privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதருமபுரி வன்னிய சாதிவெறி தாக்குதல் : HRPC வழக்கு !

தருமபுரி வன்னிய சாதிவெறி தாக்குதல் : HRPC வழக்கு !

-

பத்திரிக்கைச் செய்தி

வம்பர் 7, 2012 அன்று தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் உள்ள நத்தம், அண்ணாநகர், கொண்டாபட்டி ஆகிய தலித் கிராமங்கள் மீது ஆதிக்க வன்னிய சாதி வெறியர்கள் நடத்திய வன்கொடுமை தாக்குதல் தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தருமபுரி மாவட்ட செயலாளரும், வழக்குரைஞருமான திரு.ஜானகிராமன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

இத்தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள காரணங்கள், அரசியல் சக்திகளை கண்டறியவும், தடுக்கத் தவறிய அரசு நிர்வாகம், காவல்துறையின் செயலற்றத் தன்மையை வெளிக்கொணரவும், இது போன்ற தாக்குதல் இனி தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என பரிந்துரைக்கவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும், அதன் பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்த்து. மேலும் தலித் மக்கள் அடைந்த பொருள் இழப்புக்கள், வேலை இழப்பு, மன உளைச்சல் போன்றவற்றிற்கு கொடுக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையினை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தீர்மானித்து பரிந்துரைக்கவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள ரூ.50,000 அல்லாமல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையினை உடனே வழங்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும்  எனவும், சாதிய வன்முறை தொடர்ந்து தூண்டப்பட்டு வருவதை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் இரு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று (11.12.12) நீதிபதிகள் திரு.எலிப்பி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய அமர்வானது இவ்வழக்கை விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த  வழக்குரைஞர் வைகை அவர்கள் வாதாடினார். அவர் வாதத்தின் ஒரு பகுதியானது

” வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது ஓர் தனிச்சிறப்பான சட்டமாகும். முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டியது முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பிச்சையில்லை. தலித் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய சட்டப்படியான நிவாரணத் தொகையாகும். வன்கொடுமை சட்ட விதி 12 ஆனது மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உண்டான இழப்புகளை மதிப்பிட்டு இழப்பீடு வழங்கவும், மறுவாழ்வு பணிகளை செய்ய வேண்டும் எனவும் கூறும் போது, “ஃபிரண்ட்லைன்“ இதழுக்கு பேட்டி அளித்துள்ள தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் லில்லி இடைக்கால அறிக்கை ஒன்றின் மூலம் தலித் மக்களின் இழப்பு 6 கோடியே 95 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், முழுமையான இழப்பீடும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான நிவாரணத் தொகையும் அரசாங்கம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார், மாவட்ட ஆட்சித் தலைவரை இதனை செய்ய வேண்டும் எனவும் சட்டம் கூறும்போது அவர் ஏன் அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் எனவும், அதன் பொருட்டு நீதிமன்றம் இடைக்கால மனுவில் உடனடியாக உத்தரவிடுங்கள்”

என வாதாடினார்.

நீதிபதிகளோ, இதற்கு முன்பு தர்மபுரி தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சில பொதுநல வழக்குகள் தலைமை நீதிபதி அடங்கிய முதன்மை அமர்வு  முன்ப நிலுவையில் உள்ளதால் அதனுடன் இவ்வழக்கினையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டனர். அரசாங்கத்தினை பதில் மனு தாக்கல் செய்யவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான நிவாரணங்களை பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தினார். இவ்வழக்கானது மற்ற வழக்குகளோடு இணைந்து இவ்வாரத்திற்குள் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

_______________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
__________________________________________

  1. சாதி வெறியை அனைத்து அரங்குகளிலும் அம்பலப்படுத்தி முறியடிப்போம்.மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கு வாழ்த்துக்கள்.

  2. Every body says the present Chief Justice of Tamil Nadu M Y Eqbal is a man of good heart. Let him intervene and order the State govt to dispense adequate compensation to the victims of caste beasts.

  3. வினவு தோழர்களே,

    தர்மபுரி தலித் மக்கள் மீதான வன்னிய சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து விழுப்புரத்தில் டிசம்பர் 3 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடை பெற்றது. நானூறுக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சுற்றியிருந்து ஆர்ப்பாட்டம் முழுவதையும் கவனித்தனர். தோழர்.ராஜு பேசும் பொழுது இரயிலடி மேலுள்ள பாலத்தில் சென்றவர்கள் அப்படியே நின்று விட்டனர்.

    வன்னிய சாதிச் சங்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வன்னிய சாதி மக்களும் ஏற்றுக்கொண்டதாக தோழர். செல்வக்குமார் தனது கண்டன உரையில் கூறினார். முழக்கங்கள் அனைத்தும் தீயாய் இருந்தன. வன்னிய சாதி மக்களும் சிந்திக்கும் படி இருந்தது ஆர்ப்பாட்டம்.

    இதைப் பற்றிய செய்தித் தொகுப்பு வினவில் வரும் என்று நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் வரவில்லை. அதைப் பற்றிய செய்தியை கூடிய விரைவில் வினவில் எதிர்பார்க்கிறேன்.

    நன்றி!

  4. //வன்னிய சாதிச் சங்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வன்னிய சாதி மக்களும் ஏற்றுக்கொண்டதாக தோழர். செல்வக்குமார் தனது கண்டன உரையில் கூறினார். முழக்கங்கள் அனைத்தும் தீயாய் இருந்தன. வன்னிய சாதி மக்களும் சிந்திக்கும் படி இருந்தது ஆர்ப்பாட்டம்.

    நல்ல நகைச்சுவை.பிரச்சனைக்கு மூல காரணமானவர்களுக்கு நோபல் பரிசு தரலாமா நண்பரே.

    ஒரு உதாரணம்: தருமபுரி நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது கம்பைநல்லூர் கிராமம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு தனது ஆசிரியர் மற்றும் ஊராட்சித் தலைவர் (மாரியப்பன்) ஆகியோருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார். தனது கைகளில் முட்டையோடு வந்த ஒருவன் அந்த மாணவியின் மார்பில் அந்த முட்டைகளை மோதி உடைத்துவிட்டு உயர்சாதிக்காரி மேல முட்டைய உடைச்சா உடையுமா உடையாதான்னு பாத்தேன் என்று சொல்லி இருக்கிறான். இதனைப் பற்றி முறையிட்டால் தங்கள் மீதே வன்கொடுமைச் சட்டம் பாயும் என்ற பயத்தில் விட்டு விட்டார்கள்.

  5. இதற்குப் பொருள்: அனைத்து வன்னிய சாதியினரும் தலித் மக்களின் மீதான வன் கொடுமைகளை ஆதரிப்பதில்லை. வன்னிய சாதியினர் அனைவரும் பா.ம.க, வன்னிய சங்கங்களை ஆதரிப்பதில்லை. அதே நேரத்தில் அவர்கள் தலித் மக்களின் மீதான வன்னிய சாதி வெறியர்களின் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதும் இல்லை. இவர்களின் மெளனத்தை சாதி வெறியர்கள் சம்மதமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த மெளனத்தை வர்க்க உணர்வூட்டுவதன் மூலமே கலைக்க முடியும். அதற்கு தொடர்ச்சியான போராட்டம் தேவை.

    நான் இங்கே அனைத்து வன்னிய சாதியினரும் திருந்தி விட்டார்கள் என்று கூறவில்லை. வன்னிய சங்கத்தை, பா.ம.க வை ஆதரிக்காத வன்னிய சாதியில் உள்ள உழைக்கும் மக்களை நமக்கு (சாதி வெறியை எதிர்த்துப் போராடுபவர்கள்) ஆதரவாகத் திரட்ட வேண்டும். அப்படித்தான் நக்சல்பாரிகளால் உழைக்கும் மக்கள் திரட்டப்பட்டார்கள், திரட்டபபடுகிறார்கள்.

    • மேலே ஒரே ஒரு உதாரணத்தை மட்டுமே சொல்லயுள்ளேன். அதில் தவறு செய்தவனை பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லை. முதலில் அதை பற்றி பேசுங்கள், பிறகு சாதி வெறியை எதிர்த்துப் போராடுவதை பற்றி பேசலாம்.

  6. மனசாட்சியின் படி நடந்துக்கொண்டால்
    மாயுமே இந்த வன்முறைகளும்
    சாதி மத பேதங்களும்

    அரசின் விண்ணப்பத்திலிருந்து சாதி மதங்களை தூக்க முடியுமா முதலில்?
    —————————————-

    ஏட்டுச் சுரைக்காய்

    போதனை சாதி மதம் மறப்போமேன
    வேதனை சாதிமதம் பார்த்து
    போதனைக்கு ஒதுக்கீடு!

    கவிஞர்கள் பலர் சாடியும்
    கவிதைகளாயிரம் பிறந்தும்
    காற்றோடு விட்டு விட்டோம்
    கருத்துக்களை
    களையெடுக்காமல் விட்டுவிடோம் சாதிமதங்களை!

  7. சாதியை இப்போது அதிகம் துதிபாடுவது தன்னை தானே தாழ்ந்தவன் என்று காட்டிக்கொள்வது தலித்துகள் மட்டுமே மற்ற இனங்களில் இப்பொழுது அதிகம் இல்லை என்பதே உண்மை. கட்டிபோட்ட மாட்டை அவுத்து விடும்போது கண்டஇடங்களில் மேய்ந்து நாசம் செய்வது போல் தலித்துகளின் நிலைப்பாடு,ஒழுக்கமின்மையும், ரவுடித்தனமும் அதிகம் காணப்படுகிறது,இங்கனம் செய்வதால் தலித்துகள் மேல் மதிப்பு வராது. இதுபோல் தொடர்ந்து நடந்தால் தன் சாதியை மானம் காக்க முனைவது காலத்தின் கட்டாயமாக்கப்படும் அதற்க்கும் நீயே காரணம் நீ முதலில் தலித், ஆதிதிராவிடன் என்று சொல்வதை நிறுத்து அது உன்னை தாழ்ந்தவன் என்று வரும் சமுகத்துக்கும் காண்பிக்கும் ஆக தமிழன் என்று சொல்லபழகு இனியாவது

  8. சாதி இன பாகுபாடு தமிழ்நாட்டில் மலிந்து விட்டது. இதற்கு அரசியல் கட்சிகள்தான் காரணம். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க