Monday, August 15, 2022
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் அணுமின்சாரத்தின் மிகையும், காற்றாலை மின் உற்பத்தியின் உண்மையும்!

அணுமின்சாரத்தின் மிகையும், காற்றாலை மின் உற்பத்தியின் உண்மையும்!

-

காற்றாலைமின்சார உற்பத்தியில் நவீன தொழில் நுட்பம் என்பது அணு மின்சாரம் மட்டும் தான் என்கிற ரீதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி போன்ற பேர் பெற்ற விஞ்ஞானப் பெருந்தகைகள் சொல்லி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், ஒரிஜினல் விஞ்ஞான உலகம் அணு மின் உற்பத்தியிலிருந்து மாற்று வழிகளைத் தேடி எத்தனையோ படிகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் ஒட்டுமொத்த உலகின் மின்னாற்றல் தேவையைவிட நான்கு மடங்கு அதிகமாக  காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யுமளவிற்கு காற்று ஆற்றல் அபரிதமாக  இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த புதிய  ஆய்வில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யமுடிந்த மின்னாற்றல் அதிகபட்ச சாத்தியமான வரைமுறையையும், காற்றாலை மின் உற்பத்தி பருவ நிலையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் புவியியற்பியல் அடிப்படையில் சாத்தியங்களை, கணினி மாதிரிகளைக் கொண்டு  கணக்கிட்டுள்ளனர்.

காற்றாலை சுழலிகள் அதிகரிக்க அதிகரிக்க, அவை உற்பத்தி செய்யும்  மின்னாற்றலும் அதிகரிக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சுழலிகளை நிறுவினால் அவை காற்றின் வேகத்தை குறைப்பதுடன், மின்னுற்பத்தியையும் குறைத்துவிடும். அதே சமயம், காற்றின் வேகம் குறைக்கப்படுவதால் அது பருவநிலையின் மீது சிறிது தாக்கத்தை ஏற்படுத்துமெனினும் காற்றாலைசுழலிகளை கூட்டம் கூட்டமாக தொகுப்பாக நிறுவாமல் பரவலான முறையில்நிறுவினால் அவை உற்பத்தி செய்யும் மினாற்றலை கணக்கிடும் போது, பருவ நிலையின் மீதான தாக்கம் மிக குறைவானதே.

இன்றைய ஒட்டு மொத்த உலகின் மின் தேவை தோராயமாக 18டெரா வாட்டாகும் (1Terra watt = 1000 000 Mega Watts). சரிவர திட்டமிட்டு காற்றாலை சுழலிகளை நிறுவினால் இந்த தேவையைவிட  அதிகபட்சம் நான்கு மடங்கு  அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்கிறது ஆய்வு  முடிவுகள்.  ஆயினும்  காற்றாலை  திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதையும், நிர்மாணிப்பதையும், இந்த சாத்தியக்கூறு,  அதிகபட்ச வரைமுறைகளை விடஉலக அரசியல் பொருளாதார காரணிகளே  தீர்மானிக்கின்றன.

நமது தமிழகம் இந்தியாவிலேயே மிக அதிக அளவு காற்றாலை மின்னுற்பத்தி செய்யும் மாநிலமாக முதல் நிலையில் உள்ளது. அதிலும் அதிக அளவிலான காற்றாலைகள் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தான்  நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தனியார் முதலாளிகளுக்கு சொந்தமானவை. அவை அரசின் மானியம் பெற்று நிறுவப்பட்ட பின்னர் அரசுக்கு அதிக விலையில் மின்சாரத்தை விற்கின்றன.

இந்தியாவின் மூன்று படிநிலை அணுசக்தி  திட்டம், அணு மின்சக்தி நாட்டின்  மின்சார தேவையை ஈடுசெய்யும் என்ற அரசின் பித்தலாட்டங்களையும், அது சாத்தியமற்றது என்பதையும், அணு மின்சக்தி வெறும் 2சதவிகித தேவையை மட்டுமே ஈடு செய்யும் என்றும், யுரேனியம் எரிபொருளுக்காக ஏகாதிபத்தியங்களை சார்ந்திருப்பதன் மூலம் நாட்டை அடிமைப்படுத்தும் திட்டம் என்றும்  சுவ்ரத் ராஜு தனது கட்டுரையில் அம்பலப்படுத்தியிருகிறார்.

மேற்சொன்ன ஆய்வு முடிவுகளின் நாட்டின் படி மொத்த மின் தேவை ஈடு செய்ய முடியாவிட்டாலும், அபரிதமாக இருக்கும் காற்று ஆற்றலை சரிவர  பயன்படுத்தினால் 50 சதவிகித தேவையை நிச்சயம் ஈடுசெய்ய முடியும்.  ஆனால்,இராணுவ மற்றும் அணு சக்தி ஆராய்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டித்தீர்க்கும் இந்த அரசு, காற்றாலை மற்றும் மரபு சாரா  ஆற்றல் ஆய்வுகளுக்காக துரும்பையும் கிள்ளிப்போடுவதில்லை.

ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக, ஏவல் நாயைப் போல செயல்படும் இந்த அரசு, சுயமான முடிவுடன் காற்றாலை திட்டத்தை மட்டுமல்ல, எந்த மரபு சாரா ஆற்றல் திட்டத்தையும் ஆய்வு செய்யாது, அமல்படுத்தாது. எதிர்த்து போராடினால் அதை ஒடுக்க சீருடை அணிந்த ரவுடிகளை அனுப்பும், போராடாவிட்டால் அணு உலை நின்று கொல்லும்!

படிக்க

கூடங்குளம் போராட்டம் தொகுப்புப் பக்கம்

 1. தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தியில் 6000 மெகாவாட் தயாரிக்கிறது.சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும்பட்சத்தில் நாம் தன்னிறைவு அடையலாம்

 2. இலங்கையின் எதிர்கால மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தீர்வாக நிலக்கரி அனல் மின் நிலையத்தை தெரிவு செய்ததும் அதற்குப் பொருத்தமான இடத்தை தேடும் முயற்சியின் போது வளமான கற்பிட்டித் தீபகற்பம் தெரிவு செய்யப்பதும் அரசியல் – இனவாத காரணிகளின் செல்வாக்கு தான்!

 3. தலைவா.. காற்றாலைகள் ஓர் ஆண்டுக்கு 40 % மட்டுமே. அதாவது மீதி 60 % பிச்சை மட்டுமே எடுக்க வேண்டும்.
  காற்று வருடத்தின் எல்லா நாட்களிலும் வீசாது.

 4. மரபு சாரா ஆற்றல் வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் கடல் போல் உள்ளன.

  சகாரா பாலைவனத்தில் விழும் வெயிலின் இரண்டு விழுக்காடு அளவை பயன்படுத்தி ஐரோப்பா கண்டம் முழுவதற்குமான மின் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஐரோப்பா முழுவதும் விநியோகிப்பது செயல் சாத்தியமானது [feasible] என்றும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.அதற்கு இடம் அளிப்பதற்காக கிடைக்கும் உரிமைப்பணம் [royalty] உலகிலேயே வறண்ட பகுதியான அப்பாலைவன நாடுகளிலிருந்து வறுமையை விரட்டியடிக்கும்.இந்த முன்மாதிரி உலகம் முழுவதும் சூரியஒளி மின்னாற்றல் உற்பத்தியை பரவலாக்கும்.இதற்கு தடையாக இருப்பது பன்னாட்டு முதலாளிகளின் அரசுகளும் அவர்களது லாப வெறியும்தான்.இயற்கையோ மக்களோ அல்ல

  • மரபுசாரா ஆற்றல்கள் பல உள்ளன ஆனால் அதன் மின் உற்பத்தி திறன் மிகக்குறைவே..

   சூரியத்தகடுகளின் மின்சாரம் பகலில் மட்டுமே பெறமுடியும். அது 12v DC current ஆக மின்கலத்தில் சேமிக்க முடியும். அதனை வைத்து வீட்டில் விளக்கு எரிய வைக்கலாம். பிரிட்சு வாஷிங்மெஷின் போன்ற உயர் அழுத்த எந்திரங்களை இயக்கமுடியாது..

   பாலைவனங்களில் வைக்கலாம் எனக் கூறுவது முட்டாள்தனமானது.. புழுதிப்புயல் இத்தகடுகளை சேதப்படுத்திவிடும்.

   காற்றாலைகளால் வருடத்திற்கு 40 % மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். கடல் அலைகலால் உற்பத்தி செய்யும் மின்சாரம் தயாரிக்கும் எந்திரம் கூட correctionனால் பாதிப்படையும்..

   அணுமின் நிலையம் அனல்மின் நிலையம் நீர் மின் நிலையம் மட்டுமே தொழில் முறை உற்பத்திக்கு இன்றளவும் சிறப்பாய் இயங்கி வருகிறது..

   • //பாலைவனங்களில் வைக்கலாம் எனக் கூறுவது முட்டாள்தனமானது.. புழுதிப்புயல் இத்தகடுகளை சேதப்படுத்திவிடும்.//

    அணுஉலை இருக்கும் இடத்தில் சுனாமியோ ,பூகம்பமோ தாக்கினால் தென் தமிழகமே சேதமாகிவிடும்.

 5. உலகில் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் ஐம்பது சதவீதம் அணுமின்சாரம் பயன்பாட்டில் உள்ளது என்று ஆய்வு கூறுகிறது. பிரான்சில் 77% அனுமின்சாரம்தான். அதுபோல் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் தனது மின் தேவைக்கு 50 சதவீதத்திற்கு மேல் அனுமின்சாரம்தான். எங்கும் இதுவரை கதிரியக்கப் பிரச்சனை வரவில்லை. அங்கு உள்ள மக்கள் இதுபோன்ற தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவில்லை.நமது நாட்டில் இதுவரை இரண்டு சதவீதம்தான் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நாளுக்குநாள் மின்தேவை அதிகரித்து வருகிறது.இன்னும் சில ஆண்டுகளில் நிலக்கரி குறைந்து விடும். அனல் மின்சாரம் தயாரிப்பது குறைந்துவிடும் தற்போது தமிழ் நாட்டில் மட்டுமில்லாது இந்தியா முழுவதும் மின் தட்டுப்பாடு உள்ளது.ஆகையால் அனுமின்சாரத்தை அதிகரித்து ஐம்பது சதவீதத்திற்கு கொண்டுவர வேண்டும். காற்றாலையில் நமது தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மின் உற்பத்தி செய்ய இயலாது. மக்களை மூளைச்சலவை செய்ய இதுபோன்ற கருத்துக்கள் பயன்படலாம். இப்போது தினமும் பத்து மணி நேரத்திற்கு மேல் மின் தடங்கள் உள்ளதால் மக்கள் சொல்லன்னா துயரித்தில் உள்ளனர். மக்களை தவறான பாதைக்கு இழுத்து செல்லாதீர்கள்.

  • In all those countries HUMAN LIFE has some value…But in our country we are NOT able to even investigate the Anderson whose company created the biggest gas tragedy..even now those people are NOT even given the compensation normally given for a car accident.. Also If its so safe Y did the govt passed a law stating if accident happens in nuclear facility the company need to compensate only MINIMUM amount ??? People of USA can trust their govt can u say people of INDIA can trust their govt ??? Also ur facts are NOT accurate.. only 14 countires out of 27 in european union use nuclear power even in those 14 some have decided to phase out nuclear power and some are discussing to do so.. so do NOT try to allienate facts for ur convineice http://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_the_European_Union

 6. நுணலும் தன் வாயால் கெடும்.ஒரு கிணற்றுத்தவளை மற்றவர்களை பார்த்து முட்டாள் என தூற்றுகிறதே.வாயை திறந்து இன்னிசை பாட்டு பாடுவதற்கு முன் கூகிள் தேடுபொறியில் சூரிய ஒளி மின்னாற்றல் பற்றி தேடித் பார்த்திருக்கலாம்.அது சரி அவ்வளவு பொறுமையும் அறிவும் இருந்திருந்தால் அது கிணற்றுத்தவளையாக இருந்திருக்காதே.

  அய்யா அறிவாளி கல்நெஞ்சமே,

  [இது என்ன பெயர்.புனை பெயர் வைத்துக் கொள்ளலாம்.தப்பில்லை.அதில் ஒரு ரசனை வேண்டாமா.தன்னை தானே இழிவு படுத்தும் வகையில் பெயர் சூட்டிக் கொள்வதிலேயே எப்படிப்பட்ட ”அறிவாளி” என்று தெரிகிறது]

  இயற்கையின் இடர்பாடுகளை எண்ணி அஞ்சிக் கொண்டிருந்தால் இந்த உலகில் மனித குலத்தின் வாழ்வே தழைத்திருக்காது.அவற்றை எதிர் கொண்டு முன்னேறி செல்வதன் மூலமே மனிதன் உலகில் உயிர்த்திருக்கிறான்.புயல் அடித்தால் செத்து விடுவோம் என்று அஞ்சியிருந்தால் மனிதன் கடலோடி இருக்க முடியாது.புலி,சிங்கம் அடித்து கொன்றுவிடும் என்று அஞ்சியிருந்தால் மனிதன் வேட்டைக்கு சென்றிருக்க முடியாது,காட்டை திருத்தி நாட்டை கட்டி அமைத்திருக்க முடியாது.கதிரியக்கம் தாக்கி செத்து விடுவோம் என்று அஞ்சியிருந்தால் விண்வெளிக்கு போயிருக்க முடியாது.

  அந்த வகையில் புழுதி புயல்களை வெல்லும் வழிகளை அறிவும் ஊக்கமும் உள்ளோர் கண்டறிவார்கள்.கிணற்றுத்தவளைகளுக்கு அந்த கவலை தேவையில்லை.ஏற்கனவே அந்த திசையில் பாலைவனங்களில் மின் நிலையங்களை அமைப்பதில் கணிசமான வெற்றி ஈட்டப்பட்டுள்ளது.

  ஆதாரம்.

  http://www.guardian.co.uk/environment/2011/dec/11/sahara-solar-panels-green-electricity

  http://www.ansole.org/

  \\அது 12v DC current ஆக மின்கலத்தில் சேமிக்க முடியும். அதனை வைத்து வீட்டில் விளக்கு எரிய வைக்கலாம். பிரிட்சு வாஷிங்மெஷின் போன்ற உயர் அழுத்த எந்திரங்களை இயக்கமுடியாது..//

  http://www.ecogeek.org/solar-power/3633-huge-sahara-desert-solar-project-to-break-ground-n

  இந்த சுட்டியிலிருந்து

  This first plant will be located in Morocco and cost about $2.8 billion and will take two to four years to complete. The first phase of the plant will be 7.4 square miles and have a capacity of 150 MW.
  The Dersertec Initiative is being funded by a large consortium of European companies and organizations. The huge project is expected to provide 15 to 20 percent of Europe’s electricity needs by 2050, while also providing electricity to the Middle East and Northern Africa.

  150 மெகாவாட் மின்சாரம் கிடைத்தாலும் சலவை இயந்திரம் ஓடாதா அறிவாளியே.
  இப்போது தெரிகிறதா கல்நெஞ்சமே யார் முட்டாள் என்று.

  • திப்பு

   சூரிய ஓளித்தகடுகளை மெராக்காவில் வைப்பது இருக்கட்டும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்துக்கு 12500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. 150MW மின்சாரம் தயாரிப்பதற்கு 7.4 Square miles அதாவது 19.16 Km^2…12500 மெகாவாடுக்கு 1596.66 Km^2 இடத்தை தமிழகத்தில் எங்கு உள்ளது எனக் கூற முடியுமா??

   குறிப்பு சூரிய ஓளித்தகடு மின் அளவீடு Kw or Mw அல்ல Kwp or Mwp எனக் கூற வேண்டும்.இதில் p என்பது peak யை குறிக்கும். அதாவது அதாவது அதிக பட்ச மின் உற்பத்தி.

   A.C எனப்படும் Alternate Current யை மின்கலன்களில் சேமித்து வைக்க முடியாது. D.C எனப்படும் Direct Current தான் மின்கலன்களில் சேமித்து வைக்கமுடியும். மோட்டார் போன்ற A.C யில் இயங்கும் உபகரணங்களுக்கு inverter தேவைப்படும்.
   Sine wave க்கு பதிலாக Square wave வை inverter பயன்படுத்தும் போது இரைச்சல் அதிகமாகவும். Effiency மிகக்குறைவாக இருக்கும்.

   சூரிய சக்தி அதிகபட்சம் 12 நேரம் மட்டுமே.. பகலில் மின்சாரம் சேமித்தால் இரவிலே அல்லது மறுநாள் பகலில் உபயோகம் செய்யலாம். பாட்டரியில் 2/3 மின்சாரத்தை மட்டுமே உபயோகப்படுத்த முடியும்.
   .

   இங்கே 1/2 HP single phase 8 hr runningக்கு ஆகும் மின்சாரச் செலவு மற்றும் மின்கலத்தின் அளவு மட்டும் கணக்கீடப்பட்டுள்ளது.
   0.5 HP = .746 KW X 0.5 = 0.373 KW
   backup = 373 x 8 / 12 = 248 AH Battery

   5 HP motor 3 phase motor தினமும் 8 மணி நேரம் இயக்க ஆக எவ்வளவு
   +மின்சாரம்
   +மின்கலன்களின் எண்ணிக்கை
   +சூரியத்தகடுகளின் பரப்பளவு
   என்று இந்த மக்கு கல்நெஞ்சத்துக்கு பதில் கூறலாமா திப்பு..

   +++++++++++++++எனக்கு மிகவும் பிடித்த வரிகள் திப்புவின் இந்த மறுமொழிதான்+++++
   இயற்கையின் இடர்பாடுகளை எண்ணி அஞ்சிக் கொண்டிருந்தால் இந்த உலகில் மனித குலத்தின் வாழ்வே தழைத்திருக்காது.அவற்றை எதிர் கொண்டு முன்னேறி செல்வதன் மூலமே மனிதன் உலகில் உயிர்த்திருக்கிறான்.புயல் அடித்தால் செத்து விடுவோம் என்று அஞ்சியிருந்தால் மனிதன் கடலோடி இருக்க முடியாது.புலி,சிங்கம் அடித்து கொன்றுவிடும் என்று அஞ்சியிருந்தால் மனிதன் வேட்டைக்கு சென்றிருக்க முடியாது,காட்டை திருத்தி நாட்டை கட்டி அமைத்திருக்க முடியாது.கதிரியக்கம் தாக்கி செத்து விடுவோம் என்று அஞ்சியிருந்தால் விண்வெளிக்கு போயிருக்க முடியாது.
   +++++++++++++++++++++

   • அடடா,என்ன ஒரு அறிவு,என்ன ஒரு அறிவு.

    தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் மட்டுமே உற்பத்தி செய்வதாக இருந்தாலும் அத்தனை தகடுகளையும் ஒரே இடத்தில்தான் நிறுவ வேண்டுமோ.காற்றாலைகளையும்,புனல் மின் நிலையங்களையும் மூடி விட வேண்டுமோ.

    தெருவிளக்குகளை எரிய வைக்க அந்தந்த கம்பங்களின் உச்சியில், அடுக்கு மாடி வீடுகளின் மொட்டை மாடிகளில்,ஒவ்வொரு ஊருக்கும் அருகில் இருக்க கூடிய தரிசு நிலங்களில்,அரசு கட்டிடங்களின் உச்சியில், பள்ளி,கல்லூரி கட்டிடங்களின் மொட்டை மாடிகளில் இப்படி எத்தனையோ இடங்களில் பரவலாக நிறுவலாம்.அதெல்லாம் முடியாது.மொத்தமாகத்தான் நிறுவ வேண்டும் என்று அடம் பிடித்தாலும் 1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தமிழகத்தில் சில ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை மின் உற்பத்திக்கு என ஒதுக்கினால் யார் குடியும் முழுகி விடாது.குறிப்பாக கல்நேஞ்சத்தின் குடி முழுகி விடாது.ஆகவே யாரும் கவலைப் பட வேண்டியதில்லை. இன்னொரு கேள்வி,அணு மற்றும் அனல் மின் நிலையங்கள் என்ன அந்தரத்திலா நிறுவப்படுகின்றன.அவற்றை நிறுவ நிலம் தேவைப்படாதா.

    இந்த பின்னூட்டத்தில் மீதி உள்ளவை அனைத்தும் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதில் உள்ள தொழில் நுட்ப சவால்கள்.இதனை அறிவுடையோர் மிக எளிதாக சமாளிக்க முடியும்.இயற்கையின் இடர்பாடுகளுக்கே கலங்காத மனித இனம் இந்த சவால்களை மிக எளிதாக கடந்து செல்வதை காலம் காட்டும்.

    ரைட் சகோதரர்கள் முதன் முதலில் வானூர்தியை உருவாக்கி விண்ணில் பறந்தனர்.அன்றைய நிலை என்ன.இன்று வானில் பறக்கும் வானூர்திகளின் நிலை என்ன.சூரிய ஒளி மின் உற்பத்தியின் துவக்க காலத்தில் நாம் இருக்கிறோம்.இன்று பெரும் பிரச்னையாக தோன்றுபவை எல்லாம் நாளை ஒன்றுமே இல்லை என்று ஆகி விடும்.

    • இதைத்தான் நானும் சொல்லுகிறேன். அணுமின்சக்தியை ஆக்கப்பூர்வமாய் பயன்படுத்தினால் அதன் நன்மைகள் பல பல. இயற்கையின் இடர்பாடுகளுக்கே கலங்காத மனித இனம் இந்த சவால்களை மிக எளிதாக கடந்து செல்வதை காலம் காட்டும்.

     Death Rate From Nuclear Power Vs Coal? This May Surprise You
     http://www.the9billion.com/2011/03/24/death-rate-from-nuclear-power-vs-coal/

     கதிரியக்கப் பாதிப்பு அல்லது வெடித்துவிடும் என அஞ்சினால் அங்கே யாரும் வேலை செய்யவிரும்பமாட்டார்கள். கதிரியக்கப் பாதிப்பு இருக்குமெனில் ஆயிரக்கணக்கான வல்லுனர்களும், பெறியியல் வல்லுனர்களும் ஆபத்தான வியசங்களை செய்து அதனுள் வாழ அவர்களே விரும்பமாட்டார்கள். .

     அமெரிக்காவில் 104 அணு உலைகள் 75% மின் உற்பத்தியை பூர்த்தி செய்கின்றனபிரான்சில் 56 அணு உலைகள் எந்தவொரு பிரச்சனைகள் இல்லாமல் இயங்கி 75% மின் உற்பத்தியை பூர்த்தி செய்கின்றன. நிமிட்ஷ் என்ற போர்கப்பல் அணுசக்தியில் இயங்குகிறது.ஜப்பான் தனது அணு உலைகளை திரும்ப இயக்கத் தெடங்கிவிட்டது.

     Japan Restarts Nuclear Reactor – WSJ.com
     http://online.wsj.com/article/SB10001424052702304299704577500520506450482.html

     இந்த கூடன்குளம் அணுஉலையின் துவக்கம் வெகுதொலைவில் இல்லை. ஆவலோடு வரவேற்போம் இந்தியாவின் புதிய பரிணாமத்தை. அறிவியல் அறிஞர்கள் ஓன்னும் வெடிகுண்டு செய்வதற்காக அணுஉலைகளை நடத்தவில்லை. அதன் கதிரியக்கத்தை கட்டுப்படுத்தும் திறனை கொண்டவர்கள்.

     http://kalnenjam.blogspot.in/2012/09/blog-post_23.html

   • காற்றாலைகளை எல்லா இடங்களிலும் நிறுவி விட முடியாது. நீர் மின்சாரம் அணையில் தண்ணீர் இருக்கும் போதுதான். சூரிய சக்தியை வைத்து ALTERNATE CURRENT ல் இயங்கும் இந்திரங்களை இயக்கமுடியாது. அணு சக்தியை கண்டறிந்தவன் ஓன்றும் முட்டாள் இல்லை. அதை எவ்வாரு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர்கள்.

    சும்மா hollywood படங்களை பார்த்து பயப்பட வேண்டாம். ஜப்பானோ தனது அணு உலைகளை இயக்கத்தொடங்கி விட்டது.சீனா 2030க்குள் குறைந்தபட்சம் 25 அணுஉலைகளை திறக்கத்திட்டமிட்டுள்ளது.

    நீ என்னத்தான் கூப்பாடு போட்டாலும் தொண்டை கிழிய கத்தினாலும் தீயே குளித்தாலும் கூடன்குளம் அதன் உற்பத்தியை இன்னும் சிறிது நாட்களில் துவக்க இருக்கிறது.

    • சூர்ய ஒளியிலும் , காற்றாலையிலும் ALTERNATE CURRENT வெளி வருகின்றது .
     இந்தியாவிலே காற்றாலை தமிழகத்தில் தான் மிக அதிகமாக உள்ளது .
     Direct Current முறை 1970 களில் பயன்படுத்தப்பட்டது ,அதை வைத்து தான் மின்சார தொடர் வண்டிகளும் இயக்கப்பட்டன .இப்பொழுதும் தொடர் வண்டிகள் Direct Current முறையிலேயே இயங்குகின்றன ( A.C யை D.C யாக மாற்றி ).இப்பொழுது நடைமுறையில் இருக்கும் அணைத்து மின் சாதனங்களும் A.C முறையில் இயங்கும் வண்ணம் உள்ளன .
     சூர்ய ஒளியிலும் , காற்றாலையிலும் வெளிவரும் மின்சாரத்தை கொண்டு எந்தஆணியையும் புடுங்கலாம்.உங்களுடைய வாதத்தை பார்த்தால்(//நீ என்னத்தான் கூப்பாடு போட்டாலும் தொண்டை கிழிய கத்தினாலும் தீயே குளித்தாலும் கூடன்குளம் அதன் உற்பத்தியை இன்னும் சிறிது நாட்களில் துவக்க இருக்கிறது.//) ரஜினி பற்றவைக்கும் Cigarette மிகவும் நேர்த்தியானது ,அழகானது ,அறிவுபூர்வமானது ,கண்ணிமைக்கும் நேரத்தில் பற்றவைக்கப்பட்டது .அதனால் அந்த வழியையே பின்பற்றவேண்டும் என்று சொல்வது மூடத்தனம் தான் .யார் பற்றவைத்தாலும் அதிலிருந்து வெளிவரும் நெருப்பு ஒன்றே….

     • ஏங்க அணு குண்டு வெடிபொருளாக கருத வேண்டாம். ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன. தீவிர கேன்சர் சிகிச்சைக்கு isotopes ஆக பயன்படுகிறது. Hollywood படங்களில்தான் அணுகுண்டு வெடிக்குமே தவிர உண்மையில் அதன் பயன்கள் பல பல..

      சுனாமில் சிக்கிய ஜப்பானே தனது அணு உலைகளை இயக்கத்தொடங்கி விட்டது. நீ ஏன் கத்தி ஓப்பாரிவக்கிர. சூரிய ஓளித்தகடும் தொழில்நூட்பம்தான். அணு உலைகளும் தொழில்நூட்பம்தான்..

      • அப்படி உயிரை பணயம் வைத்து, ஏன் மின்சாரம் எடுக்க வேண்டும், எல்லா மாநிலங்களுக்கும் மின்சாரம் தரவா அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தரவா? வேண்டுமானால் வேறு மாநிலங்களில் அணு உலைகளை நிருவிகொள்ளட்டும்.

       • http://www.iris.edu/seismon/

        இந்த தளத்தில் பார்த்து எதற்காக தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ளது என அறிந்து கொள்ளவும். நண்பா..
        கண்மூடித்தனமான எதிர்ப்புகள் தேவையற்றது ..

        • படத்தை பார்த்தேன், புரியவில்லை. ஏன் மேற்கு வங்கத்தில் அல்லது பிற மாநிலத்தில் நிறுவி இருக்க கூடாது. பல வளர்ச்சியடைந்த நாடுகளும் படிப்படியாக அணு உலைகளை மூட போவதாக அறிவித்துள்ளன. அதுவும் கண்மூடித்தனமா?

         • 1 சதவிகிதம்கூட வாய்ப்பு இல்லை எனும்போது, ஏன் அணுஉலை நிறுவனங்கள் அணுசக்தி இழப்பீட்டில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு தலைகீழாக நிற்கின்றன. அப்போதும் அணு உலை பாதுகாப்பானது என்று வாதிடுவது கண்மூடித்தனம் இல்லையா.

          • கூகிளை செடுக்குங்கள் ஜப்பான் தனது அணு உலைகளை இயக்கத்தொடங்கி விட்டது…

           நான் லிங்க் செய்து படமல்ல உலகின் பல்வேறு பாகங்களில் குறிப்பாக புவித்தட்டுகளடையே வைக்கப்பட்டுள்ள பூகம்ப சென்ஸார்கள் வைத்துள்ள இடங்கள். P wave and S wave களை உணர்ந்தவுடன் அணுஉலைகளை நிறுத்து வசதிகள் உள்ளது. இந்த live மேப்பை பகுத்தறிவோடு பார்த்தால் தமிழ்நாடு எவ்வளவு பாதுகாப்பான இடத்தில் உள்ளது எனத் தெரியும்.

           http://www.iris.edu/seismon/

          • 1 சதவிகிதம்கூட வாய்ப்பு இல்லை எனும்போது, ஏன் அணுஉலை நிறுவனங்கள் அணுசக்தி இழப்பீட்டில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு தலைகீழாக நிற்கின்றன, இதற்கு பதில் சொல்லுங்கள்.
           கூடங்குளம் உலை அத்தனை பாதுகாப்பானதென்றால் கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனைத் தயாரித்த ரசிய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம்’ என்று இந்தியரசிய ஒப்பந்தத்தின் 13ஆவது ஷரத்து கூறுகிறதே, அது ஏன்?”

        • கல்நெஞ்சம், கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுவரத் ராஜுவின் கட்டுரையை படித்தீர்களா? ரெம்ப நீளம்ன்னு சாய்ஸ்ல விட்டுட்டீங்களா? அத பத்தி வாய் தொறக்க மாட்டிங்கறீங்களே?

         அப்புறம், இந்த கட்டுரை மையமாக எடுத்துக்கொண்ட செய்தி : செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் ஒட்டுமொத்த உலகின் மின்னாற்றல் தேவையைவிட நான்கு மடங்கு அதிகமாக காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யுமளவிற்கு காற்று ஆற்றல் அபரிதமாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
         இத பத்தியும் வாய் தொறக்கமாட்டீங்கறீங்களே ?

         இதயும் படிச்சு பாருங்க..
         http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/wind-can-provide-enough-energy-to-meet-global-power-demand/article3882135.ece

    • @ கல்நெஞ்சம் , இந்த கட்டுரை படிங்க

     https://www.vinavu.com/2011/10/04/indian-atomic-plan/

     உங்க பின்னூட்டத்தில் இந்த வரிகள் நேர்மையா இருக்கு
     //////////நீ என்னத்தான் கூப்பாடு போட்டாலும் தொண்டை கிழிய கத்தினாலும் தீயே குளித்தாலும் கூடன்குளம் அதன் உற்பத்தியை இன்னும் சிறிது நாட்களில் துவக்க இருக்கிறது.
     /////////

 7. நல்ல தருணத்தில் வெளியிடப்பட்ட பதிவு.
  இந்த பதிவை பிரசுராமாக எடுத்து சுற்றுக்கு விட வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க