Thursday, June 13, 2024
முகப்புஅரசியல்ஊடகம்தமீம் அன்சாரி : ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி !

தமீம் அன்சாரி : ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி !

-

தமீம்-அன்சாரி
தமீம் அன்சாரி

ஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (34) கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில்  கைது செய்யப்படுகிறார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றபோது அவரை கைது செய்ததாக‌ க்யூ பிரிவு போலீசார் செய்தி பரப்பினர். ஆதாரம் அவர் வைத்திருந்த செல்போனில் உள்ள குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரி மற்றும் அணுமின் நிலையங்களின் புகைப்படங்கள். இணையத்தை திறந்தால் எளிதாக கிடைக்கும் இப்படங்களை ஒரு ஆள் வைத்து புகைப்படம் எடுக்குமளவுக்கு ஐஎஸ்ஐ என்னமோ  அர்ஜூன், விஜயகாந்த் படங்களில் வரும் காமடி பீசாக காட்டுகின்றனர் தமிழக போலீசார்.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் தமீம் அன்சாரி அங்கு பாக். உளவுப்பிரிவில் உள்ள சாஷி, காஜி என்பவர்களை சந்தித்தாராம். கடந்த 8 மாதங்களில் அன்சாரி இலங்கைக்கு 5 முறை சென்றாராம்.  தமீம் அன்சாரிக்கு சாஜி தர வேண்டிய வியாபார பாக்கி 27 இலட்ச ரூபாய். அதாவது க்யூ பிராஞ்ச் மொழியில் சொல்வதென்றால் உளவு பார்ப்பதற்கான கைக்கூலி.

முதல் தகவல் அறிக்கையில் சாஜி பெயரும், இலங்கையிலுள்ள பாக். தூதரகத்திலுள்ள சில அதிகாரிகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ,,அவர்களில் யாரும் பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இருப்பவர்களா? என எனக்குத் தெரியாது.,, என்கிறார் தமீம் அன்சாரி. அவர்களுடம் வியாபாரம் செய்வதைத் தாண்டி அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு தனக்கு எப்படித் தெரியும் என்கிறார் அன்சாரி.  இந்த லட்சணத்தில் கடந்த 8 மாதமாக அவரது செல்போன் பேச்சுக்களை வேறு உளவுப் பிரிவினர் கண்காணித்துதான் பொறி வைத்துப் பிடித்தார்களாம்.

அன்சாரி மீது இந்திய அரசாங்க ரகசிய சட்டம் 3,4,9 பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள அன்சாரி முன்னாள் தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் சங்க செயலர். ஆனாலும் சிபிஎம் இக்கைது பற்றி வாய் திறக்கவேயில்லை. அதனால்தான் விமான நிலையத்தில் கைதுசெய்து விட்டு திருச்சி டோல்கேட்டில் வைத்து பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையில் போலீசாரால் துணிந்து பொய் சொல்லுவதோடு அவருக்கு தீவிரவாதி பட்டமும் கட்ட  முடிகிறது. சிபிஎம்மும் பொதுவான இந்து உளவியலின் செல்வாக்கில் இருப்பதால் அன்சாரிக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள அன்சாரி வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை கொள்முதல் செய்ய குன்னூருக்கு சென்றபோது வெலிங்கடன் ராணுவக் கல்லூரியையும் புகைப்படம் எடுத்தாராம். தஞ்சைக்கருகில் உள்ள மல்லிப்பட்டிணம் கடற்படை தளத்தை கூட இதுவரை அவர் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் அங்கேயும் சென்று படம் எடுத்தாகக் கூறுகிறது போலீசு. எதிர்காலத்தில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் அன்சாரியின் ஆசையாம். அதற்கு செல்லுமிடங்களெல்லாம் புகைப்படம் எடுக்கும் வழக்கம் உடையவர் அவர்.

குன்னூரில் இந்திய இராணுவம் இருக்கிறது, பயிற்சிக் கல்லூரிகள் இருக்கிறது என்பது உலகத்திற்கே தெரிந்த விசயம். அதுவும் இலங்கை வீரர்கள் எல்லாம் வந்து பயிற்சி செய்யும் இடம். ஒரு வேளை இலங்கை வீரர்கள் மூலம் குன்னூர் தகவல்கள் பாகிஸ்தான் சென்றால் இந்தியா என்ன செய்யும்? எனில் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதோடுதான் அங்கு இலங்கை வீரர்கள் வந்து போகிறார்கள் என்றால் அதில் இரகசியம் ஏதுமிருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவின் மூலை முடுக்குகளையெல்லாம் அமெரிக்க விண்கோள்கள் வேவு பார்க்கும் போது அமெரிக்காவிடம் சொல்லி இந்திய இராணுவ இரகசியங்களை பாக் வாங்கிவிடலாம். இல்லையெனில் அப்படி ஒரு விண்கோளை விட்டால் முடிந்தது விசயம். இதெல்லாம் முடியாது என்று ஒரு திருச்சி வெங்காய வியாபாரியை வைத்துத்தான் ஐ.எஸ்.ஐ செயல்படுகிறது என்றால் சிரிப்பாக இல்லை?

ஏற்கெனவே முசுலீம்கள் பற்றிய சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் புரிதலுக்கு ஏற்ப ஊடகங்கள் தமீம் அன்சாரியை முக்கியமான தீவிரவாதியாக ஓரிரவில் சித்தரித்து விட்டன• போலீசும், ஆளும் வ‌ர்க்க‌மும் நாடு முழுக்க‌ முசுலீம்க‌ளை தீவிர‌வாதிக‌ளாக‌ காட்டுவ‌தில் முன்னிற்கின்ற‌ன• காசுமீரில்  சாதார‌ண‌ அப்பாவிக‌ளை இந்திய‌ ராணுவ‌ம் தீவிர‌வாதிக‌ளாக‌ சித்த‌ரிக்கின்ற‌து. அதுபோல‌வே நாடு முழுதும் சித்த‌ரிப்ப‌த‌ன் ஒரு ப‌குதிதான் அன்சாரி தீவிர‌வாதி ஆன‌தும்.

 1. // இதெல்லாம் முடியாது என்று ஒரு திருச்சி வெங்காய வியாபாரியை வைத்துத்தான் ஐ.எஸ்.ஐ செயல்படுகிறது என்றால் சிரிப்பாக இல்லை? //

  வெங்காய விலையும் ஏறும்போது வெங்காய வியாபாரிகளெல்லாம் பாக். உளவாளிகள் என்று கண்டுபிடிக்கப்படும்..

 2. சிறப்பான ஒரு பதிவு…..இதையே ஒரு இஸ்லாமிய பதிவர் தெரிவித்திருந்தால் உளவுத்துறை அவரையும் 8 மாதம் கண்காணிதிருக்குமோ…..? ஒரு நோக்கமா தான் போய்க்கிட்டு இருக்காய்ங்க…

 3. if we give police control to vinavu, then all the real terrorists will became innocent and all the innocent people will became terrorists. why cant you publish the police version? Eventhough you dont like them. how come you blindly support one single person eventhough you know him through media only. what if he is a really terrorist? If that person is not muslim and if he is a hindu, the title of the story will be a different one.

  இல்லையெனில் அப்படி ஒரு விண்கோளை விட்டால் முடிந்தது விசயம்

  Pakistan dont have satellites. America wont give anything now to pakistan as their relationship is very bad.

  • ஆமய்யா வினோத் தான் ..பாகிஸ்தான் மற்றும் அமேரிக்காவுக்கான நல்லென்ன தூதர்…இவருக்கு எல்லாம் தெரியும்…இவர் உலக வெளியுறவுத்துரை அமைச்சர்…வினோத் வாழ்க

  • வினோத் அவர்களே,
   முதலில் நீங்கள் தமிழில் எழுதுங்கள்.கட்டுரையில் போலிஸ் மொழி தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்னர் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.உங்களுக்கு தெரிந்தது எப்படி,ஊடகமின்றியா! கொஞ்சம் சிந்திக்கவும்.

 4. Bro. Vinoth & Bro, kmv you should understand

  ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம் ஆனால் ஒருநிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது

  அழகப்பன்
  சிட்னி

 5. தமிழக இஸ்லாமிய அமைப்புகளாகட்டும், இஸ்லாமிய அரசியல் கட்சிகளாகட்டும் தமீன் அன்சாரியை குறித்து இதுவரை வாயே திறக்காமல் இருக்கும் நிலையில் வினவு தமின் அன்சாரிக்காக குரல் கொடுத்தற்கு நன்றி.

 6. இஸ்லாமிய அமைப்புகளும் குரல் கொடுக்காத நிலையில் குரல் கொடுத்தது நல்ல விசயம்தான்.முடிவு விசாரணையில்தான் இருக்கு.தொடர்ந்து வழக்கை கவனித்தலில்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

 7. மாரிமுத்து ,நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் .ஏனெனில் நீங்கள் மாரிமுத்து

 8. தீவிரவாதிகள் என்ற பெயரில் ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் .
  ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் இன்றும் தீவிரவாதிகளாக சிறையில் வாடுகிறார்கள்..ஆனால் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் இன்று தேச பக்தர்களாக உலாவருகின்றனர் .

 9. ரோஜா படத்தில் பல காட்சிகள் வெலிங்கடன்னில் எடுக்கப்பட்டதுதானே அதுவும் இராணுவ அனுமதி பெற்று அப்போ அது ரகசியம் இல்லையா !

 10. //அன்சாரி மீது இந்திய அரசாங்க ரகசிய சட்டம் 3,4,9 பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.//

  அடப்பாவிகளா?

  இனிமேலும் வெங்காயத்தின் மீது சட்டம் தன் கடமையை செய்யுமா?

 11. தமீம் அன்சாரி இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்று இருக்க வேண்டும்.

 12. முஸ்லிம் பெயர் வைத்திருந்தால் அவன் தீவிரவாதி என்று முத்திரைககுத்தி வைத்திருக்கும் அரசாங்கம் மற்றும் காக்கிச் சட்டை எடுபிடிகளுக்கு என்ன சொன்னாலும் எடுபடாது. ஏனெனில் மேலிருந்து கீழ் வரை அப்படி நாறிப்போயிருக்கிறது.

 13. Dear mr.vinoth,

  if u r right, please answer the below info. this is not a imagination. this is the reality. i hope u understand. where our country is going???..of course i have some rare pictures & some historical videos about our country. so how can be a terrorist? i love & like my country. thts the reason i am collecting and keeping with mine. leave it this one.kindly read below msg then come to know..whats going on here?

  http://www.thoothuonline.com/thameem-ansari-arrest-report-of-a-fact-finding-team/

 14. India has such weak backbones that as soon as U.S. objected (by putting microphones with chicklets in his office) they sent Pranab Mukerjee away from Finance and made him President. David Headley, the master mind behind Bombay terrorist attack is safely in U.S. and India has no back bone to bring him for trail in Bombay. Instead they sentence to death a Pakistani cooli. As soon as the New York Times calls Manmohan Singh a failure he announces 51% FDI and diesel price increases. Our leaders and the government have been doing much more damage to India than any of the most dangerous terrorist.

 15. இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் தமீம் அன்சாரியை முன்பே அமைப்பிலிருந்து நீக்கியதாக சி.பி.எம் கட்சியினர் கூறியுள்ளனர்.அவர்களை யோக்கிய சிகாமணிகளாக காட்டும் வழக்கமான நடைமுறைதான். சரி கட்சிக்குள் இவர்கள் தமீம் அன்சாரியை சொல்லும் செயல்களை செய்யும் நபர்கள் இன்னும் தலைவர்களாக கூட உள்ளனர். தமீமை போன்றே அவர்களையும் நீக்குமா?… மடங்களில் இளைய சாமியாரக இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி முன்பு ஒரு கட்டுரை வந்தது, அது சி.பி.எம் கட்சியினருக்கு அப்படியே பொருந்தும்.. தமீம் மாணவர் சங்க “தலைவராக” இருக்கும் போது கட்சியின் “கொள்கைப்படி” ம.க.இ.க.வின் போராட்டங்களை கொச்சைப்படுத்தி பேசியவர்தான், ஆனால் அரசியல் நேர்மை காரணமாக தமீமை “தீவிரவாதியாய்” சித்தரிப்பதற்கு எதிராக வினவு போராடுகிறது. அத்தகைய நேர்மை இல்லாத ஓட்டாண்டிதனம் காரணமாக அவர் மாணவர் சங்க தலைவராக இருந்த போது மாணவர் சங்கத்திலவரது கோஷ்டியை சேர்ந்த செல்வா முதல் எதிர் கோஷ்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் வரை, அவர் வீட்டைப்போல தங்கியிருந்த உள்ளூர் கட்சி முதல் ஜெயலலிதாவைன் நம்பர் – 2 அல்லக்கை ராமகிருஷ்ணன்(முதல் இடம் எப்போதும் தா.பா.வுக்குதான்)வரையிலான மாநில தலைமை வரை எல்லாத்தையும் மூடிக்கொண்டுள்ளது.

 16. தமீமைப் போன்று இன்னும் வரட்டுத்தனமாக சி.பி.எம் கட்சியில் இருக்கும் அணிகள் சி.பி.எம் -ன் யோக்கியதை புரிந்து கொள்ள வேண்டும்…

  மாணவர் சங்கத்தில் மாநில தலைவர் வரையிலான பொறுப்பிலிருக்கும் பல்வேற் அணிகள் குறைந்த பட்சம் அரசியலியலின்றி பிற்காலத்தில் சீரழிந்து வருகின்றனர். சி.பி.எம்-ன் ஓட்டாணடி அரசியல்தான் இதற்கு காரணம் என்பதை கட்சியும், அவர்களும் எப்போதும் கூறுவதில்லை…( பல்வேறு “மாணவர் சங்க அணிகள்” பிற்காலத்தில் தன்னார்வ தொன்டு நிறுவனம் நடத்துபர்களாகக் கூட மாரியுள்ளனர்.)

  இவர்களின் சமீபத்திய சீரழிவுன் உச்சம் கூடங்குள மக்கள் போராட்டத்தை அமெரிக்காவிடம் காசு வாங்கி போராடுவதாக எடுத்த வாந்தியை நக்கி பின் அதனையே வாந்தியெடுப்பது…..

  இவர்களின் மானவர் சங்கத்தில் தமீம் மட்டுமல்ல பல்வேறு தலைவர்களையும் ஷோக்கு பேர்வழிகளாகவே வைத்துள்ளது. இன்ரும் கூட…..

 17. இஸ்ரோவில் புகுந்து மாட்டிக் கொண்ட ப்யுலாவுக்கு மனநிலை பாதிப்பு .ஆனால் ராணுவ பயிற்சி கல்லூரியையும் அணுமின்நிலையத்தையும் படம்பிடித்த தமிம் அன்சாரி நிலையுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

 18. உங்க சொந்தக்காரவுங்க….உங்களை விட கொஞ்சம் லைட்டர் ஷேடு சேப்பு கலர் வேற மாதிரி நெனைக்கானுங்க…

  http://tehelka.com/story_main54.asp?filename=Ws290912NAD.asp

  அவுங்கள என்னன்னு சொல்லப்போரீரு வெனவு ?

 19. The issue is not as simple as that. What was he doing with the photos of Wellington? – What is the need to take such photos from inside the car? Why was he taking photos of landing spots on the sea side?

  Though google earth would reveal data, nothing can equal personal information collected by such spies – may be that’s why he had done such things.

  Please don’t think that these guys are waging war against some unknown entity. Kasab killed many innocent people on the streets of Mumbai, without finding out whether they are rich or poor, whether they are muslims or hindus. These traitors are a threat to everybody.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க