Saturday, April 17, 2021
முகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள் – 29/10/2012

ஒரு வரிச் செய்திகள் – 29/10/2012

-

செய்தி: அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக யுஎஸ்டிஏ அறிக்கை தெரிவிக்கிறது. 2012ம் ஆண்டில் 9.75 மில்லியன் டன்கள் அரிசியை ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, உலகிலேயே அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை வகிக்கிறது.

நீதி: பட்டினியில் முதலிடம் நோக்கி போய்க்கொண்டிருப்பதால் ஏற்றுமதியில் நம்பர் 1 வந்தாக வேண்டுமே?

______

செய்தி: மத்திய அமைச்சரவை மாற்றத்தில், தனது இலாகா மாற்றப்பட்டதால் எந்த வருத்தமும் ஏற்படவில்லை என்று ஜெய்ப்பால் ரெட்டி கூறியுள்ளார்.

நீதி: பெட்ரோலியத்துறை அமைச்சகத்திலிருந்து ரெட்டியை மாற்றியதற்கு முகேஷ் அம்பானிதான் சந்தோஷப்படவேண்டும் எனும் போது ரெட்டி காரு அழுத கதைகள் தேவையில்லையே?

_______

செய்தி: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வந்தாலும், பாராளமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறும் என்று அரசு எதிர்பார்ப்பில் இருக்கிறது.

நீதி: காங்கிரசு ஊழலுக்கு போட்டியாக கட்காரி ஊழல் வந்தாச்சுங்கிறத எவ்வளவு சாமர்த்தியமாக திரிக்கிறார்கள் பாருங்கள்!

_______

செய்தி: தமிழகத்துக்கு மின்சாரம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு மின்சாரம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு இன்று வழக்கு தொடர்ந்தது.

நீதி: முல்லைப் பெரியாறு, காவிரிக்காக போட்ட வழக்குகளிலேயே உச்சநீதிமன்றம் ஒன்றையும் பிடுங்கக் காணோம் என்பது புரியவில்லை என்றாலும் பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கு சொந்த அனுபவத்தையாவது வாய்தா ராணி யோசித்து பார்த்திருக்கலாமே?

_______

செய்தி: மத்திய மந்திரி சபை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. புதிய மந்திரிகளாக 22 பேர் பதவி ஏற்றனர். தற்போது மொத்தம் 78 மந்திரிகள் உள்ளனர்.

நீதி: நவராத்திரி கொலு பொம்மைகள் போல அமைச்சர்களை மாற்றினாலும் அதற்கு அமெரிக்காவிடம் பெர்மிஷன் வாங்கியாக வேண்டுமே மிஸ்டர் மன்மோகன் சிங்?

_______

செய்தி: ரயில்வே துறையின் சேவைகள் அதிகரிக்கப்பட, கட்டண உயர்வு அவசியமானது என புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.

நீதி: பேசாதவனுக்கு பேசத் தெரிந்த வரம் கிடைத்த போது அம்மாவிடம் ” நீ எப்பம்மா தாலியறுப்ப?” என்றானாம்.

_______

செய்தி: ஆந்திராவில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 1200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 250 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை 29 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். சுகாதார துறை நடத்திய ஆய்வில் திருப்பதியில் இருந்து பன்றி காய்ச்சல் பரவுவதாக தெரிய வந்தது. திருப்பதி கோவிலுக்கு வெளி நாட்டு பக்தர்கள் ஏராளமானவர்கள் வருகிறார்கள். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.

நீதி: பெருமாள் வராக அவதாரம் எடுத்தவர் என்பதால் பன்றிக் காய்ச்சலின் புண்ணியத் தலமே திருப்பதியாகத்தானே இருக்க வேண்டும்?

_______

செய்தி: ஊழலுக்கு எதிரான இயக்கத்தில், பாலிவுட் நடிகர் அமீர் கானை சேர்ப்பதற்கு, காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே திட்டமிட்டுள்ளார்.

நீதி: அமீர்கானோடு பிரியங்கா சோப்ராவைக் கூட்டி வந்தாலும் இனி செல்ப் எடுப்ப்பது சிரமம் ஐயா!

_______

செய்தி: “எனது செயல்பாட்டில், எனது நடத்தையில் களங்கம் எதுவும் கிடையாது. அதனால் தான், சமூக விரோதிகளுக்கு எதிராக என்னால் போராட முடிகிறது. பாருங்கள்… 6 கேபினட் மந்திரிகளின் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். இது எனது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி ஆகும்.”- அமைச்சரவை மாற்றம் குறித்து அன்னா ஹசாரே.

நீதி: பாவம் பெரிசு, இப்படியாவது ஆசைபடட்டுமே!

________

செய்தி: கொலையாளிகள், கொள்ளைக்காரர்களால் அச்சுறுத்தல் ஏற்படும்போதும், அவர்களுடனான போராட்டத்தின் போதும், பாதுகாத்துக் கொள்ளவே, போலீசுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது,” என, டி.ஜி.பி., ராமானுஜம் கூறினார்.

நீதி: எனில் போலீசிடமிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள யாரு துப்பாக்கி கொடுப்பார்கள்?

 1. //முல்லைப் பெரியாறு, காவிரிக்காக போட்ட வழக்குகளிலேயே உச்சநீதிமன்றம் ஒன்றையும் பிடுங்கக் காணோம் என்பது புரியவில்லை என்றாலும் பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கு சொந்த அனுபவத்தையாவது வாய்தா ராணி யோசித்து பார்த்திருக்கலாமே?//
  நீதித்துறையின் ல்ட்சணத்தை இதை விட தெளிவாக சொல்ல முடியாது.

 2. // செய்தி: ரயில்வே துறையின் சேவைகள் அதிகரிக்கப்பட, கட்டண உயர்வு அவசியமானது என புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.

  நீதி: பேசாதவனுக்கு பேசத் தெரிந்த வரம் கிடைத்த போது அம்மாவிடம் ” நீ எப்பம்மா தாலியறுப்ப?” என்றானாம். //

  இப்படியாப்பட்ட பிள்ளைங்களுக்குத்தான் பேசும் வரம் கிடைக்கும் சோனியா-சிங் ஆட்சியில்..

 3. செய்தி: அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக யுஎஸ்டிஏ அறிக்கை தெரிவிக்கிறது. 2012ம் ஆண்டில் 9.75 மில்லியன் டன்கள் அரிசியை ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, உலகிலேயே அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை வகிக்கிறது.

  நீதி: பட்டினியில் முதலிடம் நோக்கி போய்க்கொண்டிருப்பதால் ஏற்றுமதியில் நம்பர் 1 வந்தாக வேண்டுமே?

  இது தான் வல்லரசு இண்டியா எப்படி ?????

 4. டீ ச்சீ பீ..ராமானுசம் கருத்து சரியென்றால் ஏன் மணப்பாடு அந்தோனிஜான் என்பவரை போலி சார்கள் கொல்லவேண்டும்??? இதுபோலவே ஜெயாவின் ஆட்சியில்1996,97களில் இடிந்தகரைபகுதிகளில் மண்[தாது]அள்ளிவிற்ப்பதிலும் ஜெயா அடக்குமுறை செய்து காரியம் சாதித்தால்.அதனால் அனு உலைதிறந்தும்,இந்தியாவில் உள்ள மண்,கல்,சிப்பி,மரம்,சிலை போன்ற இயற்கைகளை அமெரிக்க,இரொப்பிய கிரித்தவநாடுகளுக்கு ஏற்றி விட்டு பணம் பெருத்து இந்தியா வல்லரசு ஆக வேண்டுமா?என்ன? தமிழகத்தில் ஒயின் கடை திறந்த ஜெயா அமெரிக்காவைப்போல துப்பாக்கி கடைகளையும் விரைவில் திறந்தால் நம் நாடு உண்மையில் வல்லரசு தான்.நன்றி.///

 5. அந்துமணி பதில்கள்
  பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012,00:00 IST

  * ஏ.ஜோதிகுமார், சூலூர்: பசியால் ஒருவன் மாண்டு போவது, அவன் குற்றமா? ஆளும் அரசின் குற்றமா?
  பிச்சைக்காரர்கள் வாழ வில்லையா? திடகாத்திரமாக, உருண்டு, திரண்டு தானே இருக்கின்றனர். தனி மனித முயற்சிகளை மேற்கொள்ளாமல், தொட்டதற்கெல்லாம், “அரசு… அரசு…’ என ஓலமிடுவது பைத்தியக்காரத்தனம்.
  ***

  Cheenu Meenu – cheenai,இந்தியா :
  இன்றைய நாட்களில் பசியால் ஒருவன் மாண்டுபோவதா? அபத்தம். அதான் அரசு தினம்தோறும் திருக்கோவில்களில் தமிழ்நாடு முழுக்க அன்னதானம் செய்துவருகிறதே உண்டு கொழு சுருண்டு படு.

  • இதன் உள் அர்த்தம் அதுவல்ல பாலாஜி அவர்களே.
   எங்கள் ஜெ ஆட்சியில் நாங்கள் அனைத்து வழிகளையும் உபயோகித்து மதிகெட்ட தமிழ் மக்கள் எல்லோரையும் ஓட்டாண்டியாக்கி விடுவோம். எல்லோரும் பிச்சையெடுத்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார், தன் அலுவலகத்தில் வேலை செய்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த அ(பொ)ந்து மணி.

   • Yes, i understood as same as you thats why posted here. In one reader commented that in temples they are giving free food but why people are still dying due to food starvation. That group able to think that much only. To show thier thinking capabilities i posted it here. 🙂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க