அரட்டைகள், அக்கப்போர்கள், வேலை, சம்பள உயர்வு, மேனேஜர் பற்றிய புலம்பல்கள், கிசுகிசுக்கள் என்று பல்வேறு கதைத்தல்கள் நடக்கும் இடம், பல ஐடி நிறுவனங்கள் இயங்கும் அலுவலக வாசலில் உள்ள டீக்கடை
பிஸியாக பேசிக்கொண்டு இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அந்தச் சத்தம்
சர்ர்ர்ர்——- என்று ஒரு ஸ்கூட்டி மின்னல் வேகத்தில் வந்து நின்றது. வந்த பெண்னை நாங்கள் எங்க காம்ப்ளெக்சில் பார்த்ததே இல்லை. அதுவும் வந்த வேகமும், வண்டியை ஒழுங்கில்லாமல் அப்படியே நிருத்தி வைத்ததும் ஏதோ விவகாரம் போல என்று தோன்றச்செய்தது….
“Hey da, what a surprise” என்று சொல்லி முன் வந்த ரவியைத்தான் அவள் சந்திக்க வந்து இருக்கிறாள் என்பது புரிந்தது. சரி எதோ லவ்ஸ் மேட்டர் போலன்னு நினைத்தபடி கிளம்ப எத்தனித்த எங்களை தடுத்து நிறுத்தியது என்னடா ஹாய் என்று அவள் போட்ட சத்தம். சத்தம் போட்டதுதான் தாமதம் ரவியுடன் நின்ற அவன் நண்பர்களெல்லாம் நைசாக விலக ஆரம்பித்தனர்.
அவள் கத்தியவுடன் அவன் கையை பிடிக்க அவன் வர, அவனை ஒரே தள்ளு தள்ளினாள் அவள்.
“என்னம்மா, என்னாச்சுடா Any Problem”
”என்னடா இப்போ அம்மா, அம்மாங்குற, இன்னொருத்திய பை’க்லே வச்சு ஊர் சுத்தும் போது இந்த அம்மா ஞாபகம் வரலோயோ?’
”Hey Babe, I guess you have misunderstood, தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு நினைக்கிறேன்”
“என்னடா guess, உன்னைப்பத்தி எனக்கு தெரியதா? எனக்கு முன்னே ஒருத்தியே லவ் பண்ணி, அவ உனக்கு அல்வா கொடுத்த, ஈவநிங்கே என்னை காஃபி ஷாப் கூப்பிட்டவன் தானேடா நீ. STOP ALL YOUR CRAPPPPP…”
அலுவலக வாசலிலேயே அவமானப்படுவது வேதனையளித்தது ரவியின் முகத்திலேயே தெரிந்தது. அவன் பேசுவது சரியாக காதில் விழவில்லை என்றாலும், அவன் அவளை கையை பிடித்து சமாதானம் செய்ய முயற்சி செய்வதும் அதை அவள் பொருட்படுத்தாமல் பேசுவதுமாக இருந்தது.
“Its over Ravi, its over, just get the #$^& out from my sight and life, நீ ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர் கூட இல்ல After all ஒரு மிடியா டெவலப்பர், போனா போகுதுன்னு உன்னை லவ் பண்ண பாரு, you have taught me a good lesson”
”ஆபீஸ்மா, கத்தாதம்மா பிளீஸ்”
என்னாடா எனக்கே Corporate Culture சொல்லி தரியா? IT பொண்ணு ஆச்சே சும்மா விட்டுவிடுவான்னு நினைச்சியா? எனக்கு உன்னை மாதிரி low class பசங்ககிட்ட எப்படி பேசனும் நல்லா தெரியும்டா”
“பிளிஸ் பவி”
”டேய் பவி என்னடா பவி, பவித்ரான்னு சொல்லுடா என் பெயரை சுருக்க உனக்கு என்னடா ரைட்ஸ் இருக்கு”
”பிளீஸ் பவித்ரா நான் சொல்றத கேளுடா, நான் அந்த பொன்னே பஸ் ஸ்டான்டுலே தாண்டா டிராப் பண்ண போனேன்”
”முதலே என்னை வாடா போடா சொல்லுறத நிறுத்துடா, உன் ஆபிஸ் வேளச்சேரி, இங்க பஸ் ஸ்டான்டுலே டிராப் பண்ண மாட்டே டைடல் பார்க் பஸ் ஸ்டான்டுலேதான் டிராப் பண்ணுவியோ. இந்த கதையெல்லாம் எனக்கு சொல்லாதே”
”நான் உன்னை மாதிரி B.Com இல்லடா, B.E, உன்னை விட 200% சதவிதம் அதிக சம்பளம் வாங்குறேன், இப்போக்கூட USக்கு போரவங்க லிஸ்ட்’லே என் பெயர் டாப்ல இருக்கு. எதுவோ முன்னாடி Love Failure ஆகி இருக்கே, அந்த Experienceல என்னை நல்லா பார்த்துக்குவே, அடங்கி இருப்பேன்னு நினைச்சேன்,
“…..”
உனக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை, அதனாலே கல்யாணத்துக்கு அப்புறம் என் அப்பா, அம்மா என் கூட இருக்க ஒத்துகிட்டத்தையெல்லாம் யோசிச்சுதான் OK சொன்னேன். அதை மொதல்ல தெரிஞ்சுக்கோ.
“…..”
“உன் வேலை, பிசாத்து சம்பளம், உன்னோட STUPID ENGLISH, எதுவும் என்னை கவர் பண்ணலே, புரியுதா I am happy you are out of my life! இது தான் உன்னை கடைசியா பார்த்தா இருக்கனும், do not disturb me anymore. மீறி என்ன தொல்லை பண்ணே என் செருப்பு தான் பேசும்” என்று செருப்பை எடுத்து அவன் முகத்தின் முன்னால் ஆட்டினாள்.
“இன்னும் ஒரு மாசத்தில் என் Statusக்கு ஏத்த ஆளோட உன் முன்னாடி நான் கார்ல போவேன் அப்போ தெரியுன்டா உனக்கு என் Value என்று கூறிவிட்டு வேகமாக வந்ததைப்போல் மறைந்தாள்.
————————-
ரவி சென்னை நகரத்தில் பிறந்து வளர்ந்த நாகரீக இளைஞன், வேகம், துடிப்பு, நுனிநாக்கு ஆங்கிலம், பந்தாவாக பைக், ஐ-போன், ஐ.டி நிறுவன வேலை, ஏடிம் அட்டை, நண்பர்கள், வார இறுதிக் கொண்டாட்டங்கள் என்று வாழும் சராசரி ஐடி இளைஞன். வீடு, கார், வாங்க வேண்டும், பகட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஒரு சராசரி யப்பி இளைஞன்.
இந்த சம்பவம் குறித்து ரவியின் அலுவலகத்தில் அவனுக்கு எச்சரிக்கை கடிதம் தரப்பட்டது. ‘சொந்த விஷயங்கள் அலுவலக மதிப்பை கெடுக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், அது எல்லாருக்கும் தெரியும் வண்ணம் இருக்கக் கூடாது’ என்று வலியுறுத்தப்பட்டது. ‘இனிமேல் இதை மீறினால் அப்ரைசலுக்கு கேடு வரும்’ என்றும் அவன் மேலாளர் எச்சரித்தார். அப்ரைசல் என்ற பணி மதிப்பீடுதான் ஒவ்வொருவரும் வேலையை தக்க வைத்துக் கொள்வதையும், பதவி உயர்வு பெறுவதையும் தீர்மானிக்கும் வருடாந்திர ஏவுகணை.
இந்த விவகாரம் பற்றிய வம்பளப்புகள் முடிவதற்குள்ளாகவே ரவி, அலுவலகத்தில் வேலை பார்த்த கேரளப் பெண்ணான வினு வர்கிஸ் உடன் பழக ஆரம்பித்திருந்தான். பைக்கில் ஊர் சுற்றுவது, வெளி இடங்களுக்குப் போவது, விடுமுறை நாட்களில் வேலை இருந்தாலும் இருவரும் சேர்ந்து தான் வேலை செய்வது என்று அவர்களின் இடையே இருந்த உறவு வலுவாக வளர்ந்தது.
ஒரு சிரியன் கிருஸ்துவ பெண்ணான வினுவை காதலித்தால் கிருஸ்துவ மதத்திற்கு மாறினால் தான் திருமணம் என்பதைத் தெரிந்தும் பழகும் ரவியின் காதலை நினைத்து பலர் ஆச்சரியப்பட்டார்கள்.
ஒரு நாள், ரவியும், வினுவும் சேர்ந்தே வினுவின் திருமணப் பத்திரிகையை அலுவலகத்தில் கொடுக்க ஆரம்பித்தாள். அதில் மணமகன் ரவி இல்லை, அவள் மதத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் இருந்தது. ரவியும் திருமணத்துக்கு கேரளா சென்று வந்தான்.
சில மாதங்களுக்குப் பிறகு, ரவி அவன் டீமுக்கு புதிதாக வந்த சவீதாவிடம் பழக ஆரம்பித்தான். அவளும் இவனைப்போல ஒரு மீடியா டெவலப்பர், இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். நான்கு மாதம் கழித்து ஏற்கனவே மூன்று காதல் நாடகங்களில் ஹீரோவாக இருந்த ரவி, இறுதியில் சவீதாவை திருமணம் செய்து கொண்டான்.
பவித்ராவுக்கு முன் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு, அது முடிவுக்கு வரும் அதே நாளில் பவித்ராவுக்கு ரூட் போடுகிறான் ரவி. ‘பவித்ரா ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர், நல்ல சம்பாத்தியம்’ என்ற கணக்கில் காதலில் இறங்குகிறான். முந்தைய காதல் தோல்வி அடையும் அன்றே அவளிடம் பழக முற்படும் போது கேள்விகள் எதுவும் இன்றி ‘தனக்கும் ஒரு பாய் பிரண்டு வேண்டும்’ என்ற பியர் பிரஷர்க்கு ஆட்பட்டு நட்பை வளர்த்து கொள்கிறாள் பவித்ரா. பியர் பிரஷர் எனப்படும் நட்பு வட்ட அழுத்தம்தான் ஐடி துறையில் ஆண்களையும் பெண்களையும் இயக்கிச் செல்லும் வலிமையான உந்துசக்தி.
மேலும் ‘அவன் குடும்பத்துக்கு ஏற்ற தலையாட்டியாக இருப்பான்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உறவை முடிவு செய்கிறாள். ஆனால், அவள் படிப்பு, வேலை, சம்பளம், பொதுவிலே அவளிடம் உள்ள மேலாதிக்க குணம் ரவியை பவித்ராவிடமிருந்து தனிமைப்பட வைக்கிறது. இவளைவிட அழகாக இருக்கும் வினுவிடம் அவனுடைய ஆர்வம் திரும்புகிறது.
ரவி ஒரு பெண்ணை பைக்கில் ஏற்றி சென்றதற்காகவா அவனை வெறுத்து வேண்டாம் என்று பவித்ரா சொன்னாள்? ‘அவளுடைய தகுதிக்கு எந்தவிதத்திலும் ஏற்றவன் அவன் இல்லை’ என்று தெரிந்தும் காதலை ஏதோ பிச்சையாக போட்டதாக நினைத்த அவள், ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர், யு.எஸ் ரிடன் மாப்பிள்ளை வாய்ப்பு ஏற்பட்டதும் ரவியை தூக்கி எறிய, கிடைத்த காரணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள்.
பவித்ரா போட்ட சண்டை அநாகரிகமானதாக இருந்தும் அதை நிறுத்த ரவியின் நண்பர்கர் வரவில்லை, மாறாக விரும்பத்தகாத நிகழ்விலிருந்து விலகி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
அலுவலகத்துக்கும் வேலைக்கும் தொடர்பே இல்லாத இடத்தில நடந்த சம்பவம் நிறுவன ஒழுக்கத்தையே கெடுக்கிறது என்கிறார் ரவியின் மேலாளர். ‘தவறு, குழப்பம், கள்ள உறவு, பாலியல் அத்துமீறல் எல்லாம் செய்யுங்கள் ஆனால் அவை வெளியில் வராமல் பார்த்து கொள்ளுங்கள். கள்ள உறவு இருந்தாலும் அவை ஆபீசின் நல்லொழுக்க விதிகளை கெடுக்கா வண்ணம் இருந்தால் பரவாயில்லை’ என்பதே நிறுவனக் கொள்கை. அதன் அடிப்படையில் ரவிக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்படுகிறது.
ரவியும், வினுவும் நெருக்கமாக பழகினாலும், ஒரு சிரியன் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்ணை விரும்ப முடிந்த ரவியினால், திருமணம் முடிப்பதற்கு போராடும் தைரியம் இல்லை, மதம் மாறி அவளை மணக்கும் ‘தியாக’ உணர்வும் இல்லை. வினுவும் நெருக்கமாக பழகிய பிறகும் காரியவாதியாக இருக்கிறாள், மதத்தை விட்டுக் கொடுக்கும் எண்ணமோ, போராடும் உணர்வோ அற்றவளாக இருக்கிறாள். ‘பழகற வரைக்கும் பழகுவோம். எல்லாம் ஒரு ஜாலி, நேரத்தை சந்தோஷமா செலவழிக்க ஒரு வழி, அவ்வளவே!!’
ரவியை வேண்டாம் என்று ஒதுக்கிய பவித்ராவுக்கும், தானாகவே ஒதுங்கிய வினுவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதில் யாருடைய உணர்வும் உண்மையானது இல்லை. மாறாக தேர்ந்த சதித்தனங்களும், துரோகங்களும் விருப்பத்துடன் அரங்கேறுகின்றன.
உற்றார், வீடு, வாசல், மதம், சாதி என்று எல்லாம் துறந்து காதல்தான் பெரியது என்று நினைத்தால்தான் கலப்பு மணம் நடக்க முடியும். ஆனால் ஐடி துறை காதல் என்பது சம்பளக் காசு, படிப்பு, வெளிநாட்டு வேலை, மதம், கார், வீடு, சொத்து, ஈகோ, சாதி என்று அனைத்து போலித் தனங்களாலும் வழி நடத்தப்பட்டு உருவாக்கப்படுகிறது.
எல்லா நதிகளும் இறுதியில் கடலை சென்று கலப்பதுபோல, ரவியும் சவிதாவும் திருமணம் செய்து கொள்வது சடங்குத் தனமானதே! மாடர்ன் பெண்ணாக, அவனைப் போல அதே மீடியா வேலையில், ஒரே சாதியை சேர்ந்தவளாக சேர்த்து அமைந்ததும், இலட்சியக் கனவினை எட்டிய நிறைவில் ரவி தன் காதல் நாடகங்களுக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்து வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்குள் கால் எடுத்து வைத்திருக்கிறான்.
இந்த காதல் கதையில் எல்லா ஜோடிகளும் தங்களின் காரியவாத பாதையில் ஜெயித்துவிட்டார்கள். காதல் தோற்றுப் போவதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
____________
* உண்மைச் சம்பவம். பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
___________________________________
– ஜென்னி
___________________________________
//எல்லா ஜோடிகளும் தங்களின் காரியவாத பாதையில் ஜெயித்துவிட்டார்கள். காதல் தோற்றுப் போவதை பற்றி //
ஜெயிப்பதற்கு ஒன்றுமில்லை. இப்படிதான் வாழ வேண்டும் என்ற ஒழுக்க நெறிமுறையை தளத்தி கொண்டார்கள். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கோட்பாட்டை எடுத்துக் கொண்டார்கள்.
இதுவே. திருமணம் முடிந்த பின் சிலர் இந்த விளையாட்டை நிறுத்தி கொள்கிறார்கள். சிலர் தொடர்கிறார். தொடர்கிறர்வர், மணமுறிவு அல்லது சமரசம் இப்படி வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
“மதம் மாறி அவளை மணக்கும் ‘தியாக’ உணர்வு ” HAHAHAHA What a joke :))
இந்துக்கள் மட்டும்தான் கிறிஸ்தவர்களாக மாறி தியாகம் செய்யவேண்டும். கிறிஸ்தவப் பெண்ணை இந்துவாக மாறச் சொல்லாது வினவு. இதுவே வினவின் கொள்கை. கேட்டால் இருக்கவே இருக்கிறது ‘பார்ப்பனியம்’ எனும் பதில்.
Guys are you so Dumb, you can’t even understand a joke or pun – checkout the word within quotes
Looks like you are an ‘extra-ordinarily’ intelligent person, and hence you don’t understand how a ‘normal’ intelligent person understands. I understand the use of puns to a reasonable level, and here it is clear that only one way religious conversion is suggested. Even for a joke ‘Vinavu’ will not suggest a religious conversion from Christianity/Islam to Hinduism (otherwise it could have been written as he or she…).
Please do not jump in to a quick conclusion that everyone except you is a dumb.
Inian, you Prove My Earlier Staement
you say “. Even for a joke ‘Vinavu’ will not suggest a religious conversion from Christianity/Islam to Hinduism (otherwise it could have been written as he or she…).”
but vinavu says வினுவும் நெருக்கமாக பழகிய பிறகும் காரியவாதியாக இருக்கிறாள்,
மதத்தை விட்டுக் கொடுக்கும் எண்ணமோ, போராடும் உணர்வோ அற்றவளாக இருக்கிறாள்
So READ THINK UNDERSTAND b4 u write, and Stop this high-jack technique, vinavu has equally given appu for both and the article exposes yuppie culture irrespective of caste – religion
Again you say
Even for a joke ‘Vinavu’ will not suggest a religious conversion from Christianity/Islam to Hinduism —
Of Course because conversion from other religion to Hinduism is a JOKE, simply becoz of caste issue, nobody wants to convert to be placed below in the Caste order, In case If Arya Samaj Announces, all converts can be Brahmins, then it would be productive, Would They?
Your attempts to prove others as dumb shows your sick mentality.
Anyways you couldn’t prove that you are not one. 🙂
No rational person will start a conversation by calling the other side a dumb, and will never repeat. These scathing feedbacks from people talking about communism only reminds me of Pol Pot.
Again, I am not saying you are a dumb for this behaviour, instead asking you, or you all – if it not the same person using different aliases, to get rid of this sick habit and learn to use decent language. Grow up men!
இந்த பஜனைதான் ரொம்ப நாளா நடக்குதெ
Any religious boy/girl can marry a hindu and dont have to convert.Only thing to give up is eating beef and pork,thats all.
apdeenu enga pa potrikku? pork sapida koodathunu entha hindu sattam solluthu? illa beef saapdaravan ellam non-hinduva? unna yaaru hindu matha prathinithi aakunathu?
it is the agreed upon rules,simple as that.
I am telling you what i know.
reliigously it has been decided long ago for priestly people to be vegetarian and the others to resist from eating beef due to the sacredness accorded to cattle and pork due to its dirtyness.
In general,there is no restriction on dietary composition and these are all mere guidelines,the most scared of all is human life and humans are encouraged to eat things that are useful to achieve a healthy physical & mental life.
Ayurveda classifies foods based on their impact on human body and mind as Sattvic,tamasic & rajasic and people should choose their diet based on the availability of such.
These things are known to every hindu who is interested and i dont understand why a convert like you is bothered about hinduism since you already sold your soul
so you are agreeing that people those who eat beef and/or pork are not Hindus.
no,it only means that u live your life as black and white and cant see in between.
people living in mountains eat pork because of the difficulty in agriculture and growing livestock
இனக்கவர்ச்சியை காதல் என்றோ புனிதம் என்றோ விளித்து அதற்கு மதிப்பு கொடுத்து பழகிவர் கூடவே திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்பது பத்தாம்பசலித்தனம்.IT துறையில் மட்டுமல்ல எங்குமே இப்போது காதல் என்ற சொல் பெருமளவு புழக்கத்தில் இல்லை எல்லாம் கேர்ள்ப்ரண்ட் பாய்ப்ரண்ட் தான்.இதில் யாரை யார் கழற்றிவிட்டு வேறொருவருடன் பழகினாலும் ஒரு நாள் புலம்பிவிட்டு மறுநாள் வேறோவருடன் நெருக்கமாய் பழகுவது எல்லா ஊரிலும் இப்போது ஜகஜமாய் நடக்கிறது.
காதல் என்பது எது வரை கல்யாணம் காலம் வரும் வரை என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்…
Mr Iniyan,
I am ready to convert as Hindu,but to which caste? Will I be permitted to enter Karpagraha for worship or I should stand outside? Please reply.
if u want to,then u ll become the same caste as u were before.
not only u,99.99% of the people cannot enter the karpagraha,if u want such irrational demands,there is no need to re convert.
For example, a south african wants to convert to hinduism. to which caste you will add him? will you add a european to same caste? stupid caste system!
// irrational demands//
his demands are not irrational. your religion and its caste system is irrational.
he cant belong to any caste because there is no ethnicity or community he ll fit into,his varna ll be decided by the job he does.
If he is a professor/intellectual he ll be a brahmin,if he is a fighter/mercenary he ll be a kshatriya,if he is a businessman he ll be a vaishya & if he is a worker/farmer he ll be a shudra.
he cant eat beef nonetheless.
I do not accept caste system, and do not follow. In my opinion almost all the religions have got some wrong and outdated concepts, and no exception is Hinduism. But, this cannot be a reason that some media like ‘Vinavu’ should always target only one religion – Hinduism (as if every other religion is perfect) and suggest other religions are better.
Coming to your question about entering Karpagraha, I would suggest two options. If you really wish to enter such a place and if you have got all qualities to be there (I DO NOT TALK ABOUT CASTE), then (a) if that place is a public property and someone still blocks you from entering stating unacceptable reason(s) like caste, then force your way in, or (b) if that is a private property, then you build yourself a similar place and do whatever you wish.
Having said that, personally I do not wish to demand for a place that is meant for a priest, be it in a kovil or a church or a Mosque. I do not think it is rational to demand that I should be permitted to give a papal audience from the balcony of St. Peter’s Church, Vatican.
இனியன் அவர்கல்,
னான் இன்டுவாக மார தயார். ஆனால் எந்த ஜாதிக்கு மாருவது?
மனிதனின் காலுக்கு கீழே எந்த உறுப்பும் கிடையாது எனவே உங்களுக்கு சாதி நமது மூதாதையர் இனத்தில் வேண்டுமானால் கிடைக்கலாம்.
’சாதிமறுக்கும் இந்துக்கள்’ என்று ஆரம்பித்து சாதியை ஒழிக்க உதவலாம்..
அம்பி,
அவர் சாதியை ஒழிக்க இந்து மதத்திற்கு வரவில்லை. இந்து மதத்திற்கு வந்தால் எந்த ஜாதியில் குந்துவது என வினவியுள்ளார். அதனால்தான் அவருக்கு மனிதனின் மூதாதை இனத்தை பரிந்துரை செய்துள்ளேன்.
you mean monkey???
உங்களுக்கு மூளையின் திறன் அபாரம்.
இது என்ன ஒரு பெரிய விஷயம்,பல ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் கூட இந்து மதத்திற்கு மாற என்றென்றும் முயற்சி செய்து வருகிறார்கள் ஆனால் அவர்கள் அனைவரும் beef அதாவது மாட்டுக்கறி சாப்பிடுவதால் எல்லோரையும் தாழ்த்தப்பட்டவராய் கணக்கு வைத்து ஹிந்து பறையர் என்று சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்.அதனால் அப்படியே விட்டு விடுவோம் நம் மதத்தில் சேரவெல்லாம் முடியாது பிறந்து பெருமை அடைய வேண்டும்.
SUPER DHANARAJ….PLEASE ANSWER THIS QUESTION ?,,,,,,INIYAN
Your request is heeded.
திரு தனராஜ் அவர்களே!
எனக்கு ஆங்கிலமும் கொஞ்சம் புரியும். அதனால் தமிழில் பின்னூட்டமிட அதிகம் சிரமப்பட வேண்டாம்.
@dhanaraj
“இனியன் அவர்கல்,
னான் இன்டுவாக மார தயார். ஆனால் எந்த ஜாதிக்கு மாருவது?”
கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை?
ஐடி கம்பேனிகளில் நடக்கும் பெரும்பாலான ‘காதல்’ திருமணங்கள் பெரும்பாலும் ‘மேட்சிங்’ வகையறாக்களே. “நீயும் நிறைய சம்பளம் வாங்குற, நானும் நிறைய சம்பளம் வாங்குறேன், ஜாதி ஒன்னும் பிரச்சினையில்லை (நீ தலித்தாக இல்லாத வரை), அழகு ஓகே, எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் இல்லையென்றால் ஆன்சைட் – அப்ப நாம கல்யாணம் பன்னிக்கலாமா?” வகையறாக்கள் தான்.
வீட்டுல பொண்ணு/பையன் பாத்து கல்யாணம் பன்னுற மாதிரி, இங்க அவங்க அவங்களே பாத்துக்கறாங்க. இதுவும் ஒரு வகை அரேஞ்சுடு மேரேஜ் தான்.
ஐடி பாணி காதல் கொடிய வைரஸ் போல சமூகம் முழுவதும் வேகமாகப் பரவுகிறது.டாக்டர் ராமதாஸ் சொல்லுகிற நாடகக் காதல் இது தானோ? உண்மையான காதலாக இருந்தால் அவர் ஏற்றுக்கொள்வாரா? உண்மைக் காதல் எது நாடகக் காதல் எது என்று யார் நிரூபிப்பது? தருமபுரியில் வெறியாட்டம் நடத்திய வன்னியர்கள்,வன்னியப் பெண் நித்தியாவின் உறவுப் பெண்கள் 7 பேரை நித்தியாவைப் பிரித்து கூட்டிக்கொண்டு வர அனுப்பி வைத்தார்கள். நித்தியாவை அவர்கள் திரும்ப அழைத்த போது அந்தப் பெண் சொன்ன பதில்” மனம் விரும்பி,சட்டப்படி திருமணம் செய்து ஒரு மாதம் குடும்பமும் நடத்தி விட்டேன்.இப்போது என்னைத் திருப்பிஅழைத்துப் போய் என்ன செய்யப் போகிறீர்கள்?கொலை செய்யப் போகிறீர்கள்.அதற்கு நான் விரும்பியவருடனேயே வாழ்ந்து செத்துப் போகிறேன்.”இது தான் நாடகக் காதல் என்கிறார் டர்.ராமதாசு.அப்படியானல் ரவியின் காதல் என்ன காதல்? இதில் எந்தக் காதல் சமூகத்தில் வளர வேண்டும், வளர்க்கப்பட வேண்டும்?மேற்கத்திய கலாசாரத்தை இறக்குமதி செய்யும் போது அது இந்தியாவில் இப்படி(ஐ டி பாணி) பண்பு மாற்றம் அடைகிறது.மானுடம் இருக்கும் வரை உண்மைக் காதல் இருக்கும்.அது போலிகளின் கண்களுக்குத் தெரியாது.சாதி மதம் எல்லாம் சவக்குழிக்குப் போகும்.சமூகம் சீரிய பண்பாட்டை நோக்கி முன்னேறும்.
உள்ளது உள்ளபடி பதிவு செய்த ஜென்னிக்கு வாழ்த்துக்கள்.
எந்த மதத்திற்கு போனாலும் பெண்கள் அடங்கி ஒடுங்கி பொத்திகொன்டு இருப்பதுதான் இந்த பண்பாடு! சீதை கற்புக்கரசி என நிரூபிக்கநெருப்பில் இறஙக சொன்ன ராமன் பிறந்தநாடு! காதல் எனபதெல்லாம் கப்சா தான்! புலவர்கள், கலை என்ற பெயரில் காசு பண்ண விட்ட ரீல்! பில்லை யாருடையது, யார் வளர்ப்பது என்பதை வரையறை செய்யவே திருமண ஒப்பந்தம் சாட்சிகளுடன் தேவைப்படுகிறது!
என்று ஒரு பெண்ணின் மீது கொள்ளும் காதல் காமம் அற்றதாக இருக்குமோ அன்றுதான் இது போன்ற நிகழ்வுகள் ஒலியும்.
(தாய் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பு,
உண்மையான அண்ணன் தங்கை பாச உறவு, வலுவான நட்புகளுக்கிடையே பரிமாறப்படும் உணர்வு.. இது போன்ற அன்பு)
I already converted to xtian. I want to become Pope immediately…. non-europeans allowed?
or I’ll convert to muslim, they are ready to give kaaba main door keys and pray in my mother tongue tamil 🙂
கிருத்துவமும், இசுலாமியமும் அவரவர் இறைதூதுவரால் போதிக்கப்பட்டு, சாதாரண் மக்களுக்கு இரக்கம், உழைப்பாளிகளுக்கு வாரவிடுமுறை, முதலிய சமுதாய சிந்தனைகளுடன் , அந்தாந்த காலகட்டத்தில் நிலவிய ஏகாதிபத்தியஙகளுக்கு எதிரான புரட்சியில் தோன்றியவை! இந்து மதத்தின் கதை வேறு! முதலில் அப்படி ஒரு மதமே இல்லை! எதிர்க்க திராணியற்றவர்கள் மீது, யார் வெற்றி அடைகிரார்களோ, அவரை கடவுளாக்கி , துதிபாடி பிழைக்கும் ஒரு கூட்டம், தன்னை கடவுளுக்கு அடுத்தாக காட்டிகொள்ள கற்பித்த, ஒன்றுக்கு ஒன்று முறனான, சாதாரண் மக்களை அடக்கியாளவே, வஞச்கமாக புனையப்பட்டது! அதனால் மற்ற எந்த மதத்தினரும் இந்துவாக மாற முடியாது! சட்டப்படி இந்தியாவில் பிறந்த யாரும், மற்ற மதத்தில் இல்லாவிடில், இந்து என கூறிக்கொள்ளலாம்!
you are right,
there is no religion called Hinduism,we are all imagining things.thanks for bringing us back to life,now go and attend midnight mass tonight.
If SC/ST intellectuals lose a battle,they ll come up with impossible half truths to justify their existence.
காதல் பற்றி பெண்களுக்கு ஒரு செய்தி! முதலில் காதல் என்பது, பருவ வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியே! எந்த ஒரு ஆணயும் நம்பி, தனித்து நிற்க்கும் பொருலாதார சுதந்திரமின்றி, காதல் வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்! உறுதியான புரிந்து கொள்ளும் நட்பு கிடைத்தால் போராடி பதிவு திருமணம் செய்து கொள்ளுஙகள ! எந்த காரணத்தை முன்னிட்டும் பார்த்து வரும் வேலையை விட்டு விடாதீர்கள்!