Thursday, April 15, 2021
முகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள் - 24/12/2012

ஒரு வரிச் செய்திகள் – 24/12/2012

-

செய்தி: குஜராத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலமாக வாழ்த்துத் தெரிவித்தார்.

நீதி: பாம்பின் வழித்தடம் பாம்பறியும். ஒரு பாசிஸ்ட்டின் வெற்றி இன்னொரு பாசிஸ்ட்டால்தான் கொண்டாடப்பட முடியும்.

______

செய்தி: இளைஞர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் முதலுதவி சிகிச்சையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.

நீதி: தடுக்கி விழுந்தால் விபத்து நடக்குமிடமாக தமிழகம் மாறிவிட்டதை மறைமுகமாக விளக்குகிறாரோ ராஜ்பவனில் குடியிருக்கும் இந்த ஆந்திரத்து பண்ணையார்.

______

செய்தி: மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

நீதி: அமைச்சர்கள், அதிகாரிகள் அறையிலும் கேமராக்கள் அவசியம் என்று போட்டால் லஞ்சமாவது குறையுமே! அப்படியே போயஸ் தோட்டத்தில் வைத்தால் என்னென்ன சதி நடக்கிறது என்பதை நாடறியுமே!

______

செய்தி: அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரி 6-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

நீதி: அருந்ததி மக்களை விட பள்ளர்கள் -தேவேந்திர குல வேளாளர்கள் மேல் என்று ஆதிக்கம் செய்வதை ரத்து செய்யாத வரை உள் ஒதுக்கீட்டை எப்படி ரத்து செய்ய முடியும்?

______

செய்தி: 21.12.2012 அன்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனது பிறந்தநாள்!

நீதி: அதனால்தான் மாயன் காலண்டர்படி அன்று உலகம் அழியும் என்று கூறினார்களோ!

______

செய்தி: குஜராத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 26-ம் தேதி குஜராத் செல்ல உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீதி: கரசேவைக்கு ஆளனுப்பியவர் கலவர நாயகன் பதவியேற்புக்கு செல்ல மாட்டாரா என்ன! ஆனாலும் ஜெயாவுக்கு பல்லக்கு தூக்கிய இசுலாமிய மத அமைப்புக்கள் தங்கள் முகங்களை எங்கு வைத்துக் கொள்ளும்?

______

செய்தி: ரயில் பயணக் கட்டணத்தை ஒரு கி.மீ.க்கு 5 முதல் 10 பைசா வரை உயர்த்த அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

நீதி: 50 ரூபாய், 100 ரூபாய் உயர்வு என்று சொன்னால்தானே அதிர்ச்சி வரும், அதையே கிலே மீட்டருக்கு பத்து காசு என்று சொன்னால்…. ஆடித்தள்ளுபடி ஆஃபர் தோற்றது போங்கள்!

______

செய்தி: இமாசலப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் 44 பேர் கோடீஸ்வரர்கள். இதில் 26 பேர் காங்கிரஸ் உறுப்பினர்கள்.

நீதி: இனி இமாசலப் பிரதேசத்தையும் முதலாளிகள் ஆள்கிறார்கள் என அழைக்கலாம். பண நாயகம்தான் ஜனநாயகம்!

______

செய்தி: மக்களவைத் தேர்தலில் தேமுதிக தன் பலத்தை நிரூபித்துக் காட்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

நீதி: சட்டசபைத் தேர்தலில் அதிமுக உதவியுடன் பலத்தை நிரூபித்தது போல மக்களவை தேர்தலில் திமுக உதவியுடன் நிரூபிப்பார்களோ? பல்லக்கின் சைடில் தொற்றிக் கொள்பவர்களெல்லாம் பலசாலிகளா?

______

செய்தி: விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோருக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ், பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளாது என அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.ஏக.ரங்கராஜன் எம்.பி தெரிவித்தார்.

நீதி: இதையெல்லாம் சொல்லித்தான் உறுதி படுத்த வேண்டுமென்றால் எதிர்காலத்தில் ஏதும் கூட்டணி வைப்பார்களோ?

_____

செய்தி: விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதி: தற்கொலைக்கு காரணமான அரசை கண்டித்து போராட்டம் நடத்தி தீர்வு காணமுடியாத நிலையில்தான் இந்தக் கோரிக்கை. எனில் திமுகவும் அரசியல்ரீதியாக என்றோ தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

  1. ஒரு வரிச்செய்திகளை 24/12/2010 க்கு பிறகு வெளியிடவில்லையெ…நாங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

  2. கருனாநிதி முன்னுக்கு பின் முரனாக பேசுவார் -ராமதாசு 5-1-2013 தினமனி
    யொகிய சிகாமனி வர்ராரார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லா பயகலும் காத பொத்து….,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க