privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!

அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!

-

அரியானாந்தியாவின் தலைநகரான தில்லிக்கு மிக அருகில் உள்ளது அரியானா. 1966ஆம் ஆண்டு பஞ்சாப்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரு மாநிலங்களில் இதுவும் ஒன்று. தவிர, இந்தியாவின் வசதி மிக்க மாநிலங்களில் ஒன்று, நாடு பெறக்கூடிய வருமானத்தை வழங்கும் மூன்றாவது பெரிய மாநிலம் என்றெல்லாம் அரியானாவுக்கு பெயரும், புகழும் உண்டு. தவிர தெற்கு ஆசியாவில் விவசாயம் மற்றும் உற்பத்தி தொழிற்சாலையில் சிறந்து விளங்கக் கூடிய மாநிலமும் இதுதான். 2000-ம் ஆண்டுக்கு பிறகு அனைவரும் முதலீடு செய்ய விரும்பும் மாநிலமும் இதுவேதான். தொழில் நகரமான குர்கான் இருப்பதும் இதே மாநிலத்தில்தான்.

இப்படித்தான் ஊடகங்கள் அரியானா மாநிலத்தின் பெருமையை பேசுகின்றன, பறைசாற்றுகின்றன, விளம்பரம் தருகின்றன, இந்தியாவின் அடையாளமாக காலரை உயர்த்திக் கொள்கின்றன.

ஆனால், இதே மாநிலத்தில்தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையும் அதிகமாக இருக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 455 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதாவது தினமும் இரண்டு பெண்கள் என்ற கணக்கில் இந்தக் கொடுமை அரங்கேறி வருகிறது.

இது காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள கணக்குதான். எனில், உண்மை நிலவரம் இன்னும் பயங்கரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரியானாவின் ஹிசார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்தான் அதிக அளவில் பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்றுள்ளன. இங்கு மட்டும் ஜனவரி – ஆகஸ்ட் மாத காலத்தில் 94 பெண்கள் இந்த வன் செயலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இருப்பது கர்னல் பகுதி. இங்கு 92 பெண்களும், ரெவாரி எல்லைக்குட்பட்ட பகுதியில் 89 பெண்களும், ரோஹ்டக் பகுதியில் 87 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரோஹ்டாக் பகுதிதான், அரியானா மாநில முதல்வர் புபிந்தர் சிங் ஹுடா, பிறந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 80 வழக்குகள் குறைந்துள்ளன. ஊடகங்கள் இது பற்றி செய்தி வெளியிடும்போது தெளிவான தகவல்களை முழுமையாக தர வேண்டும்…’ என்று திமிராக பதில் அளித்திருக்கிறார் அரியானா டிஜிபி ரஞ்சிவ் சிங்க் தலால்.

அரியானாவை ஆள்வது காங்கிரசு கட்சி. தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகி இருக்கிறார் புபிந்தர் சிங் ஹுடா. எனவே ‘காங்கிரசு கட்சியின் மீது களங்கத்தை சுமத்த திட்டமிட்டு இதுபோன்ற தகவல்களை பரப்புகிறார்கள். இது அரங்கேறி வரும் சதிச் செயலின் ஓர் அங்கம்தான்…’ என முத்தை உதித்திருக்கிறார் காங்கிரசின் மூத்த தலைவரான பூல் சந்த் முலானா. உடனே ‘யார் அந்த சதிகாரர்கள்?’ என செய்தியாளர்கள் கேட்டிருக்கின்றனர். ‘அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்…’ என நழுவி இருக்கிறார்.

இதே அரியானாவில்தான் தலித்துகளுக்கு எதிரான ஆதிக்க சாதி வன்முறையும் தலைவிரித்து ஆடுகிறது. மாட்டைக் உரித்த ‘குற்றத்துக்காக’ 5 தலித்துகளை எரித்துக் கொன்றதை நாம் மறக்க முடியாது.  கப் பஞ்சாயத்துகள் நாட்டாமைதனமும், சாதி வெறிபிடித்த கொளரவக் கொலைகளும், தலித் பெண்களை கும்பலாக வண்புணர்வு செய்வதும் அரியானாவில் இயலபான நிகழ்வு.

குர்கான் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துகின்றனர். குறைந்த சம்பளமே இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. வேலை நேரமும் அதிகம். போதிய ஓய்வு நேரங்கள் வழங்கப்படுவதேயில்லை. மாநிலத்தின் சுகாதாரமும், அடிப்படைக் கல்வியும் கேள்விக்குறியாக இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு எந்த கட்டமைப்பு வசதியையும் மாநில அரசு செய்து தரவேயில்லை. ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அனைத்து வசதிகளும் செய்துத் தரப்படுகின்றன. இப்படி உழைக்கும் மக்களின் ரத்தத்தில் குளித்தபடிதான் அரியானா மாநிலம் நாடு பெறக்கூடிய வருமானத்தை வழங்கும் மூன்றாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது.

ஆமையைப் போல் அரியானா மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் புகுந்து தொழிலாளர்களை ஒடுக்கி வருவதும், ஆதிக்க சாதிவெறி பயங்கரவாதமும், அம்மாநில பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு தினமும் ஆளாகி வருவதும் வேறு வேறல்ல. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான், ஒரே சமூகத்தின் அடிப்படையிலிருந்துதான் பிறக்கின்றன.