Saturday, July 31, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் அந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்!

அந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்!

-

இந்தியா-விற்பனைக்குநிலக்கரி திருட்டு விவகாரத்தில் மூஞ்சியெங்கும் கரி அப்பிக் கொண்டு நிற்கும் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நடந்த கூச்சல் பஜனையில் ஊக்கத்தோடு பங்கேற்று வந்தது நாம் அறிந்ததே. இதில் பாரதிய ஜனதாவைப் பற்றி காங்கிரசும், காங்கிரசைப் பற்றி பாரதிய ஜனதாவும், இவர்களிருவரையும் பற்றி மற்ற எதிர்கட்சிகளும், மாற்றி மாற்றி பல்வேறு அரிய உண்மைகளைப் பரிமாறிக் கொண்ட கண் கொள்ளாக் காட்சி சென்ற வாரம் வரை பாராளுமன்ற மேடையில் செவ்வனே அரங்கேறி வந்தது.

நடந்த அமளி துமளியால் காங்கிரசு அசந்து போயிருக்கும் என்று யாரும் நினைத்து விடக்கூடாது  என்பதில் குறியாய் இருக்கும் மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சந்தடி சாக்கில் தேசத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்கக் கூடிய அறிவுப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.

சில்லறை வணிகத்தில் 51% அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, சிவில் விமானப் போக்குவரத்தில் 49% அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, தொலைக்காட்சி சேவையில் அன்னிய முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரிப்பது, மற்றும் இதனோடு சேர்ந்து நான்கு முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டுவது – இவை தான் அந்த அறிவிப்புகள்.

அறிவிப்பு வெளிவந்த உடனே முதலாளிகள் குழாம் மன்மோகனை உச்சி மோந்து பாராட்டியுள்ளது. மிட்டல் குழுமத்தின் ரஞ்சன் மிட்டல், “இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தப் பாதையில் இந்த முடிவு ஒரு மைல்கல்” என்று குதூகலித்திருக்கிறார். மேலும், “இது விவசாயிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் ஆதாயம் அளிக்கும் முடிவு” என்று அறிவித்துள்ளார்.  வால்மார்ட்டால் உலகெங்கும் அழித்தொழிக்கப்பட்ட விவசாயிகள், சிறு முதலாளிகள், வணிகர்களின் கதைகள் இங்கே ஒருவருக்கும் தெரியாது என்கிற திமிரிலிருந்து தான் மிட்டலின் குதூகலம் கொப்பளிக்கிறது.

மிட்டலின் கூட்டாளியான  வால்மார்ட்டின் இந்தியப் பிரிவின் தலைவர் ராஜ் ஜெயின், “இந்தியாவின் வினியோகச் சங்கிலியை மேம்படுத்த நாங்கள் எந்தளவுக்கும் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே உள்ளூர் ரவுடிகளான ரிலையன்சும் ஐ.டி.சியும் உள்ளே புகுந்து விட்டதில் விளை பொருட்களுக்கு ஒழுங்கான விலை கிடைக்காமல் புழுங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள், இனிமேல் சர்வதேச மாஃபியாவான வால்மார்ட்டையும் எதிர்கொண்டாக வேண்டும் என்பதே இந்த அறிவிப்பின் பொருள்.

முதலாளித்துவ பத்திரிகைகளோ மன்மோகன் சிங்கை செயலற்ற உதாவாக்கரை என்று தூற்றிய அமெரிக்கப் பத்திரிகைகளுக்கு இப்போது சரியான பதிலைக் கொடுத்து விட்டார் என்று புகழ்கின்றன. வீழ்வது அரசாக இருந்தாலும் வாழ்வது பொருளாதாரமாக இருக்கட்டும் என்று துணிச்சலுடன் முடிவெடுத்து விட்டார் நமது பாரதப் பிரதமர் என்று வியந்தோதுகின்றன. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்திருப்பதன் மூலம் தேங்கிக் கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தையே நிமிர்த்தி விட்டாரென்றும், சிவில் விமானப் போக்குவரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்திருப்பது, தடுமாறிக் கொண்டிருக்கும் மல்லையாக்களைக் கைதூக்கி விடும் முடிவு என்றும் கொண்டாடுகின்றன.

சோழியன் குடுமியொன்றும் சும்மா ஆடவில்லை நண்பர்களே – ஊடகத்துறையில் அந்நிய முதலீட்டை அதிகரித்திருப்பதன் மூலம் இவர்களுக்குத் தேவையான எலும்புத் துண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இதைத் தான் “குடுத்த காசுக்கு மேல கூவுவது” என்பார்கள்.

எதிர்கட்சிகள் அரசின் முடிவை எதிர்ப்பதாகவும், இம்முடிவுகளை எதிர்த்து வரும் 20-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதாவின் உமா பாரதி, வால்மார்ட் கடை திறந்தால் அதைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டு சிறை செல்லவும் தயார் என்று சொல்லியிருக்கிறார் – ஆனால், இதே பாரதிய ஜனதா கட்சி ஆளும் சில மாநிலங்கள் இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே தங்கள்  மாநிலங்களில் வால்மார்ட்டின் நுழைவைத் தடுக்கப் போவதில்லை என்று முன்பே அறிவித்திருந்தன.

பாரதிய ஜனதாவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜாவடேகர், மத்திய அரசு ஏற்கனவே 82 நாடுகளுடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், மாநில அரசாங்கங்கள் அந்நிய நிறுவனங்கள் தமது மாநிலத்தின் எல்லைக்குள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அது சட்டப்படி செல்லாது என்றும், எனவே எதார்த்தத்தில் எந்த மாநிலமும் வால்மார்ட்டின் வருகையைத் தவிர்க்க முடியாது என்றும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். எனினும், பாரதிய ஜனதா வால்மார்ட்டை விடாமல் எதிர்க்கும் என்று அறிவித்துள்ள பாரதிய ஜனதா, வரும் 20-ம் தேதி நடக்க உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இத்தனைக்கும் பாரதிய ஜனதா ஒன்றும் அந்நிய எதிர்ப்பில் முனைப்பாக நின்று போராடிய கட்சியல்ல; இவர்களது முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் உலகில்  வேறெந்த நாட்டிலும் இல்லாத சிறப்பாக பொதுத்துறைகளை தனியாருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் திறந்து விடுவதற்காக ஒரு அமைச்சகமே உருவாக்கப்பட்டு அதற்கொரு அமைச்சரும் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆக, இப்போது பாரதிய ஜனதா சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பது போல் நடிப்பதும் கூட உண்மையான எதிர்ப்பு கொண்டவர்களுடன் கலந்து குட்டையைக் குழப்புவதற்குத்தான். ஆனாலும் காங்கிரசு கூட்டணி அரசு வெளிப்படையாக இந்த அறிவிப்புகளை உத்திரவு போல அமல்படுத்துவதும், இவற்றினை திரும்ப பெற வாய்ப்பே இல்லை என்று உறுதியாக இருப்பதும்தான் முக்கியமானது. இந்திய மக்களின் வாழ்வாதரத்தை விட பன்னாட்டு முதலாளிகளின் இலாபமே பெரிது என்று இதை விட ஒரு புரோக்கர் கும்பல் ஆடமுடியாது.

முழு இந்தியாவையும் கூறு போட்டு விற்பனை செய்யும் ஒரு தரகர் கும்பலின் கீழ் நமது தலைவிதி சிக்கியிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

 1. கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் தலைமையை அமெரிக்காவிடம் பணம் வாங்கியதாக குற்றம் சுமத்தியது, ஆனால் மண்மோகன் சிங்தான் உண்மையான அமெரிக்க கைகூலி….

 2. இந்திய தொழிலாளி வர்க்கம், மாணவர்கள், விவசாயிகள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவிக்க வேண்டும். நிலக்கரி செய்தியிலிருந்து தலைப்பு செய்திகள் மாறவேண்டும் என்பதற்காகவே இந்தியா விற்பனை செய்தி இறங்கியிருக்கிறது.

 3. Can we not face competition from Foreign companies? In China Walmart could not even do anything against the Chinese companies. Why can’t Indians build stronger companies to compete against Walmart, Carrefour etc?

  • so we should tell that a company which invest 25,000 Crores (ambani in reliance fresh further the investment of walmart will be definitely higher) and an ordinary owner of a shop (of INVESTMENT around 1,00,000) are equal and fight for their share in market.

   first let us think can we get a loan in a public sector bank for starting a small scale industry even if the project is very good.

   if the market share of retail shops are captured whole supply chain(which is feeding 4 crore families) will be captured

   farmers will get initial benefits ( until MNC captures major market )

   finally farmers (will be replaced by corporate farmers)

   now we have options

   from here afterwards it will be difficult to start
   a small retail shop,farming ,travel agencies

   then there will be MNC companies and the labors working for the MNCs

   no options left to us

   all of the above things may not be happening but PREPARE FOR THE WORST

   • இருக்கிறநிலத்தநம்ம ஊரு ரியல் எஸ்டேட்டு காரங்க பாதி புடுங்கிட்டாங்க, மீதி இருக்கிறத இந்த் அன்னயா கம்பெனிங் புடிங்கி கார்ப்பிரேட் விவசாயம் பண்ணுவான் நம்ம கந்தசாமியும்,முனுசாமியும் வாயில விரல வச்சி ஆச்சர்யமா பாப்பான். பாருடாநம்மநிலம் எவ்வளவு பச்சையா இருக்குன்னு. இதுதான் இந்திய விவசாயின் பலன். மொத்ததுல நம்ம மண்ணுல,நம்ம கண்ணு முன்னாடி அவன் பயிர் வச்சி அதைநம்மகிடடேயே வித்து அதநாம வாங்க அவன் கிட்ட்யே கூலி வேலை செய்து வாங்குவோம். வள்ர்க இந்தியா

 4. இப்படி எல்லாத்தையும் தாரை வார்த்து கொடுத்துட்டு இந்த மந்திரிங்க பிரதமர் எல்லாம் என்னா பண்ணப்போறாஙக? அது சரி வரவு செலவு பாக்கணுமில்ல.

 5. P.Chidhambaram !
  Listen his words ! How confident he is on his words to promote people-against actions!

  Also see the Karat (CPM) – he targets Mamatha !
  He make vote-politics in this, like karuna-Jaya did in Eelam Problem!

  Oh God ! Who will save my lovable nation !

 6. காளி மார்க் சோடா கம்பெனி ஒன்று தமிழகத்தில் இருந்தது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த பெப்சி, கோலா வந்த பின் அது மட்டுமல்ல. அந்தந்த ஊர், வட்டார அளவில் இருந்த அனைத்து கம்பெனிகளும் எங்கே போனது? இதுவும் உலகமயமாக்கல், தனியார் மயமாக்கலால் வந்த நன்மை என்று எடுத்துக் கொள்வதா?
  ஒரு நாள் – ஒரே ஒரு நாள் இந்தியா முழுவதும் பெப்சி, கோலா குடிப்பதைத் தவிர்த்தால் அவர்களுக்கு எத்தனை மில்லியன் டாலர் கணக்கில் நஷ்டம் ஏற்படும். யோசித்துப் பாருங்கள்.
  ஆனால் நாம் தான் (பூச்சி மருந்து கலந்த பெப்சி, கோலாவை) மாட்டு மூத்திரத்தைக் குடிப்பது போல் குடிப்பதற்கு பழகி விட்டோமே. என்ன செய்வது?!!!

 7. 2002 டிசம்பர் திங்கள் 16 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த விவாதம் தூள் பறந்தது.

  இப்போது அதை அனுமதிக்கும் காங்கிரசு கயவாளி கும்பல் அதை நியாயப்படுத்த முன்வைக்கும் புரட்டுக்களை அன்றைய ஆட்சியாளர்களான சங் பரிவார் களவாணிகள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.காங்கிரசு யோக்கியர்கள் ”எதிர்த்து” வீராவேச வேடம் கட்டி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

  இன்றோ அப்படியே தோசையை திருப்பி போட்டாற்போல் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

 8. ஒட்டு மொதமாக நாட்ட பன்னாட்டு கம்பனிகு விதுடலாம் மன்மோகன் ஜி! ரைட்டா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க