Thursday, April 15, 2021
முகப்பு கலை கவிதை மூன்றாவது வழிபாட்டுப் பாடல்...

மூன்றாவது வழிபாட்டுப் பாடல்…

-

எனது சொற்கள்
மண்ணாய் மணத்த நாளில்
கோதுமைத் தாள்களின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கொதித்துச் சீறிய நாளில்
இரும்புத் தளைகளின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கற்களாய் உறைந்த நாளில்
தழுவிச் செல்லும் ஓடையின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கலகமாய்க் கிளர்ந்த நாளில்
நடுங்கும் நிலத்தின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்
நம்பிக்கை தளரா உள்ளங்களின்
நண்பனாயிருந்தேன்.

ஆனால்
சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்….
ஈக்கள் மொய்த்தன
என் உதடுகளில்!

-மஹ்மூத் தார்வீஷ்
(ஆங்கிலம் வழி தமிழில்: புதூர் இராசவேல்)

Mahmoud-Darwish
மஹ்மூத் தார்விஷ்

மஹ்மூத் தார்வீஷ் பாலஸ்தீனப் போராளி. இழந்த தாய்நாட்டை மீட்கப் போராடி வரும் எல்லா பாலஸ்தீன மக்களும் நேசித்த கவிஞரும் கூட. 1948இல் இசுரேல் அரசு தார்வீஷின் கிராமத்தைச் சூறையாடி முற்றிலுமாக அழித்தபோது, அவரது குடும்பம் லெபனானுக்குச் சென்றது. விடுதலைத் தாகம் கொண்ட இளம் போராளியாக தனது இருபதாம் வயதுகளிலேயே இசுரேல் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1970இல் ரசியா சென்று படித்தார்; பிறகு பெய்ரூட்டிலும், பாரீசிலுமாக சுமார் 26 ஆண்டுகள் புலம் பெயர்ந்து வாழ்ந்தார். 1996இல் இசுரேல் திரும்பி, கொந்தளிப்பான ‘மேற்கு கரையில்’உள்ள ரமல்லாவில் தங்கினார்.

கவிதை, உரைநடைப் படைப்புக்களில் 30 தொகுதிகளை வெளியிட்டுள்ள அவர், கலை மக்களுக்கானது என்பதில் தெளிவான பார்வை கொண்டவர். தார்வீஷ் பாலஸ்தீன மக்களின் உயிர்மூச்சு; தாயகம் பிடுங்கப்பட்டவர், நீக்கப்பட்டவர். தாயகம் ஏக்கம் கொண்டவர்களின் கம்பீரமான போராட்ட சாட்சி.

கடந்த ஆகஸ்டு 9, 2008 அன்று அவரது 66ஆவது வயதில் இதயநோய்ச் சிகிச்சையின் போது இறந்து போனார். பாலஸ்தீனத் தாயகத்தின் போராளியாகவும், புலம் பெயர்ந்தோரின் உரிமைக் குரலாகவும், கம்யூனிச உணர்வுமிக்க சர்வதேசவாதியாகவும் வாழ்ந்த கவிஞர் மஹ்மூத் தார்வீஷ்.

______________________________________________

-புதிய கலாச்சாரம், அக்டோபர்’ 2008
______________________________________________

  1. இழந்த பாலஸ்தீன நாடு? எப்பொழுதாவது பாலஸ்தீனம் என்ற தனி நாடு இருந்ததா?
    1948 லிருந்து 1967 வரை இந்த பகுதிகள் எகிப்திடமும் ஜோர்டான் நாட்டிடமும் இருந்ததே! அவர்கள் தங்களது நாட்டின் பகுதி என்றே கூறினர். அங்கிருந்த அரபியரும் ஜோர்டான் பாஸ்போர்ட் வைத்திருந்தனர். இன்றும் அப்படியே … சுகிர் மோசன் “பாலஸ்தீனம் என்ற நாடும் பாலஸ்தீனர் என்ற மக்களும் சரித்திரத்தில் இல்லவே இல்லை, இஸ்ரேலுக்கு எதிராக போராடி அதை அழிக்கவே பாலஸ்தீனம் என்ற வார்த்தையை கூறவேண்டியிருக்கிறது” என்றே கூறிவந்தார்.

    வருடங்களுக்கு முன்பு பெலிஸ்தியர்கள் என்ற இனம் இன்றைய காசா பகுதிக்கு அருகே வாழ்ந்து வந்தனர். பெலிஸ்தியா அலெக்சாண்டர் காலத்தில் முழுவதுமாக அழிக்கப்பட்டது. இன்று இருக்கும் அரேபியர்களுக்கும் பெலிஸ்தியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  2. வினவு தோழர்களே,

    வன்னி அரசுவின் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் தோழர் ஆம்பள்ளி.முனிராஜ்! என்ற கட்டுரையின் பின்னூட்டப்பெட்டி மூடியிருக்கிறது.. அதைக் கொஞ்சம் சரி செய்யவும்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க