதும் கட்டணம் வசூலிப்பதற்காக நோயாளிகள் கொடுமைப்படுத்தப்படுவதும் ஆச்சரியத்திற்குரியவை இல்லைதான். தமது இலாப வேட்டைக்காக உலகம் முழுவதும் போர்கள் நடத்தியும் மக்களை கொன்று குவித்தும் செல்வம் சேர்க்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மக்களை வாழவிட்டிருப்பதே கருணை தான்.

  1. ஒபாமா தனது பதவி ஏற்பின் பொழுது, “அமெரிக்காவில் மருத்துவ செலவு ஒரு வெடிக்க இருக்கும் குண்டை போல காத்திருக்கிறது” என்றார்.

    இந்தியாவிலும் ‘தரமான’ மருத்துவம் தரும் மருத்துவமனைகள் பெருகி கொண்டே இருக்கின்றன. அரசு தனது இலவச‌ மருத்துவமனைகளை கொன்று கொண்டே இருக்கிறது.

    காசு இல்லையென்றால், ‘தரமான’ மருத்துவமனைகள் எல்லாம், எப்படி தரம் கெட்டு நடந்துகொள்வார்கள் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம்.

    ****

    செய்தியை உள்வாங்கி கொண்டு எழுதாமல், மொழி பெயர்த்த மாதிரி எனக்கு தெரிகிறது. அப்படித்தானா!

    ****

  2. அமெரிக்கா மின்னசொட்டாவைப் போன்றே சென்னையிலும்….

    பல்லாவரம் லட்சுமி நர்ஸிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையிலும்
    சாதாரண நோயை பயங்கரமான நோயாக மாற்றும் வித்தை நடக்கும்.

    * சளிக்காக வரும் நோயாளியை ஆஸ்துமா என பயமுறுத்தி ஐ.சியு. வில் படுக்க வைப்பார்கள்.

    * காதல் தோல்வி, குடும்ப சண்டையில் மஸ்கிட்டோ ஆல் அவுட்குடித்துவிட்டு
    வரும் நபரை ஸ்டோமக் வாஷ் கொடுத்து, காத்திருக்காமல், கண் விழிக்கும் முன் வென்டிலேட்டரில் (செயற்கை சுவாசம்) போட்டு விடுவர்.

    * பிரசவ வலியோடு வரும் முதல் குழந்தை கர்ப்பிணிக்களுக்கு, பொய் வலிப்
    பற்றி சொல்லாமல், சிசேரியன் கேஸாக்கிவிடுவர்..

    * சாதாரண காய்ச்சலுக்கு வருபவர்களை ஒருநாள் அப்சர்வேஷன் என்று
    அட்மிஷன் போட்டு விடுவர்.

    * மருத்துவத்தில் கோல்டன் டைம் என்ற உயிர்காப்பு நேரத்தை நோயாளியின்
    உயிர்காக்க பயன்படுத்தாமல், கண் விழிக்கும் முன் அவரை பணம் எடுக்கும்
    எ.டி.எம் -ஆக பயன்படுத்துவர்.

    இதைவிடக் கொடுமை….,

    காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ கல்லூரி உரிமம் வாங்க நடந்த கூத்து இது.

    காஞ்சிபுரத்தில் அரசு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து வைத்திருந்த, செவிலியர், உதவியாளர்கள் அனைவரும் திடீரென, நூற்றுகணக்கில் மொத்தமாக எடுத்தனர். டெல்லி சோதனை அதிகாரிகள் வந்த போது எங்களை பொம்மை மாதிரி அங்காங்கே நிறுத்திய, இரண்டு நாள் கூத்துக்கு ஒரு மாதம் சம்பளம் கொடுத்து அனுப்பினர். இதற்கு வேலைவாய்ப்பு அதிகாரிகளும் உடந்தை.

    அப்போதைய குடியரசு தலைவர் அப்துல்கலாமும் வந்து இதே வரவேற்ப்பை
    அனுபவித்து மயங்கி பாராட்டினார்.

    தனியார் மருத்துவ மனைகள் என்பது மனித தன்மையற்ற முதலாளிகளின்
    ஏ. சி. கவிச்சி கடை.

  3. சமீபத்தில் ஒரு அலர்ஜி பிரச்சனைக்காக SRM MEDICAL COLLEGE HOSPITAL சென்றிருந்தேன் என்ரன்சுக்கு பத்து ருபாய் வாங்கி கொண்டார்கள் மெடிசன் ஒரு 80ருபாய் வந்தது டாக்டரகள் மற்றும் வேலை செய்பவர்கள் கனிவோடு கவனித்து கொண்டார்கள் மொத்த செலவே 90 ருபாய் தான் ஆனது

Leave a Reply to லட்சுமி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க