privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!

விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!

-

விழுப்புரம் ஆர்ப்பாட்டம் 1தர்மபுரி நத்தம் காலனி, அண்ணாநகர்,  கொண்டாம்பட்டி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடந்த ஆதிக்கசாதிவெறி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

3-12-12 திங்கள் மாலை 4-30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் அருகே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக பா.ம.க.வன்னிய சாதி வெறியாட்டத்தை கண்டித்தும் ஆதிக்க சாதி வெறி வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரியும் அதன் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதே நாளில் காலையில் சென்னையில் வி.சி.க,சி.பி.ஐ,சி.பி.எம். நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்னிய சாதி வெறியர்களை பெயர் குறிப்பிட்டு தோலுரிக்காத போது, வன்னியசாதிவெறி சங்கத்தையும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும் தடைசெய்யக் கோரியும் அவர்களின் சொத்துக்களை பறித்தெடுக்க கோரியும் விழுப்புரத்தில் நடந்த புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களிடையே நம்பிக்கையையும், வர்க்க ஒற்றுமையையும் நிலைநாட்டியது.

விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பெருமளவு வன்னியர்கள் குவிந்துள்ளனர்.முன்னதாக இப்பகுதியில் விரிவாக பிரச்சாரம் செய்யப்பட்டு பெருமளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.மூன்று நாட்கள் வன்னிய மக்களிடையே செய்த பிரச்சாரம நிதி வசூலில் ரூபாய் 26,000-00 எட்டியது.

ஆர்ப்பாட்டத்திற்கு சற்று முன்பாக தொடர்பு கொண்ட ஒரு பா.ம.க. காரர் நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்து விட்டு, “இதொ வரண்டா நீங்கள் எப்படி ஆர்ப்பாட்டத்தை நடத்துறீங்கனு பாத்துறன்” என சவாலாக பேசி தொலைபேசி தொடர்பை துண்டித்து கொண்டார். ஆனால் சவால் விட்டவரின் சுவடி கூட ஆர்ப்பாட்டத்தின் போது காணோம். 600 பேர் வரை செஞ்சட்டைகளுடன் திரண்டு செங்கொடி, முழக்க தட்டிகள், ஆசான்களின் படங்கள், பேனர்களுடன் தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள் மக்களை ஈர்த்து 700 பேர் வரையிலும் கூடி நின்றனர்.

விழுப்புரம் ஆர்ப்பாட்டம் 2ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடைசெய்யக்கோரியும் சொத்துக்களை பறிதெடுக்க கோரியும் எழுந்த முழக்கங்களை ஆதரித்து நின்ற கூட்டத்தினை கண்டு அஞ்சிய பாமக – வன்னிய சாதிவெறியர்கள் குடிக்க செலவழித்து கல்லெறிய தயாரித்து அனுப்பிய கூட்டம், 3 மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தின் பொது செய்வதறியாது திகைத்து நின்றது. கடைசி வரை கூடி நின்ற மக்கள் கூட்டம், பேச்சாளர்கள் எழுச்சியுடன் பேசும்போது ஆங்காங்கெ கர ஒலி எழுப்பி ஆதரித்தனர்.

தலைமை தாங்கிய பு.மா.இ.மு. தோழர் மோகன் சுருக்கமாக தர்மபுரி, தாக்குதலை விளக்கி சனநாயக உணர்வு உள்ளவர்கள் வன்னிய சாதிவெறி சங்கத்தை தடைசெய்ய வேண்டும். பா.ம.க. போன்ற சாதி வெறி கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என பேசினார். அடுத்து பேசிய திருவண்ணைநல்லுர் வி.வி.மு. அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் அனைத்தும் சாதி வெறியை ஊட்டி வளர்ப்பதை விளக்கி அம்பலப்படுத்தினார். மேலும் பிழைப்புவாத தலித் தலைவர்களையும் அம்பலப்படுத்தி நக்சல்பாரியே மாற்று என்று விளக்கி பேசினார். தர்மபுரியில் பாதிக்கப்பட்ட மக்களே நக்சல்பாரிகள் இருந்தவரை ஆதிக்க சாதிவெறி இல்லாதிருந்ததையும் அவர்கள் இல்லாததால் வன்னிய சாதிவெறியர்களின் கொலை வெறியாட்டம் கட்டற்று நடந்துள்ளதையும் சுட்டிக்காட்டியதை எடுத்துக் கூறினார்.

அடுத்து பேசிய புமா.இ.மு. விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர்.செல்வகுமார் பெரியார் படத்தை வைத்துக்கொண்டு அவரது சாதி ஒழிப்புக்கெதிராக சத்திரிய குல வன்னியர் என ஆண்ட பெருமை பேசும் ராமதாசின் பித்தலாட்டங்களை திரை கிழித்தார். இட ஒதுக்கீடு பெருமை பேசும் ராமதாசு தனியார்மயத்தை ஆதரித்து கார்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுர கொள்ளைக்கு துணை போவதை அம்பலப்படுத்தினார்.சிப்மர் மருத்துவமனையில் இலவச சேவை பெற்று வந்த உழைப்பாளி வன்னியர்கள் மத்திய அமைச்சராய் இருந்த அன்புமணி ராமதாசின் தனியார் மயக்கொள்கையால் இன்று அந்த சேவையை இழந்து தவிக்கும் கோரத்தை உருக்கமாக எடுத்துரைத்தார்.

நாடே மீண்டும் காலனி ஆவதை எதிர்த்து போராடுவதற்க்கு பதில் உழைப்பாளிகளின் சொத்துக்களை சூறையாடும் வன்னிய சாதிவெறியின் கயமைத்தனத்தை தோலுறித்தார். சாதி வெறியாட்டம் மூலம் மக்களை பிளவுப்படுத்தி வர்க்க ஒற்றுமையை சீர்குலைத்து ஆளும் வர்க்கத்திற்கு ராமதாசு சேவை செய்வதை அம்பலப்படுத்திய தோழர், ஆண்ட பரம்பரை என பெருமை பேசும் ராமதாசு ரேசன் கார்டு வேண்டாம்,  பிச்சைக்காசு இலவசப்பொருள் வேண்டாம், தனியார்மயத்தில் காணாமல்போகும் இடஒதுக்கீடு வேண்டாம் என வன்னியர்களுக்கு உத்திரவிட தயாரா என சவால் விட்டார். உழைப்பாளி வன்னியர்கள் ராமதாசைப் புறப்பணிப்பதுதான் உண்மை என்பதைக்கூறி வர்க்க ஒற்றுமைக்கும் மறு காலனியத்தை எதிர்ப்பதற்கும் அறை கூவினார்.

இறுதியில் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தரும்புரியில் உண்மையை கண்டறியச் சென்ற போது பார்த்த சூழலை விளக்கியதை கேட்ட கூடியிருந்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சந்தடிமிக்க ரயிலடி நிசப்தமானது.

500 பேர் கூட்டத்தை கட்டுப்படுத்த 20 போலிசே போதும். 1500 வன்னிய சாதிவெறியர்களின் வன்முறைக்கு 70 போலிசு பாதுகாப்பு கொடுத்த கொடுரத்தை அம்பலப்படுத்தினார். அந்த போலீசை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். தரும்புரி பகுதியை தொடர்ந்து கண்காணித்து உளவு பார்த்து வரும் கியூ பிரிவு போலிசு வன்னிய சாதிவெறியர்கள் 300 லிட்டர் பெட்ரொல் வாங்கியதையும் ரேசனில் 4 பெரல் மண்ணெண்னையை எடுத்துக் கொண்டதையும் ஏன் தடுக்கவில்லை? வன்னிய சாதிவெறியர்களின் திட்டமிட்ட செயலுக்கு ஆதரவாக இருந்து சூறையாட அனுமதிகத்த கோரத்தினை அம்பலப்படுத்தினார்.

விழுப்புரம் ஆர்ப்பாட்டம் 3வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை திருத்த வேண்டும் என்கிற ராமதாசின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் மேலவளவு முருகேசன் கொலை முதல் நடந்த அனைத்து வன்கொடுமைகளிலும் இச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படாததை அம்பலப்படுத்தி வன்கொடுமை தடுப்புச்சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

திருமாவளவன் உட்பட தலித்திய தலைவர்களின் சமரச வாத்த்தை அம்பலப்படுத்தி கேள்வி எழுப்பினார். புரட்சிகர அமைப்புகளின் கீழ் வர்க்க ரீதியாக அணிதிரளுவதெ சாதி, மத, இனவெறிக்கு மாற்று என விளக்கினார். மீண்டும் கண்டன முழக்கங்கள் எழுப்பிய தோழர்கள் சர்வதேசிய கீத்த்துடன் ஆர்ப்பாட்டத்தை முடித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரச்சாரத்தின்போது வன்னியர்கள் பெருமளவு நம்மை ஆதரித்தனர். திருவெண்ணை நல்லுர் ஒன்றிய வி.வி.மு. தோழர்கள் வன்னியர்கள் மிகுதியாக வாழும் ஒரு கிராமத்திற்கு பிரச்சாரம் செய்ய சென்ற போது பா.ம.க. இளைஞர் ஒருவர் தடுத்தார். தோழர்கள் அதை மறுத்துப் பேசியபோது ஒரு உழைப்பாளி வன்னியர் பெண் வந்து அவன் ஒரு தறுதலை பொறம்போக்கு நீங்க எல்லா வீட்டுக்கும் போய் பிரச்சாரம் பண்ணுங்க என்று கூறி அந்த பா.ம.க. காரனை விரட்டி அடித்தார். புதுவையில் தொழிலாளர்கள் பிரச்சாரம் செய்யும்போது ஒருவுர் நமது தோழரை பார்த்து என்ன நீயுமா? நமது சாதி சங்கத்தையே தடைசெய்ய சொல்லிறீயா? என கேள்வி எழுப்பினார். நான் இப்போ தொழிலாளி. நான் மட்டும் இல்ல எனது மனைவி பையனும்கூட இந்த பிரச்சாரத்தில் உள்ளோம். என பதிலளிக்க அவரது உறவினர் வாயடத்து நின்றார். பின்னர் இந்த தாக்குதலை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறி நன்கொடையும் தந்தார்.

புதுவை பாமக நிர்வாகி ஒருவர் பொதுவாக வன்னிய சங்கத்தை தடைசெய்யக்கூறுவதை கேள்வி எழுப்பி புதுவை வன்னியர் சங்கம் தர்மபுரி தாக்குதலை ஆதரிக்கவில்லை என கைப்பேசியில் தொடர்புகொண்டு தன்னிலை விளக்கம் அளித்தார்.

பிரச்சாரம் செய்த எந்த பகுதியிலும் எதிர்ப்பு ஏதும் இல்லை. மாறாக வரவேற்பும் ஆதரவும்தான் வன்னியர் சங்கத்தை தடைசெய்யக்கோரிய இந்த ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு கிடைத்த்து. வன்னியர்கள் மிகுந்த இப்பகுதியில் நடந்த எழுச்சிமிக்க இந்த ஆர்ப்பாட்டம் வர்க்க ஒற்றுமைக்கு குரல்கொடுத்து புதிய சனநாயக புரட்சிக்கு அணி திரள அறை கூவியது.

________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்
_________________________________________________________