Saturday, August 20, 2022
முகப்பு செய்தி 42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம்!

42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம்!

-

15ரூபாய்-சம்பளம்பாரதிய ஜனதா ஆளும் கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளிகளாக பணியாற்றும் அக்கு, லீலா ஆகிய பெண்கள் கடந்த 42 ஆண்டுகளாக வாங்கும் மாதச் சம்பளம் வெறும் 15 ரூபாய் தான். 2001 இல் கர்நாடக மாநில நிர்வாக ஆணையத்தை அணுகி தங்களது பணியை வரைமுறை செய்து நிரந்தரமாக்கிட கோரிய காரணத்துக்காக மாநில கல்வித்துறை இவர்களுக்கு கொடுத்து வந்த பதினைந்து ரூபாயையும் தற்போது நிறுத்தி விட்டது.

இவர்களுக்காக போராடி வரும் உடுப்பியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரவீந்திரநாத் ஷான்பாக்    க‌டந்த செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்தார். மாநில நிர்வாக ஆணையம், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என அனைத்துமே இப்பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த போதும், தற்போது அவர்களுக்கு வயதாகி விட்டதால் பணிபுரியும் தகுதியில் இல்லை எனக் கூறி பணி வரைமுறை செய்ய மாநில அரசு மறுத்து விட்டது என்கிறார்.

2003 இல் மாநில நிர்வாக ஆணையம் 90 நாளில் பணியை நிரந்தரமாக்குங்கள் என மாநில அரசுக்கு உத்திரவிட்டது. 2004 இல் உயர்நீதி மன்றம் சம்பளத்தை உடனடியாக கொடுக்க உத்தரவிட்டது. ஆனால் அரசு நயா பைசா கூட அவர்களுக்கு தரவில்லை. எனினும் இது வரையில் இந்த இருவரும் இணைந்துதான் அப்பயிற்சி நிறுவனத்தில் உள்ள 21 கழிப்பறைகளைத் தினந்தோறும் சுத்தம் செய்து வருகின்றனர். 2005 இல் சிறப்பு விடுப்பு மூலம் சம்பளம் தருவதிலிருந்து விடுபட நினைத்து மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் மனுச் செய்தது. அங்கும் அப்பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்து விட்டது. நீதிமன்றத்தின் உத்திரவை மயிரளவுக்கு கூட கர்நாடக அரசு மதிக்கவில்லை. எந்த நீதிமன்றத்துக்கும் இது நீதிமன்ற அவமதிப்பாகத் தெரியவுமில்லை.

அதே கர்நாடக மாநிலத்தில்தான் சுரங்க மாபியாக்களான ரெட்டி சகோதரர்களுக்கு ஆதரவான ஆட்சி நடக்கிறது. கைதான ரெட்டிகளுக்கு ஜெயிலில் மாப்பிள்ளை விருந்து நடக்கிறது. கிங் ஃபிஷர் மல்லையாவின் ஊதாரித்தனத்தை உலகமே அறிந்த பிறகும் அவருக்காக வங்கிகளிடம் வக்கலாத்து வாங்குகிறது அரசு. விமான‌ சேவைத் துறையில் ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளை நுழைய‌ அனும‌தித்து ம‌ல்லையாவை மீட்க‌ முனைகிறார்க‌ள்.

அந்த மாநிலத்தில் தான் அக்கு, லீலா என்ற‌ மூதாட்டிக‌ள் பதினைந்து ரூபாய்க்கு க‌ழிவ‌றைக‌ளை சுத்த‌ம் செய்து கொண்டிருக்கிறார்க‌ள். இந்தியா வல்லரசு என்பதன் பொருள் இதுதானோ?

படிக்க

படம் நன்றி – இந்து நாளிதழ்

 1. இது போன்ற நிகழ்வுகள் நீதித்துறையிலும் நம்பிக்கை இழக்க செய்கின்றன. நீதி மன்றங்கள், இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி, அவர்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும்படி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

 2. We read about Asuras in Puranas.What about Karnataka Govt and its officers,who have filed a Special Leave Petition in SC in 2005 to deny regularisation of the service of these poor ladies.The officer concerned who had recommended filing of SLP either does not have brain or he is stone hearted.BJP leaders used to speak like Uthama Puthirargal,but in actual practice,they are worse than fictional Asuras.The PM aspirant Modi tells that malnourished poor ladies in Gujarat are weak because they are figure conscious and malnourishment is bound to be there since Gujaratis are vegetarians.Apart from not getting enough food grains,these ladies walk many miles every day to fetch water.They do not have toilet facilities also.Infant mortality is highest in Gujarath. Almost all PM aspirants from states are incompetent to run their own states.Karnataka leads in not obeying courts.

 3. //நீதிமன்றத்தின் உத்திரவை மயிரளவுக்கு கூட கர்நாடக அரசு மதிக்கவில்லை. எந்த நீதிமன்றத்துக்கும் இது நீதிமன்ற அவமதிப்பாகத் தெரியவுமில்லை. //

  உண்மைதான்.
  கர்நாடக அரசு மீண்டும் மீண்டும் நிருபித்து கொண்டுதான் இருக்கிறது நீதிமன்றத்தின் உத்திரவை மயிரளவுக்கு கூட மதிக்கமாட்டோம் என்று.கழிப்பறை ஊழியர்க்காண தீர்ப்பை கூட என்று எண்ணும் போது பிறகு காவேரி எங்ஙனம்? பிறகு நீதி? மன்றம்? அரசு? அங்கம்?

 4. வினவு … கக்கூஸ கழுவரத்துக்கும்.. இந்தியா வல்லரசு ஆவரதுக்கும் என்ன சம்மந்தமடா …. உலகத்துல எல்லா நாட்டுலேயும் இது நடக்கறதுதான்… வேலய வுட்டுட்டு வேற வேலைக்கு போகவேண்டியது தானே… எதுக்கு 15 ரூபாய்க்கு வேலை செய்யிங்க……

  • கக்கூஸ் கழுவுறவங்களுக்கு கூட ஒழுங்கா சம்பளம் தர முடியாத அரசு எப்படி வல்லரசா இருக்க முடியும்னு கேட்கிறாங்க இந்தியன்.

 5. கன்டிப்பா அவுஙக இவ்வலவு சம்பலதிர்க்கு வெல பர்ததது அவர்கலுடய சொன்ந்த விருப்பம் இருந்தாலும் நேதி மன்ட்ரம் சொல்லியும் மனிதாபிமானமும் இல்லாமல் இப்படி பன்ட்ர ஜென்மஙகல் சுத்த waste

  • சாதியின் பெயரைச்சொல்லி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளமே இல்லாமல் ஒடுக்கி வந்திருக்கிறார்களே, அது சரியா தவறா? இன்றும் அது தொடர்கிறதே அது சரியா தவறா?

 6. இந்திய அரசியல்வியாதிகளை நீதித்துறையின் சீர்கேடுகளை அதிகாரிகளின் முறைகேடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டுமானால் பாராளுமன்றத்தில் விவாதிப்பதிலோ ஆட்சி மாற்றத்தினாலோ ஒன்றுமே நடந்துவிடப்போவதில்லை.தண்டனைச்சட்டத்தில் அரசியல் அமைப்புச்சட்டத்தில் தலைகீழான மாற்றம் நிகழவேண்டும் அதுவரை காந்திகாலத்திலிருந்து இன்றுவரை தொடரும் சுற்றுவட்டம் அசிங்கமாக தொடர்ந்துகொண்டேயிருக்கும், ஏழைகள் ஏழைகளாகவும் முதலைகள் திமிங்கிலங்களாகவும் வளர்ந்துகொண்டிருப்பர் இன்றைய பாராளுமன்றம் நேரு குடும்பத்தையும் அவர்களது அடிவருடிகளையும் ,கருணா, மம்தா, மாயாவதி, லல்லு, முலாயம்,போன்ற சிற்றரசுகளையும் வாழவத்துக்கொண்டிருக்கும் ஏழைகள் வானத்தை பார்த்து கையை சூப்பி பழங்குடிகளாக வறுமையில் உளன்று மருணிக்கவேண்டியதுதான் சிற்றரசுகளும் பேரரசும் கூட்டுச்சேர்ந்து இன்னுமொரு ஆப்கானிஸ்தானை உருவாக்கும் காலம் நாளை காணமுடியும்.

 7. Indian says that those poor ladies should have gone to some other job.Yes Indian.I appreciate your empathy.They will sit for campus interview and go for some other employment.Now,you read the world history very deeply and say how many such incidents are happening in other countries.We are keenly waiting for your answer.Do not go behind news like Kareena Kapoor”s wedding and the costume she is going to wear for the occasion..

 8. இப்படிப்பட்ட கேடுகெட்ட பதர்களை ஆட்சியில் விட்டுவைக்கும் வரை மத்தியிலும் மாநிலங்களிலும் உழைக்கும் எழை மக்களுக்கு எக்காலமும் ஆபத்து.இவர்கள் எல்லோரயும் மக்கள மக்கள்மன்றத்தில் நீதிகேட்டு நிற்கவைப்பர்.அந்தநாள் விரைவில் வரும். வரவேட்ண்டும்.எலலோரும் ஒன்றுபட்டால் முடியாதது எது?

 9. பிராக்டிகலாக யோசிப்போம்.

  42 ஆண்டுகளுக்கு வெறுமனே மாதம் 15 ரூபாய் சம்பளத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். இதையும் செய்து பல வீடுகளிலும் வேலை செய்து பணம் ஈட்டினால்தான் சாப்பாடே. அப்பணம் போதுமானதா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ய்டவர்களே கூற இயலும்.

  போதுமானதாக இல்லாதிருந்து அப்படியும் வேலை செய்தால் என்ன செய்ய முடியும்? சாதாரண வீட்டு, வயல் வேலைகளுக்கே ஆள் கிடைக்காத நிலையில் இவ்வாறு இவர்கள் இருந்த்து நம்ப முடியவில்லை.

  சித்தாள் வேலைக்கே போயிருந்தாலும் அதிகம் பணம் கிடைத்திருக்குமே.

  ஆகவே இக்கட்டுரையில் பொலிடிகல்லி கரெக்ட் ஆக பேசும் பிரயத்தினமே தெரிகிறது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  • நியாயம் என்றாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இருவரும் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்களே தவிர மாதம் ரூ.15 சம்பளத்தை நம்பி உயிர் வாழவில்லை…

   ஆனால் இவர்களுக்கு மாதம் ரூ.15 க்கு மேல் சம்பளம் கொடுத்தால் காவிரியும், அரசுக் கருவூலமும் வறண்டு போய்விடும் என்று அஞ்சி கர்நாடக அரசு உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றங்களின் ‘பொலிட்டிகல்லி கரெக்ட்’ தீர்ப்புகளை மதிக்கவில்லை போலிருக்கிறது…

 10. Dont Raaghavan,why are you only blaming the poor ladies?Whether the Govt is a welfare state or not?What political gain is going to be there when writing about the stone hearted politicians and govt servants?Whether the essay is pricking your heart or not?Because media has blown up the issue,one Karnataka minister has assured to take remedial steps.Today”s Hindu carries that news.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க