privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாசவீதாவைக் கொன்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதம்!

சவீதாவைக் கொன்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதம்!

-

சவீதா
சவீதா

யர்லாந்தின் கத்தோலிக்க அடிப்படைவாத சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு உரிமை மறுக்கப்பட்டு உயிர் இழந்த சவிதாவின் குடும்பம் ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருக்கிறது.

சுகாதரத் துறை அமைச்சர் பொது விசாரணை நடத்த மறுத்ததை அடுத்து சவிதாவின் கணவர் பிரவீன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜெரார்ட் ஓ டொன்னல் தெரிவிக்கிறார். அயர்லாந்தின் சுகாதாரத் துறை நடத்திய இரண்டு விசாரணைகளை பிரவீனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

31 வயதான சவிதா ஒரு பல் மருத்துவர். இந்தியாவைச் சேர்ந்த கணவனும் மனைவியும் திருமணமாகி நான்கு ஆண்டுகளாக அயர்லாந்தில் உள்ள கேல்வேயில் வசித்து வந்திருக்கின்றனர். 17 வார கர்ப்பிணியான சவிதா கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட கடும் முதுகு வலியால் கேல்வே பல்கலைக்கழக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த மருத்துவர்கள், “கருவிற்கு இதயத் துடிப்பு இன்னும் இருப்பதால், கருக்கலைப்பு செய்ய முடியாது” என்று மறுத்துள்ளனர்.

“குழந்தையைக் காப்பாற்ற முடியாத பட்சத்தில் கருவை கலைத்து வெளியேற்ற வேண்டியதுதானே” என்று கேட்ட சவிதாவிற்கு,
“கருவிற்கு இதயத் துடிப்பு இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது” என்று மருத்துவர்கள் பதிலளித்து உள்ளனர்.

மறுநாளும் கருக்கலைப்பு செய்து விடுமாறு மன்றாடிய சவிதாவிற்கு, “அயர்லாந்து ஒரு கத்தோலிக்க நாடு, இங்கு கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றம்” என்றும் பதிலளித்து உள்ளனர், அதற்கு சவிதா “நான் அயர்லாந்து வாசியும் இல்லை, கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரும் இல்லை” என்று கூறி மீண்டும் தன் உயிரைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறார். அதற்கு “எங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்று சொல்லி கைகழுவி உள்ளனர் மருத்துவர்கள்.

தொடர்ந்து வாந்தி எடுத்து மயங்கிய சவிதாவின் உடல் நிலையைக் கண்டும் அசராமல், ‘கொள்கை’யை உயர்த்திப்பிடித்து நின்று உள்ளனர் மருத்துவர்கள். இறுதியில், மறுநாள் கருவின் இதயத் துடிப்பு நின்ற பிறகு, கருக்கலைப்பு செய்துள்ளனர்.

சட்டத்தையும் கத்தோலிக்க மதநெறிகளையும் காப்பாற்றிய மருத்துவர்களால் சவிதாவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரது உயிரும் அக்டோபர் 28-ம் தேதி பிரிந்து விட்டது.

தானாக நடந்த கருச்சிதைவை வெளிக்கொண்டு வராமல் உடலிலே விட்டதின் விளைவு தான் இது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பிரேதப் பரிசோதனையில், “சவிதாவின் சாவிற்கு அவருக்கு இரத்தம் கொடுத்தபோது ஏற்பட்ட ஒவ்வாமைதான் காரணம்” என்று மருத்துவமனை பதிவு செய்து உள்ளது.

‘இந்த உயிர்க் கொலைக்கு பொறுப்பு அயர்லாந்து சட்டங்கள்தான், கத்தோலிக்க மதக் கோட்பாடுகள் இல்லை’ என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர் கத்தோலிக்க மதவாதிகள்.

சவீதாவுக்காக போராட்டம்அயர்லாந்தில், 1957-ம் ஆண்டு மேமி கேடன் என்ற கருக்கலைப்பு நிபுணரின் நோயாளிகளில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது (பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது). 1983-ம் ஆண்டு அரசியல் சட்டம் திருத்தப்பட்டு ‘பிறக்காத குழந்தைக்கு கருத்தரித்தது முதலே வாழ்வதற்கான உரிமை இருக்கிறது’ என்று உறுதி செய்யப்பட்டது. கூடவே ‘குழந்தையை சுமக்கும் தாய்க்கு இருக்கும் வாழும் உரிமையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் சேர்க்கப்பட்டிருந்தது. கருவில் இருக்கும் குழந்தையின் உரிமை தாயின் உயிர் வாழும் உரிமைக்கு சமமாக (அல்லது அதிகமாக) வைக்கப்பட்டது.

அயர்லாந்தின் உச்சநீதிமன்றம் கருக்கலைப்பை தடை செய்யும் சட்டத்தை மாற்றும் படி பரிந்துரைத்தும் கத்தோலிக்கர்களின் ஓட்டுகளை இழந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அயர்லாந்தின் அடுத்தடுத்த அரசுகள் சட்ட சீர்திருத்தங்களை தள்ளிப் போட்டிருக்கின்றன.

தாய் அல்லது கருவின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை முடிவு செய்வது மருத்துவர்களின் பொறுப்பு. சவிதாவின் கருவை பாதுகாப்பதில் உறுதியாக நின்ற மருத்துவர்கள் அதன் தாயின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கின்றனர்.

இன்றும் உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் பேர் வாழும் 68 நாடுகளில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் மத அடிப்படைவாதம்தான் கருக்கலைப்பை தடை செய்வதற்கு காரணமாக உள்ளது. உதாரணமாக போலந்தில் கம்யூனிச ஆட்சியின் போது அனுமதிக்கப்பட்டிருந்த கருக்கலைப்பு 1990களுக்குப் பிறகு பொது வாக்கெடுப்பின் மூலம் சட்ட விரோதமாக்கப்பட்டது. தன்னை ‘ஜனநாயகத்தை’ காவல் காக்கும் இரட்சகனாக காண்பித்துக்கொண்டு, எல்லா நாடுகளின் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவிலும் அதுதான் நிலைமை.

சவிதா இறந்தது வெறும் விபத்தல்ல அது உயிருக்கு துளிக்கூட முக்கியத்துவம் கொடுக்காமல் அரங்கேற்றப்பட்ட பச்சைப் படுகொலை. இக்கொலைக்கு துணை நின்ற கத்தோலிக்க மருத்துவர்கள் எப்படியும் இந்நேரத்திற்குள் பாவமன்னிப்பு கேட்டு புனிதம் அடைந்து இருப்பார்கள்! ஆமென்!

படிக்க:

 1. இங்கிருந்து சென்று மேலைநாடு ஒன்றில் பிழைப்புநடத்தும் ஒரு மருத்துவர் இந்த படுகொலையை நியாயப்படுத்தி எழுதிக்கொண்டிருக்கிறார்.

   • மருத்துவர்களது தவறான கணிப்பு தான் காரணம். என்ன ஒரு கண்டுபிடிப்பு. ஆ.ராசா கூட கணக்க தப்பா போட்டு விட்டுதான் மாட்டுனாரு.

  • அப்ப நீங்க என்ன மருத்துவ சேவை செய்து கொண்டு இருக்கிங்க என அறியலாமா…

 2. //கத்தோலிக்கர்களின் ஓட்டுகளை இழந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அயர்லாந்தின் அடுத்தடுத்த அரசுகள் சட்ட சீர்திருத்தங்களை தள்ளிப் போட்டிருக்கின்றன.//

  அங்குமா இப்படி!
  எதற்கெடுத்தாலும் பார்ப்பனீயமா என அங்கலாய்த்துக் கொள்ளும் நவீன பார்ப்பனியவாதிகளே புரிந்து கொள்ளுங்கள். அயர்லாந்து மருத்துவர்களை சவீதாவின் இறப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வைத்தது அந்நாட்டின் பிற்போக்குத் தனமான கத்தோலிக்க மதமும் அதன் அடிப்படையிலான சட்டமும்தான். கருக்கலைப்பை இஸ்லாமும்தான் ஆதரிக்கிறது இந்துமதம்தான் ஆதரிக்கிறது, அல்லுலேயாவும்தான் ஆதரிக்கிறது என்பதற்காக கத்தோலிக்க என்ற வார்த்தையை குறிப்பிடாமல் இருக்கமுடியுமா என்ன. எந்த சமூகத்தினதுன் இயக்கும் சக்தியைப் பற்றி அது எந்த இசமானாலும், ஈயமானாலும் விமர்சிக்கப் படத்தான் வேண்டும். அது சிலரை நோவினை செய்கிறது என்பதற்காக பாராமுகமாக இருக்க முடியாது. சமூக சனநாயகவாதிகளாகவும், முன்னேறிய நாடுகள் எனவும் பீற்றிக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளிலும் கூட மதத்தின் அடிப்படைவாத சட்டங்கள் இருக்கும்போது நமது நாட்டைப் பற்றி கேட்கவா வேண்டும்?

  • நன்னா சொன்னேள் போங்கோ… அயர்லாந்து தேசத்தோட கத்தோலிக்க ஓட்டு வங்கி யாரு..? ஸ்டெப்பியிலேந்து மேக்காலே ஸ்டெப்பு வெச்சுப் போன நம்மவாதானே… சந்தேகம் இருந்தா நம்ம சினேகிதர் அன்புவை கேட்டுப்பாருங்கோ.. ஆதாரம் ஆதாரமா அடுக்கி வைச்சுடமாட்டாரோ…

    • பார்ப்பனீயம் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு பதிவு வந்தால் சந்தானம் பொங்கி எழுந்துவிடுவார்.. கூடவே என்னையும் உணர்ச்சிவசப்பட்டு பொங்கி எழுந்துவிட வைத்துவிடுவார்.. பார்ப்பனீயத்தின் புகழை கத்தோலிக்க மதம் மறைத்து விட விடலாமா.. இந்த இருட்டடிப்பை கண்டித்து அயர்லாந்துவாசிகளின் பூர்வீகம் பார்ப்பன ஸ்டெப்பிப் புல்வெளி என்பதை உலகத்துக்கு எடுத்துரைக்க வேண்டுமா.. வேண்டாமா..

     • வரலாற்று நோக்கு இருக்க வேண்டியது தான். அதுக்காக இவ்வளோவா! போற போக்கப் பாத்தா homo erectus, australopithicus எல்லாம் பேசி, இன்னும் பின்னால போவோம்னு Plesiadapis ல போய் நிக்கும் 🙂

  • //கருக்கலைப்பை இஸ்லாமும்தான் ஆதரிக்கிறது இந்துமதம்தான் ஆதரிக்கிறது, அல்லுலேயாவும்தான் ஆதரிக்கிறது //

   கருக்கலைப்பை இஸ்லாமும்தான் எதிர்க்கிறது இந்துமதம்தான் எதிர்க்கிறது, அல்லுலேயாவும்தான் எதிர்க்கிறது என்று இருந்திருக்க வேண்டும்

 3. If and only if there is a clear proof that an abortion would have saved her life, there is nothing to bash Ireland or its law or the religion of Irish people for her death. Another point is that, even in that case, a try to save both lives is better than killing one for saving other.

 4. //சவிதா இறந்தது வெறும் விபத்தல்ல அது உயிருக்கு துளிக்கூட முக்கியத்துவம் கொடுக்காமல் அரங்கேற்றப்பட்ட பச்சைப் படுகொலை.//

 5. சவிதாவின் மரணம் எழுப்பிடும் கேள்விகள்

  அயர்லாந்து நாட்டிற்கு குடி சென்ற இந்திய இளம்பெண் சவிதாவின் மரணம் உலகெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் முன்னேறிய அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது குற்றம் என்று சட்டம் இருப்பதால், சவிதாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அவர் அயர்லாந்தின் கால்வே நகரின் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு தம் உறவினர்களுடன் சென்று, கருக்கலைப்பு செய்யும்படி மன்றாடி கேட்டுக் கொண்ட பின்னரும், சட்டத்திற்கு பயந்து மருத்துவர்கள் அதனைச் செய்ய மறுத்தனர். இதனால் அவர் கருவில் இருந்த 17 வாரகால சிசு இறந்து அவரது இரத்தத்தில் நச்சுத்தன்மை பரவி அவர் அக்டோபர் 28 அன்று உயிரிழந்தார்.

  அயர்லாந்து நாட்டில் பொறியாளராக பணி செய்து வரும் இந்தியாவைச் சார்ந்த ஹாலப்பனவர் என்பவரை மிகச் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சவிதா ஒரு பல்மருத்துவர். தமது முதல் குழந்தையைக் காண ஆவலோடு காத்திருந்த இந்தத் தம்பதியர்க்கு அயர்லாந்து நாட்டில் இப்படி ஒரு கொடூர அதிர்ச்சி காத்திருக்கும் என்று தெரியாமல் போனது.

  அயர்லாந்து நாட்டு அரசு, கத்தோலிக்க மத நம்பிக்கைகளின் அடிப்படையில், கருக்கலைப்பு செய்து கொள்வோரும் அதைச் செய்யும் மருத்துவர்களும் குற்றம் புரிந்தவர்கள் ஆவர் என்று சட்டம் இயற்றியுள்ளது. பிறக்காத சிசுவின் உயிர் வாழும் உரிமை, அரசால் எல்லா வகையிலும், திட்டவட்டமாக உத்தரவாதப்படுத்தப்படுகிறது என்று 1983ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அயர்லாந்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கான எட்டாவது திருத்தம் கூறுகிறது. அதற்காக சட்டப்பிரிவு எண்.40.33 அறிமுகப்படுத்தப்பட்டது.

  தாயின் உயிருக்கு நிச்சயமாக ஆபத்து இருக்கிறது என்று உறுதியான ஒரு நிலைமை இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் என்றும், வெறுமனே தாயின் உடல் நலம் பாதிக்கப்படும் என்னும் சூழ்நிலையில் எல்லாம் கருக்கலைப்பு செய்துவிட முடியாது என்றும் அச்சட்டம் ஆணி அடித்துக் கூறுகிறது. நமக்கு எதற்கு வம்பு என்று மருத்துவர்களும் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

  ஓர் அயர்லாந்து சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அதனால் கருவுற்று, தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், அவள் உயிரைக் காப்பாற்ற, மனநல மருத்துவரின் அறிவுரையின் பேரில் அருகிலுள்ள இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று கருக்கலைப்பு செய்து கொண்டபோது, அவளைக் குற்றவாளியாக்கி தண்டிக்க முயன்றது அரசு. இறுதியில் நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றாள் அச்சிறுமி.

  மதநம்பிக்கை மக்களின் மீது சட்டமாக திணிக்கப்படுதல் என்ன வகையான ஜனநாயகம்? மலாலாக்களை கவுரவிக்கத் துடிக்கும் அய்ரோப்பாக் கண்டத்தின் அரசுகளில் ஒன்று சொந்த நாட்டில் மலர்களைக் கசக்கி எறிவது ஏனோ? தலிபான்களை கேலி பேசும் தலைகள் வெறும் காலிப்பானைகளாக இருந்திடலாமோ?

  220 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த பிரெஞ்சுப் புரட்சியில் மலர்ந்த மதச்சார்பற்ற அரசு என்னும் கோட்பாட்டை அன்று விரும்பி ஏற்றுக் கொண்ட முதலாளித்துவ வர்க்கம், அடுத்தடுத்து நடைபெற்ற பாட்டாளிவர்க்க எழுச்சிகளைக் கண்டு அஞ்சி நடுங்கி, மக்களின் அறிவியல்பூர்வ சிந்தனைப்போக்கு வளர்வதை எல்லா வகையிலும் தடுக்க முயன்றது; யமனுக்கு பயந்து சிவலிங்கத்தை கட்டிப் பிடித்துக் கொண்ட மார்க்கண்டேயனைப் போல, அது மதத்தை இறுகத் தழுவிக் கொண்டது. மதச்சார்பற்ற அரசுகளுக்கு பதிலாக மதத்தாஜா அரசுகளே அடுத்தடுத்து உருவாயின. இவற்றின் வெளிப்பாடுகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாய் இருக்கும். அதில் ஒன்றுதான் அயர்லாந்தின் அரைவேக்காட்டுச் சட்டம்.

  சவிதாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகவும், அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கக் கோரியும், அயர்லாந்தின் கால்வே நகரிலும், அதன் தலைநகரான டப்ளினிலும், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவது இருகரம் நீட்டி வற்வேற்கத் தக்கதாகும்.

  கத்தோலிக்க மதகுருமார்கள் மட்டுமல்ல, உலகத்தின் எல்லா மதங்களின் குருமார்களும், உடைமை வர்க்கத்தவர்களும், பிற பிற்போக்காளர்களும் காலங்காலமாய் கருக்கலைப்பை எதிர்த்தே வந்துள்ளனர். மக்கள் எழுப்பிய ஜனநாயகக் குரல்களால்தான், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் கருக்கலைப்பு சமீப காலங்களில்தான் சட்டபூர்வமாக்கப்பட்டது.

  கடவுள் கொடுத்த சிசுவைக் கலைப்பது எவ்வகையிலும் பாவம்தான் என்று சொல்லும் மதகுருமார்கள், கோடானுகோடி கடவுளின் குழந்தைகள் பேரிலும், வறுமையிலும் இன்ன பிற வன்கொடுமைகளிலும் தம் வாழ்வை இழப்பதைத் தடுக்க என்ன செய்து விட்டார்கள்? கடவுளின் ராஜ்ஜியம் பரலோகத்தில் பிரகாசித்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்த உலகத்தில் மனிதர்களை அவர்கள் பகுத்தறி வின்படி வாழ விடுங்கள்.

  பெண்ணை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகவே பார்க்கின்ற தனியுடைமைச் சமூக அமைப்பு, அவள் வயிற்றில் வளரும் சிசுவின் மீதான அவளது உரிமையையும் மறுத்தே வந்துள்ளது. அச்சிசு எப்போதும் ஆணின், வாரிசு அல்லவா? அதை ஒழுங்காக பெற்றுக் கொடுக்க வேண்டியது அவள் கடமையல்லவா? ஒரு பெண் தன் உடல் நலம் மற்றும் மனநலம் பேணிட சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தேவையை ஒட்டி கருக்கலைப்பு செய்து கொள்வது, அனுமதிக்க முடியாத அபச்சாரமாகவே சில விந்தை மனிதர்களுக்குத் தோன்றுகிறது. தன் உடல்மீதும், உயிர்மீதும் வேறு எதன் மீதும் பெண்ணுக்கு உரிமையிருப்பதில்லை.

  கருக்கலைப்பு, பெண்ணின் விருப்பப்படி யானதாகவும், சட்டப்பூர்வமானதாகவும் ஆக்கப்பட்டுவிட்டால் பெண்ணின் கற்பு நிலையில் பிறழ்வுகள் ஏற்பட அது வழிவகை செய்துவிடாதா என்ற ஆணாதிக்கச் சிந்தனை களின் கவலைக் கொந்தளிப்புகளும் கருக் கலைப்புக்கு எதிரான அணுகுமுறைக்கு வரலாற்றுரீதியான காரணங்களில் ஒன்று.

  வரலாறு நிச்சயமாய் முன்னோக்கிச் செல்லும். பெண்கள் இன்றைய சமூகத்தில் சந்திக்கிற அனைத்துத் ஆணாதிக்கத் தடை களையும் உடைத்தெறிகிற பொதுவுடைமைச் சமூகத்தை நோக்கி படிப்படியாய் நடை போட்டுச் செல்லும்.

  நன்றி :மாலெ தீப்பொறி

 6. அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தை பற்றி பேசும் அன்பர்கள் இந்தியாவின் கருக்கலைப்பு சட்டத்தை பத்தி என்றாவது நினைத்துள்ளீர்களா? இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். படியுங்கள்;

  இந்திய Medical Termination Act, 1971; amendments 1975 and 2003. அய்ரலாந்து சட்டத்திற்கும் இந்திய சட்டத்திற்கும் என்ன வித்யாசம்? படித்து விட்டு சொல்லவும்…!

 7. “அயர்லாந்து ஒரு கத்தோலிக்க நாடு, இங்கு கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றம்”

  இதைப்போல் தான் இங்கு நாய்கலை கொல்லாமல் blue Cross அமைப்பினர் தடுத்து மக்கலை நாய்க்கடிக்கு ஆலாக்குகின்ரனர். இதை எப்பொழுது உனர்வார்கலோ இந்த முட்டால்கல்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க