Sunday, April 18, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி மதரஸாக்களின் காட்டுமிராண்டித்தனம்!

மதரஸாக்களின் காட்டுமிராண்டித்தனம்!

-

மதரசா‌டந்த சனிக்கிழமை அதிகாலையில் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மேடக் நகரத்தின் இந்திரா நகரில் உள்ள மூத்த சிவில் நீதிபதி சந்திரசேகர பிரசாத் தனது வீட்டுக் குளியலறையில் ஏதோ சத்தம் கேட்கவே  என்னவென்று அறிய எட்டிப் பார்க்கிறார். ஒரு 12 வயதுச் சிறுவன் கால்களில் இரும்புச் சங்கிலியால் விலங்கிடப்பட்டு கீழே விழுந்து கிடக்கிறான். அதிர்ச்சியடைந்த நீதிபதி அவனை எழுப்பி யார் என்ன என்று விசாரிக்கிறார்.

அவ‌னது பெயர் மகபூப் என்றும், நீதிபதியின் வீட்டு மதிலை ஒட்டி அமைந்துள்ள காஸி உலூம் மதரசா பள்ளியில் அரபி படிக்க அவனது பெற்றோர்கள் அவனை அனுப்பி வைத்தார்கள் என்பதும் தெரிய வருகிறது. அரபி படிக்க பிடிக்காமல் வீட்டுக்கு தப்பி ஓட இருமுறை முயன்றானாம். அப்படி தப்பி விடாமல் இருக்க அவனை இரும்புச் சங்கிலியால் கடந்த 15 நாட்களாக பூட்டி வைத்துள்ளனர் மதரசா நிர்வாகத்தினர். அங்கிருந்து தப்பி நீதிபதியின் குளியலறைக்குள் வந்து கிடந்தவன் தனது ஆசிரியரான கலீல் அகமது, தலைமையாசிரியர் மவுலானா பர்கத் ஆகியோர் தான் இவ்வாறு செய்தனர் என நீதிபதியிடம்  கூறியுள்ளான்.

இதனைக் கேட்டு அதிர்ந்த‌ நீதிபதி உடனடியாகக் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், மருத்துவர்களை அழைத்திருக்கிறார்.  சங்கிலி அகற்றப்பட்டது. நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? ஒரு சிறுவனை எப்படி சங்கிலியால் கட்டிப் போட்டு கல்வியைப் போதிக்க முடியும்? என்று கேள்விகளை எழுப்பினார் நீதிபதி.

ம‌தரசாவின் பொறுப்பாளர்கள் கலீல் அகமது மற்றும் மவுலானா பர்கத் ஆகியோரை கைது செய்யப் போவதாக போலீசார் கூறியுள்ளனர். அடிக்கடி பள்ளியை விட்டு மகபூப் ஓடியதால் அவனது பெற்றோர் சொன்னதால் தான் சங்கிலியால் பிணைத்தோம் என்று அவர்களிருவரும் கூறியுள்ளனர். சிறுவனுடன் பேசிய‌ உதவி ஆட்சியர் அவனை ஜகீராபாத்திலுள்ள உருது உறைவிடப் பள்ளியில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்திலும் கடந்த பிப்ரவரி மாதம் கொப்பல் பகுதியில் இவ்வாறு ஒரு சிறுவனை காலில் சங்கிலியுடன் யுனிசெப் அமைப்பினர் மீட்டனர். அப்போதும் பெற்றோர்கள் கூறியதால் தான் சங்கிலியால் பிணைத்தோம் என்றனர் மதரசா நிர்வாகத்தினர். சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி விட்டு மதரசாவின் பாதுகாவலர் மீது வழக்கு தொடுத்தார்கள். இந்த‌ இரு சிறுவ‌ர்க‌ளின் கால்க‌ளிலும் இரும்புச் ச‌ங்கிலியால் காய‌ம் ஏற்ப‌ட்டு இருந்த‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

இசுலாமிய‌ க‌ல்வி நிறுவ‌ன‌மான‌ ம‌த‌ர‌சாவில் அர‌பியை க‌ற்க‌  க‌ட்டாய‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு எந்த சமூக அடிப்ப‌டையும் இல்லை. இந்தியாவில் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கும் இசுலாமிய மக்களில் அதுவும் ஏழைகளாக இருப்போரை இப்படி மதவாதக் கல்வி பக்கம் தள்ளிவிடுவதால் எந்த நன்மையும் இல்லை. வாழ்க்கைப் பிரச்சினைகைள எதிர்கொண்டு வாழ்வதற்கு இசுலாம் உள்ளிட்ட எந்த மதமும் தீர்வு அளிக்கப் போவதில்லை. இந்நிலையில் இந்த ஏழைச் சிறுவர்களை இப்படி கட்டிப் போட்டு கட்டாயப்படுத்துவது அநீதியாகும்.

இன்னொரு புற‌ம் க‌ட‌ந்த‌ ஆண்டு ம‌ட்டும் இந்தியாவில் குழ‌ந்தைக‌ளுக்கெதிரான‌ குற்ற‌ச் செய‌ல்க‌ள் 24 ச‌த‌வீத‌ம் உய‌ர்ந்துள்ள‌தாக‌ தெரிவிக்கிற‌து ஒரு ஆய்வு. இதன் கீழ் 33,100 வ‌ழ‌க்குக‌ள் ப‌திவுசெய்ய‌ப்ப‌ட்டுள்ளன‌. உபி ம‌ற்றும் டெல்லியில் தான்  குழ‌ந்தைக‌ளுக்கெதிரான‌ குற்ற‌த்தின் அள‌வு அதிக‌மாக‌ இருக்கிற‌து. ஆந்திர‌மும்  5 வ‌து இட‌த்தில் இருக்கிற‌து.  குழந்தைகளுக்கெதிரான வன்முறையில் சாதி, வர்க்கம் மட்டுமல்ல மதமும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்பதை மேற்படிச் சம்பவம் காட்டுகிறது.

படிக்க

 1. இந்த சம்பவம் உன்மையாக இருந்தால் கன்டிக்கதக்கது.ஆனால் ப்த்த்ரிகையில் வரும் தகவல்கலையப்படிநம்புவது?

 2. மடரசாக்கள் மிகுந்த கண்டிப்புடன் இருப்பது உண்மையே. வேலூர் பகுதியிலுள்ள அனைத்து மடராசாக்களிலும் இதுதான் நிலைமை. சிறு வயதில் அங்கு சேர்க்கப்பட்ட எனது மைத்துனன் (15வயதில்)இப்படித்தான் சுவரேரி குதித்து தப்பித்து ஓடிவந்தான். ஆனால் இப்போது அவன் அதே மதராசாக்களின் கண்டிப்புடன் கூடிய தந்தையாக இருக்கிறான் 🙂

 3. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது….யாரையும் கட்டாயப்படுத்தி கற்கவைக்க முடியாது….இவ்வாறு செய்பவர்கலின் மீது தக்க நடவடிக்கை எடுக்க்வேண்டும்….

 4. பள்ளிகூடங்களில் கூடத்தான் இதே போல் சம்பவம் அரங்கேரீருக்கிறது எனது பள்ளியில் ஆசியர்கள் மானவனர்களை கொடுமைபடுத்திய சம்பவங்கள் பல உண்டு ஆகையால் இச்சம்பவம் அச்செயல் செய்தவர்களை சாரும் மதத்தை குறிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

 5. அவசியமான பதிவு!

  இருந்தாலும் பரபரப்புக்காக இப்படியொரு தலைப்பிட்டு பீதியை கெளப்பியிருக்க வேணாமே? 😉

 6. மதரசாவில் என்றல்ல, குழந்தைகளுக்கெதிராக நடக்கும் மனிதாபிமற்ற செயல் எங்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கதாகும்.

  ஆனால் இதுதான் கிடைத்த தருணம் என எண்ணி வினவு தன்னுடைய சரக்கை பின்வருமாறு விற்க வந்துள்ளது தெரிகிறது.

  //இந்தியாவில் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கும் இசுலாமிய மக்களில் அதுவும் ஏழைகளாக இருப்போரை இப்படி மதவாதக் கல்வி பக்கம் தள்ளிவிடுவதால் எந்த நன்மையும் இல்லை.//

  வினவுக்கு நன்மை இல்லை என்றால் மீதி எவருக்கும் நன்மை இல்லை என்ற திணிப்பு வினவு உருவாக்கும் கற்பனை.

  //வாழ்க்கைப் பிரச்சினைகைள எதிர்கொண்டு வாழ்வதற்கு இசுலாம் உள்ளிட்ட எந்த மதமும் தீர்வு அளிக்கப் போவதில்லை.//

  எந்த மதமும் தீர்வளிக்கிறதோ இல்லையோ ஆனால் இஸ்லாம் தீர்வளிக்கின்றது என்பதில் வினவு தளத்திற்கு தெரியாது என்றால் தெளிவாக தெரிவிக்கின்றோம்.

  மேலும் வாழ்க்கை பிரச்சனைகளை தீர்க்க வினவுக்கென்று தனியாக ஏதாவது தத்துவங்களை வரைந்து வைத்துள்ளது என்றால் அதையும் தெரியப்படுத்தவும். அதை ஒவ்வொன்றாக பரிசீலித்து ஏற்புடையதை ஏற்று எதிர்ப்புடையதை விலாவரியாக களைய தயாராக இருக்கிறேன். வினவு தயாரா?

 7. //வினவுக்கு நன்மை இல்லை என்றால் மீதி எவருக்கும் நன்மை இல்லை என்ற திணிப்பு வினவு உருவாக்கும் கற்பனை.//

  மடரசாக்களினால் நன்மை இவ்வுலகில் இல்லை சொர்க்கத்தில்தான்:)

 8. மற்ற மதத்தினரை விட இசுலாம் மதம் இத்தகைய விசயங்களில் ரொம்ப கண்டிப்பக இருக்கிண்ரட்கு.
  இத்தகைய கொடுமைகள் களையப் பட வேண்டும்.
  பெந்தெகொச்தேக்களை விட மோசமானவர்களாக இருக்கிறார்களே!

  பார்ப்பன மதத்தில் ஆயிரம் ஓட்டைகள் ! இங்கும் ஆய்ரம் ஓட்டைகள் ! மக்கள் தங்கள் பிரச்சினைகளை அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் பொழுட்கு தான் இவைகள் ஒழியும்! ஒழிப்போம்!

 9. மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பாடம் சொல்லிக் கொடுப்பது பெரும்பாலான இடங்களில் வழக்கத்தில் இப்போதும் இருக்கிறது. நான் மாணவனாக இருக்கையில் அரபிப் பாடம் மட்டுமல்ல, பள்ளிப் பாடம் படிக்க வரவில்லை என்றாலும் அவர்களைக் கட்டிப்போடும் கட்டை ஒன்றாகத் தான் இருந்தது. தற்போது சட்ட ரீதியாகவே மாணவர்களை துன்புறுத்துவது தவறாக ஆகி விட்டது. இப்போதும் இவை போன்றவை தொடர்வது வருத்தமே. ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே இப்படி செய்கிறார்கள் என்று சொல்ல இயலுமா? மதங்களை அதன் கட்டுப்பாடுகளை விமர்சிப்பது வேறு, பொத்தாம் பொதுவாக இந்த பிரிவு மக்களே இப்படித்தான் என்ற கருத்தை இருத்துவது வேறு. வினவு குழுவினர் அதில் அறிந்தவர்களே. மதரசாக்கள் தீவிரவாதத்தைக் கற்பிக்கின்றன என்று இந்துத்துவவாதிகள் சொல்லிச் செல்வதை போல எல்லா மதரசாக்களும் இப்படித் தான் என கருத்தை விதைப்பதாக இருக்க கூடாது. இப்போதும் படிப்பை பாதியில் விட்ட பெண்களுக்கு கல்லூரிப் படிப்பு, போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் உடன், அவர்களின் இஸ்லாமிய மார்க்கத்தையும் கற்றுக் கொடுக்க கூடிய மதரசா எமது சிறு ஊரிலேயே இருக்கிறது. கல்வி பெற இயலாத இஸ்லாமிய பெண்களுக்கு தனித் தேர்வர்களாக கல்வி பெரும் வாய்ப்புகளை இப்போது வழங்கி இருக்கும் மாற்று வழியும் அவைதான் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். கல்வி கற்க விரும்பாத ஒரு மாணவனை கட்டாயப் படுத்தினார்கள் என்பதற்காக மொத்தமும் தவறென்று சொல்லாதீர்கள்.

  • கரையான் அவர்களே !
   வினவு அப்படிப்பட்டவர்கள் அல்ல ! சென்னையில் மயிலாப்பூரில் இயங்கும் விவேகனந்தா கல்லூரி இப்படி தான் மாணவர்கள் காலையில் தியனம் மற்றும் பஜனைகளில் கலந்த்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு விடுதியில் பல்வேறு கொடுமைகளைநிகழ்த்தியது.
   அதை எதிர்த்து போராடியவர்கள் தான் இவர்கள் !
   வினவு !
   அந்த கட்டுரை இருந்தால் துணை இணைப்பாக இங்கு தரவும் !
   மேலும் ஒரு கட்டுரை ஒரு மதத்தினரை பற்றி எழுதினால் ஏன் மத்த மதம் சுத்தமா? என்று தான் பலர் கேள்வி எழுப்புகிண்றனர் ! அதை விடுத்து கட்டுரை கொணரும் செய்தியில்நின்று சரியா தவறா என விவாதிப்பட்குநன்றாக இருக்கும்.

 10. இஸ்லாமியர்களின் உளவியலையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மொத்த வேதத்தையும் மனனம் செய்து வைத்திருப்பதன் மூலமே உலகம் முழுவதும் ஒரே மாதிரியான குரானாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக நம்புகிறார்கள். ஊரில் ஒருவராவது அப்படி இருக்க விரும்புகிறார்கள். அவர்களின் வேதமானது அவர்களுக்கு நன்மை தீமையை விளக்கும் சட்டப் புத்தகம், வாழ்க்கை நடைமுறை தானே அன்றி தொழில்கல்வியை கற்றுக் கொடுக்கும் புத்தகம் அல்ல. அதை வைத்து உலகில் எப்படி பிழைப்பது என்ற கேள்விக்கு அவர்களின் பதிலும் அதுவாகத் தான் இருக்கிறது, “குரானைக் கொண்டு பிழைப்பு நடத்தக் கூடாது” . (குரானைக் கொண்டு பிழைப்பு நடத்தும் புரோகித ஆலிம்சாக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்) . குரானைக் கற்றுக் கொள்வதும், அதன்படி நடப்பதும் அவர்கள் நம்பும் மரணத்திற்கு பின்னான வாழ்க்கைக்காகவே,. வன்முறை தான் தவறு, ஒருவர் தான் சார்ந்த நம்பிக்கையை தன் குழந்தைக்கு கற்றுத்தருவது எவ்விதத்தில் தவறாகும்? பதினெட்டு வயதுக்குப் பின் அக்குழந்தைக்கு தன் வழியை தேர்ந்தேடுக்க் முழு உரிமை இருக்கையில் கட்டாயப்படுத்துவது வேண்டுமானால் சட்டத்தின்படி குற்றமாகலாம்.

  • இந்த உலகும் சமூகமும் பல்வேறு மாறங்களுக்கு உள்ளாலி வருகிறது. அவற்றை எல்லாம் சட்டங்களும் மக்களும் உணர்ந்து மாறி வருகின்றனர். அவ்வாறு மதக் கொள்கைகளும் மறுவாசிப்பு செய்யப் படுகின்றனவா?
   மார்க்சியம் கூட லெனினியமாக, மாவோவியமாக ஒவ்வொருநாட்டின் போக்கிற்கு ஏற்ற படி மாற்றம் பெறுகிறட்கு !
   குர்ரான் அவ்வாறு செய்யப்பட்டுள்ளதா ? இல்லை எங்கும் ஒன்றே தானா ?

 11. இவர்கள் ஏன் அரசாங்க பள்ளிகளில் படிக்க கூடாது ? பெற்றோர்களுக்கு மதத்தை கட்டி காக்க வேண்டும் என்ற கொள்கை தவிர வேறொன்றும் இல்லை. அவர்களுடைய சமூகத்தில் மதம் தான் முக்கியம் . மற்றவை எல்லாம் அப்புறம் தான்.
  நான் அரசாங்க பள்ளியில் தமிழ் வழியில் படித்து இன்றைக்கு நல்ல நிலைமையில் உள்ளேன். என்னுடன் பயின்ற இசுலாமிய நண்பர்கள் , வெள்ளி மதியம் தொழுகைக்கு எழுந்து சென்று விடுவார்கள். கணக்கு பாடத்தை விட இறைவன் முக்கியம். இதனை அவர்கள் சமூகம் பாராட்டுகிறது.

 12. அடித்தால் படிப்பான். கட்டிப் போட்டால் கட்டுப்படுவான் என்று இருந்தால் எல்லோருமே படித்தவர்களாக ஆகியிருக்க வேண்டும். கட்டுப்பாடானவர்களாக மாறி இருக்க வேண்டும். சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் அடி வாங்காதவர்களே இருக்க முடியாது. (இப்போது வேண்டுமானால் குழந்தைகளை அடிப்பது சட்டப்படி தவறு என்று இருக்கிறது. ஆனால் நாங்கள் எல்லாம் எவ்வளவு அடி வாங்கியிருக்கிறோம். நாங்கள் என்ன மன்னிக்கவும் நான் என்ன படிப்பில் கில்லாடியாகவா ஆகிவிட்டேன்? இல்லையே)

  மதம் சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி, பள்ளிக் கூடமானாலும் சரி குழந்தைகளை பூவைப் போல் பார்க்க, கவனிக்க முதலில் இவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.

  • //மதம் சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி, பள்ளிக் கூடமானாலும் சரி குழந்தைகளை பூவைப் போல் பார்க்க, கவனிக்க முதலில் இவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.// – தமிழ்

   வினவு ஏற்படுத்துவதைப்போன்ற சீண்டலும் துவேசமும் திணிப்பும் இல்லாத மென்மையான – நல்ல கருத்து.

   கரையான் குறிப்பிட்டுள்ளதும் அறிவு பூர்வமான கருத்தாகும்.

   வினவு தன் கோட்டாவுக்காகவும், பரபரப்புக்காகவும் எதையாவது எழுதி கொளுத்திப் போட நினைக்கின்றது. தினமலம் அந்தப்பக்கம் என்றால் வினவு இந்தப்பக்கம். எப்போது ஒழியுமோ இந்த மத எதிர்ப்பு வெறி…!

 13. தம்பி மாரிமுத்து,

  இங்கே குர்ஆன் பற்றிய பேச்சுக்கே இடம் இல்லை. மதரசாக்கள் மற்றும் அவைகள் நடத்தப்படும் விதம் குறித்த பிரச்சனையே ஆகும்.

  இந்தியாவில் செயல்படும் மதரசாக்களில் 98 சதவிகித மதரசாக்களும் இலவசமாக (மாணவர்களிடமிருந்து ஊதியம் பெறாமல்) செயல்படுகின்றன. இப்படி மாணவர்களிடமிருந்து எதையும் பெறவில்லை என்ற காரணத்தினாலும், பெரும்பாலும் அங்கே சேர்ந்து மத கல்வி பெறும் மாணவர்கள் அனைவரும் ஏழ்மையை பின்னணியாக கொண்டவர்கள் என்பதாலும் நடத்துனர்களுக்கு சற்று இளக்காரம் ஏற்பட்டுவிடுவதால் இதுபோன்ற கொடுமைகள் நடைபெறுகின்றது.

  சமீபத்தில் மேற்கு வங்கத்தில் மாணவியை தனது சிறு நீரையே குடிக்க வைத்த கொடுமை ஒன்று அரங்கேறியபோது அதை யாரும் மத ரீதியாகவோ அல்லது கம்யூனிச சித்தாந்தமாகவோ, அல்லது நக்சலைட்டுகளின் கொள்கையாகவோ, கல்வி திட்டத்தின் புதிய அம்சமாகவோ பார்க்கவில்லை. மாறாக வார்டனின் கொடுமையாகவே (பார்த்தார்கள்) பார்க்க வேண்டும்.

  அதே போல்தான் இங்கும் (நடந்திருந்தால்) நடந்துள்ளதாகவே காண வேண்டுமே தவிர குரங்கு கையில் பூமாலை போல் வினவு கையில் மதரசா சிக்கிக்கொண்ட செய்தியாக ஆகக் கூடாது.

  • //That is professional studies,this is religious studies.//

   professional studies ல் யாருக்காவது மூத்திரம் தந்தால் அதை அப்படியே விட்டு விடவேண்டும். மாறாக மதரீதியான பாடசாலைகளிலுள்ள நிர்வாகிகள் தங்களது விபரம்கெட்டத் தன்மையை – மிருகத்தனத்தை வெளிப்படுத்தினால் அதை மத சாயம் பூசி விளம்பரம் தேடவேண்டும். அல்லது மதத்திற்கு எதிராக காட்டவேண்டும். அப்படியா சொல்கின்றீர்கள்?

 14. “மதரஸாக்களின் காட்டுமிராண்டித்தனம்!”
  என்னையா தலைப்பு இது. ஒரு மதரசாவில் நடந்த தவறுக்கு எல்லா மதரசா களையும் குற்றம் சொளுரிக. என்ன ஒரு மடமை தனம். ஆனால் எதோ தாங்கள் தான் அறிவாளிகள் என்பது போல் எழுதுவது

  • பாஸ் இது விதிவிலக்கெல்லாம் இல்ல, இதான் விதி, இந்தியாவில மட்டுமில்ல, பாகிஸ்தான், பங்க்ளாதேஷுன்னு எல்லா இடத்திலேயும் சங்கிலிதான், பதிவுல போட்டிருக்கும் படமே பங்க்ளாதேஷ் மதராசாதான். இதுல வெளிய வந்த்து-வராத்துன்னுதான் இருக்கே தவிர எங்கோ ஒரு இடம்முன்னு எல்லாம் கிடையாது. இந்த பதிவில் குறிப்பிட்ட ஆந்திர-கர்நாடக மதரசாவிலேயே பெற்றோர் சம்மதத்துடன் கட்டி வைத்தாக எழுதியிருக்கின்றனர், அந்த பகுதி ஜமாத்தெல்லாம் இதை தட்டிக்கேட்க முடியாம, இதை நிறுத்தமுடியாம வாயை டைட்டா மூடிகிட்டு தானே இருந்தாங்க, அதுக்கு என்ன விளக்கம் சொல்ல வறீங்க?

   மதரசாக்களின் இந்த வழிமுறையை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய வேண்டியதுதான் இஸ்லாமிய நம்பிக்கை உள்ள-இல்லாத ஜனநாயகவாதிகளின் வேலை. அதை விட்டுபுட்டு வினவு மேல பாய்ந்து ஒன்னும் ஆவப்போறதில்லை.

   • பாஸ், சோசலிச நாட்டில் இது போன்று ஏதேனும் தவறு ந்டந்திருந்தால், நடந்தால், நடக்குமானால் இதே போன்று கம்யூனிசத்தையோ அல்லது கம்யூனிஸ்டுகளையோ குற்றம் சொல்லுவீர்களா :))

    • அபு –
     மதரஸா=இஸ்லாம், மதரசாவை விமர்சனம் செய்வது இஸ்லாத்தை விமர்சனம் செய்வது போல,
     என்று சொல்ல வருகிறீர்களா? இப்படித்தான் தாலிபன்=இஸ்லாம், தாலிபனை விமர்சனம் செய்வது இஸ்லாத்தை விமர்சனம் செய்வது போல என்று ஒரு பெண்ணை சுட்டுவிட்டனர்.
     ஒப்புக்கொள்கிறீர்களா?

     இப்படி ஒரு தவறு எந்த அமைப்பில் நடந்தாலும், அது தெரிந்தும் அந்த அமைப்பின் தலைமை அமைதியாக இருந்தால் அதற்கு பொருள் அந்த அமைப்பு அதை அங்கிகரிக்கிறது என்பதே. எனவே அமைப்பை தாராளமாக விமர்சனம் செய்யலாம்.

     அந்த அடிப்படையில்தான் மேலே எழுதினேன். மறுபடியும் வலியுறுத்துவது என்னவென்றால் ஒரு அமைப்பு தவறு செய்யும் போது அந்த அமைப்பிலுள்ள ஜனநாயக சக்திகள் சமசரமில்லாமல் அதற்கு எதிராக போராட வேண்டும்.

     வெளியே படிக்கக்கிடைக்கும் தகவலின் படி இது போன்று பல மதரசாக்கள் செய்வதை தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு எதிராக போராடும் பிற ஜனநாயகசக்திகளுடன் இணைந்து போராட வேண்டியதே இஸ்லாமிய நம்பிக்கையாளர்களின் கடமை. நியாயப்படி அவர்கள்தாம் இந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்பதில் முந்திக்கொண்டிருக்க வேண்டும்.

     தாலிபனுக்கு முட்டுக்கொடுக்கிறோம் என ஜல்லியடிக்காமல் அப்பெண்ணை காப்பாற்ற பாகிஸ்தானின் ஜனநாயக சக்திகள் என்ன செய்கிறார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் http://www.reuters.com/article/2012/10/10/us-pakistan-schoolgirl-idUSBRE89909120121010?

 15. //here the whole religion has to take responsibility.// harikumar

  இதென்ன கருத்து? ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் ஏன் பொறுப்பேற்கவேண்டும்.??????

  இது மாதிரியான செயல் கூடும் என்று ஒட்டு மொத்த சமுதாயம் சொல்கிறதா? அல்லது அந்த சமுதாயம் சார்ந்த மதம் இவ்வாறு சங்கிலியால் பிணைக்க கட்டளையிடுகிறதா? விட்டால் வேறு என்னென்னமோ சொல்லி விடுவீர்களே…!

  தயவு செய்து முறையாக எழுதுங்கள். அல்லது மவுனமாகிவிடுங்கள்.

 16. ஊசி –

  //மதரசாவை விமர்சனம் செய்வது இஸ்லாத்தை விமர்சனம் செய்வது போல, என்று சொல்ல வருகிறீர்களா?//

  நான் சொல்லவும் இல்லை சொல்ல வரவும் இல்லை. நான் சொல்லா இந்த கருத்தை என் மீது திணிக்க நினைக்கு ஊசி, மதரசா என்றாலே இஸ்லாம் என்ற ரீதியில் கட்டுரை எழுதுவோரை விபரம் கெட்டவர்கள், அல்லது வெறியர்கள் என்று குறிப்பிடத் தயாரா?

  மொத்தத்தில் ஊசி குத்தப்போய், குழம்பிப் போயுள்ளது தெரிகிறது.

  அடிப்படையை புரியாமல் எதையாவது எடுத்து வைக்கவேண்டும் என்று நினைப்பவர்களிடம் இதுதான் வெளிப்படும்.

  • அபூ, நீங்கள் ஷோல்டரை இறக்கிவிட்டு சற்று நான் எழுதியிருக்கும் மொத்த பதிலையும் படித்து புரிந்துகொண்டு அதற்கு பதிலளிக்க முயற்சிக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க