Friday, August 12, 2022
முகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள்- 01/10/2012

ஒரு வரிச் செய்திகள்- 01/10/2012

-

செய்தி: அ.தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் தி.மு.க.,தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் தெரிவித்தார்.

நீதி: நில மோசடி வழக்குகளுக்காக உடன்பிறப்புகள் குடியிருக்கும் சிறையிலா போராட்டம்?

____________

செய்தி: “”நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் இருந்து, மக்கள் கவனத்தை திசை திருப்பவே, காங்கிரஸ் கட்சி, என் மீது புகார்களை வாரி இறைத்துள்ளது,” என, மகாராஷ்டிர மாநில, “மாஜி’ துணை முதல்வர் அஜித் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதி: சரி, நீங்களும் திசை திருப்ப யார் மீதாவது புகார் கொடுங்கள். உங்கள் போட்டியில் உண்மைகள் வெளிவரட்டும்!

___________

செய்தி: விரைவில் மாற்றம் செய்யப்படவிருக்கும் ஆளும் காங்கிரஸ் அரசில் அமைச்சர் பதவி எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வதற்கென முடிவு எடுப்பது தொடர்பாக தி.மு.க, அவசர செயற்குழு இன்று காலையில் அறிவாலயத்தில் கூடியது.

நீதி: இல்லையேல் கோபாலபுரத்திற்கும், சிஐடி காலனிக்கும், மதுரைக்கும் வேளச்சேரிக்கும் உலகப்போரே மூண்டிருக்கும்! பிழைத்தார் கருணாநிதி!

___________

செய்தி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங். கட்சி டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

நீதி: கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இடம்பெயர்ந்திருக்கும் இந்த சலிப்பூட்டும் நாடகத்தை ஆர்ப்பாட்டம் என்று அழைப்பது நடிப்புக் கலையை இழிவுபடுத்துவதாகும்.

___________

செய்தி: சென்னை:தமிழக இளைஞர் காங்கிரஸ், மாநிலத் தலைவராக யுவராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீதி: தேர்வு செய்யப்படாதவர்கள் தி.நகரில் வேட்டிகளை வாங்கிக் கொண்டு சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்துள்ளனர்.

__________

செய்தி: “கூடங்குளம் அணு உலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, விரிவாக ஒரு அறிக்கை தயார் செய்து, அக்டோபர், 4ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது,” என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

நீதி: பாதுகாப்பு ஏற்பாடுகளில் கருமாதிக்கான ஏற்பாடுகளும் அடக்கம்தானே?

___________

செய்தி: “மத்திய அரசுக்கு எதிராக, தேசிய ஜனநாயகக் கூட்டணிசார்பில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் திட்டம் இல்லை,” என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர், சரத் யாதவ் கூறி உள்ளார்.

நீதி: சில்லறை வணிக அந்நிய முதலீட்டை எதிர்ப்பதில் எங்களுக்கே நம்பிக்கை இல்லை! நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓட்டு இல்லை! எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை. இல்லவே இல்லை.

___________

செய்தி: “அரசியல் களத்தில், மீண்டும் புத்துணர்ச்சியுடன் குதிக்க விரும்புகிறேன்’ என, 86 வயதான, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், என்.டி.திவாரி கூறியுள்ளார்.

நீதி: ஒரே ஒரு நிபந்தனையுடன்: படுக்கை அறையில் கேமரா இருக்கக் கூடாது.

___________

செய்தி: “அரசியல் முழுவதும் அழுக்கு நிறைந்தது,” என, சமூக சேவகர், அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

நீதி: சாக்கடையில் இறங்கி தூர்வாரினால் வெள்ளைச் சட்டை அழுக்கடையும் என்பதால் கரையிலிருந்து சவுண்டு மட்டும் கொடுப்பேன்.

___________
 செய்தி: “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம், நவம்பர் 12ம் தேதி துவங்குகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள், குறைந்த பட்ச டேவணித் தொகையாக, 1,332 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி: கமிஷனை கருப்பாக சுவிஸ் வங்கியில் செலுத்த வேண்டுமோ?

___________

செய்தி: நாட்டின் பெரிய, துணை ராணுவ படையான, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) பொது இயக்குனர் பதவியில் இருந்து, கே. விஜயகுமார் நேற்று ஓய்வு பெற்றார்.

நீதி: இதனால் தண்ட்காரன்யா பழங்குடி மக்கள் நிம்மதி அடைய முடியாது. ஒரு விஜயகுமார் போனால் இன்னொரு அஜய் குமார் வருவார்.

___________

செய்தி: :”நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும், அரசு நிறுவனமான, “ஏர் இந்தியா’வை, பாதியளவுக்கு தனியார் மயமாக்கினால், லாபப் பாதையில் திரும்பும்’ என, மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி: ஏர் இந்தியாவை மட்டுமல்ல, ஏரையே (AIR-காற்று) தனியார் மயமாக்கினால் லாபம் பிய்த்து உதறுமே?

__________

செய்தி: காவிரி நதி நீர் பிரச்னையில், கர்நாடக அரசு கடைபிடிக்கும் போக்கு, டெல்டா பாசன விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால், தஞ்சை சுற்றுப்பயணத்தை, பிரதமர் மகள் உபீந்தர் சிங் திடீரென ரத்து செய்து விட்டு, டில்லிக்கு புறப்பட்டார்.

நீதி: இப்படி இந்திய மக்கள்  கொதித்தெழுந்தால் மன்மோகன் சிங் அமெரிக்காவிற்கு புறப்படுவார்!

 1. இந்தியாவிற்கான இறையாமை உள்ள செய்தியும்,மறுமொழியான நீதியும் யாருக்கும் அடங்காத அடிபிறலாத கடுத்தாக்கங்கள் மிக்க நன்றி./தொடருங்கள் தங்களது பணியினை என்றாவது ஒருநாள் நாம் அடைவோம்நமது நேரிய வழியை நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.///

 2. எப்பொழுதும் வினவில் வரும் செய்திகள் எங்களைப்போன்ற தேசிய இறையாண்மையும், உண்மையான நாட்டு பற்று உள்ளவர் களுக்கும் நல்ல எழுச்சிமிகுந்த ஊட்ட சக்தியாக விளங்குகிறது.இதில் வெளிவருவது கதை கற்பனையல்ல.ஆனால் இக்கால கட்டத்தில் இந்தியாவை ஆள்பவர்கள்,அரசதிகாரிகள்,தலைமை பொறுப்பிலுள்ளவர்கள்,அரசியல்வாதிகள்,தொழிளதிபர்கள்,உளவுத்துறையினர்,நீதி நிவாகத்தில் உள்ளவர்கள்,காவலர்கள் கடமையினை சரிவரச்செய்தால் இவ்வளவு மோசமான கையூட்டு,ஊழல்,எதெற்கெடுத்தாலும் இடைத்தரகு பணப்படி இது நமது நாட்டை மோசமான நிலைக்கு[அழிவுக்கு] இட்டு செல்கிறது இது கண்கூடாகத்தெரிகின்றது. ஆனால் இதனை நிவர்தி [சரி] செய்வதாகச் சொல்லி நமக்குள் சாதி+மத+மொழி+இட பிரிவுகளால் அரசியல் செய்து சண்டை,கலவரம்,கொலை போன்ற சமூக கேட்டிற்க்கு நாடு நடந்து செல்கின்றது

 3. ///செய்தி: “அரசியல் முழுவதும் அழுக்கு நிறைந்தது,” என, சமூக சேவகர், அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

  நீதி: சாக்கடையில் இறங்கி தூர்வாரினால் வெள்ளைச் சட்டை அழுக்கடையும் என்பதால் கரையிலிருந்து சவுண்டு மட்டும் கொடுப்பேன்.///

  அதான் தனது சிஷியன் இறங்க போகிறார்.

 4. //பாதுகாப்பு ஏற்பாடுகளில் கருமாதிக்கான ஏற்பாடுகளும் அடக்கம் தானே//
  மன்னிக்கணும் தோழர் போராடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் ஜெபக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பார்கள்.

 5. அங்கேயும் அவரை சேர்த்துக்க மாட்டார்கள்….நம்ம நாட்டு மக்கள் தான் போனா போகட்டும்னு வச்சிருகாங்க…அதை போல் வேறு எங்கேயும் சேர்த்துக்க மாட்டார்கள்…

  நன்றி,
  மலர்

 6. கூடங்குளம் குறித்த விமர்சனம் பிற்போக்கானது; அறிவியலுக்கு எதிரானது; பொறுப்பற்றது.
  மேலும் மானுடவியலுக்கு எதிரானதும் ஆகும். பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பின், அவற்றைப் பற்றி
  எழுதலாம்.அணுவுலையை விட அனந்த கோடி மடங்கு பெரிதான பெரு வெடிப்பை ஜெனீவாவில்
  மானுடம் நிகழ்த்தி வுள்ளது. அங்கு யாருக்கும் கருமாதி நடந்து விடவில்லை.மனிதன் கடவுளை விடப்
  பெரியவன்; ஆற்றல் மிகுந்தவன். தங்கள் விமர்சனம் மானுடத்தை மட்டம் தட்டுகிறது. எனவே பிற்போக்கானது.மானுட வீறு பாடுபவனே மார்க்சிய வாதி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க