Sunday, June 13, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை !

சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை !

-

சிவாஜி-கனேசன்-2

“இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.

அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று விமரிசிப்பவர்கள் கூட சிவாஜியின் திரையுலகச் சாதனையை மறுப்பதில்லை. பொதுவில் அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் அரங்கில் பிழைக்கத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார்.

ஆனால் அவரது சமகால வரலாறும், அவரது திரைப்படங்களும், அதில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களும், அவரால் உருவாக்கப்பட்ட நடிப்பு பாணியும், ஒரு நட்சத்திரமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவர் செய்த முயற்சிகளும், அதையொட்டி மாறிய அவரது அரசியல் வாழ்க்கையும், ‘இமேஜ்’ கரைந்து போன பிற்காலத்தில் அவர் நடித்த கேவலமான படங்களும், வளர்ப்பு மகன் திருமணத்தில் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதரைப் போன்று பங்கேற்றதும், 80 – களின் இறுதியில் வேறு வழியின்றி அரசியல் துறவறம் மேற்கொண்டதும் – நமக்கு வேறு ஒரு மதிப்பீட்டைக் காண்பிக்கின்றன.

அவை சிவாஜி பற்றிய பாராட்டுரைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதோடு தவறு என்பதையும் தெரிவிக்கின்றன. கூடவே திராவிட இயக்கங்களின் அரசியலையும் – அதையொட்டிய திரையுலகத்தையும், அவையிரண்டின் வளர்ச்சியையும் – சமரசத்தையும் அதிலிருந்து பிரிக்க முடியாத சிவாஜி எனும் கலைஞனின் வாழ்க்கையையும் நமக்கு புரிய வைக்கின்றன.

பராசக்தி கால சமூகப் பின்னணி!

‘பராசக்தி’ தயாரிப்பளாருக்கு பண உதவி செய்த ஏ.வி.எம் செட்டியாருக்கு, புதுமுகமான சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. அதையும் மீறி கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனமெழுத 1952 – இல் வெளியான இப்படம் பெரும் வெற்றியடைந்தது. மேடை நாடகங்களில் கணீரென வசனம் பேசிக் கொண்டிருந்த சிவாஜிக்கு இப்பட வாய்ப்பு தற்செயலாக கிடைத்திருந்தாலும், பராசக்தியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட அவசியமான சூழ்நிலைகள் அப்போது உருவாகியிருந்தன.

அன்றைய திரையுலகம் பாட்டிலிருந்து வசனத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. புராணக் கதைகளில் சிக்கியிருந்த திரைக்கதை, பார்ப்பனியத்தின் அநீதியை எடுத்துரைக்கும் சமூக நோக்கம் கொண்டதாக விரிவடைய ஆரம்பித்திருந்தது. மவுசிழந்த தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா போன்ற நட்சத்திரங்களுக்குப் பதிலாக, திராவிட இயக்கக் கலைஞர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர்.

கலையுலகின் இம்மாற்றத்திற்கு முன்பாகவே அரசியல் உலகமும் மாறத் துவங்கியிருந்தது. காங்கிரசின் மேட்டுக்குடி நலனுக்கான அரசியல் பின்தங்கி, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு முன்னணிக்கு வந்தது. இன்னொரு புறம் மொழிவழி மாநிலங்களுக்கான போராட்டப் பின்னணியில் திராவிட இயக்கமும் வளர ஆரம்பித்திருந்தது. மொழி – இனப் பெருமையை வைத்து, சாமானிய மக்களின் குரலாக உருவெடுத்து, விரைவிலேயே தமிழ் மக்களின் பிரதிநிதியாக இவ்வியக்கம் தன்னை முன்னிருத்திக் கொண்டது. அதற்கு அவ்வியக்கத் தலைவர்கள் தமது பிரச்சாரத்தை எளிய வடிவில் மக்களிடம் கொண்டு சென்றது ஒரு முக்கியமான காரணமாகும்.

திராவிட இயக்கமும் திரைப்பட முதலாளிகளும் !

1967 – இல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் வரை முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகளை அபாயமாகக் கருதிய முதலாளிகள், திராவிட இயக்கத்தை தமக்கு சாதகமானது என்று சரியாகவே கருதினர். சமூக அரங்கில் வரவேற்பைப் பெற்றிருந்த திராவிட இயக்க படைப்புக்களை திரையுலகில் ‘ஸ்பான்சர்’ செய்வதற்கு முதலாளிகள் தயாராயினர். இரு பிரிவினரும் தமது அரசியல் நலனைக் காப்பாற்றிக் கொண்டு பண ஆதாயம் பெறுவது உறுதி செய்யப்பட்டது.

அப்போதே அண்ணாவும், கருணாநிதியும் தமது வசனங்களுக்காக ஆயிரக்கணக்கில் ஊதியம் பெற்றனர். சிவாஜி தவிர எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.இரேசேந்திரன், கே.ஆர்.ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன் போன்ற திராவிட இயக்க நடிகர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர். 47 – க்குப் பின் பிரச்சினையின்றி தனது படத்தில் பாரதி பாடலைச் சேர்த்த ஏ.வி.எம். செட்டியார் போன்ற முதலாளிகள் தயாரிப்பாளரானார்கள். ‘பராசக்தி’ காலப் படங்களில் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூகப் பிரச்சினைகளும் வீரம் – காதல் – கற்பு – பாசம் போன்ற ‘தமிழ் நெறி’களின் பின்னணியில் வெளிப்பட்டன. அந்தத் ‘தமிழ் நெறி’ அற்ப உணர்வாகவும், இனப்பெருமை சவடாலாகவும் சீரழிய அதிக காலம் ஆகவில்லை. அதுவே திராவிட இயக்கத்தின் அரசியல் வழிமுறையாகவும் உறுதியானது.

நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி !

சிவாஜி-கணேசன்-1இதனிடையே சிவாஜியின் சிம்மக்குரல் கர்ஜனையில் பணம், மனோகரா, இல்லற ஜோதி போன்ற படங்கள் வெளிவந்தன. இவை அவரது பாணி நடிப்பு – வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 -களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி, 60 – களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் நட்சத்திரமாகிவிட்டார்.

அவரது ‘இமேஜூ’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள், ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர், ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’ களுக்கும் இதுவே இலக்கணம்.

எம்.ஜி.ஆர் – ரஜனியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமலஹாசனுககு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்ட கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.

இத்தகைய நட்சத்திர நடிகர்கள், தமது ஒரு சில படங்களின் வெற்றியை வைத்து, வெற்றி பெரும் கதை, மக்களின் ரசனை, தமது திறமையின் மகிமை போன்றவை இன்னதுதான் என தமக்குத்தானே தீர்மானிக்கின்றனர். உலகமே தம்மை மேதைகளாக மதிப்பதாகவும் கருதிக் கொள்கின்றனர்.

திரையுலகில் திறமையும் – சமூக நோக்கமும் கொண்டவர்கள் நுழைய முடியாமல் இருப்பதும், இருந்தால் ஒழிக்கப்படுவதும் மேற்படி நட்சத்திர முறையின் முக்கிய விளைவுகளாகும். திரையுலகத்தைக் கோடிகளைச் சுருட்டும் மாபெரும் தொழிலாக மாற்றிவிட்ட முதலாளிகளுக்கு,இந்த ‘சூப்பர் ஸ்டார்கள்’ நம்பகமான மூலதனமாக இருப்பதால், நட்சத்திரங்களை அவர்களே திட்டமிட்டு உருவாக்கவும் செய்கின்றனர்.

நடிகர்களின் திறமை, முதலாளிகளின் ஆதரவு போக இந்த நட்சத்திரங்கள் எழுவதற்கும்,  குறிப்பிட்ட காலம் மின்னுவதற்கும், பின்னர் மங்குவதற்கும் குறிப்பான – சமூக வரலாற்றுக் காரணங்களும் தேவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரசின் மேட்டுக்குடி அரசியலுக்கு மாற்றாக தமிழினப் பெருமை பேசி வந்த திராவிட இயக்கம், உழைக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாய் சில பத்தாண்டுகள் நீடித்தது. அதனால்தான் தி.மு.க.வின் தமிழ்ப் பண்பான காதல், வீரம், கற்பு, தாய்ப் பாசம், மொழி – இனப் பெருமை போன்றவை கலந்து ஒரு நாட்டுப்புற வீரனாய் உருவெடுத்த எம்.ஜி.ஆரின் இமேஜ் செல்வாக்குடன் பல ஆண்டுகள் நீடித்தது.

உயர்குடி மாந்தராக சிவாஜியின் இமேஜ் !

இதே காலப் பின்னணியில் உருவான சிவாஜியின் இமேஜ் வேறு ஒரு பின்புலத்தைக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் – அதன் பின்னரும் பின்தங்கிய நிலவுடைமைச் சமூகம் மெல்ல மெல்ல மாறத் துவங்கியிருந்தது. தொழில் துறை – நகரங்களின் வளர்ச்சி, பழைய சமூக உறவுகளை அப்படியே நீடிப்பதற்கு அனுமதிக்கவில்லை. பார்ப்பன – பார்ப்பனரல்ல்லாத மேல்சாதிகளும், மேல்தட்டு வர்க்கங்களும் இந்த மாற்றத்தின் பொருளாதார ஆதாயங்களைப் பெற்றாலும் மறுபுறம், தமது பிற்போக்கான, பழமையான சமூக மதிப்பீடுகள் அழிவதாகவும் அரற்றிக் கொண்டன. இந்த முரண்பாட்டில் சிக்குண்ட மேல்தட்டு மனிதர்கள் மற்றும் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதர்களின் பெருமை, ஏக்கம், புலம்பல், இத்யாதிகளை, சற்று அழுத்தமான மிகை நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு ஒரு சிவாஜி தேவைப்பட்டார்.

பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.

ஆண்டான் அடிமை படங்களும் ஜப்பானிய இரசனையும் !

ஜப்பானில் முத்து, எஜமான், அண்ணாமலை போன்ற ரஜினி படங்கள் வெற்றிகரமாக ஓடியது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கலாம். காட்சி உலகின் அதிநவீனக் கருவிகளை உலகிற்களிக்கும் முன்னேறிய ஜப்பான் நாட்டு மக்கள், ரஜினியின் ஆண்டான் – அடிமைக் காட்சிளை ரசிப்பது எங்ஙனம்? 19 – ஆம் நூற்றாண்டு வரை விவசாய நாடாக இருந்த ஜப்பான் பெரும் சமூகப் புரட்சிகள் ஏதுமின்றியே தொழில்துறை நாடாக மாறியது. எனவே ராஜ விசுவாசம், பழமைவாதம், அடிமைத்தனம், மூத்தோர் பக்தி, முதலாளி மரியாதை போன்ற நிலவுடைமைப் பண்புகள் மீதான மயக்கம் இன்றளவும் ஜப்பானில் நீடிக்கக் காண்கிறோம்.

“சோம்பேறிகள் இல்லாத உழைப்பாளிகளின நாடு, வேலை நிறுத்தம் கிடையாது, பழுதான எந்திரங்களைச் சரி செய்யாத பொறியியலாளர்கள் கூட தற்கொலை செய்வார்கள்” போன்ற முதலாளிகளின் சுரண்டலை மறைக்கும் மோசடியான கருத்துக்கள் உலவுவதற்கும் இதுவே அடிப்படை. எனவேதான் அடிமைத்தனமும் – அற்ப உணர்வுகளும் கொண்ட ரஜினியின் படங்கள் ஜப்பானிய மக்களை வசியம் செய்ய முடிந்திருக்கின்றது.

சாதரண மக்களும் உயர்குடி உணர்ச்சியும் !

சிவாஜி-கனேசன்-3ஆகவே முன்னேறிய ஜப்பானுக்கே கதி அதுவென்றால், இன்னமும் பின் – தங்கிய விவசாய நாடாக இருக்கும் இந்திய சமூகத்தின் அடிமை மனப்பான்மை பற்றிச் சொல்லவே வேண்டாம். மேலும் வரலாறு முழுவதும் இன்று வரை ஆளும் வர்க்கமே ஆளப்படும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. நமது நாட்டுப்புறக் கலைகளின் கதைகளோ, தற்போதைய நவீனக் கலைகளின் கதைகளோ எதுவும் உயர்குடி மாந்தர்களின் வாழ்வோடும் – உணர்ச்சியோடும்தான் நம்மை ஒன்ற வைக்கின்றன.

இன்றும் ஒரு பார்ப்பனன் பிச்சை எடுப்பதும், ஒரு பண்ணையார் தெருவில் நடப்பதும், இந்திராவைப் பறிகொடுத்த ராஜீவின் சோகமும், கேளிக்கைச் சீமாட்டி டயானவின் மரணமும், மூப்பனார் சைக்கிள் ஓட்டியதும், ஜெயலலிதாவை மன்னிக்கலாம் என்ற கருணையும், கருணாநிதியின் ‘ஐயோ’வும் -போன்ற உயர்குடி மனிதர்களின் அவலம், சோகம், எளிமை, வறுமை, இரக்கம் போன்ற உணர்ச்சிகள் சாதாரண மக்களின் சொந்த உணர்ச்சியில் கலந்து விடுகின்றன. ஆனால் இதே நெருக்கடிகளுக்கு ஆளாகும் சாதாதரண மனிதர்களின் அவலத்தை, மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவை உழைக்கும் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன; உயர்குடி மனிதர்களுக்கோ விலக்களிக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி விலக்களிக்கப்பட்ட உயர்குடி மனிதர்களின் வாழ்க்கையைத்தான் சிவாஜி மட்டுமல்ல அவரது சமகாலத் திரையுலகம், இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரும் பிரதிபலித்தனர். அப்போது இத்தகைய ‘குடும்பப் படங்கள்’ எனும் மதிப்புடன் வெளிவந்த கதைகளே வெற்றிக்குரிய சூத்திரமாகக் கருதப்பட்டன. அதில் சிவாஜி மட்டும் குறிப்பிடத் தகுந்த வகை நடிப்பைக் கொண்டிருந்தார் என்பதே அவருக்குரிய பங்காகும்.

சிவாஜியும் மிகை நடிப்பும்!

அதை மிகை நடிப்பு என்பாரின் விமரிசனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்தும், அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்கு குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்கு காரணம் என்று கூறிவிட முடியாது.

மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர் அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்தி விட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.

தி.மு.க.வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான மூடியாகவே இருந்தது.

முதலில் ஜாடிக்கேற்ற மூடி; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு அது முற்றத் தொடங்கியது.

கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும் !

சிவாஜி தனது நடிப்புத் திறனை எப்படி வளர்த்துக் கொண்டார்? அவரே கூறியிருப்பது போல பலரது வாழ்க்கைப் பாணிகளை பார்த்துப் பதிந்து கொண்டதுதான். ஆனால் யாரை – எதை பார்க்கப் பழகியிருந்தார் என்பதுதான் பிரச்சினை. சிவாஜியின் படங்களைப் போல அவரும் சமகால சமூகத்தைப் பற்றியும், அது மாறி வந்தது குறித்தும், மக்களின் யதார்த்தமான வாழ்க்கை – பிரச்சினைகளையும் அறியாதவராகவே இருந்தார். அப்படித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை அவரது படங்களும் – பாத்திரங்களும் கோரவில்லை. கூடவே அவரது அரண்மனை வீடும், காங்கிரசின் மேட்டுக்குடி நட்பும், திரைப்பட முதலாளிகளின் சூழலும் – உயர்குடி மனிதர்களைப் பற்றியே சிந்திக்க வைத்திருக்க முடியும். நடிப்பும் – வாழ்க்கையும், இமேஜூம் – கற்பனையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன.

ஆகவே சிவாஜி கற்றுக் கொணடு நிகழ்த்திக் காட்டிய ஸ்டைலாக – புகைவிடுவது, கம்பளியுடன் இருமுவது, தலையைப் பிய்த்து நிம்மதி தேடுவது, தரை அதிரவோ – நளினமாகவோ நடந்து வருவது போன்ற ஜோடனைகளுக்கும், சர்க்கஸ் வித்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. சீனியர் சங்கராச்சாரியையப் பார்த்து அப்பராக நடித்ததைப் பெருமையுடன் குறிப்பிடும் சிவாஜி, தனது வித்தியாசமான வேடங்கள் பலவற்றையும் எங்கிருந்து கற்றார் என்பதை எங்கேயும் கூறியதில்லை.

வீழ்ந்த நட்சத்திரம் !

சிவாஜி கால உயர்குடி மிகை யதார்த்தப் படங்களுக்கான வரலாற்றுக் காரணங்கள் மாறத் துவங்கிய போது அவரது நட்சத்திர இமேஜ் மங்கத் தொடங்கியது. அதைச் சரிகட்ட சிவாஜியும் – எம்.ஜி.ஆரும் 70 – களின் வண்ணப் படங்களில் நாயகிகளைத் துகிலுரிவதிலும், காதலைக் காமமாக மாற்றுவதிலும் போட்டியாக ஈடுபட்டனர். இதன் பின்னர் 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ‘தர்மராஜா’வில் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.

இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்.

சிவாஜியும் அரசியலும் !

சிவாஜி-கனேசன்-4அடுத்து ‘ அரசியலில் மட்டும் சிவாஜி தோல்வியடைந்தார்’ என்ற கருத்தைப் பரிசீலிக்கலாம். முதலில் இந்த மதிப்பீடே நேர்மையற்ற மதிப்பீடு. காரணம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அரசியலில் ஈடுபடும் ஒருவர் தோல்வியடைந்தால் அப்படி மதிப்பிடலாம். மாறாக தனது ‘நடிகர் திலகம்’ இமேஜைத் தக்க வைக்கவும், விரிவுபடுத்தவும், அதன்மூலம் அரசியலிலும் புகழடைய வேண்டும் என்ற சிவாஜியின் நோக்கமே பச்சையான சுயநலமாகும். இது பெருங்கனவாக வளருவதற்கு எம்.ஜி.ஆரின் போட்டி ஒரு காரணமாக இருந்தது.

திராவிட இயக்கத்தின் முன்னணிக் கலைஞராக வளர்ந்த சிவாஜி 1955- இல் திடீரென திருப்பதி சென்று வழிபட்டார். கொதித்தெழந்த உடன்பிறப்புகளோ “திருப்பதி கணேசா! திரும்பிப் பார் நடந்துவந்த பாதையை, நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?”என்று கேட்டனர். திராவிட அரசியலும் -நாத்திகமும் தனது இமேஜை குறுக்கிவிடும் என்று கருதிய சிவாஜி தேசியமும் – தெய்வீகமும் உள்ளவராகக் காட்டிக் கொண்டார். அதன்படி அடுத்த சில ஆண்டுகளில் ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்களில் நடித்து, 50களில் புதையுண்டு போயிருந்த புராணப் புரட்டல்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

இதே ஏ.பி.நாகராஜன்தான் திராவிட இக்கங்களைப் பல படங்களில் கொச்சைப்படுத்தி கேலி செய்தவர். பராசக்தியில் சிவாஜியுடன் நடித்த எஸ்.எஸ். இராசேந்திரன் போன்றோர் புராண, கடவுள் படங்களில் நடிப்பதில்லை என்று உறுதியுடன் கடைபிடித்தார்கள். இந்தக் குறைந்த பட்ச நாணயம் கூட சிவாஜியிடம் இல்லை.

காங்கிரசில் சேர்ந்த ‘கூத்தாடி’ !

திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரசு கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ’ என்று கேவலப்படுத்தியது. கோபக்கார நடிகரான சிவாஜி இதில் மட்டும் ரோசமின்றி 62 – இல் காங்கிரசில் பகிரங்கமாகச் சேர்ந்து, 67 தேர்தலில் பிரச்சாரமும் செய்தார். ஒரு வகையில் சாதாரண பாத்திரங்களிலிருந்து உயர்குடி மாந்தர்களின் வேடங்களுக்கு மாறிய சிவாஜிக்கு இந்த மாற்றம் பொருத்தமாகவே இருந்தது.

50-களில் ‘தாராசிங் – கிங்காங்கை’ வைத்து மல்யுத்தக் காட்சிகள் நடத்திப் புகழ் பெற்ற சின்ன அண்ணாமலை என்ற காங்கிரசுக்காரர், 60 – களில் நடிப்புடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த சிம்மக் குரலோனை வைத்து அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் உருவாக்கினார். புதுப்படங்களுக்கு பூசை, தோரணம், அபிஷேகம், ஊர்வலம், ஒவ்வொரு படத்தின் பெயரிலும் ரசிகர்மன்றம் என்று ரசிகர்களை பொய்யான உணர்ச்சியில் மூழ்கடித்து, சினிமாவை முக்கியமான சமூக நிகழ்வாக மாற்றி சீரழித்ததில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சம பங்காற்றினர். இந்த ரசிகர் மன்ற நோய் பரவுவதற்கு, திரையுலகின் புகழையும், செல்வாக்கையும், கவர்ச்சியையும், அரசியலுக்கு கேடாகப் பயன்படுத்திய தி.மு.க.வும் காரணமாக இருந்தது.

பால்கனி, பெஞ்சு டிக்கட் என்ற இரு பிரிவையும் கவர்ந்த சிவாஜிக்கு சாதிகளைக் கடந்த ரசிகர்களே அதிகம். இருப்பினும் தேவர் சாதி மக்கள் இருக்கும் ஊர்களில் சிவாஜி மன்றாடியார் – தேவர்மகன் சிவாஜி ரசிகர் மன்றங்களாக இருந்ததை அவர் ஆதரித்தார். 70 – களின் சில படங்களில் ‘நான் தேவன்டா’ என்று அடிக்கடி வலிந்து பேசி தன் பெருமிதத்தைக் காட்டிக் கொண்டார். இவ்வளவு இருந்தும் பின்னாளில் அவர் ஆரம்பித்த தனிக் கட்சிக்கு டெபாசிட் வாங்கிக் கொடுத்த சில தொகுதிகளில் தேவர்சாதி மக்கள் அதிகம் கிடையாது.

பார்ப்பனர்களிடம் பறி கொடுத்த பிரஸ்டீஜ் !

அதே சமயம் தன் புகழ் உச்சத்திலிருக்கும் போதும் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்தும் போயிருக்கிறார். 71 – ஆம் ஆண்டில் அவரது ‘களம் கண்ட கவிஞன்’ எனும் நாடகத்திற்கு சென்னையின் ‘அவாள்’ சபாக்கள் இடம் கொடுக்கவில்லை. பார்ப்பனக் குடும்பக் கதைகளை மட்டும் நாடகங்களாக நடத்தும் சபாக்களின் விதிப்படி தனது நாடகத்தை விடுத்து, ‘வியட்நாம் வீடு’ என்ற நாடகத்தை சிவாஜி அரங்கேற்றினார். இதில் ‘பிரஸ்டீஜ் பத்மநாப அய்யராக’ நடித்து அவாளின் உள்ளம் கொள்ளை கொண்ட நடிகர் திலகம் தன்னுடைய ‘பிரஸ்டீஜ்’ பறி போனது குறித்து கவலைப்படவில்லை.

இக்காலத்தில் வெளியான ‘ராஜபார்ட் ரங்கதுரையில்’ தூக்கு மேடையேறும் பகத்சிங் “காந்தி வாழ்க” என்று பேசத் தொடங்கி அலையோசை, நவசக்தி போன்ற காங்கிரஸ் பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்து கயிற்றில் தொங்குவார். இப்படி பகத்சிங்கையும் தன் பங்குக்கு கேவலப்படுத்தினார்.

அரசியல் வேண்டாம், ஆளை விடுங்கப்பா !

இடையில் இந்திராவிடமிருந்து பிரிந்து ஸ்தாபனக் காங்கிரஸ் ஆரம்பித்த காமராஜருடன் சேர்ந்தார். காமராஜர் இறந்ததும் இந்திராவிடம் திரும்பினார். 80 – களில் இவருக்கும் மூப்பனாருக்கும் நடந்த காங்கிரஸ் குழுச் சண்டையில் தோற்றார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அடுத்த புரட்சித் திலகம் நாம்தான் என்று முடிவு செய்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக்கட்சி ஆரம்பித்தார். 88 தேர்தலில் “234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 3 -இல் மட்டும் டெபாசிட் பெற்றது ” எனுமளவுக்கு கேவலமாகத் தோற்றார்.

அப்போதும் சளைக்காமல் வி.பி.சிங்கின் ஜனதா தளத்தில் சேர்ந்து மாநிலத் தலைவரானார். அந்தக் கட்சியும் கட்டெறும்பாக கரைந்த நிலையில் ‘அடங்கொப்புரானே, அரசியலும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் ’ என்று அரசியல் துறவறம் மேற்கொண்டார். சிவாஜியின் அரசியல் சந்தர்ப்பவாதம் இத்தனை விகாரமாகத் தெரியக் காரணம், அதையே நேர்த்தியாக செய்யும் திறமை அவருக்கில்லை என்பதுதான்.

அண்ணாவும், தம்பி கணேசனும், நண்பர் கருணாநிதியும் !

அந்தத் திறமை அடுக்கு மொழியில் சவுடால் அரசியல் செய்து வந்த தி.மு.கவிடம் இருந்தது. திருப்பதிக்குப் போன சிவாஜியை உடன்பிறப்புகள்தான் எதிர்த்தனர். ‘அறிஞர்’ அண்ணாவோ ‘தம்பி கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று தந்திரமாக சமரசம் செய்து கொண்டார். காரணம் அப்போது அண்ணா எழுதிய சில படங்களில் நடிப்பதற்கு சிவாஜி தேவைப்பட்டார். அதன் பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பகுத்தறிவுக்கு அவர் சமாதி எழுப்பிய பின் திரையுலகில் கொள்கையுமில்லை – வெங்காயமுமில்லை என்ற வணிகப் பண்பு நிலைபெற்றது.

அதனால்தான் பராசக்தி படத்தில் ஏழைகளின் துன்பத்தை எழுதி பேசிய கருணாநிதி – சிவாஜி ஜோடி, 1981 இல் ‘மாடிவீட்டு ஏழை’ படத்தில் இலட்சாதிபதியின் துன்பத்தை எடுத்துரைத்தது. அப்போது இருவரும் இலட்சாதிபதிகளாக இருந்தார்கள் என்ற விசயம் அவர்களது கொள்கையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் இருவரும் கட்டிப்பிடித்து அழுதார்கள். எதை நினைத்து அழுதார்களோ தெரியவில்லை!

உயர்ந்த மனிதனின் இறுதிக் காட்சி !

இனியும் இந்தக் கட்டுரையை நீட்டினால் மிகையாகி விடும் என்பதால், புகழ் பெற்ற வளர்ப்பு மகன் திருமணக் காட்சியுடன் முடித்து விடுவோம். இத் திருமணத்தின் போது தமிழக மக்களால் வெறுக்கப்படும் முதல் நபராக ஜெயலலிதா இருந்தார். தமிழகத்தையே கொள்ளையடித்த ஜெயா-சசி கும்பல் தனது டாம்பீகத்தைக் காட்ட நினைத்த இத்திருமணத்தில் சிவாஜிக்கு தனது பேத்தியைக் கொடுப்பதில் முழு சம்மதமில்லை என்று கிசுகிசுக்கள் வெளியாயின. சிவாஜி அதை பகிரங்கமாக உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை. தனது நடிப்பு சாம்ராஜ்ஜியத்தில் அடங்கிக் கிடந்த நடிகையும், புதுப் பணக்காரியாக உருவெடுத்த நடிகையின் உயிர்த்தோழியும், பரம்பரைப் பணக்காரரான தன்னுடன் சரிக்கு சமமாக எப்படி சம்பந்தம் செய்யலாம் என்ற வேதனையாக இருக்கக் கூடும்.

இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் கூடிய அந்த மாபெரும் ‘வரலாற்றுப் புகழ் மிக்க’ நிகழ்ச்சியில், தூய வெள்ளை ஆடையுடன், அதிகம் பேசாமல், ஒரு வாய் கூட சாப்பிடாமல், சோகத்துடன் நின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இங்கும் ‘வாழ்ந்து கெட்ட உயர்குடி மனிதராகவே’ காட்சியளித்தார் – நடிக்கும் தேவை எற்படவில்லை.

________________________________________

புதிய கலாச்சாரம், செப்டம்பர் – 2001
(மீள் பதிவு)

_________________________________________

 1. திரையில் தான் ஆட்டம் எல்லாம், நிஜ வாழ்வில் அடிமையாக தான் இருந்திருப்பார் போல!

  என்னை போன்ற சிறார்களுக்கு பல வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கும் பதிவு, நன்றி!

  • என்னாது வரலாற்று உண்மைகளா?? ஆனாலும் இவ்வ்ளோவு கேவலாமா ஆமாசாமி போடா கூடாது வால் பையா. இவ்வளவு அசிங்கமா ஒரு கேவலமான கட்டுரைய அப்புடியே நம்பி குருட்டுத்தனமா பாரட்டகூடது. அதுவும் உன் கிட்ட இருந்து இப்படி ஒரு பின்னூட்டத்த எதிர்பார்கல.

   • பர்சனலாகவோ, தொழில்ரீதியாகவோ அவர் என்னத்தை கழட்டுனாருங்கிறது எனக்கு தேவையில்லாதது, அவரது அரசியல் அரசியல் நிலைப்பாடு அறிய தந்தது நிச்சயம் எனக்கு வரலாற்று உண்மை தானே!

    இப்போ இருக்குற நடிகர்களிலேயே நான் ஒருத்தனுக்கும் ரசிகனில்ல, சிவாஜி நடிப்பை எங்கிருந்து ரசிக்கிறது, ரெண்டாவது சிவாஜியின் சாதி வெறி உலகறியபட்டது!, அரசியல் நிலைப்பாடு தான் எனக்கு புதிய தகவல்!

    தெரியாததை, தெரியாதுன்னு ஒத்துகிறதுல்ல தப்பில்லைன்னு நினைக்கிறேன்!

    • சிவாஜி ஒரு ஜாதி வெறியன்னு இதுவரைக்கும் எனக்கு தெரியல. ஒன்னு எனக்கு
     உலக அறிவு இல்லாமல் இருக்கலாம். இல்ல சிவாஜி ஜாதி வெறி இல்லாமல் இருக்கலாம். இந்த தளத்துல சொல்லிட்ட நான் ஒத்துகனுமா? உலகரியப்படதுன்னு சொல்லுறீய வேற ஏதாவது proof இருக்கா?

 2. வாழ்த்துக்கள் வினவு,
             வாய்ப்பு இருந்தால் ‘அழகி’ திரைப்படம் குறித்து புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த விமர்சனக் கட்டுரையையும் மீள்பதிவு செய்யவும்.

 3. //தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்”//

  பசும்பொன் தேவரைத்தான் அப்படிக் குறிப்பிடுவது வழக்கம்..

 4. ஒக்காந்து யோசிச்சி இப்படி ஒரு அருமையான பொழுதுபோக்கு கட்டுரை(கதை) எழுதினவருக்கு பாராட்டுக்கள். கொட்டை எழுத்துல ஒவொவொரு பாரா வுக்கு நடுவுல தலைப்பு ரொம்ப அருமை. பேசாமல் ஒரு கதாசிரியருக்கு தேவையான அத்துணை திறமையும் பொறுமையும் உங்ககிட்ட நெரியவே இருக்கு. தங்களை போல சிந்திகுற திறமை வேற யாருக்குமே வராதுங்க. கீப் going சார்.

 5. /திராவிட இயக்கத்தின் முன்னணிக் கலைஞராக வளர்ந்த சிவாஜி 1955- இல் திடீரென திருப்பதி சென்று வழிபட்டார். கொதித்தெழந்த உடன்பிறப்புகளோ “திருப்பதி கணேசா! திரும்பிப் பார் நடந்துவந்த பாதையை, நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?”என்று கேட்டனர்./- இப்பொது “மஞ்சள் துண்டு போடும்” கலைஞ்சர் கருணாநிதி மட்டும் எப்படி தமிழைகளைஎல்லாம் “கடலில் தள்ளிவிட்டு கட்டுமரமாக மிதக்கிறார்!?”–
  ஐயரின் “இனியொரு இணையத்தில்” புலிகளின் வரலாறு தொடரில் உள்ள பின்னுட்டம்(பாகம் 17 )!.
  —– திரு.அய்யர்!,உங்களைது உண்மையான பெயர் என்ன?,ஐயர் என்பது ஜாதிப் பெயர்.முப்பது நாற்பது வருடங்களாக ஒரு ஆயுத போராட்டத்தை நடத்திவிட்டு,கனரக ஆயுதங்களைக்கூட ஒரு “தீவினுள்” கடத்திவிட்டு,தற்போதைய “தகவல் தொழில்நுட்ப உலகில்” முள்ளிய வாய்க்கலின் கடைசி காட்சிகளை(முழு பூசனிக்கயை) கடத்தமுடியாமல், மறைத்து,ஊத்தி மூடிவிட்டு,தற்போது,பிரபாகரன் காதை பிடித்து திருகினேன்(மக்கள் யுத்தம் நடத்துவதற்கு),கிட்டுவுக்கு தலையில் தட்டினேன்,என்று கரடி விடுகிறீர்கள்.நீங்கள் யாருக்கு வக்காலத்து வாங்குகிறீர்களோ,அல்லது உங்கள் தனிப்பட்ட வாழ்வுக்கான முயற்சியாக இருந்தாலும் கூட,”டூ லேட்”,”தலைக்கு மேல் வெள்ளம்”.யாழ்ப்பாண ஐயர்கள்,இந்தியாவைப் போல் அல்லாமல் வரலாற்றின் சமீப காலங்களில்,பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்திலிருந்து “ஏழை பிராமண குடும்பங்களிலிருந்து” சென்றவர்கள்.உங்கள் பொறுப்பை நான் மதிக்கிறேன்.ஆனால்,”வடக்கு – கிழக்கு இலங்கைத்தமிழரிடம் படித்துப் ப்டித்து சொன்னது,நீங்கள் இலங்கையின் பூர்வகுடிகள்,அதற்கு தகுந்த மாதிரி நடந்துக் கொள்ளுங்கள் என்பது,ஆனால் “The Left parties continued to demand parity of status”UNTIL”(What does it MEANS?) after the “Tamil electorate voted overwhelmingly in the 1960 elections for the same leaders who had agreed to the compromise”.இப்படிப்பட்ட செயல்களின் மூலம்,”குட்டி பூர்ஷ்வாக்களாக(ஜமீந்தார் விளையாட்டு)” நடந்து உலக முதலாளிகளிடம் “தடியை கொடுத்து” தற்போது அடிவாங்கியிருக்கிறார்கள்.”ஈழத்தமிழர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய அரசு” என்பதன் கீழ்,அன்பன் என்பவரின் பின்னூட்டத்தில்,ஜெயலலித்தாவிடம் கருணாநிதி குடும்பத்தின் சொத்தில் கால்பங்கு கூட இல்லை என்கிறார்”,இப்படி கூறியவுடன் புலம்பெயர் இலங்கைத்தமிழர்கள்,புற்றீசல் போல் கிளம்பிவிடுவார்கள் உலகசெந்தமிழ் மாநாட்டுக்கு கலைஞரின் காலில் பூ சொரிய – வேறு மந்திரம் தேவையில்லை.அன்று வட – கிழக்கு மக்கள்,இலங்கை இடதுசாரிகளின் குரலைக்கூட கேட்காமல் மலையக்த்திற்கு துரோகம் இழைத்தவர்களுக்கு பெரும் ஆதரவு வழங்கினார்கள்!.இன்று அதே “புலன்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள்” “வன்னி மக்களுக்கு” இழைக்கப்பட்ட துரோகத்தை மூடி மறைக்க,பல நடுத்தர வர்க இடதுசாரிகளின் குரலை(ஜெயலலித்தாவையும்,கருணாநிதியையும் விடுங்கள்)யும் மதிக்காமல்,உலக செந்தமிழ்? அராய்ச்சிமாநாட்டில் துரோகங்களை மூடிமறைக்க பெரும் ஆதரவை வழங்கினால்,அது “மக்கள் ஆதரவாகுமா”?… சிந்திப்பீர்!…..இது இன்னொரு வரலாற்று துரோகம்!….உங்களுடைய இந்த ஞானோதையம் முள்ளிய வாய்க்காலுக்கு முன்பு ஏன் ஏற்ப்படவில்லை?… அல்லது நீங்கள் வக்காலத்து வாங்கும்(அதன் கேப்டன் க.சிவத்தம்பி?) கனவான்கள் இதற்குதான் காத்திருந்தார்களா??….

 6. நடிப்புத்துறையில் அவருக்கென்று ஒரு இடம் எப்போதும் உண்டு. அரசியலில் அவர் தோற்றதற்கு அவர் மட்டுமே காரணம் அல்ல, அவரை வீழ்த்தும் பணியில் கருணாநிதியிலிருந்து… மூப்பனார் வரை பலபேர் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர். எது எப்படி இருப்பினும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை தற்போது இழிவுபடுத்தி எழுதவேண்டிய அவசியம் என்ன?

 7. கீழ் வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய தாழ்த்தப்பட்ட விவசாயகளின் அமைப்பு ரீதியான போராட்டத்தை முறியடிக்க நிலபிரபுக்கள் சங்கம் கட்டினர். கீழ்வெண்மணி நிலபிரபுக்களின் நடவடிக்கைகளில் சிவாஜியின் பங்கும் உண்டு.

  //மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் இருவரும் கட்டிப்பிடித்து அழுதார்கள்//

  அப்போ வேற ஒரு பாராட்டு விழா நடத்திருக்காங்களா?

 8. வினவு அவர்களுக்கு,
  நடிகர் சிவாஜி பற்றி இரண்டு சங்கதிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
  இவர் (நடிகர் சிவாஜி) தனிக் கட்சி ஆரம்பித்த உடன், தஞ்சை ஞானம் தியேட்டரில் இவரது கட்சி (?) பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, நடிகர் மேஜர் சுந்தரராஜன் அவர்களை போலீஸ் துறை அமைச்சராக்க வேண்டும். அவர்தான் பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்தார் என்று தீர்மானம் போட்டார்கள்.
  இன்னொரு சங்கதி…
  கீழத் தஞ்சையில் கூலித் தொழிலாளர்களுக்கு எதிராக வெறியாட்டம் போட்ட பண்ணை ஈனர்களுகக்கு கொடி பிடித்தவர்தான் நடிகர் சிவாஜி. இந்த இரண்டு கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.

  • உலக நடிகர்ளின் கால் தூசுக்கு
   கூட ஆகாமாட்டார்.செயற்கைதனமான நடிப்புக்கு சொந்தகாரர் சிவாஜிகணேசன் மட்டுமே.

 9. போலி வேடம் போட்ட இனும் பலர் இன்னும் பலர் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவர்களை உங்க தட்டச்சில் தட்டுங்கள்..

  தொடர வாழ்த்துக்கள்

 10. வினவு அவர்களுக்கு,
  கீழத் தஞ்சையில் கூலித் தொழிலாளர்களுக்கு எதிரான பண்ணை முதலாளிகள், தனி படையே வைத்திருந்தார்கள். துப்பாக்கிகளுடன் ஜீப்பில் சுற்றி சுற்றி அப்பாவி மக்களை அச்சுறுத்தினார்கள்.
  அந்த கொலைகாரப்படைக்கு ஜீப் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை ரயில் நிலையத்துக்கு அருகே விழாவாகக் கொண்டாடப்பட்டது.
  அப்போது கொலைகாரப் படைக்கு ஜீப் சாவியை வழங்கியது நடிகர் சிவாஜிதான்.
  இன்னொரு சங்கதி.
  இவர் (நடிகரர் சிவாஜி) தனது தந்தை ரயில்வே துறையில் வேலைபார்த்து, சுதநந்திர போராட்டத்தில் ஈடுபடட்டு சிறை சென்றவர் என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
  காங்கிரஸ் பேராய கட்சியின் தமிழக தலைவராகவே இருந்த நடிகர் சிவாஜி, தனது தந்தைகக்கு சுதநந்திர போராளிகளுக்ககான தியாகி பென்சன் வாங்காதது ஏன்?
  பென்சன் தொகை அவரது குடும்பத்துக்கு மிகச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் புகழுக்கு ஏங்கிய நடிகர் சிவாஜி ஏன் அந்த தியாகி பென்ஷனை தனது தந்தைக்கு வாங்கவில்லை?
  நடிகர் சிவாஜியின் நந்தை ரயில்வே சொத்து ஒன்றை திருடியதால் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற செவி வழிசெய்தியையும் நம்ப வேண்டியிக்கிறது.
  (திருட்டு சரியா தவறா என்ற விவாததத்துக்கு பிறகு வரலாம்.)

 11. —இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்—

  எப்படிங்க இது போல எல்லாம் பேசறிங்க …முடியல…
  அதிக page hit வேணும் …அதுக்காகக இப்படியா…
  இந்த மாதிரி எழுதறதுக்கு…… எதாவது கட்சிக்கி பிரியாணி தொண்டனா சேவை செய்யலாம்… 

  • இலயராசா, சிவாஜி போன்ற ஒரு உயர்சாதி அபிமானி பெரியாராய் நடித்தால் அது பெரியாருக்கு கேவலமில்லாமல் என்னவாம்????

   • கேள்விக்குறி அவர்களே பெரியார் கோவப்படுவதெல்லம் வேரு விடயம்…….. தங்களை போன்று இளையராசாவை இலயராசா என்று தட்டச்சு செய்து தமிழை கொலைசெய்தால் தான் பெரியார் கோபப்படுவார் அப்புறம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை பாராட்டி சிவாஜி என பெயரிட்டவரே ஐயா பெரியார் அவர்கள் தான் என்பதை அறிந்து பிறகு மறுமொழியவும்

    • ஐயா சாம்ராட்…இளையராஜாவுக்கு என்ன  ஸ்பெல்லிங் என்று உங்களிடம் லேர்ன் பண்ணிக்கொண்டேன்.. இனிமேல் டமில் லாங்குயேஜெ கில் பண்ண மாட்டேன்.. சாரி பார் த டிஸ்டர்பன்ஸ் 🙂

   • விவாதங்களில் கருத்துக்களை திறந்த மனதுடன் ஏற்கவண்டும் அதைவிடுத்து தடித்த வார்த்தைகள் வேண்டாம் எனது கருத்துக்கள் தங்களை புண்படுத்துவதாக இருந்தால் நான் தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்

    • அதெல்லாம் ஒன்னுமில்லீங்க, எதுக்கு மன்னிப்பெல்லாம்,,, 
     சாயங்கால்ம திடீர்னு தமிழ் டைப்பு வேல செய்யாம பழக்கமில்லாத கூகில்லா டைப்பினேன் அதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிப்போச்சு… 

   • பெரியாருக்கு கேவலம்னா உன்ன மாதிரி ஆளுங்க இன்டர்நெட் use பண்ணி பின்னூட்டம் போடுறது அந்த computera கண்டுபிச்சவனுக்கு
    மகா கேவலம்.

    • அதானே பாத்தேன் என்னடா முட்டாஊ காலேல வேற மாதிரி ஒரு புன்னூட்டம் போட்டாரேன்னு… அட மூட்டாஊ அண்ணே.. சிவாஜி சாதியத்த ஆதரிச்சதுனால அது சாதியத்தை எதிர்த்த பெரியாருக்கு கேவலம்…. நான் புன்னூட்டம் போடறது கம்பீட்டர் கண்டு புடிச்சவனுக்கு எப்படி கேவலம்???? யார் யாரெல்லாம் புன்னட்டம் போடலாமின்னு கம்பீட்டர் கண்டு புடிச்சவர் கைட் போட்டிருக்காரா???? சொல்லுங்க முட்டாஊ சொல்லுங்க…..

    • பெரியாறு சிவாஜிய பத்தி கேவலமா எங்கயாவது சொல்லி இருகார?
     நீ ஏன் குதிக்குரே அதான் என் கேள்வி. தம்பி. கொஞ்சமாவது
     மனசாட்சியோட இருங்க. கம்ப்யூட்டர் கண்டுபிச்சவன் அப்படி ஒரு
     கைட் போட்டுருந்தா இப்போ உங்கள மாதிரி கட்டுரை
     பின்னூட்டம் நிச்சயமா வந்துருக்காது.

    • பெரியார் சிவாஜிய தனியா திட்டினாரான்னு எனக்கு தெரியாது… ஆனா சாதி பாக்குறவனுங்கள பாப்பானுங்கள, பாப்பார அடிமைங்கள எப்படி திட்டியிருக்காருன்னு உங்களுக்கு  தெரியாதா என்ன??????முட்டாஊ????

    • //அதானே பாத்தேன் என்னடா முட்டாஊ காலேல வேற மாதிரி ஒரு புன்னூட்டம் போட்டாரேன்னு…// கொஞ்சம் நல்ல கண்ண
     வச்சி பாக்கோணும். என்ன சொல்ல வந்தேன்னு நொள்ள கண்ண வச்சி பாக்ககூடாது. அட கேள்விகுறி தம்பி.

    • உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுறீய. அப்புறம் எப்படி
     உங்களால இறந்தபோன ஒருவர பத்தி இப்படி ஒரு
     கட்டுரைஎழுத முடியுது? உங்க புரட்சி கருத்துக்கள சொல்ல வேற ஆளே கிடைகலையா? கேவலம் மகா கேவலம். என்ன பண்றது எல்லாருக்கும்
     எழுத்து பேச்சு கருத்து சுதந்திரம் இருக்கு இந்த இந்திய நாட்டுல.

    • @@@உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுறீய. அப்புறம் எப்படிஉங்களால இறந்தபோன ஒருவர பத்தி இப்படி ஒருகட்டுரைஎழுத முடியுது? @@@

     அட முட்டாஊ அண்ணே செத்துப்போன ஒரு மனுசன் இன்னோரு செத்துப்போன மனுசன திட்டுனாறான்னு ஒரு இத்துப்போன கேள்ளவிய கேட்டதே நீர்தானேய்யா????? கேள்வி கேக்க தெரியாத 
     உங்களுக்கு எல்லாம் எதுக்க கருத்துரிமை????

   • செத்துப்போன மனுசன வச்சித்தானே நீங்க உங்க பொழப்பை ஓட்டுறீங்க. அதுதான் தப்புன்னு சொல்லவரேன். சிவாஜி பெரியார் வேசத்துல நடிச்சா பெரியாருக்கு கேவலம்ன்னு சொல்லுறீங்க. நான் சொல்லுறேன் அது பெரியாருக்கு பெருமை தான். நடிப்புல ஜாதி மதம் எழவு எதுவுமே இல்லைன்குரத உங்களமாதிரி ஜனங்களுக்கு புரியாது. சிவாஜி ஒரு உயர் ஜாதி அபிமாநினு சொல்லுறீங்க. அனா சிவாஜினாலே அது எல்லா ஜாதிகரங்களுக்கும் பிடிச்ச ஒரு பெயர் ஒரு நடிகர். ஆனா உங்களுக்கு சிவாஜிய ஒரு கருவியா பயன்படுத்தி மக்கள் கிட்ட ஜாதி வெறிய தூண்டி குளிர் காயுற கேவலமான தொழில் செயுரவங்க. உங்களமாதிரி ஆளுங்கள் இருக்குற வரைக்கும் ஜாதி வெறி என்னைக்குமே ஒழியாது.

    • //சிவாஜி ஒரு உயர் ஜாதி அபிமாநினு சொல்லுறீங்க. அனா சிவாஜினாலே அது எல்லா ஜாதிகரங்களுக்கும் பிடிச்ச ஒரு பெயர் ஒரு நடிகர்.//

     ரசினியும் தான் எல்லாருக்கும் பிடித்த நடிகர்! கன்னடக்காரன் காலை நக்கலையா!?, காசுக்காக எதையும் செய்பவர்கள் தான் அவர்கள், கொள்கையை விற்று பிழைப்பு நடத்தும் நடிகர்களை தொழில் ரீதியாகவே அணுக வேண்டும், 100 கொலை பண்ணியிருக்கான்னு ஒருவனை எக்ஸ்பர்ட் ஆக்கக்கூடாது!

     • //கொள்கையை விற்று பிழைப்பு நடத்தும் நடிகர்களை// ரசினி எப்போ வினவின் கொள்கைகளை பின்பற்றுவதாக சொன்னார் ?

 12. //எப்படிங்க இது போல எல்லாம் பேசறிங்க …முடியல…
  அதிக page hit வேணும் …அதுக்காகக இப்படியா…
  இந்த மாதிரி எழுதறதுக்கு…… எதாவது கட்சிக்கி பிரியாணி தொண்டனா சேவை செய்யலாம்… //

  தம்பி இளையராசா, நீங்க வினவுக்கு புச்சா?

  • தம்பி பூச்சாண்டி.. நானும் இப்படி இளையராசா மாதிரி ஒரு ஆளு தான்.. ரொம்ப கஷ்டம்டா உங்கள மாதிரி ஆளுக இருகிரபோ நாடு உருபடுறது..

 13. அங்க சுத்தி இங்க சுத்தி, கடிக்க எதுவும் இல்ல போல, பாவம் சிவாஜி மேல சேறு வீச வந்து விட்டது தேச விரோத வினவு கும்பல். ஏங்கடா, எவனத்தான் விட்டு வைப்பிங்க நீங்க..

  • கரெக்டுங்க.. சரியான வெட்டி பய வினவு.. பேருல கூட வெவகாரமா தான் இருக்கான் பாருங்க.. 😀

   • அய்யய்யோ இப்படி திட்டாதீங்க. அப்புறம் கேளிவிகுறி செருப்ப தூக்கினு ஓடி வந்துடுவாரு.

 14. உலக திரைப் படங்களை பார்த்தவர்கள் sivajiganesanai ஒரு நடிகர் என்று

  ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

 15. நல்ல ஆய்வு வினவு இருவரும் பாமரனாய் இருந்த பொழுது ஒரு
  பராசக்தி வந்தது ……ஆனால் 1981 அவர்கள் லட்சாதிபதிகள் ……….
  நம் படம் எல்லாமே மேட்டுக்குடி வர்கத்தின் சோகம் சுகம் என்று உள்ளது ..
  நம் அமைப்பு எப்படி உள்ளதோ அதையே கலை பிரதிபலிக்கும் ………
  ரஜினி படம் ஓடியதற்கும் அதுவே காரணமாய் இருக்கும் என்பதே உண்மை

 16. சிவாஜி அவர்களின் நடிப்பை மிகை நடிப்பு என்று குறிப்பிட்டுள்ளீர்கள் நடிப்புக்கென்று அளவு கோள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை நாம் பிறரிடம் பேசும் பொழுது கூட ஒரு விதமான நடிப்பையே வெளிப்படுத்துகிறோம். அது போல அவரின் நடிப்பு கூட இயல்பான ஒன்று தான் என்று நினைக்கிறேன். உண்மையில் நடிக்க தெரிந்தால் மட்டுமே நீங்கள் குறிப்பிடுவது போல் மிகை நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஒரு மாபெரும் நடிகனின் அரசியல் தடுமற்றம், தனிக்கட்சி இவையெல்லாம் விமர்சிப்பது கூட சரிதான் அனால் அவரின் நடிப்பை பற்றி விமர்சிப்பது முறையன்று.

  • சிவாஜிக்கு நடிப்பே தெரியாது -ன்னு ஒரே போடா போட்டு அதிர்ச்சி அடைய வைக்குறது தான் இப்போ ஃபேஷனுங்க 🙂

  • சாம்ராட்…பதிவின் இந்தப்பகுதியை கூர்ந்து வாசியுங்கள்

   @@@@அதை மிகை நடிப்பு என்பாரின் விமரிசனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்தும், அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்கு குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்கு காரணம் என்று கூறிவிட முடியாது.மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர் அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்தி விட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.

   தி.மு.க.வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான
   மூடியாகவே இருந்தது.முதலில் ஜாடிக்கேற்ற மூடி; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு அது முற்றத் தொடங்கியது@@@@

   மற்றபடி மாபெரும் நடிகர் என்ற உங்கள் கூற்றும் கூட விமர்சனம் தான்… 

  • //அவரின் நடிப்பை பற்றி விமர்சிப்பது முறையன்று//

   ஏன் சிவாஜியின் நடிப்பைப் பற்றி விமர்சிக்கக் கூடாது? காசு கொடுத்து பார்த்தவன் கிடைச்ச பொருளைப் பத்தி நாலு வார்த்தை சொல்லத் தான்
   செய்வான். நடிப்புக்கு விமர்சனமே கூடாதுன்னா அவரு பாத்ரூம் கண்ணாடி முன் நின்று நடித்திருக்க வேண்டும்

   • நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீகள் நான் அவரின் நடிப்பை மிகை நடிப்பு என்று கட்டுரையில் உள்ளதை தான் சுட்டிக்காட்டினேன் சரியான வாதத்தை முன் வையுங்கள். நீங்கள் அவரின் நடிப்பை மிகை குறிப்பிடுகிறீர்களா என்பதை தெளிவு படுத்தவும்

 17. அப்போதே படித்ததுதான்.  இது ஒரு நினைவூட்டு எனினும், அவரின் நடிப்புக்கு மட்டுமே நான் ரசிகன்

 18. எல்லோரும் ஒரு மீள்பதிவு கேட்கையில், எனக்காக ராசைய்யா(இளையராசா) பற்றிய “புக” வின் விமர்சனத்தை வெளியிட இயலுமா. நீண்ட நாட்களாக வைத்திருந்த அந்த “புக” புத்தகத்தை தோழர் ஒருவர் படித்து விட்டு தருவதாக கேட்டார்.  அதில் ஒன்றி திரும்ப தர மறந்து விட்டார்.   இங்கே வெளியிடும் போது மேலும் பல விமர்சனங்கள், செய்திகள் கிடைக்குமென்பதால் வெளியிடுமாறு வேண்டுகிறேன்.

 19. Sivaji never pretended to follow EVR’s useless divisive principles for the sake of being in limelight.He did not see eye to eye with the good for nothing dravidian policies based on concocted history  by the English men to whom EVR,CNA were all stooges and wnet to the extent of opposing Freedom

 20. வெற்றுத் தனமாய் கவனத்தைக் கவர ஒரு இத்துப் போன லூசு எந்த அடிப்படையும் இல்லாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது. தோழர்கள்
  கவனமாய் இருக்க வேண்டும் – இது நம்மை கோபப்படுத்தி வார்த்தைகளைப் பிடுங்கி விட்டு கடைசியில் – ‘பார்த்தீங்களா.. இந்த கம்யூனிஸ்டுகளே இப்படித்தான் இப்போ இத்தனை நா கூடவே இருந்த என்னையும் திட்டிட்டாங்க’ என்று பிரபலமடையும் உத்தி.

  அது இப்போது தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டு வருகிறது – இன்னும் முழுமையாக அம்பலப்பட்டு தனது நம்பகத்தன்மையின்
  போலித்தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டட்டும். நாம் பொறுமையாக அதை வேடிக்கை பார்த்து ரசிக்கலாம். எப்படியும் இன்னும் கொஞ்ச நாளுக்கு
  நாம் சிரித்துக் கொண்டாடி மகிழ ஒரு கோமாளி கிடைத்த மாதிரி ஆகி விட்டது.

 21. mooto ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கிறார் அவர் பொழுது போவதற்க்காக இப்படி விவாதங்களில் பங்கேற்க்கிறார் என்றே நினைக்க தோன்றுகிறது அவர் கருத்து சொல்பவர்களை வீணாக வெறுப்பேற்றுகிறார்

 22. சிவாஜி ஒரு சகாப்தம். ஒரு சில முடிவுகளில் அவர் தவறி இருக்கலாம், அனால் அவரை கடுமையாக விமர்சிக்க எவனுக்கும் தகுதி இல்லை, அவர் எவன் வீட்டு பணத்தையும் கொள்ளை அடிக்க வில்லை. கருணாநிதியை போல.

 23. சிவாஜி, நடிப்பில் அவர் ஒரு சிங்கம்.
  ஆனால், அரசியலில் அவர் ஒரு அசிங்கம்

 24. இந்த உலகின் எந்த பகுதியிலாவது ஒரு தமிழனை இன்னொரு தமிழன் பாராட்டியதுண்டா, கேவலமான ஈனப்பிறவி தமிழன்தான் என்பதற்கு இந்த கட்டுரையும் இதன் ‘ஆசிரியரும்’ சான்று

 25. //பார்ப்பனக் குடும்பக் கதைகளை மட்டும் நாடகங்களாக நடத்தும் சபாக்களின் விதிப்படி தனது நாடகத்தை விடுத்து, ‘வியட்நாம் வீடு’ என்ற நாடகத்தை சிவாஜி அரங்கேற்றினார். //

  சாதி வெறியர்கள் எல்லோரும் தான் பார்பனர் பிறப்பின் அடிப்படையில் இல்லை என அவ்வப்போது பிதற்றும் வினவு போலி பித்தலாட்டம் அம்பலம்

  நல்ல பகுத்தறிவு, நல்ல கம்முநிசம் 

 26. //சிவாஜி ஒரு ஜாதி வெறியன்னு இதுவரைக்கும் எனக்கு தெரியல. ஒன்னு எனக்கு
  உலக அறிவு இல்லாமல் இருக்கலாம். இல்ல சிவாஜி ஜாதி வெறி இல்லாமல் இருக்கலாம். இந்த தளத்துல சொல்லிட்ட நான் ஒத்துகனுமா? உலகரியப்படதுன்னு சொல்லுறீய வேற ஏதாவது proof இருக்கா?//

  தேடிகிட்டு இருக்கேன்! நிச்சயம் வரும்
  சிவாஜி சாதி அபிமானியாக இருந்தது, உங்களுக்கு தெரியவில்லை என்பது ஆச்சர்யமான விசயம்!

 27. ////சிவாஜி ஒரு ஜாதி வெறியன்னு இதுவரைக்கும் எனக்கு தெரியல. ஒன்னு எனக்கு
  உலக அறிவு இல்லாமல் இருக்கலாம். இல்ல சிவாஜி ஜாதி வெறி இல்லாமல் இருக்கலாம். இந்த தளத்துல சொல்லிட்ட நான் ஒத்துகனுமா? உலகரியப்படதுன்னு சொல்லுறீய வேற ஏதாவது proof இருக்கா?////

  கீழ் தஞ்சை சாதி வெறி நிலபிரபுக்களின் நெருங்கிய நண்பர்களாகவும் அவர்களது ஒடுக்குமுறைகளுக்கு துணை போனவர்களாகவும் இருந்த ஒரு சில ‘முக்கி’ய தலைவர்கள் – சிவாஜி கனேசன் மற்றும் மூப்பனார் ஆவோர். இவை பல்வேறு புத்தகங்களிலும், செய்தி ஏடுகளிலும், ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலானது.

 28. Dont’ u have anything to write good about Sivaji? U know during Indo-Sina war he gave all the jewels he had towards the war. Why can’t u say these type of patriotic things he ahs done. He may be a failure as a politician, but as a actor he was successful

 29. அன்றே படித்தேன் ,இணையத்தில் வந்ததிற்கு நன்றி அதேபோல திரைவிலகும்போது ,இசை ஓய்வு பொழுபோக்கு என்ற கட்டுரையும் கொண்டுவாருங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ,பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

 30. திராவிட இயக்கங்களையே குறிவைத்து தாக்கவேண்டுமெ என்ற கங்கணத்தோடு இருக்கும் ம.க.இ.கவினருக்கு, கம்யூனிஸ்டுகளின் இலட்சணத்தைப்பற்றி ஒன்று சொல்ல்வேண்டும். 1960களில் மேற்கு வங்கத்தில் சாரு மஜும்தாரின் தலைமையில் ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கிய நக்சல்பாரித் தோழர்களையே காட்டிக்கொடுத்து கொன்றுகுவித்த சக கம்யூனிச இயக்கத்தைப் பற்றியும் நாம் சொல்லித்தான் ஆகவேண்டும். திராவிட இயக்கம் என்றால் என்ன, கம்யூனிச்ச இயக்கம் என்றால் என்ன என்பதை சரியாக நீங்கள் வரையறை செய்யாமல் எழுதுவது உங்களுடைய திராவிட வெறுப்பைத் தான் வெளிக்காட்டும். கம்யூனிச இயக்கம் ஏன் தமிழகத்தில் கால்கொள்ளவில்லை, திராவிடர் இயக்கம் என்ற பார்ப்பனர் அல்லாத இயக்கம் ஏன் இங்கு கால்கொண்டது என்பது பற்றியும் வினவு சற்று தெரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் பூணூலிஸ்டுகளாக ஆனகதையையும் அப்போது நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். பார்ப்பனர் எதிர்ப்பு என்ற ஆரியப்பண்பாட்டு முரண் தத்துவம் தான் திராவிடம் மற்றும் திராவிட இயக்கம். நேபாள கோவிலில் இன்னும் இந்திய பார்ப்பானை அந்த கம்யூனிச அரசாங்கம் விரட்டமுடியாமல் போனதற்கும், தில்லைகோவிலுக்குள் பார்ப்பானை வீழ்த்த ஏதுவான இந்தத் தமிழகச் சூழலுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் திராவிட இயக்கம் தான். மறுக்க முடியுமா! திராவிட இயக்கம் இந்தச் சமூத்தில் செய்த சமூக இயக்கவியல் மாற்றங்களை மஞ்சள் காமாலையோடு பார்க்கக் கூடாது. தமிழகத்தில் பூணூலிஸ்டுகள் இன்னும் ‘பார்ப்பான்’ என்று சொல்லக்கூடாது என்கிறார்கள். எத்தனைபேர் அக்ரகாரத்திலிருந்து வந்தார்கள் தில்லையில் தீட்சதர்களை விரட்ட? திராவிட இயக்கம் இந்தக் களத்தில் செய்தவற்றின் தொடர்ச்சியால் தான் தில்லைச் சமர். எங்கே போனது உங்கள் வர்க்கப் போர் வடிவங்கள் -கங்கை கொண்டானும், பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப்பொருட்களின் பகிஷ்கரிப்பும்? ஏன் கங்கை கொண்டானில் நந்திகிராமத்தை உருவாக்க முடியவில்லை? தில்லைச் சமர் திராவிடப் பாசறையின் வெளிச்சம். ஆரிய இனத்திற்கு எதிரான தமிழ் இன எழுச்சி. எங்கே சென்றனர் வர்க்கப்போர் வீரர்கள்? அக்ரகாரங்களிலிருந்து எத்தனை வர்க்கப் போர்க்குஞ்சுகள் வந்தார்கள்? தமிழில் பாட கடிதம் கொடுத்த கருணாநிதியும், தில்லைக்கோவிலில் தீட்சதர்களை வெளியில் தள்ளிய போலீசும், பா.ம.க மேல்முருகனும் எந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்? இந்து என்று சொல்லாதே பார்ப்பான் பின் செல்லாதே என்ற முழக்கத்தை எந்த கம்யூனிச சித்தாந்தத்தால் நியாயப்படுத்துவீர்கள். பிறப்பினடிப்படையில் சாதி என்ற கட்டமைப்பில் இந்தச் சமூகம் உருவாக்கப்பட்டிருப்பதை எந்தக் கம்யூனிச சித்தாந்தம் விளக்க முடியும்? விளக்க முடியும் என்றால் தில்லை தீட்சிதர்களை விரட்ட அக்ரகாரங்களிலிருந்து வர்க்கப் போர்வீரர்களைக் கூட்டிக்கொண்டு வாருங்கள். தவறான வரலாற்றை மக்கள் முன் வைக்கும் வீண் விளையாட்டு உங்களுக்கு எதற்கு? என்ன யோக்கியதை இருக்கிறது உங்களுக்கு திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்த? கையில் நோக்கியாவும், சாம்சங்கும் வைத்துக்கொண்டு வீட்டில் சோனி டி.வி பார்த்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்கும் உங்களின் வர்க்க அரசியலை கொஞ்சம் பரிசீலனை செய்து பாருங்கள், உங்கள் முகத்தில் நீங்களே எச்சில் துப்பிகொண்டதை உணர்வீர்கள். ஒரு சமூகத்தின் உன்னதமான சீர்திருத்த இயக்கங்களை அதன் வரலாற்று வடிவில் மதிக்கும் பக்குவமற்ற கொச்சைவாதிகள் ம.க.இ.கவும் வினவும. எனது கருத்து எல்லோருடைய விமர்சனத்திற்கும். ந்னறியுடன் முரசு.

  • பழைய புஜ வை புரட்டுங்கள். ஜோதிபாசு மஜும்தாரை காட்டிக் கொடுத்ததை பற்றி விலாவரியாக ஏழுதியுள்ளனர்.  நம்பூதிரி பற்றியும் ஒரு தொடர்.  இப்படி தடம் மாறியவர்கள் தவறாமல் படம் பிடித்து காட்டுவது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது,  சக மனிதன் செய்யும் செயலை மறைத்தால்தான் குற்றம்.  வெளிபடையாக சொல்வது தன் மீது எச்சில் துப்புவது ஆகாது.

 31. தி.மு .க. தொண்டன் முரசுவுக்கு.

  பார்ப்பான் என்று சொன்னது தி.மு .க காரங்களா? ” தண்ட சோறு உண்ணும் பார்பான் ” என்று “நல்ல” அடைமொழியுடன் நமக்கு எல்லாம் தன்னுடைய சாதி காரனை காட்டி கொடுத்தவன் மானுட பற்றுள்ள பாரதி.நூற்றாண்டு கடந்தும் முத்துராம லிங்கம் என்பவரை ஏன் “தேவர் “என அழைக்கவேண்டும்.?
  இந்திய கம்யூனிச வரலாறு கொஞ்சமும் தெரியாத கிணற்று தவளையாய் இருந்து கொண்டு கத்துவது வேடிக்கையானது.ம.க.இ.க ஏன் தமிழ்நாட்டு கம்யூனிச கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் நிற்பதில்லை என்று ஒரு முட்டாள் தனமாக ஜோசித்தாலே விடை தெரிந்து விடும் .
  தில்லைக்கோவிலில் ம.க.இ.க ஆரம்பித்த போராட்டத்தாலேயே ஓரளவு வெற்றி இன்று கிடைத்துள்ளது.
  தி.மு. க. தலைவன் கருணாநிதி தோளில் போட்டிருக்கும் மஞ்சள் துணி தி.மு. க.கட்சியின் கொள்கை திட்ட படி போடப்பட்டுள்ளதா? அப்படி என்றால் அன்பழகன் ஏன் மஞ்சள் துண்டு போடுவதில்லை.
  சிவாஜியின் விசயத்துக்கு வருவோம். அவர் ஒரு பாமரன்.அவரது பேட்டிகளில் அவை வெளிப்பட்டுள்ளன. நடிப்பு பட்றி அவரிடம் தெளிவென்பதே கிடையாது.சிறந்த நடிப்பு என்றால் அழ வைப்பது என்பது தான் அவர் எண்ணம் .மெட்டி ஒழி திருமுருகனை அழைத்து பாராட்டிய அவர் ” நா தானப்பா எல்லோரையும் அழ வைப்பேன் ,என்னையே அழ வைத்து விட்டாயே ” என்று.அவரா மக்களை அழ வைத்தார்? அற்புதமான இசை அமைப்பாளார்கள், வாத்தியங்களை வாசித்த அற்புதமான இசை கலைஞ்சனர்கள் அல்லவா அழ வைத்தார்கள்.” மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி ” என்ற ஒரு பாடல் பாக்கியலட்சுமி என்ற படத்தில் வருகிறது .அதை வானொலில் கேட்டாலே மனம் மெழுகு போல் கரைந்து விடுகிறது.பாலும் பழமும் ,பாச மலர என்று அவர் நடித்த வரிசை படங்களில் பாடல்களில் உள்ள உருக்கம் அவரது நடிப்பில் வாய் பிதுக்குவதால் காட்சிகள் அசிங்கமாக இருக்கும்.”காகிதத்தில் கப்பல் செய்து” என்ற பாடலில் கவனியுங்கள் .சிவாஜியின் வெற்றிக்கு பின்னணி பாடிய T.M.சௌந்தாரராஜனும் இசை அமைப்பாளர் M.S. விஸ்வநாதனும் மிகமிக முக்கிய காரணம் .ஆனால் அவர்களை பற்றி யாருமே சொல்வதில்லை . எம்.ஜி.ஆர் ,சிவாஜி என்ற தி.மு.கா காரங்கள் அந்த அரசியல் பின்னணியிலே தங்கள் புகழை வளர்த்தவர்கள்.இவங்கள் போட்ட சத்தத்தில் ஜெமினி கணேஷன் என்கிற அற்புதமான நடிகன் மறைக்கப்பட்டான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி என்ற இருவரும் தங்கள் புகழால் நல்ல சினிமாவின் வளர்சியை ,நல்ல இசையை, நல்ல கலைஞ்சர்கலின் வளர்சியை தடுத்திருத்திருகிரார்கள் என்றால் மிகை இல்லை.குறிப்பாக இசையமைப்பாளர்களின் மண்ணடையை உருட்டியிருக்கிர்ராகள்.என்ன அவரின் படங்களுக்கு மட்டும் நல்லா பாடல்கள் அமைக்கிரையாமே ? என்று குடைதிருக்கிராகள்.பதிலுக்கு இசையமைப்பாளர்கள் ஒரே மேட்டையே இருவருக்கும் மாத்தி போட்டு ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது தான் வேடிக்கை.
  சிவாஜியின் நடிப்பை பார்க்கும் பொது நடிப்பை விட சில வேளை அவர் நாட்டியம் பயின்றிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி வரும்.

  • தோழமையுடன், தமிழ்நாட்டில் கம்யூனிச இயக்கம் என்ன சாதித்துவிட்டது? வர்க்க அரசியல், அதன் போராட்டங்கள் என்ன மாற்றங்களைக்கொண்டுவந்திருக்கின்றன? நோக்கியாவையும், சாம்சங்கையும், சோனியையும் கையில் வைத்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப்பொருட்களை புறக்கணிக்கும் இந்தப் பூணூலிஸ்டுகளின் போராட்டம் வர்க்கப்போரா? அதற்கு பிரிட்டீஷ் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று காலம் முழுதும் கதர் வேட்டி கட்டிக்கொண்டிருந்த காந்தி ஓரளவு பரவாயில்ல போலத்தெரிகிறதே. கோக் வேண்டாம் பெப்சி குடிக்கிறவன் முட்டாள் என்று சொல்கிறாயே, கோக்கையும் பெப்சியையும் ஏன் கடை விரிக்கவிட்டு வேடிக்கைப்பார்க்கிறாய்? எத்தனை கோக் உற்பத்தி நிறுவனங்களை உடைத்துத்தள்ளி இழுத்து மூடியிருக்கிறாய்? ரிலையன்ஸ் மார்ட்டுகளை எதிர்த்த உனது வர்க்க அரசியலின் இன்றைய தன்மை என்ன? கங்கை கொண்டானில் கோக்கை இழுத்துமூடுவேன் என்று சொல்லி வாய்ச்சவடால் விட்டு, கோக் கம்பெனிகாரனிடம் காசு வாங்கிக்கொண்டு, அரசங்கத்திடம் கைது ஆகி, கங்கைகொண்டான் பக்கமே தலை வைத்துப்படுக்காத உனது கம்யூனிச இயக்கத்தின் வர்க்கப்போராட்டம் என்ன? பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டுவது போல மிரட்டி விட்டு பின்பு ‘சைலண்ட்’ ஆவதன் இரகசியன் என்ன? நான் தி.மு.க காரனா இல்லயா என்ற ஆராய்ச்சி அப்பறம் இருக்கட்டும், இதற்கு முதலில் பதில் சொல். திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்தும் உனக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? என் கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? உன் தலைமையை பதில்சொல்லச் சொல். தில்லைக்கோவில் பிரச்சனையில் இதுபோல் இதற்கு முன் உயர்நீதி மன்ற ஆணைகள் எத்தனையோ பெறப்பட்டுவிட்டது? தீட்சிதன் உச்சநீதிமன்றதிற்குச் சென்றுதான் தன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறான். இதுவும் ஒரு வரலாறு. இன்று தீட்சிதனை உச்சநீதிமன்றத்திற்கு தப்பிச்செல்லவிட்டது யார்? பார்ப்பன திண்ணை உச்சநீதிமன்றம். எதையும் இடிக்கக்கூடாது என்று சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு உங்கள் வழக்கறிஞர்கள் என்ன பதில் அளித்தார்கள்? சரிங்க சாமிண்டு வந்துட்டீங்க. அனைத்துசாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டமெல்லாம் செல்லாது அது உச்ச நீதிமன்றதுக்குப்போனாலும் ஜெயிக்காது இது வேஸ்டு, என்று ஜூன்/ஜூலை, 2006புதிய கலாச்சரத்தில் எழுதிவிட்டு இன்று எந்த முகத்தோடு உச்சநீதிமன்றத்திற்கு செல்லவேண்டும் என்று ‘காசு’ வசூல் பண்ணுகிறீர்கள். சரி நீங்கள் வத்திருக்கும் வழக்கறிஞர்கள் பெயர்/கள் என்ன? அவர்களுடைய தொடர்பு முகவரி/எண் கொடுங்கள். அவர்களுக்கு எவ்வளவு பணம் பேசி எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறீர்கள் என்பதற்கான இரசீதினை காட்டுங்கள். இதுவரை எவ்வளவு காசு வசூல் பண்ணியுள்ளீர்கள்? அது இருக்கட்டும். தீட்சிதனை சிதம்பரம் மக்கள் மன்றத்தில் சந்தித்து தோற்கடிப்பதை விட்டுவிட்டு கேஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்திற்கு ஓடுகிறீர்களே என்ன காரணம்? உச்சநீதிமன்றம் பார்ப்பன ஓநாய்களின் இருப்பிடம் என்று விமர்சனம் செய்தவிட்டு இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் யார் துப்பும் எச்சிலை முகத்தில் வாங்குவதற்காக காத்திருக்கிறீர்கள்? இது தான் மக்கள் போராட்டமா? இல்லை புதிய ஜனநாயக எழுச்சியா? உங்கள் கம்யூனிச யோக்கியதையை முதலில் கொஞ்சம் கிளியர் பண்ணுங்கள் தோழர்களே? நன்றியுடன் முரசு.

 32. தமிழக மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு அழக்கூடிய தன்மை கொண்டவர்கள் .அதிலும் பெண்களுக்கு நாங்களும் அழுவதில் சளைத்தவர்கள் அல்ல என்று இன்னும் இன்று நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள் .திரையிலும் அதன் பிரதிபலிப்பே சிவாஜியின் அழுகையும் .எதாவது ஆபத்தில் இருந்து காப்பாற்றினாலோ உதவி செய்தாலோ நீங்க தான் என் தெய்வம் என்று பினாத்துவதும்,கணவனை கண் கண்ட தெய்வம் என்று கூறும் கேனத்தனமும் ,தாயை தெய்வமாக பேணுவதும் முட்டாள்தனங்களே .முட்டாள்களுக்காக படம் எடுத்தால் எப்படி நடிக்க முடியுமோ அதைத்தான் சிவாஜியும் செய்துள்ளார் .தன்னை அறிவு ஜீவி என்று நினைத்து கொண்டு என்னமோ சிவாஜி நடிப்பு மிகைப்பட்ட நடிப்பு என்று கூறுவது ,அதுவும் அவர் மண்டையை போட்டு பத்து வருஷம் கழித்து எழுதுவது சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல் இருக்கிறது .அதே போல் ஒரு பெரிய பதவியை அடைய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு கொள்கை இருப்பதாக வெளியில் காட்டிகொண்டால்தானே அவன் நினைத்ததை அதிர்ஷ்டமும் சேர்ந்து வந்தால் அடைய முடியும் .அல்லது மக்களை எப்படியாவது மூளையை சலவை செய்து ஜெயிக்க வேண்டும் .ஒருவனை நல்லவனாக காண்பிக்க வேண்டுமானால் ஒரு கெட்டவனை காண்பித்தால்தானே அவனை நல்லவனாக காட்ட முடியும் .முதலாளித்துவமும் கம்யூனிசமும் அப்படிப்பட்ட திருட்டுக்கூட்டமே. எவனும் யோக்கியனில்லை .

 33. சிவாஜி
  வாயிலே
  ஜிலேபி!!!!!!

  இந்த மனிஷன் கட்சியெல்லாம் ஆரம்பிச்சு அதுவும் தேர்தல்ல நின்னெல்லாம் காமடி பண்ணியிருக்காரா???

  சிவாஜியை பற்றிய மற்ற பல விமர்சங்களில் அவருடைய நடிப்பு மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். ஆனால் இந்த கட்டுரையில் சிவாஜி வாழ்ந்த காலத்தின் சமூக பிண்ணனியுடன் மார்க்சிய பார்வையில் சிவாஜியை விமர்சித்திருப்பது அருமை.

  வாழ்த்துக்கள்!!

 34. தான் வாழ்ந்த சமூகத்தை பற்றிய மதிப்பீடுகளை அவர் பேசியதில்லை .அந்த அறிவு அவருக்கு மருந்துக்கு கூட இல்லாததாலேயே அரசியலில் அவர்
  கோமாளியானர் .
  நடிப்பில் உலக புழல் பெற்ற மார்லோன் பிராண்டோவுடன் சிவாஜியை அவரது ரசிகர்கள் ஒப்ப்பிட்டு பேசுவது வழமை. உண்மை என்னவென்றால் பிராண்டோவின் பாணி வேறு .எண்ணிக்கை குறைந்த படங்களில் பிராண்டோ நடித்தாலும் அவர் தொட்ட உச்சங்களை சிவாஜி தொடவில்லை.
  சிவாஜியின் சாதி திமிர் பற்றி எழுதியிருந்தார்கள்.மர்லான் பிராண்டோ தனக்கு கிடைத்த மிக உயந்த விருதான ஒஸ்கார் நிராகரித்த கலைஞ்சன்.கறுப்பர்களையும் அமெரிக்க பூர்வ குடிகளையும் அந்த படத்தில் இழிவு படுத்தினார்கள் என்பதை குறிப்பிட்டு அந்த ஒஸ்கார் விருதை நிராகரித்தார்.அவர் பல தடவை அமெரிக்கர்களையும் ,அமெரிக்க அரசையும் பழங்குடி மக்கள் குறித்து பேசும் பொது மிக கடுமையாக விமர்சித்து வந்தவர் பிராண்டோ.

 35. மர்லான் பிராண்டோ தனக்கு கிடைத்த மிக உயந்த விருதான ஒஸ்கார் நிராகரித்த கலைஞ்சன்.கறுப்பர்களையும் அமெரிக்க பூர்வ குடிகளையும் அந்த படத்தில் இழிவு படுத்தினார்கள் என்பதை குறிப்பிட்டு அந்த ஒஸ்கார் விருதை நிராகரித்தார்.அவர் பல தடவை அமெரிக்கர்களையும் ,அமெரிக்க அரசையும் பழங்குடி மக்கள் குறித்து பேசும் பொது மிக கடுமையாக விமர்சித்து வந்தவர் பிராண்டோ.////
  .
  .
  அது உண்மைதான் தனது வாழ்வு முழுவதும் அதை அவர் செய்து வந்தார் .மற்றபடி சிவாஜியின் ரசிகர்கள் அவரை ப்ராண்டோவுடம் ஒப்பிட்டது எனக்கு சிரிப்பையே வரவைக்கிறது.சிவாஜியால் கோட்பாதர் கதாபாத்திரத்தை நிச்சயம் செய்ய முடியாது.மிகையான உணர்சிகளை க்ளோஸ் அப்பில் காட்டி மக்களை அழவைத்தார் என்பதைத்தவிர அவர் எதையும் செய்யவில்லை(அதை இப்போது சீரியலில் வரும் அம்மணிகளே செய்கின்றனர்!)
  இதே போல் godfather படத்தின் பிராண்டோ மற்றும் அல் பசினோ இருவரின் கதாபாதிரத்தையும் காப்பியடித்து கமல் நாயகன்(இந்த படமே godfather காபி) படத்தின்மூலம் தானும் ஒரு மகா நடிகன் என மக்களை ஏமாற்றினார்.

 36. interesting post. it’s refreshing to see an essay with a different perspective,

  however, i’d argue that the rise and continued success of sivaji was itself a result of the collective failure of periyar and the dravidian movement in bringing about a radical transformation in society. after all, periyar only polarised society with his anti-brahmin rhetoric; he didn’t work towards a power shift from the landowning classes to the marginalised. his chief disciples anna and kalaignar were smart politicians and decided to use that rhetoric along with some of their own to fool the people and come to power, without disturbing the status quo. we see this in the subtle shift from “kadavulai mara, manithanai ninai” to “ondre kulam, oruvane devan.”

  so, your mocking of sivaji’s dream of playing periyar is misplaced. it would have actually been fitting if sivaji had portrayed periyar since periyar himself never challenged the hegemony of the landowning caste hindus but only picked on the brahmins, since they were the custodians of customs and rituals. that was his monumental failure, and it is the reason why periyar’s ideology has failed miserably though he impacted life in tamil nadu like no other. (today most people refuse to get married without an iyer’s presence. temple building has become a cottage industry. astrology and other “sciences” are amazingly popular. is this the tamil nadu that periyar dreamt of?)

  periyar’s failure also explains sivaji’s phenomenal successful roles in ap nagarajan’s mythologicals and bhimsingh’s tearjerkers. periyar merely rubbished all existing religion-based traditions and myths without offering an alternative. when the lack of alternatives makes people uncomfortable, they tend to fall back on the familiar. if you look at thiruvilayadal or thirvarutchelvar, they aren’t very different from mkt’s or chinnappa’s movies at the core, but differ vastly in terms of the chaste tamil used. just old wine in new bottle! but the masses loved them since they spoke a familiar language; stories of of kings, gods and saints, without the manipravalam touch, which made them accept and celebrate these movies as their own.

  of course, the fact that the masses liked these movies, and the underlying themes, only shows that the tamil people were themselves not ready for genuine change. actually they still aren’t. the need to keep man in chains is deeprooted in them, and they will use any justification to not upset the state of affairs.

 37. well put.
  Lack of alternative!
  I wish EVR endorsed popular science and demonstrated as a live example. 
  Had he LIVED as an example by popularizing scientific studies and motivated by example, life would have been much different today for us. Instead he concentrated more on bashing a certain community, verbally & physically, and silently encouraged his followers to do the same. Long live his abilities ! 
  BTW, sivaji the actor, was one of us, so he “behaved” in movies, like one of us. His failure in movies is our failure, his success is ours too. No comments on his personal ventures. 

 38. ஏன் உலக படத்துக்கு போறீங்க.வீரபாண்டிய கட்டபொம்மனும், நாவுக்கரசரும், சிவபெருமானும் உலக படங்களில் வரமாட்டார்கள். சிவாஜியின் நடிப்பை குறை சொல்பவனுக்கு தமிழ் திரைப்படம் பற்றி விமர்சிக்க தெரியாது என்று பொருள்.

 39. அவன் நடித்தான்வாழ்வதற்காக….அவன் வாழ்ந்தபின்செத்தான்.
  சில பிண்டங்கள்வாழ்கிறார்கள்எதையும் கண்டுகொள்ளாமல்நடித்துக்கொண்டே………….!இவர்கள்செத்துக்கொண்டேவாழ்கிறார்கள்.
  – புதிய பாமரன்.

 40. இந்தக்கட்டுரை எனக்கு பிடிக்கிறது…..இதைவிட அதிகமாக சிவாஜி யை பிடிக்கும்….

 41. யேனய்யா இரந்து போன மனிதனை இவ்வலவு கீழ்தரமாகவா விமர்சிக்க வேன்டும்? ஆனால் எனக்கும் சிவாஜி ஐ பிடிக்காது

 42. This article is a prime example for abuse of writing space. The job of an actor is to act. That was done with aplomb like no other by Sivaji Ganesan. Perhaps Sivaji Ganesan was not great as a person, which is completely immaterial. That should not undermine his life or his achievements as an actor. This article is in bad taste. Especially when it refers to a person who is no longer amidst us. Although the recent write ups have been harboring a biased nature, it is still my opinion that Vinavu is a socially responsible magazine and must focus on socioeconomic issues instead of such pointless trashing of legends. I hope such articles are not encouraged by Vinavu in future.

 43. ////தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று…..”////// அப்படிப்போடு! இதத்தான் ஆங்கிலத்துல connotation னு சொல்லுவாங்க.
  சிவாஜி எல்லாம் ஒரு பெரிய கலைஞன்னு நெனச்சு இங்க வந்து மல்லுக்கட்டுரத நிறுத்துங்கப்பா, முடில. உங்க சாதிக்காரன பத்தி சொல்லிட்ட போதுமே, சண்டைக்கு வந்துருவீங்க.
  வினவுக்கு கொஞ்சமாவது நன்றி இருந்தா சிவாஜி அவர்களை இப்படி இழிவு படுத்துமா? பின்ன என்ன? கல்யாணின் தங்கப் புரட்சியை வழிநடத்தும் மகனை பெற்றுத்தந்த மாமனிதனை வினவு அசிங்கப்படுத்துகிறது.

 44. /// if you have courage, can you print about current heroes in your magazine…?/// புதுசா?
  //இறந்து போன மனிதனை இவ்வலவு கீழ்தரமாகவா விமர்சிக்க வேன்டும்?//இறந்து போன ஹிட்லர் பத்தி பேசக்கூடாதா? அது தப்பாகாதா? என்னையா கேவலமான கலாசார லாஜிக்கு இது?

 45. திரை கூத்தாடி சிவாஜியின் கோமாளிதனத்தை சரியாக விமர்சனம் செய்துள்ள பதிவு இது.இப்போது இருக்கின்ற முன்னணி நடிப்பாளிகலுக்கும் ஆக பொருத்தம்.நன்றி வினவு.

 46. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பற்றிய பதிவு மிகச்சரியாக இருந்தாலும் இன்றைக்கு உயரத்திலிருக்கும் சமூக சிந்தனையற்ற ******* நடிகர்களுக்கு சிவாஜி அவர்கள் பரவாயில்ல என்றே படுகிறது. அவர் எடுத்துக்கொண்ட தளம்பல் நடவடிக்கைகள் சில, சாதாரண ஒரு சராசரிமனிதன் தனது இருப்பை தக்கவைக்க எடுத்துக்கொள்ளும் ஒன்றாகவே பார்க்கலாம். திராவிட மாயையை வெல்லுவதும் அக்காலங்களில் இலகுவாக இருக்கவில்லை. அன்றைக்கு காங்கிரஸ் ஒரு நல்ல இயக்கமாகவே பார்க்கப்பட்டதுமுண்டு. இன்றைக்கு சோனியாவின் முந்தானை முடிச்சுக்குள் பதுங்கியிருந்துகொண்டே கருணாநிதி திராவிட சுலோகத்தை கூறி மக்களை ஏமாற்ற முடிகிறதென்றால். அன்றைக்கு கருணாநிதியில் கபட தந்திரம் எப்படியிருந்திருக்கும்.

 47. சிவாஜி பற்றிய வினவின் கருத்துகள் அத்தனையும் பச்சையான உண்மைகள்,,அவர் தமுமு தொடங்கி ஜானகி அம்மையாருடன் சேர்ந்து போட்டியிட்டு மரண அடிவாங்கினார்,,ஆனால் அவரபிடித்தார் ஜெயலலிதா,,,அது மட்டும்ல்ல செவாலியர் சிவாஜி என்று புலங்காகிதம் அடைகிறார்களெ அதை அவருக்கு வாங்கி தரைங்குள்ள(பிரன்ஸ்)தமிழ் சங்கங்கள் எத்தனை நடை நடந்தார்கள் என்பது இங்குள்ளவர்களுக்கு தான் தெரியும்,,எதோ அவரின்நடிப்பற்றளை பார்த்து தந்துவிட்டார்கள் என்று ,நினைப்பவர்கள்தான் அதிகம்,,வினவின் கட்டுரைகளால் கமுனிசம் ஆட்சியைப் பிடித்துவிடாது என்பது எல்லோருக்கும் தெரியும் ஏன் வினவுக்கே கூட தெரியும் அனால் அதற்காக அவர் சொல்லும் சில உண்மைகள் எல்லாம் பொய்யாகிவிடாது

 48. சிவாஜி யை நடிகராக மட்டும் பாருஙல்….

  வேன்டுமென்ரெ அவர் மேல் ஜாதி சாயம் பூசாதீர்கல்

 49. கைய்யா…
  எஙக மஞச(இப்ப)
  கறுப்பு சட்டைக்கு
  னிகரா எவனாலை வேசம் கட்ட முடியும்?

 50. எனக்கு என்னமோ… வினவின் தொடர்ச்சியான கட்டுரைகள் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்தி மலிவான விளம்பரம் தேடுவது போல் உள்ளது.

 51. மணிமேகலையா குஷ்புவும்!! பெரியாராய் ‘தகடு’ தகடு’ சத்யராஜிம் நடிக்கையில் … பெரியாருக்கு பெருமையா??? இல்லை சிவாஜி நடித்தால் ப்ரியாருக்கு பெருமையா….??

 52. பேனா கிடைச்சாஎன்ன வேணும்னாலும் எழுதுவீங்களா.அவர் மேல உங்களுக்கு அப்படி என்ன காட்டம்.கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பு.அதுக்கு நாலு பேரு ஜால்ரா , ஒருவரை பற்றி கேவலமாக எழுத உங்களுக்கு யார் உரிமை தந்தார்கள்.இதனால் எத்தனை பேரின் மனம் புண் படும் என்று நினைக்க தெரியாதா.நல்ல மனம் இருந்தால் யோசித்து எழுதுங்கள்

 53. நடிகர் திலகம் சிவாஜி ஒரு தலை சிறந்த நடிகர்.
  நாடக மேடையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர்களும், ரசிகர்களும் மாறி வந்த வேளையில் அவர் இரண்டு துறைகளிலும் நடித்ததால் அவரது நடிப்பினால் நாடக தன்மையின் தாக்கம் சிறிது இருந்தது. இது அவரது தவறு என்று சொல்ல முடியாது. அந்த கால ரசிகர்களும் அவரது நாடக தன்மையுடனான நடிப்பை பாராட்டி மகிழ்ந்ததால் அவரும் அந்த நடிப்பை தொடர்ந்தார். மார்லன் பிராண்டோ போன்ற நடிப்பை அவரால் நடிக்க இயலாது என்று கூறுவது வேடிக்கையானது. அந்த சிறந்த கலைஞனுக்கு எல்லா வித நடிப்பும் இயல்பாகவே வந்தது.

  உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன். சோ வும் சிவாஜியும் ஒரு படத்தின் நடித்திருந்தபோது சோ சிவாஜியின் மிகை நடிப்பை கிண்டல் செய்து கொண்டிருந்தார். மார்லன் பிராண்டோவாக இருந்தால் நீங்கள் இப்போது நடித்துள்ள காட்சியை subtle acting செய்து வேறு விதமாக நடித்திருப்பார் என்று சிவாஜியை சீண்டினார். அப்போது சிவாஜி அதே காட்சியை மிகை நடிப்பில்லாமல் ஹாலிவுட் பாணியில் சோ வுக்கு மீண்டும் நடித்து காட்டினார். ஆச்சரியம் அடைந்த சோ ஏன் இது போல நடிப்பை நீங்கள் உங்கள் படங்களில் காட்டவில்லை என்று கேட்டார். அதற்கு சிவாஜி சொன்னார் – மக்கள் இப்போது தான் நாடகங்களில் இருந்து திரைக்கு மாறி உள்ளனர். அதனால் நடிப்பு என்றாலே மிகை நடிப்பு தான் அவர்களுக்கு தெரிந்தது. நீ விரும்புவது போல நான் நடித்திருந்தால் நீ மட்டும் தான் பார்த்திருப்பாய். சாதாரண மக்கள் சிவாஜிக்கு நடிக்க தெரியவில்லை என்று கூறிவிடுவர் என்று கூறினார். எனக்கு தனிப்பட்ட வகையில் சோ வை பிடிக்காது. ஆனால் அவரின் மூலம் சிவாஜியின் நடிப்பில் இருந்த நமக்கு தெரியாத ஒரு பரிமாணம் இருந்ததை நான் அறிய முடிந்தது.

  ஒரு நல்ல கலைஞனை, சிறந்த நடிகரை நாம் இவ்வாறு இகழ்வது சரியல்ல.
  தமிழர்களாகிய நாம் எல்லாம் நண்டுகள் போல. நம்மில் ஒருவர் முன்னேறினால் அதை நம்மவர்களே தாழ்த்தி பேசுவர். அரசியலில் அவர் தோற்றிருக்கலாம். அனால் நடிப்பில் அவர் ஒரு இமயம் தான். தற்கால இளைஞர்களுக்கு சிவாஜி வாழ்ந்த காலம் தெரியாது. சிவாஜி ஏன் அப்படி நடித்தார் என்பது தெரியாது. சும்மா வலைதளங்களில் வரும் போஸ்ட் களை பார்த்து சுலபமாக எல்லோரையும் இகழ்ந்து கமென்ட் செய்து கொண்டிருப்பார்கள். வினவும் இதில் கூட்டு சேர வேண்டாம்.
  இது போன்ற தரம் தாழ்ந்த கட்டுரைகளை, வினவு தவிர்ப்பது நல்லது.

  சிவாஜியை ஒரு நடிகராக மட்டும் பாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க