Friday, September 22, 2023
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 03/10/2012

ஒரு வரிச் செய்திகள் – 03/10/2012

-

செய்தி:  இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

நீதி: இழந்த விளம்பரங்களை சரிகட்ட அண்ணா ஹசாரேவைத் தேடி ஊடகங்கள் விரைந்தன!

______

செய்தி: இந்தியாவில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களை புதன்கிழமை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். முக்கிய தொழில் கூட்டமைப்புகளான அசோசேம், எஃப்ஐசிசிஐ, சிஐஐ ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்கின்றனர்.

நீதி: பிறந்த வீட்டிற்கு செல்லும் ஒரு மணப்பெண்ணின் மகிழ்ச்சியை எங்கனம் விவரிக்க முடியும்?

_______

செய்தி: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா கட்டித் தருவதாக உறுதியளித்த 50 ஆயிரம் வீடுகள் மூன்று அண்டுகளில் கட்டி தரப்படும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதர் அசோக் கே.காந்தா உறுதியளித்தார்.

நீதி: இடித்தவர்களே  கட்டித்தரும் இந்த வீடுகளில்தான் ஈழத்தமிழ் விடுதலை வேட்கையை சிறை வைக்க போகிறார்கள்!

__________

செய்தி: சமூக சேவகரும், அண்ணா ஹசாரேவின் வலது கரமாகச் செயல்பட்டவருமான அரவிந்த் கேஜ்ரிவால், அரசியல் கட்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.

நீதி: பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தேர்தல் நடத்தினால் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியே கேஜ்ரிவால்தான்!

_________

செய்தி: “யார் வேண்டுமானாலும் சில நிமிடங்களில் கட்சி தொடங்கி விட முடியும். எத்தனை பேர் ஆதரவளிக்கிறார்கள், கட்சியில் இணைகிறார்கள் என்பதுதான் முக்கியம். நான் கட்சி தொடங்கினால் குறைந்தது 400 உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவேன்” பாபா ராம்தேவ்.

நீதி: ஃபோன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு!

_________

செய்தி: கடந்த ஆண்டில் மொத்தம் 1.35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் 2-வது(15,963) இடத்தையும் பிடித்தன.

நீதி: புரட்சித் தலைவியின் நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை!

________

செய்தி: “எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகளின் மிரட்டலுக்குப் பயந்து, சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, மத்திய அரசு திரும்பப் பெறாது,” என, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நீதி: பாரதத் தாயை ரேட் போட்டு வித்தா வித்ததுதான், மறு பேச்சுக்கு இடமில்லை!

________

செய்தி: ஊழல் புகார்களால் சிறை சென்று வந்த தி.மு.க. மாஜி அமைச்சர் ராஜா மற்றும் காங்கிரஸ் மாஜி அமைச்சர் சுரேஷ் கல்மாடி ஆகியோர் மீண்டும் பார்லிமென்ட் கமிட்டியில் இணைந்துள்ளனர். எரிசக்திதுறை கமிட்டியில், ராஜாவுக்கும், வெளிவிவகாரத்துறை கமிட்டியில் கல்மாடிக்கும் உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டடுள்ளது.

நீதி: இன்னும் எத்தனை நாளைக்கு கெட்டவர்களாக காண்பிப்பது!

_________

செய்தி: சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசின் விளம்பர தூதராக, பாலிவுட் நடிகை, வித்யா பாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சுகாதாரமான சுற்றுச் சூழல் அவசியம் என்பதை வலியுறுத்தும், “நிர்மல் பாரத் யாத்திரை’யை, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷும், நடிகை வித்யா பாலனும் இன்று, துவக்குகின்றனர்.

நீதி: அப்படியே காங்கிரசிலும், பாலிவுட்டிலும் இருக்கும் அழுக்கை பொன்வண்டு சோப்பு போட்டு தேய்க்க முடிவு செய்துள்ளனர்!

_________

செய்தி: காந்தியடிகளின், 144வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மெரீனாவில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நீதி: தனது கழிப்பிடம் பாழ்படுத்தப்பட்டதைக் கண்டு காக்கைகள் கதறல்!

_________

செய்தி: ஐ.நா.,சபை பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக இந்திய எம்.பிக்கள் குழு நியூயார்க் சென்றுள்ளது.

நீதி: மக்கள் பணத்தில் மஞ்சள் குளி – லேடஸ்டு எபிசோட்!

_________

செய்தி: கன்னியாகுமரியில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையருக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பிராமணர் சங்க அட்ஹாக் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

நீதி: தென் தமிழ் நாட்டை நாசமாக்க அணுவுலை மட்டும் பத்தாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல!

  1. செய்தி: கடந்த ஆண்டில் மொத்தம் 1.35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் 2-வது(15,963) இடத்தையும் பிடித்தன புரட்சித்தலைவனுக்குப்பிறகுபுரட்சித்தலைவியின் அடிபிறாலாதபெரிய புரட்சிகரமான ஆட்சி செயலலிதாவும்,ஒட்டுமொத்த அ.இ.அ.தி.மு.கவும் காரணம் மாநில,மாவட்ட,ஒன்றிய,கிராம,தெரு வரைக்கும் கட்சிப்பதவியில்,பொறுப்பில் உள்ளவர்கள் காரணம்.நாசமா போகட்டும்,கொள்ளைல போகட்டும்,விளங்காமல் போகட்டும்,ஒழிந்து போகட்டும்,அழிந்து போகட்டும்,சிந்தனைச்செல்வியும்+சீரழிந்த கூட்டமும் த்ராவ்டா …ஒடு..ஓடி…ஒழிந்துவிடு.

  2. இன்றைய ஆளும அடிமைகளின் செய்திகளுக்கு அருமையான, அருத்தமான, பொருத்தமான, நேர்மையான நீதியை வழங்கிய வினவுக்கு வாழ்த்துக்கள்.

  3. //
    செய்தி: இந்தியாவில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களை புதன்கிழமை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். முக்கிய தொழில் கூட்டமைப்புகளான அசோசேம், எஃப்ஐசிசிஐ, சிஐஐ ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்கின்றனர்.

    நீதி: பிறந்த வீட்டிற்கு செல்லும் ஒரு மணப்பெண்ணின் மகிழ்ச்சியை எங்கனம் விவரிக்க முடியும்?

    //

    மன்மோகன் சிங்க விட இவன் ரொம்ப மும்முரமா இருக்கான் இதுல !

  4. செய்தி: காந்தியடிகளின், 144வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மெரீனாவில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    நீதி: தனது கழிப்பிடம் பாழ்படுத்தப்பட்டதைக் கண்டு காக்கைகள் கதறல்!

    _________

    Can we expect the same comment on Apr 14 ??

    நீங்களும் மதிக்கும் அம்பேத்கர் சிலை உட்பட அனைத்து சிலைகளுமே பறவைகளின் கழிப்பிடங்கள் தான்..

    Do think twice before you write this kind of comments..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க