privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மாருதி: சதிகளை மறுக்கும் குற்றப்பத்திரிகை!

மாருதி: சதிகளை மறுக்கும் குற்றப்பத்திரிகை!

-

மாருதி-சுசுகி-தொழிற்சாலைமாருதி மானேசர் தொழிற்சாலையில் ஜூலை 18ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிரான தொழிலாளர் போரட்டத்தின் போது நடந்த வன்முறைகளைப் பற்றி சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.  ‘அந்த வன்முறை நிகழ்வுகள் முழுக்க முழுக்க தொழிற்சாலையின் உள் விவகாரங்களால் வெடித்தவை என்றும் எந்த ஒரு வெளிச் சக்திகளுக்கும் அதில் பங்கு இல்லை’ என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

‘மாருதி தொழிற்சாலை நிர்வாகத்துக்கும் யூனியனாக ஒன்று சேர முயற்சித்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சனைகளின் விளைவே வன்முறை நிகழ்வுகளுக்கு காரணம்’ என்கிறது குற்றப் பத்திரிகை. அதாவது, பண பலம், நிர்வாக அமைப்பு, செக்யூரிட்டி என்ற பெயரில் கூலிப்படைகள், போலீஸ் ஆதரவு இவற்றுடன் மாருதி முதலாளிகள் ஒரு புறம், தமது உரிமைகளுக்காக சங்கமாக திரள முயற்சிக்கும் தொழிலாளர்கள் இன்னொரு புறம் என்ற இரண்டு தரப்புகளுக்கிடையேயான அடிப்படை முரண்பாடுதான் போராட்டத்திற்கான காரணம்.

கடுமையான பணி அழுத்தம், போதுமான ஊதியம் கொடுக்காமல் வேலை வாங்குவது, பணி நிரந்தரம் செய்ய மறுப்பது, சங்கம் கட்டும் உரிமையை நசுக்குவது போன்ற தொடர்ச்சியான நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து தமது நியாயமான உரிமைகளுக்காக தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கின்றனர். அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு சாதகமாக வளைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர் எழுச்சியை இரக்கமில்லாமல் அடக்க முயன்றது நிர்வாகம். அதன் விளைவாக வெடித்ததுதான் ஜூலை 18ம் தேதி நடந்த வன்முறை சம்பவங்கள்.

குற்றம் செய்த நிர்வாகம், எந்த விசாரணையும் இல்லாமல்,  தானே தீர்ப்பு எழுதி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீது தண்டனையையும் சுமத்தியிருந்தது. மாருதி நிர்வாக இயக்குனர் பி சி பார்கவா, ‘இடது தீவிரவாத அமைப்புகளின் தூண்டுதலின் பேரில்தான் தொழிலாளர்களின் ஒரு சிறு பிரிவினர் தொழிற்சாலையையே எரித்து விடும் நோக்கத்தில் வன்முறையில் இறங்கினார்கள்’ என்று கூசாமல் புழுகினார்.

  • ‘வன்முறை வெளியாட்களால் தூண்டப்பட்டதாகவும், தொழிலாளர்களுடன் எந்த பிரச்சனையும் நிலுவையில் இல்லை’ என்று சொல்லி ஜூலை 21ம் தேதி சட்ட விரோதமாக லாக்அவுட் அறிவித்தது நிர்வாகம்.
  • நிர்வாகம் 500 நிரந்தர தொழிலாளர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்தது.
  • தொழிலாளர்கள் அனைவரையும் கிரிமினல்கள் போல சித்தரித்து உள்ளூர் போலீஸ் மூலம் அவர்கள் வீடுகள் வரை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது.
  • யூனியன் தலைவர்கள் உள்ளிட்ட 140 தொழிலாளர்களை கைது செய்யப்பட்டனர்.

300 பேரிடம் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு இவை எதற்கும் முட்டுக் கொடுக்க முடியாமல் உண்மையைச் சொல்ல வேண்டி வந்திருக்கிறது.

விசாரணையும் வழக்கும் நடத்துவதாக போக்கு காட்டும் அதிகார வர்க்கம்

  • வேலை நீக்கம் செய்யப்பட்ட 500 தொழிலாளர்களையும் உரிய நஷ்ட ஈட்டுடன் மறுபடியும் வேலைக்கு எடுக்க வேண்டும்.
  • போலீஸ் அராஜகத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைக்க வேண்டும்.
  • தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையான யூனியன் அமைப்பதை தடுத்து நிறுத்திய மாருதி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிய வேண்டும்.
  • பொய்யான தகவல்களை ஆதாரமின்றி அவிழ்த்து விட்ட பார்கவாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

‘இவர்கள் தூக்கி நிறுத்தும் போலி ஜனநாயகத்தில் உழைக்கும் மக்களுக்கு அடிப்படை நியாயங்கள் கூட மறுக்கப்படுகின்றன’ என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

‘எது எப்படி ஆனா என்ன, மாருதி கார் போல வராது’ என்று எந்த வித உறுத்தலும் இல்லாமல் தத்தமது கார்களை ஓட்டிச் செல்லும் 1 கோடி மாருதி கார் உரிமையாளர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?

படிக்க: